• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
427
மலர் : 74

பிருந்தாவுக்கு சாப்பாட்டை ஊட்டிவிட்டு டெப்லெட்டை கொடுக்க அதை வாங்கி போட்டுக் கொண்டாள்.. அப்போதுதான் வீட்டிற்கு வந்த சதீஷ் மற்றும் ஏனையோர் வந்தனர்.. அங்கே நடந்ததைப் பார்த்து ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தனர்.. முதலில் அதிர்ச்சியில் இருந்து மீண்ட பவி " இங்க என்ன நடக்குது?" என்று கேட்டாள்..

அவள் போட்ட சத்தத்தில் திரும்பி பார்த்த கதிர் எழுந்து நின்றான். அவன் எழுந்து நிற்கவும் பிருந்தாவும் அவர்களை பார்த்து மிரண்டு போய் கதிரின் கையை பிடித்துக் கொண்டு நின்றாள்..

"என்ன சதீஷ் இது?"

"இரு பவி எல்லாத்தையும் சொல்றன் "

" ஓ.. அப்போ உங்களுக்கு இது முன்னாடியே தெரியும்.. அதனால்தான் இங்க கூட்டிட்டு வந்தீங்களா?"

"சொல்றன் பவி.. கொஞ்சம் அமைதியா இரு"

"எப்பிடி என்னை அமைதியா இருக்க சொல்றீங்க? இவளால நமக்கு எவ்வளவு பிரச்சனைனு உங்களுக்கு தெரியாதா? "

" பவி சொல்றன்ல அமைதியா இரு "

"சதீஷ் பிருந்தா ஏன் இப்படி இருக்கா? இவளுக்கு என்னாச்சி? " என கிரண் கேட்டான்..

"சொல்றன்.." என்ற சதீஷ் இதுவரை நடந்த அனைத்தையும் சொன்னான்.. அவன் சொல்லி முடிந்ததும் பெரிய அமைதி அங்கே நிலவியது..

" ஐயோ பாவம் பிருந்தா.. " என்றவாறு பிருந்தா அருகில் வந்தாள் மாதுரி.. மாதுரி அருகில் வர அவளைப் பார்த்து பயந்து கதிரின் பின்னால் ஒளிந்தாள் பிருந்தா..

" என்ன கதிர் பிருந்தா இப்பிடி நடந்துக்கிறா?"

"உங்களை தெரியாததனால இருக்கலாம்….இவ இதுவரைக்கும் பேசவே இல்லை.. "

" எவ்வளவு பேசக்கூடாத பேச்சு எல்லாம் பேசியிருப்பா.. இவளுக்கு நல்லா வேணும்.."

"பவி பிருந்தா இருக்கிற நிலமையில இப்பிடி நீ பேசுறது நல்லதில்லை"

"நீங்க வேணும்னா அவ செஞ்சத மறந்திருக்கலாம் மன்னிக்கலாம்.. என்னால முடியாது "

" பவி கொஞ்சம் அமைதியா இரு.. " என்ற மாதுரியின் பேச்சுக்கு சதீஷை முறைத்து விட்டு அங்கிருந்த சோபாவில் இருந்தாள்.

"பிருந்தாவை எப்பிடியும் குணப்படுத்தணும்"

" என்னதான் பண்றது சதீஷ்?"

" கிரண் நாளைக்கு டாக்டர்கிட்ட போய் இதைப் பற்றி பேசலாம் "

" சரி சேர்.."

"சதீஷ் அண்ணாக்கு இந்த விசயம் தெரியுமா?"

"இல்லை கிரண் அண்ணாக்கு இந்த விசயம் தெரியாது.. அவர்கிட்ட எப்படி சொல்றதுனு தெரியல்லை எனக்கு "

" எப்பிடி சொல்றது வாயாலதான் "என்ற குரலின் சத்தத்திற்கு திரும்பி பார்க்க அங்கே பழைய கம்பீரத்துடன் நின்றிருந்தான் லயன்.. லயனை பார்த்தும் வேகமாக அவனருகே வந்தனர் தம்பிகள் இருவரும்..

" அண்ணா " என்று ஒரே சமயத்தில் அழைத்தனர்.. அவர்களை பார்த்து சிரித்தவன் அங்கே கதிரின் கையை பிடித்துக் கொண்டு நின்றிருந்த பிருந்தாவை நோக்கின..

"சோ இதனால்தான் என் கூட சரியா பேசலை அப்படித்தானே சதீஷ்"

"அண்ணா.. அதுவந்து"

"நீ பேசும் போது ஏதோ சரியில்லாத மாதிரி இருந்திச்சி அதுதான் உடனே வந்தன்"

"வீரா இதுக்காகவா இப்பிடி அடிச்சு பிடிச்சு வந்தம்? நீ கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திட்டு வந்திருக்கலாமே"

"இல்லை அம்மா சதீஷ் பேசும் போது அவன் குரல்ல ஏதோ வித்தியாசம் தெரிஞ்சிது.. அதுதான் வந்தன் "

" நல்ல பிள்ளைங்கடா நீங்க"

"அண்ணா நீங்க நிற்கிறீங்க.. நடக்கிறீங்க.. அண்ணா சூப்பர் " என்றவாறு அவனை இருபக்கமும் அணைத்துக் கொண்டனர்.. அவனும் அவர்களை அணைத்துக் கொண்டான்..

" சொல்லு சதீஷ் பிருந்தா ஏன் இப்பிடி இருக்கா? "

" சொல்றன் அண்ணா " என்ற சதீஷ் மீண்டும் பிருந்தாக்கு நடந்ததை சொன்னான்.. அதை கேட்ட சித்து "என்னங்க பிருந்தாவை குணப்படுத்த முடியாதா?"

"அக்கா உனக்கு அறிவு இருக்கா?"

"என்ன பிருந்தா இப்பிடி கேட்கிற?"

"பின்ன எப்படி கேட்க? உனக்கு அவ எவ்வளவு பிரச்சனை பண்ணியிருப்பா? எல்லாத்தையும் மறந்திட்டியா?"

"பவி அதுக்காக அவ இப்போ இருக்கிற நிலமையில இப்பிடி பேசலாமா? அவள் இருக்கிற நிலமையில நாமதான் அவ கூட இருக்கணும் "

" எப்பிடி அக்கா உன்னால இப்படி நினைக்க முடியுது? "

"வேற என்ன பவி பண்ணணும் அவ நமக்கு கெடுதல் பண்ணாணு நாம அவளுக்கு கெடுதல் பண்ணா நமக்கும் அவளுக்கும் என்ன வித்தியாசம்? பவி, பிருந்தா நம்ம உறவு, எனக்கு தங்கச்சி உனக்கு அக்கா.. அது எப்பவும் மாறாது பவி.. அவளை நாம பார்த்துக்கணும்.. "

" சாரி அக்கா"

" சாரி எல்லாம் தேவையில்லை பவி நீ புரிஞ்சிக்கிட்டாலே போதும்.. அண்ணா இப்போ பிருந்தாவை எப்பிடி குணப்படுத்தறது? "

" நாளைக்கு டாக்டர்கிட்ட போகலாம்னு இருக்கிறம் அண்ணி.. "

" கதிர் அண்ணா பிருந்தாவை காப்பாத்தினதுக்கு ரொம்ப நன்றி "

" ஐயோ இல்லை மா எதுக்கு நன்றி எல்லாம் சொல்லிட்டு "

" பிருந்தா வா " என சித்து அவளது கையை பிடிக்க, பிருந்தா சித்துவின் கையை உதறிவிட்டு மேலும் கதிரிடம் ஒன்றினாள்.. கதிருக்கு சங்கடமாக இருந்தது..

" கதிர் பிருந்தாவை அறையில விட்டுட்டு வா "

" சரி சேர் " என்றவன் பிருந்தாவை அறைக்குள் அழைத்துச் சென்றான்.

" என்னங்க எப்பிடியாவது பிருந்தாவை குணப்படுத்தணும்"

"கண்டிப்பா சித்து அவளுக்காக இல்லைன்னாலும் உனக்காக..சரி எல்லோரும் உட்காருங்க ஒரு முக்கியமான விசயம் சொல்லணும் "

"மாமா திரும்ப ஏதாவது சாக் நியூஸ் சொல்லாதீங்க"

"இல்லை பவி ரொம்ப சந்தோசமான விசயம் சொல்லப்போறன்.. என்ன கதிர் பிருந்தா தூங்கிட்டாளா? "

" ஆமா சேர் அவ படுத்ததும் தூங்கிடுவா"

" சரி இங்க உட்காரு கதிர்"

*சரி சேர்"

"சதீஷ் உனக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் இருக்கு"

"சர்ப்ரைஸா? என்ன அண்ணா?"

"சொல்றன் இவங்க யாருனு தெரியுமா?" என்று ராஜேஸ்வரியையும் பரமேஸ்வரனையும் காட்டிக் கேட்டான்.

"என்ன அண்ணா இது? இது ராஜி அம்மா.. இவங்க?"

"ராஜீ அம்மாதான்.. மற்றது ராஜி அம்மாவோட ஹஸ்பண்ட்"

" ஆ.. இவங்க தானா.. நான் போன்ல கூட பேசினேன் அண்ணா "

" சதீஷ் உன்கிட்ட நான் இப்போ சொல்லப் போறதை நீ எப்பிடி எடுத்துப்பனு எனக்கு தெரியாது.. ஆனால் சொல்ல வேண்டிய கட்டாயம் சதீஷ் "

" அண்ணா சொல்லுங்க அண்ணா எதுவாக இருந்தாலும் பரவாயில்லை "

" சதீஷ் உன்னோட உண்மையா உன்னை பெத்த அம்மாதான் ராஜீ அம்மா.. உன்னோட அப்பா பரமேஸ்வரன் " என்றான் லயன்.. அதைக் கேட்ட சதீஷ்க்கு அதிர்ச்சியில் கண்ணீர் வந்தது..

" சதீஷ் நான் சொல்றதை முழுசா கேளு " என்றவன் ராஜேஸ்வரி பரமேஸ்வரன் வாழ்க்கை ஆரம்பம் முதல் அவர்கள் பிரிந்தது வரை சொல்லி முடித்தான்..

எல்லாவற்றையும் கேட்ட சதீஷ் லயனின் காலடியில் இருந்து அவனது மடியில் தலைவைத்துக் கொண்டான்.. சதீஷின் கண்களில் இருந்து வந்த கண்ணீர் அவனது மடியை நனைத்தது.. லயனின் விரல்கள் அவனது தலையை வருடிக் கொடுத்தன..

"அண்ணா…"

"சொல்லு சதீஷ்"

"அப்போ நான் அநா… அநாதை இல்லையா அண்ணா?"

"இல்லடா உனக்கு அம்மா இருக்கிறாங்க அப்பா இருக்கிறாங்க.. நாங்க எல்லோரும் இருக்கிறம்"

"அண்ணா எனக்கும் அம்மா அப்பா இருக்கு"

"ஆமாடா இருக்கு"

லயனிடம் இருந்து பிரிந்தவன் பவியின் கையை பிடித்தான்..

"பவி"

" சதீஷ்"

"எனக்கு அம்மா, அப்பா ரெண்டு பேரும் இருக்கிறாங்க "

"ஆமா சதீஷ்… நீங்க எது இல்லைனு வருத்தப்பட்டீங்களோ அது உங்களுக்கு கிடைச்சிருக்கு"

" அண்ணா முதல்ல அம்மாவையும் அப்பாவையும் பாருங்க "என்றாள் சித்து.. அதன் பின்னரே அவர்களிடம் சென்று அவர்களை அணைத்துக் கொண்டான் சதீஷ்.. மூவரது கண்களும் கண்ணீரில் நனைந்தன… அவர்களை சிறிது நேரம் விட்டனர்.

" மாதுரி அக்கா இங்க பாருங்க கிரண்யா குட்டி உங்க மடியிலேயே தூங்கிட்டா " என்று சித்து சொன்ன பிறகுதான் மற்றவர்கள் கிரண்யாவை பார்த்தனர்..

"ஆமா சித்து நான் இங்க இவங்களை பார்த்திட்டு இருந்ததில கிரண்யாவை மறத்திட்டன்"

"நல்லா மறந்த போ" என்று கிரண் சொல்ல அவ் இடமே சிரிப்பால் நிறைந்தது..

" சரி நான் போய் சமைக்கிறேன்.. "

" இல்லை தாராமா சமைக்க வேண்டாம் ஓடர் பண்ணிக்கலாம்"

"ஆமா அண்ணா.. எல்லோருக்கும் டயர்டா இருக்கும்ல"

" அதுதான் கிரண் "

" எனக்கு டயர்ட் எல்லாம் இல்லை… நாநான் சமைக்கிறேன்"

"சித்து அதுதான் வீரா சொல்லிட்டான்ல விடு"

"சரி அம்மா "

பின்னர் லயன் எல்லோருக்கும் சாப்பாடு ஓடரு பண்ண, சிறிது நேரத்தில் சாப்பாடு வந்தது.. அனைவரும் சேர்ந்து சாப்பிட்டனர்..

" எல்லோரும் போய் தூங்குங்க நாளைக்கு பேசிக்கலாம் "

" சரி அம்மா " என்றவர்கள் அவரவர் அறைக்குச் சென்றனர்.. சித்து சமையலறைக்கு சென்றாள்..

…………………………………………….


கிரண்யாவை கட்டிலில் படுக்க வைத்து நிமிர்ந்த மாதுரியின் கண்களுக்கு கிரணின் யோசனை படிந்த முகம் தென்பட்டது.. மெல்ல அவனுக்கு அருகில் வந்தாள் மாதுரி.

"என்னங்க? என்ன யோசனை?"

"மாது எங்க அம்மா திருந்தவே மாட்டிங்களா? எல்லோரும் அம்மா அப்பானு இருக்கும் போது என்னோட மனசும் கிடந்தது தவிக்கிது மாது.. அவங்க தப்பு செய்திருந்தாலும் என்னோட அம்மா தானே மாது"

"என்னை மன்னிச்சிடுங்க கிரண்.. என்னாலதானே இது எல்லாம்.. நானு மட்டும் இங்க வராமலே போயிருந்தா நீங்க உங்க அம்மாவை பிரிஞ்சிருக்க மாட்டீங்கல.. "

" ஐயோ இல்லை மாது.. உன்னால எதுவும் இல்லை.. கிரண்யாவை நீ பாத்துக்கிறதை பார்க்கும் போது சின்ன வயசில என்னை அம்மா பார்த்துக்கிட்டதுதான் ஞாபகம் வருது.
அதுதான் என்னை மீறி அப்பிடி சொல்லிட்டன்..அது போக போக சரியாகிடும்.. நீ இதை போட்டு குழப்பிக்காம இரு மாது "

" சரிங்க.."

இவர்கள் பேசியதை ஒரு ஜோடி கண்களும் காதுகளும் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருக்க ஒரு உருவம் அதை வீடியோவாக எடுத்துக் கொண்டது…

…………………………………………………..

" என்ன விஜி ஏதோ யோசனையில இருக்க "

" இல்லங்க இவ்வளவு பெரிய வீட்ல நாம ரெண்டு பேரும் மட்டும்தானே இருக்கிறம்.. நீங்க என்னையும் நான் உங்களையும் தான் பார்த்துக் கொண்டு இருக்கிறம்"

"வேற என்ன பண்ண சொல்ற விஜி?"

"சரி அதை விடுங்க.. நீங்க ஹோட்டல் விசயமா போனீங்களே என்னாச்சிங்க? "

" இன்னும் என்ன ஆகணும் விஜி.. அதை திறக்க முடியாது.. அப்பிடி திறக்கணும்னா அந்த லயனோட உதவி வேணும் "

" எதையும் யோசிக்காதீங்க பார்க்கலாம் "

" சரி விஜி.. பார்க்கலாம் "

" சரிங்க "

இருவரும் சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்றனர்…..

…………………………………………………..

காலையில் மிகவும் வேகமாக வேலைகளை செய்து கொண்டிருந்தாள் சித்து..

" என்ன அக்கா இவ்வளவு அவசரமா வேலையை செய்திட்டு இருக்க? "

" ஒரு முக்கியமான வேலை இருக்கு பவி அதுதான் "

" அப்பிடி என்ன வேலை அக்கா?"

"அந்த வேலையை முடிச்சிட்டு வந்து சொல்றன்"

"பார்டா என்னோட பழைய சித்து அக்காவா இது?"

"அவ இப்போ சித்து மட்டும் இல்ல பவி எல்லோரும் பார்த்து பயப்படுற லயனோட மனைவி.. "

" என்ன கிரண் அண்ணா நீங்களுமா? "

" நான் சும்மா சொன்னேன் மா… எங்க போகப்போறமா? "

" அண்ணா போயிட்டு வந்து சொல்றன்.."

" சரி மா.. ஆமா யார்கூட போகப்போறமா? "

" என்கூட தான் வரப்போறா" என்றவாறு படிகளில் இறங்கி வந்தான் லயன்.

" ஓ.. அண்ணாகூடதான் போறியாமா? சரி அப்போ போயிட்டு வா"

" சரி போலாமா தாரா"

"ஐயோ இவரு என்ன எப்பிடி சொல்றாங்க? கடவுளே என்ன நடக்க போகுதோ " என்று மனதில் நினைத்துக் கொண்டு வெளியில் தலையாட்டி வைத்தாள்..

" சரி நாங்க போயிட்டு வந்திடுறம்" என்ற லயன் சித்துவை அழைத்துக் கொண்டு சென்றான்.. காரில் இருந்த சித்துவுக்கு ஒன்றும் விளங்கவில்லை..

" என்ன தாராமா போலாமா? "

" எங்கங்க? "

" நீ எங்க போகணும்னு நினைச்சயோ அங்கதான்"

"என்னங்க.."

"தாராமா நைட் கிரணும் மாதுரியும் பேசினது நீ மட்டும் கேட்கல… நானும் கேட்டேன்.. கேட்டது மட்டுமல்ல வீடியோவும் எடுத்திருக்கிறேன்.." என்றான்..

ஆமாங்க அவங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருந்ததை கேட்டது சித்துவும் லயனும்தான்…

" என்ன சித்து நீ தனியாக போய் பேசலாம்னு பார்த்தியா? "

" இல்லங்க.. நீங்க வந்தா உங்களை பார்த்து கோபப்படுவாங்க, அவங்களை பார்த்து நீங்க கோபப்படுவீங்கனு நினைச்சி தான் கூப்பிடல "

"எனக்கு கோபம் வரும் தான் ஆனால் கிரணுக்காக பேசணும் அதனாலதான் வர்றன்"

"ஏங்க நீங்க முதல்ல எதுவும் பேசாதீங்க.. நான் முதல்ல பேசுறன் "

" ஏன் தாரா? "

" பிளீஸ்ங்க "

" சரி " என்று இருவரும் பேசிக் கொண்டு தரணிதரன் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.. அங்கிருந்த கார்ட்ஸ் லயனை பார்த்தும் கதவை திறந்து விட இருவரும் உள்ளே சென்றனர்.. இவர்கள் உள்ளே சென்றதும் அங்கிருந்த கார்ட்ஸ் ஒருத்தன் கிரணுக்கு போன் பண்ணி இவர்கள் இங்கு வந்திருப்பதை கூறினான். உடனே கிரண் இங்கே வர புறப்படும் போது சதீஷூம் தானுமு உடன் வருவதாக கூற இருவரும் சேர்ந்து வந்தனர்…

அங்கே சோபாவில் அமர்ந்து தமது வேலைகளை செய்து கொண்டிருந்தனர் தரணிதரனும் விஜியும்.. வாசலில் சத்தம் கேட்க நிமிர்ந்து பார்த்தனர்.. அங்கே நின்றிருந்த லயனை பார்த்து அதிர்ச்சியில் எழுந்து நின்றனர்..

"என்னடா இவன் நடக்கிறானானு பார்க்கிறீங்களா ?" என்றவாறு உள்ளே வந்து அங்கிருந்த சோபாவில் அமர.. அவனருகே சித்துவும் அமர்ந்தாள்..

"என்ன பார்க்கிறீங்க? உட்காருங்க"

"என்ன எங்க வீட்டிற்கே வந்து எங்களையே அதிகாரம் பண்றியா?"

"அதிகாரம் பண்றனா ? நான் அதிகாரம் பண்ண ஆரம்பிச்சா எப்பிடி இருக்கும்னு உங்களுக்கு தெரியும்.. என்னோட பொண்டாட்டி உங்ககிட்ட பேச வந்திருக்கா.. நான் அவ கூட வந்திருக்கிறன் "

" ஓ… இவளுக்கு எங்கூட பேச என்ன இருக்கு "என்று கேட்டார் விஜி..

" இருக்கு அம்மா.. நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க"

" நீ சொல்றதை ஏன் நான் கேட்கணும்..? "

" அம்மா.. நான் இங்க வந்தது கிரண் அண்ணாவை பற்றி பேச அம்மா "

" கிரணா? கிரணுக்கு என்னாச்சி? "என்று பதறினார் விஜி..

" பயப்படாதீங்க அம்மா.. அண்ணாக்கு இப்போ எதுவும் இல்லை.. ஆனால் ஏதாவது நடக்கலாம் அம்மா "

" ஏய் சொல்றதை தெளிவாக சொல்லு பதறுது " என்றார் தரணிதரன்.. அவரை ஒரு மாதிரி பார்த்தான் லயன்..

" அம்மா" என்ற சித்துநைட் கிரணும் மாதுரியும் பேசிக் கொண்டு இருந்ததை கூறினாள்..

" என்ன என் பையன் இப்பிடி பேசினான்னு சொல்லி எங்களை ஏமாத்த பார்க்கிறீங்களா? "

" இல்லை அம்மா.. இப்போ கூட உங்க வாயால என் பையன்னு தானே சொன்னீங்க.. அவருக்கு என்னவோ ஏதோனு பதறுறீங்க.. நாங்க சொல்றதை நம்புங்க மா"

"அவனுக்கு நாங்க வேணும்னா அவன் இங்க வரட்டும்"

"இங்க பாருங்க அவன் உங்க மேல எவ்வளவு பாசமா இருக்கிறானோ அவ்வளவு கோபமா இருக்கிறான்"

" அப்பிடி கோபமா இருக்கிறவன் இப்பிடி பேசுவானா? " என்று கேட்டார் விஜி..

" நீங்க நம்பமாட்டீங்கனு தெரியும்.. இதை பாருங்க" என்று தனது போனில் இருந்த வீடியோவை காட்டினான் லயன்..

" அண்ணா இங்க என்ன பண்றீங்க? " என்று அங்கே சதீஷூடன் வந்தான் கிரண்..

" நீ எதுக்கு இங்க வந்த கிரண்? "

" அண்ணா சித்து நீங்க இங்க வந்து பேசபோறீங்கனு தெரிஞ்சிருந்தா இங்க வர விட்டிருக்கவே மாட்டேன்.. "

" நீங்க சும்மா இருங்க அண்ணா.. நீங்க மாதுரி அக்கா கிட்ட எவ்வளவு வருத்தத்தோட பேசிட்டு இருந்தீங்கனு பார்த்த எங்களுக்குத்தான் தெரியும் "

" கிரண் உன்னோட கவலையை போக்குறது ஒரு அண்ணணா என்னோட கடமை "

" அண்ணா.. எனக்கு கவலை இருக்குதான்.. அதுக்காக நீங்க வந்து இப்பிடி இவங்க கிட்ட பேசணும்னு இல்லை அண்ணா.. "

இவர்கள் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்த தரணிதரனும் விஜியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..

" அம்மா பிளீஸ் அண்ணா ரொம்ப பாவம் அவருக்ககவாவது நீங்க மாதுரி அக்காவையும் கிரண்யா குட்டியையும் ஏத்துக்கணும் பிளீஸ் " என்ற சித்து சிறிதும் யோசிக்காது அவர்கள் காலில் விழுந்தாள்.. அவள் காலில் விழுவாள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை..

"அண்ணி.."

" தாரா என்ன இது எழுந்திரு "

" இல்லங்க அண்ணா கவலைப்பட்டா உங்களுக்கும் கவலையா இருக்கும்.. என்ன பொறுத்தவரைக்கும் உங்களுக்கு சந்தோசத்தை மட்டும்தான் கொடுக்க நினைக்கிறன்… அதஅதுக்காக என்ன வேணாலும் பண்ணுவன்"

"அதுக்காக இப்படியா அண்ணி எழும்புங்க"

"அம்மா பாருங்க உங்க பையன் சந்தோசமா இருக்கணும்னு உங்க கால்லையே விழுறாங்க.. இவங்க உங்களை விட பல படி என்னோட மனசில உயர்ந்து நிற்கிறாங்க.. இல்லை தெரியாமல்தான் கேட்கிறேன் நீங்க ரெண்டு பேரும் வெட்டி கௌரவம் பார்த்திட்டு தனிய இருந்து என்ன சாதிக்க போறீங்க? நாளைக்கே உங்களுக்கு ஒண்ணுணா இங்க யாரு இருக்கா? இல்லை யாரு வரப்போறா? இந்த கௌரவமா? "

" அப்பா சின்ன வயசில இருந்து நீங்கதான் என்னோட ஹீரோ.. என்னோட அப்பாதான் சூப்பர் ஹீரோனு எனக்குள்ள ஒரு கர்வம் இருக்கும்.. ஆனால் எப்போ நீங்க பெரியம்மாவை கொன்னீங்கனு தெரிஞ்சிதோ அப்பவே உங்க மேல இருந்த நல்ல அபிப்பிராயம் போயிடுச்சி.. ஆனால் அப்பான்ற பாசம் இன்னும் மனசுக்குள்ளே இருக்கு.

நீங்க ரெண்டு பேரும் எப்பவுமே திருந்த மாட்டீங்க.. நாங்க சொல்லியா திருந்தப் போறீங்க? அண்ணா அண்ணி வாங்க நம்ம வீட்டிற்கு போகலாம் " என்றவன் லயனையும் சித்துவையும் அழைத்துக் கொண்டு திரும்ப,

" எங்களை மன்னிச்சிடு கிரண் " என்றார் விஜி..

" என்ன திரும்ப நடிக்கிறீங்களா? "

" இல்லைப்பா.. நாங்க திருந்திட்டம்.. இந்த பெரிய வீட்ல எல்லோரும் சேர்ந்து இருக்கும் போது தெரியலை.. யாருமே இல்லாமல் நாங்க ரெண்டு பேரும் இருந்த போதுதான் தெரிஞ்சிது தனிமை எப்பிடி இருக்கும்னு.. "

" ஆமா கிரண் உன்னை ரொம்ப செல்லமா வளர்த்தம்.. எங்களோட நீ உயிர்டா நீ " என்று விஜியும் தரணிதரனும் கூறினார்கள்..

" நீங்க திருந்திட்டீங்கனு நான் எப்பிடி நம்புறது? " என கிரண் கேட்டான்

" என்ன அண்ணா அவங்கதான் திருந்திட்டேன்னு சொல்றாங்கல.. "

" இல்லை அண்ணி இவங்களை நம்ப முடியாது "

" சரி கிரண் நீ நம்பணும்னா நாங்க என்ன செய்யணும்? "

"உங்களால பாதிக்கப்பட்ட லயன் அண்ணாகிட்ட மன்னிப்பு கேட்கணும்.. அதுமட்டுமல்ல பெரியம்மாவை நீங்க கொலை பண்ணதை ஒத்துக்கிட்டு ஜெயிலுக்கு போகணும் "

" இல்லை கிரண் அதெல்லாம் வேண்டாம்.. உன்னை அவங்க திருந்தி ஏத்துக்கிட்டதே போதும் " என்றான் லயன்.

" இல்லை வீரா, கிரண் சொல்றதுதான் சரி.. உனக்கு நாங்க செய்த எல்லாத்துக்கும் எங்களை மன்னிச்சிடுனு கேட்க கூட எங்களால முடியலை.. ஒரு மன்னிப்புல எல்லாம் மாறிடாது.. நான் உன்னோட அம்மாவை.. என்னோட முதல் மனைவியை கொலை பண்ணதுக்கு தண்டனை ஏத்துக்கிறன் வீரா.. உனக்கு ஒரு அப்பாவா நான் எதுவும் பண்ணலை அதுக்காக என்னை மன்னிச்சிடு "

" ஆமா இவரு சொல்றது சரிதான் லயன்.. எங்களை உனக்கு எப்போ மன்னிக்கணும்னு மனசு சொல்லுதோ அப்போ மன்னிச்சிடு..நீங்க போலிஸ்க்கு சொல்லுங்க "

" சரி விஜி.. "

" அதெல்லாம் வேண்டாம்.. இவங்க ஜெயிலுக்கு போனா என்னோட அம்மா உயிரோட வந்திடுவாங்களா? அதெல்லாம் தேவையில்லை."

"இல்லை அண்ணா.. அவங்க செய்த தப்புக்கு தண்டனை அனுபவிச்சேயாகணும்"

" அவங்க விருப்பம் " என்ற லயன் அமைதியாகி விட தரணிதரன் போலிஸை வரச் சொன்னார்..

" கிரண், வீரா நான் போறன்.. விஜியை பார்த்துக்கோங்க.. விஜி பத்திரமா இரு.. "

" சரிங்க.. போயிட்டு வாங்க.. " என்றார் கண்ணீருடன்…

சிறிது நேரத்தில் போலிஸ் வந்தனர்.. வந்தவர்களிடம் நடந்ததை சொல்ல அவர்கள் தரணிதரனை கூட்டிச் சென்றனர்.. அனைவரையும் ஒரு முறை பார்த்தவர் போலிஸூடன் சென்றார்..

" போலாம் தாரா "

" சரிங்க.. ஆனால் விஜி அம்மா.. "

"அவங்க இங்க தனியாகவா இருக்க முடியும் நம்ம கூடதான் இருக்கப் போறாங்க" என்ற லயன் கண்களை காட்ட சித்து விஜியை அழைக்க,

"இல்லை மா.. நான் உங்களுக்கு செய்த பாவத்திற்கு தனியாக இருக்கிறதுதான் எனக்கு நான் கொடுக்கிற தண்டனை "

" நீங்க மனசு மாறினதே எங்களுக்கு போதும் அம்மா.. வாங்க அங்க போகலாம்.. " என்றாள் சித்து..

" அம்மா வாங்க " என்று கிரணும் அழைத்தான்..

அதன் பின்னர் அவர்களுடன் லயனின் வீட்டிற்கு சென்றார்..

அங்கே வீட்டில் இருந்த பவி, மாதுரிக்கு நடந்ததை கூறினர்..விஜி மாதுரியிடமும் மன்னிப்பு கேட்டார்..

அதே பால்கனியில் லயனின் அணைப்பில் இருந்தாள்.. "என்னங்க இப்போ சந்தோசமா? "

" சந்தோசம்தான் தாராமா ஆனால் நீ அவங்க கால்ல விழுந்து எனக்கு பிடிக்கலை"

"உங்களுக்காக, நீங்க சந்தோசமா இருக்க என்ன வேணும்னாலும் செய்வன்ங்க.."

"அதுக்காக ஒருத்தரோட கால்ல என்னோட பொண்டாட்டி விழுறதை என்னால ஏத்துக்க முடியாது.. இதுதான் உனக்கு கடைசி இனிமேல் இப்படி பண்ணாத "

" சரி இனிமேல் இப்பிடி பண்ணல.. கொஞ்சம் சிரிங்க.. எப்பவும் முறைச்சிட்டே இருக்காமல் " என்ற சித்துவின் கன்னங்களை கடித்தான்.

" ஐயோ என்னங்க இது.. வலிக்குது " என்று சிணுங்கியவள் கன்னங்களுக்கு மருந்திட்டான் அவனது முத்தம் மூலம்..

" தாராமா.. எல்லாம் நல்லபடியா முடிஞ்சிது.. நாம எப்போ நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கிறது? எனக்கு சீக்கிரமா ஒரு பெண் குழந்தையை பெத்துக் கொடு தாராமா"

"எதுக்கு பெணு குழந்தை.
ஆண் குழந்தையா வேணாமா?"

"இல்லடி பெண் குழந்தை பிறந்தால் அம்மாவே திரும்ப பிறப்பாங்கனு நம்புறன் அதுதான்… "

" கண்டிப்பா உங்க அம்மா நம்மக்கு பிள்ளையா வந்து பிறப்பாங்க பாருங்க " என்றாள்.

" அது எல்லாம் சரிதான் தாராமா.. ஆனால் அதுக்குரிய வேலையை ஆரம்பிக்கணும்ல " என்று அவளை பார்த்து கண்ணடிக்க வெட்கத்தில் சிவந்த முகத்தை மறைக்க அவனிடமே அடைக்கலமானாள் சித்து.. அடைக்கலமானவளை தனது வலிய கரங்களால் அணைத்துக் கொண்டான் லயன்…அவர்களது வாழ்க்கை இனிதே ஆரம்பமானது….

எல்லோரும் ஒன்றாக இருந்தனர்.. ஆனால் பிருந்தாவோ அறைக்குள் கதிரின் கைகளை பிடித்தவாறு தூங்கிக் கொண்டு இருந்தாள்…

தரணிதரனின் தண்டனை காலம் முடியும் நாளுக்காகவும், பிருந்தா குணமாகும் நாளுக்காகவும் அனைவரும் காத்திருக்கின்றனர்……

நாமும் அவர்கள் விரைவில் இவர்களுடன் இணைந்து கொள்ள வேண்டும் என வேண்டிக் கொண்டு விடை பெறுவோம்……………

கரும்பொன் நிறைவுற்றது..
 
Top