• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

🌼காதலாகிய என் இசையவள் 02🌼

fajeeha mumthaj

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 14, 2023
Messages
80
எப்போதும் போல் தன் அண்ணனுடன் இருந்து வந்த அழைப்பை எடுத்து பேசியபடி வந்தவளிற்கு அவனின் பாக்கட்டில் இருந்து ஃபோன் அடிக்கும் சத்தம் கேட்க அதை எடுத்து அணைக்க வழியின்றி அமைதியாக தன் வேலையை கவனிக்க தொடங்கினாள் ஆயிஷா.


தொடர்ந்து அடித்த கைபேசியின் சத்ததில் கண்களின் மேல் ஏதோ பாராங்கல்லை வைத்திருப்பது போல் பாரமாக இருக்க கடினப்பட்டு மெதுவாக கண்களை திறந்தான் கிஷான்.


நடந்த கலவரத்தில் ஒருவர் பதட்டத்தில்
தள்ளி விட்டு ஓட அங்கிருந்த கார் ஒன்றின் பக்கவாட்டில் அவன் தலை அடிப்பட்டு சற்று ஒரு பக்கம் வீங்கியிருந்தது அதன் வலி கூட இப்போது தான் தெரிந்தது தலையை பிடித்து நிமிர்ந்தவனுக்கு தான் இருக்குமிடத்தின் வித்தியாசத்தை உணர்ந்தவன் சுற்று முற்றும் தன் பார்வையை சுழற்ற அதில் அப்போது தான் அறையில் இருந்து
வந்தவள் விழ....




யார் நீ??... என கேட்டவனிடம் பொறுமையாக "ஆர் யூ ஓகே கிஷான் சார்..." என்றவளை புருவ முடிச்சிட பார்த்தவன் "யாஹ் ஐயெம் ஓகே பட் நீதான் என்னை இங்கே கூட்டிட்டு வந்தியா?..."


"ஆமா சார்.... உங்களுக்கு ரொம்ப அடிப்படிருந்திச்சு அதான்‌ இங்கே கூட்டிட்டு வந்தேன் என் ப்ரென்ட் டாக்டர் தான் அவ தான் உங்களுக்கு ட்ரீட்மெண்ட் பார்த்தா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போற நிலமை வெளியே இருக்கலே சார்..."


"ஹா ஓகே எனக்கு கொஞ்சம் ஞாபகம் வர மாதிரி தான் இருக்கு எனிவே தாங்க்யூ என்னை சேவ் பண்ணதுக்கு..." என்றவன் கத்திக்கொண்டு இருந்த கைபேசியை உயிர்ப்பித்தான்.


ஃபோன் பேசிவிட்டு வைத்தவனின் முகம் மாறியது அவனின் குழப்பமான முகத்தை பார்த்தபடி வந்தவள் அவனுக்கு சூடாக இஞ்சி டீயை நீட்டினாள் "குடிங்க கொஞ்சம் பெடரா ஃபீல் பண்ணுவீங்க ஆமா என்னாச்சு சார் ஏதும்‌ ப்ராப்ளமா? டென்சனா இருக்கீங்க..." என்று டீயை அருந்தியபடி கேட்டவளிடம்‌‌.‌..


"அது வந்துங்க.... என்னாலே இப்போ இங்கயிருந்து நான் தங்கின ஹோட்டலுக்கு போக முடியாது இங்க போலிஸ் செக்கியூரிட்டி போட்டிருக்கிறதோட யாரும் போக வர அலோவ்ட் இல்லையாம் இப்போ தான் விசாரிச்சேன்... அதான் இப்போ என்ன பன்னுறதுன்னு யோசிச்சிட்டிருக்கேன்...." என்றவனுக்கு பெரிய தலைவலியாகி போனது இந்த கலவரம்.


"ஓஹ்.. அப்பிடியா? ஆனா நீங்க எதுவும் தப்பா எடுத்துக்கலன்னா நீங்க இங்கயே தங்கிகோங்க ப்ராப்ளம் சரியானதும் நீங்க தாராளமா போய்க்கலாம்...." என்றவளின் மனமும் பயத்தில் சிறு நடுக்கமும் கண்டது.


அந்நிய ஆணுடன் எப்படி தனியாக இருப்பது என்று ஆனால் வேற வழி அவனுக்கு உதவி பண்ணி தான் ஆக வேண்டும் என்று முடிவாகிடுச்சு செஞ்சு தானே ஆகனும் என்று மனதுக்கு தைரியம் சொன்னவள் முடிவெடுத்தவாளாக,


"இங்கப் பாருங்க கிஷான் சார் இந்த வீட்டிலே ரெண்டு ரூம் இருக்கு அதோ அந்த ரூம்மே நீங்க யூஸ் பண்ணிக்கோங்க.... நான் என் ப்ரென்ட் வீட்டிலே போய் தூங்கிப்பேன் நீங்க கவலைப்படாதிங்க.... அது மட்டும் இல்லை நீங்க இப்போ இப்பிடி காயத்தோட வெளியே போனீங்கன்னா அதை யாராவது பார்த்தால் போட்டோ பிடிச்சு தமிழ் நாட்டின் பிரபல பாடகர் மற்றும் மியூசிக் டைரக்டர் ஆன கிஷான் ரவீந்திரிற்கு நடந்தது என்ன? என்று நல்லா ஹெடிங் கிரியேட் பண்ணி சோசியல் மீடியாவே கதிகலங்க வெச்சிடும் இதை வெச்சு ஒரு வாரத்துக்கு ஓட்டு வாங்க பார்த்துக்கோங்க..." என்று அவள் கூற அதில் இருந்த உண்மையை நினைத்து பெருமூச்சு விட்டவனுக்கு அவள் சொன்ன பாணியில் முத்து பற்கள் தெரிய சிரிப்பும் வந்தது மறுநொடி.....


"உண்மை தான் என்ன பண்ணுறது வாய்ப்பு கிடைச்சா எங்களோட ப்ரைவெசியே கூட திரிச்சி பேசி அசிங்கப்படுத்திடுவாங்க...." என்று சொன்னவனுக்கு திரும்ப ஓர் அழைப்பு வர எடுத்து பேசியவனின் பேச்சிலே புரிந்தது அவன் அன்னை என்று....


"ஒன்னுமில்ல மா நான் நல்லாத்தான் இருக்கேன்... இல்ல இல்ல டவர் கிடைக்கலே மா அதான்... ஓகே ம்மா சரி ம்மா ம்ம் குட் நைட்..." என்றவன் அழைப்பை‌ துண்டித்ததும் பெருமூச்சு விட்டவன்‌ பெண்ணவளை தேட அவளை காணவில்லை எங்கோ ஏதோ சத்தம் கேட்ப்பதை உணர்ந்து மெதுவாக சுவற்றைப் பிடித்து கொண்டு நடந்தப்படி வந்தவன் அங்கு பெண்ணவள் ஏதோ சமைத்தப்படி இருப்பதை கண்டவன்.


ஏங்கே..! என அவளை அழைத்தவனுக்கு நிற்க முடியாமல் தடுமாற அவன் அழைப்பில் திரும்பிப் பார்த்தவள் ஆணவன் தடுமாறி கீழே விழப்போவதை கண்டு செய்த வேலையை அப்படியே விட்டு விட்டு வேகமாக ஓடி வந்து தாங்கிக் கொண்டவளின் இடையை பற்றிக்கொண்டது அவன்‌ கரங்கள் தன்னிச்சையாக "எதுக்கு எழுந்து வந்தீங்க சார் ஒரு குரல் குடுத்திருக்கலாமே..." என்றவள் அவனின் கையை தன் தோள் மீது போட்டு பிடித்துக்கொண்டு ஹாலிற்கு அழைத்து வந்து அங்கிருந்த சோபாவில் அமர வைத்தவள்.



"என்ன சார் ஏதும் வேணுமா என்ன? என்று கேட்டவளிடம்‌ தயங்கியபடி ரெஸ்... ரெஸ்ட் ரூம் போகனும் அதான்...." என்றவனின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு வந்தவள் மற்ற அறையின் கதவை திறந்து அவனை அழைத்துக்கொண்டு வந்தவள் இது தான் பாத்ரூம் சார் உள்ளே உங்களுக்கு தேவையானது எல்லாம் வெச்சிருக்கேன் காயத்துலே தண்ணிபடாம பார்த்துக்கோங்க அப்பறம் இது புது ட்ரெஸ் உங்களுக்கு சரியா இருக்குமான்னு தெரியாது எடுத்து வெச்சிருக்கேன் ஏதாவதன்னா கூப்பிடுங்க..." என்றவள் அவனை விட்டு விட்டு வெளியே வந்தவள் அவன் குரலுக்கு காது கொடுத்தபடியே சமைத்து முடித்தவள் அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு வரவும் அவன் மெதுவாக அறைக்கதவை திறந்துக்கொண்டு வரவும் சரியாக இருந்தது.



"எல்லாம் ஓகே தானே கிஷான் சார் இல்ல ஏதும் தேவைன்னா கூட தயங்காம சொல்லுங்க சார்...."


"சரி... என்றவன் எனக்காக இவளோ ஹெல்ப் பண்ணிருக்க ஆனா நான் நீ யாரு? அட்லீஸ்ட் உன் பேர் என்னன்னு கூட தெரிஞ்சிக்கலே பாரு... உன் பேர் என்ன?.." என்றவனுக்கு சிறு புன்னகையுடன் பதில் கொடுத்தாள்.


"ஆயிஷா... அய்ஷூன்னு எல்லாரும் கூப்பிடுவாங்க..."


"ஹோ நைஸ் நேம் நீங்க தலைக்கு ஷால் போட்டு இருக்கும் போது நினைச்சேன் முஸ்லிமா இருக்குமோன்னு என் கெஸ் கரெக்ட்டா தான் இருக்கு ஆமா என்னப் பண்ணுற படிக்கிறியா? இல்ல
வொர்க் ஏதுமா ஆ?.."


"வேலை தான் சார் படிச்சது ஆர்ட் ஆனா பாக்குற வேலை எடிட்டிங் வொர்க் என்ட் நான் படிச்ச யுனிவர்சிட்டிலே படிச்ச பாடத்தை இப்போ நான் ப்ரொபஸரா மாறி டீச் பண்ணிட்டு இருக்கேன்.... இங்கே ஒரு ஸ்காலர்ஷிப் மூலமா செலக்ட் ஆகி வந்தவே தான் ஆறு வருஷமா இங்கே தான் இருக்கேன் அப்போ அப்போ ஊருக்கு போய் வருவேன் என்னோட வீடு வேலை எல்லாம் இங்கவே இருக்கிறதாலே இது என்னோட நிதந்தரமா வசிக்கிற இடமா மாறிடுச்சு மத்தப்படி என்னோட குடும்பம் சொந்தக்காரங்க எல்லாம் ஊர்லே தான்...." என்றவள் சொல்ல அனைத்தையும் கேட்டவன் "ஆமா உன் ஊர் எது? நல்லா தமிழ் வேற பேசுறீங்க... ஒரு வேளை நீங்களும் இந்தியா தானா?..." என்றவனிடம்,


"மறுப்பாக தலையசைத்து நான் மலேசியா அங்கேயும் தமிழ் பேசுறவங்க நிறையபேர் இருக்காங்க கிட்டத்தட்ட இந்தியன்ஸ் மாதிரி தான் பேசுவாங்க உங்களோஞ கான்செட்க்காக அங்கே போனப்போ தெரிஞ்சிருக்குமே..."


"ஓஹ் யெஸ் யெஸ்..... என்றவனின் பார்வை எதிரே இருந்த சுவற்றில் பதிந்திந்தது அங்கு சில அவார்ட் அடுக்கி வைக்கப்பட்டிருக்க அதன் பக்கத்தில் அழகாக அவளின் குடும்ப புகைப்படத்தை மாட்டி வைத்திருக்க அதனுடனே நான்கு பக்க சட்டத்துக்குள் அவனின் உருவத்தை வரைந்து பெயின் பண்ணி‌ மாட்டி வைக்கப்பட்டிருந்தது அதைக்கொண்டு கண்கள் வியப்பில் விரிய...


"என்ன ஆயிஷா என் போட்டோவே எல்லாம் வெச்சிருக்கிற.... அதுவும்‌ பெயின்டிங் எல்லாம் வேறலெவல்லே இருக்கு நீயா வரைஞ்சது..." என்று கேட்க தலையசைத்தவள் நான் உங்களோட ஒரு தீவிர ரசிகை ஒரு நாளாவது நேர்லே பார்க்கனும் ஒரு சின்ன ஆட்டோக்ராப் வாங்கனுங்கிறது‌ என்னோட ஆசை இங்கே ஒரு கான்செட்க்காக நீங்க வந்திருந்தப்போ கடைஷி நேரத்திலே தான் டிக்கெட் கிடைச்சது நான் வந்து அத்தனை பேருக்குள்ள உங்களோட முகத்தை பார்க்க எவ்ளோ ட்ரைப் பண்ணேன் தெரியுமா? கடைசி வரைக்கும் அது முடியாமலே போச்சு..." என்று சோகமாக சொன்னவளின் கரத்தை மென்மையாக பற்றிக் கொண்டவன்....


"அதான் அந்த கடவுள் இப்போ எனக்கு உன்னோட உதவி தேவைப்படுற மாதிரி வெச்சு மீட் பண்ண வெச்சிருக்கான் சோ ஃபீல் பண்ணதே ஒரு வேளை நாம இப்படி தான் மீட் பண்ணனும்னு இருக்கு போல...." என்றவன் சொல்லி மற்ற வேலைகள் பற்றி பேச நேரம் கடந்ததே தெரியவில்லை....



"அச்சோ நீங்க மாத்திரை போடனும் சார்


வாங்க மொத சாப்பிடுங்க...." என்றவள் அவனை அழைத்துக்கொண்டு டைனிங் டேபிள் அருகில் வந்து அவனை இருக்க சொல்லி விட்டு தேங்காய் பூ போட்டு செய்யப்படும் ரொட்டியை சுட சுட அவன் தட்டில் வைத்தவள் கறி குழம்பும் தேங்காய் சாம்பலும் வைத்து கொடுத்தவள்....

"நீங்க இதெல்லாம் சாப்பிடுவீங்களான்னு தெரியலே சட்டுன்னு உங்களுக்கு என்ன பண்ணுறதுன்னும் தெரியாம இதைப் பண்ணிட்டேன் உங்களுக்கு பிடிக்கலேன்னா சொல்லுங்க வேற ஏதாவது உங்களுக்கு பிடிச்ச மாதிரி பண்ணி தரேன்..."


"ஹேய் இதை விட வேறென்ன வேணும் எனக்கு இதுவே போதும் நீயும் உக்கார்ந்து சாப்பிடு..." என்றவன் ரொட்டியை பிய்த்து சாப்பிட்டவன்.


"இது வித்தியாசமா இருக்கே நார்த் சைட்லே இப்படி எல்லாம் இருக்காதே சப்பாத்தி மாதிரி தானே இருக்கும்..." என யோசனையுடன் கேட்டவனிடம்,


"ம்ம் அதுலே தேங்காய் பூ போடுறது இல்ல இதுலே போட்டு செய்றோம் அவளோ தான் சார் வித்தியாசம்..."
என்றவள் தன் தட்டில் பகல் சமைத்த பிரியாணி எடுத்துப் போட்டு சாப்பிட அதை கண்டவன்.


"ஹேய் ஆயிஷா இது ரொம்ப தப்பு எனக்குத் தராமே நீ மட்டும் பிரியாணி சாப்பிடுற..." என்றவன் அவள் தட்டை‌ வாங்கி தனக்கு வைத்துக்கொண்டு தன் தட்டை அவளுக்கு கொடுத்துவிட்டு இயல்பாக ரசித்து ருசித்து சாப்பிட்டவனை சங்கடமாக பார்த்த ஆயிஷா.....



"சார்.... அது மதியம் சமைச்சு வெச்சது சார் நீங்க போய் அதை..."


"சோ வாட்? உனக்கு ஒன்னு தெரியுமா? எனக்கு காலேஜ் டேஸ்லே எல்லாம் ஒரு முஸ்லிம் ஃப்ரெண்ட் இருந்தான் அவனோட பெஸ்டிவல் இல்ல அவங்க வீட்டுல ஏதாவது பங்சன்னா நாங்க அவன் இன்வெய்ட் பண்ணோ பண்ணாட்டியோ போய் ப்ஸ்ட் ஆளா நின்னிடுவோம் ஏன் தெரியுமா? என்றவனை ஏன்? என்பது போல் பார்த்தவளிடம் சிரித்தபடி வேறெதுக்கு இந்த பிரியாணக்காக தான்...." என கண்சிமிட்டி சொன்னவனின் பேச்சில் உடன் சிரித்தவள்.


"அய்யோ உங்களோட ஃபேவரிட் பிரியாணிக்கு பின்னாடி இப்படியொரு ஹிஸ்ட்ரியா?...." என்றவளிடம் "அது என்னன்னு தெரியலே ஆயிஷா... நாங்க எவ்ளோ தான் பிரியாணி சமைச்சாலும் அவங்க பண்ற மாதிரி டேஸ்ட் வரவே மாட்டேங்குது இப்போ நீ சமைச்சது கூட நல்லாயிருக்கு....." என இருவரும் பேசியபடி சாப்பிட்டு எழுந்துக்கொண்டவள் எல்லாம் எடுத்து கழுவி வைத்து விட்டு வர அச்சமயம் அவள் வீட்டின் கதவு பட் பட்டென்று தட்டப்பட்டது இந்த நேரத்தில் கதவை இப்படி தட்டுவது யாராக இருக்கும் என எண்ணியபடி கதவை மெதுவாக திறந்து பார்த்தவள் அங்கு வந்து நின்ற அபி நின்ற கோலத்தை கண்டு அதிர்ச்சியாகி நின்றாள் ஆயிஷா.


தொடரும்.


பஜீஹா 🦋...
 
Top