• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
அம்பகங்களில் சொட்டும் காதலை தனது கண்களால் பருகியபடி, முதலில் மென்மையாக, பின் வன்மையாக, செல்ல கடிகள் கொஞ்சம், கடியினால் ஏற்பட்ட காயங்கள் கொஞ்சம், காயங்களுக்கு மருந்திடும் மார்க்கம் கொஞ்சம், முத்த சித்ரவதைகள் அதிகம், மூச்சடைக்கச் செய்யும் மோதல்களும் அதிகம் என ஒரே முத்தத்தில் தன் மனையாளின் ஒட்டு மொத்த உணர்வுகளையும் வெளிக் கொணர முற்பட்டான் அம்புதி.

ஆழியின் கண்களில் கண்ட காதலால் அம்புதியின் மனதிற்குள் ஒரு இனம் புரியா மகிழ்வு... ஏனோ! அவன் அவளிடம் இவ்வளவு காதலை எதிர்பார்க்கவில்லை.

அம்புதியைப் பொருத்தவரை ஆழிக்கு இந்த திருமணத்தில் விருப்பமும் இல்லை. அதேபோல் முறித்துக் கொள்ளும் எண்ணமும் இல்லை என்பது மட்டுமே அவன் அறிந்து வைத்திருந்த உண்மைகள்.

அதனையும் மீறி ஈஸ்வரியின் உளறல்களால் சில பொழுதுகள் 'ஆழிக்கு தன் மேல் காதல் உள்ளதோ!' என்று சரியான பாதையில் யோசிக்கத் தொடங்கியிருந்தவன் கூட மீண்டும் ஆழியின் வெட்டும் பேச்சில் அவ்வெண்ணத்தையே விடுத்திருந்தான்.

அந்த வெட்டும் பேச்சுகள் தான் இப்போது அவள் கண்களில் மிளிர்ந்த காதலை அதிசயிக்கத் தக்க ஒன்றாக மாற்றியிருந்தது.

முதல்முறை ஒருமுறை மட்டுமே காதலை வெளிப்படுத்தியதற்கே மகிழ்ந்து போனவன், உண்மையில் ஆழியின் அன்பின் ஆழம் தெரிய வந்தால் அவனால் அதனைத் தாங்க இயலுமா? அதே நேரம் அன்பை அள்ளிக் கொடுத்தவள் தான் அதிக காயங்களையும் தரவிருக்கிறாள் என்பதும் தெரிய வந்தால் அவனால் அதனை ஏற்க தான் முடியுமா!???

அன்பையே தாங்கிக் கொள்ள முடியாதவன், அந்த அன்பை அனுபவிக்கத் தொடங்கிய நொடியிலேயே அவள் தரவிருக்கும் காயங்களையும் அது தரும் வலிகளையும் எங்கனம் தாங்கிக் கொள்வான்!

நேரங்கள் கடந்தும் அவனை விலக்கத் தோன்றாமல் அவளும்..... அவளைப் பிரிய மனமில்லாமல் அவனும் இதழணைப்பைத் தொடர்ந்திருக்க, வெங்கடேஸ்வரியின் அழைப்பு இடையூறாய் ஒலித்து இருவரையும் விலக்கி வைத்தது.

காது மடல் சூடேறி, மூக்கின் நுனி சிவந்து, வதனம் முழுதும் செம்மையுற, தன் பார்வையைத் தவிர்த்து தன் அணைப்பில் நின்றிருக்கும் பாவையைக் காண சிறிதும் தெவிட்டவில்லை அவள் அன்பனுக்கு.

வேக மூச்சுகளால் பெண்ணவளின் முன்னழகு ஆடவனின் விழியையும், தேகத்தையும் உரசிச் செல்ல அணைத்திருந்த கைகளைக் கூட விலக்கத் தோன்றாமல் அவளையே பார்த்திருந்தான் அவளது அநுகன்.

வெங்கடேஸ்வரி மீண்டும் ஒருமுறை கதவை தட்டிய பிறகும் அவளை விட்டு விலகினான் இல்லை அவன். முதலில் சுதாரித்துக் கொண்ட ஆழி 'வருகிறேன்' என்று மறுகுரல் எழுப்பிய பின்னரே விருப்பமில்லாமல் விடுவித்தான் அவளை.

நேரே குளியலறை சென்று முகம் கழுவிக் கொண்டு அறைக் கதவைத் திறந்திட, அவளது கையில் குழம்பி கோப்பையை திணித்து விட்டு, "மாப்ளே சட்டையை கழட்டித் தர சொல்லு... துவைச்சு போடனும்" என்றார்.

"ஏன் ம்மா? அதான் மெஷின் வாஷ் பண்ணிக்கலாமே!" என்று என்றுமில்லாமல் இன்று விசித்திரமாக நடந்து கொள்ளும் தன் அன்னையை பார்த்து வினவினாள்.

"மெஷின்ல போட்டா குங்கும கரை போகாது... தர சொல்லு கையில துவைச்சு போடுறேன். மாப்ளேய கையோடு குளிச்சிட்டு வர சொல்லு" என்று சற்றே கண்டிப்புக் குரலில் கூறினார்.

ஆழிக்கோ 'ஐய்யோ...' என்றிருந்தது... முகத்தை எங்கேனும் சென்று மறைத்துக் கொள்ளலாமா என்று கூட இருந்தது.

அம்புதியுமே அப்போது தான் தன் மேலாடையை கவனித்தான். 'இது எப்போ நடந்தது!' என்று யோசித்தபடி குறும்புப் புன்னகையுடன் தன்னவளைக் காண, அவ்ளோ அவனை தான் முறைத்துக் கொண்டிருந்தாள். நொடியில் தன் பார்வையை மாற்றி தலை வழியே தன் உடையை கழற்றிக் கொடுத்தான்.

ஏற்கனவே நிற்க துணிவில்லாமல் நெளிந்து கொண்டிருந்த தன்னவளை இன்னும் கொஞ்சம் நின்ற இடத்திலேயே நடனமிடச் செய்ய நினைத்தானோ என்னவோ! வெங்கடாவிடம் "சட்டை பட்டனை வேற இவ பிச்சுட்டா அத்தே... அதையும் சரி செய்ய முடியுமா பாருங்க" என்றான் சர்வசாதாரணமாக...

"நான் எப்போ?" என்று ஆரம்பத்திவள், காலை அவன் தன் சட்டை பட்டனை திருகிக் கொண்டிருந்ததும் அதற்கு அவள் 'வெட்கம்' என பெயர் வைத்துக் கொண்டதும் நினைவில் வர, "நீங்க தானே!" என்று ஒற்றை விரல் நீட்டி மீண்டும் ஆரம்பிக்க, அவளது விரலோடு தன் விரல் கோர்த்து, "சரி... நான் தான் காரணம்... போதுமா!" என்று ரகசியமாய் மெல்லிய குரலில் மொழிந்து விட்டு, இதழ்கடை சிரிப்போடு அவள் கையிலிருந்த குழம்பி கோப்பையை பறித்து அருந்தத் தொடங்கினான்..

அவன் வார்த்தைகளும், கண் பார்வையும், இதழ் கடை சிரிப்பும் என்ன கூற விளைகிறது என்று விளங்கிடவே 'பேசாவதற்கு வசதியாக, குறிப்பு எடுத்துக் கொடுத்தது போல் ஆகிவிட்டதே!' என்று தன்னைத் தானே நொந்து கொண்டு, ஆழியும் தன் ஒற்றைக் கையை மடக்கி மற்றொரு கையால் முகம் முழுதும் மூடி, விரல் இடுக்கில் தன் அன்னையைக் காண, அவளது செயல் அவன் கூற்றை உறுதி செய்வது போல் ஆகிவிட்டிருந்தது.

அம்புதி எதிர்பார்த்தது போலவே வெங்கடாவிற்கும் இவர்களது சம்பாசனைகள் விளங்கிட நாணச் சிரிப்பு அவர் வதனத்தில்... இருக்காதா பின்னே! பெற்றோர்கள் முன்னிலையில் நடந்தேறிய திருமணமே என்ற போதும் கூட மற்ற திருமணத்தைப் போல் இயல்பாக நடந்திட வில்லையே இவர்களது திருமணம்.

மாப்பிள்ளை தேடலுக்கு முன்பே அம்புதியிடம் தன் மகளை கட்டிக் கொள்ள சம்மதம் கேட்டதற்கு தன் படிப்பை காரணம் காட்டி மறுத்தவனாயிற்றே அவர்களது முத்திரை குத்தப்படாத அக்மார்க் மறுமகன். மாப்பிள்ளை மிஸ்ஸிங் என்றவுடன் தானே தன் மாமனுக்காக மணமேடை ஏறினான்.

அப்படி இருக்கையில் தன் மகளின் வாழ்வு தாங்கள் கைவிட்ட இடத்தில் தான் இருக்கிறதா! இல்லை கொண்டவனின் கை சேர்ந்து மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கிறதா! என்ற குழப்பத்திற்கு தேவையான தெளிவை அல்லவா அவன் விடையாக உரைத்திருக்கிறான்.

"சரி மாப்ளே... சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க... டிபன் ரெடியா இருக்கு" என்று கூறி அவ்விடம் விட்டு நகர்ந்து சென்றார் ஆழியின் அன்னை.

ஆழி தன் அன்பனை முறைக்க, அவனோ வேறு இடம் பார்த்து வெறித்துக் கொண்டிருந்தான். அவன் விழித்த இடத்தில் ஈஸ்வரி இன்னமும் கவலை படிந்த முகத்துடன், அவனைத் தான் ஏக்கப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அம்புதியின் முகமோ 'இதை தெரிஞ்சுக்க தானே நெனச்சே! தெரிஞ்சுகிட்ட வரை போதுமா! இல்லே இன்னும் எதுவும் தெரிஞ்சுக்க வேண்டியது பாக்கி இருக்கா?' என்ற கேள்வியைத் தாங்கி வேதனை படிந்ததாக இருந்தது.

ஆழிக்கு அப்போது தான் புரிந்தது.... கடைசியில் உண்டான வாக்குவாதங்கள் தன் அன்னையின் முன் தன்னை வம்பளர்க்க உரைக்கப்பட்டவை அல்ல, அவனது முன்னால் காதலிக்காக உரைக்கப்பட்டது என்று.

இப்போது கதவை அடைத்து சண்டையிடுவது ஆழியின் முறையாக இருந்தது. "எதுக்கு இந்த ட்ராமா? யாருக்காக இந்த மெசேஜ் பாஸிங் கேம்?" என்று வினவியவளுக்கு விடை தான் கிடைக்கவில்லை.

அம்புதியோ ஆற அமர குழம்பியை அருந்திய படி மனையாளின் விழி வழியே அவள் மனதை படிக்கும் முயற்சியில் இறங்கியிருந்தான், பெண்களின் மனதை முழுதாக படித்த ஆண்கள் எவரும் இல்லை என்பதை மறந்தவனாய்.

அவன் பார்வையைத் தவிர்த்து "அதுவும் ராங் இன்ஃபர்மேஷன் ஏன் பாஸ் பண்ணனும்!" என்று அடுத்த கேள்வாயை முன் வைத்தாள் இதற்காவது விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.

அம்புதி அப்போதும் விடையளிக்காமல் போகவு, மனம் பொறுக்காதவளாய் அவன் எதிரே சென்று நின்று, "நமக்குள்ள தான் நேத்து நைட் ஒன்னும் இல்லேயே... பின்னே ஏன் இட் ஹேப்பண்ட்-ன்ற மாதிரி பேசுனீங்க?" என்றாள் சற்றே காட்டமாக.

குழம்பியைப் பருகிய படி சம்மந்தமே இல்லாமல், "அத்தே எப்பவும் காஃபி ஸ்ட்ராங்கா தான் போடுவாங்க... எனக்கு அதான் பிடிக்கும்னு அவங்களுக்கும் தெரியும்... ஆனா பாரேன் இன்னைக்கு மட்டும் ஏதோ ரெம்ப தித்திப்பா இருக்கிற மாதிரி இருக்கு" என்று கண்களால் அவள் இதழ்களையும் சேர்த்து பருகி, அழகான கள்ளச் சிரிப்பை உதிர்த்தான் அந்த கள்வன்.

அவன் எதனால் அப்படி கூறுகிறான் என்பது புரிந்திட பேசாமடந்தையாய் மாறிப்போனாள் ஆடவள். தான் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல், பேச்சை திசை திருப்பத் தான் இவ்வாறு செய்கிறான் என்று ஊகித்தவள், கையாளாகத் தனத்துடன் அவனையே வெறித்திருந்தாள்.

அம்புதியும் அவளது பார்வையைத் தாங்கி, அவள் வீசிக் கொண்டிருந்த தனல் பார்வையை, தனக்குள் வாங்கிக் கொண்டு, காதல் பார்வை வீசத் தொடங்கினான்.

'அம்மாடியோவ்!!! நேருக்கு நேர் நின்னு அபு கண்ணை பார்த்து சண்டை கூட போட்டுடலாம் போல! ஆனா இந்த காதல் பார்வையலாம் நம்ம மனசு தாங்காதுப்பா!' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு வரவழைக்கப்பட்ட கோபத்துடன் திரும்பி நடக்கத் தொடங்கினாள்.

கையிலிருந்த குழம்பி கோப்பையை கீழை வைத்துவிட்டு தனக்கு முதுகு காட்டிச் செல்பவளை ஒரே இழுவையில் தன்னருகே இழுத்து பின்னாலிருந்து தோளோடு சேர்த்தணைத்து நிறுத்தி வைத்தான் அவளின் அபு.

நான்கு, ஐந்து நாட்களாகவே தன் அபுவின் பேச்சில் மாற்றங்கள் இருப்பதாக உணர்ந்தவள், அனைத்தும் தன் அன்னை, தந்தை ஊருக்கு செல்லும் வரை ஒரு நாடகம் தான் என்று நினைத்திருத்தாள். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக அவனது நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் அதிகமாகவே தெரிந்திட, அதன் காரணத்தை கேட்டறிந்திடும் தைரியம் தான் இன்னும் வரவில்லை அவன் அன்பிக்கு.

இதயம் தடதடக்க 'இப்போது என்ன?' என்ற ஆர்வமும் பயமும் ஒன்றாய் இணைந்து பெண்ணவளை வதைத்திட, அதற்கும் மேலாக பயமுறுத்தியது அவனது காதல் வதை.

"நேத்து நைட் இங்கே தானே என்னை தாங்கியிருந்தே!" என்று அவளது நெஞ்சுக்குழியில் ஒரு கையை வைத்து அழுத்தம் கொடுத்து விடை எதிர்பாரா வினா எழுப்பினான்.

ஏற்கனவே பந்தய குதிரை போல் ஓடிக் கொண்டிருந்த இதயம், இப்போது ரேஸ்காரின் வேகத்தில் இயங்கத் தொடங்கியது அவளுக்கு.

பேச்சு மூச்சற்று கிடந்தவளை ஓரக் கண்ணால் பார்த்தபடி மீண்டும் தொடர்ந்தான் அம்புதி. "இதுக்கு மேல இன்னும் என்ன நடக்கனும்னு எதிர்பார்க்குறீங்க மிஸஸ் அம்புதி!" என்று கிரக்கமாக வினவினான்.

'மிஸஸ். அம்புதி' என்ற பெயர் கனிவாய், கனியாய், தேனாய், கல்லுண்ட போதையாய், இறை குரலாய், அசரீரியாய் அவளது காதுகளில் ரிங்காரமிட சொர்க்க லோகம் சென்று திரும்பியிருந்தாள் அந்த ஒரு நொடியில்.

தன்னுடைய இந்த கேள்விக்கும் பதில் எதிர்பாராதவனோ, அவளது காது மடலில் முத்தமிட்டு, "இது நடந்திருக்கனுமா?" என்றான். அதற்கும் விடை எதிர்பார்த்திரா விடலையவன், கழுத்து வலைவில் முகம் புதைத்து, அவளது வாசனையை உயிர் துடிப்பு வரை சுவாசித்து, "இல்லே இதுவா?" என்றான் சிறிய இதழ் ஒற்றலுடன்.

மூச்சுக் காற்றால் கூச்சமூட்டி, மீசை முடி கொண்டு குறும்புகள் பல செய்து, இதழ் கொண்டு முத்தத் தடம் பதித்து, இன்னும் முன்னேறிச் சென்றான் எந்த வித கேள்வியும் இன்றி.

தேகம் பசி எடுக்கத் தொடங்கிட, இதழ் பட்ட இடங்கள் அனைத்தும் பற்களுக்கு இரையாகியது. அது தந்த வலி தாளாது மெல்லிய முனங்கலாய் வெளி வந்தது பெண்ணவளின் குரல்.

அதுவும் கூட அவளது இல்லாளனுக்கு இன்னிசையாய் ஒலித்ததோ என்னவோ, பெண்ணவளை மீட்டி மெல்லிசை இயக்கி இசைக் கலைஞன் என பெயர் பெற முயற்சித்தான் அவன்.

கைவிரல்களை அத்துமீற விட்டு, மலரிதழ்களால் குட்டி குட்டி முத்த முத்திரைகள் பதித்து, பெண்ணவளை மொத்தமாய் தன் வசப்படுத்தி இருந்தான் மன்னவன்.

தாரமானவள் தன் வசம் இழந்து, தயக்கங்கள் களைந்து தன் பெண்மையை கொடுக்க முன் வந்த வேளையில் நொடியில் அவளைப் பிரிந்து குளியலறை புகுந்து கொண்டான்.

‌ மதி மயங்கி மனவாளன் நெஞ்சில் தஞ்சமடைந்து கிடந்தவளுக்கு நொடிப் பொழுதில் அவன் தன்னை உதறிச் சென்றதற்கான அர்த்தம் புரிந்திடவில்லை. சொல்லப் போனால் அவன் விலகிச் சென்றதையே சில நிமிடங்கள் கழித்தே தான் உணர்ந்தாள்.

கதவைத் தட்டி 'குழப்பம் ஏதும் இல்லையே!' என்று கேட்கும் மன தைரியம் இன்னும் வாய்க்கப் பெறவில்லை அவளுக்கு. அவனது கைகளில் நெகிழ்ந்து கிடந்த நொடிகள் நினைவில் வர, தன்னைத் தானே நொந்து கொண்டாள் பெண்ணவள், 'இன்னும் சற்று பொறுமை காத்திருக்க வேண்டுமோ!' என்று.

முதல் நாள் இரவிலிருந்து தன் அபு நடவடிக்கைகளை மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்தியவள், அவனைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினாள், அவன் மனதைப் பற்றி அறிந்து கொள்ள நினைத்து.

ஆனால் ஆணின்‌ மனது மட்டும் அறிக்கை பலகையா என்ன! வந்தவர், போனவர், பார்த்தவர் என அனைவரும் அறிந்து வைத்திருப்பதற்கு...

காதல் கரை எட்டுமா!

அம்புதியால் முழுமையாக ஈஸ்வரியை மறக்க முடியுமா! இப்படியே நீடித்தால் ஆழியின் நிலை தான் என்ன? அம்புதியின் காயங்களுக்கு ஆழி மருந்தாவாளா?
 
Top