• வைகையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம் ஆரம்பம்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தசீயகுமார் டனேஸ்ரி

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
58
பல நாட்களின் பின்
உனது குரலினைக் கேட்ட போது
நான் என்னை மறந்தேன்
அது கண்ணீராக வெளிப்பட்டது

நீ என்னோடு பேசாதபோது
அழுத அழுகையை விட
உன் குரலை நான் கேட்டபோது
நான் சிந்திய கண்ணீர் அளவில்லாதது

நீ பேசாத போது
உன்னோடு நான் பேசுவதாக
கற்பனை செய்து பேசிய நான்
இன்று நீ என்னோடு பேசும் போது
என்னால் பேச முடியவில்லை காரணம்
வார்த்தைகள் வரவேயில்லை
அழுகை மட்டுமே வருகிறது

நீ பேசாத போது நான் சிந்திய கண்ணீர்
நீ பேசிய போது நான் சிந்திய கண்ணீர்
இரண்டிற்கும் தெரியும்
நான் உன்மீது கொண்ட
பாசம்...................
 
Top