• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

01. இதயம் பகிர்ந்திட வா

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
"இதயம் பகிர்ந்திட வா."

இது ஒரு உண்மை சம்பவத்துடன் கற்பனையை கலக்கவிட்ட கதை.
பல எதார்த்தங்களுடன் காதலையும் அதிகமாக எதிர்பார்க்கலாம்.
மறுபடியும் ஓர் அழுத்தமான கதையோட வறேன். எப்பிடி எழுதி முடிப்பேன்னு தெரியல.. ஆனா ரொம்ப தீவிரமா எழுதுவேன்.
நம்பி என்னுடன் பயணத்தில் நீங்களும் கை கோர்க்கலாம்.
கூடவே உங்களது விமர்சனம் தான் என்னை ஊக்கப்படுத்தும்.

ரொம்ப நாள் கழிச்சு வறேன்... என் பயணம் இங்கே மீண்டும் மீண்டும் தொடர்வது உங்கள் அனைவரது ஊக்கத்தினால் தான் மக்களே..
உங்க பொண்ணான கமெண்டை மறக்காம போடுங்கப்பா...





ஆழ் கடல் நடுவே.. நீந்தி விளையாடும் தங்க மீன் போன்று, செவ்வானத்தின் அடிவாரத்தில் யாரிடம் கண்ணம்பூச்சி ஆடினானோ அந்த செய்யோன்.

தன்னம் தனியே மரங்களுக்குள் ஓழிவதும்.. எட்டிப்பார்ப்பதுமாக அவள் நடையின் வேகத்திற்கு ஈடுகொடுத்து, அவளை பின் தொடர்ந்தவனையே ரசித்தவாறு நடந்தாள் பாரதீபிரியா.


பெயரில் மாத்திரம் தான் புரட்சி இருக்குமே தவிர, அவளது ஒவ்வொரு அசைவிலும் ஓர் மென்மையே ஆட்கொள்ளும்.
அவள் பேசும் போது கூட பேசுகிறாளா..? இல்லை சிணுங்குகாறாளா? என சந்தேகம் கொள்ள செய்யும் அளவிற்கு வார்த்தைகள் உதிர்ப்பாள்.


எங்கே அழுந்தம் கொடுத்தால் வார்த்தைகளுக்கு வலித்து விடும் என்று பயம் கொள்வாள் போல.
அவள் வயது முப்பதே தான். அழகென்றால் அப்படி ஓர் அழகி!

அவள் சிரித்தால் என்றால் கோவிலின் வெண்கசிலை கூட தோற்று விடும்.
ஐந்தடியில் அம்பாளையே தோற்கடித்து விடும் அழகு.


அதற்கு அவள் சிரிக்க வேண்டுமே..!
அவள் சிரித்தே பல வடிடங்கள் ஓடியிருந்தது.
உறவென்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு யாரும் அவளுக்கு இல்லை.
தன்னந்தனியே தான் வசித்து வருகிறாள்.


அந்த கிராமத்தில் அரசபள்ளிக்கு ஆசிரியராக பணியாற்ற வந்து, இரண்டு வருடங்கள் கடந்தாயிற்று. ஆனால் அவள் வைக்கும் பொட்டுக்கும், பூவுக்கும் காரணமானவன் யாரென்றே அந்த கிராம வாசிகளுக்கு தெரியாது.
ஆனால் அவள் எல்லோரிடமும் பாரபட்ஷம் இன்றி பழகும் விதத்தில் அவர்களே அவள் சொந்தமாகிப் போயினர்.


வழக்கமாக பள்ளி முடிந்த கையோடு வீட்டுக்கு வந்து விடுவாள்.
இன்று என்னமோ போலிருக்க, வரும் வழியில் உள்ள சிறுவர் பூங்கா ஒன்றில் அமர்ந்தவள் தான்.. அங்கு சிட்டுக்களாய் தாவித்திரிந்த சிறுவர்களை ரசித்திருந்ததில் நேரம் போனதைக்கூட அறியவில்லை அவள்.


அவசர அவசரமா தன் கைபையினை மாட்டிக்கொண்டு, அந்த மண் சாலையில் நடந்தவள் எதிரில் திடீரென வந்து நின்றான் அவன்.

புருவ உயர்வின் உச்சியில் ஓர் கேள்வி மையம் கொள்ள... அவளை ஏற இறங்க பார்த்தான்.
தன் எதிரே அவள் செல்ல வழியினை விடாது நின்றவனது செயலின் அர்த்தம் புரியாது.. முன் வந்து அவள் விழி மறைத்த முடியினை, வெண்டைப்பிஞ்சு விரல் கொண்டு காதோரமாய் சொருவிக்கொண்டவள், கேள்வியாய் அவனை நோக்கினாள்.

"நீ.... நீங்க பாரதீபிரியா தானே..." என்றான் அவளை சரியாக அடையாளம் காணமுடியாத சந்தேகத்தில்.

அவள் பாரதீபிரியா தான். ஆனால் எதிரில் நின்று கேள்வி கேட்பவனை சுத்தமாக அவளுக்கு தெரியவில்லை..
அந்த ஊரை பொறுத்தவரையில் அவள் பிரியா மட்டுமே..! முன்னால் இருக்கும் பாரதீயை மறந்து இரண்டு வருடம் கடந்த நிலையில், அந்த ஊரிலேயே முழுப்பெயர் கூறும் அளவிற்கு யாரையும் அவளுக்கு தெரியாது.

இம்முறை அவளது புருவங்கள் இரண்டும் கேள்வியாய் விரிய...


"நீங்க..." என்றாள் தயக்கமாய்.
ஏனோ தன்னை தெரிந்து கொள்ளாதவள் போல் அவள் கேட்ட கேள்வியில், உள்ள பொங்கத்தான் செய்தது.


தேடி வந்து பேசினால் அவனை ஏதோ அலைந்தவன் நினைத்து விட்டாளா..?

"ஓ சாரி...! தெரிஞ்சவங்கன்னு நினைச்சு பேசிட்டேன்." என்று கோபமாக திரும்பி நடந்தவனை குழப்பமாக பார்த்தவளுக்கு எதுவுமே புரியவில்லை.

'அது எப்படி தெரியாதவங்க பெயரை, சரியா சொல்லி கேட்க முடியும்..? அதுவம் யாருக்குமே தெரியாத அவளது முழுப்பெயரை கூறி..
இல்லை இவன் தெரியாமல் ஒன்றும் கேட்கவில்லை.. தெரிந்து தான் கேட்கிறான்.


ஆனால் நான் அவனை தெரியாது போல் வினவியதும் தான், முகம் இறுகி தெரியாததைப்போல் செல்கிறான்.' என சரியாகக் கணித்தவள்,

"சார் நிஜமா எனக்கு உங்களை நியாபகம் இல்லை." என்றாள் போகும் அவனுக்கு கேட்கும் படி சற்று குரலை உயர்த்தி.
அவள் அப்படி சொன்னதும். நின்று திரும்பியவன் பார்வையில் அலட்சியம் தெறிக்க.

"நியாபகம் இல்லன்னா விட்டிடுக்க மேடம்.. தெரிஞ்சுக்கணும்ன்னு எந்த அவசியமும் இல்லை." என்று திரும்ப நடந்தவன் எதிரில் ஓடிச்சென்று நின்றவள்.


"நீங்க கோபப்படுறதில நியாயமே இல்ல சார்...!
உங்களை தெரியாதது போல நடிக்கிறதனால எனக்கு எதுவும் வரப்போறதில்லை.. அதே சமயம் உங்களுக்கும் என்னை நல்லா தெரிஞ்சிருக்கணும்.. ஏன்ன இங்க யாருக்குமே என்னோட பெயர் வெறும் பிரியான்னு மாத்திரம் தான் தெரியும்.

நீங்க கேட்ட பாரதீபிரியாவிலயே நீங்க எந்த ஊரை சேர்ந்தவர்ன்னு தெரிஞ்சிடிச்சு.
அதனால...." என தயங்கி தரை பார்த்தவளிடம் சிறு நொடி மௌனமே ஆட் கொண்டது.


பின் அதை அவளே கலைக்கும் விதமாய் தொண்டையினை செருமி,

"தப்பா எடுத்துக்காதிங்க.. நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா..?" என்றாள் அவனை அறிந்து கொள்ளும் நோக்கில்.

அவளுக்கு என்ன பயம் என்றால் தன்னை அவனுக்கு நன்றாகத் தெரந்திருந்தால், தெரியக் கூடாதவர்களும், தன்னை தெரிந்து கொண்டு விடுவார்கள் என்ற பயம்.

இதுவரை அவளது ஒவ்வொரு அசைவுகளுக்குமான அர்த்தத்தை கவனித்துக் கொண்டிருந்தவன், என்ன நினைத்தானோ.
சட்டென அவள் கையினை பிடித்து திரும்பி, முட்டிக்கையில் இருந்த ஓர் தழும்பினை சுட்டி காட்டினான்.


"இந்த தமும்புக்கு காரணமானவன் நான் தான்." என அவள் கண்களையே பார்த்தவாறு கூறியவன் விழிகள், ஏனோ கோபத்தினையே பிரதிபலித்தது.

அவன் எப்போதுமே முரடன் தான். அவன் செய்யும் எதிலுமே மென்மையினை எதிர்பார்க்க முடியாது.
பூவைக்கூட கசங்காமல் பறிக்க தெரியாதவன்.
அவனது நெருங்கிய நண்பன் பட்டியலில் முதல் இடம் வகிப்பது கோபம் மாத்திரமே..!
அதே சமயம் திறமையானவன்.

எப்படி அவனது கோபமானது அவனுக்கு மைனஸ்ஸோ அதுவே தான் அவனது பிளஸும்.
யாருடனும் நெருங்கிப்பழக மாட்டான். ஓர் முடிவினை எடுத்து விட்டாள் அது தீர்க்கமானதும், அறுதியானதுமாக இருக்கும். அதை அடையும் வரை தன் தோள்வியினை ஒப்பும் கொள்ள மறுப்பவன்.


எதிர்பார்க்கவில்லை பாரதீ... திடிரென ஓர் ஆண்மகனின் தொடுதல் அதிர்ச்சியை தந்தாலும்.. பின் அவன் கூறியதில் ஆச்சரியத்தில் விழிகள் பெரிதாய் விரிய...
சத்தி...ய சீ..ல..ன்." என்றாள் அவன் பெயர் பாதி நினைவில் நின்றும், பாதி நினைவில் இல்லாது.


"அதே சத்தியன் தான்.." என்று அழுத்தமாக சொன்னவன், மறுநொடியே அவள் கையினை உதறிவிட்டு, வந்தவழி பார்த்து நடந்தவனின் காலடித்தடங்கள், அவள் செவிப்பறையில் அறைந்தது போலிருந்தது.

அவனது உதாசினம் ஏனோ வழமை மாறான அவளது மென் மனதினை காயப்படுத்தி, கோபத்தை விதைத்திருந்தது.
அதை அடக்குவதற்காக கையிரண்டினையும் பொத்திக்கொண்டவள், போகும் அவனையே பார்த்து நின்றாள்.

'அப்படி என்ன சொல்லிட்டேன் நான். நியாபகம் இல்லன்னு சொன்னது தப்பா...?'

'தப்புத்தானே... சின்ன வயசு தோழியை கண்டதும் ஆசையா பேச வந்திருப்பான். முகத்தில அறைஞ்சா மாதிரி தெரியலன்னு சொன்னா... கோபம் வராம என்ன செய்யும்...?' என இன்னொரு மனம் அவனுக்காக வாதாட..
அதன் பக்கத்து வாதத்தினை ஏற்றுக்கொண்டவளால், ஏனோ தன் தரப்பில் தவறென்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

உண்மை தானே..! பருவம் எய்யாத வயது நண்பனின் முகம் இப்போதும் அப்படியா இருக்கும்..? இல்லை எனில் காலம் கடந்த பின்னரும் நினைவில் வைத்து சுற்ற, அவன் என்ன அவளுக்கு மிக முக்கியமானவனா..?

'ஆனா அவனால மட்டும் எப்பிடி என்னை அடையாளம் காண முடிஞ்சிச்சு...?' விடையறியா கேள்விதான்.
ஆனால் விடை தேட அவள் விரும்பவில்லை..
அவ்வளவு ஏன்? அவளை உதாசீனமா செய்தவனை மீண்டும் ஒரு முறை பார்க்க அவள் தயாராகவும் இல்லை.

வீடு செல்லும் திசை திரும்பியவள் நினைவுகளோ, அன்றைய நிகழ்வினை நோக்கிப் பயணமானது.


ஆம் அவனு தான்... அவளுடன் மிக நெருக்கமாக பழகிய அந்த சிறுவயது நாட்களை நோக்கிப் பயணமானது.

சத்தியசீலன் பிரியா வீட்டின் எதிர் வீட்டில் தான் வசிப்பான். பாரதீப்பிரியாவை விட ஐஞ்து வயது பெரியவன். அவள் என்றால் அவனுக்கு அவ்வளவுக்கு பிரியம்.

மொழுமொழு கன்னங்களை பிடித்து இழுத்து அவளை அழ வைப்பதும் அவன் தான்,
பாவடை அவிழ்ந்து விழும் வயதில் அதை தாங்கிப்பிடித்தவனும் அவனே தான். என்ன ஒன்று.. சரியான சேட்டைக்காரன். அதே சமயம் பிடிவாதக்காரனும்.


அவனுக்குரிய பொருளினை அவனாக கொடுக்காது, யாராவது தொட்டுவிட்டால் போதும்... அப்போதே வீட்டை இரண்டாக்கி விடுவான்.
வீட்டிற்கு ஒரே புதன்வன் ஆயிற்றே இந்தளவுக்கு இல்லை என்றால் தான் ஆச்சரியம்.

என்னதான் அவனுக்கு பெயர் நட்சத்திரம் எனப்பார்த்து, சத்தியசீலன் என்ற பெயரினை வைத்து இருந்தாலும்.. அவனது குறும்புகளை பார்த்து ஊரார் வைத்த பெயர் சேட்டைக்காரன் என்பது தான்.

சேட்டை என்பது பிரியாவின் மழலை மொழியில் சூட்டி என்று மாறிப்போக.. அது அழகாக இருந்ததனால் எல்லோருக்குமே அவன் சூட்டி ஆகிப்போனான்.

பிரியாவிற்கு எட்டு வயதிருக்கும்.. எப்போதுமே சூட்டி சூட்டி என்று திரிபவள், அயல் வீட்டில் புதிதாக ஓர் குடும்பம் குடிவந்திருக்க, அவர்கள் மகளை கண்டதும் பிரியாவிற்கு பிடித்துப்போனது.

அவளுடனேயே தன் நாளை கழித்தவளை எத்தனையோ முறை கைபிடித்து தன்னுடன் விளையாட வரும்படி அழைத்தும் அவள் வரவில்லை என்றதும், முகத்தை தூக்கிக்கொண்டு மாமர நிழலில் அமர்ந்திருந்தவன் கோபமோ எல்லை மீறியிருந்தது.

அவன் தான் பிடிவாதக்காரன் ஆயிற்றே.. தனக்குரிய பொருளை யாருக்கும் விட்டுக்கொடுத்து பழக்கமில்லாதவன் குணம் அவனது..!

இதை அறியாத பிரியா.. சின்னவளுடன் கண்ணாம்பூச்சி ஆட்டத்தை ஆடிக்கொண்டிருந்தாள்.
கண்ணைக் கட்டிக்காெண்ட சின்னவள்,

"அக்கா எங்க இருக்கிங்க..?" என கேட்டவாறு, கைகளால் தூலாவி நடந்தவள் எதிரே போய் நின்றவனை அவள் பிரியா என நினைத்து தொட்டுவிட,
ஏற்கனவே அவள் மேல் கோபத்தில் இருந்தவன், அவள் கையினை பிடித்து இழுத்து தள்ளிவிட்டான்.

மாமர வேரோடு இருந்த கல்லில் நெற்றியடிபட விழுந்தவள், வலியில் கதறத்தொடங்க. இது தெரியாது மரத்தின் பின்னால் ஒழிந்திருந்தவளோ, அவள் அழுகுரல் கேட்டுத்தான் வெளியே வந்து பார்த்தாள்.

நெற்றியில் இரத்தம் ஒழுக அழுது கொண்டிருந்தவளையும், அவளையே முறைத்துக் கொண்டிருந்தவனையும் கண்டவள்,
ஓடிவந்து அவளை தூக்கினாள்.


"அவளை விடு பிரியா.. அவ உனக்கு வேண்டாம்." என்றவளை திரும்பி கோபமாக பார்த்தவள்,

"நீ தானா சூட்டி இவளை தள்ளிவிட்ட.." என கேட்டாள்.

"ஆமா எனக்கு இவளை பிடிக்கல.. அதான் தள்ளிவிட்டேன்." என்றவனை முறைத்தவள்.

"ஏன்டா இப்படி பண்ண..? அவ சின்ன பாப்பாடா.. அவளுக்கு வலிக்கும்ல.." என்று விட்டு சின்னவளை அவள் காயத்தை கைகொண்டு பொத்திப் பிடித்தவள் கையினை தட்டி விட்டவன்.

"உன்னை தான் சொல்லுறேன்ல பிரியா.. அவகிட்ட போகாத.." என்றான் அதிகாரமாக.

"போடா பன்னி.." என்று கோபமாக இரைந்து விட்டு, மறுபடியும் அவளை தாங்கிப்பிடிக்க போனவளையும் எதிர்பாராத நேரமாக தள்ளி விட்டு ஓடிவிட்டான் அவன்.

அப்போது ஏற்பட்ட காயம் தான் அது. அதை நினைத்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தவளுக்கு..
இப்போதும் அவனிடம் அதே பிடிவாதமான கோபம் இருப்பதாகவே தோன்றியது.
 
Top