• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

01.இராவண தேசத்தின் வெண்ணிலா

fajeeha mumthaj

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 14, 2023
Messages
80
ஊரின் நடுவே ஓங்கி வளர்ந்து கம்பீரமாக நின்றிருந்த அரச மரத்தின் கீழ் நான்கு பேரின் கையை கட்டி முட்டி போட வைத்து சாட்டையால் ஒருவன் அடி பின்னி எடுக்க நால்வரின் வலி நிறைந்த குரல்கள் எங்கும்‌ எதிர் ஒலித்தது.


''அண்ண தெரியாமே பண்ணிட்டோம் ஒரு தடவை மன்னிச்சு விட்டிடுங்க..." என்று மாறி மாறி கதறி ஒலித்த குரல் பார்ப்போருக்கு கண்ணீரை வரவழைத்து விடும் ஆனால் அவனுக்கு அது இசையை கேட்பது போல அல்லவா கேட்டு ரசித்துக் கொண்டிருந்தான்.....


"ஒவ்வொருத்தனும்‌ எருமாடுங்க மாதிரி கெடக்கானுங்க அடிச்சு அடிச்சு என்‌ கை தான் வலிக்குது அண்ணே... இதுக்கு மேல‌ அடிச்சா செத்திட கித்திட போறானுங்க‌ அடுத்து என்ன செய்யலாம்?..." என்றபடி வந்து நின்ற குமரனை நிதானமாக திரும்பி‌ ஒரு‌ பார்வை பார்க்க‌ புரிந்தது போல் கண்மூடி தலையசைத்து "ஏலேய்... பக்கத்து ஊரு‌காரனுங்க எல்லாம் நல்லா கேட்டுக்க வியாபாரம்பார்க்கனும்ன்னா எங்கவூருக்கு சேதாரம் இல்லாமல் செய்யனும்‌ இல்லன்னு வையி இவனுங்களுக்கு நடந்தது நாளைக்கு உங்களுக்கும் வேலையை பார்த்தோமா வீட்டான்டே போனமான்னு‌ கெடக்கனும்‌ அதவுட்டு தேவையில்லாத தீங்கு‌ வேலை நடந்துச்சு... " என நாக்கை கடித்து விரல் நீட்டி எச்சரிக்கை விடுக்க‌ சுற்றியிருந்த மொத்த பேரும் தலையை குனிந்து நின்றனர்.... அதிலே அவனை தாண்டி ‌எதுவும் நடக்காது என்பது புரிய சிவந்த விழிகளோடு இவ்வளவு நேரம் நடந்ததுக்கு முக்கியமானவன் எழுந்து நின்றான்.



அவனின் ஒரு பார்வையை உணர்ந்து வேலை செய்ய நூறு பேர் இருந்தனர் சுத்து பத்து‌ அஞ்சு கிராமங்களோட சேர்த்து அனைத்திற்கும் பொதுவான ஊர்தான் ராவணபுரம் கிராம மட்டத்தில் இருந்து வளர்ச்சியடைந்து வந்த இந்த கிராமம் அவனின்‌ கட்டுபாட்டில் அவன் விருப்பபட்டால் மட்டுமே எந்த ஒரு விஷயமும் நடக்கும் அவனை மீறி ஏதும் நடந்தால் அதை தடயமே இன்றி அழித்து விடவும் அவன் தயங்கியதில்லை அது பொருளாக இருந்தாலும் சரி உயிராக இருந்தாலும் சரி வீரத்துக்கு பெயர்‌ பெற்றராவணபுரத்தின்‌ தலைவன் அவன் ராவணலிங்கேஷ்வரன்....




மூன்று பேர் பெரிய பானை முட்டிகளை தூக்க முடியாமல் தூக்கி கொண்டு வர தலைவனின் கண்ணசைவில் அந்த பானையில் இருந்த காய்ச்சிய சாராயத்தை அந்த நால்வரின் மேலயே ஊற்றினார்கள் தடித்து சிவந்த இடங்களில் மிதமான‌ சூட்டில் இருந்த சாராயம் எரிச்சலை உண்டாக்க அந்த வலிக்கு ஈடாக மரணமே பரவாயில்லை என்று தான் தோன்றியது.... ஆம் அவர்கள் காட்டுக்குள் கள்ளச் சாராயத்தை காய்ச்சி கிராமத்துக்குள் விற்றது‌ மட்டுமல்லாமல் போலீஸில் மாட்டியதும் லிங்கேஷ்வரனின் பெயரை சொல்ல லிங்கேஷ்வரனின் மேல் கொலை காண்டில் சுற்றும் சத்யதீபன் எனும் இன்ஸ்பெக்டர் இது தான் வாய்ப்பு என்று அரெஸ்ட் பண்ண வர அவர்கள் வரும் முன்னே இங்கு காரணமானவர்களை பிடித்து தண்டனையும் கொடுத்து விட்டான் ஆடவன்....


அவர்களின் வலியுடன் கூடிய குரலை இரக்கமின்றி அனு அனுவாக கேட்டு ரசித்தவன் தனது ஜீப் வண்டியில் ஏற வந்து தடுத்தது அந்த குரல் சில கான்ஸ்டபிள்களோடு வந்து நின்ற சத்யதீபன் "மிஸ்டர் ‌லிங்கேஷ்வரன் கொஞ்சம் நில்லுங்க மொதல்ல ஸ்டேஷன் வாங்க அப்பறம் உங்க வீட்டுக்கு போலாமா வேணாமான்னு நாங்க சொல்றோம்..." என்றவனை ஓர் பார்வை பார்த்து விட்டு வண்டியில் ஏறி அமர்ந்தவன் சொடுக்கிட்டு அழைத்தவன் "நீ என் முன்னாடி ‌இவளோ வெரப்பா வந்து நிக்க அவனுங்க தானே காரணம்..." என பார்வையால் அந்த நால்வரையும் காட்டியவன் இப்போ அவனுங்க நிலையை பாரு.... என‌ சொல்லாமல் பார்வையால் உணர்த்தியவன்‌ ட்ரைவரிடம் "வண்டியே எடு..." என்று கட்டளையிட அதன்படி அந்த ஜீப் புழுதியை கிளப்பிக் கொண்டு செல்ல போகும் அவனையும் வலியோடு மண்ணில் புரண்டு கொண்டிருந்தவர்களையும் மாறிமாறி புரியாமல் திகைப்போடு பார்த்த படி ‌நின்றான் சத்யதீபன்....


"என்ன சாரே லாக்அப்லே இருந்தவனுங்க இங்க எப்பிடி வந்தானுங்கன்னா அதான் எங்கண்ணன் பவரு நீ இங்க வர‌ கேப்புல விஷயத்தை முடிச்சிட்டோம் இனிமே எவனாச்சும் அண்ணன் பேரை சொன்னா தீர விசாரிச்சிட்டு வா சாரே பாரு இப்ப மூக்கொடைஞ்சு போய் நிக்கிற போ சாரே உனக்கு இதே வேலையா போச்சு...." என்று கடுப்பில் இருந்தவனை இன்னும் எண்ணெய் ஊற்றி விட்டது போல் சூடாக்கி விட்டு‌ தனது‌ புல்லட்டில் ஏறி பறந்தான் குமரன்....




ஒன்றன்‌ பின் ஒன்றாக வீட்டிற்குள் நுழைந்தவர்களை கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டபடி "போன காரியம் முடிஞ்சதா? பேராண்டி..." என்று கேட்ட பாண்டியனுக்கு‌ "ஆம்..." என்பது போல் தலையசைத்து விட்டு அவனறைக்குள் புகுந்து விட்டான்‌ லிங்கேஷ்வரன்...



"தாத்தா அண்ணன் ஒரு வேலையிலே இறங்கினா‌ அதை முடிக்காம வர மாட்டார்ன்னு தெரியாதா?..." என்றபடி பின்னால் வந்தவன் "அதுசரி நானும் கேக்கனும்னு நெனச்சேன் ஆமா ஏன்‌ நாங்க வெளியே போய்‌ வரும்‌ வரைக்கும் பதட்டமாவே இருக்கீங்க என்ன? சங்கதி....." என சட்டை கையை பிடித்தபடி கேட்டவனிடம்,


"ம்ம்‌ இப்பிடி பஞ்சாயத்து பண்ணி வெட்டு குத்துன்னு திரிஞ்சவன் தான் உங்கப்பன்‌ அன்னைக்கு காலையிலே கலெக்டர் ஆபீஸ் போனவன் தான் கடைஷியா...." என்றவருக்கு கவலையில் தொண்டை அடைக்க கண்ணீர் கன்னத்தை நனைக்க அவர் பார்வையோ ஹாலில் மாட்டியிருந்த புகைப்படத்தை தழுவியது...


அதில் புன்னகையுடன் கம்பீரமாக‌ நின்ற‌ கணேஷ்வரமூர்த்திக்கு மாலை‌ போடப்பட்டு ‌விளக்கு ஏற்றப்பட்டிருந்தது அவரின் கவலை உணர்ந்து "எல்லாம் சரியாகிடும் தாத்தா விடு கவலைப்படாதே.." என்றவன் அவரை அணைத்து கொண்டான் குமரன்..



தொடரும்...
 
Top