• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

01. உறவாக வருவாயா

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
மேற்கு அடி வானின் மேகக்கூட்டங்கள் யாவிற்கும் இன்று என்ன கும்மாளமோ!
செம்மஞ்சள் நிறத்து கோலப்பொடிகளை அள்ளி தெளித்து விளையாடியது போன்று தாறுமாறாக சிதறவிட்டு ஓய்ந்திருந்தது.

தங்க நாணயத்தை போன்று உருண்டு திரண்ட அந்த பெரிய பந்தினை கைகளில் உருட்டி விளையாட வேண்டும் போல் தேன்றிய, மாலை சூரியனின் அழகினை ரசித்தவாறு கோபுரத்தின் அடிவாரத்தை அடைந்து விட்டாள் மதுமிதா.

இன்றோடு இவள் வயது இருபத்தியிரண்டு. வயதுக்கேற்றால் போல் மெல்லிடையாள். ஐந்தடி உயரத்தில் தங்கச்சிற்பம் போல் இருப்பாள்.

எப்போதும் பாவடை தாவணி, அல்லது சுடி அவளது உடை.

இன்று பேபி பிங்க் கலரில் உடுத்திருந்தவள் சல்வார், அவள் அழகிற்கு இன்னும் அழகை கூட்டியது.

அளவான நாகரீகத்திற்கு ஏற்றால் போல் வெட்டியெடுக்கப்பட்டு இடையின் மேலே பரப்பிவிடப்பட்ட நீளமான கூந்தல்.

மீன் விழிகளுக்கு மிதமாக பூசிய மை, உதட்டுக்கு பிரத்தியோகமாக உதட்டு சாயம் தேவையே இல்லை என்றது போல் இயற்கையிலேயே செவ்விதழ்காரி.

நடைக்கு ஏற்றால் போல் இடைவளைத்து நடந்துவருபவள் பின்னழகில் மயங்காதவன் பித்தன் என்றே கூறலாம்.

இத்தனை அழகிற்கு சொந்தக்காரியோ! எந்த வித பந்தாவுமின்றி பலத்த சிந்தனையின் மத்தியில், அந்த குட்டியான மலைக்குன்றில் ஏறி வாசலில் நின்று உள்ளே இருந்த கூட்டத்தை பார்த்தவள்,

"பொழுது சாய்ஞ்சுமா இவ்ளோ கூட்டம்? சரி நாம வந்த வேலைய இங்க இருந்து பாத்துட்டே கிளம்புவோம். அப்புறம் வீட்டுக்கு போக லேட்டாகிடும்." என கையினை கூப்பி கண்களை மூடினாள்.

'சாமி இன்னைக்கு என்னோட பிறந்த நாள்.
உனக்கே தெரியும், இப்போ மட்டுமில்ல எப்பவுமே என்னோட பிறந்தநாளை நான் கொண்டாடினது கிடையாது.

வாழ்க்கையில சந்தோஷம்னு ஒன்று இருந்தா தான் இதெல்லாம் கொண்டாடவே நினைப்பு வரும். ஆனா என்னவோ தெரியல்ல. இன்னைக்கு உன்னை பார்த்தே ஆகணும்ன்னு தோனிச்சு, இனியாவது என்னோட ஓட்டம் நிக்கணும் சாமி.

என்னால பயந்தே வாழ்ந்திட்டிருக்க முடியாது. எப்பிடியாவது எனக்கொரு வழிய காமி.' என வேண்டியவள் பின்புறம் பெரிதாக கேட்ட மணி சத்தத்திலே கண் திறந்தாள்.

அந்த சத்தம் கடவுளே ஆசீர்வாதம் அளித்ததை போலிருக்க சத்தம் வந்த திசை திரும்பியவள், மேலே அசைந்த மணியை கண்டு உதடுகள் விரிந்தது.

மனதில் இனம்புரியாத சந்தோஷம் குடியேற, அப்படியே வீடு திரும்புவோம் என படிகளில் இறங்கியவள் கண்களில் தூரத்தில் சிலர் அருவாளோடு மலையினை நோக்கி ஓடிவருவது தெரிந்தது.

'இதே வேலை இவங்களுக்கு, கோவில்ன்னு கூட பார்க்கமாட்டாங்க. இன்னைக்கு எவன் தலை உருளப்போகுதோ!' என புலம்பியவாறு ஓரமாக இறங்கியவள் படிகளின் நடுவே பலூனை பிடிப்பதற்காக ஓடித்திரிந்த குழந்தையை கண்டாள்.

அவர்கள் ஓடி வரும் வேகத்தில் குழந்தையை தள்ளிவிட்டு மிதித்து சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பதை போல தான் அவர்கள் வேகமிருந்தது.

அவர்கள் வருவதற்கு முன்னர் குழந்தையை காப்பாற்ற வேண்டுமென நினைத்தவள், இரண்டிரண்டு படிகளாக தாவிச்செல்லவும் அவர்கள் வரவும் சரியாக இருந்தது.

அதற்குள் குழந்தையை தூக்கிவிடுவோம் என அவள் குனியும் நேரம் அவள் தலைக்கு மேலாக "சீர்ர்.... "என வேகமாக பாய்ந்த அருவாளின் சத்தத்தோடு படிகளில் விழுந்தவனை திரும்பி பார்த்தவளுக்கு, அப்போது தான் வந்தவர்கள் வெட்டவந்தது தன்னை என்று புரிந்தது.

குழந்தையை பாதியில் விட்டு விட்டு ஓட முடியாது குழந்தையையும் அப்படியே அள்ளிக்கொண்டு அடிப்படியினை அடைந்துவிட்டாள். அவள் பின்னால் வந்தவர்களும் நெருங்கிவிட குழந்தையை ஓரமாக விட்டு விட்டு மறு பக்கமாக ஓட ஆரம்பித்தாள்.

மற்றைய நேரங்களில் பெரிதாக தெரியும் பூமி. இன்று சிறிதானது போல் தோன்றியது.

பதினைந்தடி தூரத்தில் துரத்துபவர்கள் கைகளில் மட்டும் அவள் கிடைத்தால் அவள் நிலை தலையற்ற முண்டம் தான்.

மூச்சு இரைக்க ஓடியவளால் முடியவில்லை. எப்படி ஓடினாலும் அந்த மலைகோவிலையே சுற்றி ஓடினாளே தவிர இம்மியும் நகரமுடியவில்லை.

எங்கு நகர்வது? அந்த மலைக்கோவிலின் அருகருகே நிறைய கோவில்கள் இருந்தது.

இன்று என்ன பெருநாள் என்று தெரியவில்லை. ஆனால் அத்தனை கோவிலிலும் ஜனக்கூட்டம் அலை மோதியது.

ஒரு வழியாக அவர்கள் கண்பார்வையில் அகப்படாதவாறு அந்த பெரிய ஆஞ்சநேயர் சிலையின் அருகே வந்துவிட்டாள்.

யாராவது வருகிறார்களா? என சுற்றிச்சுற்றி பார்த்தவள் கண்களில் யாரும் விழவில்லை என்றதும், சிலையின் பின்புறம் மறைந்து கொண்டாள்.

அவளை பின்தொடர்ந்து வந்தவர்களுக்கு அவள் இங்கு தான் வந்தாள் என்பது தெரியும்.
அதனால் அந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கியவனோ ஒவ்வொருவராக அழைத்து ஒவ்வொரு திசையில் தேடச்சொன்னவன், "வரப்போ அவ தலையில்லாம வராதிங்கடா!" என கட்டளை இட்டவன், சும்மா நில்லாது அக்கம் பக்கம் திரும்பித்திரும்பி பார்த்தவன் பார்வையோ ஆஞ்சநேயரையே சந்தேகமாக நோக்கத்தொடங்கியது.

அவன் பார்வை தன்மேல் விழுவதை கண்டவளுக்கு, சட்டென எழுந்து ஓடினால் நேராக அவனிடம் மாட்டிக்கொள்வோம் என்பது தெரியும்.

இதயம் படபடக்க அவனையே பார்த்திருந்துதாள்.

அவள் நினைத்தது போலவே அவனும் அந்த சிலையை நோக்கி தான் வந்தான்.
அவன் பின்புறம் வர மறுபக்கம் ஓசை எழாமல் தவழ்ந்தே போனவள், ஓடலாம் என்று அவசரமாக எழும்போது உச்சி மண்டையை பதம் பார்த்தது சதுரவடிவில் இருந்த சிலையின் கல்.

அதைக்கூட பொருட்படுத்தாது ஓடத்தொடங்கியவள் தலையிலிருந்து இரத்தம் கசிந்து நெற்றியில் ஊறல் எடுக்க அதை சாதாரணமாக தட்டிவிட்டு ஓடத்தொடங்கினாள்.

அவள் ஓடுவதை கண்டவனும் பெரிதாக குரல் கொடுத்து தன் கூட்டாளிகளையும் அழைத்தவன் பின்னால் ஓடத் தெடங்கினான்.

அவளது கெட்ட காலமோ என்னமோ அவளை தடை செய்வது போல் அம்மன் ஊர்வலமும் நடந்துகொண்டிருந்தது.

அவள் பின்னால் வந்தவர்களுக்கு அதே கூட்டம் தடையாக இருக்க, நிறை குடத்தினை அம்மனாக நினைத்து அதற்கு அலங்காரம் செய்து தலையின் மேல் சுமந்து வந்த பூசாரியின் தலையிலிருந்த நிறை குடத்தினை ஓடும் வேகத்தில் தட்டிவிட்டாள் மதுமிதா.

அந்த நிறைகுடம் அங்கொன்றும் இன்கொன்றுமாக சிதறி விழ, மஞ்சள் கயிற்றில் மஞ்சளால் முடிச்சிட்ட தாலி மதுமிதா கழுத்தில் விழுந்தது.

தன்மேல் விழுந்த எதையும் கவனிக்கவோ, எடுத்து போடவோ அவளுக்கு நேரமில்லை. இஞ்ச் அளவில் அவளுக்கும் அருவாளுக்குமான இடைவெளி.

என்ன தான் களைத்துப்போய் மூச்சு விட கடினமாக இருந்தாலும் அரும்பாடு பட்டு அந்த கோவில் இடத்தினை தாண்டி கால் போன திசைக்கு ஓட ஆரம்பித்தாள்.

சூரியன் முழுவதுமாக மறைந்து, இரவானது வந்தும் ஓட்டம் தான் நின்ற பாடில்லை.

தண்டவாள வழியே ஓடியவளை "ஏய் நில்லுடி! நீ மட்டும் கையில கிடைச்சா, எங்கள ஓடவிடுறதுக்காகவே நாலு வெட்டு உயிர் போகாத அளவு வெட்டி வலின்னா என்னன்னு உணர்த்தினதுக்கப்புறம் தான் சாகடிப்போம்." என கத்தியவன் பேச்சை காதிலும் வாங்கவில்லை அவள்.

அவள் ஓடிய திசையில் தூரத்தே ரயில் நின்று கிளம்புவதற்கு ஆயத்தமாவது தெரிந்தது.

வேகமாக ஓடினால் மாத்திரமே இவர்கள் தன்னை பிடிப்பதற்கு முன்னர் தப்பலாம். என மனக்கணக்கு போட்டவாறு வேகமாக ஓடினாள்.

இருந்தும் என்ன பயன்? ரயில் சத்தமிட்டவாறு கிளம்ப ஆரம்பித்தது. இன்னும் நூறு மீட்டர் தூரமாவது ஓடினால் தான் கிளம்ப ஆரம்பித்த ரயிலை அடைய முடியும்.

உயிர் பயத்தில் சத்திகளை ஒன்று திரட்டி வேகத்தை இன்னும் அதிகப்படுத்தி ஓடியவள் வாசலை நெருங்கிவிட்டாள்.

ஆனால் இவ்வளவு நேரம் ஓடியதன் தாக்கமோ என்னமாே தலை கிறுகிறுவென சுற்றல் எடுக்க படியினில் கால்வைத்தவள் பின்புறம் விழப்போக, திடீரென ஒரு கரம் உள்ளிருந்து இழுத்தது.
 

Jothijo

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 23, 2022
Messages
8
அருமை 👌👌👌👌, திக் திக் நிமிடம்🌺🌺🌺🌺
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,939
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️ஏ யப்பா என்னா ஒரு ஓட்டம் மதுமிதா, அதுவும் பிள்ளைக்கு பிறந்தநாள் அன்னைக்கு துரத்தி வெட்ட பார்க்குறானுங்களே 😲😲😲😲😲😲
 

Ramya(minion)

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
405
Birthday va death day ஆக்க பார்க்கிறீங்களே அக்கா🤭🙄🙄ஆரம்பமே அருவாளா இருக்கே🙆‍♀️தாலி வேற அவ கழுத்துல விழுந்திருக்கு😱
 

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
Birthday va death day ஆக்க பார்க்கிறீங்களே அக்கா🤭🙄🙄ஆரம்பமே அருவாளா இருக்கே🙆‍♀️தாலி வேற அவ கழுத்துல விழுந்திருக்கு😱
நன்றி தோழி
 
Top