• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

01. திகட்டாத தீ நீயே!

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
பிள்ளையார் கோவில் காண்டா மணி ஓசை அந்த மலைவாழ் கிராமத்தை சூழ்ந்து கொள்ள, நேற்று முழுங்கிய ஆதவனவன் செரிக்கவில்லை போலும், மெல்ல மெல்ல மலையவள் ஆதவனை கக்கிக்கொண்டிருந்த அந்த இதமாக காலைப்பொழுதது.

வண்டினங்களின் ரீங்காரமும், சேவலின் கூக்குரலும், பறவைகளின் பாட்டிசையும் அவளை அசைத்துப் பார்ப்பேனா என்றிருந்தது போல.

குளிருக்கு இதமாக அந்த போர்வையில் தலைவரை இழுத்து போர்த்தி படுத்திருந்தாள் தாமிரா.

பாவம் அந்த போர்வைக்கு வாய் மட்டும் இருந்திருந்தால், இரண்டு வருடங்களுக்கு முன்பே கதறி, தன் ஆயுளை முடித்திருக்கும். ஆனால் அது மாட்டியிருப்பது தாமிராவிடமாச்சே..! எப்படி அவ்வளவு இலகுவில் அதற்கு ஓய்வு கொடுப்பாள்.

முடிந்தவரை துளை இருக்கும் பகுதிகளில் எல்லாம் பொத்தனிட்டு, அதனை பொருத்தியிருந்தாள். அதனையும் மீறி குளிர் உள்ளே ஊடுருவ, தன்னை இன்னமும் குறுக்கிப்படுத்துக் கொண்டவள், தலகாணியாய் போட்டிருந்த வைக்கல் மூட்டையினை இழுத்து இறுகக்கட்டிக்கொண்டு படுத்திருந்தவள் மேல் திடீரென தண்ணீர் பீச்சியடிக்க,

அடித்துப்பிடித்துக்கொண்டு எழுந்தமர்ந்தவள், என்னவென உணர்வதற்கு முன்,

"மகாராணியம்மாவுக்கு இன்னமும் விடியலையோ....? கண்ணுக்குட்டி பாலுக்கு காதுக்குள்ளயே அலறுதே, உன் காதில விழுந்திச்சா இல்லையா....?

போடி போ... பாலை கறந்து கண்ணுக்குட்டிய அவுத்து விடு..! விடிச்சு சூரியன் சுள்ளுன்னு அடிக்குது, இழுத்து போர்த்திட்டு தூங்கிறாளாம் மகாராணி... இந்த மாதிரி நீ தூங்கினா நானாடி எல்லா வேலையும் பார்க்கிறது.

இன்னும் அரைமணி நேரத்துக்குள்ள இந்த வேலைய முடிச்சிட்டு வரல்லன்னா... உன் மூஞ்சிமேலயே சூடு வைக்கிறேன்." என காலையிலேயே கரைத்து கொட்டிவிட்டு போனவரை பாவமாக பார்த்திருந்தாள் தாமிரா.

இதெல்லாம் அவளுக்கு புதிதல்ல தான். எப்போதும் வேளையோடே எழுந்து வேலைகளை முடிப்பவளுக்கு, இன்று கொஞ்சம் உடம்பு ஒத்துழைக்கவில்லை.

பாவம் அவளும் தான் என்ன செய்வாள்... முதல் நாள் உணவே இன்றைய அமிர்தமாக கிடைக்கும் போது, அடிக்கடி இப்படி ஆவதில் ஆச்சரியப்படுவதற்கில்லையே..!
அதோடு விடிந்ததும் ஆரம்பிக்கும் வேலையானது, இரவு பதினொரு மணியினையும் தாண்டிச்சென்றால் பதினெட்டே வயதான சிறு பெண்ணுக்கு கஷ்டமாக இராதா...?


வீட்டு முதலாளியிடம் தன் நிலமையினை கூறமுடியாது.. அப்படி கூறினாலும் அவளை நிம்மதியாக ஓய்வெடு என்று கூறிடவும் போவதில்லை.

படுக்கையே இல்லாத அந்த கந்தல் போர்வையினையும், வைக்கல் மூட்டையினையும் அரணில்லாத அந்த குடிசையின் ஓரமாக அடிக்கி வைத்துவிட்டு எழுந்தவளால் நடக்கக்கூட முடியவில்லை.

எப்படி முடியும்...? நேற்றைய தினம் வயல்காட்டுப் பக்கமாக
மாடுகளை மேக்க சென்றபோது, மாட்டின் கயிற்றில் கால் சிக்குண்டு போக, அரை கிலோ மீட்டருக்கு அது அவளை இழுத்துக்கொண்டு சென்றதில் , காலோடு சேர்த்து அவள் உடம்பும் அல்லவா வலியில் துடித்துப்போனது.


காலை தாங்கித்தாங்கி நடந்தவளுக்கு வலியில் உயிரே போனது. ஆனால் அதற்கு ஒத்தடம் குடுக்க யாருமில்லை.

கிணற்றுப்பக்கம் சென்றவள், அங்கு சுடுதண்ணீர் வைக்கும் அடுப்பிலிருந்து. கரியினை எடுத்து வாயில் மென்று பல்லினை விளக்கி, முகத்தினை கழுவிக்கொண்டு, நேராக மாட்டுத்தொழுவத்துக்கு சென்று, தொழுவத்தை சுத்தம் செய்து, சாம்பிராணி காட்டி, பாலினை கறந்து கன்றினை அவிழ்த்து விட்டு, மீண்டும் கிணற்றடிக்கு சென்றாள்.

சுடுதண்ணீர் வைக்கும் பாத்திரம் நிறைய நீரினை கிணற்றிலிருந்து கோரி நிரப்பியவள், உடைந்த இடுப்பினை கூட பொருட்படுத்தாது, கனமான அந்த பாத்திரத்தை அடுப்பில் தூக்கி வைத்துவிட்டு, வீட்டின் பின்புறம் சென்றவளை வரவேற்றது அங்கு குமிந்திருந்த பாத்திரங்கள்.


முகம் கோணலாகி போனாலும், அதை அவள் தான் கழுவி ஆகவேண்டும்.
பாவடையினை ஒதுக்கி வீங்கிப்போயிருந்த முட்டியினை மடக்க முடியாமல், அங்கிருந்த கல்லின் மேல் கால்களை மடித்து உக்கார முடியாமல் உக்காந்தவள் முதுகினில் எட்டி உதைத்தாள் வடிவுக்கரசி.

அவள் உதைத்த வேகத்தில் பாத்திரங்கள் மேல் விழுந்தவள், பாவமாக வடிவுக்கரசியை நிமிர்ந்து பார்த்தாள்.

"ஏன்டி.... உன்னை அரை மணிநேரத்தில வர சொன்னேனா இல்லையா....? எழுந்துக்கிறது சூரியன் உச்சில உதிக்கிற நேரத்துக்கு, அப்புறம் ஆடி அசைஞ்சு வந்து பாத்திரம் விளக்கினா, மதிய சாப்பாட்டுக்கு உன் அப்பனா பாத்திரம் அனுப்பி வைப்பான்.

மூதேவி..... மூதேவி.... இன்னும் என்ன என் மூஞ்சியையே பார்த்திட்டிருக்க, மசமசன்னு நிக்காம , சீக்கிரம் அதை கழுவிட்டு, தண்ணிய சூடில்லாம கலந்து வையி.. எழுந்ததும் என் பேத்தி குளிக்கத்தான் வருவா, அப்பாே என் ராசாத்தி முகம் கோணிச்சு... தூக்கி போட்டு மிதிச்சிடுவேன்." என வீட்டின் உள்ளே சென்றதும் தான் அவளுக்கு மூச்சே வந்தது.


ஒரே இடத்தில் இருந்து செய்யும் வேலை என்பதால், குமித்து வைத்திருந்த பாத்திரத்தை, சுத்தமாக கழுவி அங்கேயே இருந்த திண்ணைமேல் கவிழ்த்து வைத்துவிட்டு, அவசர அவசரமாக ஓடிச்சென்று தண்ணீரை கலந்து கிணற்றுக்கு அருகிலிருந்த குளியலறையில் வைத்தவள் திரும்பி பார்க்க, ஆளுயரத்தில் உடைகள் குமிந்து கிடந்தது.

தினமும் இந்தளவிற்கு துவைத்துத்தான் போடுகிறாள் தாமிரா. ஆனால் நாலே நபர் இருக்கும் வீட்டில் நாட்பது பேர் உடுத்தும் உடை அழுக்கு துணியில் சேர்வதை சோர்வில்லாமல் துவைப்பவளுக்கு, இன்று உடல் இடம் காெடவில்லை.

என்ன செய்யமுடியும்? நாளை பார்ப்போம் என்று ஒதுக்கி வைக்க முடியாதே..! எப்படியும் இன்றே செய்துவிடவேண்டும், அதுவும் காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டும், இல்லை என்றால் திட்டுத்தான் கிடைக்கும்.

தொட்டியை நிறைத்து உடைகளை நனைத்து விட்டு சோப்பினை போட்டுக்கொண்டிருந்தவள் முகத்தினில் பறந்து வந்து விழுந்தது உள்ளாடை ஒன்று.

அதை எடுத்து பார்த்தவள் முன்பு திமிராக நின்றவள்,
"என்ன பாக்குற...? இதையும் கழுவி போடு!" என சொல்லிவிட்டு திரும்பிய அந்த இளநங்கைக்கு எதுவோ நினைவு வந்தது போல,



"நான் குளிச்சிட்டு வரதுக்குள்ள இதை எல்லாம் முடிச்சிட்டு, சாம்பிராணி போட்டு வை!" என அவள் பாட்டிக்கு ஒரு படி மேலே சென்று உறுமிவிட்டு போனவளையே மறுபேச்சு பேசாது பார்த்து நின்றவள் மனதிலும் ஏக்கம் உண்டானது.
எங்கோ பறந்த மனதினை அடக்கி, மீட்டுக் கொண்டு வந்தவள், இயந்திரத்தை விட வேகமாக செயற்பட்டு, அத்தனை துணிகளையும் துவைத்து காயப்போட்டு.. அடுப்பில் கிடந்த நெருப்பினை கிள்ளி வைத்து விட்டு, வடிவுக்கரசியால் ராசாத்தி என அழைக்கப்படும், அவரது பேத்தியான சுவாதியை எதிர்பார்த்து காத்திருந்தாள்.

முட்டுக்கு மேல் இழுத்து சொருவிய பாவாடையும், காற்றில் அசைந்து இடையூறு செய்யாதிருக்க தாவணியையும், கண்டமேனிக்கு இழுத்து சொருகி.. கையில் ஒரு மண்வெட்டியோடு, செடிகளுக்கு தண்ணீர் பாச்சியவள், ஆங்காங்கே உடைந்து கிடந்த பாத்திகளை வரைந்த வண்ணம் இருந்தாள்.

அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் தாண்டி, அவள் மேனியில் செழிப்பான அங்கங்கள், குனிந்து வேலை செய்வதில் சற்று பிதுங்கி தசைக்கோலம் வெளியே எட்டிப்பார்ப்பதை, மொட்டை மாடியில் நின்று தினமும் உடற்பயிற்சி செய்கிறேன் என்ற பெயரில் அவளையே வைத்த கண் வாங்காது பார்ப்பது தான் பார்த்தீபனின் அன்றைய நாளின் முதல் வேலை.

ஆம் பார்த்தீபன் தான் அந்த வீட்டின் ஒரே ஆண் வாரீசு.
வேல்முருகன் சியாமளா தம்பதிகளுக்கு பிறந்தவர்கள் தான் பார்த்தீபனும், சுவாதியும்.

வேல்முருகனை பெற்றவள் தான் வடிவுக்கரசி. மாமியார் கொடுமை என்றாலும், ஏதோ சகித்து வாழ்ந்த சியாமளாவால், நல்லதென நினைத்து வேல்முருகன் செய்த ஒரே ஒரு காரியத்தினால், எல்லோரும் உறங்கும் நேரம் வரை காத்திருந்தவள், அனைவரும் உறங்கிய நேரம் பார்த்து தூக்குமாட்டி இறந்து போனாள்.


பாவம் தான் அவளும். மாமியாரின் குணமறிந்தவள், கொஞ்சம் யோசித்து முடிவெடுத்திருக்கலாம். அவசரப்பட்டு உயிரை மாய்த்துக்கொண்டாள். அதன் பின்னர் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பு வடிவுக்கரசியிடம் சாய, எவ்வளவோ கூறியும், வேல்முருகன் மறுமணத்திற்கு சம்மதிக்கவில்லை.

சம்மதித்தால் சியாமளாவுக்கு துரோகம் செய்யதவனாகிவிடுவேன். அதுவுமில்லாமல், எதை காரணம் காட்டி சியாமளா தற்கொலை செய்து கொண்டாளோ, அதுவே உண்மை என்று ஆகிவிடும் என்று கண்டிப்போடு மறுத்தார் வேல் முருகன்.

இரு குழந்தைகளும் வடிவுக்கரசியின் பெறுப்பில் வளர்ந்தால், சொல்லவா வேண்டும்...? அச்சு அசல் அவர் குணத்தை ஒப்பிட்டே வளர்ந்தார்கள். என்ன கொஞ்சமாக நல்லவன் பார்த்தீபன். அதுவும் தாமிரா விஷயத்தில் மாத்திரம்.


சுவாதியிடம் அதை சற்றும் எதிர்பார்த்து விட முடியாது. இரக்கம் என்ற ஒன்றை வார்த்தையில் கூட கேட்க பிடிக்காதவள். மீறிப்போனால் எந்த கடையில் கிடைக்கும் என்றதோடு சரி. விலை கொடுத்தும் வாங்கிக்கொள்ள விரும்பாத அந்த கிராமத்திலேயே அரைகுறை ஆடையோடு வலம்வரும் நாகரிக மங்கை.


எட்டு வயதினிலேயே தாமிராவை கண்டதும் ஆரம்பித்த அவளது வஞ்ச குணம், இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், அன்னையின் மரணம் என்றால், இன்னொன்று தாமிராவின் கலரும், அழகும் தான்.



அன்றொரு இரவு ஜட்டியை தவிர, எந்த உடையும் அற்று.. தந்தையோடு மாட்டு வண்டியிலிருந்து இறங்கி, தந்தையின் அணைப்பில் நின்றவளை கண்டவள் மனது அந்த வயதிலேயே பொசுங்கத்தான் செய்தது.

வளரவளர அவள் அழகு இன்னமும் கூடிக்கொண்டு போவதை, நிறத்திலும், அழகிலும் சற்று குறைவாக இருப்பவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

எவ்வளவு ஒப்பனை செய்தும், சாதாரண பாவாடை தாவணியில் மின்னும் தாமிராவின் அழகுக்கு அவளால் ஈடாக முடியவில்லை.

அதனால் அவள் மேல் வஞ்சத்தை வளர்ப்பாள். தொட்டது, பட்டது எல்லாம் குற்றமென்று ஆக, தன் பாட்டியிடம் கூறி தண்டனை வாங்கித்தருவாள்.



"அடியே.....ய்! அங்க என்னடி காலேல இருந்து நோண்டிட்டிருக்கிறவ..? அதை தூக்கிப்போட்டிட்டு, வெயில் ஏறுறதுக்குள்ள மாட்டை மேயக்கட்டு...." என நிமிடத்துக்கு ஒரு வேலையென்று ஓயாது ஏவும் குரலானது காற்றில் பறந்து வந்ததை கேட்டதும் பதறியடித்து, உடையினை சரிசெய்தவாறு நிமிர்ந்து நின்றாள் தாமிரா.

அவர் குரலுக்கே அத்தனை மரியாதை....


எதுவுமே புதிதில்லை தான். ஆனால் பொறுமைக்கும் ஒரு எல்லை வேண்டாமா...?
சிறுவயதில் இருந்தே பேச தெரிந்த ஊமையவள். அவள் பேசுவதென்றால் ம்ம் என்ற வார்த்தையும், சரிம்மா...,சரியய்யாவும் தான். அதற்குமேல் பேச நேரமும் வேண்டும், அவர்களும் அனுமதிக்கவும் வேண்டும்.

நெற்றியில் துளிர்த்த வியர்வையினை தாவணியால் ஒத்தி எடுத்துக்கொண்டு நடந்தவள், எங்கு மறைந்து விடப்போகிறாளோ என அவளையே மொட்டை மாடியிலிருந்து பார்த்திருந்தவன்,

அக்கம் பக்கம் பார்வையை நகர்த்தினான். ஒரு சில துணிகள் கொடியில் காய்ந்து கொண்டிருக்கவே, அதை அவசரமாக இழுத்து கீழே போட்டவன்,

"தாமிரா....." என உரக்க குரல் கொடுத்தான்.

எங்கிருந்து குரல் வருகிறது என தெரியாமல், இடமும் வலமும் என தலையினை அவள் திருப்பி பார்க்க,

"ஏய்..... இங்க.... மேல பாரு" என்றதும் தான் நிமிர்ந்து பார்த்தவளை நோக்கி கையசைத்தவன்,

"துணி எல்லாம் காத்துல கீழ விழுந்திருக்கு பாரு, எடுத்து வந்து போடு." என்றான்.

அவன் சொன்னதும் ஆராய்ந்தவள் கண்களிலும் துணி தட்டுப்பட, ஓடிச்சென்று அதை எடுத்தவள்,

'வடிவுக்கரசி கண்ணில் படுவதற்கு முன்னர் கொடியில் போட்டுவிட்டு வரவேண்டும்.' என எப்போதும் பின்புறம் படிகளால் ஏறுவதைப்போல அதன் வழியே ஏறி கொடியினை நோக்கி நடந்தவளிடமிருந்து துணியினை இழுத்தவன்,

"குடு நானே போட்டுக்கிறேன்."

"இல்லை சின்னைய்யா..... இவ்ளோ தூரம் வந்திட்டேன், நானே போட்டுக்கிறேன்."


"பச்...... எத்தனை வாட்டி சொல்லுறது என்னை சின்னைய்யான்னு கூப்பிடாதன்னு. எல்லாரையும் போல பார்த்தீபன்னு கூப்பிடு. இல்லையா பார்துன்னு கூப்பிடு." என்றான் சற்று சினந்து.

"அதெல்லாம் எனக்கு வாயில வராதுய்யா...! எனக்கு இது தான் ஈஸியா இருக்கு. அம்மாக்கு உங்கள பெயர் சொல்லி கூப்பிடுறேன்னு தெரிஞ்சா, உரிச்சு உப்பு தடவிடுவாங்க." என அவன் கையிலிருந்த துணியினை இழுத்தாள்.

அறியாத வயதில் அண்ணா என்று அவனை தாமிரா சொல்லிவிட்டாள் என்று,

"யாருடி உனக்கு அண்ணா...? தெருவில கிடந்த அனாதை நாய், உனக்கு இவன் அண்ணனா....? சாெல்லுவியா....? இன்னொரு முறை என் பேரனை அண்ணான்னு சொல்லுவியா....?" கேட்டுக் கேட்டே காலில் சூடு போட்டவர்,

"இனிமே அவனை சின்னைய்யான்னு தான் கூப்பிடணும்." என்று அவளை போட்டு அடித்ததை அவ்வளவு எழிதில்
மறந்திடுவாளா...?


அவள் இழுவைக்கு துணி போனதோ என்னமோ, அவன் தான் துணியோடு இழுபட்டு சென்றான்.

அந்த துணியோடு அவளது விரல்களை பற்றி கொண்டவன்,
"சின்ன வயசில நடந்தது எதையுமே மறக்கலையா தாமிரா...?" என்றவன்..

"இனிமே அவங்க உன்னை எதுவும் செய்யாம நான் பார்த்துக்கிறேன்." என உருக்கமாய் பேசி அவளை நெருங்க நினைக்கும் சமயம்.


"அடியே சிருக்கி.... எங்கடி போன....?" என்ற வடிவுக்கரசியின் குரல் மீண்டும் தூரத்தே கேட்டதும், கையினை மட்டும் உருவிக்கொண்டு படிகளில் தாவி ஓடினாள் தாமிரா.
 

fajeeha mumthaj

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 14, 2023
Messages
80
தாமிராவின் நிலை மனதில் வலியை
 

Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
415
வந்தேன் வந்தேன்
1684230314110.png
 
Top