• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

02. இதயம் பகிர்ந்திட வா

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
விடியலின் வரவதை கோவில் மணிகளும், பறவைகளின் பாட்டிசையும் அழகாய் உணர்த்தியது.

வாரத்தின் இறுதி நாளான ஞாயிற்று கிழமை என்பதால், படுக்கையினை விட்டு எழுந்து கொள்ள மனமே இல்லாது, இன்னமும் போர்வையினை கழுத்துவரை இழுத்து போர்த்து கண் மூடிக்கிடந்தாள் பிரியா.


மற்றைய நாட்களில் விடியலையே எழுப்பி விடுவது போல் எழுந்து, தன் வேலைகளை அவசர அவசரமா முடித்து பள்ளிக்கு ரெடியாகி விடுபவள், ஞாயிற்று கிழமை என்றால் போதும்...
பத்து மணிவரை படுக்கையை விட்டு எழுந்து கொள்ள மாட்டாள்.


இது அவள் பெற்றோர்களின் நிழலில் இருக்கும் போதே ஆரம்பித்த பழக்கம்.
ஏனோ அதை மட்டும் அவளால் மாற்றிக்கொள்ள முடியவில்லை.

உண்மை தானே! எழுந்தும் என்ன தான் செய்யப்போகிறாள்?
இன்றைய வேலைகளின் பாதியை நேற்றைய இரவு தூங்கும் முன்பாகவே செய்து விட்டு படுத்துக் கொள்வதால், பிரத்தியோகமாக எந்த வேலையும் இருப்பதில்லை.
இன்றைய வேலை என்று சொன்னால் அது சமையல் தான்.


அதுவும் நேற்றைக்கு சமைத்தவை மீதமிருந்தால், குளிர்சாதன பெட்டிக்குள் வைத்து, மறுநாள் சூடு பண்ணி உண்டு கொள்வாள்.
கிராமத்திலேயே இருந்தாலும் வெளிநாட்டவர் வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

இதற்கு அவள் வாழ்வை வெறுத்ததும் ஓர் காரணம்.
எதை எல்லாம் இந்த வயதில் அனுபவித்திடக் கூடாதோ, அதை எல்லாம் அனுபவித்து விட்டாள்.


எதையுமே ரசித்து வாழ முடியவில்லை. தற்கொலை செய்து கொள்வதும் பாவச்செயல் என்ற ஒரே காரணத்திற்காகத்தான், உயிரைக்கூட பாரமாய், உடலில் சுமந்து கொண்டிருக்கின்றாள்.


நீண்டநேரமாக முழிப்புத்தட்டியும், போர்வையினை விட்டு வெளிவர மனமற்றவளாய் கிடந்தவளை அழைத்துப் பார்த்தது செல்போன் மணியோசை.


அசரவில்லை அவள். எங்கோ முடிந்தால் எழுப்பி பார் என்பது போல, தலை வரை இழுத்திப் போர்த்துக்கொண்டாள் பாரதீபிரியா.
பதிலளிக்கவில்லை என்றால் விட்டு வடுவேனா? என்பது போல் ஒரு முறை அழைத்து ஓய்ந்த செல்போனானது.

மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க. அதன் இரைச்சலில் போர்வையினை உதறி எறிந்து விட்டு,
சலித்தவாறு எழுத்து அந்த பழைய காலத்து நோக்கியா செல்லினை ஆராய்ந்தாள்.
அந்த செல்போனினை கண்டு அவளை கேலி செய்யாதவர்களே இல்லை எனலாம்.


ஆம்.. அவள் வளர்ந்து விட்டாளே தவிர, அவளது நாகரீகம் இன்னும் வளரவில்லை. அதில் அவளுக்கு நாட்டமும் இல்லை.
செல்போனின் வந்த இலக்கத்தை கண்டவள் புருவங்கள் இரண்டும் மோதிக்கொள்ள, பச்சை பட்டனை அழுத்தி..


"ஹலோ...." என்றாள்.
எதிர் திசையில் அமைதியே நீடித்தது.


"ஹலோ... யாரு....?"

".........." மீண்டும் அதே அமைதி.
அந்த அமைதி அவளுக்குள் பயத்தினை விதைக்க.



"லைன்ல தாங்க இருக்கிங்க.. நான் பேசுறது கேட்குதா...?" என்றதும், எதிர் முணையில் அழைப்பு துண்டுக்கப்பட்டதற்கு அடையாளமாக டோட்...டோட்.. என்ற சத்தத்தை கேட்டவளுக்கு கோபம் வந்தாலும்,
அதையும் தாண்டி இதயமானது பந்தையக் குதிரையின் வேகத்தில் இயங்க ஆரம்பித்தது.


இன்றைக்கு மாத்திரமல்ல.. எப்போதுமே இதே போல் நேரம் என்பதே இல்லாது அழைப்பு விடுத்து விட்டு, எதிர்முணையில் மௌன அஞ்சலி செலுத்திக்கொண்டு தான் இருக்கின்றான் அவன்.
இதனாலேயே இதுவரை மூன்று இலக்கங்களை மாற்றிவிட்டாள்.


விழிகளை குழப்பமாய் உருட்டியவளுக்கு, இப்போது வந்த சந்தேகம் என்னவென்றால், அவளும் நம்பரை மாற்றிக்கொண்டு தான் இருக்கின்றாள்.
யார் மூலம் அவளது நம்பர் செல்கிறது என்று தான்.



'இந்த வாட்டி நான் நம்பரை யாருக்குமே தரலையே...! என் நம்பர் எப்படி...?' என யோசித்தவள் கையிலிருந்த போனிலிருந்து ஓர் அதிர்வு தோன்ற.
விரல்களை விலக்கிப் பாரத்தாள். வொன் நியூ மெசேஜ் என காண்பிக்க.
அதை ஓபன் செய்தாள்.



"குட் மார்ணிங்க் டியர்... என்ன இன்னும் எந்திரிக்கலையா..?" என்ற குறும் தகவலே வந்திருந்தது. அதை பார்த்தவளுக்கு ஒரே குழப்பம்.


ஏனோ பதில் அனுப்ப விருப்பமற்று, போனை அந்த இடத்திலேயே தூக்கிப்போட்டு, அருகில் இருந்த இருக்கையினை இழுத்து அமர்ந்தவள் எண்ணங்கள், எங்கெங்கோ சென்று கண்களில் நீரினை வர வழைத்தது.


எத்தனை நிமிடங்கள் தான், தன்னை தானே நினைத்து கழிவிரக்கம் கொள்ளவது? அவளுக்கு அது சலித்துப்போக, எழுந்து தயாராகி வந்தாள்.


சாதாரண நீலநிறத்து புடவை தான். அதை கட்டிய விதம் அவளை ஓர் தேவதைபோல் காட்ட, நீளமே இல்லாத முடியினை சின்ன ரப்பர் பேன்டுக்குள் அடக்கி, மல்லிகை சரத்தினை வைத்தவள், புருவங்கள் மத்தியிலும் வகிட்டிலும் சின்னதாய் குங்குமத்திலகத்தினை வைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

அந்த பெரிய கட்டடத்தில் வாயிலானது... அன்னை தெரசா அறக்கட்டளை நிலையம் என்ற பாதகையினை தாங்கி நின்றது.

அதை கண்டதும் சின்னதாய் அரும்பிய புன்னகையுடன், உள்ளே சென்றவளை வரவேற்பது போல்,
தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த சிமென்ட் பெஞ்சின் மேல், சம்மணமிட்டு உக்கார்ந்திருந்தவள், முட்டிக்கை இரண்டையும் தொடையில் ஊன்றி, இரு கரங்களினாலும் தாடையினை தாங்கியிருந்த அந்த ஐஞ்து வயது சிறுமியின் விழிகளோ வாயிலையே ஆர்வமாகப் பார்த்திருந்து.
அவளை கண்டதும்,


"ஆன்ட்டி வந்திட்டாங்க....?" என விழாத குறையாக குதித்தோடி வந்து, அவள் கால்களை கட்டிக்கொண்டாள்.


அவளது சந்தோஷத்தை கண்டவள் உள்ளமோ தாய்மையில் பெருக்கெடுக்க, குனிந்து அவள் கன்னம் தாங்கி முத்தம் வைத்தவள், தன் பங்கிற்கு தானும் அவளை இறுகக் கட்டிக்கொண்டாள்.
ஏனோ விழிகள் கண்ணீரில் குளிர்த்தது.


ஆம்... பரதீபிரியாவின் ஒரே சந்தோஷம் இது ஒன்று தான்.
அதே நேரம் மற்றவர்களும் சின்னவள் குரல் கேட்டு அங்கு ஆயராகி விட்டிருந்தனர்.



"ஏய் வாலுங்களா.... வந்திட்டிங்களா...? எல்லாரும் எப்பிடி இருக்கிங்க..? நல்லா படிக்கிறீங்களா? இல்லையா..?" என கேட்டவாறு, அந்த பெஞ்ச்சில் சென்று அமர்ந்து கொள்ள, அவளை சூழ்ந்து கொண்டனர் அந்த ஆசரமத்து சிறுவர்கள் கூட்டம்.

"நாங்க நல்லா இருக்கோம்க்கா... நீங்க இன்னைக்கு ஏன் இவ்ளோ லேட்.?" என அங்கிருந்த சிறுவர்களிலேயே கொஞ்சம் பெரியவள் கேள்வி எழுப்ப...
எதை சொல்லி சமாளிப்பதென்று தெரியாது விழித்தவள்,


"வீட்ல சின்ன வேலைடா... அதன் லேட்.. ஏன் என்னை காணலன்னு தேடினீங்களா எல்லாரும்.?" என்று கையிலிருந்த பையினை திறந்து, சாக்லேட் டப்பாவினை பெரியவளிடம் கொடுத்தவள்,


"இதை எல்லாருக்கும் சேர் பண்ணி சாப்பிடு!" எ
ன்றாள்.


"வர்ணிக்குட்டி...." என அழைத்து, தன் கையில் இருந்த பையிலிருந்து, ஒரு கவரினை எடுத்து அவளிடம் கொடுத்தவள்,


"அ... ஆ.. எழுதிப்பழக சிலேடும் குச்சியும் கேட்டிங்கல்ல.. வரும்போது ஆன்ட்டி வாங்கிட்டு வந்தேன்." என நீட்ட...
அதை வாங்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டவள் சந்தோஷத்தினை காண்பதற்காகவே எதுவும் செய்யலாம் என்று தோன்றியது.


"அப்போ எனக்கு...!" என முன்வந்து நின்றாள் பத்து வயது மதிக்கத்தக்க சிறுமி.
"நிஷாவுக்கு என்ன வேணும்..?" என்றாள் புருவங்களை சுருக்கி.


"நானும் சொல்லி விட்டேன்லக்கா... எனக்கும் ஸ்கொலசிப் புக்கு வேணும்ன்னு.. எனக்கு தெரியும்... உங்களுக்கு வர்ணிஷாவ தான் ரொம்ப பிடிக்கும்.. அவ என்ன கேட்டாலும் வாங்கி தருவீங்க.. நாங்க கேட்டா... மறந்து போனேன்னு சொல்லுவீங்க." என அழுபவளை போல் உதடு பிதுக்கி, தலையினை குனிந்து கொண்டாள் சின்னவள்.
அவள் சொல்வது முற்றிலுமே உண்மை.


பரதீபிரியாவிற்கு சிறுவயதிலிருந்து ஆசை என்னவென்றால், சமூகத்திற்கு தொண்டுகள் செய்வதது தான்.


அதில் ஆதரவற்ற குழந்தைகளுக்காய், சிறுவர் இல்லமென்றை நிறுவி, அவர்களை சிறந்த ஒரு எதிர்கால சந்ததியினராய் சமூகத்திற்கு தருவது என்பதே அவள் லட்ஷியமா இருந்தது.


அவள் போதாத காலமோ என்னவோ..? அவள் ஆசைகளை தவிடு பொடியாக்குவதைப் போல வந்து நின்றான் ஒருவன்.
அதன் பின் விதி அவள் வாழ்வில் விளையாட, அதற்கு இடங்கொடாது எல்லாவற்றையும் தூக்கிப்போட்டு வந்து விட்டாள்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர்,
முதல் முறையாக இந்த ஆரசமத்திற்கு வரும்போது, விரல் சப்பியவாறு, விளையாடிக்காெண்டிருந்த, மற்றக் குழந்தைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த வர்ணிஷாவை பார்த்ததும், அவள் மனதில் சொல்ல முடியாத ஓர் வலி தாக்கியது.
கிட்டத்தட்ட அவளுமே அந்த சின்னவள் இடத்தில் தான் அப்போது இருந்தாள்.


உறவென்று சொல்லிக்கொள்ள ஆயிரம் மனிதர்கள் இருந்தாலும், வெறும் வேடிக்கை மனிதி தான் அவள்.

அன்று அவளை வாரி அணைத்தவளுக்குள் உண்டான தாய்மை.. அவளை காணும் போதெல்லாம் ஊற்றெடுக்கத்தான் செய்தது.
அப்போதே சிறுமியை தத்தெடுக்க கேட்டாள் தான்.
ஆனால் ஆரசம சட்டம் ஒப்புக்கொள்ளவில்லை.
அதாவது குழந்தையை தத்தெடுப்பவர்களுக்கு இருக்க வேண்டிய தகமையில் முக்கியமானது, கணவனின் ஒப்புகை கையெழுத்து வேண்டும்.


அதுவும் நேரில் வந்து சாட்டிக் கையெழுத்து இடவேண்டும்.
சிங்கிள் மதர்ளுக்கு குழந்தையை தத்துக்கொடுக்க முடியாது என்று கண்டிப்போடு சொல்லி விட்டார்கள்.
அந்த சட்டம் கூட சிறுவர்களின் பாதுகாப்பு கருதியே இடப்பட்டது.


ஆண் குழந்தைகள் என்றால் பரவாயில்லை. ஆனால் இங்கு முழுவதும் பெண் குழந்தைகள். நாளை அவர்களுக்கு ஒன்றென்றால், யாரை கேள்வி கேட்க முடியும்.? ஏன் கணவனாலேயே அந்த குழந்தைகளுக்கு ஏதாவது ஆகிவிட்டால்..
அதனால் தான் எல்லாமே சரியாக இருக்கிறதா என ஆராய்ந்து தத்துக்கொடுப்பார்கள்.

கணவன்.....! எங்கே தேடுவாள் அவனை...? அதன் பின் அந்த பேச்சையே எடுக்கவில்லை அவள்.


எதிரே தலைகுனிந்து இருப்பவளை பார்க்கும் போது, இதற்குமேல் தாங்கமாட்டாள் என உணர்ந்தவள்,
பையிலிருந்த புக்கினை எடுத்து, குனிந்திருந்தவள் முகத்துக்கு நேரே ஆட்ட, அதை கண்டதும் ஆச்சரியமாய் நிமிர்ந்து பிரியாவை பார்த்தவள்,

"அப்போ
என்னை ஏமாத்தினீங்களா...?" என செல்லமாக கோபித்துக்கொள்ள.

"சும்மா விளையாடினேன்.. அதுக்கு அழுவியா நிஷா...? இந்த நீ கேட்ட புக்." என அவளது பொருளை கொடுத்தாள்.


பின் ஒவ்வொருவருக்குமாக வாங்கி வந்த பொருளை கொடுத்தாள்.
அதை வாங்கிக்காெண்டு சிறிது நேரம் அவளுடன் செல்லம் கெஞ்சியவர்களை, அங்கு பணிபுரியும் நிர்வாகி அழைக்க, தத்தம் இடங்களுக்கு ஓடி விட்டனர்.



அதுவரை அவர்களுடன் தன் கஷ்டங்களை மறந்து சந்தோஷமாக இருந்ததவள், தனித்து விடப்பட்டதும் சோர்ந்து போனாள்.
ஏனோ இன்று நிர்வாகியின் அறைக்குள் செல்ல மனம் வரவில்லை.


அந்த ஆரசரமத்திலேயே சற்று தொலைவில் இருந்த சிறுவர் பூங்காவிற்குள் சென்றவளுக்கு, அங்கு பூத்துக்குளுங்கிய மலர்களையும், தரை விரிப்புப்போல் பச்சை பசேல் என படர்ந்திருந்த புற்களையும் கண்டதும். எல்லாம் மறந்து போ
னது.

தாமரை தடாகத்திற்குள் வெயிலுக்கு இதமாக நீந்தி விளையாடிக் காெண்டிருந்த அந்த பட்சிகளை, மர்புக்கு குறுக்கே கைகட்டி ரசித்து நின்றாள் அவள்.

திடீரென யார் கையோ அவள் தோள்களை பற்ற, பதிறித் திரும்பியவளை பார்த்து இளநகை புரிந்த அந்த வயது நிரம்பிய பெண்மணி.

"பசங்க சொன்னாங்க... நீ வந்திருக்கேன்னு.. ஏன் உள்ள வராம இங்கேயே நின்னுட்ட..?"


"அது... அது.." என தடுமாறியவள்..

"இந்த இடம் ரொம்ப அழகா இருந்திச்சா.. அதான்.." என்றாள்.


"சரி தான் போ.. இன்னைக்கு தான் புதுசா வரவ மாதிரி பேசுற.. என்ன இன்னைக்கும் ரொம்ப செலவு வைச்சிட்டாங்களா பசங்க..?"


"ச்சே ச்சே... இதுக்க எல்லாம் கணக்கு பார்க்கிறதாம்மா... படிக்கத்தானே.. அவங்க கேட்கலன்னாலும்.. நானே இதை செய்யத்தான் போறேன்." என்றாள்.


"தெரியும் இதை தான் சொல்லுவேன்னு... சரி வா உள்ள போவோம்." என தன் அறைக்கு அழைத்துச் சென்றார்.
 
Top