• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

02.இராவண தேசத்தின் வெண்ணிலா‌...

fajeeha mumthaj

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 14, 2023
Messages
80
ராவணபுரத்தில் பஸ்ஸிற்காக காத்திருக்கும் நிழற்குடையின் கீழ் ஒரு வித எதிர்பார்ப்புடன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார் பசுபதி இன்று அவரின் முகம் சந்தோஷத்தில் ஜொலித்து ‌கொண்டிருந்தது அதற்கு காரணம்
அவள் தானே....



"என்னபா பசுபதி நானும் பார்த்திட்டு இருக்கேன் வந்ததுலே இருந்து அங்கிட்டு இங்கிட்டு நடந்துக்கிட்டு வாற போற பஸ்யே பார்த்துகிட்டு இருக்கே என்ன சங்கதி...." என்று கேட்ட டீ கடை நாயரிடம்,


"வேற யாருக்காக காத்திருக்க போறேன்‌ எனக்கிருக்கிறதே ஒரே உறவு‌ என் மகே தான் அது இன்னைக்கு படிப்ப முடிச்சிட்டு புள்ளங்க எல்லாமா சேர்ந்து வந்திட்டு இருக்கா அதான் பார்த்துக்கிட்டு இருக்கேன்..." என சிரிப்போடு சொல்ல....


"என்றா உம் புள்ள அந்த ரெட்டை சடைகாரியா எம்பட்டு நாள் பார்த்து ஆளே மாறி போய்யிருப்பாளே இப்போ நீயும் படிக்க கொண்டு போய் விட்டது தான் விட்ட ஊர் பக்கம் கூட்டிட்டே வரலயேடா...."



"என்ன பண்ண நாயரு படிக்கிற புள்ளயே அலைகழிச்சிட்டு இருக்க முடியுமா? அதான் நானே விடுமுறைன்னா அங்கனே போய் பார்த்திட்டு வரது..." என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பஸ் வந்து நிற்க இள நீல நிற அனார்கலியில் வெண் மேக பஞ்சு போல் வந்திறங்கினாள் அவள் தேன்நிலா.... பெயருக்கேற்றது போல் அந்த நிலவின் அழகிய தோற்றம்‌ கொண்டவள்‌ மீன்‌ போன்று துள்ளும் விழிகளை சுற்றி கருமை‌ நிறம்‌ பூசியதும் ஒரு அழகு‌ தான் அவளிற்கு அந்த கண்களில் வீழ்ந்து தொலைந்தவர்கள் எத்தனை பேரோ... என நினைக்க தோன்றி விடும் தன் செர்ரி நிற இதழை குவித்து அப்பா... என கத்தியபடி வந்தவள் பசுபதியை கட்டிக்கொள்ள அவரும்‌ தன் ஆசை மகளை கட்டிக்கொண்டு அன்பு பாராட்டினார்....

"அப்பா.... உங்க பொண்ணை பத்திரமா கொண்டு வந்து விட்டதும் எங்களே மறந்துட்டீங்களா? என அவளின் தோழிகளின் பேச்சில் நினைவு வந்தவராக "அய்யோ கண்ணுங்களா அப்படி எல்லாமில்ல...." என சமாதானப்படுத்த "சரி‌ நம்பிட்டோம்.." என்ற அவர்களில்‌ ஒருத்தி "அப்பா பஸ் கெளம்ப போகுது நாங்க போய்ட்டு வரோம் இந்தாங்க அவளோட பேக்..." என கொடுத்து விட்டு அவர்கள் பஸ்யில் ஏறி கொள்ள "பத்திரமா போய்ட்டு வாங்க கண்ணுங்களா..." என்றவருக்கு விடை கொடுத்து செல்ல இவர்களும்
வீட்டிற்கு செல்ல‌ திரும்பினர்....



"நாயர் எம்புள்ள இதான்..." என அறிமுகப்படுத்தி வைக்க...


"அடடே அப்பிடியே மஹாலக்ஷ்மி கணக்கா ரொம்ப அழகாக இருக்காளே இங்கே வாத்தா சுட சுட போண்டா போட்டிருக்கேன் வந்து சாப்பிட்டு போ..." என்று‌ அவர் பாசமாக கூப்பிட தந்தையை திரும்பி பார்த்தவளிடம் "வா‌டா..." என அவளின் கைப்பற்றி அழைத்து சென்று அங்கு போடபட்டிந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர அவரும் அன்போடு உபசரிக்க‌ ரசித்து சாப்பிட்டாள் பின் இருவரும் விடைபெற்று நடந்தே வீட்டுக்கு சென்றனர்.



"ஊர் ரொம்ப மாறிடுச்சுல்லப்பா எத்தனை வருஷமாச்சு..." என எழில் கொஞ்சும் அழகை கண்டு இதழில் ஒட்டிய புன்னகையுடன் நடந்து வர,

"ஆமாண்டா ‌ஆனா இனிமே அப்பா ஜாலியா இருப்பேன் ஏன்னா என் பொண்ணு என்ன விட்டு எங்கயும் போ மாட்டாளே..." என உற்சாகமாக கூறியவரை கண்டு தெத்துபல் தெரிய சிரித்தவள் "இனிமே நீங்க அங்கே நான் இங்கேன்னு வாழ்ந்த வாழ்க்கை போதும் நமக்கான உலகத்துலே நீங்களும் நானும் வாழுவோம்ப்பா..." என்றவளுக்கு தலையாட்டியவர் அவளின் பையில் இரண்டை தூங்கியபடியே உடன் நடத்தவாறு பேசிக்கொண்டுவந்தார் பசுபதி.






ரைஸ் மில்லில் கணக்கு வழக்குகளை பார்த்து கொண்டிருந்தவனின் முன் கையை கட்டி தலை குனிந்து நின்றனர் இருவர்...


"தம்பி மழையை‌ நம்பியிருக்கிற பூமி தண்ணியில்லாம விளைச்சலும் இல்ல இதுலே எங்க தம்பி வட்டியே கட்டுறது ‌கொஞ்சம் மனசு‌ வைங்க தம்பி அடுத்த மாசம் பணத்தை கொடுக்கிறோம்...." என்றவர்களை நிமிர்ந்து பாராமலே "அள்ளி கொடுக்க‌ நான் ஒன்னும் வள்ளல் கிடையாது வட்டி பணத்தை கொடுக்க பணமில்ல பக்கத்து ஊரு‌காரனுங்ககிட்ட தண்ணியே போட்டு தகறாரு பண்ண காசு இருக்கு.... என்றவனின் வார்த்தையில் அவ்விருவரும் செய்வதறியாது பயத்துடன் பார்த்து கொண்டிருக்கவும்...


"வட்டி கட்ட காசில்லன்னா குடோன்லே அரிசி மூடை இருக்கு அதை வண்டிலே ஏத்தி நாள் கூலியை வாங்கி வட்டியே கட்டிட்டுபோ...." என்ற லிங்கேஸ்வரனிடம் இதற்கு மேல் பேசி ரத்த காயத்தோடு செல்வதற்கு பதில் அவன் கொடுத்த அவகாசத்தில் வேலையை பார்த்து வட்டியை அடைத்து விடலாம் என எண்ணி கொண்டு நகர்ந்தனர்....


குமாருக்கு போன் போட்டு‌ அழைக்க வாழை தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவன்‌ அவசரமாக மில்க்கு வந்து சேர்ந்தான்.



"என்ற மாம்ஸ் எதுக்கு ஃபோன்யே போட்டு அண்ணே கூப்புட்டு விட்டிருக்கு.." என கேட்டபடி வந்தவனை கண்டு‌ "கொடுத்த வேலையே ஒழுங்கா‌ பார்த்திருந்தா எதுக்கு கூப்பிட போறாக இன்னைக்கு வசமா மாட்டின மாப்பு நீ....." என்ற‌ அவனின் தாய்‌ மாமன் கருப்பனை திகிலோடு பார்த்த குமரன்‌.


"என்ன மாம்ஸூ சொல்றே நான் என்ன வேலையே செய்யாவுட்டேன்..." என்று‌ பேசி கொண்டிருந்தவனை உள்ளிருந்து‌‌ அழைத்தான் லிங்கேஸ்வரன்....


"ஹா‌ இதோ வரேண்ணா‌ ஹேய் மாம்ஸ் நீயும்‌ வாயேன்..." என சிறுபிள்ளை போல் கருப்பன் கைபிடித்து இழுத்து கொண்டு ‌ஈஸ்வர் இருந்த‌ அறைக்குள் நுழைய அவன்‌ வீசிய நோட்டு புத்தகம் முகத்துக்கு‌ பறந்து வர அவசரமாக அதில் இருந்து தப்புறேன் பேர்வழி என்று‌ கருப்பனை இழுத்து முன்னால் விட அது அவன்‌ கன்னத்தை உரசி காயத்தை உண்டு‌ பண்ணியது...


"ஆ.... அம்மாஹ்..." என கத்தியவர் முறைப்போடு திரும்பி குமரனை பார்க்க அவனோ "ஈஈ...." என‌ இழித்து கொண்டு நிற்க "செய்றது எல்லாம் செஞ்சிட்டு பல்லை காட்டுடா ‌குரங்கு பயலே..." என பல்லை கடித்தவர்‌ "பெரிய மாப்பிள்ள இவனை விடாதே எல்லாத்துக்கும்‌ நீ இருக்க பாத்துக்குவேன்னு தான்‌அசால்ட்டா சுத்திக்கிட்டு இருக்கான்‌...." என போட்டுக் கொடுத்து விட்டு‌ போய் அங்கிருந்த சேரில் உட்கார்ந்து விட......



லிங்கேஸ்வரனோ முறைப்பாக அவனை பார்த்தபடி "வட்டிக்கு‌ பணம்‌ கொடுத்தா அதை நேரத்துக்கு வசூலிக்காம என்ன செஞ்சிட்டு இருக்க..
இன்னைக்கு மொத்த ‌ பணமும் வந்தாகனும் ஒத்த பைசா குறைஞ்சாலும் இன்னைக்கு உன்னை வீட்டுக்க விட மாட்டேன் கெளம்பு..." என‌ அழுத்தமாக சொல்லவும்.....


"அண்ணா...." என இழுத்த படி நின்றவனை கண்டு "உன்னை‌ போ சொன்னேன்..." என அழுத்த திருத்தமாக சொல்லிவிட்டு அவன் வேலையை கவனிக்க தொடங்க முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு நகர்ந்தான் குமரன் அவனை தனியே விட மனமில்லாமல் ரோஷங்கெட்ட‌ மாமனும்‌ எழுந்து‌ அவன் பின் செல்ல.... அதை கண்ட குமரனோ
"நீ இப்போ எதுக்கு எம் பின்னாலே வரே உள்ள என்ன கோர்த்து விட்டு இப்போ சமாதானப்படுத்த வரீயா நீ எவளோ சமாதானப்படுத்தினாலும் நான் சமாதானமாக மாட்டேன்..." என முறுக்கி கொண்டு நிற்க...


"அடே யாருலே இவன் உன்ன சமாதானப்படுத்த தான் நா வந்ததாக்கும் வாடா என்ற அக்கா மவனே.... போய் வேலையை பாக்குறத்துக்கு இப்பிடியே நின்னுக்கிட்டு இருந்தா ராத்திரி முழுக்க வெளியே தான் உக்கார்ந்து கொசு அடிக்கனும் வட்டியா? கொசுவா? நீயே முடிவெடுலே‌...."

"அய்யோ.... அந்த கொசுக்கு பதிலா
இவனுங்களே நாலு தட்டு தட்டி பணத்தை வாங்குறதே மேலு...." என பைக்யை ஸ்டாட் பண்ண பின்னால் ஏறி அமர்ந்து கொண்டான் கருப்பன்...


தர வேண்டியவர்களை மடக்கி பிடித்து கேட்கும் விதத்தில் பணத்தை வாங்கி விட்டு வந்த குமரனிடம் "ஏன்டா மருமகனே முடிஞ்சதா? இல்ல வேற எவன்டயும் வாங்கனுமா?..."


"பசுபதி மாமாகிட்டயும் முரளி பயேன்கிட்டயும் வாங்குறது தான் பாக்கி...." என்றதும் "வெரசா போ மாப்பிளே வாங்கிட்டு வீட்டான்டே போய் அக்காகிட்ட காபி தண்ணியாவது வாங்கி குடிக்க...." என்றவனை திரும்பி பார்த்து "ரொம்ப பறக்காதே மாம்ஸு அஞ்சு நிமிஷம் உக்கார்ந்து வா வேலையை முடிச்சிட்டு போலாம்...." என்றவன் முதலில் பசுபதி வீட்டிற்கு வர அங்கு தந்தை மகளும் அமர்ந்து ஸ்னேக்ஸுடன் காஃபி அருந்தி கொண்டிருக்க "பசுபதி மாமா...." என அழைத்தான் பைக்கில் இருந்த படியே அவனின் சத்தம் கேட்டதும் பணத்தை எடுக்க அவர் அறைக்குள் செல்ல தேன்நிலா வாசலிற்கு சென்று யாரு? என கேட்க....


"மாம்ஸ் இந்த புள்ள யாரு?? ஊருக்குள்ள புதுசா இருக்கு..." குமரன் கருப்பன் காதில் குசு குசுக்க அவருக்கோ அவளை பார்த்ததுமே நன்றாக அடையாளம் தெரிந்தது...



"ஏத்தா அப்பா இல்ல.." என‌ கேட்டவரிடம்


"உள்ளே தான் இருக்காங்க வாங்க.." என அவள் அழைக்கவும் பசுபதி வாசலுக்கு வரவும் சரியாக இருந்தது.


"என்ன சின்ன தம்பி வட்டி வசூல் வாங்க இந்த மாசம் ரொம்ப சொணக்கம் நான் இன்னைக்கு வீட்டாரே வந்து கொடுத்திட்டு போலாம்ன்னு நெனச்சேன் அப்பறம் பாப்பா வந்ததுலே மறந்துட்டேன்...." என்று சிரித்தபடியே பேசிய பசுபதியிடம்,


"என்ன மாமா செய்ய தோப்பு வேலையிலே கிடந்தேன் இது மறந்து போச்சு பசங்களை வசூலுக்கு அனுப்பினா பஞ்சாயத்தை இழுத்து வெக்கிறானுங்க அதான் நானே வரது..
ஆமா இது யாரு நம்ம ஊர்லே புதுசா இருக்காங்க..." என்றவனிடம்,


"எம் மகே தான் பத்தாங் க்ளாஸ் முடிய வெளியே கொண்டு போய் படிக்க வெச்சேன் இப்போ தான் ஊருக்குள்ள வந்திருக்கா...." என தகவல் சொன்னார் அவர்....


"ஓஹ் அதான் தெரியலே... சரி மாமா நான் பொறவு வரேன் முரளி பயேன் கிட்ட பணத்தை வாங்கனும் வரேன்...." என பைக்கை எடுத்துக் கொண்டு நகர கருப்பன் தேன்நிலாவை இரண்டு முறை திரும்பி பார்த்தப்படி வர அதை தனது பைக் சைட் மிரர் வழியாக பார்த்தவன் "மாம்ஸு அந்த புள்ளயே ஏன் இப்பிடி பாக்குற... என்னாச்சு உனக்கு...." என்றவனிடம்,

"அது... அ...தெல்லாம் ஒன்னுமில்லடா சும்மா தான் பார்த்தேன்..." என அவனிடம் சொல்லி விட்டு திரும்பி கொண்டார் கருப்பன்...


"பொய் சொல்லுறது உன் மூக்கு துடிக்கிறத்துலயே தெரியிது கேவலமா சமாளிக்காதே..."என்றவன் இதை மனதுக்குள் குறித்து வைத்து கொண்டான்.....


முரளி வீட்டுக்கு முன் வந்து பைக் நிறுத்தியவன் ஹார்ன்யை அடிக்க வீட்டுக்குள் இருந்து எட்டிப் பார்த்தாள் பெண்ணவள் இவனை கண்டதும் பணத்தை எடுத்து கொண்டு வந்து ம்கூம்.. என குரலை செருமி அவனை முறைத்தபடியே பணத்தை கொடுக்க அதை வாங்கி நோட்டில் குறித்து கொண்டவன் "கம்புகுச்சிக்கு கொழுப்ப பாரு எம்பெட்டு தைரியம் இருந்தா‌ என்னையே மொறைக்கும் அந்த கண்ணை நோண்டி ஒரு நாளைக்கு காக்காக்கு போடுறேன் அப்போ தெரியும் நான் யாருன்னு...." என அவன் மனதில் நினைத்து கொள்ள "ஏம்மா செவ்வந்தி அண்ணன் வந்தா சொல்லு தண்ணி மோட்டரு பழுதாகி கெடக்கு வந்து பார்க்க சொன்னதான்னு......" என்ற கருப்பனிடம்,


"அண்ணே அங்கனே தான் சித்தப்பு போய்யிருக்கு ஐயா வர சொல்லி விட்டதா ஆளுங்க வந்து கூட்டிட்டு போனாங்க..." என்றவள் வீட்டுக்குள் சென்று விட இவனோ நாயர்‌ கடைக்கு பைக்கை ‌விட்டான் "இப்ப இங்க எதுக்குடா வந்த வா வீட்டுக்கு போவோம் வண்டி எடு..."


"அடே மாம்ஸ் இஞ்சி டீயும் சமோஷாவும் சாப்பிட்டு வீட்டுக்கு போலாம் வா வேலை பார்த்து ரொம்ப அலுப்பா இருக்கு..." என்றபடி சமோசா டீக்கு ஆடர் கொடுத்து விட்டு அவ்விடம் அமர்ந்தான் குமரன்....

தொடரும்...
 
Top