• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

02. இருளில் ஔிரும் தீபமானாய்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
அஞ்சலியோடு பேசிவிட்டு தன்னை முறைத்துப் போனவளையே பார்த்து கொண்டிருந்தான் ஸ்ரீ ஜயந்த விஜயசூரிய.



அவள் அறையில் சென்று கதவடைத்து கொண்டதன் பின்



தன் மகள் புறம் திரும்பியவன். (சிங்கள உரையாடல் தமிழில்)



"என்ன குட்டிம்மா?... அம்மாகூட ரொம்ப அடம்பிடிச்சிங்களா?..." என்று அவன் சிங்களத்தில் கேட்டதும்.



சின்னவளுக்கோ அவன் கூறுவது கொஞ்சம் புரிந்தும் மீதி புரியாமலும் தன் தந்தையைப்பார்த்து விழித்தாள்.



தான் கூறுவது அவளுக்கு புரியவில்லை என்று தெரிந்து மெலிதாக புன்னகைத்தவன்,



இம்முறை தமிழிலே



"குட்டிம்மாவுக்கு அப்பா பேசிறது புரியலையா?" என்று கேட்டதும்.



அவன் மகளுக்கோ பெரும் சந்தோஷம்.



"அப்பா நீங்க தமிழ் கதைப்பிங்களா?.." என்று தன் குட்டியான கண்களை உருட்டியவாறு வினவியவளை அள்ளி அணைத்து முகம் எங்கும் முத்தம் வைத்தவன்,



"ஆ.... அப்பா கதைப்பேனே! என் குட்டிம்மாவுக்காகவே தமிழ் கத்துக்கிட்டேன். நீங்க அம்மாவை ரொம்ப படுத்தி எடுத்திட்டிங்களா குட்டிம்மா?..." என்று அவள் தோள்களின் இருபுறம் தன் கைகளால் பற்றியவாறு அவளை வினவ.



"நான் எதுவுமே பண்ணலப்பா!. நீங்க வந்திட்டிங்களானு மட்டுந்தான் கேட்டேன்.



அம்மா எதுவுமே சொல்லல.



வீட்டுக்கு வந்து உங்களை தேடினேனா?... உங்கள காணல்லயா?. அதனால தான் எதுவும் பேசாமல் இந்த இருக்கையில போய் இருந்திட்டேன்.



அம்மா கூடவும் பேசல.



அதனால தான் என்னை அடிச்சாங்க." என்று தன் குட்டியான கண்களை உறுட்டி பாவமாக கூறி தாயை தந்தையிடம் மாட்டிவிட்ட மகளின் பேச்சை ரசித்துக்கொண்டிருந்தான்.



ஆம் அப்படியே கீதாஞ்சலியை உரித்து வைத்திருந்தாள் அவள் செல்ல மகள் கவிதாஞ்சலி.



கோலிக்குண்டு கண்கள், கொச்சிப்பழம் போல் சிவந்த குட்டியன உதடு, வெள்ளை மாதுளை முத்தைப்போல் குட்டி குட்டியான பல் வரிசை., கொழுகொழுத்த கன்னங்கள், நீளமான நாசி, வீச்சருவால் புருவம், எந்த மாசு மருவர்ற மிருதுவான மினுமினுக்கும் தேகம், தன்னை அடித்த தாயை தந்தையிடம் மாட்டிவிடும் போதும் சாதுவாக கோபத்தில் கீதாஞ்சலியை போலவே சிவப்பேறும் வதனம். மொத்தத்தில் பளிங்கு கல்லால் செய்து வைத்த ஒரு அழகிய பொம்மை போலிருந்தாள் அவன் செல்லமகள்.



அவளையே பாத்திருந்தவனுக்கு தாயைப்பற்றி குறை கூறும் மகளின் பேச்சு எதுவும் காதினில் விழவில்லை.

எங்கே விழும்?.


அவன் தான் சின்னவளுள் தன் கீதாஞ்சலியை தேடிக்கொண்டிருந்தானே!..



அப்படியே காதில் விழுந்தாலும் அவனால் வதனியை எதுவும் கேட்க முடியாதே!.



கல்யாணமாகி இரண்டு வருடங்களாகிற்று. இதுவரை இருவரும் பேசியது கிடையாது. ஏன் எதிரே நின்று ஒரு நிமிடம் பார்த்திருப்பாளா? என கேட்டால் அதுவும் கேள்விக்குறியே!..
கோபம் வந்தால் மட்டும் முறைப்பை பரிசளித்து விட்டு செல்வாள்.



ஆஸ்திரேலியாவில் இருந்த இத்தனை நாட்களில் தினமும் தன் மகளுடன் பேசுவதற்காக அருகில் வசித்து வரும் துளசியின் இலக்கத்திற்கு சூரிய அழைப்பதுண்டு,



ஆனால் வதனியுடன் பேசமாட்டான். அவளுக்கும் அது தேவையில்லை என்பதால் அவனுடன் பேச முயற்சி செய்ததுயில்லை.



போனில் பேசும் அளவிற்கு அவர்கள் உறவானது அத்தனை பலம் வாய்ந்ததும் இல்லை.



அங்கு இருந்த ஒற்றை இருக்கையில் அமர்ந்திருந்தவன் கால்களுக்கிடையில் நின்று கதை பேசிக்கொண்டிருந்த மகளை ரசித்துக்கொண்டிருந்தான்.



"ஹலோ..... அய்ய கவதாத ஆவே....?".(அண்ணா எப்போ ஊரில் இருந்து வந்திங்க?) என்ற குரல் வாசலில் இருந்து வந்ததில், திரும்பி வாசலை பார்தவன் முகத்தில் அங்கு நின்றவளை கண்டதும் புன்னகையை ஒட்டிக்கொண்டது.



"ஹேய் துளசி நங்கி.....!" (ஹேய்... துளசி தங்கச்சி....) என்று ஆர்வமாக அழைத்தவன்.



"தான் தம நங்கி ஆவே." (இப்போ தான் தங்கச்சி வந்தேன்.) என்று பதிலுரைத்தவனது பதிலில் சந்தோஷமாக தலையசைத்தவள்,



"பயணம் எல்லாம் சுகமாக இருந்திசா?" என்று பயணம் பற்றி விசாரித்தாள். அவனோ எல்லாவற்றிற்கும் ஆமாம் கொட்டி முடிக்க,



"அப்பாவும், பொண்ணும் அப்படி என்ன ஒட்டி நின்னு ரகசியம் பேசிட்டிருந்திங்க?..." என்றவும்.



தான் வரும்போது வதனி தன் மகளை கண்டித்ததை கூறியவன், அதைத்தான் பத்த வைத்துக் கொண்டிருக்கிறாள். என அவர்கள் உரையாடல் சிங்களத்திலே தொடர்ந்தது.



பாவம் அவளுக்கு சூரியவிற்கு தமிழ் தெரியும் என்பது தெரியாது. தெரிந்திருந்தால் தமிழிலே பேசியிருப்பாள்.



இங்கிருந்து போகும் போது சிங்களவனாக சென்றவன், வரும்போது தமிழனாக வருவான் என்று அவள் என்ன கனவா கண்டாள்?...



"இப்போது வதனி எங்க?" என்று சத்தம் வராது சைகையால் துளசி வினவ,



அவள் சென்ற அறையினை காட்டியவன்,



என்னவென்று பார்க்குமாறு கெஞ்சுவது போல் ஜாடை செய்தான்.



"நான் பார்த்துக்கிறேன். என பதிலுக்கு கண்களை மூடித்திறந்தவள்,



வதனி இருக்கும் அறை நாடிச்சென்றாள்.



அவளுக்கு தெரியும் இவன் வந்தால், அவள் செயற்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பது.

எப்போதும்


தன் குரல் கேட்டதும் ஓடி வருபவள், தான் வந்து சில நிமிடங்கள் ஆகியும் அவளை காணாவில்லை என்றதும் தான் சூரியவிடம் வினவினாள்.



ஆம் துளசி மாத்திரம் இல்லை என்றால் வதனி என்ற ஒருத்தி இந்த பூமியில் இருந்திருப்பாளோ? என்று கேட்டால் நிச்சயம் அதற்கு விடை இருந்திருக்காது.



பெற்றவர்களே அவளை வேண்டாம் என்று ஒதுக்கியபோது.



தன் பதினைந்தாவது வயதில் வயிற்றில் மூன்று மாத கருவுடன் சாவதற்கு கூட துணிச்சல் அற்று ஊராரின் வசைமொழிகளையும் கேட்க பிடிக்காமல், ஒதுங்கிக்கொள்ள நிழல் அற்று ஊரைவிட்டு வந்தவளுக்கு ஆதரவுக்கரம் நீட்டியவள் துளசி தான்.



உண்மையில் வதனி துணிச்சலானவள்.



இப்படி ஒரு விபத்து அவளுக்கு நேரவில்லை என்றால் அவள் இப்போது இருந்திருக்கும் நிலை வேறு. அந்த வயதிலேயே யாரும் அவள் முன் நின்று ஒரு வார்த்தை பேசியிருக்க முடியாது. அந்தளவு வாயாடியும், தன்னம்பிக்கையும் உடையவள்.



பாழாய்போன விதி! அந்த உலகறியா பெண் மீதும் தன் வக்கிரத்தை காட்டிவிட்டு சென்றுவிட்டது.



சுமக்க கூடாத வயதில் அவப்பெயரையும், வயிற்றுச்சுமையையும் சுமந்தவாறு வந்தவள் தான் வதனி.



வதனியின் அறைகதவை தட்டிய துளசி "வதனி" என்று அழைக்க.



ஒரு நிமிடம் இடைவெளியின் பின்னர்,



"உள்ள வாங்கக்கா" என அழைத்தவள் கரகரத்த குரலே சொன்னது அவள் அழுதிருப்பதை.



அவள் படுத்திருந்த கட்டிலின் ஓரத்தில் போய் அமர்ந்துகொண்டவள்,



"என்ன இங்க பண்ணிட்டு இருக்க வதனி?..." என்க.



"ஒன்னுமில்லக்கா!.... சும்மா படுத்திருந்தேன்." என்றவள், அவள் வெளியே நின்று குரல் கொடுக்கும் போதே கண்களை துடைத்து விட்டிருந்தவள், சாதாரணமாக இருப்பது போல் மறுபுறம் பார்த்தவாறு பதிலுரைத்தாள்.



"ம்.... அது தெரியுது வதனி!



படுத்திருந்து என்ன செய்திட்டிருந்தேன்னு தான் நான் கேட்டேன்?...



கல்யாணமாகி ஒரு வாரத்தில ஊருக்குப்போனவன், இரண்டு வருஷம் கழிச்சு இப்போ தான் ஊருக்கு வந்திருக்கான், என்ன ஏதென்று விசாரிக்காம உள்ளே வந்து அழுதிட்டிருந்தா என்ன அர்த்தம்?.."என கேட்க.



அவர் கேள்வியில் திரும்பிப்பார்த்து முறைத்தவள்,



"எனக்கு அந்த உறவே வேண்டாம் என்று தான் அர்த்தம்."



"எதுக்கு இப்போ வந்தானாம்?



போனவன் அங்கேயே இருந்திருக்க வேண்டியது தானே?.



யாரு இப்போ வெற்றிலை வைச்சு கூப்டாங்க?..



ஏன் இவன் என் வாழ்கையில் வரமுன்னாடி நான் வாழல்லையா?



பெரிய தியாகி போல தாலியை இவனை யார் கட்டச்சொன்னது.?" என்று ரௌத்திரமாக கத்தியவள்.



"என் பொண்ணு இவனால என்னை வெறுக்கிறாக்கா!..." என்று அடுத்த நொடியே உடைந்து அழுதவள்,



துளசியின் மடிமீது முகம்புதைத்து அவள் வயிற்றைக்கட்டிக்கொண்டு அழுதவளோ.



"எப்போ பாரு அப்பா... அப்பா!... என்னே உருகிறா.



அவளுக்கு அம்மா என்ற ஒருத்தி இனி தேவையே இல்லாம போனேன்.



அந்த சிங்களவன் தான் வேணுமாம்.



இவளுக்காகத்தானேக்கா நான் உயிரோடே இருக்கிறேன்.



இவ மாத்திரம் என் வயித்தில அப்போ இல்லன்னா அப்போவே செத்துப்போயிருப்பேன்.



அவளையே தன் பக்கம் இவன் இழுத்திட்டான். இனி நான் எதுக்கு வாழணும்?...



அது தான் அவளை பார்த்துக்க அவ அப்பா இருக்காரே!. நான் எதுக்கு?" என்று வேகமாக எழுந்து அமர்ந்தவளையே பார்த்த துளசி.



"என்ன வதனி பேசுகிற? ஓரு பெண் குழந்தைக்கு அம்மான்னு பெயர் தான். இன்னும் சின்னப்பிள்ளை தனமாயே பேசிட்டு,



அவளை பெத்தவடி நீ!..



இப்படியா பேசுவ?... இத்தனை நாள் அப்பா இல்லாமல் ஏங்கி இருந்த குழந்தை இப்படி நடந்துக்கிறதில ஆச்சரியம் இல்லடி!..



அவளுக்கும் மத்த பிள்ளைங்க போல அப்பாகூட விளையாடணும், செல்ல சண்டை போடணும் என்ற ஏக்கமிருக்காதா?.. எல்லா பிள்ளைகளும் அப்பா, அப்பா என்கிறப்போ அவளுக்கும் அந்த ஏக்கமிருந்திருக்கும் வதனி, அதனால் தான் இப்படி நடந்துக்கிறா. கொஞ்ச நாள் போனதும் சாதாரணமாகிடும், பிறகு இரண்டு பேரையும் ஒரே போல நினைக்க ஆரம்பிச்சிடுவா,



அப்புறம் உன்கூடவும் பழையபடி அன்பா இருப்பா.



குழந்தையோட ஏக்கத்தை புரிஞ்சுக்கோ வதனி.



அஞ்சலியை விட நீ தான் சின்னபிள்ளை தனமா நடந்துக்கிற.



இப்படி நினைச்சு பாருடி!



இன்னைக்கு அப்பா பாசம் அவளுக்கு பெரிசா தெரியலாம். பெரியவளாகினா இதே போல அவன்கூட ஒட்ட முடியுமா?.. பெண் பிள்ளைகளுக்கு கட்டாயம் அம்மா வேணும் வதனி.



எல்லாத்தையும் அப்பாக்கிட்ட பொண்ணுங்களால சொல்ல முடியுது.



அப்பா பாசத்தை விட, அம்மா ஆதரவு நிச்சயம் வேண்டும். பாசம் தடுமாற வைக்கும், கண்டிப்பு தான் தைரியத்தையும் நம்பிக்கையும் கொடுக்கும்.



சாவு , அது, இதுன்னு பைத்திய காரியாட்டம் உலறிட்டிருக்காம. எந்திருச்சு போயி வந்தவனை கவனி.



பாவம் அவ்வளவு தூரத்திலயிருந்து நேர இங்க தான் வந்திருக்கான். அசதியாக இருக்கும்,



உன் பொண்ணு வேற வந்தவனை பேசியே வதைச்சிட்டிருக்கா" என அவளை தேற்ற.



அவள் கூறிய அத்தனை அறிவுரைகளையும் கேட்டுவளுக்கு, துளசி கூறியதே சரியென தோன்றியது.
எழுந்து அமர்ந்தவள் கண்களை துடைத்து விட்டு "வாங்கக்கா.. சூடாக டீ போட்டு தரேன்." என்றவாறு வெளியே சென்றவளை பார்த்தவளுக்கு பாவமாகிப்போனது.



'இந்த வயதிலேயே இன்னும் எத்தனை துன்பங்களை அனுபவிக்க போகிறாளோ?... ஐந்து வயது பிள்ளைக்கு தாயாகும் வயதா இது?...



கல்லூரியில் சிட்டுக்களாக பறந்து திரியும் வயதிலிருந்து காெண்டு குடும்பத்தலைவி ,சமையல் என்று எத்தனை சுமைகள்?.
இனியாவது இவள் வாழ்வு நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தவள், சுவற்றில் மாட்டியிருந்த பிள்ளையார் படத்தை பார்த்து பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு, தானும் எழுந்து வெளியே வந்தாள்.



சூரிய எதிர் இருக்கையில் சென்று அமர்ந்தவள் அவனது வேலை விடையங்கள், ஆஸ்திரேலியா நிலவரங்களை சுவாரசியமாக பேசிக்கொண்டிருக்க,



கிச்சன் இருந்து வெளிவந்த வதனி,



'இனி வீடு ஒரே சிங்கள மயமாத்தான் இருக்க போகுது.' என்று நினைத்தவாறு பொதுவான இடத்திலே இரண்டு டீ கப்புகளை கொண்ட தட்டை வைத்தவள் ,



"எடுத்துக்கங்க அக்கா." என்று கூறியவாறு சிறிது தள்ளி நின்று கொள்ள,.



அவளை நிமிர்ந்து பார்த்த துளசி,



சிறு சிரிப்புடனே ஒரு கப்பை சூரியவின் கைகளில் கொடுத்தவள், மற்றையதை தான் எடுத்துக்கொள்ள.



"எனக்கும்மா" என்று ஓடி வந்து வதனி காலை கட்டிக்கொண்டு மகளிடம்,



"குட்டிம்மா சாப்பிடவேணும் . டீ குடிச்சா வயிறு ரொம்பிடும், பின்நேரம் அம்மாவும் குட்டியம்மாவும் குடிச்சிக்கலாம்." என்று அவள் உயரத்திற்கு கீழே மட்டியிட்டு அமர்ந்து எடுத்துக்கூற,



சின்னவளோ, "ஆ... எனக்கு இப்ப வேணும்." என்று தலை சரிந்து அடம்பிடித்தாள்.



வதனிக்கு அஞ்சலியின் இன்றைய அடமானது புதிதாக இருந்தது.



எதிரே இருந்த சூரியவை பார்த்து முறைத்தவள்,



'இவனோட செல்லம் தான் இதுக்கெல்லாம் காரணம்' என்பதைப்போல் துளசியையும் ஒரு பார்வை பார்த்து விட்டு கிச்சனுக்குள் சென்று சிறு டீ கப்போடு வந்தவள் அங்கு நடந்துகொண்டிருந்த காட்சியை கண்டு அதே இடத்தில் சமைந்துவிட்டாள்.



ஆம் அவன் தன் மடியின் மேல் அஞ்சலியை இருத்தி, தான் குடித்த டீயினை தான் ஒரு வாய், குழந்தை மறு வாயென மாறி மாறி பருகுவதை கண்ட வதனிக்குத்தான் சுள் என்ற கோபம் எகுறியது.



அதை யாரிடமும் காட்ட முடியாமல் கையில் இருந்த சில்வர் பாத்திரத்தை டீயுடன் சேர்த்து டமார் என்று கீழே போட்டவள் சத்தத்தில் இருவரும் திரும்பி கேள்வியாய் நோக்க,



"கை தவறிடிச்சுக்கா" என சமாளித்து, கீழே விழுந்த பாத்திரத்தை எடு்துக்கொண்டே அந்த இடத்தை விட்டகன்றாள்.



தன்னை முறைத்தவாறு செல்லும் தன் மனைவியையே பார்த்த சூரிய துளசியின் புறம் திரும்பி.



"என்ன?" என்பதாய் புரிவம் உயர்த்தி கேட்க.



அவளும் தனக்குத்தெரியாது என்பதாக கீழ் உதட்டை பிதுக்கி தோள்களை குழுக்கியவள் அடுத்த கட்டப்பேச்சிற்கு தயாராகினர்.



என்னவள் மூச்சினில் தான்



அத்தனையும் அனல் காற்று.



இத்தனை நாள் ஏங்கி நின்றேன்



அவள் சுவாச வரங்கேட்டு.



கையிரண்டில் அள்ளி நிதம்



முத்தக் கவி படைக்க துடிக்கின்றேன்.



கள்ளியவள் விழி விரித்து




விலத்தி வைத்து ரசிக்கிறாள்.







ஔிரும்........
 
Top