• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

03.இராவண தேசத்தின் வெண்ணிலா...

fajeeha mumthaj

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 14, 2023
Messages
80
இரவின் மகிமையில் நிலவுகள் ஊர்வலம் செல்ல நீ நடந்தா என்ன? போனா என்ன? என்பது போல் ரசிக்க தோன்றும் முழுமதியை கண்டுக்கொள்ளாமல் மொட்டை மாடியில் அமர்ந்து லேப்டாப்யில் தீவிரமாக வேலைப் பார்த்து கொண்டிருந்தான் ஈஸ்வர்...


"மாப்பிள்ள அக்கா சாப்பிட வரச்சொல்லி விட்டுச்சுடா..." என மூச்சு வாங்க வந்த கருப்பனை நிமிர்ந்து பாராமலே உணர்வுகளை துடைத்தெறிந்த முகத்துடன் வேலையை தொடர்ந்தான் அவனை அப்படி பார்த்ததும் நாம பார்த்ததை சொல்வோமா? என ஒத்திகை பார்த்து கொண்டிருந்தான் கருப்பன்....




"என்ன விஷயம்?..." என்றவனை சடாரென்று திரும்பி பார்த்து "ஏன்டா மாப்பிள்ள அந்த பொட்டியே தானே தட்டிக்கிட்டு இருந்த இதுலே எப்படா என்ன கவனிச்ச..." ஆச்சரியம் தாங்காமல் கேட்டு விட்டான் கருப்பன்...


"அந்த திறமை இருக்கிறதனாலே தானே மாம்ஸ் ஊர்யே வழி நடத்திட்டு இருக்காரு.... எங்கண்ணன்" எற நிமிர்வாக சொன்னபடி
குமரனும் அங்கு வர...



"உனக்கு என்ன?..." என்பது போல் அவன் வருகைக்கான காரணத்தை அறிந்து கொள்ள ஒற்றை புருவம்‌ உயர்த்தி கேள்வியாக அவன் பார்க்க "அம்மா... என இழுத்தவன் நீங்க சாப்பிட்டா தான் அவங்க தூங்கு வாங்க வந்து சாப்பிடுங்கண்ணா..." என்றவனின் பேச்சில் வேலை செய்து கொண்டிருந்த விரல்கள் நிற்க கண்களை இறுக மூடி கருப்பனை பார்க்க அதில் என்ன தெரிந்ததோ "குமரா நீ போய் அக்காகிட்ட சொல்லு நான் பார்த்துகிடுதேன்னு..." என அவனை அனுப்பி வைக்க அவனும் கீழே வந்தவன் அங்கு மாடிபடிகளையே தவிப்பாக பார்த்து கொண்டிருந்த தாய் பூரணியிடம் வந்தவன்.


"ம்மா... மாமா‌ பார்த்திக்கிடுதாம் நீங்க‌ போய் தூங்குங்க அண்ணா வேலையா இருக்கு‌ முடிஞ்சதும் வந்து சாப்பிடும்..." என்றதும் சரி... என எழுந்து அறைக்குள் சென்று விடபோகும் அவரைப் பார்த்தவன் "அம்மாவும் பையனும் பேசிக்க மாட்டாங்க ஆனா அவர் சாப்பிட்ட பிறகு தான் இவங்க தூங்குறதே இதை எங்கே போய் சொல்றது..." என புலம்பிய படி அவனும் அறைக்குள் புகுந்து கொள்ள இங்கு வேலையை முடித்து லேப்டாப்பை மூடி வைத்து எழுந்து நின்றவன் வீட்டை சுற்றி ஒரு‌ கண்ணை வைத்தபடி "மாமா எதையோ சொல்ல வரே அப்பறம் ஏன் தயங்குறே என்ன விஷயம்ன்னு சொல்லு..." என்றான் இயல்பாக....




"அது..... அந்த புள்ள வந்திருக்கு மாப்பிள்ளை...." என கூற கருப்பன் தயங்கி தயங்கி சொன்னதிலே யார் அந்த பெண் என அறிந்து கொண்டவனின் கண்கள் ரெண்டும் கோவத்தில் சிவக்க நரம்புகள் புடைத்து எழ நின்றிருந்தவனை கவனிக்காமல் அவன் பாட்டிற்கு பேசிக் கொண்டிருந்தான்....



"சின்ன பொண்ணா இருந்தவே இப்ப ரொம்ப மாறிட்டா தெரியுமா? இனிமே இங்க தான் இருக்க போகுதுன்னு நினைக்கிறேன் உனக்கு நான் சொல்ல வேண்டியவன் இல்லை ஆனாலும் நீ பழிவாங்குறேன்னு ஏதும் பண்ணிடாதே சரியா..." என்றவனிடம் நிதானமாக திரும்பி "அவே எடத்துலே இருக்கும் வரைக்கும் பிரச்சினை இல்லை மாமா என் வழியிலே வந்தா ரொம்ப தப்பாகிடும்..." என சிரித்தவனின்‌ கண்களில் அப்படியொரு குரூரமான ஓளியோன்று வந்து மறைந்தது....



அவனின் பேச்சில் அவனை திரும்பி பார்த்தவன் "மாப்பிள்ள..." என பயத்தோடு ஏதோ‌ சொல்ல வர கை நீட்டி தடுத்தவன்‌ "அவே விஷயத்திலே யாரும் குறுக்க வரது எனக்கு பிடிக்காது இத்தோட விடு..." என நகர்ந்தவனிடம் "சொல்லிருக்க கூடாதோ..." என தோன்றியது தற்போது‌‌.....



டைனிங் டேபிள்க்கு வந்தமர்ந்ததும் பின்னால் வந்த கருப்பன் அதை கண்டு அவனுக்கு பரிமாற அமைதியாக சாப்பிட்டான் அதை கதவருகில் நின்று பார்த்த பூரணி அதன் பிறகு தான் உறங்கினார்‌....


"இவளோ பாசத்தையும் வெச்சிட்டு வீம்புக்கு உக்கார்ந்துகிட்டு இருக்கிறவே வந்து பேசினா என்ன‌? எல்லாம் உன்ற அப்பனை சொல்லனும் என்ற அக்காவை இப்படி ஆக்கியதே உன்ற அப்பன் தான்டா‌.." என நொந்து கொள்ள அதே சமயம் பாத்திரம் ஒன்று கீழே விழும் சத்தம் கேட்க கண்களை இறுக மூடி நிதானித்தவன் "கிழவிக்கு அது புள்ளயே பத்தி பேசினா போதுமே பார்த்தியா தூக்கத்துல கூட என்ன அழும்பு செய்துன்னு போயும் போயும் நானும் இந்த குடும்பத்திலே வாக்குப்பட்டு வந்தேன் பாரு..." என புலம்பிய படி திரும்ப அங்கு கண்ணை கசக்கி கொண்டு நின்று கொண்டிருந்தாள் காயத்திரி அவன் மனையாட்டி....


"அம்புட்டு கஷ்டம்னா வேற ஒருத்தியை பார்த்திட்டு போக வேண்டியது தானே என்னை எதுக்குயா கட்டிக்கிட்டு அழுற..." என குழந்தை மனதுக்காரி முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள "அய்யோ..." ‌என மனதோடு நொந்து கொண்டவன் அவளை சமாதானப்படுத்த போக இவர்களின் பேச்சு தொடங்கும் முன்பே சாப்பிட்டு முடிந்து அறைக்குள் சென்றுவிட்டான் லிங்கேஸ்வரன்....


கட்டிலில் வந்து படுத்து கிடந்தவனுக்கு‌ அவளை நினைக்க நினைக்க ஆத்திரம் தலைக்கேறியது "என்‌ கண்ணுலே பட்டு தொலைஞ்சிடாதேடி‌..." என்றவன் மனதோடு வன்மம் கொள்ள அதற்கு சம்மந்தப்பட்டவளோ நன்றாக இழுத்துபோர்த்தி தூங்கிகொண்டிருந்தாள் அவள்‌ மறந்து‌ விட்டால் போல ஆனால் அவனால் மறக்ககூடியதா அவனின் சுயமரியாதையில் அல்லவா கை
வைத்து விட்டாள்...



ராவணபுரம் வழக்கம் போல இயங்கி கொண்டிருக்க காலையில் எழுந்து‌ தோட்டத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர் அண்ணனும்‌ தம்பியும்‌ அவர்கள் இருவரையும்‌ பார்த்தப்படி ஷேரில் அமர்ந்திருந்தார் பாண்டி வேலைக்கார பெண் ஒருத்தி காஃபி கொண்டு வந்து கொடுக்க மூவரும் குடித்து கொண்டிருந்த நேரம் கண்கள் ரெண்டு‌ சிவந்து தலை முடிகள் களைந்து கன்னம் ஒரு பக்கம் தடித்து சிவந்தப்படி வெளியே வந்தான் கருப்பன்‌...



பாண்டியின் அருகே வந்தமர்ந்த பாட்டி அங்கயற்கண்ணி தன்‌ மூக்கு கண்ணாடியை சரியாக அணிந்து கொண்டு "ஏன்டா கிறுக்கு பயலே என்னலே கோலம் இது வயசு பசங்க இருக்கிற எடத்துலே இப்பிடி தான் வருவியாக்கும் லிங்கேஸ்வரா... இவன்‌ மண்டையே பொலந்து விடுயா..." என அவர் கோபத்தில் கத்த.....


"ஏய் இந்தா‌ கிழவி ஓவரா கற்பனை‌ பண்ணிக்காதே புள்ளையே பக்குவமா வளர்க்க தெரியாம அடம்பிடிக்கிற குழந்தையாட்டம் வளர்த்து போதாதுன்னு என் தலையிலே கட்டி வெச்சி இதுக்கு‌ நீ இந்த பேச்சு பேசுற பார்த்தியா? அதான் என் மனசு ஆற மாட்டீங்கிது‌...." என ஹஸ்கி வாய்ஸில் பேசி ரத்த கண்ணீர் வடித்த கருப்பனிடம்...



"அதுக்கு‌ ஏ மாமா இப்பிடி பேசுறவே அத்தை எதையாவது தூக்கி போட்டு அடிச்சதுலே தொண்டையும் போச்சா..." என படு சீரியசாக கேட்டவனை முறைப்பாக பார்த்தவன்‌ "அடே நீ வேற இதுவும் அவளோட காதுலே‌ விழுந்தா மல்லுக்கு‌ நிப்பாடா அதான் என்ற கஷ்டம் எவனுக்கு‌ விளங்க போவுது...." என வீட்டின் பின்பக்கம் உள்ள பாத்ரூமிற்குள் தன்னை சுத்தப்படுத்த சென்று விட மற்றவர்கள் சிரித்து கொண்டனர் இப்பிடி பேசுபவன் மனைவிக்காக உயிர்யை கொடுத்து விடுவான் பாசக்காரன்...

இவர்களின்‌ பேச்சில் எல்லாம் கலந்து கொள்ளும் ரகமில்லை லிங்கேஸ்வரன் எப்போதும் இறுகிய முகத்துடன் தான் இருப்பான் வியர்வையில் நனைந்திருந்த உடலை குளிர் நீரில் நனைக்க அவனுடைய முறுக்கேறிய தேகத்தில் நீர்த்துளிகள் பட்டு தெறித்து விளையாடியது....


குளித்து முடித்து வந்தவனுக்காக காத்திருந்தது அயர்ன் பண்ணி வைத்திருந்த வெள்ளை வேட்டியும் அடர்நீலநிற சட்டையும் எடுத்து அணிந்து கொண்டவனுக்கு அது எடுப்பாக பொருந்திக் கொள்ள அவனைப் போல் அடங்காமல் அலைபாய்ந்து கொண்டிருந்த சிகையை கோதிக் கொண்டவன் அடர்ந்த தாடியை நீவி மீசையை முறுக்கி விட்ட அந்த வீரனை கண்டு மங்கையர் கூட்டம் விழுந்தால் கூட ஆச்சரியம் இல்லை அப்படியொரு கம்பீரம் அவனிடம் ஷேர்ட் கையை மடித்து விட்டவன் கீழிறங்கி வர சாப்பாடு எல்லாம் எடுத்து வைத்து கொண்டிருந்த பூரணி அவனை ஓரக்கண்ணால் பார்த்து விட்டு தன் வேலையில் கவனமாக அது அவன் கண்களில் தப்பாமல் பட்டது சாப்பிட உட்கார்ந்தவனுக்கு அவரே அனைத்தையும் எடுத்து வைத்தார் இது வழக்கமான ஒன்று என்பதால் மற்றவர்கள் தங்கள் வேலையை பார்த்தனர்.



"குமரா தென்னந்தோப்புக்கு ஆளுங்க வருவாங்க தேங்காய் எல்லாம் இன்னைக்கே ஏத்திடு..."

"மாமா... நீ மில்லே வேலையை பார்த்துக்கே அப்பறம் தாத்தா உரக்கடை சண்முகம் வருவான் கடையோட பத்திரம் எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்திட்டு பணத்தை குடுங்க..." என்றவன் சாப்பிட்டு முடித்து கையை கழுவிக் கொண்டு எழ பூரணி தவிப்பாக பார்க்க அவர் தவிப்பை கண்டு பாண்டியன் தான் "ஏன் ராஷா எங்கயாச்சும் போறீயா?..." என்றவரிடம் ஆம்... என்பது போல் சிறு தலையசைப்பை கொடுத்து விட்டு "ரங்கா வண்டியை எடு..." என குரல் கொடுத்தபடி சென்று விட வண்டி அந்த வீட்டின் தெருமுனையை தாண்டவில்லை அந்த ஊர் பெரியவர் ஒருவர் அழைத்திருந்தார் இவனுக்கு விஷயத்தை கேட்டதும் எதுவும் பேசாமல் அழைப்பை துண்டித்தவன் "ரங்கா.... பஞ்சாயத்து நடக்குற எடத்துக்கு போ..." என கட்டளையிட அவன் கட்டளைப்படி அடுத்த நொடி புழுதியை கிளப்பிக் கொண்டு வந்து நின்றது அவன் வண்டி அதில் இருந்து இறங்கியவனை‌ அடி தடியில் இருந்த கூட்டம் ஸ்விட்ச் போட்டது போல் ஆஃப் ஆகி விட அனைவரையும் சுற்றி ஒரு பார்வை பார்த்தப்படி வந்தவனை பெரியவர்கள் மரியாதை நிமித்தமாக வணங்க அதை தலையசைத்து ஏற்று கொண்டவன் ஒரு பெரியவரை பார்க்க அவரும் நடந்ததை சொல்ல தொடங்கினார்.


தொடரும்....






AGNmyxYNrtepqnIUgKPrbOm_f7ObND8_6PR93DRzhiLF=s40-p
ReplyForward
 
Top