• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

05. இதயம் பகிர்ந்திட வா

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
குழந்தைகள் சூழ்ந்து கொண்டதில், இருந்த அத்தனை கோபமும் எங்கே போனதென்று தெரியாது காணாமல் போக..


"ஏய்...! கைல கேக் இருக்கு.. தட்டி விட்டுடாதிங்க..." என்று அவர்கள் சந்தோஷத்தை கண்டதும் அவளுமே சேர்ந்து குதூகலிக்கத்தான் செய்தாள்.
அவளது கண்களில் இன்றைய நாளின் நாயகி விழாது போக..


"இருங்க இருங்க... எங்க நம்ம பர்த்டே பேபிய காணல.?" என்றாள்.


"யாரு... வினோதாவா..? அவ பின்பக்க தோட்டத்தில முகத்தை ஊர்ன்னு வைச்சிட்டு இருக்காக்கா.."


"ஏன்...? அவளுக்கு என்னாச்சு...?" என அவள் காரணம் புரியாது வினவ.


"ஏனா...? நீங்க தானேக்கா காலையில மேம்க்கு போன் போட்டு... யாரும் அவளை விஸ் பண்ணாதிங்க... அவ பர்த்டேய மறந்தது போலவே இருந்துக்கங்கன்னு சொன்னீங்க. உங்க பேச்சை கேட்டு நாங்க யாருமே விஸ் பண்ணல.
அதனால யாரும் தன்னை விஸ் பண்ணலன்னு, அவளுக்கு கோபம். அதான் தனிய போய் உக்காந்திருக்கா.." என்றார் ஒருத்தி.


"ஓ....!! அது தான் கோபமா..? சரி சரி இந்தாங்க.. முதல்ல இதில இருக்கிற பலூன்ஸ் எல்லாம் ஊதுங்க.


இதெல்லாம் அங்கேயே எடுத்துட்டு போயி.. பர்த்டேய கொண்டாடிடுவோம்.." என்று,
கையிலிருந்த பையினை அவர்களிடம் கொடுத்தாள்.


ஆளுக்கொரு பாலுன்களை எடுத்து ஊத ஆரம்பித்தவர்கள், பத்தே நிமிசத்தில் ஊதி முடித்து விட, அது சின்னதான நீளமான குழாயில் குற்றிக்கட்டிக்கொண்டவள்.


"குழலி உன்கூட இன்னொரு பாப்பாவையும் கூட்டிட்டு போய்.. குட்டி மேசையா ஒன்னு தூக்கிட்டு வா!


நிஷாக்குட்டி நீ போயி.. வினோதா கண்ணை பொத்திக்கோ... ஆன்ட்டி இதெல்லாம் எடுத்துட்டு வந்துடுறேன்." என ஆளுக்கொரு வேலையினை ஏவியவள், நிஷா ஓடிச்செல்ல, அவள் பின்னே கொண்டுவந்த பொருட்களோடு வினோதா இருந்த தோட்டத்திற்குள் நுழைந்தனர்.

வினோதா முதுகு காட்டி இருந்ததனால் நிஷாவுக்கு அவள் கண்களை பொத்துவது அவ்வளவு கடினமாக இருக்கவில்லை.


"யாரு...? முதல்ல என்னை விடுங்க.." முடிந்தவரை உதறித்தான் பார்த்தாள் வினோதா. சின்னவளின் பிடி உடும்பை விட அழுத்தமாக இருந்தது. ஐந்தே நிமிடத்தில் எல்லாம் ஏற்பாடாகி விட,


"அக்கா எழுந்து வாக்கா..!" என்ற நிஷாவின் குரல் அப்போது தான் புரிந்தது.


"நான் எங்கேயும் வரல.. நீ கையை எடுத்துட்டு போ.." என அப்போதும் கோபமாக வந்தது அவள் வார்த்தை.


"வராம நான் போக மாட்டேன்." என அவளும் கூற..
அதில் கோபம் உண்டாக. சட்டென எழுந்து கொண்டவள் உயரத்திற்கு நிஷாவின் உயரம் இல்லை என்பதால், அவளது கண்கள் விடுபட்டது.


சின்னவளை ஏசுவதற்காக திரும்பியவள் அங்கு அலங்கரிப்பட்டிருப்பதையும், சின்னவர்களுடன் பிரியா நிற்பதையும் கண்டவள் கண்கள் குளம் கட்டவே செய்யது.
வார்த்தையற்று பொம்மையாக நின்றது ஒரு சில வினாடிகளே.


"அக்கா..." அன அழைத்தவாறு ஓடிச்சென்று அவள் வயிற்றை கட்டிக்கொண்டவள் விம்ம ஆரம்பித்து விட்டாள்.
அவள் உயரத்திற்கு தானும் குனிந்து.


"பர்த்டே பேபி இப்போ ஏன் அழுவுது?" என அவள் கண்ணீரை துடைத்து விட்டவாறு கேட்டாள்.



"என் பர்த்டேய எல்லாருமே மறந்துட்டாங்க அக்கா.. மேம் கூட என்ன விஸ் பண்ணல.." என விம்மியவளின் அந்த நிலையினை அப்போது தான் அவளால் உணர முடிந்தது.


"சரிடா... யாருக்கும் உன் பர்த்டே நினைவில்லன்னு இல்லம்மா.. அக்கா தான், உனக்கு சப்றைஸ் தரணும்ன்னு யாரும் விஸ் பண்ணாதிங்க.. நேர்ல வந்து வினோ பர்த்டேவ அசத்திடுவோம்ன்னு சொன்னேன். ஸ்கூல் போயிட்டு வரதுக்கு ரொம்ப லேட் ஆகிடிச்சு." என வருத்தம் தெருவிக்க.
அவளது விழிகளை ஒரு நிமிடம் உற்று நோக்கியவள்.

"நிஜமாவா....?" என்றாள் உதட்டில் மலர்ந்த சிறு புன்னகையோடு.
ம்ம்.. என அவளும் வேகமாக தலையசைத்து.


"சீக்கிரம் வா! கேக்க வெட்டிடலாம்." என கை பிடித்து அழைத்தவளை சிறுவர்கள் சூழ்ந்து கொண்டு வாழ்த்து மழை பொழிய.. அவர்களுடன் கொண்டாட்டத்தில் இணைந்து கொண்டார் ஆசரமத்தின் நிர்வாகி.


அன்றைய நாள் இவர்களது சந்தோஷ தருனத்திலேயே முடிவுற்றது.
நாளைய நிலை தெரியாது, இரவு எட்டு மணியளவிலேயே வீடு திரும்பினாள்.


புது விடியலை வரவேற்கும் முகமாக தன்னை கரைத்து பன்னீர் தெளித்து மேகமானது விலகிக்கொள்ள.. புற்களின் நுனியில் திரண்டிருந்த நீர் துளிகளை உற்சாக பானமாக அருந்தியவாறு, துயில் கலைந்தான் பல கோடி உயிர்களுக்கு தந்தையானவன்.


வழமைபோல் அல்லாது கொஞ்சம் அவசரமாகவே வேலைகளை முடித்து, தயாராகி பள்ளிக்கு வந்த பிரியாவின் முன் பதிவேட்டினை நீட்டிய முதன்மை ஆசிரியர்..

'பரவாயில்லையே மிஸ்.. சொன்னது போல வந்திட்டிங்க... அது சரி நீங்க தான் வாக்கு தவறாதவங்களாச்சே...." எப்போதும் போல் இயல்பான பேச்சில் ஆரம்பித்து, கேலியில் இறங்கியவரை நோக்கி முறைத்தவள் பார்வையில் ஏனோ கோபமில்லை..
மாறாக கண்கள் சுருங்கி உதடுகள் புன்னகைத்தது.
அதில் வாய்விட்டு சிரித்தவர்..


"சரி சரி...! நின்னு பேச நேரமில்ல மிஸ்.. சீக்கிரம் கிளாஸ்க்கு போயி... பிரேயர் ஆரம்பிக்குறத்துக்கு முன்னாடி பிள்ளைங்கள அலேட் பண்ணுங்க.


ஏன்னா கலக்டர் எப்பாே வருவாருன்னு சொல்ல முடியாது. சில வேளை பிரேயர் டைமே வந்தாலும் வரலாம்... அது தெரியாம.. இதுங்க டிசுப்பிளின் இல்லாம நடந்துக்க போறாங்க." என்றார்.


"ஏன் இன்னைக்கு மட்டும் இப்படி பதட்டப்படுறீங்க மிஸ்..? வருஷத்தில ஒரு முறை கலக்டர் வந்திட்டு தானே இருக்காரு." என்றாள்.


"வருஷத்தில ஒரு முறை வரது வேற மிஸ்..
இந்த வாட்டி வரது, நம்ம புதுசா ஒரு மண்டபம் கட்டுறதுக்கு அடித்தளம் போட்டிருக்கோம்ல.. அது ஸ்ராங்க இல்லன்னும்... கட்டுமான பணியில ஊழல் நடக்குறதாயும்.. சீக்கிரம் இந்த கட்டடம் இடிஞ்சு விழ சாத்தியம் இருக்கிறதாவும், யாரோ கம்ளைண்ட் குடுத்திருக்காங்களாம். அதான் அதை ஆராய்ச்சி பண்ண வராங்க.

அது மட்டும் இல்ல மிஸ்... இந்த கலக்டர் யாரு எப்படி பட்டவனுன்னே கூட தெரியல.." என்றார் சோகமாக.


"ஏன்..? எப்பவும் வர கலக்டர் தானே மிஸ் வர போறாரு.. அப்புறம் என்ன..?"


"இல்லை மிஸ்... அவரு ஏதோ தப்பு பண்ணிருக்காரு போல... அதனால அவரை இடம் மாத்திட்டாங்களாம்..
அதிகாரிங்க அப்படி இல்லன்னா தான் அதிசயம்.


இப்போ வேற ஒருதர தான், நம்ம டிஸ்ரிக் கலக்டரா நியமிச்சிருக்காங்க... அதான் பயமா இருக்கு... சரி சரி நீங்க கிளாஸ்க்கு போங்க.. நானும் என்னோட வேலைய கவனிக்கிறேன்." என அவளை விரட்டிவிட்டு, ஒரு பைலுடன் அமர்ந்து விட்டார்.

பதினொரு மணியிருக்கும். வழமையை விட இன்று ஏனோ பாடசாலையில் ஆசிரியர்களின் குரலை தவிர, வேறெந்த குரலுமே கேட்கவில்லை.

அத்தனை அமைதி. இது பாடசாலையா தியானக் கூடமா என சந்தேகம் கொள்ளச் செய்தது.

ஒரு மாணவியை அழைத்து ஆறாவது வாய்ப்பாட்டினை கரும்பலகையில் எழுதக் கூறிவிட்டு, அதை சரிபார்த்து கொண்டிருவந்தவள்..


"தப்பு பூரணி... ஆறேழு எத்தனை..?" என்றாள்.
அவளோ முழித்துக்கொண்டிருக்க..


"பசங்களா ஆறேழு எத்தனை டா....?" என்றாள் எல்லோரிடமும்.
அனைவரும் சேர்ந்து... "நாட்பத்தி இரண்டு" என்றனர்.
அவள் கையிலிருந்த வெண் கட்டியினை வாங்கிக்கொண்டவள்.


"நாளைக்கு பன்னிரண்டு வரை மனப்பாடம் பண்ணிட்டு வரணும். போய் உக்காரு..." என அவளை அனுப்பிவிட்டு, ஆண்கள் புறமிருந்த ஒரு மாணவனை அழைத்த நேரம்.


வெளியே இருந்து "நாங்க உள்ள வரலாமா..?" என்ற குரல் கேட்டு திரும்பியவள் விழிகள் அதிர்ச்சியின் உச்சமாய் அகல விரிந்தது.


ஆம் வெளியே கேட்ட குரல் வேறு யாருடையதும் இல்லை. அந்த பள்ளியின் துணை அதிபரான தெய்வேஸ்வரி உடையது தான்.


அவருடன் கூடி வந்த அவனையும் அவனுக்கு பாதூகாப்பளிக்க வந்த காக்கி உடை தரித்த உயர் அதிகாரியையும், கூடவே ஓர் கருப்பு அங்கி அணிந்திருந்த டவாளி.. இன்னும் ஒருவனையும் கண்டவளுக்கு நிதர்சனம் எதுவென புரிந்தது.


சட்டென அவன் மேலிருந்து தன் விழிகளை தளர்த்தி, தெய்வானையிடம் ஓடவிட்டவள்.


"வா.... வாங்க மிஸ்.." என்று தயங்கியவாறு வந்து அழைத்தாள்.


"சார்! இவங்க பேரு பிரியா... நல்ல திறமையானவங்க.. பிள்ளைங்களை அவங்க வழியிலயே போயி பாடம் சொல்லி தருவாங்க. இது வரை இவங்கள பத்தி எந்த கம்ளைண்டும் வரல" என்று அவளை பெருமையாகக்கூறி , அவனிடம் அறிமுகம் செய்து வைத்தவர்,


"பிரியா... இவரு தான் நமக்கு புதுசா வந்திருக்கிற கலக்டர்.' என்றார்.


தலமை பொறுப்பில் இருப்பவர் அறிமுகம் செய்து வைக்கும் போது, அலட்சியம் செய்ய முடியவில்லை. அதே சமயம் அவனை வரவேற்கவும் நாவு எழவில்லை.
வெளியே சொல்ல முடியாத பயமும் ஒன்று உள்ளே சூழ்ந்து கொண்டது.


தன்மேல் இத்தனை நன் மதிப்பு வைத்திருப்பவரிடம், இவன் தன்னைப்பற்றி ஏதாவது அவ தூறாக கூறிவிட்டால், அந்த மதிப்பு காணாமல் போவதுடன். வேலையுமல்லவா போய்விடும்.
அவர் என்ன இவளை வேலையை விட்டு போ என்பதற்கு..? இவனுக்கே அந்த அதிகாரம் இருக்கின்றதே..
அவள் செய்யும் வேலையில் எப்போதுமே குறையே இருக்காது தான். ஆனால் அனுப்புவது என்று முடிவு செய்து விட்டால் அதற்கான காரணம் தேடுவது என்பது அவ்வளவு கடினம் இல்லையே..!


நடுக்கத்தை குறைப்பதற்காய் கையினை பிசைந்து நின்றவள் கையினை பற்றிக்கொண்ட தெய்வேஸ்வரி.


"என்ன பிரியா...! அமைதியா நிக்கிறீங்க.. சாருக்கு வணக்கம் சொல்லுங்க." என்றதும் தான்.
தன் தவறை உணர்ந்தவளாய்..


"சா... சாரி.. நான் பசங்களுக்கு பா.. பாடம் சொ.. சொல்லித்தர மைண்லயே இருந்திட்டேன்." என வராத புன்னகையினை கடினப்பட்டு வர வைத்தவள்.
கைகளை குவித்து வணக்கம் என்றாள்.


அவளது தடுமாற்றம் அவனது உதட்டில் மர்மமான புன்னகையினை தோற்று விக்க. அதை தடித்த உதட்டினுள் மறைத்து கொண்டவன், அவள் வணக்கமதை கண்டு கொள்ளாதவனாட்டம்.


"ஹலோ..." என அவளை நோக்கி கையினை நீட்டினான்.

இதை அவள் எதிர் பார்க்கவில்லை. வணக்கம் வைத்து அனுப்பி விடலாம் என்று பார்த்தால், எப்போதும் போல், அவள் செயலுக்கு எதிராக சிந்திக்கிறான்.


குவித்த கைகளை தளர்த்திக் கொண்டவளுக்கு, அவன் நீட்டிய கையிற்குள் தன் கையினை திணிப்பதில் சற்றும் உடன் பாடில்லை.


ஆனால் மீண்டும் ஒரு முறை தெய்வேஸ்வரி சொன்னதன் பின்னர் செய்தால், அது அவரை அவமதிப்பது போலாகும் என நினைத்தவளாய்.


"ஹாய் சார்!" என மீண்டும் அதே போலியாக புன்னகைத்தவளுக்கு பதிலாக, தானும் புன்னகைத்தவன்.


"அப்புறம் மிஸ்... பசங்கல்லாம் நல்லா படிக்கிறாங்களா...?" என இயல்பாக கேட்டவன், அவள் கையினை விடுவித்து விட்டு, அவளது வகுப்பறைக்குள் புகுந்து கொண்டவனை கண்டதும் மாணவர்கள் எழுந்து வணக்கம் வைத்தனர்.


"வணக்கம் வணக்கம்.... எல்லாரும் உக்காருங்க..." என்றவன்.
எல்லோரும் வாசலிலேயே நிற்பதை கண்டு,


"என்ன மிஸ்! அங்கேயே நின்னுட்டிங்க... உள்ள வாங்க." என அழைத்தவனைப் பார்க்கும் போது, உண்மையில் ஆச்சரியமாகத்தான் இருந்தது தலமை ஆசிரியருக்கு.

இதுவரை எத்தனையோ வகுப்பறையினை தாண்டித்தான் வந்தான். ஆனால் இதுவரை எந்த வகுப்புக்குள்ளும் நுழையவில்லை.


எல்லா ஆசிரியர்களையும் இன்னார் என்று அறிமுகப்படுத்தும் படலாம் வாசலோடே முடிவடைய, அடுத்து அடுத்து என்று நகர்ந்தானே அன்றி.. எந்த வகுப்பினையும் ஆராயும் எண்ணம் அவனிடம் இருக்கவில்லை.

அவன் அழைத்ததும் அனைவரும் உள்ளே செல்ல எத்தணிக்க..


" நீங்க வெளியவே நில்லுங்க.." என அவனுடன் வந்த மூவரையும் வாசலில் நிறுத்தி விட்டு, இரு ஆசிரியர்களையும் உள்ளே அழைத்தான்.


ஏனோ பிரியாவின் நடுக்கம் கூடிப்போனது. அவனை அவளுக்கு பிடிக்காது.. அவனுக்குமே தான்... அதை காரணம் காட்டி, அவளுக்கு எதிராக அவன் ஏதோ திட்டமிடுவது போலவே தோன்றியது.


"அப்புறம் ஸ்டுடண்ட்ஸ்.... என்ன படிச்சிட்டிருந்தீங்க.." என்றான்.


"கணக்கு சார்...!" என எல்லோரும் கோரஸாக கூற...
கரும்பலகையினை ஆராய்ந்தவன்,


"ஓ...! வாய்பாடா.... டீச்சர் நல்லா சொல்லித்தராங்களா...? இல்லன்னா டீச்சர மாத்திடுவோமா..?" என்றான் ஓரக்கண்ணால் பிரியாவை பார்த்தவாறு.


"இல்லை சார்..! மிஸ் நல்லாவே சொல்லி தராங்க சார்..! எங்களுக்கு இவங்க தான் வேணும்... வேற மிஸ் வேண்டாம்." என்றார்கள் மீண்டும் அதே கோரஸ் பாடி.


"பார்றா...!" என பற்கள் தெரிவதைப்போல் கேலியாக புன்னகைத்தவன்..


"அவ்ளோ நல்லவங்களாப்பா உங்க டீச்சர்..?" என்றான் குரலில் நக்கல் தெறிக்க.


"ரொம்ப நல்லவங்க சார்...! அவங்க பாடம் எடுத்தா மறக்காது சார்..!" என்க.


"ஓ...! சரி பசங்களா... நீங்க பாடத்தை கவனியுங்க.." என்றவன். "வாங்க மிஸ் மீதி வகுப்பை பார்க்கலாம்." என தெய்வேஸ்வரியை அழைத்துக்கொண்டு வெளியேறியவன்,


"ஒரு நிமிஷம்.." என்று அவர்களை அங்கேயே நிற்க வைத்து விட்,டு திரும்பி அவளிடம் வந்தவன்.


"பரவாயில்லையே.. எல்லாருமே உன்னை நல்ல விதமா சொல்லுறாங்க.. அப்புறம் ஏன் என்கிட்ட அந்த மாதிரி நடந்துக்கிற...?" என்றவன், அவளது பதிலையும் எதிர்பாராது விறு விறுவென வெளியேறி விட்டான்.
அதன் பிறகு அவளால் பாடம் எடுத்திட முடியுமா..?
வேண்டும் என்றே தன்னை சீண்டிவிட்டு செல்பவனை நினைக்கும் போது ஆத்திரமாக வந்தது.
 
Top