• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

05. காற்றோடு கலந்த விதையவள்

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
யாரிடமும் அளவு மீறி பேசாதவன் அவன்.

பிரச்சினை ஒன்று என்றால், அதை முன் கூட்டையே சத்தமில்லாமலே தீர்த்து விடுபவன்.

'இவ்வளவு நேரமாக ஒரு பெண்ணிடம் வீதி என்றும் பார்க்காமல், சரிக்கு சமமாக நின்று நானா வாதடினோம்.'

அவனது அன்னையை தவிர எந்த பெண்ணிடமும் இப்படி நடந்தறியாதவனுக்கு, இது புதிதாக இருந்தது.

அதுவும் அவள் கடைசியாக கூறிய வார்தைகள் அவனை அறியாமலே அவன் இதழ்களில் புன்னகையை வரவழைத்தது.



"ஆனால் அடுத்த தடவ மாட்டுவ தானே! அப்போ என்ன செய்யிறேன் பாரு?" என்றவாறு காரை ஓட்டினான்.



"என்னக்கா ஆச்சு? எதுக்கு அவரு அப்பிடி நடந்துகிட்டாரு?" என்றாள் மைனா.


நடந்தவற்றை மைனாவிடம் கூறினாள்.


"உங்களுக்கு ஒன்றும் ஆகேலயே!" என கேட்டவளது விழிகளோ அவள் உடலில் காயமேதாவது தெரிகிறதா என பேய்ந்தது.


"என்னக்கா இது? இப்பிடி சிவந்திருக்கு" என்க.


"எதுடி?" என்று மைனா காட்டிய இடத்தினை பார்த்தாள்,
அவன் பிடித்த இடம் கண்டிச் சிவந்திருப்பதை கண்டவள்,


"இதுவா? அந்த இரும்பன் பிடிச்ச இடம் மைனா." என்றாள் அலட்சியமாக.


"என்னக்கா...! இப்பிடியும் யாராச்சும் பிடிப்பாங்களா? லூசாக்கா அவன்? இதெல்லாம் தெரியாம நடக்கிற சம்பவம் தானே! இதுக்கு யாராச்சும் தகராறு பண்ணுவாங்களா?
நீங்க சாரி கேட்டும் அப்பிடி நடந்திருக்கிறான் எண்டா, பைத்தியமா இருக்கும் போலக்கா" என்று மைனா துஷாவிற்காக பரிந்து பேச,



"என்னிலயும் பிழை இருக்கு மைனா!
நானும் றோட்டை கடக்கிறதுக்கு முன்னம் பாத்திருக்காேனும், அத விட யோசிக்காம எங்க விழுந்திடுவனோ எண்டு, நூலை எடுக்கிறதுக்காக, நடு றோட்டு எண்டும் பாக்காம.... தப்பு என்மேலையும் இருக்குடி!" என்றாள்

"அதுக்காக இப்பிடியா? கைய பாருங்க... எப்பிடி சிவந்திருக்கு எண்டு"

"விடு மைனா! சில பேரோட இயல்பே மற்றவங்கள காயப்படுத்தி பாக்கிறது தான்." என்றாவள்,

"அந்த அரை மென்டலிட்ட இங்க நடந்ததை சொல்லிடாத. அது வேற, அட்வைஸ் பண்ணியே கொள்ளும்"என்றாள்.


"ம்ம் சரிக்கா." என்றதும் அவளை ஒரு மாதிரியாக பார்த்தவள்.


"அது என்ன அக்கா எண்டுற... உனக்கு என்ன வயசிருக்கும் என்னோட வயசு வருமா?"


"உங்க வயசு தெரியாது... ஆனா சாலினி அக்காவோட வயசு."


"அப்புறமென்ன? பேர சொல்லியே கூப்பிட்டுக்கோ! என்றதும் தான்,


"ஓகே டி துஷா!" என்றவளை சிரித்தவாறே ஏறிட்டவள்,


"அது சரி! நல்ல முன்னேற்றம் தான்." என்றவாறு வீடு வந்து சேர்ந்தனர் இருவரும்..



"என்ன வாய்க்கா தகறாறு எல்லாம் முடிஞ்சுதாே? யார் பக்கம் தீர்ப்பு வந்திச்சு?" என்றாள் சைலு அதிரடியாக.

"ஏய்..! அப்போ நடந்தது எல்லாம் பாத்துட்டு தான் இருந்தியா? அப்ப ஏன்டி அங்க வரேல."

"இல்ல மச்சி! அத விட இங்க பெரிய பஞ்சாயத்தே ஓடினது. அதை முடிச்சிட்டு வருவம் எண்டு தான் இருந்தன், அதுக்குள்ள அங்க முடிஞ்சிது." என்று தன் நிலையை கூறியவளை முறைத்தவள்,

"என்னவாம் உன் ஆளு? என்ன சொல்ருராரு?" என்றாள்.

"காலையில வீட்டுக்கு வந்ததால புரிஞ்சுகிட்டான். ஏதோ சமாளிச்சுட்டன் மச்சி.


ஆ..... சொல்ல மறந்துட்டன். வேலைக்கு கேட்டிருந்தியே, அதுவும் ஓகே ஆகிட்டுது. நீ எப்ப போக போற எண்டு மட்டும் சொல்லிட்டா எண்டா, நான் அவனிட்ட சொல்லிடுறன்."


"உண்மையா வா டி...? எங்க வேலையாம்?" என்றாள் துஷா ஆர்வமாக.


"வேற எங்க? ரவி வேலை செய்யிற சூப்பர் மார்க்கெட் தான்."

"அங்க பொறுப்பாக நின்ட பொண்ணு வெளியூர் போறதால வேலையால நின்டுடாங்களாம்.
அந்த இடத்துக்கு ஆள் தேடிக் கொண்டு இருந்திருக்கினம். நான் கேட்ட உடனம் ஓனர்கிட்ட பேசிட்டு சொல்லிட்டான்"

"அப்பிடியா..? நாளைக்கே என்டாலும் நான் போக தயார்டி."


"அப்போ ஓகே! இப்பவே கேட்டு சொல்லுறன்." என்று போனை எடுத்தவள், பத்து நிமிடம் கழித்து வந்தாள்.


"நாளைக்கு காலம வரசொன்னாரு மச்சி.! போனா நிலவரம் என்னென்டு பாக்கலாம்.

ஆனா எனக்குத்தான் பயமாய் இருக்கு. உன் வீட்டுக்கு மட்டும் தெரியோணும், நீ வேலைக்கு போக நான் தான் ஏற்பாடு செய்தன் எண்டு, அப்பா என்ன கொண்டுடுவாரே மச்சி." என்றாள் பயந்தவாறு.

"ஏய் லூசு! அதெல்லாம் தெரியாது. தெரிஞ்சாலும் எதுவும் சொல்ல மாட்டாரு.


இவ்வளவு காலந்தான், படிப்பு வீடு எண்டு பொண்ணு வீட்டுகுள்ள இருக்கிறது. இனியாவது உலகத்தை தெரிஞ்சு கொள்ளட்டும் எண்டு தானே இங்க அனுப்பி வைச்சதே. அதில இதுவும் ஒன்டு தான்" என்றாள் சாதரனமாக.


"நீ உலகத்தை செரிஞ்சிகிறியோ இல்லையோ! நல்லாவே கதைக்க பழகிட்டா...
அவங்க கூட பேசிட்டியா?" என்றாள்.


"எப்பிடி பேச முடியும்? அதான் போனை வர்ற அவசரத்தில வீட்டிலேயே வைச்சிட்டு வந்திட்டேனே?"


"ஏய் என்னடி சாதரணமா சொல்லுற! அப்ப அவங்க போன் பண்ணி பாத்திருப்பாங்களே! நீ எடுக்கேல எண்டதும் பயப்பிட போறாங்களே..!

சரி நம்பர சொல்லு... நான் காேல் பண்ணி தாரேன். நீ என்னோட தான் இருக்கிற எண்டு சொல்லிடு" என்க.

"அது தான் என் போனை வீட்டில விட்டுட்டு வந்திட்டனேடி! அதில தான் அவங்க நம்பர் இருக்கு. போய் எடுக்கவும் முடியாது. அவங்களுக்கு வாக்கு குடுத்துட்டு வந்திருக்கேன்.

இனி நான் ஊருக்கு வாறதா இருந்தா, சொந்தங்க கூட சேர்ந்த பிறகு தான் வருவேன் எண்டு." என்றவளிடம்.

"ஏதேதோ சொல்ற, ஆனா எனக்கென்னவோ எதுவும் சரியாய் படேல.... ஏதோ தப்பு செய்றியோ எண்டு தோன்டுது.


அது எப்பிடி அங்கிளும், ஆன்டியும் உன்னை தனியா விட்டுட்டு இருப்பினம்? பக்கத்தில இருக்கிற மலையக பக்கமே ட்டூர் விட மாட்டோம். அவளை பிரிஞ்சு ஒரு நாளும் நாங்கள் இருக்கேல எண்டு, அண்டைக்கு கண்ணால அருவிய திறந்து விட்டாங்களே!


அதுக்கு நான் கூட, அவளை கட்டி குடுக்கிற இடத்தில நீங்களும் இலவச இணைப்பாவே போக போறிங்களா? எண்டதுக்கு, என் ராஜ குமாரிய தேடிட்டு ஒருதன், எங்களோடயே இருகிறது போல வராமலா பேயிடுவான் எண்டு சொன்னவரா மச்சி, உன்னை தனியா அனுப்பினாரு?" என்றாள் சந்தேகமாக.

"இப்பல்லாம் அப்பிடி இல்லடி! என்னை விட்டு முன்னம் போனதே அவருதான்.


சரி அம்மாவாவது எனக்கு இருக்கா, அப்பிடி எண்டு சந்தோஷ பட்டேன் மச்சி!

அவங்களாலையும் அப்பாவ விட்டுட்டு இருக்க முடியேலயாம்.
ஆறு மாசம் என்னோட இருந்து பாத்தாங்க. அப்றம் புருஷன் தான் முக்கியம் எண்டு என்னை இங்க விட்டுட்டு போயிடா...


நானும் எதுவும் கேக்காமல், பாட்டி, தாத்தா எண்டதும் சந்தோஷத்தில வந்து இங்க அவதி படுறன்." என்றாள் சோகமே உருவாய்.

"நீ சொல்லுறதும் சரிதான். அவங்க ஒருத்தருகொருதர் விட்டு குடுக்க மாட்டாங்க.
நான் இருக்கேக்கயே வெக்கமே இல்லாம ஒட்டிடு இருப்பாங்க. அதே சமயம் உன்னையும் விட்டுட்டு இருக்க மாட்டாங்களே.!" என ஆச்சர்யம் கட்டியவளிடம்

"ஆமாடி! அவங்க லவ்பேட்ஸ் தான். ஒன்டு இறந்துட்டா மற்றதும் இருக்காது.
எங்க நான் கூடவே இருந்தா, அவங்க ரொமான்ஸ் கெட்டிடுமே! அதான் என்ன மட்டும் விட்டுட்டு போயிட்டினம்" என்றாள் துஷா எதையோ நினைத்தவாறு.



"ஏய்! அவங்களையே கலாய்ககிறியா? இரு ஊருக்கு போயி, போட்டு குடுக்கிறேன்." என்றாள்.

"சொல்லிக்கோ...... ஏய் ரொம்ப நேராம இங்கையே இருந்து பேசிட்டு இருக்கம், வா உள்ள போகலாம்." என பேச்சை மாற்றியவள், மைனா அமைதியாக இருப்பதை கண்டு,


."ஏய் சரவெடி! என்ன அமைதிய இருக்கிற? " என்றாள் துஷா.

"நீங்க ஏதோ சீரியஸ்ஸா பேசிக்காெண்டே இருகிறீங்க. நான் என்ன பேசுறது.? அதான் கேட்டுக் கொண்டிருக்கிறன்"

"அப்போ வா உள்ளே போலாம்."


"இல்லை...நான் தண்ணி பிடிக்க வந்தன். உங்க தகராற பாத்துட்டு, என்ன ஏதெண்டு கேக்கத் தான் வந்ததே. எனக்கு நேரமாகுது.. நான் போறன்." என்றவள் சென்று விட்டாள்.


"இவள் இப்பிடி தான். யாராவது கதை குடுதிட்டா காணும்.... அங்கேயே தங்கிடுவாள். பிறகு அம்மாட்ட வாங்கி கட்டுவாள்." என்றவள், துஷா ஏதோ சிந்தனையில் இருப்பதை கண்டு,


"நீ என்னத்த யோசிக்கிற?" என்றாள்.


"நாளைக்கு எனக்கு வேலை கிடைச்சிடும் தானே!"


" ஏய் இதுக்கா யோசனை? அதெல்லாம் உனக்கு சாதாரணம்.. உன் படிப்புக்கு, கேள்வி கேக்கிறவங்களை தூக்கி சாப்பிட்டுட மாட்டா! யோசிக்காம வா!"
என்றவாறு உள்ளே சென்றவர்கள் தங்கள் அன்றாட வேலையில் மூழ்கினர்.



பறவைகளின் பாடலோசையுடன் கைகளை உயர்த்தி, பெரிய கொட்டாவியுடன் எழுந்த சைலு, துஷாவை பார்க்க, அவள் அங்கு இல்லை.


'காலேலயே எங்க போனாளோ?' என்று நினைத்தபடி காலை கடன்களை முடித்து வெளியே வர,


"இப்பவாச்சும் எழும்பினியே! இந்தா...." என்று கையில் ஒரு பார்சலை நீட்டியவள், டீ மேசையில இருக்கு, குடி!" என்றவள் தயாராவதற்கான உடைகளை தானும் எடுத்தாள்.

"என்னடி இது பார்சல்.?" என்று அவள் தந்த பார்ஷலை காட்டி சைலு வினவ,

"தினமும் கடை சாப்பாடு உடம்புக்கு நல்லதில்ல. இனி நானே சமைச்சு தாரேன்." என்றவள் குளியலறை நுழைந்தாள்.


"ஓகே...! எனக்கும் ருசியா சாப்பிட்ட போலவும் ஆகுது. காசும் மிச்சம்" என்றவள்,

"நாளைக்கு நீ எழும்பேக்க என்னையும் எழுப்பு, நானும் உதவி செய்து தாரேன்." என்றவாறு தயாராகினாள்.


தயாராகி வெளியே வந்தனர் இருவரும்..

"ஏய் உன்ர ஆளுக்கு போன் போட்டு சொல்லிட்டியா? நான் ரெடியாகிட்டன் எண்டு."


"ஐயோ ராமா! எனக்கு மட்டும் ஏன்பா இப்பிடி பண்ற? எத்தனை தடவை தான்டி உனக்கு சொல்லுறது.. அவரிட்ட சொல்லிட்டன். உனக்காக வாசல்ல சூடத்தோட நிக்கிறார், ஆலாத்தி சுத்தி உன்னை கூட்டிட்டு போறதுக்கு" என்றாள் அலுத்தவாறு.

"கோவிக்காத மச்சி! புதுசா வேலைக்கு போறன்.... பதட்டமா இருக்கு. அதான்..." என்றாள்,

"நீ தானேடி போற? அதுக்கு என்னை ஏன் பதறடிக்கிற? சரி நான் இந்த வழியா தான் போகாேனும். நீ பஸ் வர்ற பக்கமாய் போய் நில்லு. நான் போயிட்டு வாறேன்டி! பாத்து போ!" என்றவள்,



"தப்பிச்சேன்டா!" என்று எதிர்திசை நடக்கலானாள்.

பஸ் வந்ததும் அதில் ஏறிய துஷா. சூப்பர் மார்க்கெட் முன் இறங்கினாள்.


அவள் வரவுக்காக வாசலையே பார்த்த படி நின்றிருந்த ரவிவர்மன் ,அவளை கண்டுவிட்டு,

"வாங்க துஷா! உங்கள தான் எதிர் பார்த்துக்கொண்டு இருந்தன்." உள்ளே அழைத்து சென்றவன்,


"இங்க மொத்தமா அஞ்சு தளம் இருக்கு துஷா. உங்கட பகுதி மூன்டாம் மாடி! அங்க பாடசாலை உபகரணம், வீட்டு அலங்கார பொருட்கள் இருக்கு.


இதுக்கு தான் நீங்க மேற் பார்வையாளராக இருக்க போறிங்க." என்று அவள் பார்க்க போகும் வேலையை பற்றி கூறியவன்,

"வாங்க காட்டுகிறன்." என்று மின் தூக்கியில் ஏறியவர்கள், மூன்றாம் தளத்தில் இறங்கி.

" இது தான் துஷா
இங்க பெருசா உங்களுக்கு வேலை இருக்காது.


ஆனா பொறுப்பாக இருக்காேணும்.
இந்த பாகுதில எட்டு பேர் வேலை செய்யினம். உங்களோட சேர்த்து ஒன்பது.


இவங்க எல்லாரையும் நிர்வாகம் பண்றது உங்கட பொறுப்பு.

அப்புறம் இங்க முடிஞ்சு போற பொருட்களோட தகவல, அப்பப்ப குறிச்சு வையுங்க..
ஏன்னா... வேலை முடிஞ்சு போகேக்க, அத கீழ் கவுண்டர்ல குடுத்துட்டு போகோணும்.


அப்போது தான் இல்லாத பொருட்களை, திரும்ப அதோட இடத்தில நிரப்ப முடியும்.
பிறகு வர்ற வாடிக்கையாளர கவருகின்ற விதமாக பேசோணும், அவங்களுக்கு விளக்கமில்லாததை விளங்குற விதமா எடுத்து சொல்லோணும்,


எல்லாத்தையும் விட முக்கியம், இங்க என்ன தப்பு நடந்தாலும் நீ தான் பொறுப்பு." என்றவன்,


"பகீரதன் சார் வேலை விஷயத்தில சரியான கண்டிப்பு..

சின்ன பிழை வந்தாலும் மன்னிக்க மாட்டார்.
அதால தான் இங்க வேலை செய்யிறவ, யாரும் இந்த பதவிக்கு ஆசை படேல.
அது தான் புதுசா ஆள் எடுக்க வேண்டி ஆச்சு.
பாத்து நடந்துக்கோ!" என்றவன்,


"வேறை ஏதாவது கேட்காேனுமே?"என்றான்.

"இல்லை..... அண்ணா" என்றவள், அவனை சங்கடமாகவே பார்த்து,

"அண்ணா எண்டு கூப்பிடலாம் தானே!" என்றாள்.

" இதில என்ன இருக்கு.? தாராளமா கூப்பிடு" என்றான் அவனும்.

"தாங்க்ஸ் அண்ணா!" என்றவள்,

இப்ப எதுவும் கேட்குறதுக்கு இல்லை. பிறகு தேவை எண்டா கேட்குறன்." என்க.

"அப்ப வா கீழ போகலாம்.
சார் வர்ற நேரம் ஆச்சு" என்றவன், கீழே அவளை அழைத்து சென்றான்.

கீழே வந்தவர்களுக்கு, போகும்போது இருந்ததற்கும், இப்போது இருப்பதற்கு நிறைய வேறுபாடுகள்.


போகும் போது சாதாரணமாக வேலை செய்தவர்கள், இப்போது பரபரப்புடன் வேலை செய்வதைப்போல் தோன்ற, புரியாது ரவியை நிமிர்ந்து பாத்தாள்.

"என்ன துஷா! அப்பிடி பாக்கிற?" என சிறு புன்னகையுடன் கேட்டவன்,


"இங்க இப்பிடித்தான். பகீரதன் சார் காரை கண்டாலே, எல்லாரும் சரியா வேலை செய்வினம். அது தான் சாரோடு கெத்தே!


நாம சரியா நடந்துட்டா, அவர் ஒன்டும் சொல்ல மாட்டார். நீ பயப்பிடாத" என்றவன்,

"இங்கயே நில்லு. நான் சார் கூட பேசிட்டு வந்து, உன்னை கூப்பிடுகின்றன்." என்றவன் அவ்விடத்தை விட்டகன்றான்.

அவன் சென்றதும் 'எல்லோரும் அப்படி பயப்படுகிற முகத்த, தானும் ஒருதடவை பார்க வேண்டும்.' என நினைத்தவாறு. அவன் பெயரை ஒருதடவை சொல்லி பார்த்தவள்,


"பகீரதன்.... பேரே கம்பீரம இருக்கே. ஆளு எப்படி இருபாரோ?" என்று ஆர்வமாக வாசலை பார்த்தாள்.


தனது நண்பன் ரவியுடன் வந்த பகீரதன், காரை வாசலில் நிறுத்தவும், அவனது போனும் சிணுங்கியது.

"நீ போ ரவி! நான் பேசிவிட்டு வாறன்." என்று அவனை அனுப்பிவிட்டு, காரில் இருந்த படியே உரையாடலில் ஈடுபட்டான்.


பகீரதன் வருகையை எதிர்பார்த்து வந்த காரினையே ஆவலாக ஆவென பார்த்திருந்தவள், காரை விட்டு இறங்கிய ரவியை கண்டதும், அவன் தான் பகீரதன் என்று நினைத்து விட்டாள்.

"இவரா பகீரதன்...? இவருக்கா இப்பிடி பயப்பிடுனம்? ரவி அண்ணா சொன்ன பில்டப்புக்கும் இவருக்கும் சம்மந்தமே இல்லையே!


'இவர பாக்க அப்பிடி பயங்கரமா தெரியலையே!
நல்லவர் போல தானே தெரியிறார்....'


அவனது சப்பியான தோற்றமும், கள்ளம் கபடமற்ற சாந்தமான முகமும், அவளுக்குள் ஏதோ ஓர் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

'இவரை பாத்ததும், ஏதோ ஒரு உணர்வு எனக்குள்ள தோன்டுதே! என்ன பந்தமா இருக்கும்.' என நினைத்தவள்,


'இப்பிடியே பாத்துட்டு நின்டா சரிவாராது. வாயை பிளந்து பாக்கிறதை யாராவது பார்த்தா ஏதாவது நினைக்கு கூடும்.


முதல்ல ரவி அண்ணா வரட்டும்... அதுவரக்கு அந்த பக்கம் என்னெல்லாம் இருகெண்டு பாப்பம்." என அவ்விடம் விட்டகன்றாள்.

அதே சமயம் உள்ளே நுழைந்தவன் பகீரதன்,

"இங்கேயே நின்டு என்னத்த யோசிக்கிற? வா உள்ளே போகலாம்." என தனது நண்பன் ரவியை அழைத்து கொண்டு, தனது அறைக்குள் நுழைந்தான்.

இங்கு ரவிவர்மனின் அடையாளப் பெயர் வர்மன் என்பது தான், ரவி என்பது பகீரதனின் தோழனான ரவிராஜ்.

துஷாவை தேடிப்பிடித்த ரவிவர்மன்,

"நீ இங்க நிக்கிறியா? எங்கடா ஆள காணேல.. பகீரதன் சார கண்டோன்ன ஓடிட்டியோ எண்டு நினைச்சிட்டன்" என்றான்.


"ஏண்ணா... அவர பார்த்தா பயப்படுறா மாதிர தெரியேலயே! நீங்க எல்லரும் பதற, நானும் பயங்கரமான ஆளா இருபார் எண்டு நினைச்சிட்டன்." என்றதும்,

"உண்மையாவே உனக்கு அவரை பார்க்க அப்படி தெரியேலயா?"என்றான் ரவி ஆச்சர்யம் காட்டி.


"பார்க்க நல்லவரா தான் தெரியிறார்." ஏன் அப்பிடி கேக்கிறீங்கள்?"

"அவர் நல்லவர் தான். வேலை விஷயத்தில தான் கறார். பார்த்து நட... சார் அவர் ஃப்ரண்டோட பேசிக்கொண்டிருக்கிறார். கொஞ்ச நேரம் கழிய, உன்னை கூட்டிக்காெண்டு போறன். அதுவரை இங்கயே நில்" என்றான்.

அரைமணி நேரம் கழிந்திருக்கும்,

"வா துஷா போலாம்.." என்றவன், அவளை அழைத்து சென்று, "மே ஐ கம் இன் சார்!" என்று வாயிலில் நின்று தலையை மட்டும் உள்ளே நீட்டி கேட்டான்.


"வாங்கோ வர்மன்." என்றவன் ரவியுடன் பேசியவாறே,

"சொல்லுங்க.. வர்மன் என்ன விஷயம்?"


"சார் நேற்று வேலை விஷயமா தெரிஞ்சவங்க கேட்டாங்க எண்டு சொல்லி...." என்று...இழுத்தவனிடம்.

"ஓ......... இப்ப வந்திருக்கினமோ?" என்று வர்மன் பின்னால் பார்வையை பதித்தவன், அங்கு நின்றவளை கண்டதும் விழிகள் அகன்றாலும், அதை வெளிக்காட்டி கொள்ளவில்லை.

துஷாவின் நிலை தான் பரிதாபம்.

சப்பி மூஞ்சி தான் முதலாளி என எதிர் பார்த்து வந்தவள், முதலாளி சீட்டில் ரதன் இருப்பதை பார்த்ததும் ஐயோ என்றானது.

'இவன் ரதனாச்சே..! கார்ல இருந்து இறங்கியவன் தானே முதலாளி எண்டினம்... அப்ப பக்கத்தில இருக்கிறது தான் அவன் நண்பனா?


ரதன் எப்படி பகீரதன் ஆனான்.?
அடி லூசு! பகீரதன் தான் பகீய தூக்கிட்டு, ரதன் ஆனான்' என்று அவள் மூளையே அவளை வாரிவிட்டது.


இனி இங்க நிற்கிறது வேலைகாகாது. வேலையில்லை போ எண்டு அவனே அடிச்சு துரத்துறத்துறதுக்கு முன்னம், நானே போறது தான் சரி என தோன்றியது.


"இவங்க தான் சார் நான் சொன்ன பொண்ணு. ரொம்ப நல்லவாங்க... நல்லா படிச்சவ வேற.. பெயர் துஷாந்தினி." என்று அறிமுகம் செய்தவன்,

துஷாவின் புறம் திரும்பி, வணக்கம் கூறு என்றான் விழிகளால்.
அவள் தான் சிலையென ஆனாளே!

வர்மனின் பார்யைின் பொருள் அறிந்தவனோ!

"பொறுங்காே வர்மன். .. அவங்க இப்போ இங்க நடக்கிறத கவனிக்கிற நிலைமேல இல்ல.


இந்தாங்க இந்த தண்ணிய குடுங்க." மேசை மீதிருந்த கிளாஸை வர்மனிடம் நீட்டினான்.


அதை வாங்கியவன், "இந்தா... இதை குடி!" என்று துஷாவை உலுங்கி கொடுத்தான்.

"இல்லை எனக்கு வேண்டாம்." என மறுத்து, பகீரதனை பார்த்தாள். அவனோ அவளை பார்த்து,

'வாடி வா! வசமா வந்து மாட்டினியா?' என எண்ணியவன், உதடுகளோ வஞ்சமாய் புன்னகைத்தது.


ரவிக்கும் வர்மனுக்கும் ஊமை நாடகம் பார்ப்பது போல இருந்தது.

'என்ன இவன் நான் துரத்துவான் எண்டு நினைச்சா, சிரிச்சிட்டு இருக்கான்... பெருசா பிளான் போடுறானோ!'


நேற்று தேவையில்லாம வாயை வேற விட்டுட்டனே!
நேற்றாவது றோட்ல யாரும் இல்ல... ஆனா இங்க இவ்ளோ பேர் முன்ன அசிங்க படுத்தினா... என்ன செய்யிறது?' என்று அவள் பயந்து கொண்டிருக்க.

"மிஸ்டர் வர்மன்... நான் இவாவ பாக்கிறன். நீங்க உங்கட வேலையை பாருங்க" என்றான்.


அதற்குமேல் வர்மனால் அங்கு நின்றிட முடியுமா?

"சரி சார்" என்று வெளியேறினான்.

"என்ன மேடம்...! வந்ததில இருந்து அமைதியா இருகிறீங்க?
இது உங்கட குணமில்லையே.!" என்றவாறு அவள் கையில் இருக்கும் பைலை பார்தவன்,

"மேடம் உத்தரவு தந்தா... உன்களை நேர்முக தேர்வு செய்யலாம்." என்றவாறு கையை நீட்டினான்.
 
Top