• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

05. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை.

அத்தியாயம் - 05

ஒரு வாரமாக உள்ள ஆற்றாமை.. அது தந்த கோபம்.. அதனுடன் சேர்ந்து இன்று காலையிலே அடிவயிற்றில் கிளம்பிய எரிச்சல், நேராக நடு மண்டைக்கு ஏறி மதியமாகியும் இறங்கவில்லை..

மங்காத்தா மூடில் இருந்த மதுவர்ஷன், மாரியாத்தாவாக மாறிக் கொண்டிருந்தான்.

முதலில் அவளால்... ஆம் அவள் தான் அமுதா யாழினி!

ஒரு வாரமாக கோபாமாக இருக்கிறான். அத்தோடு இந்த எரிச்சலுக்கு காரணம், காலையில் கிடைக்க வேண்டிய டெண்டர், கை விட்டு போயிருந்தது தான்.

இப்போதும் அவசியமில்லாமல் அமுதயாழினி பற்றிய நினைவு, அழையா விருந்தாளியாய் அமர்ந்து கொண்டது அவன் நினைவில்.

அன்று வர்ஷன், சோபனாவை கைது செய்ய போலீஸை அழைத்திருந்த போது, அமுதா தன் சித்திக்காக எவ்வளவு கெஞ்சியும் மனம் இறங்கவில்லை அவன்.

"சார்.. ப்ளீஸ் சார்..!! அவங்க என் சித்தி சார்! மன்னிச்சு விட்டுருங்க சார்!" என சிறு குரலில் வர்ஷனிடம் கெஞ்சினாள் அமுதா.

முதலில் அவளது பரந்த மனதை கண்டு வியப்பாக இருந்தாலும்.. அதுவே ஒரு கட்டத்தில் சலிப்பை தந்தது. தனக்கு தீங்கு செய்தவருக்காக அவள் கெஞ்சுது மேலும் கோபத்தை தூண்டிவிட,

"ஷட் அப்!! ஜஸ்ட் ஷட் அப்!!" வீடே அதிரும் படி கத்தினான். அவன் கத்தலில் பயத்தில் உடல் நடுங்க, வாயை கைகளால் பொத்திக் கொண்டாள் அமுதா.

"இன்ஸ்பெக்டர்... நீங்க இவங்களை அரெஸ்ட் பண்ணலாம்!" அவன் கோபத்தை கண்டு, ஆடிப் போய் இருந்தவர், சிலையொன்று உயிர்த்ததைப் போல் திடுக்கிட்டு விழித்தது என்னமோ சில நொடிகள் தான்..

சரி என தலை ஆட்டியபடி ஷோபனாவை நெருங்கினார் அவர்.

"இல்ல இல்ல.... நான் எந்த தப்பும் பண்ணல!" நடுக்கத்துடன் சோபனா அலற.

"போலீஸ் சார் .. ப்ளீஸ்..... அவங்க ஒன்னும் செய்யல! இது எங்க குடும்ப பிரச்சினை... நாங்க பார்த்துக்கறோம்.
உங்களை கையை எடுத்து கும்புட்டுக்கிறேன். ப்ளீஸ்.... இங்க இருந்து போயிடுங்க!" கையை எடுத்து கும்பிட்டு இரந்து நின்றாள்.

அகரன் பார்வை பாவமாக மாற,
வர்ஷன் பார்வை கோபத்துடன் கூடிய வெறித்தலுடன் அவள் மேல் விழுந்தது.

ஷோபனாவோ பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தார்.

தான் சொல்வதைக் கேட்காமல், அமுதா எடுத்த முடிவை நினைத்து பல்லை கடித்தான் வர்ஷன்.

இடையில் திண்டாடியது என்னவோ அந்த போலீஸ்காறரான ராகவன் தான்.

"ஹலோ மிஸ்டர் ராகவன்... கொஞ்சம் உங்க கூட பேசலாமா??" என்ற குரல் பின்னால் இருந்து வர, அனைவரும் திரும்பி பார்த்தனர்.
வசந்தாரஜும், அவருடன் கருப்பு கோர்ட், வெள்ளை ஷர்ட் சகிதம் ஒருத்தன் நின்றிருந்தான். அவனை பார்த்தால் தெரிந்தது வக்கீல் என.

வசந்த ராஜை ஆராதனா தான் அழைத்திருந்தாள்.

கீழே கேட்ட சத்தத்தில் அறையிலிருந்து வெளியே வந்தவள், தன் அம்மாவை கைது செய்ய வந்த போலீசாரை பார்த்து, தந்தைைா அழைத்திருந்தாள்.

வசந்தராஜும் அங்கு வந்த பின்னரே தன் அறையிலிருந்து இறங்கி வந்தவள், தந்தையின் பக்கத்தில் நின்று கொண்டாள்.

வந்தவர்களைப் பார்த்ததும் புருவம் சுருக்கினான் வர்ஷன்.

ஆனால் அங்கு என்ன நடந்திருக்கும் என ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது அகரனுக்கு.
அவன் தான் ஆராதனாவை பற்றி அறிந்து வைத்திருந்தானே? எனவே அவளை குற்றம் சாட்டும் பார்வையுடன் நோக்கினான்.

"என்ன மிஸ்டர் ராகவன்....! அரெஸ்ட் வாரண்ட் இல்லாம இங்க வந்து இருக்கீங்க..?" கொஞ்சம் நக்கலாகவே ஒலித்தது அந்த வக்கீலின் குரல்.

மேலும், "ஹலோ எவெரி வன்... நான்தான் வக்கீல் தேவராஜ்! என்ன நடக்குதுன்னு கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா..?" இன்னமும் நக்கல் அடங்க வில்லை அவன் குரலில்.

பின் அங்கிருந்த வசந்த ராஜை திரும்பிப் பார்த்தான் தேவராஜ்.

"இப்ப நீங்க அரெஸ்ட் பண்ண வந்து இருக்கீங்களே! அவங்களோட ஹஸ்பண்ட் இவர் தான். பேரு வசந்த ராஜ்!

நீங்க அரெஸ்ட் வாரண்ட் இல்லாம அரெஸ்ட் பண்ண வந்திருக்கீங்க மிஸ்டர் ராகவன். நிஜமாவ உங்களுக்கு சட்டம் தெரியுமா என்டு சந்தேகமா இருக்கு....?

ஓகே சட்டம் படிப்பீக்கிறது என் வேலையில்ல... நீங்க இடங்களை இதுக்குமேல அரெஸ்ட் பண்ணித்தான் ஆகணும்னா, தயவு செய்து அரெஸ்ட் வாரன்டோட வாங்க!" என்றவன், மதுவர்ஷன் பக்கம் திரும்பி,


"ஹ்ம்ம்!! நீங்க தான் தி கிரேட் மது வர்ஷனோ? எதுக்கு சார் இந்த தேவையில்லாத வேலை உங்களுக்கு!

அடுத்தவங்க குடும்பம் எப்படி போனா உங்களுக்கு என்ன?? உங்க வேலையை நீங்க பாத்துட்டு போலாமே??" தேவராஜ் வார்த்தைகளில் நக்கலும் நையாண்டியும் தெறித்தது.

தேவராஜை பார்த்து முறைத்தானே தவிர, பதில் சொல்லவில்லை வர்ஷன். அங்கிருந்த ராகவன், வர்ஷனிடம் மன்னிப்பு கேட்டு விட்டு சென்று விட்டார்.

தேவராஜ் மேலும் எதுவோ பேச வர, அவரை நக்கலுடன் நோக்கியவன்,

"மிஸ்டர் தேவராஜ்...... குடும்பத்துக்குள்ள பிரச்சனைன்னா, அதுக்கு குடும்ப உறுப்பினரா மட்டும் இருக்கணும்னு அவசியம் இல்ல, மனிதாபிமானம் இருந்தா பேதும்!!" என அழுத்தத்துடன் அவனை விட நக்கலில் இதழ் வளைத்துக் கூறினான்.

"ஹ்ம்ம்... நீங்க சொல்றது ஒரு விதத்துல சரி தான் சார்" சிரித்தான் அவன்.

"வாட் எவர் மிஸ்டர் தேவராஜ்!! இனி ஒரு முறை இப்படி தப்பு நடந்ததுன்னா, நான் அரெஸ்ட் வாரண்டெல்லாம் பார்க்க மாட்டேன். ஸ்ட்ரெயிட்டா அந்த அம்மாவை கொலைதான்!" அழுத்தமாக ஷோபனாவை பார்த்து சொன்னவன்,

அமுதாவையும் அகரனையும் முறைத்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டான்.

ஒரு வாரத்துக்கு முன் நடந்தவற்றையெல்லாம் நினைத்து பார்த்து, மேலும் எரிச்சலை அதிகமாகிக் கொண்டான் வர்ஷன்.

"காற்றே என் வாசல் வந்தாய்!" என உன்னிகிருஷ்ணன் அவன் கோபத்தை தணிக்க ஃபோன் வழியே பாடிக்கொண்டிருந்தார்.


எரிச்சலிலோ, கோபத்திலோ இருந்தால், பாடல் கேட்டு அதை குறைத்துக்கு கொள்ளவே இவன் உக்தி.. ப்ச்ச்!! இன்றும் அதுவும் வேலைக்காகவில்லை.

அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தவாறு, எரிச்சலை தணிக்க முயற்சித்தவனுக்குஅது முடியவில்லை!

பல்லை கடித்தபடி, இருந்த கோபத்திலும் எரிச்சலிலும் கட்டிலை வெறும் காலால் உதைத்தான்.

'அச்சோ!! போச்சே!! போச்சே!!' வடிவேல் பாணியில் அலறியது அவன் மனசாட்சி.. காலில் பயங்கர வலி.

"அவுச்.. ஆ ஆ ஆ…..." சிறுகுரலில் சொன்ன அவுச்.. பெருங்குரல் 'ஆ ' வாக மா,ற வலது காலை இரண்டு கைகளாலும் பற்றிக் கொண்டு குதித்தான்.

வலி அடங்கிய பாடில்லை... காலை பற்றிக் கொண்டு குதித்தபடியே, கீழ விரித்து வைத்திருந்த கார்பெட்டில் பொத்தென்று அமர்ந்தவன்,
காலை பிடித்திருந்த கைகளை விளக்கி பார்த்தான்.

"எம்மா என் காலு போச்சே!!" ஐந்து விரல்களும் சிவந்து வீங்கி போயிருந்தன.

'நீ ஹீரோ தான்டா வர்ஷா... அதுக்குன்னு உனக்கு அடிபட்டா வலிக்காம இருக்குமா என்ன? ஹீரோயிசம் காட்ட போய் ,இப்படி ஜீரோயிசம் ஆயிட்டியேடா!' தன்னை தானே நொந்து கொண்டபடி, கை ஊன்றி எழும்பி நின்றவன், பாதத்தை ஊன்றாமல் ஒற்றைக் காலில் நொண்டியவாறு அங்கிருந்த மேசையை நோக்கி சென்றான்.

மேசை டிராயரை திறந்து, அதனுள் இருந்த ஆயின்மெண்டை எடுத்துக் கொண்டு, கட்டிலில் அமர்ந்து காலில் பூசிக் கொண்டான்.

"வலி என்றால் காதலின் வலி தான் வழிகளில் பெரிது" போனின் வழியே இப்போது சங்கர் மகாதேவன் அவன் அறை முழுவதும்.

பாடல் வரியை கேட்டு மேலும் பல்லை கடித்தான் மது வர்ஷன்.

"அடேய்...! நீ மட்டும் கால் வலிய அனுபவிச்சு இருந்தேன்னா.. இப்படி ஒரு பாட்டை பாடிருக்க மாட்டடா..." சத்தமாக சங்கருக்கு சங்கூதினான் அவன்.

ஆயின்மெண்டை பூசிவிட்டு, தன் காலிலேயே பார்வையை நிலைக்க விட்டுவிட்டான்.

காலையில் அவன் பி. ஏ சொன்ன செய்தி, மண்டைக்குள் ஓடி மீண்டும் எரிச்சலை கிளப்பியது.

அதெப்படி இந்த டெண்டர் கை விட்டு போகும்..? அதுவும் வெறும் ஆயிரம் ரூபாய் வித்தியாசத்தில்..? பார்த்து பார்த்து தானே தாயரித்த கொட்டேஷன்.. அவ்வளவு நம்பிக்கையாக இருந்தான் அவன்.

இந்த முறை மைதானம் அமைக்க இடம் கிடைத்துவிடும் என்று.. நேற்று இரவு கூட ஒரு வாரம் இருந்த கோபத்தையும் தள்ளி வைத்து விட்டல்லவா, டெண்டர் தன் கை வந்து சேரும் என கனவு கண்டபடி கண்ணயர்ந்தான்.

ஹ்ம்ம்.. கடவுள் காண்டாகிவிட்டாரா..? கண் மூடிக் கொண்டாரா..?!

"எங்கே செல்லும் இந்த பாதை!"
இளையராஜாவின் இசை இன்னிசையாய் இல்லாமல், இம்சையாய் அவன் செவி வழி நுழைந்து எரிச்சலை ஏற்றி விட்டது.

பட்ட்.. தொல்லையாய் இருந்த தொலைபேசியை அனைத்து விட்டவன், காலை நீட்டி, கைகளால் கண்களை மறைத்த படி கட்டிலில் சாய்ந்து கொண்டான்..

இப்போது இருக்கும் தலை வலிக்கு, காபி குடித்தால் தேவலாம் போல் தோன்றியது. கீழ இறங்கி செல்ல மனமிருக்கவில்லை.

சிறிது நேரத்தில் அவன் அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்க,
சலித்தபடியே எழுந்து கொண்டவன், நொண்டியவாறு சென்று கதவை திறந்தான். சிரிப்புடன் நின்றிருந்தாள் அவன் தங்கை கவி நிலா.

"என்னடா மா கவி..?" தங்கையை பார்த்ததும் முகம் மென்மையுற கேட்டான்.

"இன்னைக்கி ஆஃபிஸ் போகலையா அண்ணா..? ரூம்முக்குள்ள அடைஞ்சே இருக்க..? டெண்டர் கை விட்டுப் போனது பத்தி டென்ஷனா இருக்கியா என்ன..?" அக்கறையாய் வினவினாள்.

"ஹ்ம்ம்.. ரொம்ப நம்பிக்கையா இருந்தேன் கவி..! ஆயிரம் ரூபா வித்தியாசத்துல விட்டுப் போச்சுன்னு நினைக்கும் போது, கவலையை விட என் மேல தான் எரிச்சல் வருதுடா..!" என்றான், ஆதங்கத்துடன் கவலையாய்.

"ப்ச்ச்.. விடுண்ணா! பார்த்துக்கலாம்.
அதுக்காக ஆஃபிஸ் லீவ் போடுவியா என்ன..?" என்றவள்," ஆமா எதுக்கு இப்ப ஒத்தக் கால்ல நின்னு கதவை பிடிச்சிட்டு இருக்க நீ? இதான் பிடிவாதமா ஒத்தக்கால்ல நிக்கிறது என்கிறதா..?" அடங்க மாட்டமல், தன் நகைச்சுவைக்கு அவளே சிரித்தாள்.

அவள் கேள்வியில் அசடு வழிந்தான் வர்ஷன்.

கதவை திறந்து விட்டு வலது காலை ஊன்றாமல், மேல உயர்த்திய படி சப்போர்ட்டுக்காக கதவை பிடித்திருந்தான்.

அண்ணனின் முகபாவனை கண்டு சிரிப்பை அடக்கிக் கொண்டவள்,

"எரிச்சல்ல காலை எங்கயாவது போய் இடிச்சியா என்ன..?" அவளுக்கு தான் அவன் குணம் தெரியுமே!

"ஹி ஹி..ஆமா.." தங்கை தன்னை கண்டு கொண்டாளே என்று அம்சமாக அசடு வழிந்தான் அண்ணன்காரன்.

"ஹா ஹா..டேய் அண்ணா..! உன்னை பார்த்து எல்லாரும் பயப்படறாங்க... ஆனா எனக்கு சிப்பு சிப்ப்பா வருதுடா!" என்றவள் பேச்சில் அவளை முறைத்தவன்,

"போடிடிடி… இவளை..!" என அவள் முகத்தில் வலது கையை வைத்து தள்ளி விட்டு, அதே குதித்தலுடன் கட்டிலை அடைந்தான்.

"போடாடா.. டா.. டா…. இவனை..!"
வர்ஷன் போல் ராகமிழுத்து சொன்னவள், அவன் முறைப்பை பார்த்து கண் சிமிட்டி நாக்கை துருத்தியபடி கீழ சென்று விட்டாள்.

பின் மீண்டும் வந்தாள் அவள். ஆனால் சுட சுட ஆவி பறக்கும் காபியோடு.

"இந்தா காபி..! உனக்கு தலை வலின்னு உன் மூஞ்ச பார்த்தாலே தெரிது!" என்று அவன் கையில் திணித்தவள், அவன் அருகில் அமர்ந்து கொண்டாள்.

"தேங்க்ஸ் டி.. உடன் பிறப்பே!" சிரித்தபடி ஒற்றைக் கையால் தங்கையை அணைத்தான்.

அவன் கையை தள்ளி விட்டவள்,
"ஹ்ம்ம்.. நீயே வெச்சுக்க.."என முகத்தை திருப்பிக் கொண்டாள்.

"சாரி டி நிலா குட்டி!"

"ம்ம்.. ம்ம்..!" சமாதானம் ஆகியதற்கு அடயாளமாக மண்டையை ஆட்டினாள்.

"அம்மா எங்கடி..?"

"சமைக்கறாங்க"

"அப்பா??"

"உன்னை தான் கேட்டாரு"

"நீ என்ன சொன்ன?"

"உண்மையை சொன்னேன்.. ஹா, ஹா.."பெரும் சிரிப்பொன்றை சிந்தி..
சிவாஜி பட எஃபெக்டாம்... விவேக் சார் விக்கல் வாய்சில் பேசியது போல் இருந்தது.

பட்டென தங்கையின் பின் மண்டையில் அடித்தான் வர்ஷன்.

"சகிக்கல டி! வாய மூடு!" கோபத்தில் பல்லை கடித்தான். தந்தையிடம் சொல்லி விட்டாள் என்றதில் தங்கை பாசம் தப்பி ஓடியிருந்தது.

"டேய்.. அண்ணா.. போயும் போயும் உனக்கு காபி போட்டு தந்தேன் பாரு! என்னை செருப்பால அடிக்கனும்.
குடுடா அந்த காபி கப்பை" கோபத்துடன் பல்லை கடித்தபடி ,பின் மண்டையை தடவிக் கொண்டவள், அவன் காலி செய்திருந்த காபி கப்பை பிடிங்கியே விட்டாள்.
அதை குனிந்து பார்த்தவளுக்கு அதிலும் ஏமாற்றமே எஞ்ச, அவனை முறைத்தாள்.

"அதை காலி பண்ணி ஹாஃபனவர் ஆச்சு. ஏண்டி அப்பா கிட்ட சொன்ன.? அந்த மனுஷன் என்னை கலாய்ப்பாரு" சிறுவனாய் சிணுங்கினான்.
அவன் தந்தையிடம் சவால் விட்டிருந்தான் அல்லவா..?

"ப்ச்ச்.. சும்மாவெல்லாம்
சொல்லாதே! அவர்கிட்ட டெண்டர் விசயம் சொன்ன உடனே டல்லாயிட்டாருடா அண்ணா! நீ போய் அப்பா கிட்ட பேசு..
அப்பனை ஆப்படிகிறவன் ரேஞ்சுல பார்க்கறவன் நீ ஒருத்தன் தாண்டா"என பொறுமினாள்.

கவி சொல்வதும் வாஸ்த்தவம் தான். இந்த மைதானம் அமைக்கும் விடயத்தில் சிவராமனுக்கும், மது வர்ஷனுக்கு முட்டிக் கொண்டாலும், சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்..
இவன் தான் அவரை முறைத்துக் கொண்டு இருக்கிறானே தவிர, அவர் அப்படி இல்லை.

"ஓஓஓஹ்" என்பது போல் தங்கை சொல்வதை கிரகித்துக் கொண்டவன்,
யோசனையில் ஆழ்ந்து விட்டான்.

"சரியான பிடிவாதக்காரன் எருமை! எருமை!"திட்டியவாறு, அவனை பார்த்து பெரு மூச்சொன்றை விட்டவள் அங்கிருந்து சென்று விட்டாள்.

சிறிது நேரம் தந்தையை பற்றி யோசித்தான் வர்ஷன். பின் அவரை சந்தித்து பேச வேண்டும் என நினைத்து, அதே யோசனையோடு கட்டிலில் இருந்து இறங்கியவன் அடிபட்ட காலை மறந்து போனான்.

"அம்மா...." அலறியபடி, காலை தூக்கிக் கொண்டான்.

மடையா மது வர்ஷா!! அவனை அவனே திட்டிக் கொள்ளவும் தவர வில்லை.

"அப்பா.."சிவராமனை அழைத்த படி அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டான் வர்ஷன்.

கண்கள் ஆச்சரியத்தில் விரிய ,அவனை நோக்கினார் அவர்.

கடந்த இரு வருடமாக அவர் முகம் பார்த்து பேசி இருக்கவில்லை அவன். பேசுவான் தான். முன்பு இருந்த அக்கறை காணாமல் போய், அலட்சியம் வந்திருந்தது அவனிடம்.

தன்னையோ, தன் கருத்தையோ ஏற்றுக் கொள்ளாதவர்களிடம் அலட்சியமாகவே நடந்து கொள்ளும் அதிசய ஜீவன் இவன். முதலில் தந்தை சிவராமன்!
இப்போது அந்த லிஸ்டில் அவளும் சேர்ந்திருந்தாள்.. அமுத யாழினி!

'இவ நெனப்பு இப்போ நமக்கு எதுக்கு?' தலையை உலுக்கிக் கொண்டவன், தயக்கமாக தந்தையை ஏறிட்டான்.

பேச வரவில்லை அவனுக்கு. "அப்பா" என உளனளே போன குரலில் அழைத்தவாறு அமர்ந்து விட்டான் தான், ஆனால் பேச்சு தான் தொண்டைக்குள் சிக்கி விட்டது.

"சொல்லு மது..?" சாதாரணமாகவே அவனிடம் பேச்சை ஆரம்பித்தார் சிவராம்.

தலையை குனிந்து பிடரியை தேய்த்தவனிடத்தில் தயக்கம் மிச்சமிருந்தது. அவன் செய்கையை பார்த்து சிரித்துக் கொண்டார் அவர்.

"ஹ்ம்ம்.. அது வந்துப்பா.. டெண்டர் விட்டுப் போச்சு... பேசாம நீங்க சொல்ற மாதிரியே.. பில்டிங் கன்ஸ்டிரக்ஷன் வேலையை மட்டும் செய்யலாம்னு இருக்கேன். ரெண்டு வருசாமயிடுச்சு..
உங்க கூட சரியா பேசியும், இந்த வேலையை கையில எடுத்தும். எதுவுமே இன்னும் சரியாகலப்பா"என்றான் தோற்றுப்போன உணர்வுடன்.

அவன் ஆசையை கை விடுவதில் கொஞ்சமும் விருப்பம் இருக்கவில்லை தான். இவ்வளவு நாட்களாக ஏதோ ஒரு நம்பிக்கையில் இருந்தவனிடத்தில், இப்போது சிறிதாக நம்பிக்கை ஆட்டம் காட்டி விட்டது.

"மது..!"என நெகிழ்ச்சியாக அழைத்த சிவராமன், அவன் தோளில் இடது கையை போட்டு தன்னோடு நெருக்கிக் கொண்டார்.

தோல்வியில் உள்ள தோழனுக்கு தோள் கொடுப்பவன் போல், அவர் அன்பை நினைத்து ஏனோ கண்கள் கலங்குவது போல இருந்தது அவனுக்கு.

தந்தையிடம் மன்னிப்பை கேட்க வில்லை அவன். அவரும் அதை எதிர் பார்க்கவில்லை. அணைத்துக் கொண்டிருப்பவரை பார்த்து, புன்னகைத்தான் வர்ஷன்.

இந்த காட்சியை சமையல் அறையின் வாயிலில்.. வாயை பிளந்தபடி பார்த்து கொண்டிருந்தனர். அவன் தங்கை கவிநிலாவும், அம்மா பார்வதியும்.

"என்னடி கவி இது? அதிசயமா இருக்கு!" பார்வதி தான், ஆச்சர்யமாக வினவினார்.

"நாங்க தான்.. அப்பா கூட அண்ணா இப்படி பேசறதுக்கே காரணமாக்கும்... மிதப்புடன் இல்லாத சட்டை காலரை தூக்கிக்காட்டினாள்.

மேலும் கீழும் கவியை ஒரு லுக் விட்டார் பார்வதி.

அவர் பார்வையில் தெரித்த அலட்சியத்தை கண்டு,
"கிரேட் இன்சல்ட் கவி!! ஆனா இலெல்லாம் உன்னை ஒன்டும் பண்ணாது." என உதட்டை சுழித்து பார்வதிக்கு கேட்பது போலவே முணுமுணுத்துக் கொண்டாள்.

இவர்கள் இருவரும் தங்களது பார்வையை விலக்கி, அவர்களை பார்க்க, இப்போது மது வர்ஷன் தன் தந்தையை அணைத்திருந்தான்.

இவர்கள் இருவரும் அவர்களை பார்த்து மென்மையாக புன்னகைத்துக் கொண்டனர்.

"தேங்க்ஸ் பா... நிச்சயமா நான் சொன்ன மாதிரியே, இந்த சவால்லா ஜெய்க்கறேன்.. ஆனா எனக்கு உங்க ஹெல்ப்பும் வேணும்!" அணைப்பிலிருந்து தந்தையை விடுவித்தான்.

"கண்டிப்பாடா மது!" என அவன் கையை தட்டிக் கொடுத்துச் சிரித்தார் சிவராமன்.

அதுவரையில் அமைதியாக இருந்த பார்வதி, "ஹ்க்கும்... உங்க ரெண்டு பேர் பாச போராட்டம் முடிஞ்சதுன்னா, சாப்பிட வரலாம்"என நமுட்டுச் சிரிப்புடன் அவர்களை அழைத்தார்.

முகத்தில் தேங்கி விட்ட சிரிப்புடனே, சாப்பாட்டை முடித்தனர் அனைவரும்.
அன்றைய நாள் வர்ஷன் ஆஃபிஸ் லீவ் போட்டு விட்டான். வீட்டிலிருந்தே அன்றைய நாளுக்கான வேலையை செய்தான்.



தன் முதலாளியின் பங்காளவின் முன் நின்றிருந்தான் அகரன். இவன் மேல் உள்ள கோபத்தில், அகரனது தொலை பேசி அழைப்புக்களை எல்லாம் தவிர்த்திருந்தான் வர்ஷன்.

கேட் வாசலில் நின்று வாட்ச் மேனிடம் பேசிக் கொண்டிருந்த அகரனை பார்த்து, அங்கு ஓடி வந்தாள் கவி நிலா.

"ஹாய் அகரன் அண்ணா... என்ன இந்த பக்கம் காத்து வீசுது..? நீ சும்மாவெல்லாம் வர மாட்டியே..!
வந்தாலும் வேலை விசயமா தான் வருவ.." என நொடித்துக் கொண்டாள்.

அவள் பட பட பேச்சை பார்த்து எப்போதும் போல இப்போதும் சிரித்துக் கொண்டான் அவன்.

இவளும் அவன் அம்மு போல் தான் அகரனுக்கு. வேலை கிடைத்து இந்த சில மாதங்களில், இவ்வீட்டிற்கு இவனது மூன்றாவது வருகை இது.

இவன் ஓரளவு தான் அவளிடம் பேசுவான். அவள் அண்ணா என்றழைத்தாலும், இவன் அவளை அழைப்பது என்னவோ மேடம் என தான்.

"ஆமா மேடம்... வேலை விசயமா தான் வந்தேன். சார் என் காலை அட்டென்ட் செய்யல.. அதான் பார்க்கலாம்னு.."

அவனை முறைத்தவள்,

"உங்க கிட்ட எத்தனை தடவை சொல்லிருக்கேன்.. என்ன மேடம்னு சொல்லாதீங்கன்னு! போங்கண்ணா..!!" என முகத்தை திருப்பிக் கொண்டாள்.

"சாரி மேடம்.. அப்படியே பழகிடிச்சு!
சார்…எங்கே..?" என கேட்க, அவனை மேலும் முறைத்தவள்,

"ஆஹ்..! உங்க சாரு, மோரு மேல தான் இருக்கான்.. நீங்க வீட்டுக்குள்ள வாங்க, நான் அவரை கூப்பிடுறேன்!"

சரி என தலை ஆட்டிக் கொண்டவன், உள்ளே சென்றான்.

கவி, வர்ஷனிடம் அகரன் வந்திருப்பதாக சொல்ல ஆஃபிஸ் போக ரெடியாகி இருந்தவன், கோட்டை கையில் எடுத்தபடி கீழே சென்றான்.

வீட்டினுள் வராமல், வெளியே நின்று கொண்டிருப்பவனை பார்த்து முறைத்த வர்ஷன், அவன் அருகில் வந்து, என்ன என்பதை போல பார்த்து வைத்தான்.

"குட் மார்னிங் சார்! இன்னைக்கு இறக்கின கன்ஸ்டிராக்சன் லோடுல கொஞ்சம் பிரச்சினை ஆகிடுச்சு!" காரணம் கூற வேண்டும் என்றதற்காக நேடிப்பிடித்து கூறினான்.

"அதுகெதுக்கு நீ வந்த?"
அவன் மேலும், அமுதா மேலும் கோபம் இன்னும் குறையவில்லை என வர்ஷனின் கேள்வியும் குரலுமே காட்டிக் கொடுத்தது.

"சாசா.. ர்!!" இழுத்தான்.

"என்ன சொல்லு?" என்றவன், அவன் பதிலை எதிர் பாராமல் தனது போர்டிகோ நோக்கி நடந்தான்.

"சார்…. வேலை வேற சார்.. அது வேற சார்" அவன் பின்னால் ஓடி வந்தபடி கூறினான்.

"நீ சொல்றதும் சரி தான் அகரா... நான் அன்னைக்கு உன் ஃப்ரெண்டுக்கு உதவி செய்யணும்னு நினைச்சது என் தப்பு தான்" அழுத்தமாக விழுந்தது வார்த்தைகள்.

"அப்படி எல்லாம் இல்ல சார்"

"அப்போ எப்படின்னு நீங்க சொல்றீங்களா?"

"……" அவனிடம் பதிலில்லை.

"சரி நீயே இன்னைக்கும் காரை ஓட்டு. ரெண்டு பேரும் ஒரே ஆஃபீஸ்க்கு தானே போறோம்... அப்படியே அந்த லோடு என்ன நடந்தன்னும் பேசலாம்"

"…."பதில் பேசாமல் தயக்கமாக வர்ஷனை ஏறிட்டான் அவன்.

"அகரா..கடுப்ப கிளப்பாம வண்டியை எடு!" என பல்லைக் கடித்தவன், காரில் ஏறிக் கொண்டான்.

பெருமூச்சு விட்ட படி, காரை இயக்கினான் அகரன். சிறிது நேர அமைதிக்கு பின் லோடு பற்றி பேசிய அகரன், வர்ஷனிடம் அமுதாவின் செயலின் பக்கம் இருக்கும் நியாயத்தை சொல்ல நினைத்தான்.

"சார்! நீங்க இப்படி கோபப்படுறது சரியே இல்லை.. அன்னைக்கு நீங்க போன அப்புறம் என்ன ஆச்சுன்னு உங்களுக்கு தெரியுமா?"ஆரம்பிக்கவில்லை. முந்திக்கொண்டு,

"நான் எதுக்கு தெரிஞ்சுக்கணும் அகரா? உன் ஃப்ரெண்டுக்கு நல்லது பண்ண போய், பல்பு வாங்கினது எனக்கு வேணும் தான்"எ ன்றவன் சாலையை வெறித்தான்.

"இல்ல சார்! நீங்க எங்களுக்கு உதவியே செய்ய இருந்தாலும், அமுதா நிலைமையில் இருந்து யோசிச்சு பார்க்கும்போது, அவ செஞ்சது கரெக்ட் தான். நீங்க கேட்கலைன்னாலும், என் ஃப்ரெண்டு பக்கம் இருக்கிற நியாயத்தை நான் சொல்லித்தான் ஆவேன்."

"…."

"அன்னைக்கு நீங்க போன பின்னாடி ஷோபனா, அமுதா மேல கை வைக்க பாத்தாங்க ஆனா மிஸ்டர் தேவராஜ் உங்க பேர் சொல்லி அடக்கிட்டாரு!! என்ன இருந்தாலும், இருபத்தி ரெண்டு வருஷமா அவள வளர்த்தவங்க சார் அவங்க!" அவள் பக்கத்து நியாயத்தை கூற நினைத்தான்.

"அதுக்குன்னு....? அவங்க செய்யறதெல்லாம் சரியா அகரா??" ஆற்றாமை தந்த கோபத்தில் அடங்காமல் கத்தினான் அவன்.

"சரி இல்ல தான் சார்!! சரியில்ல தான்!! நீங்க ஷோபனாவை போலீஸ்ல பிடிச்சு கொடுத்த பின்னாடி, அவ நிலமை என்னன்னு கொஞ்சமாச்சும் யோசிச்சு பாத்தீங்களா? நீங்க பாட்டுக்கு போயிடுவீங்க.. ஆனா அதுக்கப்புறம் அவ போக்குக்கு எங்க சார் இடம் இருக்கு?

என் கூட வருவாளா? இல்ல நீங்க தான் அவளை கூட்டிட்டு போக முடியுமா? எனக்கு கூட ஒரு வழியில்லாமல் தான் நான் இருக்கேன் சார். எனக்குன்னு சரியான ஒரு இடம் இருந்தா... என் ஃப்ரெண்ட நான் எப்போவே என் கூட கூட்டிட்டு போய் இருப்பேன்!" ஆற்றாமையில் ஆரம்பித்து, அமுதாவை நினைத்து வருத்தத்தில் முடித்தான்.

அவன் சொல்வதில் தப்பில்லை தான் என தோன்றியது வர்ஷனுக்கு. ஆனால் மனசு முரண்டியது.

"என்னவோ போ அகரா!! என் மனசு நீ சொல்றதை ஏத்துக்குதுல" என பெரு மூச்சு விட்டான்.

அவன் வாய் விட்டு சொல்லி விட்டான் அகரன் சொல்லவில்லை..அவ்வளவே வித்தியாசம்.

"சார்.. உங்க கிட்ட மன்னிப்பு கேட்கனும்னு அமுதா சொன்னா?" தயக்கத்துடன் இழுத்தான்.

"எனக்கு அந்தளவுக்கு பரந்த மனசுல்ல அகரா!"

"சா..சார்!!!"

"விடு அகரா... நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு..? இப்பவும் அவ சித்தி அவள கொடும படுத்துறாங்களா என்ன?"

அவன் கேள்வியில் ஜெர்க்காகினான் அகரன். இன்று காலையில் கூட எண்ணெய்யில் வலிக்கி விழுந்து வாரிக் கொண்டதாக அமுதா சொன்னது நினைவில் ஓடியது.

முதல் போன்று நேரடியாக கொடுமை செய்யா விட்டாலும், மறைமுகமாக இவ்வாறான செயல்கள் அவளுக்கு நடக்கின்றது தான். காலையில் எண்ணெயை வேண்டுமென்றே ஊற்றியது ஆராதனா தான் என சொல்லியிருந்தாள் அவள்.

அவன் யோசனையை பார்த்து, தன் கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டான் வர்ஷன்.

"அப்போ... அவ சித்தி இன்னும் திருந்தல அதானே??" கோபம் வந்தது மறைத்துக் கொண்டு நக்கலாக கேட்டான்.

அவன் கேள்வியில் அசடு வழிந்தான் இவன்.

"நல்ல ஃப்ரெண்ட்ஷிப் டா!! எப்படித்தான் இப்படி ஃப்ரெண்டாகனீங்களோ? எப்பா டேய்....! உங்க ஃப்ரெண்ட்ஷிப் பார்த்து எனக்கே கண்ணு வேர்க்குதுடா..." என்றான் சிரித்தபடி.

"எங்க ஃப்ரெண்ட்ஷிப்பை பார்த்து கண்ணு வைக்காதீங்க சார்!!"

"அது சரி நாங்க கண்ணு வெச்சுட்டாலும்" என்றவன்,

"ஆனாலும் அகரா.. உன்னையும் அவளையும் பார்த்தா ஒரே வயசு மாதிரி தெரியலையே! எப்படித்தான் உன் கூட ஃப்ரெண்டானா??"என வினவினான்.

சிரித்துக் கொண்டே, தனது தோழியையும் தன் தோழமையும் பற்றி கூறினான்.

"எனக்கு அப்போ பத்து வயசு இருக்கும் சார்! எனக்கு அம்மா அப்பா யாருமே இல்ல. அனாதையா திரிஞ்சவன் நான்! கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சிட்டு இருக்கும்போது தான், சின்ன பொண்ணா, அஞ்சு வயசு சிட்டா எனக்கு அமுதா அறிமுகமான.

எனக்கு யாருமே படஃப்ரெண்ட்ஸ் இல்ல சார். யாருமே என் பக்கத்துல கூட வர மாட்டாங்க. ஆனா இவ தான் என் கூட முதன் முதலா பேசினா. என் கை பிடிச்சு ஃப்ரண்டானா... ஸ்கூல்ல என் கூட என் ஃப்ரண்டாவே சுத்துனா.. இப்போ வரையும் ஃப்ரண்டா இருக்கா" என்றவன் கலங்கும் கண்களை துடைக்க கூட தோன்றாமல், சாலையில் கவனத்தை வைத்திருந்தான்.

இவர்கள் இருவரின் பிணைப்பை பார்த்து, அன்று போல் இன்றும் வியந்து கொண்டான் வர்ஷன்.

ஏனோ தனக்கும் அவளுடன் நட்பு கரம் நீட்ட வேண்டும் என ஆவல் பிறந்தது. அதற்காகவே அமுதாவை பற்றி பேசினான்.

"ஃக்கும்... அமுதா எங்கிட்ட மன்னிப்பு கேட்க போறான்னு சொன்னியே அகரா!

இன்னைக்கு சாயங்காலம் வேலை முடிச்சுட்டு போயி உன் ஃப்ரண்ட் சந்திக்கலாமா..?" என்றவன், அகரனின் வியந்த பார்வையை கண்டு கொள்ளாமல், புன்னகைத்தான்.
 
Top