• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

06. உன்னாலே உயிரானேன்...

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
புல்லினங்கால் ஓஹ் புல்லினங்கால் உன் கீச்சொலிகள் வேண்டிநின்றேன்....



என்ற பாடல் தேய்ந்து மறைய,



"புல்லினங்கால் ஓஹ் புல்லினங்கள் உன் பேச்சரவம் கேட்டு நின்றேன்...."



என இரண்டு வரிகளை தன் குரலில் பதிவு செய்தவள்,



"இளம் பரிதியின் பரிதசம் நம்மை தழுவும் சூப்பரான காலை பொழுதில,



ந. முத்துக்குமார் வரிகள்ல, நம்ம ஆஸ்கார் நாகயன் இசையமைப்பில், ஏ.ஆர். அமீன் குரலில் அழகான பாடலை கேட்டிட்டு வந்தாச்சு...."



"சும்மா சொல்லக்கூடாது..... நம்ம கவிஞர்களோட கற்பனை திறமையை நினைக்குறப்போ ஆச்சரியமா இருக்கு.



எப்பிடில்லாம் யோசிக்கிறாங்க?



ஒரு பொருளையோ, அல்லது ஒரு உயிரினத்தையோ வர்ணிக்கும் போது அதுகூடவே வாழ்ந்திருப்பாங்களோனு நினைக்க தோணுது.



இந்த பாட்டில கூட சில லைன்ஸ் இருக்கே!"



"மொழி இல்லை.... மதம் இல்லை.....



யாதும் ஊரே என்கிறாய்..



புல் பூண்டு.... அது கூட



சொந்தம் என்றே சொல்கிறாய்....



காற்றோடு விளையாட



ஊஞ்சல் எங்கே செய்கிறாய்.....



கடன் வாங்கி சிரிக்கின்ற



மானுடன் நெஞ்சை கொய்கிறாய்.....



உயிரே..... எந்தன் செல்லமே.....



உன் போல் உள்ளம் வேண்டுமே! செம்ம வரில்ல..,



அப்பிடியே புரட்சி கவியோட கவிவரிகளை போலவே நமக்குள்ளையும் புரட்ச்சிய ஏற்படுத்திச்சுனே சொல்லலாம்.



ஓக்கே.... ரொம்ப நேரம் பாடல்ல மூக்கி முத்துக்குளிச்சிட்டோம்...



இப்போ நம்ம நிகழ்ச்சிக்குள்ள போவோமா!



மறக்கப்பட்ட விடையங்களையும், மர்மமாய் போன சில தகவல்களையும் உங்களுடன் சேர்ந்து நானும் அறிந்து கொள்ளும் சூப்பரான ஒரு ஷோ தான்க இது.



மெய்யெனக் கொட்டு முரசே......!



இந்த இரண்டு மணிநேரத்தை எப்பிடி கடந்தோம்னே தெரியாத அளவுக்கு, இது வரை அறிந்திடாத பல சுவாரஷியமான தகவல்களோட அற்புதமாவே கடந்து வந்திட்டோம்."



"இப்போ தொடர்ந்து வர இருக்கும் பாடலோடு நான் விடைபெறும் நேரமும் வந்தாச்சு....!



இதுவரை என்னோடு கைகோர்த்த அத்தனை உறவுகளுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொண்டு



தொடர்ந்து, மோதி விளையாடு நிகழ்சியோடு கலையகத்தில் ஹம்சி, மற்றும் தமிழ் உங்களை மகிழ்ச்சிப்படுத்த வந்தாச்சு.



மற்றுமோர் நிகழ்ச்சியில் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறும் நான் உங்கள் அன்பில் என்றும் மதுஸ்ரீ.....



டாட்டா பாய்....! பாய்... நேர்களே...." என்ற அவளது குரலை தொடர்ந்து ஒலித்ததது,



"செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே!.." என்ற பாடல்.



அது வரை தன் காதினை மூடியிருந்த கெட்ஃபோனினை கழட்டியவாறு தனது இருக்கையில் இருந்து எழுந்தவளை ஓடி வந்து தழுவிக்கொண்டாள் ஹம்சி.



இதற்கு முன் மது இவளை கண்டதே இல்லை.



காலையில் சந்தித்து கொண்ட இருவருக்கும் இடையில் கட்டிக்கொள்ளும் அளவிற்கு எப்படி இவ்வளவு ஒட்டுதல் என்று கேட்டால் இருவருக்குமே அது ஆர்ச்சர்யம் தான்.



ஏனெனில் மதுஸ்ரீயும் சரி, ஹம்சியும் சரி அவ்வளவு எளிதில் யாருடனும் நட்பு பாராட்டி விட மாட்டார்கள்.



எப்படி தான் ஒருவரிடம் நெருங்கி பேசி சிரித்தாலும், அவர்களுக்கு கௌரவ தோற்றமளித்து மரியாதையாக நடத்துவார்களே தவிர, நட்பு எனும் எல்லைக்குள் சேர்த்துக்கொண்டதில்லை.



ஒரே குணாதிசயம் கொண்ட இருவரது கோடுகளும் ஒரே புள்ளியில் சந்தித்துக் கொண்டதும் பற்றிக்கொண்டதோ என்னவாே!



ஆம் அவள் காலையில் இருந்து பரபரப்பாக தயாரானதே ரேடியோ ஸ்டேஷனில் அவளை நேரடி நிகழ்ச்சியில் அறிவிக்கும் படி கூறியதனால் தான்.



அவள் நினைத்ததை விடவும் அவளது தொகுப்பானது மிக சிறப்பாக அமைந்தது என்பதற்கு சாட்சியாக அங்கு அறிவிப்பு செய்யும் அத்தனை அறிவிப்பாளர்களும் அவளை சூழ்ந்து கொண்டு ஆச்சரியாமாக பல கேள்விகள் எழுப்பியவாறு வாழ்த்தினர்.



அவற்றினை மிக பணிவாக ஏற்றுக்கொண்டவள், அவர்களது கேள்விகளுக்கு நிதானமாகவே பதிலும் தந்தாள்.



அவர்களது முதல் கேள்வியே முன்னரே இதில் அனுபவம் இருக்கா?என்றதுதான்.



அவளாே சர்வ சாதாரணமாக



"இன்று தான் இந்த மைக்கையே பாக்கிறேன்." என்கவும்,



"என்னது...? அப்போ உனக்கு கன்சோல் போர்ட் கூட ஆப்ரேட் பண்ண தெரியாதா? அப்புறம் எப்பிடி? என்க.



நான் கன்சோல் பாேர்ட் ஆப்ரேட் பண்ணலயே!



தமிழ் தான் எனக்கு உதவியா எதிரல இருந்து கெல்ப் பண்ணாரு!



என்னோட இன்றைய உழைப்பு என்னோட குரல் மாத்திரம் தான்." என்று கூறி தமிழை பார்க்க.



அவனோ அவளை மெச்சுதலாக பார்த்து புன்னகைத்தான்.



தானும் அவனுக்கொரு புன்னகையினை பரிசளித்தவள்,



அவர்களது மறு கேள்வியான "இதுவரை மைக்கை (எலக்ரோ வாய்ஸ் மைக்ரோ ஃபோன்) கூட பாத்தது இல்ல என்கிறியே.., அப்புறம் எப்பிடி இவ்வளவு நல்லா, எந்த பதட்டமோ பிசகாே இல்லாமல் தொகுத்து வழங்கின?" என்க.



"தெரியல.... பட் நான் தான் ரேடியோ கேட்பேனே!" என்றவள்,



என்னோட ஃபீலிங் எப்பிடி சொல்லுறது.



நான் கனவில கூட நினைச்சு பாக்கல... முதல் முதல்ல எந்த ரேடியோ கேட்டேனோ! அதே ரேடியோவில இன்னைக்கு தொகுப்பாளினியா இருப்பேன்னு." என்று பெருமையாக சொன்னவளிடம்,



"என்ன மேடம் வந்ததும் ஐஸ்ஸா?.. இந்த ஐஸ்ஸ கேக்க மேனேசர் கூட இப்போ இல்லையே!



வெளியல்ல போய்ட்டாரு." என்றவர்களது கேலிப்பேச்சில்.



"அட நிஜமாப்பா...!" என்று எதுவோ பேச வந்தவளை,



"உஷ்..." என்று பேசவிடாது தடுத்த ஹம்சி,



மதுஸ்ரீ கழட்டி வைத்த கெட்ஃபோனினை தான் மாட்டிக்கொண்டு.



கை கடிகாரத்தை சுட்டிக்காட்டி டைமாச்சு. என்று சைகை செய்தவள்,



"தமிழ் ரெடியா?" என்றாள்.



அவள் கேட்டதும் தான் நினைவு வந்தவனாக. எங்கோ கவனத்தை வைத்திருந்தவன் வேகமாக கெட்ஃபோனை எடுத்து மாட்டினான்.



ஆம்.... இது தான் ஹம்சி. அவள் நடவடிக்கை எல்லாவற்றையும் பார்க்கும் போது விளையாட்டுத்தனமாகவே இருக்கும். என்ன தான் சிறுபிள்ளை தனமாக நடந்து கொண்டாலும், வேலை என்று வந்து விட்டால் நூறு வீதம் தன் பங்களிப்பை கொடுக்க நினைப்பவள்.



ஒரு விநாடிகள் மீதமிருக்க.



"வணக்கம்.. வணக்கம்... வணக்கம்.... வணக்கம் ஹம்சி." என்று உட்சாகமாக சொன்னவனை அபூர்வமாக திரும்பி பார்த்தவாறு.



"வணக்கம் தமிழ். வணக்கம் மக்களே.....! எல்லாரும் எப்பிடி இருக்கீங்க? அப்புறம் தமிழ்... என்ன இன்னைக்கு இத்தனை வணக்கத்தோட வந்திருக்கிறீங்க ? எனி ஸ்பெஷல்? என அதிசயமாக வினவினாள் ஹம்சி.



"என்ன ஹம்சி இந்த மாதிரி கேட்டுட்டீங்க? இது நம்ம வழக்கமா செய்யிற ஷோ இல்லையே!



எப்பவும் சீரியசா பேசிட்டிருக்க நம்ம ரெண்டு பேருமே இன்னைக்கு நேயர்ளோட செம்ம ஃபண்ணா விளையாட வந்திருக்கோம்னா புது எனர்ஜி வேணாமா?



அது தான் நான் ஏற்கனவே ரெடியாகிட்டேன்." என கூறி சிரிக்க.



"அது என்னவோ உண்மை தான் தமிழ். நம்ம நேர்களோட போட்டி போடுறதுனா சும்மாவா என்ன?



சரி சரி வளவள கொளகொள பேச்சை நிறுத்திட்டு,



ஷோக்குள்ள போயிடலாம்.



அதுக்கு முன்னாடி சிங்கிளா வந்து நம்ம கலையகத்தையே அதிர வைச்சிட்டு போன சிங்கப்பெண் மதுஸ்ரீக்கு ஒரு நன்றியை தெரிவிச்சிடுவோம்." என்றவள் தமது ஷோவினை பற்றி சிறு விளக்கமளித்து விட்டு,



பாடலை ஒலிக்கவிட்டு அந்த இடைவெளியினை பயன்படுத்தி கூட்டத்தோடு வந்து கலந்தாள்.



"சாரிப்பா! ஷோக்கு டைம் ஆச்சு. அதான் உங்க பேச்சை கெடுத்துட்டேன்.



இப்போ சொல்லு மதுஸ்ரீ." என்றாள்.



"பரவாயில்ல ஹம்சி." என்றவள்,



"முன்னாடி எல்லாம் நான் ரேடியோவே கேட்க மாட்டேன். அதுக்கு டைமே இல்லனு சொல்லலாம்,



போன இயர் என்னோட பைக் ரிப்பயர் ஆகிடிச்சு,



காலேஜ் போக பைக் இல்லாததனால என் ஃப்ரெண்ட்ஸ் கூட ஜாலியா பஸ்ல போய் வருவோம்னு பேசி வைச்சு போனோம்.



பஸ்ல கேட்ட குரலும், தொகுத்து வழங்குற அழகையும் கேட்டு ஒரு ஈர்ப்பு வந்திடிச்சு.



அதுக்கப்புறம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரேடியோ கேப்பேன். அப்பிடி கேக்கிறதனாலயோ என்னவோ எனக்கும் தொகுப்பாளர் ஆகணும்னு ஆசை வந்திடிச்சு... அதான் பேப்பர்ல வந்த நியூஸ பாத்திட்டு நானும் இன்டர்வியூவ அட்டன் பண்ணேன்." என்க.



"என்னது ஒரு வருஷத்துக்கு முன்னாடி தான் ரேடியோவே கேட்டியா? அது யாரு புரோக்கிராம்?" என்றாள் ஒருத்தி.



"இன்னைக்கு நான் செய்த புரோக்கிராம் செய்றது ஹம்சியும், தமிழும் தானே. அவங்க புரோக்கிராம் தான்.



அவங்க ரெண்டு பேரோட கலகலப்பான பேச்சும். நிகழ்ச்சிய தொகுத்து தர விதமும் நல்லா இருந்திச்சு, அதனால புடிச்சு போச்சு." என்க.



"இருந்தாலும் இதெல்லாம் நம்புறது போல இல்லம்மா!



நாங்கல்லாம் இந்த ஃப்பீல்ட்க்கு ரெண்டு வருஷம் படிச்சு, அப்புறம் மூணு மாத ரைணிங்க் முடிச்சுத்தான் வந்தோம்.... அப்பிடி இருந்தும் மைக் முன்னாடி போய் நின்னாலே இப்ப கூட பதறும்.



ஆனா நீ அசால்டா பேசிட்டு இவ்வளவு பணிவா பேசுறது எல்லாம் ஓவர் தான்." என்றவாறு மற்றவர்கள் மீண்டும் வாழ்த்து கூறி விடை பெற.



ஹம்சியோ மதுவை பெருமையா ஒரு பார்வை பார்த்து புன்னகையுடன் தோள்களை குழுக்கியவள்.



"இப்படியே மெயின்டேன் பண்ணு மதுஸ்ரீ." என்றவாறு தன் இடத்தில் போய் அமர்ந்து கொள்ள.



நம்ம தமிழுடைய பார்வை தான் மதுஸ்ரீயை விட்டு அகலாமல் அவளையே சுற்றிக்கொண்டிருந்தது.



நேரமோ சிறப்பாக அதன் பணியினை செய்ய.



இன்று கல்லூரிக்கு மது விடுமுறை எடுத்திருந்ததனால்
இன்றைய நாளினை சாதாரணமாக ரேடியோ ஸ்டேஷனிலேயே கழிக்க முடிந்தது.



புரோக்கிராம் செய்யும் குறிப்பிட்ட ஸ்ரூடியோ பகுதியினை விட்டு வந்து வெளியில் அமர்ந்திருந்தவளை சூழ்ந்து கொண்ட மற்றயவர்கள் அவளை மாறி மாறி பேட்டி கண்டவாறு இருந்தனர்.
அதில் தமிழும் உள்ளடக்கம்.



ஆனால் அவன் மதுஸ்ரீயிடம் ஒரு கேள்வி கேட்கவில்லை.



மற்றவர் கேட்கும் கேள்விகளுக்கு சலிக்காமல் பேசிக்கொண்டிருந்தவளது ஒவ்வொரு அசைவையும் தன்னை மறந்து ரசித்தவாறு இருந்தவனது செயல் மதுஸ்ரீக்கு மாத்திரமல்ல, அங்கு பேசிக்கொண்டிருந்த அத்தனை பேருக்கும் தெளிவாகவே தெரிந்தது.
அதை கண்டு கொள்ளாதவர்களைப் போலவே அனைவரும் இருந்து விட்டனர்.



ஏனெனில் தமிழ் இதுவரை ஒரு பெண்ணைக்கூட இந்த மாதிரியாக பார்ப்பவன் கிடையாது.



எல்லோரிடமும் இலகுவில் நட்பு வைத்துக்கொள்வான். ஆனால் நட்புடன் சேர்த்து மரியாதையும் அதிகமாகவே இருக்கும்.



அவன் அழகனாக இருக்கும் காரணத்தினால் அவனை பல பெண்கள் காதல் வலையில் சிக்க வைக்க எத்தனையோ விதங்களில் முயற்ச்சித்தும், அதை இலகுவாகவே நிராகரிப்பது மட்டுமில்லாமல்.



சகோதரி என்ற முறையில் தான் பழகினேன்.
....



உன் தவறான எண்ணத்திற்கு நான் காரணமாக ஏதோ ஒரு விதத்தில் நடந்து கொண்டிருந்தாலும் மன்னித்து விடு! என்று கூறுபவன்.



அன்றிலிருந்து அவர்களோடான பேச்சையும் விட்டு விடுவான்.



இது தான் தமிழ்! இவனது குணம் அறிந்தவர்கள் அவன் மேல் விருப்பமிருந்தாலும் எங்கு தமது காதலை நிராகரிப்பதும் இல்லாமல் பேசாமல் விட்டுவிடுவானோ என்ற பயத்தில், காதல் தான் வேண்டாம், அவனுடனான நட்பாவது நிலைத்திருக்க எண்ணி தம் காதலை அவனிடம் கூற மாட்டார்கள்.



அப்படிப்பட்டவனே ஒருத்தியை இந்த மாதிரி ரசிக்கிறான் என்றால், தவறான எண்ணத்தில் அவன் பார்வை அமைய வாய்பில்லை என்பதை புரிந்தவர்கள், அவனது மாற்றத்தினை தமக்கு தெரிந்து விட்டது என்பது போல் காட்டிக்கொள்ளாமல் அமைதி காத்தனர்.



அதே போல் அவன் மயங்காமல் இருப்பதற்கு அவன் எதிரில் இருப்பவளும் சாதாரண அழகியும் அல்லவே!



அப்படி அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது எங்கிருந்தோ ஓடி வந்த ஹம்சி.



மதுஸ்ரீ முன்னால் இருந்து பேசிக்கொண்டிருந்தவளை எழுப்பி அந்த இடத்தில் தான் அமர்ந்தவள்.



அவளது கைகள் இரண்டையும் பற்றிக்கொண்டு.



"நான் மேனேஜர் கிட்ட பேசிட்டேன் மது. முதல்ல என்ன காரணம்னு கேட்டாரு.



நீ காலேஜ் படிக்கிற, அதனால மார்ணிங்க் புரோக்கிராம் செய்ய முடியாது, காலேஜ் முடிஞ்சதும் அவ வந்திடுறேன் என்கிறா, அதுக்கேத்தது போல ஷோவ அரேஞ் பண்ணிடலாமா சார்ன்னு கேட்டேன்.
அவரும் கொஞ்ச நேரம் யோசிச்சாரு
,



அப்புறம் என்ன நினைச்சாராே ஓகே சொல்லிட்டாரு.



நிஜமாவே உன் திறமைக்கு என்கே போனாலும் யாராலையும் உன்னை விட்டிட மனசு வராது மது.



இன்னைக்கு நீ செய்த ஷோவ நானும் தமிழும் எவ்வளவு கஷ்டப்பட்டு செய்வோம் தெரியுமா?



ஆனா நீ தனியா எப்பிடி செய்தேனு நினைக்கும் போது ஆச்சரியாமாவே இருக்கு. இன்னைக்கு அந்த ஷோவோட சீரியஸ்னஸ் மாறாமல், அதே வேளை கலகலப்பையும் சேர்த்து குடுத்த பாரு செம்ம......




இன்னைக்கு பூர உன்னை பத்தி கேட்டுத்தான் கால் மேல கால் வருதுனு மேனேஜர் சொன்னாரு,



அதனால தான் உன்னை மிஸ் பண்ண கூடாதுனு நினைக்கிராரு போல.



நாளைக்கு நீ காலேஜ் முடிச்சிட்டே வந்திடு.



ஐஞ்சு மணிக்கு உன் ஷோ ஆரம்பமாகும். எட்டு மணிக்கு முடிஞ்சிடும்." என்க.



அதைக்கேட்டு சந்தோஷத்தில் எழுந்து குதித்தவள்,



"ரொம்ப தாங்க்ஸ் ஹம்சி. இதுவும் என்னோட கனவில ஒன்னு..... எங்க நடக்காமல் போயிடுமோனு பயந்துட்டேன்." என அவளை இறுக அணைத்துக்கொண்டாள் மதுஸ்ரீ.



ஆம் அங்கு உள்ளவர்களுக்கு என்ன காரியம் ஆகவேண்டும் என்றாலும் ஹம்சியைத்தான் மேனேஜரிடம் அனுப்புவார்கள்.



ஏனெனில் அவள் தான் வேலையில் மிக கவனமாக இருப்பவள், அதனால் அவர் மத்தியில் அவளுக்கென்று தனி மரியாதை.



அவள் எதை கூறினாலும் நிச்சயம் அதன் பின்னால் ஒரு காரணம் இல்லாமல் இருக்காது என்ற நம்பிக்கை அவருக்கும்.



அவளும் நியாயமில்லாத செயலுக்கு துணை போய் மேனேஜரிம் பேசவும் மாட்டாள்.



தானும் அவளை இறுக்கி அணைத்த ஹம்சி.



"நமக்குள்ள இனி இந்த தாங்க்ஸ், சாரில்லாம் வேண்டாம் மது, நம்ம தான் நல்ல ஃப்பிரெண்ஸ் ஆகிட்டோமே! அப்புறம் எதுக்கு இந்த பார்மாலிட்டிஸ் எல்லாம்?" என கெஞ்சுவது போல் கேட்க.



அவளது பேச்சில் கலிரென சிரித்த மது.



"ஏய்....! நம்ம தான் நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆச்சே!. அப்புறம் எதுக்கு கெஞ்சுற? சாரி, தாங்க்ஸ் சொன்னா கொண்டுடிவேன்னு உரிமைய சொல்லுடி!." என்றாள்
.



"அதானே நான் ஏன் கெஞ்சனும்? இனி அந்த மாதிரி சொல்லிப்பாரு அப்புறம் ஹம்சியோட கோபம் எந்த மாதிரியானதுனு புரியும்." என்றவள்,



"சரி மது நீ வீட்டுக்கு கிளம்பு....! நாளைக்கு காலேஜ் முடிச்சிட்டு நேர இங்க வந்திடு.



மேனேஜர் ரொம்ப ஸ்ரிக்ட்டி! வேலையில சின்ன பிசகுன்னா கூட தாம் தூம் தான்...... பாத்து நடந்தக்கோ!" என எச்சரித்தாள்.



"ம் .... சரி நான் பாத்துக்கிறேன் ஹம்சி. அப்போ நான் கிளம்புறேன்." என்று வெளியேறி, அவளை வழியனுப்ப ஹம்சியும் சென்றாள்.



போகும் அவளையே வாய் பிளந்து பார்த்தவாறு நின்றவன் தாடையில் ஒரு அடி போட்டு அதை மூடச்செய்த மாய(வ)ன்,



"என்ன மாப்பிள்ளை? எந்த வாட்டர் பால்ஸ் லீக்காகி உன் வாய் வழியா வழியிது?" என்றவன்,
"சீக்கிரம் தொடச்சுக்கோ மாப்பிள்ளை!



இல்லனா இருக்கிற தண்ணி பஞ்சத்தில யாராவது பாத்துட்டாங்கனா நிஜத்திலயும் அது அருவிதான்னு நினைச்சு பாட்டில்ல புடிச்சுக்க போறாங்க." என கேலி செய்தவனை திரும்பி பார்த்து தமிழ் முறைக்க.



"கோவிச்சுக்கிட்டியா மாப்பிள்ளை.....! நான் சும்மா விளையாட்டுக்குத் தான் சென்......." என்றவன். சட்டென ரூட்டை மாற்றி
,



"அப்பிடில்லாம் சொல்லுவேன்னு நினைச்சியா...? என்னடா ஆச்சு உனக்கு? காலையில இருந்து நீ நீயாவே இல்ல.



அதுவும் அந்த பொண்ண பாத்ததில இருந்து வித்தியாசமாவே நடந்துக்கு
....!



அவ வாசல்ல வரும் போதே கவனிச்சேன்.
பேயறைஞ்சா மாதிரி அதிர்ந்து நின்னவன் மதுஸ்ரீ.... என்று அவ தன்னை அறிமுகப்படுத்துறதுக்கு முன்னாடியே அவ பெயரை உனக்குள்ளவே சொன்னதை நான் என் காதால கேட்டேன்.



எப்பிடிடா அவ பெயர் உனக்கு தெரியும்? முன்னாடியே அவ உனக்கு பழக்காமான்னு கேட்டும் என் பேச்சை காதிலையே வாங்காம அவளையே பே....ன்னு பாத்திட்டு நிக்கிற, அப்புறம் உழுக்கி கேட்டா...,

தூக்கத்தில


இருந்து முழிச்சவனைப்போல



என்னடான்னு திரும்ப என்னையே கேட்டதும் இல்லாம,
நான் எங்க அவ பெயரை சொன்னேன்? அவளையே இன்னைக்குத் தான் பாக்குறேன்.... அவ பெயரை எப்பிடி நான் சொல்லுவேன்? நீ தான் ஏதோ கற்பனையில இருக்கேன்னு என்னையே குழப்பி
விடுற.



நானும் ஒரு வேளை நம்ம தான் கனவு ஏதாவது கண்டுட்டமோனு அவ பின்னாடி போன, அவளும் நீ சொன்ன பெயரையே சொல்லி தன்னை மத்தவங்க கிட்ட அறிமுகப்படுத்துற......!



என்னடா நடக்குதிங்க? எனக்கு எதுவுமே புரியல
....



சரி அப்போ தான் ஏதோ விபத்தா ஒரு விஷயம் நடந்து எண்டு விட்டா, நீ அவளை பாத்த நொடியில இருந்து மந்திரிச்சு விட்டவனாட்டம் எதுக்கு அவளையே ப்பே னு.... வாய்பிளந்து பாத்திட்டிருக்க?



உண்மைய சொல்லு...... அவளை உனக்கு ஏற்கனவே தெரியும் தானே?" என்று நண்பன் பொய் தான் கூறுகிறான் என நினைத்து வினவ.



இப்போதும் இல்லையென தலையசைத்தவன்,



"சத்தியமா அவளை நான் இதுவரை கண்டதே இல்லடா. ஆனா அவளை பாத்த நொடியில இருந்து அவளை மட்டும் தான் பாக்கணும்னு மனசு துடிக்குது மாயன்.



அவகிட்ட ஏதோ மாயம் இருக்கு. அதனால தான் நான் மந்திரிச்சு விட்டவன் போல ஆகிட்டன்." என்றான்.



கிழிஞ்சுது.. இது என்ன கருமாந்திர நோயோ...? பாத்ததும் பத்திக்குது." என்றவன்,



"ஐயா ராசா..! நான் சின்ன புள்ளைய்யா..... என்னையும் கெடுத்து விட்டுடாத, உன்னையும், என்னையும் தான் இந்த நோய் இன்னும் புடிக்கலனு நினைச்சு சந்தோஷப்பட்டேன்.
இப்போ அது உன்னையும் புடிச்சுகிடிச்சு. உன்கூட சேந்தா அது என்மேலயும் தொத்துறத்துக்கு நிறைய சான்ஸ் இருக்கு,



அதுவுமில்லாம இந்த நோய் வந்தவங்க கூட சேர்ந்தா நமக்குத் தான் இனி டேஞ்சர்.



நண்பன் எண்டிருக்கிறவன இரக்கமே இல்லாம சூணியப்பொம்மை கணக்கா பயன் படுத்துவாங்க.
ஆளை விடு..... நான் நூறு வருஷம் வாழணும். அந்த பொண்ணோட பெத்தவங்க கிட்டல்லாம் என்னால உதை வாங்க மடியாது." என்று ஓடியே விட்டான்.







ஜென்மம் நீளும்..........
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,971
IMG_20220123_120930.jpg
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️
 
Top