• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

06. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை!


அத்தியாயம் - 06

ஷம்லா பஸ்லி

மது வர்ஷனின் கைகளில் சிறுத்தையாய் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது அவனது கார்.... பக்கத்து சீட்டில் அமர்ந்து அவனை ஏறிடுவதும், மறு புறம் திரும்புவதுமாக இருந்தான் அகரன்...

'குட்டி பேபிக்கு எதுவோ சொல்லனும். ஆனா அதை சொல்ல ஏன் தான் இவ்வளவு தயக்கமோ தெரியல' என மனதினுள் சிந்தித்துக் கொண்டான் மது வர்ஷன்.

ஒரு கட்டத்தில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு "சா...சார்...." என்று அழைத்தான் அகரன்.

"ம்ம் சொல்லு..." ஒரு கையால் ஸ்டீரிங்வீலைத் திருப்பியவாறு கேட்டான்.

"அது வந்து சார்...!! நாம அமுதா வீட்டுக்கு போக வேண்டாம்" என்று தட்டுத்தடுமாறி சொல்லி முடித்தான் அவன்.

சடாரென திரும்பி அவனை நோக்கியவன்,

"அமுதாவ பாக்க, அவ வீட்டுக்கு போகாம, அடுத்த தெரு அம்சா பாட்டி வீட்டுக்கா போக முடியும்?" கிண்டலாக ஒலித்தது அவன் குரல்.

"இ... இல்ல அவ வீட்டுக்கு போனா வேண்டாத பிரச்சனை தான் வரும். அதனால மெயின் ரோடுல இருக்குற காபி ஷாப்கு வரேன்னு சொல்லி இருக்கா" மெல்லிய குரலில் அகரன் கூற,

"தெரியுமே! அந்த பயந்தாங்கொள்ளிய பற்றி" என முணு முணுத்தான் அவன்.

அதுவும் கேட்டு விட்டது மற்றவனுக்கு. "பாவம் சார் அம்மு! எத்தனை கஷ்டத்தை தான் தாங்குவாள் அவளும்...? நீங்க அங்க போனா அதுக்கும் ப்ராப்ளம் வரும்" என தோழிக்காக வரிந்து கட்டிக்கொண்டு வந்தான் மது வர்ஷனின் குட்டி பாப்பா.

"உடனே வந்துருவியே! அம்மு பொம்முன்னுட்டு... இப்படி பாவம் பார்த்து தான், அவளை வாயில்லா பூச்சியாக்கி வெச்சிருக்க" இம்முறை வாய்க்குள் முனகிக் கொண்டான்.

இருவரும் அமைதியாக வர,
"ஏண்டா அமைதியா வர? ஏதாவது சொல்லு" என மௌனத்தை கலைத்தான் மது.

முதலாளியை நிமிர்ந்து பார்த்து, "என்ன சொல்லட்டும் சார்...?" பதில் கேள்வி கேட்டான் அவன்.

"உன் அம்முவை பற்றி சொல்லு. ஐ மீன் அவளுக்கு பிடிச்ச விஷயங்கள்...!" என கேட்டவனுக்கு அவளது விருப்பங்களை தெரிந்து கொள்ள மனது துடித்தது.

அவனோ புருவ முடிச்சுடன் மதுவை ஆராய்ச்சியாகப் பார்த்தான்.

"என்ன அப்பிடி பாக்குற..? இவனுக்கு அமுதாவை தெரிஞ்சே கொஞ்ச நாள் தான் ஆச்சு. அதுக்குள்ள அவ மேல ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்கிறானேனு பார்க்குறியா?" என கேட்டவன், தானே அதற்கான பதிலையும் அளிக்க சித்தமானான்...

"சில விஷயங்கள் நமக்கு பார்த்த உடனே பிடிச்சு போகும். சில சாங்ஸ் கேட்ட உடனே மனசு தொட்டுரும். அதை திரும்பத் திரும்ப பார்க்கனும், கேட்கனும்னு மனசு பரபரக்கும்.

ஏன் புடிச்சதுன்னு கேட்டா காரணம் இருக்காது அகரா! அது போலத்தான் உன் ப்ரெண்டும்... நீ சொன்ன விஷயங்களை கேட்டு, அவளை புடிக்குது.

உனக்கு அம்மாவா இருக்குற அவ கூட, எனக்கும் நட்புக் கரம் நீட்டனும்னு தோணுது" என்று உண்மையை மறைக்காமல் சொன்னான் அவன்.

மதுவர்ஷனை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான் அகரன்.

"என்னடா முழுங்குற மாதிரி பார்வை?" வலது புருவத்தை அழகாக ஏற்றி இறக்கினான் பெரியவன்.

"சார்...! நீங்க புருவத்தை உயர்த்துற ஸ்டைல் சூப்பரா இருக்கு. உங்கள பாத்துட்டே இருக்கணும் போல தோனும். சில நேரங்கள்ல ஆபீஸ்கு கம்பீரமா நடந்துட்டு வரும் போது, உங்களோட அந்த சிங்க நடைய பார்த்து சல்யூட் வைக்கணும்னு கூட ஆசை வரும்" முதன்முதலாக தனது மனதில் நினைத்ததை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டான் அகரன்.

"யார் சல்யூட் வைக்க வேணாம்னு சொன்னா?" சிறு சிரிப்பு தவழ்ந்தது அவனது முரட்டு இதழ்களில்.

"பட் அந்த ஹேண்ட்ஸம் எம்டிக்குள்ள, பாம்பு கேம் விளையாடுற பாப்பா ஒன்னு இருக்குனு தெரிஞ்சதும், சல்யூட் வைக்குற எண்ணம் சிட்டா பறந்து போச்சு..." சிரிக்காமல் தான் அவன் காலை வாரினான் சின்னவன்.

அவனுக்கு மட்டும் தான் வாலிக்காமல் ஊசி ஏற்றத் தெரியுமா...? தன்னாலும் முடியும் என நிருபித்து காட்டினான் அகரன்.

"கிரேட் இன்சல்ட்" கட்டை விரலால் ஒற்றைப் புருவத்தை நீவி விட்டுக் கொண்டவன், காபி ஷாப்பில் வண்டியை நிறுத்த இருவரும் இறங்கிக் கொண்டனர்.

"எங்கே நம்ம பொம்ம குட்டியை காணோம்" வர்ஷனின் வேல் விழிகள், மான் விழியாளைத் தேடி அலைபாய்ந்தன.

"எங்கப்பா உன் பிரெண்டு...??"

"இப்போ வந்துடுவா என்று நினைக்கிறேன் சார்! சொன்ன டயத்துக்கு கரக்டா வந்திடுவா அம்மு. இன்னும் டூ மினிட்ஸ் இருக்குல்ல" வீராப்பாய் விழுந்தது வார்த்தைகள்.

"விட்டுக் கொடுக்க மாட்டியே அம்முக்கு யாழினிய" அமுத யாழினி அம்முக்கு யாழினியாக பட்டம் பெற்றாள் அவளின் வருங்கால மணவாளனிடம்!

"சொன்னேன்ல சார் வந்துட்டாள்" அவன் கைகாட்டிய பக்கம் பார்வையை செலுத்தியவன், எதிரில் வருபவளை ஆராய்ந்தான்.

இளம் சிவப்பு நிற பாவாடை தாவணியில், எளிமையான அழகியாய் இமை தாழ்த்தி வந்தாள் அமுத யாழினி.

அகரன் வாய் திறந்து வரவேற்பதற்குள், தானே முந்திக் கொண்டு,
"வெல்கம் அமுத யாழினி! சிட் ஹியர்" என்று விட்டு, இருக்கையை இழுத்து அமர்ந்து கொண்டான் ஆடவன்.

அவனுக்கு எதிர் இருக்கையில் அகரன் அமர்ந்திருக்க, வர்ஷுவின் அருகில் இருக்க வேண்டிய கட்டாயமாகிப் போனது அவளுக்கு.

அவள் அகரனைப் பார்க்க, அவன் கண்ணைக் காட்டவும் உட்காரந்தாள் காரிகை.

இதைக் கண்டும் காணாதது போல் இருந்த மது~
"என்னை சந்திக்க வரணும்னு சொன்னியாமே! என்ன விஷயம்?" காரணம் தெரிந்தும் தெரியாதன் போல் வினவினான்.

இமைகள் சிட்டுக் குருவியின் சிறகுகளாய் படபடக்க, அவனை ஒருவித பயத்துடன் நோக்கினாள்.

"நான் ஒன்னும் உன்னை கடிச்சு சாப்பிட மாட்டேன். எதுக்கு பயப்படுற?" என சாதாரணமாக கேட்டாலும், அதில் நீ பயப்படக் கூடாது என்ற மறைமுக எச்சரிக்கை ஒளிந்திருந்தது.

கையைப் பிசைந்து கொண்டவள், "ஸ்ஸ்" என முகம் சுருக்க...

"என்னாச்சு அம்மு?" பதற்றமாக கேட்டான் அகரன்.

"ஒன்னுல்ல அகரா" என மெலிதாக இதழ் பிரித்த அமுதாவை, இமை இடுங்க பார்த்து வைத்தான் அருகில் இருப்பவன்.

அந்த நேரம் பார்த்து அகரனின் அலைபேசி ஒலிக்க, அதை ஏற்று பேசி விட்டு வைத்தவனோ வர்ஷனை பார்த்தான்.

"வாட் ஹேப்பன்ட்? எனி ப்ராப்ளம்" என கேட்டான் அவன்.

"எஸ் சார்! பக்கத்து வீட்டு அம்மா மெடிசின் வாங்க லிஸ்ட் கொடுத்தாங்க. மறந்து போயிட்டேன்... உடனே வாங்கிட்டு போய் கொடுக்கனும்" தயங்கித் தயங்கி இழுத்தான்.

"ஓகே டா.. நீ போ" என்ற மதுவர்ஷனின் பேச்சில், அமுதாவோ அவன் தனியே இவனிடம் விட்டு செல்லப்போகிறான் என்று, மருண்ட வழிகளுடன் இரு ஆடவர்களையும் மாறி மாறி பார்த்து விழிக்கலானாள்.

"பயப்படாதே அம்மு! சாரோட பேசிட்டு வா! இல்லன்னா என் கூட வந்துரு... இன்னொரு நாள் பேசிக்கலாம்" நண்பியின் பயத்தைப் பார்த்து பாவமாக இருந்தது அவனுக்கு.

"அவளை கெடுக்கிறதே நீதான்" குற்றம் சாட்டும் பார்வையை அவன் மீது வீசிய மதுவிற்கு, கோபம் கோபமாக வந்தது .

அவனது கோப முகத்தைக் கண்ட அகரன், எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டு,

"சா... சார்" என்றான் தயக்கமாக.

"போ" என்றான் அடக்கப்பட்ட குரலில், கட்டளை பிறப்பிப்பதைப்போல்.

அவனோ பெரியவனை பாவமாகப் ஏறிட,

"நான் போகச் சொன்னேன்" இம்முறை கடுமையாக விழுந்தது வார்த்தைகள்.
'இவனுக்கு இப்படியும் கோபம் வருமா?' என நினைத்துக் கொண்டே, அமுதாவைக் கண்களால் ஆறுதல் படுத்தி விட்டு வெளியேறினான் அகரன்.

வேங்கையின் செக்கச் சிவந்த வதனத்தைக் கண்டு, மேலும் பயந்து போய், கைகள் உதற நின்றவளின் கையைப் பிடித்துக் கொண்டவன்,
"கைக்கு என்னாச்சு...?" என வினவினான்.

முட்டைக் கண்களை விரித்து முழித்தவள் கையினை, இறுகப்பிடித்து ஆராய்ந்தான்.
முழங்கையில் கையில் இருந்து சிறிது இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

"நீ அமுக்குனி மாதிரி முழிச்சா, அவன் வேணா நம்பலாம் எனக்கு அப்போவே புரிஞ்சிடுச்சு... ஏதோ நடந்து இருக்குன்னு"

"அது... அது... கீழே விழுந்துட்டேன்" குயிலினும் இனிய குரலில் சொன்னாள் அவள், ஆனால் வார்த்தைகள் தான் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது.

"சித்திக்கு தெரியாமல் சுவரேறி குதித்து, குரங்கு வித்தை காட்டும் போது, விழுந்து கையை காயமாகிட்டு வந்திருக்க இல்லையா...??" என உரிமையுடன் கூடிய அதிகார தொனியில் கேட்டதும் பயத்தில்.

"ஆமாம்" என்பதாய் தலையை மேலும் கீழும் ஆட்டி வைத்தாள் அமுதா.

"கொழுக்கட்டையை முழுங்கின மாதிரி, வாயை திறக்காத. எல்லாத்துக்கும் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்ட வேண்டியது" என்று பல்லைக் கடித்தான்.



'சொந்த வீட்டில் இருந்து முன்வாயிலால் வர தைரியமின்றி இப்படி வந்திருக்காளே' அவளை நினைத்து பரிதாபமும் கூட வந்தது.

ஆயினும் அவளது மௌனமும், பயமும் எரிச்சலை கொடுத்திற்று அவனுக்கு.

பேன்ட் பாக்கெட்டில் கை விட்டு, கர்ஷிப்பை எடுத்து இரத்தத்தைத் துடைத்து விட்டவனை, இமைக்காமல் பார்த்தாள் அவள்.

அகரனுக்கு அடுத்து தன் மேல் உரிமை எடுக்கும் மற்றொரு ஜீவன்! இருவருக்கும் சிறு வித்தியாசம்.

அகரன் மென்மையாக இருப்பவன். இவனோ கோபத்திலும் கூட, அதிரடியாய் அன்பை வெளிப்படுத்தக் கூடியவன்!!

அவன் தனக்காக வீட்டில் பேசிய போதே, அவனுக்கு தன்மேல் உள்ள அன்பு புரிந்திருந்தது.

"வேண்டாங்க.... வீட்டுக்கு போய் மருந்து போட்டுக்கிறேன்" என கையை இழுத்துக் கொண்டாள் சங்கடமாக.

எரிக்கும் பார்வையோடு, அவள் கைகளை மீண்டும் பற்றிக் கொண்டவனின் பிடியில், இம்முறை அழுத்தம் இருந்தது.

அவனது ஃபோனில் மெசேஜ் அலெர்ட் வரவும், எடுத்துப் பார்த்தான்.

"சார்! அம்மு குழந்தை சார்! அவள் என்ன பண்ணாலும் திட்டாதீங்க" என அனுப்பியிருந்தான் அகரன்.

'குழந்தைன்னா பீடிங் பாட்டில்ல பாலு ஊத்தி கொடுத்து, தொட்டில்ல போட்டு ஆட்ட வேண்டியது தானே!' தனக்குள் தான் முனு முனுத்துக் கொண்டான்.

'இருந்தாலும் குட்டிப் பாப்பாவுக்கு அவளோட குட்டி அம்மா மேல ரொம்பத் தான் பாசம்' என நினைக்கும் போதே, அவன் இதழ்களில் கீற்றாய் புன்னகை அரும்பியது.

இவனுக்கு சிரிக்கக் கூடத் தெரியுமா ? வியப்புடன் அவன் முகத்தையே அண்ணாந்து பார்த்திருந்தவளைக் கண்டு,
"என்ன? என் முகத்தில் படமா ஓடுது?" அவளது பார்வையின் மாற்றம் கண்டு கேட்டான்.

(ஏன்டா அதை தன்மையா தான் கேளன்... எனக்கே பதறுதே! அவ ஒரு புள்ள பூச்சி... அவளை போய்...)

"இல்லை இல்லை" என்று வேகமாக மறுத்தவள், தலையைக் குனித்துக் கொள்ள, அவனுக்கு தான் ஐயோ என்றிருந்தது!

"சொல்லு அமுதா... எதுக்காக வர சொன்ன?" இம்முறை மென்மையாகத் தான் வினவினான்.

அவனது மென்மையில் சிறிதே அச்சம் நீங்கி
"நீங்க அன்னைக்கு என் வீட்டுல வந்து பேசுனது, எனக்காகத் தான்னு தெரியும். அது தெரிஞ்சும் உங்கள போக சொல்லிட்டேன்... அது உங்கள ரொம்பவே ஹர்ட் பண்ணி இருக்கும்னு புரியுது...! யார் இவன், என் ஃபேமிலி விஷயத்தில் தலையிட அப்படினு சத்தியமா நினைக்கலங்க" என்றாள்.

"பின்ன ஏன் போக சொன்ன? என்ன இருந்தாலும், அவங்க உன் சித்தினு சொன்னே.... உன் சித்தி என்ன பண்ணாலும், அதை பொறுத்து போகலாம்னு முடிவு பண்ணிட்டியா?"

நிமிர்ந்து அவன் விழிகளையே சிறு வினாடி நோக்கியவள், பேசத் துவங்கினாள்.

"சித்தி மேல பாசம் பொங்குதுன்னு சொல்லல... அதை பொறுத்துட்டு போக முடிவு பண்ணேன்னும் இல்ல! என் சித்தியை பற்றி உங்களுக்கு தெரியாது... அவங்க ரொம்ப மோசமானவங்க, எனக்காக தலையிட்டு அவங்களால உங்களுக்கு எதுவும் கெட்ட பெயர் வருமோன்னு பயப்படுறேன் சார்"

அவளை கடுமையாகப் பார்த்துவிட்டு,
"யார் கிட்ட கெட்ட பேர் வரும்? எதுக்கு வரும்...??" என்றான் மது வர்ஷன்.

"நான் அகரன் கூட பேசுறது சித்திக்கு பிடிக்காது. இதுல நீங்க எனக்காக வந்து பேசுனா, உங்க கூட சுத்துறேன்னு வேற மாதிரி பேசுவாங்க. அவங்க பேசுவதை கேட்டு அக்கம் பக்கத்து ஆட்கள் கூட கதை சொல்லுவாங்க" அவனது கோபமாக விழிகளை சந்தித்தவளுக்கு நா தந்தியடிக்க, அவசரமாக விழுத்தது வார்த்ததைகள்.

"இடியட்...!! எதுக்கு அக்கம் பக்கத்துக்காரன் பேச்சுக்கு எல்லாம், பயந்து சாகுற? ஒன்னு புரிஞ்சுக்க அமுதா...! நீ அடுத்தவங்களுக்காக வாழல.... உன் வாழ்க்கையை உனக்கு புடிச்ச மாதிரி தான் நீ வாழனும். அவன் என்ன சொல்லுவான், இவன் என்னத்த பத்த வைப்பான்னு யோசிச்சா, நம்மளால நிம்மதியா வாழ முடியாது" என்று சற்று கோபமாக கூறினான்.

"சா...சார்" என இழுத்தாள் அவள்.

"இதோ பார்! அது உன் வீடு... உனக்கு பிடிச்சதை, நீ யாருக்கும் பயப்படாம பண்ணனும். நீ பண்ணுறது தப்புன்னா மட்டும் தான் அடுத்தவனுக்கு பயப்படனும்.

தப்பு பண்ணாத பட்சத்தில, எதுக்கு நீ உன் ஆசைகளை மறைத்து, வீட்டுக்குள்ள அடிமை மாதிரி இருக்க? நெஞ்ச நிமிர்த்தி தைரியமா பேசு! உன் உரிமையை கேளு!" என்றான் அவளுக்கு தைரியம் ஊட்டுவது போல்.

அவன் சொல்வது அனைத்தும் அவளுக்குப் புரிந்தது. ஆனால் சித்தியை நினைக்கும் போதே பயமாகவும் இருந்தது.

"அட்வைஸ் பண்ணுகிறேன் என்று நினைக்காத. ஜஸ்ட் சொன்னேன்" என்றவனை பார்த்து,

"புரியுது சார்! என் நல்லதுக்காக தானே சொல்லுறீங்க. எனக்கு பக்கத்துல வந்து, புத்தி சொல்லவோ அதை செய்யாதே என்று சொல்லவோ யாருமே இல்ல.

அகரா மட்டும் தான் எனக்குன்னு இருக்கிற உறவு. அதனால் எனக்கு யாராவது நல்லது சொன்னா, அதை அலட்சியப்படுத்தாமல் கேட்டுப்பேன்" முகம் வாடக் கூறினாள் அமுதா.

அவளைத் தோள் சாய்த்து தட்டிக் கொடுத்து, 'உனக்காக நான் இருப்பேன் கண்ணம்மா' என்று ஆறுதல் படுத்தத் தான் அவன் மனம் தவித்துத் துடித்தது.

உறவுகளை இழந்து வாழ்வது கொடுமை என்றால், உறவுகள் இருந்தும் இல்லாதது போல் அவர்களின் அலட்சியத்திலும், ஒதுக்கத்திலும் வாழ்வது மிகவும் கொடுமை அல்லவா???

"உங்கள பார்த்து சாரி கேட்கனும்னு தோணுச்சு. அதான் அகரன் கிட்ட சொன்னேன்.. என்ன மன்னிச்சிடுங்க சார் ஐயாம் சாரி"

"உன் சாரிய அக்செப்ட் பண்ணனும்னா, இந்த சார் சொல்லுறதை முதல்ல விடனும்" என்று சொல்ல கண்களை அகல விரித்துப் பார்த்தாள்.

"அது முடியாது சார்... நீங்க என்ன விட பெரிசு" என கைகளை விரித்துக் காட்டி கூறினாள் அவள்.

"முடி நரைச்ச கிழவன் என்று சொல்லுறியா?" என பொய் கோபத்துடன் கேட்க,

"ஐயோ அப்படி சொல்லல. பெரியவங்களுக்கு மரியாதை கொடுத்து பேசனும்ல"

"மரியாதை மனசுல இருந்தா போதும். அதை சார் மோர் போட்டு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை"

"வேண்டாமேங்க" என சிணுங்கினாள் சிறுமியாய்.

"நோ! நீ இந்த சாரை விட்டுட்டேனா, உன் சாரியை அக்சப்ட் பண்ணிக்கிறேன். இல்லனா முடியாது" என்று தோளைக் குலுக்கினான்.

"சார் சொல்லாமல் வேற எப்படி கூப்பிடுறது?" உதடு பிதுக்கினாள்.

"இருக்கவே இருக்கு மது வர்ஷன்னு பேரு...!! அப்படியே கூப்பிடு" என்க, விழி விரித்து அவனை ஏறிவிட்டாள்.

"ஏன் சைலன்டாகிட்ட? என் பெயரை எப்படி சோர்ட் அன்ட் ஸ்வீட்டா கூப்பிடலாம்னு யோசிக்குறியா? இல்ல மதுங்குற பெயரை கேட்டு, மதி மயங்கி போயிட்டியா" மிதப்புடன் கேட்டான் ஆணவன்.

'ஆசை தோசை' அவனது உரிமையான பேச்சில், பயம் விலகி, கொஞ்சம் கலாய்க்கவும் தோன்றியது. இருந்தும் உள்ளுக்குள் தான் சொல்லிக்கொண்டாள்.

"சரி உங்க பெயரையே சொல்லிக் கூப்பிடுகிறேன். சாரியை அக்சப்ட் பண்ணிக்கோங்க" என்று ஒத்துக் கொண்டாள்.

"நீ பேர் சொல்லி கூப்பிடவே இல்லையே இன்னும்" விடாப்பிடியாக அதிலேயே நின்றான்.

"வர்ஷன் ஓகேவா?" என்று அமுதா கேட்க, அவள் வாயில் இருந்து கேட்ட தனது பெயரில், உலகையே வென்றதாய்த் தான் உணர்ந்தான் வர்ஷன்.

"ஓகே! சாரி அக்சப்டட்! இப்போ நீ என் ரிக்குவெஸ்ட ஏத்துக்கனும்" என்றவனை நோக்கி,

"என்ன ரிக்குவெஸ்ட்?" என்று கேட்டாள் அமுத யாழினி.

"பிரெண்ட் ரிக்குவெஸ்ட்...!! உன் கூட பிரண்ட்ஷிப் வெச்சிக்கனும்னு விரும்புறேன். நீ அகரன் மேல வெச்சிருக்க பாசம் என்னை ரொம்பவே ஈர்த்தது.

அன்னைக்கு அவன் உன்ன பற்றி சொன்னான். கொஞ்சமாத் தான் உன்னை பற்றி கேட்டேன். ஆனா நீ அப்போவே என் மனசுல பெரிய இடத்தை பிடிச்சுட்ட! குட்டி பாப்பாவோட அம்முவ, ஒரு தடவையாவது பார்க்கணும்னு ஆசையா இருந்துச்சு. ஆனால் உன்னை வேற ஒரு சூழ்நிலையில பார்த்தேன். அப்போ எனக்கு எதுவுமே புரியல அமுதா. அதான் போலீஸ் வர வச்சுட்டேன்" என்று விளக்கினான்.

அவனையே இமை சிமிட்டாமல் பார்த்திருந்தவளுக்கு, அவனை உண்மையில் பிடித்துத் தான் இருந்தது.

மனதில் நினைப்பதை மறைத்து வைக்காமல், வெளிப்படையாக சொல்லும் குணம் அதைவிட பிடித்தது. அதிலும் தனது தோழனை குட்டிப் பாப்பா என்று சொன்னது புன்னகையை வரவழைத்தது.

"சரி! உங்க ரிக்வெஸ்ட்டை ஏத்துக்குறேன். ஆனா ஒரு கண்டிஷன்....!"

"எனக்கே ரிப்பீட்டா" குறுநகையுடன் தாடியை ஸ்டைலாக நீவி விட்டுக் கொண்டான்.

"இல்லை. உங்களை மாதிரி கஷ்டமான கன்டிஷன் எல்லாம் போட மாட்டேன். எனக்காக உங்க கோபத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்க, அதுதான் என் கன்டிஷன்" மெல்லிய குரலில் தான் மொழிந்தாள் மாது.

"என்னை பார்த்தா, எப்போ பாரு சிடுசிடுன்னு இருக்குற சிடுமூஞ்சி மாதிரி இருக்கா உனக்கு"

"அய்யோ இதுக்கும் கோபப்படுறீங்க" கண்களைச் சுருக்கினாள் பாவமாக.

"என்னது? இதுக்கு பெயர் கோபமா" என்று விட்டு,

"ஆனால் உன் கிட்ட மட்டும் தான் இப்படி கோபப்படுறேன். மத்தவங்க கிட்ட ரொம்பல்லாம் கோபப்பட மாட்டேன். உன் கிட்டயும் ஒன்னும் ஆசையா கோபப்படல! அதுக்கு காரணம் உன்னோட பயமும் நடுக்கமும்" என்க.

"உங்களைப் பற்றி சொல்லுங்களேன்" என்றாள் அவள்.

"என்னை பற்றி ஃபுல் டீடேல்ஸ் உன் பிரெண்டு சொல்லி இருப்பான்ல. என் பெயர் மது வர்ஷன்! வீட்டுக்கு மூத்த பையன். எனக்கு ஒரே ஒரு தங்கச்சி கவிநிலா. சரியான அறுந்த வாலு"

"கவிநிலா....!! ரொம்ப அழகான பெயர். அகரன் அவளைப் பற்றி சொல்லுவான். ரொம்ப நல்ல பொண்ணு ஆனா கொஞ்சம் வாயாடின்னு" அவனுடன் பேச பேச மனதில் புது உணர்வு அவளுக்கு!

........ ........ ........

காபி ஷாப்பில் இருந்து வெளியேறிய அகரனை வழிமறித்து நின்றாள் ஆராதனா.

இறுக்கிப் பிடித்த ஜீன்ஸ் டி-ஷர்டில் முடியை போனி டெயிலாக இட்டு, லிப்ஸ்டிக்கை அள்ளிப் பூசி நவநாகரிக மங்கையாய்த் தான் தெரிந்தாள் அவள்.

என்றும் போல் அவளை முகச் சுழிப்புடன் பார்த்து விட்டு நகரப் போக,

"உன் கூட பேச வந்திருக்கேன் அகி! நீ கண்டுக்காம போனால் என்ன அர்த்தம்" குழைவாக ஒலித்தது அவள் குரல்.

"உன் கூட பேச பிடிக்கலைன்னு அர்த்தம். உன்ன பார்க்க கூட பிடிக்கலைனு அர்த்தம்... மிஸ் ஆராதனா" அவளது பெயரை ஒட்டுதலின்றி அழுத்தமாகக் கூறினான் காளை.

அகரனை சிறு சிரிப்புடன் பார்த்து, நீ பிடிக்கலைன்னு சொல்லுறதும் பிடிக்கும்னு சொன்ன மாதிரி தான் கேட்குது.

எனக்கு உன்னை பிடிக்கும் ஆருன்னு என்கிட்ட சொல்லும் வரைக்கும் ,உன் பின்னால வருவேன். பிகோஸ் ஐ லவ் யூ" என்றாள் ஆராதனா.

அவள் பேச்சில் சினமும் துளிர்த்திட,

"ஏய்ய் நிறுத்து! என்ன தைரியத்தில் நானும் உன்னை லவ் பண்ணுவேன்னு உளறுறே? முன்பெல்லாம் உன்ன கண்டா சின்ன ஸ்மைலோட ஒரு தலையாட்டலோட கடந்து இருக்கேன்.

எப்போ நீ அம்முவை எதிரியா நினைச்சு, உன் அம்மா கிட்ட திட்டு வாங்க வச்சியோ, அப்போவே வெறுத்து போச்சு... நீ இருக்குற பக்கம் கூட வரப் பிடிக்கல" வர்ஷனின் கியூட் பாப்பா இங்கே கோபத்தின் மறு உருவாய் தான் நிற்கலானான்.

"நான் என்ன பண்ணுறது? அம்மா சின்ன வயசுல இருந்து சொல்லி சொல்லி, அவளை பிடிக்காமலே போயிடுச்சு...

அதை விடு அகி! இப்போ எதுக்கு அவளோட பேச்சு?? வா நாம பைக்ல ஒரு ரவுண்டு போகலாம்" என்று சொல்லி அவனது பிபியை மேலும் எகிற வைத்தால் ஆராதனா.

"நான் தான் முடியாதுன்னு சொல்லுறேன்ல. பின்ன எதுக்கு ரவுண்டு போகலாம்னு சவுண்டு விடுறே. கிளம்பு" என கத்தினான்.

"சரி வழியை விடு நான் உள்ளே போகணும்" என்று அவள் கூற.

அமுதா மது வர்ஷனுடன் பேசிக் கொண்டு இருப்பது நினைவுக்கு வர, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துப் போனான்.

இருவரையும் சேர்த்துப் பார்த்தால் ஷோபனாவிடம் போய் இதை இட்டுக்கட்டி ஒரு ஷோவே நடத்தி விடுவாள் ஆராதனா.
இதனால் அமுதாவிற்கு தான் பிரச்சினை.

தன்னை ஆர்வமாய் பார்க்கும் ஆராதனாவை ஏறிட்டு,
"வந்து பைக்ல ஏறு!" என்றவன், அவளது பைக்கில் ஏறிக்கொள்ள.

"ஹேய் நெஜமாவா...?" கண்கள் பளிச்சிட்டது அவளுக்கு.

"ம்ம்" என வேண்டா வெறுப்பாக சொல்ல, துள்ளிக் குதித்துக் கொண்டே, அவன் தோளைப் பற்றி பின்னால் ஏறி அமர்ந்து கொண்டாள்.

"ஊஃப்ப்" என இதழ் குவித்து பெருமூச்சு விட்டுக் கொண்டே பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

அவன் அறியாத ஒன்று! இவர்கள் மூவரையும் ஒன்றாக சேர்த்து ஆராதனா பார்த்து விட்டாள் என்பது!

"என் கிட்ட இருந்து அகிய பிரிச்சுட்டு, நீ மட்டும் ஜாலியா இருப்பியா? உன்னை விட மாட்டேன் டி. இன்னிக்கு அம்மா கிட்ட எப்படி கோர்த்து விடுகிறேன்னு மட்டும் பாரு" உள்ளுக்குள் கருவிக் கொண்டே அகரனுடன் சென்றால் அவள்.

"வீடு வந்தாச்சு இறங்கு" என்ற அகரனின் குரலில் சிந்தை கலைந்து இறங்கி கொண்டாள்.

"இந்த பயணத்தை என் வாழ்க்கையில மறக்க முடியாது அகி! தேங்க்யூ சோ மச். என் வீட்டுக்கு போற வழி இன்னும் நீண்டிருக்கக் கூடாதானு வருத்தப்படுறேன். ஓகே பாய் டா லவ் யூ" என்று பறக்கும் முத்தத்தை வழங்கிவிட்டு போனி டெயில் அங்கும் இங்கும் அசைந்தாட உள்ளே சென்று மறைந்தாள் ஆராதனா.

போகும் அவளையே உணர்வற்று வெறித்திருந்தான் அகரன்.

.......................

தனது கனவுகளைப் பற்றி கூறியிருந்தான் மது. டென்டர் கைநழுவிப் போனதையும் வருத்தத்துடன் எடுத்துரைக்க,

"முதல் முயற்சி அப்படித்தான் இருக்கும். ஒரு நாள் கண்டிப்பாக உங்க லட்சியம் நிறைவேறும்" என்றதோடு அல்லாமல், கடவுளிடம் அவனுக்காக வேண்டிக் கொள்ளவும் செய்தாள் அமுதா.

"உனக்கு என்னென்ன பிடிக்கும்?" அவளை நோக்கி கேள்வியை வீசினான் வர்ஷன்.

"எனக்கு பாட்டு கேட்குறதுனா பிடிக்கும். மனசு கஷ்டமா இருக்குற நேரத்துக்கு சாங் கேட்பேன்... கவிதை எழுதுவேன் இயற்கையை ரசிப்பேன்" தனது விருப்பங்களை பகிர்ந்து கொண்டாள் அவள்.

"ஓ நைஸ்...!! நீ டான்ஸ் நல்லா ஆடுவன்னு அகரன் சொன்னான்" என்றிட, அவள் முகத்தில் கவலை குடி கொண்டது.

"ஆமா வர்ஷன்! எனக்கு எல்லாத்தையுமே விட ரொம்ப பிடிச்சது டான்ஸ் தான்.

சின்ன பசங்களுக்கு டான்ஸ் க்ளாஸ் வைக்கலாம்னு ஆசைப்பட்டேன். இரண்டு நாள் கிளாஸ் வச்சேன்.. அந்த சின்ன குழந்தைங்க கூட, டைம் ஸ்பென்ட் பண்ணுறது மனசுக்கு சந்தோஷமா இருந்தது. நானும் கவலைகளை மறந்து அவங்க உலகத்தில் ஒருத்தியா ஃபீல் பண்ணேன்.

அதுக்கும் சித்தி சண்டை போட்டு அந்த பிள்ளைங்கள திட்டி அனுப்பிட்டாங்க. டான்ஸ் கிளாஸ் வைக்க கூடாதுனு ஸ்ட்ரிக்கா சொல்லிட்டாங்க" என்று ஏக்கமாக கூறி முடித்தாள் மங்கை.

ஷோபனாவை நினைக்க நினைக்க பற்றிக் கொண்டு வந்தது அவனுக்கு. அதைவிட வசந்தராஜ்ஜின் மேலும் கொலை வெறியே வந்தது.

"நீ நாளையில் இருந்து டான்ஸ் கிளாஸ் ஸ்டார்ட் பண்ணுறே" என கண்டிப்பாக கூறினான் மது வர்ஷன்.

அவளோ திகைத்துப் போய் ~
"ஐயோ முடியாது..." என அலறினாள்.

"ஹேய் ஏன் முடியாது? மது வர்ஷனோட பிரெண்டு எதற்கும் பயப்படக் கூடாது. தைரியமா நிற்கனும். உனக்கு துணையா நான் நிற்பேன். உனக்கு பயம் வந்துச்சுன்னா என்ன நினைச்சுக்க ஓகேவா?"

அவனது வார்த்தைகள் அவளுக்கு ஒரு வித உத்வேகத்தைக் கொடுத்தன என்றால், அது உண்மையே!!

"ட்ரை பண்ணுறேன்" என கண்களை மூடித் திறந்தாள் அம்மு.

"ஹ்ம்ம் குட்! வா போகலாம்" என அவளை அழைத்துக்கொண்டு காரை நோக்கி சென்றான்.

உள்ளே ஏறுமாறு கண்களால் சைகை செய்ய மறுத்தால், அதற்கும் ஏதாவது சொல்வான் என நினைத்துக் கொண்டு அவனோடு சென்றாள்.

செல்லும் வழியெங்கும் வளவளத்துக் கொண்டு வந்தான் அவன். அவனைப் பார்த்து பல நாட்களுக்குப் பின் சிரித்தவாறு சென்றாள் அமுதா.

தெருமுனை வரும் போது "நிறுத்துங்க வர்ஷன்" என கை காட்டினாள்.

"உன் வீட்டு கிட்ட ஸ்டாப் பண்றேன் யாழ்...!!" பிடிவாதமாக வெளிவந்தது அவனது குரல்.

"ப்ளீஸ்ங்க" நடுங்கத் துடிக்கும் கைகளை சிரமப்பட்டுக் கட்டுப்படுத்தினாள் மெல்லியவள்.

"இந்த ஒரு தடவை விடுறேன்" என கடுமையாக சொன்னவன் முகம் அவளைப் பார்த்து சட்டென கனிய,

"பை டா! டேக் கேர்" என கையசைத்து விட்டு காரைக் கிளப்பிக் கொண்டு சென்றான்.
 
Top