• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

07. இதயம் பகிர்ந்திட வா

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
நாகரீகம் கருதி ஹாலிங்க் பெல்லை அழுத்தி விட்டு, திறந்திருந்த கதவு வழியே உள்ளே நுழைந்தவளுக்கு, அது வரை இல்லாத பயம் ஏனோ அப்போது தொற்றிக் கொண்டது.


அந்த வீட்டை பற்றி எத்தனையோ பேர், எத்தனையோ விதமாக சொல்லி இருக்கிறார்கள் தான். ஆனால் இவற்றை எல்லாம் அவள் நம்பியது இல்லை. நம்பும் அளவிற்கு அவள் முட்டாளும் இல்லை.


அவள் அனுபவத்திற்கு மனிதனை விட, கொடியது பேய் ஒன்று புதிதாகவா தோன்றி விடப்போகிறது என நினைப்பவளும் கூட, ஆனால் இன்று பட்டப்பகலிலேயே இருட்டாக இருந்த அந்த வீட்டினுள், இன்னும் பயத்தினை கூட்டுவது போல், எங்கிருந்தோ திரண்டு வந்த புகை கூட்டமானது அந்த வீட்டினையே நிறைத்து இன்னமும் பயம் கொள்ள செய்தது.


"அக்கா.... அக்கா... யாராவது இருக்கிங்களா...?" குரல் கொடுத்தவாறு சென்றவள் எதிரில் ஓடி வந்தாள் அந்த பெண்.


"வந்துட்டீங்களா...? வாங்க வாங்க... ரொம்ப நேரமா எதிர் பார்த்திட்டிருந்தேன்." என உள்ளே அழைத்தாள்.


அவளது வரவேற்பில் இதழ்களை சாதுவாக பிரித்து புன்னகைத்தவள்,


"கிச்சன் எங்க இருக்குன்னு காட்டினீங்கன்னா, வந்த வேலைய முடிச்சிட்டு போயிடுவேன்." என்றாள் போனவன் வருவதற்குள் அங்கிருந்து சென்று விடவேண்டும் என்ற எண்ணத்தோடு.


"காட்டுறேன்ம்மா.. அதுக்கு முன்னாடி சாமி விளக்கையும் ஏத்திட்டு, சாம்பிராணியையும் காட்டி விட்டேன்னா, அடுப்ப பத்த வைச்சிடலாம்."


"என்னது...! பட விளக்க நான் ஏத்தணுமா?"

"ஆமாம்மா... நெத்தி நிறைய குங்குமத்ததோட, மகாலஷ்மி ஆட்டம் இருக்க நீயே ஏத்திடேன். நெருப்பு கூட போட்டு வைச்சிட்டேன்.

சாம்பிராணியையும் போட்டுட்டா வேலை முடிஞ்சிடும்" கெஞ்சுவதாட்டம் கண்களை சுருக்கி கேட்பவளை ஏனோ மறுத்து பேசிட முடியவில்லை.
சரியென காற்றில் தலையசைய, அவள் இயக்கத்திற்கு இயங்கலானாள் பிரியா.


அவள் சொன்னவற்றை கொஞ்சம் பயபக்தியுடனே செய்தவள், "முடிஞ்சுதுன்னா, கிச்சன் போயிடுவோம்" அவளுக்கு அவள் பிரச்சினை.


"சரிம்மா.." என முன்னே நடந்தவள் பின்னே நடந்தாள் அவளும்.
அடுப்பை பற்ற வைத்து பால் பொங்கும் வரை பார்த்து கொண்டிருந்தவளிடம்,


"கல்கண்ட ஹால்லயே வைச்சிட்டு வந்திட்டேன், இரும்மா எடுத்துட்டு வந்திடுறேன்." என்றவளிடம், சரி யென தலையசைத்து விட்டு பாலினையே பார்த்துக்கொண்டிருந்தவள் முதுகினில் பதிந்தது ஓர் கரம்.


பதறியே போனாள் பிரியா... ஆம் அந்த வீடு மிகவும் பணமையான வீடு என்பதால், ஹாலுக்கும் கிச்சனுக்குமான தூரமே மூன்று அறைகள், ஒரு வராண்டவை தாண்டித்தான் உள்ளே வரவேண்டும்.


கல்கண்டு எடுத்து வருகிறேன் என அவள் சென்று ஐந்து வினாடி கூட ஆகியிருக்காது. அதற்குள் திடீரென யாரோ அவளை பற்றுகிறார்கள் என்றால், நிச்சயம் அது அவளாக இருக்க முடியாது. அதே சமயம் அந்த வீட்டில் அவர்கள் இருவரையும் தவிய வேறு யாரும் இல்லை.

'அப்படி என்றால் அந்த வீட்டை பற்றி ஊரவர்கள் சொன்னது முழுவதும் உண்மையா?' திரும்பிப்பி பார்க்கும் நொடிக்குள் ஏதேதோ எண்ணிவிட்டாள்.


ஆனால் எதிரே நின்றது அவள் எண்ணியது போல் பேயோ வேறு அமானுஷியமோ அல்ல.


ஐம்பதுக்கும் அறுபதுக்கும் இடைப்பட்ட வயது தான் அவருக்கிருக்கும், மஞ்சளால் தவழ்ந்த முகத்தினில், நெற்றியின் நடுவே கஞ்சத்தனமற்று குங்குமத்தை அப்பியிருந்தவர் உதட்டினில், அப்படி ஓர் புன்னகை.
அதே புன்னகை மாறாது

"யாரும்மா நீ....?" என கேட்டவர் அவளை அறிய வாய்ப்பில்லை. ஆனால் பிரியா அடையாளம் கண்டு கொண்டாள்.


சிறு வயதோடு அவரது உறவு அற்றுப்போயிருந்தாலும், சாந்தமான அந்த முகம் அவ்வளவு எழிதில் அவள் சிந்தையிலிருந்து அழியவில்லை.

ஆனால் இன்னார் தான் தான் என சொல்வதற்கு தான் அவளுக்கு தைரியம் வரவில்லை.

தைரியம் வரவில்லை என்பதை தாண்டி, இன்னார் தான் தான் என சொல்லப்போனால், தன்னை பெற்றவர்கள் எங்கே, எப்படி இருக்கிறார்கள் எங்கிருக்கிறார்கள் என்ற கேள்வி எழும். அதெல்கெல்லாம் பதில் சொல்லும் நிலையில் அவள் இல்லை.


அதற்கு முதலில் அவர்களை பற்றி அவளுக்கு தெரிந்திருக்க வேண்டுமே! அதோடு இல்லாமல், தன்னை தானே காட்டிக்கொடுத்தாகிவிடும்.

எதற்கு வலியக்க போய் வம்பில் மாட்டிக்கொள்வான்.? தனக்குள் எச்சரித்து கொண்டவள் பதில் கூற வாய் திறக்கும் சமயம்,


"ஸ்ரீ அக்கா அங்க நிக்கிறாங்க... நீங்க யார் கூடம்மா பேசிட்டிருக்கிங்க?" கிச்சனுக்குள் வரும் முன்னரே குரலை உள்ளே அனுப்பியவாறு கிச்சன் நுழைந்தவன், அங்கு நின்றவளை கண்டதும் விழிகள் அதிர்ந்து, மறு கணமே தெளிந்தது.


"யாரும்மா இவங்க...? இங்க என்ன பண்ணிட்டிருக்காங்க?" தெரிந்தும் தெரியாதவனைப்போல் கேள்வி கேட்டவன் பேச்சுக்கு செவி சாய்க்கவில்லை அவள்.


அவளுக்கு தான் தெரியுமே அவனது திமிர் எடுத்த குணம்.

இவனது பேச்சுக்கு உணர்ச்சி வசப்படப்போனால், தன் கட்டுப்பாட்டை இழந்து விடுவோம். பின் தானே யாரென அறிமுகம் செய்ய வேண்டியதாகிப்போகும். எதற்கு வீணான வம்பு என நினைத்து தான் அமைதி காத்தாள்.


"நான் எதிர் வீட்டில குடியிருக்கிறேன் ஆன்ட்டி..! ஊருக்கு தான் புதுசு.. உதவிக்கு யாருமில்லன்னு இங்க வேல செய்யிற அக்கா தான் கூப்டாங்க.. அதான் வந்தேன்." என்றாள் பிரியா.

"ஓ அப்பிடியா...! ஸ்ரீ தான் கூப்டாளா? உன் பேரு என்னம்மா..."

"பிரியா ஆன்ட்டி!"

"பிரியா.... அழகான பேரு தான்.. ஆனா ஊருக்கு ரெண்டு பேராவது இந்த பெயர்ல இரும்பாங்கல்ல..." கபடமற்ற அவரது பேச்சில் புன்னகை உதிர்த்தவள், ம்ம் என தலையசைத்தாள்.


"ம்மா... உங்க பேச்ச அப்புறம் வைச்சுக்கலாம்.. அடுப்பில பால் பொங்கி சிந்திது பாருங்க.." என நுரை எழும்பும் முன் தாய் அவளுடன் சாதாரணமாக பேசுவது பிடிக்காது இடை புகுந்தான் சத்தியன்.

எப்படி பிடிக்கும்.... பிள்ளை பகை... தாய் உறவா? அதனால் உண்டான கடுகடுப்பு தான் அது.


"அதுக்கு ஏன்டா கத்துற.... இன்னைக்கு பால் காய்ச்சிறதே சிந்தனும் என்கிறதுக்கு தான்..." என்றவர் பால் சிறிதாய் சிந்தும் வரை பொறுமை காத்துவிட்டு அடுப்பை அணைத்தார்.


"சரி ஆன்ட்டி! பால் காய்ச்சிறதுக்கு யாருமில்லன்னு தான் அந்த அக்கா என்னை கூப்டாங்க. இப்போ ஆளும் வந்தாச்சு.. பாலும் காய்ச்சியாச்சு. எனக்கும் வெளிய கொஞ்சம் வேலை இருக்கு நானும் வரேன்." என வெளியேற தயாராகியவள் கையினை பற்றி தடுத்தவர்,


"போகலாம் பிரியா என்ன அவசரம்? முதல் முதலா வீட்டுக்கு வந்திருக்கிற.. எதுவும் சாப்பிடாம போனா எப்பிடி? பாலை சாமிக்கு வைச்சிட்டு, உனக்கும் எடுத்திட்டு வரேன். அது வரைக்கும் வீட்டை சுத்தி பாக்கிறியா?" முறைக்கு கேட்டார் தான், அவளிடமிருந்து வரும் பதில் தனக்கு தேவையில்லை என்பது போல்,


"ஸ்ரீ..." என வேலைக்கார பெண்ணை அழைத்தவர்,


"பிரியா வீட்டை பாக்கணுமாம், சுத்தி காமி..." என இருவரையும் அனுப்பி வைத்தவர், தன் வேலையினை கவனிக்க சென்று விட்டார்.


அங்கு வேடிக்கை மனிதனைப்போல் நின்றவனுக்கு தான், நடப்பது எதுவும் புரியவில்லை. நிஜத்தில் அவனது அன்னை செல்வநாயகி அவ்வளவு எழிதில் யாருடனும் பழகிட மாட்டார்.


அவ்வளவு ஏன்? ஒரு வார்த்தை பேசுவதற்கே ஓராயிரம் முறை யோசிப்பார். ஆனால் பிரியாவிடம் சட்டென ஒட்டிக்கொண்டதும் இல்லாது, உரிமையுடன் நடந்து கொள்வது தான் ஆச்சரியமாக இருக்க,
அன்னையினையே ஆச்சரியமாக பார்த்து நின்றவனையும் கண்டு கொள்ளாது சென்றவரையே, சிறு வினாடி பார்த்திருந்தவனும், தோள்களை குழுக்கி விட்டு, அவர் பின்னாலே சென்றான்.


சிறு நிமிடம் கடந்திருந்தது. கீழ் தளத்தை காண்பித்து விட்டு, மேல் தளத்திற்கு அழைத்து சென்ற, ஸ்ரீயின் பின்னால் சென்றவளுக்கு, அந்த வீட்டினை சுற்றிப்பார்க்கும் மனநிலை சுத்தமாக இல்லை. அது தேவையும் அற்றது.


இப்போதே இங்கிருந்து சென்று விடவேண்டும். அதே சமயம் அன்பாக நடந்து கொள்ளும் பெரியவளின் வார்த்தையினையும் தட்டிக்கழிக்க மனம் எழவில்லை.
கடமையே என ஸ்ரீயின் பின்னல் சென்றவள் பின்னாலிருந்து வந்த குரலில், நின்று திரும்பினாள்.


செல்வநாயகி தான்... கையில் பெரிய தாம்பாள தட்டுடன் அவர் நின்றிருக்க, அவர் பின்னால் வெள்ளி டம்ளர் ஏந்தியவாறு நின்றிருந்த சத்தியன் முகத்தில் கடுகு வெடித்தது.

பின்னே அவனுக்கு பனிவிடை செய்ய, ஆயிரம் பேர் காத்திருக்கையில், அவன் அவளுக்கு பனிவிடை செய்வதா? அந்த கோபம் தான்.


"நீ போய் மத்த வேலைகளை பாரு ஸ்ரீ... மீதிய நான் காமிக்கிறேன்." என வேலைகார பெண்ணை அனுப்பி வைத்தவர்,

"நல்ல நேரம் முடியிறதுக்குள்ள இதை வாங்கிக்கோம்மா..." என நீட்டியவர் தாம்பாளத்தை சிறு நொடி தான் உற்று பார்த்தாள் பிரியா.

அதில் பட்டுப்புடவை, பணம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் இருக்கவே, புருவங்களை கேள்வியாய் வளைத்தவள்,


"இது எதுக்கு?" என்றாள்.


"முதல் முதலா வீட்டுக்கு வந்திருக்க.. உதவின்னு கேட்டதும்... யாரு எவர்ன்னு கேட்காம உதவி செய்யிறதுக்கும், இந்த காலத்து மனுஷங்களுக்கு, ஒரு மனசு வேணும்மா.. அது உன்கிட்ட நிறையவே இருக்கு..


நீ செய்த உதவிக்கு, சின்னதா ஒரு கை மாறு... மறுக்காம வாங்கிக்கோ.." என்றவரை நோக்கி ஓர் புன்னகையினை உதிர்த்தவள்,


"உதவின்னு சொல்லுறீங்க... செய்யிற உதவிக்கு யாரும் கைமாறு எதிர் பார்க்க மாட்டாங்க ஆன்ட்டி! அப்பிடி எதிர் பார்த்தா, அதுக்கு பெயர் உதவி கிடையாது." என்றாள் அதை மறுக்கும் விதமாய்.


"தப்பும்மா... மங்கள பொருட்கள் யாரு கொடுத்தாலும் வேண்டாம்ன்னு சொல்லக்கூடாது. அதுவும் நெற்றி நிறைய குங்குமமும், தலை நிறைய பூவும் வைச்சிருக்கிற சுமங்கலி, நீ சொல்லலாமா...?


இப்போ என்ன? உதவிக்கு கைமாறுன்னு நான் சொன்னதனால தானே இதை மறுக்கிற... புதுசா இந்த வீட்டுக்கு குடி வந்திருக்கோம்... வீடு தேடி லஷ்மி கடாட்ஷத்தோட ஒரு பொண்ணு வந்தா, அவளை அந்த மகாலஷ்மியா நினைச்சு தரதில்லையா..? அந்த மாதிரித்தான் இதுவும்... நல்ல நாள் அதுவுமா அம்மா மனச நோகடிக்காம வாங்கிக்கோட..." சாதாரணமாக ஆரம்பித்து கெஞ்சுவது போல் முடித்தார்.


கெஞ்சினால் தான் தன் நிலை மறந்து உருகிப்போவாளே பிரியா. கைகள் தானாய் நீள, அவர் முகத்தையே பார்த்தவாறு வாங்கிக்கொண்டவள் மனம் மாறுவதற்குள், அதை அவளிடம் அவசரமாய் திணித்தவர்,


"சீக்கிரம் பாலை குடுத்துட்டு வாடா... அம்மாக்கு கீழ கொஞ்சம் வேலை இருக்கு, அதை போய் நான் பாக்கிறன்." என்று ஓடியவர் அவசரம் தான் இருவருக்கும் புரியவில்லை.


சற்று முன்னர் தான், ஸ்ரீயை தான் வீட்டை சுற்றி காட்டுகிறேன்... நீ போ என அனுப்பி வைத்தார். அதற்குள் என்ன தலை போகும் காரியமோ..?' என அவள் நினைத்து முடிக்கவில்லை.


"அப்புறம்.....?" என்றான் சத்தியன் தலையும் இல்லாது வாலுமில்லாது அவளை வித்தியாசமாக நோக்கியவாறு.
அவன் என்ன கேட்க வருகிறான் என்பது புரியவில்லை அவளுக்கு..
கண்களை சுருக்கியவள்,

"அப்புறம்னா புரியல...?" என்றாள் அவளும் அதே அலட்சிய தோரணையில்.


"உன்னால மட்டும் எப்பிடி முடியுதுன்னு கேட்டேன்?" என்றான் மீண்டும் அவளை குழப்புவது போல்.


"உங்க அளவுக்கு திறமையானவ நான் இல்ல.. கேட்க வரத, தெளிவா கேட்டா எனக்கு புரியும்..." என்றாள் அவனது பேச்சானது வித்தியாசமாக இருக்கவே, அடுத்த வம்புக்கு தயாராகி விட்டான் என்ற அவனது எண்ணம் புரிந்தவளாக.


"ஆமால்ல... உனக்கு வாய்க்கு வாயடத்தான் தெரிமே தவிர, திறமை இல்லல்ல..." நக்கல் தொக்கு நிக்க, அவளது முகச் சுழிப்பையும் கண்டு கொள்ளாது, அவனே மேல தொடர்ந்தான்.


"அது எப்பிடி கொஞ்சம் கூட சந்தேகமே வராத அளவுக்கு, நல்லவ போல நடிக்க முடியுது? அன்னைக்கு என்னன்னா ஸ்டுடன்ஸ்ஸும் சரி, அந்த ஃப்ரிண்ஸிப்பலும் சரி, நீ அப்பிடி இப்பிடின்னு புகழ்ந்து தள்ளுறாங்க.


இன்னைக்கு யார் கூடவும் அவ்வளவு ஈஸியில ஒட்டிக்காத என்னோட அம்மாவையே... உன்னை மகாலஷ்மின்னு புகழ்ந்து பாட வைச்சதும் இல்லாம, அதுக்கு பரிசா இந்த தாப்பாளம் வேற...


ஹூம்... உண்மைய சொல்லு... இது தான் உன்னோட உண்மையான முகமா...? இல்லன்னா என்கிட்ட தான் நடிக்கிறியா? அப்பிடி என்கிட்ட நடிக்கிறின்னா அதுக்கு என்ன காரணம்?" என்றான் பேச்சில் நக்கல் தெறிக்க.


அவன் பேச்சில் கோபம் வந்தது தான்... ஆனால் ஏனோ பதிலகுக்கு வாதாட மனம் இடம் தரவில்லை. பின்னே இவனுடன் வாதாடி விட்டு, இவனுடன் எல்லாம் எதற்கு வைத்துக் கொண்டோம் என்று தனிமையில் புலம்புவது அவள் தானே!



"இங்க பாருங்க சார்... நீங்க எந்த மூட்ல இருக்கிறீங்கன்னு எனக்கு தெரியாது... ஆனா யார் கூடவும் மல்லுக்கட்டுற மனநிலையில நான் கண்டிப்பா இல்ல...

அதோட நான் இப்பிடித்தான்னு உங்களுக்கு நிரூபிக்கணும்னும் எனக்கில்ல.. உங்க பார்வைக்கு நான் எப்பிடி தெரியிறனோ அப்பிடியே வைச்சுக்கங்க.." என்றவள், மாடிப்படி புறம் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.


"இதோ பார்றா... மேடம் சார்ன்னு மரியாதையா எல்லாம் கூப்பிர்றாங்க...? இந்த மரியாதை எப்போல இருந்து...?" என கேட்டு விட்டு யோசிப்பது போல் நடித்தவன்,


"ஓ.... அந்த ஸ்கூல்ல கலட்டரா பாத்ததில இருந்து வந்த மரியாதையா...? ஆனா பாரேன்... மனுஷங்களுக்கு இல்லாத பயம், அவன் பதவிக்கு எப்பிடி வருதுன்னு" வார்த்தைகளில் அப்படி ஓர் நக்கல் தெறித்தது.

நின்று திரும்பியவள, மீண்டும் அவன் முன் வந்து நின்று, நேருக்கு நேர் அவன் விழிகளை எதிர்கொண்டாள்.


"யாருக்கு யார் மேல பயம்?"


"உனக்கு என்மேல தான்... என் பதவியை வைச்சு உன்னை என்னவாச்சும் பண்ணிடுவேன்னு பயம் இல்ல?" அவளுக்கு சளைத்தவனா அவன்.

"இல்லை..." என்றாள் அலட்சியமாக.


"பயம் இல்லன்னா, அன்னைக்கு ஷாப்ல, வா போன்னு பேசினது போல பேசவேண்டியது தானே... இடையில இந்த சார்... மோர்லாம் எப்பிடி வந்திச்சு...? என்னோட பதவியினால தானே!"


"சார்... நீங்க இந்த ஊருக்கு தான் கலக்டர்... எனக்கில்ல..


சாதாரணமா எல்லாருக்குமே மரியாதை தரது என் பழக்கம்.. அதுவும் எனக்கு மரியாதை தந்தவங்க மனச கண்டிப்பா கஷ்டப்படுத்த எனக்கு தெரியாது." என்று தாம்பாளத்தை பார்த்தவள்,


"இப்போ புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்." என திரும்பி நடக்க,


"இப்போ என்ன சொல்ல வர? அம்மாக்காகத்தான் உனக்கிந்த மரியாதை என்கிறியா? அப்போ அம்மா இல்லாத சமயம், பழைய மாதிரி மரியாதை இல்லாம போ.. வான்னு கூப்பிடுவ... அப்பிடி தானே!"


இம்முறை நிற்கவில்லை அவள். நடந்த வாக்கிலேயே அவனை திரும்பி பார்த்தவள் உதட்டினில், புரிந்தால் சரி என்பது போல் தோன்றிய புன்னகையினை கண்டவனுக்கு தான் ஆத்திரமாக வந்தது.


தன்னையே பார்த்தவாறு படிகளிலில் இறங்கியவளையே முறைத்திருந்தவன், முழுமையாக தன் பார்வையில் இருந்து அவள் மறைந்து போன மறு கணமே,
தடித்திருந்த உதடுகள் மர்மமாய் விரிந்தது.


"இது தான் எனக்கு வேணும் பிரியா... உனக்குள்ள இருக்கிற அந்த பாரதீ, தீயா வெளிய வரணும்.. கண்டிப்பா அதை நான் வர வைப்பேன்.." என்றவன், மேலே நின்றவாறே அவளை கவனிக்க ஆரம்பித்தான்.
 
Top