• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

07. உறவாக வருவாயா.?

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
இருவர் மனதிலும் ஓர் இனம்புரியாத நிம்மதியோடு அமைதியும் ஒட்டிக்கொண்டது.
எப்போது பேசியவாறு இருப்பவளும் அமைதியாக நடக்கலானாள்.

நடக்க ஆரம்பித்து பாதி தூரம் கடந்திருக்க..
“ம்மா....” என குழந்தை மதுமிதாவிடம் தாவியது.
அவளும் சந்தோஷமாகவே அவளை வாரி அணைத்துக்கொண்டவள்.. அவளோடு கதை பேசிக்கொண்டே நடக்கலானாள்.


வீட்டின் வாசலில் கேஷவன் காலெடுத்து வைக்கவில்லை. “மாமா” என ஆர்பறித்தவாறு ஓடிவந்தவள்.. அவன் கழுத்தினை கட்டிக்கொண்டு இச்சு இச்சென்று அவன் கன்னத்தின் இதழ் பதித்தாள் நவ நாகரீக பெண்ணொருத்தி.


ஆறடி உயரத்திலும் சற்று குறைந்திருப்பாள்...
மெல்லிடையாள் என்று கூறமுடியாது இருந்தாலும்.. உணவு கட்டுப்பட்டினால் அதிகமாகவே மெலிந்திருந்தாள்.


அவளது உடல் முழுவதுமே இடையளவு தான் இருக்கும்போல. பெண்களுக்கே உரிய வளைவு நெளிவுகள் என்றில்லாது பாட்டிலைப்போல ஒரே நேர்கோட்டு உடலமைப்பு.


கூந்தலை கழுத்து அளவிற்கு வெட்டி சிலுப்பி விட்டிருந்தவள், உடை என்று உடுத்திருந்தது வெளி ஆடைதானோ என்ற சந்தேகத்தை தூண்டும் அளவிற்கு இருந்தது.

இடுப்புக்கும் தொடைக்கும் நடுவே ஒரே ஒரு முழம் தான் இருக்கும் அவள் உடுத்தியிருந்த துணி... மேலே அதே கலரில் கால் மீட்டர் துணியினை வெட்டி பின்பக்கமாக முடிச்சிட்டதோடு அவளது உடையின் செலவினை முடித்துக்கொண்டாள் அந்த சிக்கனக்காரி.

காதில் பெரிய வெள்ளி வளையம்..
உதட்டில் சிவப்பு கலர் பெயின்டினை வாளியோடு வாங்கி ஒரே தடவையில் அப்பியிருப்பாள் போல.. கேஷவன் கன்னத்தில் அதில் பாதி ஒட்டிக்கொண்டது.


"இத்தனை நாள் எங்க மாமா போன என்னை விட்டிட்டு? உன்னை எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா? லவ் யூ மாமா...! லவ் யூ சோ மச்" என அவன் கழுத்தை இன்னும் கட்டிக்கொண்டு நின்றவளை அதிர்ச்சியில் வாய் பிளந்து பார்த்து நின்றாள் மதுமிதா.


அவளது அதிர்ச்சி கண்ட சிவாவுக்கு அவள் நிலையினை பார்த்ததும் சிரிப்பாகிப்போனது. யாரும் அறியாது அவளருகில் வந்தவன்..


"மூணு கொசு, நாலு பல்லி, ஐஞ்சு தவளை" என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.
அவன் பேச்சி காதில் விழுந்ததும் அவன் புறம் திருப்பி.. என்ன என்பதுபோல் பார்க்க.

"இத்தனையும் உன் வாய்க்குள்ள போனதை பாத்துட்டேன்... உள்ள போன அந்த தவளைய பிடிக்க அடுத்து பாம்பு தான் போகணும். அதுக்குள்ள வாய மூடிடு" என்றவன் நக்கலில் அவனை முறைத்தாள்.


"நீ முறைக்க வேண்டியது என்னை இல்ல.. அவனை... அங்க பாரு! இது தான் சாக்குன்னு என்னமா ஒட்டிட்டு நிக்குறான்." என இன்னும் அவன் ஏத்திவிட, அவர்கள் புறம் பார்வையை திருப்பியவளுக்கும் ஏனோ அது கோபத்தை கிளப்பியிருந்தது.


இது தான் மஞ்சள் கயிற்றின் மகிமையோ...!

“ஏன் மாமா பேசமாட்டேன்குற? இத்தனை நாள் உன்னை பார்க்காம எப்பிடி இழைச்சு போயிட்டேன்னு பாரு... உனக்கு என் ஞாபகமே வரலல்ல?" என சிணுங்கலாய் கொஞ்சியவளை மேலிருந்து கீழாக நோக்கியவள்,


"ஆமா ஆமா... ரொம்ப இழைச்சு தான் போயிட்டா? இதுக்குமேல இழைச்சா, ஒடிஞ்சு விழுந்துடுவ.. மூஞ்சிய பாரு..! முக்கா வாளி பெயின்ட அப்பிட்டு வந்து நின்னுட்டு," என முணுமுணுத்தவள்..


"யாருண்ணா இவ? வெக்கமே இல்லாம இத்தனை பேரு முன்னாடி.. இந்த மாதிரி...." என்றாள் குரலில் சினத்தினை காட்டி.


"புருஷனை இந்த மாதிரி இன்னொரு பொண்ணுகூட பாக்குறதில பொறாமை....!" என சிரித்தவனோ,


"காலையில உன்னை பாத்ததும் ஒருத்தரு கத்திட்டு போனாரே.. அவரோட ஒரே மகள். பேரு லாவன்யா.. சின்ன வயசில இருந்து, கேஷவனுக்கு இவதான்னு சொல்லி வளர்த்தாங்க. அவளுக்கும் கேஷவன்னா உயிர்..
ஆனா காலம் பாரு.. உன்னை அவனுக்கு புடிக்க வைச்சிடிச்சு.


லாவன்யாவும் லேசுபட்டவ இல்லை தங்கச்சி... அவளுக்கு எதையாவது புடிச்சு போச்சுன்னா, அவ்வளவு சீக்கிரத்தில யாருக்குமே விட்டு கொடுக்க மாட்டா..
கேஷவனை ரொம்ப பத்திரமா பாத்துக்கோ" என எச்சரித்தான்.


"இனிமே வீட்டில சக்காளத்தி சண்டை நிறைய பாக்கலாம் போலயே!" என முணுமுணுக்க அவனை எரிப்பது போல் முறைத்தவள் விழிகள் கேஷவன் புறம் திரும்பியது.


அவனும் அவர்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் தன்னை பார்ப்பதை கண்டவள்.. அவனது பார்வையினை அலட்சியம் செய்வது போல் உதடு சுழித்து, உள்ளே போக எத்தணிக்க,


பல நாட்கள் கடந்து பார்த்ததும் ஓடிவந்து ஆசையாக நலம் விசாரித்தால் தன்னை கண்டுகொள்ளாது அவன் பார்வை மதுமிதா புறம் திரும்பியதில் எரிச்சல் உண்டானது அவளுக்கு.
அவன் கழுத்தில் மாலையாக கோர்த்திருந்த கைகளை விடுத்து அவள் முன்பு வந்தவள்..


இடுப்பில் கைவைத்தவாறு அவளை ஏற இறங்க அருவருக்கும் பார்வை பார்த்து..


"ஓ...... இவ தான் என் மாமாவ மயக்கின மாயக்காரியா..? சொல்லுறது போல எதுவுமே இல்லையே..! அப்புறம் எப்பிடி மாமா இவகிட்ட மயங்கின..? இவளை விட நான் எதில குறைஞ்சு போனேன்னு என்னை விட்டிட்டு போன?" என கோபமாக ஆரம்பித்து, அவன் முன் போய் நின்று கால்களை உதறியவள் மூஞ்சி மேல் ஒன்று விட்டால் என்னவென இருந்தது மதுமிதாவிற்கு.


'லூசு கூமுட்டை.. நீ குறைஞ்சு போனா பரவாயில்லடி! நீ போட்டிருக்க ட்ரெஸ் குறைஞ்சு போய் இருக்கே.. அதை கவனிச்சியா?

இத்தனை பேரு முன்னாடி குட்ட பாவடைய போட்டிட்டு வந்து உதறிட்டிருக்க.. அவுந்து விழுந்தா அந்த கறுமாந்திரத்தை இந்த லூசு சிவா பாப்பான்... நான் பார்ப்பேனா?' என மனதில் தான் அவளை அர்சித்தாள்.

ஆனால் சிவாவின் பார்வை அவள் புறம் திரும்பியது.
என்ன என்பதாக இமைகள் உயர்த்தி கேட்டாள்.


"மைன்ட் வாய்ஸ்ன்னு நீ சத்தமா பேசிட்ட.." என்றவன்..


"ஏன் என் கண்ணு அவியணுமா?" என்றான் பாவமாக.
அவன் கேட்ட திணுசில் தன்னை மறந்து சத்தமாக நகைத்தவள், பின்னர் தான் இருக்குமிடம் உணர்ந்து வாயினை இறுக பொத்திக்கொண்டாள்.

குடும்பத்தினரது மொத்த கவனமும் மதுமிதாவிடம் தான் இருந்தது.

பின்னே இந்த பிடிவாதக்காரியின் அளவுகடந்த நெருக்கத்தினால், கணவன் மனைவிக்குள் பிளவு வந்துவிடுமோ என்ற பயம்தான் அவர்களுக்கு.


ஆம் காலையில் சத்தமிட்டு சென்ற பரமானந்தத்தினை தொடர்ந்து நடு ஹாலில் "மாமா எங்கே..?" என்று காத்திருந்த லாவன்யா.. என்ன வில்லங்கத்தை எடுத்து வைக்கபோறாளோ!


சிறுவயது முதல், ஐந்து வருடங்களுக்கு முன் வரை மாமா மாமா என்று அவனை சுற்றிக்கொண்டு திரிவாள்.. கேஷவனுக்கும் லாவன்யா மேல் தனிப் பிரியமுண்டு.. ஆனால் அது ஒரு போதும் காதலில் சேராது.. நல்ல உறவு என்பதை கடந்து, நல்ல நட்பு என்றே கூறலாம். அவளுமே அவனுடன் தவறாக பழகியது இல்லை.

ஆனால் இடையில் பெரியவர்களது பேச்சினால், கேஷவன் மீதான அவளுடைய பார்வை மாறிப்போனது.
மீனாட்சிக்கு அண்ணன் மகளை கண்டிக்க பயம்.

பின்னே காலையில் நடந்த கூத்தை பார்த்த யாராவது வாயினை திறந்திட முடியுமா? பரமானந்தம் இவளிடம் நடந்தவற்றை கூறாமலா வீட்டின் நடு ஹாலில் வந்தமர்ந்தும் யாருடனும் பேசாது முகத்தை தூக்கி வைத்துக்கொண்டிருந்தாள்.?

தானும் ஏதாவது சொல்லப்போய், இவள் தன் பங்கிற்கு பேசபோனால் இருக்கும் சுமூகமான நிலையும் கெட்டுவிடும் என்று அமைதி காத்தவர், நன்கு அறிவார்.. கேஷவனை கண்டதும் இவள் அவனை எந்தளவிற்கு நெருங்குவாள் என்று.

இது இவர்களுக்கு பழக்கமான ஒன்று. ஆனால் புதிதாய் வந்தவள் இவர்களது நெருக்கத்தை ஏற்கவேண்டுமே!

தன் கணவனை இன்னொருத்தி இந்தளவிற்கு நெருங்கியது மட்டுமல்லாது.. அவனுடன் கொஞ்சல்களில் இறங்குவதை எந்த மனைவியும் ஏற்றுக்கொள்ள மாட்டாள்.. ஆனால் இவள் அவற்றை பெரிதாக நினையாது, சிவாவோடு சேர்ந்து நகைப்பில் ஈடுபட்டிருப்பதை பார்த்த மற்றவர்களுக்கு அதிர்ச்சியாகி போனது.


"நான் கூட இங்க பெரிய பிரச்சினை ஆகப்போகுதோன்னு பயந்திட்டேன். நீ என்னடான்னா இங்க நடக்கிறத பெருசு பண்ணாம, இவ்ளோ சாதாரணமா எடுத்திட்டியேம்மா!" என மெச்சியவாறு அவள் அருகில் வந்தார் மீனாட்சி.

"நிஜமாவே உனக்கு கோபம் வரலையாம்மா?" என கேட்டார்.


'என்னது......! கோபம் வரல்லையா? ஏக்கர் கணக்கா வருதே! ஆனா வெளியில காமிக்க முடியுமா?' என தனக்குள்ளே கேட்டுக்கொண்டவள்,


"எனக்கு ஏன் அத்தை கோபம் வரப்போகுது? ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிறாங்க.. இந்தளவுக்கு கூட அன்பை பரிமாறிக்கலன்னா எப்படி?" என குரலில் இனிமையினை வரவழைத்து கூறியவள் வார்த்தைகள் என்னமோ பற்களுக்கு நடுவே நசியுண்டு வெளிவந்தது.

பார்வையாலே எரிப்பது போல் அவனை முறைத்தவள், முகத்தினை அன்போடு தன் புறம் திரும்பிய மீனாட்சி..


"என் பையன் உண்மையிலேயே ஒரு தங்கமான பொண்ண தான் என் வீட்டுக்கு மருமகளா கூட்டிட்டு வந்திருக்கான்.. பார்க்கிறத்துக்கு மட்டும் நீ மகாலஷ்மி இல்லம்மா.. குணத்தாலயும் நீ அந்த மகாலக்ஷ்மியே தான்" என மெச்சியவர் முன் சிரித்த முகமாக சமாளிக்க ரொம்பவே கஷ்டப்பட்டாள்.


"போதும் போதும்.... மகாலக்ஷ்மிய நாங்களும் காலண்டர்ல பாத்திருக்கோம்" என உதடு சுழித்த லாவன்யா,


"நீ வா மாமா!' நாம நிறைய பேசுவோம்" என கைபிடித்து இழுத்து சென்றவள் இழுவைக்கு போனவன் பார்வை மதுமிதாவையே பார்கலானது.
க்ஹூம்.. என அவளும் தன் பங்கிற்கு உதடு சுழித்தவள்..


"அத்த கிச்சன் எங்க இருக்கு? எனக்கு காஃபி குடிக்கணும்... பாப்புக்கும் பால் வேணும்" என்றாள்.


"ம்.. அவங்க பேசட்டும்.. வா நாம எல்லாருக்குமா சேர்த்து காஃபி போடலாம்" என அழைத்துக்கொண்டு உள்ளே சென்றவர், எங்கெங்கு என்னென்ன இருக்கிறது என்று ஒரு பாடம் எடுத்தார்.


"இன்னைக்கு நானே எல்லாருக்கும் காஃபி போடவா?" என ஆசையாக மதுமிதா கேட்க.


"ம்ம் பாப்பாவ தந்திட்டு நீயே போடு!" என்றார்.
மதுமிதாவிற்க்கு படு குஷியாகிப்போனது. ஆட்களை கணக்கிட்டு போட்டு மீனாட்சியிடம் கொடுத்தவள்.


"அத்த இவருக்கு எப்பவுமே கொஞ்சம் ஸ்பெஷலா காஃபி போடுவேன்.. அது தான் அவருக்கும் பிடிக்கும்.. நீங்க இதை மத்தவங்களுக்கு குடுத்திட்டு வாங்க. அதுக்குள்ள அவருக்கு போட்டு வைச்சிடுறேன்" என்றாள்.


"அது என்னடிம்மா.. உன் புருஷனுக்கு மட்டும் ஸ்பெஷல்? அது எப்பிடி போடுறதுன்னு எனக்கும் சொல்லு.. நானும் பழகிக்கிறேன்"

"யாருக்கு தெரியும்.. நானே இனி தான் பிளான் போடணும்" என முனுமுனுக்க..


"என்னம்மா புரியல.." என ஆர்வமாக கேட்ட மீனாட்சியின் தோள்களை பற்றியவள்,


"அது தான் ஸ்பெஷல் என்கிறேனே! உங்களுக்கு சொல்லிட்டா, எப்பிடி அது ஸ்பெஷலாகும்?"


"அது சரி! என்னமோ பண்ணி உன் புருஷனை முந்தாணையில முடிஞ்சு வைச்சிக்கோ" என புன்னகையோடு கூறிவிட்டு, குழந்தையை கட்டின் மேல் அமர்த்தி தட்டுடன் நகர்ந்து சென்றவரையே பார்த்திருந்தவள்..


"என் கண்ணு முன்னாடியே குட்டை பாவாடை காரிகூட ரொமான்ஸ்ஸா? இப்போ தெரியும் ரொமான்ஸ்....." என்றவள்,


"இப்போ என்ன பண்ணலாம்...? அவசரமா எதையாவது யோசிக்கணுமே.. காஃபிக்குள்ள மிளகாய் பொடிய அள்ளி கொட்டிடுவோமா? அது கலர் காட்டி குடுக்குமே! கலர் காட்டி குடுக்காத மாதிரி என்ன போடலாம்? பிளீச்சிங்க் பவுடர் போட்டிடலாமா?

நல்ல ஐடியா தான்.... ஆனா கொலை கேஸ்ல உள்ள போயிட்டா....
வேற என்ன பண்ணலாம்?" என தீவிரமாக யோசித்தவளுக்கு எந்த ஐடியாவும் தோன்றவில்லை.


'வேற வழியே இல்லை... நம்ம ஸ்ரேயாவையே காப்பி பண்ணிடுவோம்' என அவன் கப்பினுள் ஒரு தொகை உப்பினை அள்ளி போட்டு கலந்தாள்.

குழந்தையை ஒரு கையில் தூக்கியவள், மறுகையில் அவனது கப்பினை எடுத்துக்கொண்டு பவ்வியமாக அவனிடம் வந்து நீட்டினாள்.


அவர்கள் இருவரையும் பார்த்த அனைவருக்குமே பூரித்து போனது. இந்தளவிற்கு ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொள்ள முடியுமா என்று.


"ஏன்டா நீ ஸ்பெஷலான காஃபி தான் குடிப்பியாமே! எப்பிடி போடுவேன்னு கேட்டா... ரொம்பத்தான் பிகு பண்றா.." என மருமகளை புகழ்ந்து பாடிய மீனாட்சியின் பேச்சை கேட்டு, அவளை நிமிர்ந்து பார்த்தவன் அறிய வாய்ப்பே இல்லை.


ஆனால் சிவா அறிந்துவிட்டான். அவனுக்கு தான் தெரியுமே இருவரது நெருக்கம் கண்டவள் முகம் அனலாக தெறித்தது.
அவனுக்கோ அந்த காஃபியில் கலந்திருப்பதை அறிய ஆவல் மேலோங்கிப்போக. கேஷவனையே பார்த்திருந்தான்.

அவனை ஏமாற்றாது கப்பினை வாயில் சரித்தவனுக்கு முழுங்க முடியாமல் புரை ஏறிப்போக, அதை தரையில் துப்பியவன்..


'அடி சண்டாளி..! இப்பிடியா பழி வாங்குவே!' என
தன் நிலையினை வெளியே சொல்ல முடியாது, அப்பாவியாய் நிமிர்ந்து பார்த்தவனை கண்ட சிவாவிற்கு சிரிப்பு தாங்கவில்லை.


'பொண்டாட்டிய கண்ணு முன்னாடி நிக்க வைச்சிட்டு '
எவ கிஸ்ஸுக்கோ ஆசைபட்டா இப்பிடித்தான்.'

"ஏன் தங்கச்சி! நேத்து சிவாஜி படம் ஏதாவது பாத்தியா என்ன? கும்பிபாகம் தானே!" என சிரிக்க.
ம்ம்..... என குறும்பு சிரிப்போடு வேகவேகமாக தலையசைத்தாள் அவள்.


"அப்ப சரி. அப்ப சரி." என சிரித்தவர்கள் பாஷை யாருக்குமே புரியவில்லை. ஆனால் இம்முறை கேஷவனுக்கு நன்கு புரிந்துபோக, சிவாவை முறைத்தான்.


அவன் முறைப்பை கண்டு இதற்குமேல் இங்கிருந்தால் நண்பனிடம் வாங்கி கட்டிக்க வேண்டுமென அறிந்தவன்.


"பொழுது ரொம்ப சாய்ஞ்சிடிச்சு, இதுக்குமேல இங்க இருந்தா அம்மா விளக்குமாத்தோட வருவாங்க... அப்போ நான் வறேன். தங்கச்சி என் உயிர் நண்பனை பத்திரமா பாத்துக்கோ...!" என கூறி மீண்டும் சிரித்தவனை முறைப்போடே அனுப்பி வைத்தான் கேஷவன்.



சிறிது நேரம் முன்னர் போலவே அவனை ஒட்டி அமர்ந்து பேசிவிட்டு லாவன்யாவும் கிளம்பிவிட்டாள்.
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,934
எபி சூப்பரோ சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️அய்யோ முடியல சிரிச்சு முடியல உண்மையான கணவன் மனைவியா இல்லாட்டினாலும் மதுமிதாவுக்கு ஓரத்துல ஒரு possessiveness 😁😁😁😁😁😁வந்து ஓட்டிகிடுச்சு அதுதான் special coffee கேஷவ்க்கு 😆😆😆😆😆😆😆😆😆😆😆
 

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
எபி சூப்பரோ சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️அய்யோ முடியல சிரிச்சு முடியல உண்மையான கணவன் மனைவியா இல்லாட்டினாலும் மதுமிதாவுக்கு ஓரத்துல ஒரு possessiveness 😁😁😁😁😁😁வந்து ஓட்டிகிடுச்சு அதுதான் special coffee கேஷவ்க்கு 😆😆😆😆😆😆😆😆😆😆😆
நன்றி அக்கா
 

Ramya(minion)

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
405
ஹையோ இந்த எபி செம காமெடிகா.சூப்பரோ சூப்பர்
 

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
ஹையோ இந்த எபி செம காமெடிகா.சூப்பரோ சூப்பர்
பார்ரா... நன்றி சகி
 
Top