• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

07. காற்றோடு கலந்த விதையவள்

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
மாலை மூன்று மணி ஆனதும் கைப்பையுடன் கீழே வந்தவள், கதவை தட்டிவிட்டு காத்திருக்கவும் ,

"உள்ளே வரலாம்" என்ற குரலுக்கு உள்ளே சென்றவள்
"நான் போகலாமா சார்?." என்றாள்.


"தாராலமா போகலாம்... ஆனா நான் சொன்னது நினைவிருக்கட்டும்,." என்றவன் தனது கோப்பில் கவனமாக,
வெளியே வந்தவளுக்கு,

'என்ன ரகமாே...! விறுமாண்டி, நெட்டாங்கு" என்று முணுமுணுத்து விட்டு வெளியே வந்தவள், வீடு செல்வதற்கான பஸ்ஸில் ஏறினாள்.

சைலுவும் மைனாவும் அரட்டை அடித்து கொண்டிருக்கவும், கை பையை மேசை மீது வைத்து விட்டு.



"என்ன மைனா..! இண்டைக்கு ஆறுதலாய் இருந்து கதைக்கிற போல...? வீட்டில அடி விழாது?"


"இல்லையே...! அம்மா அத்தை வீட்ட போட்டாங்க. உங்காடே தான் நான் இண்டைக்கு" என்றாள் சந்தோஷமாக.

"ஏன் உன்னையை விட்டுட்டு போனாங்க? கூட்டிக் கொண்டு போயிருக்கலாமே"

"அங்கேயா? போசாம போவியா?
அங்க போனா.. அத்தை பேசி பேசியோ கொண்டுடும்... அத செய்யாத, இத செய்யாத எண்டு "


"இங்க பாருடி துஷா...
இவளோட பேசி ஜெயிக்கிறதுக்கும் ஊரில யாரோ இருக்காங்க" என சைலு சிரித்தவள்,


"அவளை விடு! எப்பிடி போச்சு முதல் நாள் வேலை?" என்றாள்.

"அதை ஏன்டி கேக்கிற? என் நிலமைய எப்பிடி சொல்ல?.." என சலித்துக்கொண்டவளிடம்,



"ஏன்டி இந்த மாதிரி சலிச்சுக்க?அவ்ளோ கஷ்டமா என்ன வேலை?"


"வேலை எல்லாம் நல்லம் தான் மச்சி.
ஆனா அந்த நெட்டாங்கு... அவனால தான்டி பயமா இருக்கு."



"யாரு மச்சி அந்த நெட்டாங்கு? அவன் எதுக்கு உன்னை தொல்லை செய்யிறான்?
நீ ரவிட்ட சொல்லு... அவரு பாத்துப்பாரு." என்றவளிடம்

"நீ வேற சைலு!. உன் ஆளு உனக்கு தான் மச்சி மாஸ்ஸி.
அவன் முன்னடி பியூஸ் போன பல்ப்பு மச்சி. அவனை கண்டாலே, கடைக்கே உதறல் எடுக்கும்.

அவன் கார் வந்தாலே காருக்கு கூட மரியாதை எண்டா பாத்துக்கோ.


உன் ஆளு எம்மாத்திரம்." என அந்த நெட்டாங்கு பற்றி துஷா கூற.

"யாருடி அந்த பெரிய மனுசன்?" என துஷா அவனை பெருமையாக பேசிய விதத்தில் கேட்டாள் சைலு.


"ம்ம்ம்ம் என்னத்த சொல்ல சொல்லுற?
நேற்று தெருவில நின்டு வாய்க்கா சண்டை போட்டானே! அந்த எந்திரம் தான்." என ஏனோ, தானோ என சொன்னாள் துஷா.

"என்னடி சொல்லுற? நேற்றே சொன்னானேடி அடுத்த வாட்டி பார்க்கேக்க உன்னை வைச்சிக்கிறன் எண்டு.


அவன் கிட்டையா மாட்டினா?" என்றாள் மைனா அதிர்ச்சியாகி.

"ம்ம்ம்ம்ம் அவனே தான்" என்றாள் பாவமாக தலையசைத்து.

"அவன விடு மச்சி! ஓவரா உன்னட்ட வாலாட்டினான் எண்டா, ஓனரிட்ட சொல்லிடு" என்றாள் சைலு.

" நீ என்ன லூசாடி...! அவன் தான் ஓனரே!." என்றாள் சைலு தன் சோகம் புரியாது பேசியதில் எரிச்சலாகி..

"மச்சி செம டுவிஸ்டி! இத நான் எதிர் பாக்கவே இல்ல" என்றவள்,



"பிறகு என்னடி ஆச்சு?" என்றாள் சுவாரசியாக, அங்கு நடந்ததை ஒன்றும் விடாமல் கூறியவள்,


"ஓகே..! இப்போ என்ன ஐடியா உனக்கு?"


"இன்னும் ஒண்டுமே யோசிக்கல. நீ ஏதாச்சும் சொல்லன்." என்க.


"நான் சொல்ல என்ன இருக்கு..? ஆனா ஒண்டு, ஒரு கிழமை டைம் இருக்கு தானே! அது வரை போய் பாரு மச்சி! தொடந்து அவன் வாலாட்டினான் எண்டா நின்டுடு மச்சி." என தனக்கு சரி என்று தோன்றியதை கூற.



"வந்த நாள்ல இருந்து ஏதோ சண்டை போட காத்துக் கொண்டு இருக்கிறான்டி! இந்த ஒரு கிழமைக்கும் சும்மா விடுவான் எண்டு நினைக்கிறயா?
ஒரு கிழமையாவது குடைச்சல் செய்யலாம் எண்டு தான் யோசிப்பான்." என்றாள்.

"என்ன மச்சி! ஏதோ பல நாள் அவனோட ட பழகினவ போல பேசுற? நேற்று தானே அவனை பாத்த.?"


"யாரு சொன்னா அப்பிடி எண்டு?
இங்க வந்தோன்ன, உன்ன பாக்கிறதுக்கு முன்ன, அந்த சிரிக்க தெரியாதவனை தான் பாத்தன்." என்றவள், அவனுடனான முதல் சந்திப்பையும் கூறினாள்.

"பாரேன் மச்சி! உனக்கும் அவனுக்கும் எப்பிடிடி எப்பவுமே சண்டை வருது?

போன ஜென்ம தொட்ட குறை... விட்ட குறையோ?" என கேலி செய்யதவள்.

"மோதல்ல ஆரம்பிக்கிறது எல்லாமே காதல்ல தான் மச்சி முடியும்.


எனக்கென்னவோ உங்க கெமிஸ்ரி வெர்கவுட் ஆகும்போல இருக்குடி.


ஆனா என்ன? என்னால தான் அவனை பாக்க முடியேர..; தூரத்தில இருந்த பாத்ததனால அவன் முகம் சரியா தெரியேல." என்றாள் சைலு கவலையாக.

"நல்லா வந்துடும் என் வாயில."

"கெமிஸ்ரியும், பிஸிக்ஸ்ஸும். அவன லவ் பண்றதுக்கு, பொம்பள சாமியார் ஆகிடலாம்.



நான் மட்டும் படம் எடுத்தன் எண்டு வையி! அவன வைச்சு எந்திரன்3 படம் எடுத்துடுவன்.

மேக்கப்போ, கிராப்பிக்ஸ்ஸோ எதுவும் தேவையில்ல. காசும் மிச்சமாகும், அப்பிடி இருப்பான்." என்றாள் கடுப்பாக.

"ஏய் செம்ம போ! அப்புறம்?." என்று மீண்டும் ஆவலாக.

"நான் என்ன கதையே சொல்லிக் கொண்டிருக்கிறன்?
நீ சொன்னது போல, ஒரு கிழமை போய் பார்ப்பம். ஏதாச்சும் வம்பு பண்ணான் எண்டா நின்டிடுவன்.


அப்பிடி நான் நின்டா, ரவி அண்ணா எதுவும் தப்ப நினைப்பாரா சைலு." என சங்கடமாக துஷா வினவ.

"அவர் எதுவும் நினைக்க மாட்டாரு. நான் சொல்லுறன். என்றாள்.


"ஓகேடி! அப்ப நான் குளிச்சிட்டு வாறன். எங்கயாச்சும் போவமா?" என்க.

"ஆ...... பக்கத்தில வயல் இருக்கு துஷா. அங்க போகலாம்." என்றாள் மைனா.

பச்சை பசேல் என இருந்த இடங்களில் மூவரும் குத்தாட்டம் போட்டு செல்பி, எடுத்து குதுகலமாக அந்த மாலை பொழுதை கழித்தவர்கள், வீடு வர ஆறு மணியை எட்டியது.

வளக்கமான தங்கள் சமையல் சாப்பாட்டை முடித்தவர்கள், இன்று மைனாவும் சேர்ந்ததினால் கதை அளந்து விட்டு, வழமையான நேரம் கடந்தே தூங்கினார்ள்.

ஆதவனவன் தன் காதலியான தாமரையை கண்டு மயக்கம் கொண்டு முத்தம் வைத்த நேரம்.
கண் விழித்த துஷா,

மணிக்கூண்டை பார்த்தாள், வழமையை விட ஒரு மணி நேரம் கடந்திருக்கவும்,

"எல்லாம் இந்த மைனாவால வந்தது...
இரவு தூங்க விடாமல் பேசி தான் இவ்ளோ பிந்திட்டுது." என அவளை திட்டியவள்.



"இந்த பண்டியாவது எழுந்தாளா பாரு? இனி எழும்பி பம்பரம் போல சுத்தபோகுது." என்றவாறு சைலுவை பார்த்தாள்.

அவளும் கொறட்டை விட்டு தூங்குவதை கண்டவள்.

"ஏய் சோத்து மூட்டை! எழும்புடி..!
இப்போ எழும்ப போறியா? இல்ல சுடுதண்ணிாவைச்சு மூஞ்சேல ஊத்தவா?" என்றாள் அவளை உறுட்டி.

"ஊத்துறது தான் ஊத்துற.., பால் ,சீனி, தேயிலை கலந்து ஊத்துடி?" என்று மறு புறம் திரும்பி படுத்தவளை கொலை வெறியுடன் பார்த்தாள் துஷா.

"இத எழுப்பிக் கொண்டிருந்தா, வேலைக்கு சேந்து ரெண்டாம் நாளே விறுமாண்டிட்ட பேச்சு தான் வாங்கோணும். நீ எப்போ எழும்பிறியோ எழும்பு!" என்று குளியலறை நுழைந்தவள், குளித்து வெளியே வந்தாள்.

கட்டிலில் எழுந்திருந்து இவளை முறைத்தாள் சைலு.

"என்ன பார்வை?" என அவளது முறைப்பில் சிரித்தபடி துஷா கேட்க.

"எதுக்குடி என்னை எழுப்பேல?" என்றாள் கோபமாக.

"எழுப்பினா தூக்கம் கலைஞ்சிடுமே! அது தான் எழுப்பேல" என்றவள்,


"தொண்டை தான் வலிக்குது மூதேவி, உன்னை எழுப்புறத்துக்கு கத்தி... கும்பகர்ணி கும்பகர்ணி.. ." என்றவள்,

"சண்டை போட டைம் இல்ல... போய் குளி.. நைட்டுக்கு பாப்பம்." என்றவள், தயாராகி சமையல் அறை சென்று, டீ போட்டு மூன்று போருக்கும் எடுத்து வந்து வைத்து விட்டு, மைனா பார்த்தாள்.

அவள் எழாமல் குறட்டை விட்ட படி தூங்கவும்.


"இது வேறையா? "


"ஏய்...... மைனா! எழும்பி மூஞ்சிம கழுவுடி! டீ ஆறப்போகுது." என்றாள்.

எழுந்தவள் டீயை அழுக்கு வாயுடனே குடித்து விட்டு, மீண்டும் படுத்துக்கொண்டாள்.

"இதுகள திருத்த முடியாது போல." என நினைத்தவள்,


"சைலு வாடி! குளிச்சது போதும்... நேரம் ஆகுது." என்று குரல் கொடுக்க.


"இதோ வாறேன்." என வந்து தயாரனவள், மைனாவிடம் சாவியை கொடுத்து விட்டு, வந்து வாங்கி கொள்வதாக கூறி தத்தமது வேலைக்கு சென்றார்கள்.

கடையுள் நுழைந்தவள்,

"என்ன நேற்று வரேக்க இப்படி யாரும் பரபரப்பாக இல்லையே! அவன் வந்த பிறகு தானே பரபரப்பானாங்க." என்றவாறு, கை கடிகாரத்தை திருப்பி பார்த்தாள்.

அது பத்து நிமிடங்கள் தாமதமாக காட்டவும்.


"இது அவன் வர்ற நேரமும் இல்ல. இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு." என்று சிந்தித்த படி, தன் பகுதிக்கு சென்றாள்,


"துஷாந்தினி தானே உங்க பேரு?" என்று அங்கு வேலை செய்யும் பெண்களில் ஒருத்தி வந்து கேட்க்கவும்.


"ஆம்" என தலை அசைத்தாள் துஷா.

"சார் உங்கள உள்ள வர சொன்னாரு." என்றவள் சென்று விட,

"என்னது..! இவன் வந்துட்டானா? நான் தான் லேட்டா?
இப்போ என்னை அரிஞ்சு சாம்பார்ல போட போறானே!" என தனக்குள் முணுமுணுத்தவாறு,
அவனது அறை வரை சென்றவள் கதவை தட்டும் முன்னரே,



"வாங்க துஷா" என்றன் பகீரதன்.










வார்த்தை வரம் கேட்டு வந்தேன்
மௌனமே வார்தை என வரமளித்தாய்.
உன் விழியின் அசைவு மொழியில் தான்
எத்தனை பிழைகள்.

ஆனாலும் அவற்றை திருத்திக் கொள்ளதே.
அவை என்னால் ரசிக்கப்பட்டவை.


விரல் கொண்டு எண்ணி விடுவேனடி
நீ பேசிய வார்த்தைகளை!

அவை என் நினைவு பெட்டியில் ஒலி பதிவுகளாய்.


மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்
ஒலி பதிவுகள்.

ஏன் பெண்ணே அஞ்சுகிறாய்.?
உன் இதழ் பிரித்து வாய் மொழி
பேசுகையில், செவ்விதழ்கள் உதிர்ந்து விடு மென்றா.?

கவலை கொள்ளாதே
அதையும் திரட்டி என் நினைவு பெட்டியுள் அடைத்து கொள்வேனடி.


என் இதயப் பெட்டகம்
உன் சின்னங்களால் மாத்திரமே நிரப்ப பட வேண்டியவை.




"எதுக்ககாத்துக்கொண்டு இருகிறானோ" பயந்தவாறே உள்ளே சென்றாள்..

"கு ட்மார்ணிங்க் துஷாந்தினி." நக்கலாக வணககம் வைத்தவன், அவளது விழிகளில் தெரிந்த பதட்டம் கண்டு,

'ஆரம்பிச்சிட்டாள் அந்த முழியை உறுட்டியே ஆள காலி பண்றத்துக்கு.' மனதில் தான் நினைத்தான்.


"எந்த பள்ளிக்கூடத்தில படிச்ச? குட் மார்ணிங் சொன்னா திரும்பி சொல்லாேனும் எண்டு சொல்லி குடுக்கலையோ?" என்றான் கேலியாக.

அவன் பேச்சில் முதலில் விழித்தவள், "அது.. அது.." என்று தொண்டையை செருமி விட்டு,

"குட் ..... குட் மார்ணிங் சார்." என்றாள்.


இது வேற நேரம் காலம் தெரியாம, வைரமுத்து சொன்ன மாதிரி தொண்டைக்குள்ள உறுண்டு கொண்டு' தன்னை தானே தனக்குள் திட்டியவாறு அவனை பார்த்தாள்

அவது ஒவ்வொரு அசைவினையும் அவளது கண்களில் படித்தவன்.


"என்ன! ஏன் பதட்டம்? கொஞ்சம் லேட் ஆச்சு போல.
சரி விடுங்க! இது முதல் தடவை தானே! நான் ஒன்டும் பெரிசா எடுக்கேல. உங்கள தான் எதிர் பாத்துக்கொண்டிருந்தன் ." என்றான்.

'என்னது! என்னை எதிர்பாத்தானா?
எதுக்கு இவ்வளவு ஆர்வம் எண்டு தெரியேலயே!' என்று நினைத்தவள், அதை அவனிடம் கேட்காது அவனே ஆரம்பிக்கட்டும் என்று அமைதியாகவே நின்றாள்.

"நேற்று வேலை எல்லாம் தெளிவாய் தெரிஞ்சு கொண்டிங்கள் தானே!
இல்லட்டிக்கு சந்தேகம் ஏதாவது இருக்கா?" என்றான்.

"மேனேஜர் எல்லாமே தெளிவாகவே சொன்னார். ஒரு கிழமை போனா முழுசா பழகிடுவன்." என்றவளிடம்

"குட்....! அப்பறம் துஷாந்தினி நீங்க ஒரு கிழமை வேலை செய்யிறதா இருந்தாலும் பதிவு முக்கியம்.

சோ.... கையெழுத்து வையுங்கோ.
ஒரு வாரம் எண்டாலும் சம்பளம் தரோணும் தானே!

அதுவுமில்லாம ஒருத்தங்களோட ஒழுக்கத்த இந்த பதிவ பாத்துத்தான் கணிக்க ஏலும். வாரப்பவும், போறப்பவும் அதில சைன் பண்ணிடுங்க" என்றான்.

துஷாந்தினிக்கோ நடப்பவற்றை சற்றும் நம்பமுடியவில்லை.
'இவனா இப்படி பேசுறான்?
இவனுக்கு இவ்வளவு தன்மையா பேச தெரியுமா?


பிந்தி வந்ததுக்கு இடி, மழை எண்டு எதிர்பார்த்து வந்தா, எல்லாமே எதிர் மறையாக நடக்கிறதே.


இல்லை எண்டா நான் தான் கனவு காண்றனா? இல்ல இது கனவுதான்.

அப்ப நான் காலம எழும்பி, பஸ் புடிச்சு வேகமாய் வந்தது....
கனவிலயுமா இவன் வருவான்?' என்ற யோசனையில் உறைந்தவளை,

"என்ன துஷாந்தினி! நான் பாட்டுக்கு கதைச்சுக்கொண்டு இருக்கிறன். நீங்க வேற யோசனேல இருக்கிறீங்கள் போல...


நான் சொன்னது காதில விழுந்துதா இல்லையா?" என்றவன் குரலில் தெளிந்தவள்,

'அப்ப இது கனவில்லையா? நம்ப முடியேலயே!
எந்த நாடகத்தின் தொடக்கமாே!

ஏதோ பிளான் போடுகிறான். எதிலயும் சிக்காம இருக்கோணும்.'


"அது... நான்..... நான் போகலாமே சார்." என்றாள் திக்கி திணறி.

"ஓகே...! நீங்க போங்க" என்றவன் அவள் சென்றதும்.


'இவளையா பெண் சிங்கம் ரேஞ்சுக்கு நினைச்சு, பழி வாங்க பாத்தன், நேற்று காட்டின டெமோவுக்கே நடுங்குட்டாளே! இன்னும் கொஞ்சம் நின்டிருந்தா அழுதிருப்பாள் போல.


என்னட்ட தான் அப்பிடி நடுங்கிறாளா? இல்ல இவளின்ட இயற்கை குணமே இது தானா?' என தனக்கு தானே கேட்டவன்.


'இல்லையே! றோட்டு எண்டு கூட பாக்காமல அந்த குதி குதிச்சாளே...
இல்ல இல்ல.. அவ முதல்ல சாரி சொன்னாள்.


நான் தான் அவள்ல இருந்த எரிச்சல்லயும், அவசரத்திலயும் அவள் சொல்ல வந்ததை கவனிக்கேல.' என அவளுக்காகவே அவன் மனம் வாதடியது.

முதல் நாள் அவளை தள்ளி விட்டபோது கூட எதுவும் பேசதவள் என்று நினைக்கையில், தன் முன்னே இரண்டு தடவைகள் கண்கலங்கி, அதை தன்னிடம் காட்டிக்கொள்ளாது மறைத்தது நினைவு வந்தது.


'நான் தான் அவளை காயப் படுத்தி இருக்கிறன்.
இனி அப்படி செய்யக்கூடாது.


அவள் அவளாயே இருந்துட்டு போட்டும். அவளின்ர விசயத்தில் இனி மூக்க நுழைக்ககூடாது.'
என நினைத்தவன் தன் வேலையில் கவனத்தை செலுத்தினான்.

தனது தனிப்பட்ட வேலைகள் முடிந்தால், எல்லா பகுதியையும் சுற்றி பார்ப்பது அவனது வழக்கம்.


அன்றும் அதே போல் பார்வையிட்டவாறு வந்தவன், துஷா பகுதிக்கும் நுழைந்தான்.

அந்த பகுதியில் வேலை செய்யும் இரு ஆண்களுடன் வர்மன் உட்பட இன்னும் இருவருவர் சுவார்சியமாக பேசி சிரித்து கொண்டு இருந்தனர்.



அவர்கள் பேச்சில் துஷா கலந்து கொள்ளவில்லை என்றாலும், அங்கு வர்மன் நிற்பதால், அவளும் அவர்கள் அருகில் சென்று நின்று கொண்டுடாள்.


அவர்கள் பல விஷயங்கள பேசும் போது, காமடி கலந்து பேசும் அவர்களது பேச்சில் அவளாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

அவர்களுடன் அவளும் இணைந்து அந்த இடமே சிரிப்பலையாய் மாறியிருந்த நேரம் தான், ரதன் அங்கு வந்தான்.

பேச்சு சுவாரசியத்தில் அவன் வந்ததை அவர்கள் கவனிக்கவில்லை.


இங்கு ரதனுக்கோ இவர்களை பார்க்கும் போது பற்றிக்கொண்டு வந்தது.


இரண்டடி அவர்களை நோக்கி எடுத்து வைத்தவன்,


'வேண்டாம் இப்ப அவசர பட்டா எல்லாம் கெட்டு போயிடும்.' என்று நினைத்தவன்,


வர்மனையும், துஷாவையும் நின்று இரண்டு நிமிடங்கள் உற்று நாேக்கி விட்டு, அறை சென்றவன் மனமோ உலைக்களமானது.

"என்ன தான் நினைச்சுக் கொண்டிருக்கினம்? இது என்ன கூத்தடிக்கின்ற இடமா?
நான் வந்ததை கூட கவனிக்காம அப்படி என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு? வேலையை செய்யாம கும்பலாக நின்டு பல்ல கட்டிக்கொண்டு.


சீசீடீவி வழிய பார்பன் எண்டு தெரிஞ்சும் கூத்தடிக்கிறது நான் இருக்கேக்கயே இவ்வளவு நடக்குதோ.....!"

"இவள் வேற... வந்து ரெண்டு நாள் ஆகேல அதுக்குள்ள கூட்டு..
உன்னால தான் பேசாம வரவேண்டி போச்சு...
இப்பா கண்டிச்சா, இந்த வேலையே வேண்டாம் எண்டு ஓடிடுவ... பிறகு என் நிலமை....? தனக்குள் கடுகடுத்தவன்,

அது தான் அவளின்ட விஷயத்தில மூக்கை தலையிட கூடாதென்டு நினைச்சிட்டனே! அவள் போனா என்ன? இருந்தா என்ன? என அவன் மனம் கூற.

"இல்லை.... அது நடக்கக்கூடாது...
இந்த கிழமை கழியட்டும். பிறகு யார் எனண்டுற காட்டுறன்.
போனா போகுது, தொல்லை செய்யாம இருப்பம் எண்டு நினைச்சா, எனக்கு முன்னயே அவனோட கூத்தடிக்கிறியா..?




என்னோட மட்டும் கதைக்க வலிக்குது..
நான் எண்டா நடுங்குது..
இண்டைக்கு உன்னோட நல்லா தானே கதைச்சன்... ஒரு வார்த்தை நல்லா நீ நல்லா கதைச்சியா...?


நானே கேள்வி கேட்டும், ஏதோ பேய் பூதத்தோட கதைக்குறது போல திக்கித் திணறுற....
அவனாடே சேராந்து பல்லை காட்டேக்க இயல்பா தானே இருக்கிற..


என்னடி! என்னை பாத்தா லூசு மாதிரியா இருக்கிறன்?' அவளுடன் நேருக்கு நேர் பேசுவதைப்போல் தனிமையில் பொருமிக்கொண்டிருந்தவன் மனமோ!

'என்ன பகீரதன் சார்! பைத்தியம் முத்திப் போச்சாே...?

அவ யாரோட பேசி சிரிச்சா உனக்கென்ன...?
ஓ.... உன்னோட அந்த மாதிரி நடக்கேல எண்ட ஆத்திரம்...

நீ அவளோட சரியா நடந்திருந்தா, இந்த மாதிரி உன்னோடயும் இருந்திருப்பாள்..
நீ தான் சுடு தண்ணியே! எப்ப பார் கத்திக் கொண்டு சுத்தினா நடுங்கத்தான் செய்வாள்.


'அப்படி எண்டாலும், இண்டைக்கு நல்லா தானே கதைச்சன்.... அவளை பாக்கிறதுக்காகவே காலங்காத்தால எழும்பி,

வழமைய விட வேளைக்கு வரேலயா?
நான் வந்தும் அவ வரேல எண்டு கோபப் பட்டன் தான்.... அவளை பாத்ததும் அது போன இடம் தெரியேல.
இதுவே வேற யாருமா இருந்திருந்தா, இப்பிடி விட்டிருப்பனா?


அவளால என் இயல்பில இருந்து மறலையா?' என்றான் மனதின் வாதத்துக்கு எதிராய் சினந்தவனாய்.

'இதெல்லாம் நீ எதுக்கு செய்யோணும்? இல்ல எண்டா இதை எல்லாம் உன்னட்ட எதிர் பார்த்தாளா...?


அவள் எதிர் பார்த்து, அதை மதிக்காம போனா நீ கோபப்படுறது நியாயம்..


காரணமே இல்லாம அவள பாக்குற நேரம் பூரா வம்பிழுத்தா, அவளும் என்ன செய்வாள்.?
சாதரணமாக உன்னட்ட அவள் பேசினதே இல்ல...



இது தான் உன் இயல்பு எண்டு நினைச்சிருக்கலாம்.

திடீர் எண்டு நல்லவன் போல பேசினா, ஏதோ சதி பின்னுறான் எண்டு தான் நினைக்க தோன்டும்.

அவளோட பக்கமும் யோசிக்க வேண்டாமா?
நீ செய்யிறது கொஞ்சமும் நியாயம் இல்ல!' என்று அவள் பக்கமும் அவன் மனம் வாதாடமல் இல்லை.

"சரி என்னோட பிழைய திருத்துறன்.
ஆனா என்னோட மட்டும் தான் இப்பிடி பேசோணும்.


அப்பிடி இல்லை எண்டா யாரோடயும் கதைக்க கூடாது.. அதுவும் வர்மனோட.... ஏற்க மாட்டன்.'

அதை நீ சொல்ல கூடாது. அப்பிடி சொல்ல நீ யாரு அவளுக்கு...?' என்றது மனசாட்சி
நான்..... நான் சொல்வது தெரியாது திணறியவன்.

'இப்ப என்ன?
அவளுக்கு நான் யாரென்று தெரியோணும்...?
ம்ம் நான் அவளை லவ் பண்றன்.
எனக்கு அவள் வேணும். யாருக்கும் அவளை விட்டு குடுக்க மாட்டன்.


இப்ப காணுமா?' என உறுதியாய் தன்னிடமே கூறிக்கொண்ட அதே நிமிடம்,


ஆனா என்னை கண்டாலே ஓடுறவள், எப்பிடி என்னை விரும்புவாள்...


ஒரு வேளை துஷாவும் வர்மனும் ஒருத்தருக் கொருதர் விரும்புறதுக்கும் சந்தர்ப்பம் இருக்கம் தானே!


அதாலயே தன்னோட வைச்சிருக்க, இங்க கூட்டிக் கொண்டு வந்திருக்கவும் வாய்பிருக்கும்.' அவனை குழப்ப வேறு யாரும் தேவையில்லை என்பது போல தன்னை தானே குழப்பிக்கொண்டவனுக்கு,

கிடைத்த பதில் துஷா மேல் தான் காட்டும் பொறாமையில் பெயர் காதல் என்பது,

வர்மனுக்கும் துஷாவுக்கும் நடுவில் இருக்கும் உறவின் பெயர் என்னவென தெரிந்து கொள்ள வேண்டும்,


அதோடு அவள் மனதில் தன்மேலிருக்கும் பயத்தினை போக்கி, காதலை கொண்டு வர வேண்டும்' என எண்ணினான்.
 
Top