• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

08. காற்றோடு கலந்த விதையவள்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
ஒன்று நாட்ப்பது மணியளவில் அவளை பார்க்க துடித்த மதினை அடக்கத் தெரியாது சென்றவன், அங்கு அவளுடன் பேசிக்கொண்டு நின்ற வர்மனை கண்டவன்,

"எப்ப பாத்தாலும் இவள ஒட்டிக்கொண்டே இருப்பானாே...! அப்பிடி என்ன பேசினமோ?' என உள்ளே கருகினாலும்,

"என்ன வர்மன்! பாக்குற நேரம் எல்லாம் இவளோடயே நிக்கிறீங்கள்... அப்பிடி என்ன தான் பேசுவீங்கள்..?" என்றான் குரலை சாதாரணமாக காட்டி.


"லஞ்ச் டைம் சார்! அதான் சாப்பிட போகலாம் எண்டு......" என்றான் ரவி இழுவையாக.

"அப்ப போறது தானே! இங்க என்ன வேல?" கோபம் தான். ஆனால் வெளிக்காட்ட முடியவில்லை அவனால்.

"துஷா புதுசு சார்! நேற்று அவ சாப்பாடு கொண்டு வந்ததால கன்டீன் இருக்கிற இடம் தெரியாது. அதான் இண்டைக்காவது காட்டுவம் எண்டு கூப்பிட வந்தன்." என்றான்.

"ஏன் துஷாந்தினி! வர்மன் தான் கூப்பிடுகிறாரே! போக வேண்டியது தானே!"

அவளுக்கும் அவனுடன் சேர்ந்து கன்டீன் செல்வது சரியாக படவில்லை என்றதனால், வர்மனுக்கு சொன்ன காரனத்தையே ரதனுக்கும் சொன்னாள்.

"இல்லை சார்! கொஞ்ச வேலை இருக்கு. அதோட இந்த நேரம் பாதி பேர் சாப்பிட போயிட்டினம்.
கஷ்டமர் நிக்கிற நேரத்தில, சாப்பிட போனா, அவங்கள யாரு கவனிக்கிறது. மற்றவ வந்தோன்ன நான் போறன்." என்றாள் மறுப்பது தெரியாது நாசுக்காய்.

"ஓ..... நீங்க போங்க வர்மன்!
நானும் ஒரு ரவுண்ட் போட்டு, கன்டீன் தான் போக போறன்.
நான் போகேக்க கூட்டிக்காெண்டு போறன்" என அவனை அனுப்பினான்.

வர்மனை பொறுத்தவரை, அவளுக்கு கன்டீனை யாராவது காட்டினால் போதும் என்ற எண்ணம் தான்.

"வேலையை முடிச்சிட்டு, சாரோடயே போ துஷா!" என்றவன் சென்றுவிட, செல்லும் அவனையே பார்த்திருந்தவளுக்குத்தான் அவன் கேட்கும் போதே போயிருக்கலாம் என்று தோன்றியது.




அவளது முகத்தில் தெரிந்த உணர்வுகளை படித்தவனுக்கு சிரிப்பை கட்டு படுத்த முடியவில்லை.
தன்னால் இயன்றவரை சிரிப்பை அடக்கியவன்,


"நான் அந்த பக்கம் போட்டு வரவும், நீ வேலைய முடிக்கவும் சரியாக இருக்கும்" என்று கூறியவனுக்கு இறுதி நிமிடத்தில் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் போகவே, சிந்திவிட்டு சென்றான்.




நானும் மாணவி தான்
அவனை
அணு அணுவாய் கற்றிட
துடிக்கும் மாணவி!
அவனது புன்னகை அறியா
இதழ்களில் அத்தனை வித்தைகள்......?
மேகங்களின் உரசலினால்
மின்னல் தெறிக்குமாமே!
எவ்வித உரசலும் இன்று என்னவன்
சிரிப்பினில் தெறித்த
மின்னல் கீற்றினில் தான்
எத்தனை பிரகாசம்
அண்டமே அதிரும் அளவு. அதில் மாட்டு போன என்னை,
மனித குழியில் எனை புதைத்து விடாதே!
உன் கன்ன குழியினில் புதைக்க
கட்டளையிடு என்னவனே!



'எவ்வளவு கெஞ்சினார்.., பெரிய சீன் போட்டன்.
இப்ப இந்த சிரிக்க தெரியாதவனோட போகட்டாம்..

இவனோட போனா தண்ணி கூட தொண்டையால இறங்காது. இதில் சாப்பாடு?
சந்தேகம் தான்...
யாராவது இவன் வாறத்துக்குள்ள சாப்பிட போனா, நானும் சேர்ந்து போடலாம்.' என்று நினைத்தவள்

அந்த பகுதி முழுவதும் கண்களால் வலைவிரித்தாள்.
அனைவருமே கையில் வேலையோடே நின்றனர்.

"இண்டைக்கு பட்டினி தான்" வாய்விட்டே புலம்பியவள், கவனத்தை ஈர்த்தது அந்த சிறுவர்களின் அழகு.

ஒரே நிற உடை, ஒரே நிறம் ஷு என அவர்களில் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு இருவருக்குமே ஒரே முகத்தோற்றம்.

பார்த்தவுடன் அவர்கள் இரட்டையர்கள் என தெள்ள தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

அந்தப் பகுதியை சுற்றி சுற்றி கூச்சல் இட்டு விளையாடி கொண்டிருந்தார்கள்.
அவர்களையே ரசித்துக் கொண்டிருந்தவள் கொண்டிருந்த துஷாவிடம், வந்தாள் ஒரு நடுதர வயது பெண்.


"நீங்கள் இங்க வேலை செய்யிறீங்கள் தானே!" என்றாள்.

அவள் கேட்டது தூஷா காதில் விழுந்தாலும், அவள் கவனம் முழுவதும் சிறுவர்கள் மீதிருந்தது.

"ஆமா சொல்லுங்க மேடம்."என்றாள்.

தான் கேள்வி கேள்விக்கு பதிலளித்தவள் பார்வை வேறெங்கே இருப்பதை உணர்ந்து, அவள் பார்வை சென்ற இடத்தை தானும் ஆராய்ந்தவள், அந்த சிறுவர்களை கண்டதும்.


"அவங்க ஏதும் குழப்படி செய்தாங்களா?" என்றார்.

"இல்லை.... ஆனா பாக்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி வடிவா இருக்கினம்....." என புன்னகையோடே அவள் கூற,

பதிலுக்கு அவளும் புன்னகைத்தவள்,

"என்ர பிள்ளைங்க தான். டுவின்ஸ்.... சரியான குழப்படி... அதான் ஏதையாவது உடைக்கிறதுக்குள்ள கூட்டிக் கொண்டு போயிடோணும்." என்றவள், கையில் இருந்த மேசை மின் விளக்கை காட்டி,

"இது கொஞ்சம் டாமேஜ்ச இருக்கு.. இது போல வேற எடுக்கலாமே?." என்றாள்

"இருங்காே மேடம் பார்கிறன்." என்றவள், மின் விளக்கு பகுதியில் தேடினாள்.

அது கண்ணடி அலுமாரிகளில் மேல் பகுதியில் இருந்தது.
யாராவது நின்றால் அவர்களை, ஏணி மீது ஏற்றி எடுக்கலாம் என்று பார்த்தாள்.

சாப்பாட்டு நேரம் என்பதால் அனேகமானவர்கள் சாப்பிட சென்று விட்டனர்.

மீதம் இருப்பவர்கள் வேலையாக இருந்ததனால்,
'சரி நானே ஏறுவம்.' என நினைத்தவள் அந்த பெண்ணிடம்,

"மேலே இருக்கு. எடுத்து தாறேன்"

"சரி சிஸ்டர்...! நீங்க எடுத்து வையுங்கோ, எனக்கு கொஞ்ச பொருள் வாங்க வேண்டி இருக்கு, அத பாக்கிறன்" என்று அவள் சென்று விட,
ஏணியை வைத்து அதன் மேல் ஏறினாள் துஷா.

அந்த மின் விளக்கில் அவள் கை வைக்கவில்லை.


"ஏய்...! .அதை நான் தான் முதல் எடுத்தன். என்னட்ட தா...!" என்றவாறு ஒருவரை ஒருவர் துரத்தி கொண்டு ஓடி வந்த இரட்டையர்கள், அவள் நின்றிருந்த ஏணியை தட்டி விட்டு ஓடத்தொடங்க.

ஏற்கனவே பேலன் இல்லாமல் நின்றிருந்தவளோ, இவர்கள் தட்டி விட்டதில், கீழே விழாமல் இருக்க, கையில் அகப்படுவதை எல்லாம் பிடித்தாள்.


அது கண்ணாடி ஷோ கேஸ் என்பதால், அதன் விளிம்பில் கூறிய பகுதி அவள் கையை கிழித்து விட்டது. அந்த வலியில் பற்றிய கையினை விட்டவள், கீழே விழப்போகுறோம் என்ற பயத்தில் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

கிழே விழுந்தாள் தான் ஆனால் அவளுக்கு வலிக்கவில்லை.

சில வினாடிகள் கடந்திருக்க, அதை உணர்ந்தவள்,

'விழுந்தும் வலிக்கேலயே..!' என நினைத்தவளுக்கு, தன் கையானது எதையோ இறுகப்பற்றியிருப்பது இப்போது தான் உறைத்தது. கூடவே அந்தரத்தில் மிதப்பது போல் ஓர் உணவும் தோன்ற,

கண்களை மெதுவாகத் திறந்தவள், விழிகளின் அருகில் பகீரதன் முகம் தெரிய, அதிர்ந்து சுற்றத்தை திரும்பிப் பார்த்தாள்.

அங்கு அவனை தவிர யாருமில்லை... கீழே விழாமல் அவளை கைகளில் ஏந்தியாறு நின்றிருந்ததான் அவன்.


'இவனா என்னை தாங்கி பிடிச்சான்..? இதுக்கு நான் கீழயே விழுந்திருக்கலாம்!
இப்ப கத்த போறானே!
இன்னும் அவன் கையில் தான் இருப்பதை உணர்ந்தவள், இறக்கி விடுவான். என அவன் திரும்பி முகத்தை ஏறிட்டாள்.

அவள் முகத்தையே பார்த்திருந்தவன் இதழ்கள் புன்னகையாய் விரிய. அவன் விழிகறே காந்தமென மாறி, அவளை துளைத்தது.

அந்த பார்வையில் தன்னையும் அறியாது கட்டுண்டவள், ஒருவர் விழி வழியே ஒருவர் அகழ்வாரச்சி நடத்திக்கொண்டிருந்தனர். அது எவ்வளவு நேரம் என்பதை கடகாரம் மட்டுமே அறியும்.

"துஷா.... துஷா.... நீ எங்க இருக்கிற...?
ஓ...... இங்கதான் இருக்கிறியா? என திடீர் என்று வந்த குரலில், சுயத்துக்கு வந்தவர்கள் இருவரும்.
அவர்கள் முன் வந்து நின்றவனை கண்ட ரதனுக்குத்தான் எரிச்சலாயிற்று .

'வந்துட்டான் கரடி! எங்க இருந்து தான் மோப்பம் பிடிக்கிறானோ?
இவள கொஞ்சம் நெருங்கினாலும், உடனேயே மூக்கு வேர்த்து, வந்துடுவான்' என பொருமியவன்,

அவளை கீழே இறக்கி விட்டவன், வலது கை தாங்கிய இடையினை வேண்டுமென்று அழுத்தம் காெடுத்தே விடுவிக்க,

அவனிடமிருந்து தப்பிப்பதற்காக அவசரமாக நெளிந்தவள் விரல்களோ, நிலை தடுமாறு போகமல் இருப்பதற்காக, அவனது சட்டை காலரை இன்றும் இறுக்கமாக பற்றிக் கொண்டது.

தன் சட்டையை இறுகப்பற்றிக் காண்டவள் கையினை புன்னகையுடனே குனிந்து பார்த்தான்.

ஏற்கனவே அவன் தீண்டலில் கூச்சமானவள், வர்மன் எதிரில் நிற்பதை எண்ணி அதை முகத்தில் காட்டி கொள்ளாது நின்றவள், அவனது பார்வை போன திசையில் தன் விழிகளையும் நகற்றினாள்.


'அந்தரத்தில தொங்கேக்க , எதையோ எண்டு பிடிச்சது இதையா...?' அவசரமா கையினை எடுத்தவள்,

"சாரி" என்றாள் குனிந்த தலையினை நிமிர்த்தாது.
காரணமே அற்று இருவருக்கு மத்தியிலும் மௌனம் நீடிக்க.
அதை அவனே கலைப்பதாய்,


"ஏன் ஏணி மேல நீ ஏறின?
அதுக்கு தான் நிறைய பேர வைச்சிருக்கிறனே!
அவங்களை கூப்பிட வேண்டியது தானே?
நான் வந்ததானால அடி படாம புடிசிட்டேன். இல்லை என்னாயிருக்கும்.? அதின்ர உயரத்துக்கு தலை சிதறிப் போயிருக்கும்" என்றான் கோவமாக.

பனையில் இருந்து விழுந்தவனை மாடு மிதித்த கணக்காகியது துஷாவின் நிலமை.

"இல்லை சார்.. யாரையாவது கூப்பிட்டிருப்பன்..
ஆனா எல்லாருமே வேலையா இருந்திச்சினம்.., அதல தான் நானே....." மீதியை சொல்ல முடியாமல் இழுக்க ஆரம்பித்தாள்

அவளது பேச்சும் தோற்றமும், தன்மேலான அவளது பயத்தினை வெளிப்படுத்த,


'இந்த முகத்தையம் குரலையும் எங்க வாங்கினாள் எண்டே தெரியேல!
பரிதாபமாக பார்த்தே கவுக்கிறாளே!' என எண்ணியவனோ.

"சரி சரி.. இனிமேல் நீ ஏறாத.... யாரையாச்சு கூப்பிடுங்க. அப்பிடி யாரும் இல்லை எண்டா பக்கத்து செக்சனுக்கு போய், நான் சொன்னன் எண்டு கெல்ப் கேளு! ஓகே வா?" என்றவன் வர்மனிடம்....


"சொல்லுங்க வர்மன்! என்ன விஷயம்" என்றான்.

"அது.... துஷா இன்னும் சாப்பிடேல... அதான் பாத்திட்டு போலாம் எண்டு வந்தன்."


"ஓ....... அதுக்கு தானா....? நானும் அதுக்காக தான் வந்தான் வர்மன்.. அதுக்குள்ள இவ்வளவு நடந்திட்டுது." என்றவன், துஷாவின் புறம் திரும்பி,

"எதுக்கு மேல ஏறின..?' என்றான்.

டேமேஜ் ஆன விளக்கை காட்டி,
"இதில் ஏதோ டேமேஜ் இருக்குதாம்.. இதைபோல வேற இருக்கோண்டு கேட்டினம், அது அங்கே தான் இருக்கு" என்று காட்டினாள்.

"வர்மன் அதை எடுத்து கொடுக்கிறீர்களா? நாங்க சாப்பிட்டு வாறோம்." என்றான்.

"நீங்க போங்காே... நான் இத பாக்குறன்." என்று அவர்களை அனுப்பி வைத்தான்.



கன்டீனில் அவனாகச் சென்று ஓர் இடத்தில் அமரும் வரை பொறுமை காத்தவள், அவன் ஓர் இடத்தில் அமர்ந்ததும், அவன் இருந்த இடத்தை தவிர்த்து வேறு ஓர் மேசையில் சென்று அமர்ந்து கொண்டவளுக்கு அப்போது தான் மூச்சே வந்தது.


'அப்பாடா...! இப்ப நிம்மதியா சாப்பிடலாம்." என் நினைத்தவள், பார்வை அவன் இருந்த இருக்கைக்கு திரும்பியது.

அங்கு அவன் இல்லாமல் போகவே!
'இப்ப தானே என்னோட வந்தான். அதுக்குள்ள காணேலயே!' என்று விழிகளை சுழலவிட்டவள்,

அங்கு ஓர் இடத்தில் நின்று, தனக்கு வேண்டியதை கையோடே வாங்கி வருவதை கண்டவள்,


"வந்தெல்லாம் ஓடர் எடுக்க மாட்டினமா? நாங்க தான் எடுக்கோணுமோ?
அட ச்சீசீ.... கன்டீன் பெருசா இருந்து என்ன பிரியோசனம்? ஓடர் கொண்டுவந்து தர ஒருதர் இல்ல.' என்று எழுந்து சென்று, இரண்டு தோசை சொல்லி எடுத்தவள்,

ஏற்கனவே இருந்த இடத்திற்கு திரும்பும் வேளையில் தான் பார்த்தாள்.

அங்கு இரண்டு தடியர்கள் காதில் கடுக்கனுடன் முடியினை வளர்த்து அதை சிலுப்பி விட்டிருந்தவர்களை பார்க்க பயங்கரமாக இருக்க.

'இப்ப இவங்களிட்ட போய் என்னோட இடம் எண்டு சொல்லேலாது. அடிச்சு என்னை சாப்பிடுவாங்கள். வேற இடம் பாப்பம். என்று இருக்கையை தேடியவளுக்கு இருக்கை என்று இருந்தது,
அந்த தடியர்கள் மேசையிலும், ரதன் மேசையிலும் தான்.

வேறு பேச்சுக்கே இடமில்லாது ரதன் முன் சென்று நின்றவள்,

" நான் இப்பிடி இருக்கவா?" என்றான்.
அவள் குரல் கேட்டதும் நிமிர்ந்து அவளை ஏறிட்டவனோ,


"ஏன்...? அங்க வசதியா தானே இருந்த... பிறகென்னா.?" என்றான் புருவம் சுருக்கி .

எதை சொல்வாள்..? மௌனமாகவே நின்றாள்.



"உன்னை தான் கேட்குறன்.' அந்த இடத்துக்கு என்ன ?"

"அது அது..." என்று கூற முடியாது அவள் விழிக்க.
அதன் காரணம் அறியாதவனோ, அந்த இடத்தை திரும்பிப் பார்த்தான்.

ஏனோ அவர்களை கண்ட மறு நொடியே அவனால் சிரிப்பினை அடக்க தெரியவில்லை.

வாயில் திணித்திருந்த உணவு பீறிடும் அளவுக்கு பெரிதாக நகைத்தவன்,


சிரிப்பின் ஊடே, "இவங்கள பாத்துத்தான் தெறிச்சு வந்தாயா?" என்று மீண்டும் சிரித்தான்.
துஷாக்கு ஏனோ தான் காண்பது கனவோ? என்றிருந்தது.
சிரிக்கும் போது தான் அவன் எத்தனை அழகு.


'இப்படி அழகாக இவனுக்கு சிரிக்க தெரியுமா?
முத்துப்போல் வரிசையான பற்கள், ஓர் அளவுக்கு மேல் விரியாமல் அடம்பிடிக்கும் தடித்த உதடுகள், கன்னத்தில் விழும் சிறு குழிகூட அவனுக்கு இன்னும் அழகு சேர்த்தது.

அவனை வைத்த கண் வாங்காமல் ரசித்திருந்தவள் ரசனையை அவனே கலைத்தான்.

"என்ன என்னை அப்பிடி பாக்கிற?
சிரிக்கேக்க அந்தளவுக்கா வடிவா இருக்காறன்?" கண்ணடித்து கேட்டான் செயலில்,

அப்பட்டமாகவா அவனுக்கே தெரியும் அளவுக்கு நடந்து கொண்டதை நினைக்கையில் அவளுக்கே ஒரு மாதிரியாகிப் போனது.
பதில் பேச முடியாது மௌனமாகி தலையினை கவிழ்ந்து கொண்டாள்.


"ஹேய். கூல்..! நான் சும்மா விளையாடினன். இருந்து சாப்பிடு" என்றவன் அவள் அமர்ந்தது.

"எதுக்கு நீ என்னை கண்டு பயப்பிடுற..?
மற்றவ போல தானே நானும்" என்றான் உள்ளே இருந்த ஏக்கத்தை வெளிப்படுத்தும் விதமாய்.


பதில் பேசவில்லை அவள். அவனை நிமிர்ந்து பார்த்தவள் பார்வையே அவனிடம், அதற்கான பதிலை கூறியது.


"ஓகே.. ஓகே! அப்ப உன்னை பற்றி தெரியாது. அதால அப்பிடி நடந்துட்டன்.. இனி அப்பிடி நடக்காது
எல்லாரோடயும் எப்பிடி பழகுவியோ அப்பிடியே என்னோடயும் இரு" என்றான்.

அவன் பேச்சை ஏற்று கொள்வதாய் தலை அசைத்தவள், சாப்பாட்டில் கை வைத்ததும் தான் தாமதம்.

"ஸ்ஸ்.." என்றாள் கையை உதறியவாறு.


எதிர் பாராது வந்த சத்தத்தில்,
"என்ன.....?" என்றான்.


"ஒன்டுமில்ல சார்!" என்று சாப்பாட்டில் கவனத்தை செலுத்தி, முழுவதையும் சாப்பிட்டு முடிக்கும் வரை எந்த பேச்சும் பேசவில்லை அவள்.

முகம் மட்டும் நொடிக்கு நொடி சுருங்குவதை கண்டவனுக்கு, ஏதோ ஒன்றை அவள் தன்னிடமிருந்து மறைப்பதாகவே தோன்றியது.

"சாப்டு முடிஞ்சுது. நான் போறன்." நன்றி கூறி தனக்கான பகுதிக்கு சென்றாள்.

சாப்பிட்டு முடிந்ததும் அறை செல்ல திரும்பியவனுக்கோ, இன்று நடந்த அனைத்தும் அவனுள் சந்தோஷங்களை விதைத்திருந்தது.

அந்த நினைவுகளுடன் தனது அறை கதவை திறந்து உள்ளே வந்தவனை வரவேற்றான் அவன் நண்பன் ரவி.

"என்ன? சார் முகத்தில தவுசன் வால்ட் பல்பு எரியுற மாதிரி இருக்கு,! உதடு சிரிப்பில கொப்பளிக்குது" என்று ரதன் முகத்தில் தெரிந்த பூரிப்பில் ரவி சந்தேகமாக வினவ.

"அது வேற..! நீ சொல்லு...! எப்ப வந்தா?" என்றான் பேச்சை மாற்றும் பொருட்டு.

"நான் வந்து அரை மணித்தியாள ஆச்சு.
உன்னை தான் இங்க யாரிட்ட கேட்டாலும் விடை கிடைக்காது
இந்த நேரம் வீட்ட தானே சாப்பாட்டுக்கு போவ, அதான் வரட்டும் எண்டு காத்திருந்தன்."

"இல்லடா! இன்டைக்கு கடை சாப்பாடு தான்." என்றவனை நம்பாத பார்வை பார்த்தவன்.

"என்னது கடையா? எல்லாம் புதுசா இருக்கே!" என்றவன் பேச்சில் கேலி இருந்தாலும், பார்வை வினோதமாகியது.


"அது சரி.. சட்டை புதுசோ...?
எங்கட ஊர்ல புது சட்டை எண்டா காளர்ல மஞ்சள் தான் தடவுவம். நீ என்ன புதுசா குங்குமம் தடவி இருக்கிற...

சட்டை கசங்கி வேறு இருக்கு." என அவனது சட்டையினையே பார்த்துகேட்க.

"என்னடா உறர்ற.?" என்று காளறை இழுத்து பாத்தவன், அதில் சிவப்பாக இருந்த கறையினை கண்டு,

இது குங்குமம் இல்லடா! ரத்தம் கறை மாதிரி இருக்கு!" என கூறியவன், ஏணியில் இருந்து விழும்போது துஷா தான் தன் சட்டையை இறுக பற்றியதும் நினைவில் வந்தது.

"அவளோட கையில தான் அடிபட்டிருக்கோணும்..
அது தான் சாப்பிடேக்க அலறினாளா?"
என்று வாய் விட்டே புலம்பியவன், கேள்விக்கு பதிலுரைப்பான் என காத்திருந்தவனுக்கு பதிலளிக்காமல், விறு விறு என்று கதவை திறந்து கொண்டு வெளியேறினான்.

'என்ன நடக்குது இங்க? ஏதோ போல பண்றானே' என்று நினைத்தவன் அவன் பின்னாலே ஓடினான்.

மதிய நேரம் என்றதனால் வாடிக்கையாளர் குறைவாக இருந்தனர்.

அங்கு வேலை செய்பவர்களை அழைத்து, கீழ் இருக்கும் பொருட்களை ஒதுக்கி, மேல் இருக்கும் பொருட்களை அவ்விடத்தில் வைக்குமாறு வேலை வாங்கி கொண்டிருந்தாள் துஷா.

விறுவிறு வென வந்தவன், அங்கு நிற்பவர்களை கருத்திலே கொள்ளாது, அவள் கையில் வைத்திருந்த பைலை பறித்து எறிந்து விட்டு, கையை விரித்து பார்த்தான்.


அத்தனை பேர் மத்தியில், அவனது செய்கை ஏதோ போல் இருக்க, அவனிடமிருந்த கையை பறித்தாள்.
எங்கு அது வந்தால் தானே!

ஏனோ அந்த நொடி, அவள் கையானது அந்த முரடன் கையில், அது அகப்பட்டு இருப்பதை மறந்தே போனாள்.

"என்ன செய்யிறீங்கள்...? கையை விடுங்கோ" என்றாள் மற்றவர்கள் கவனம் தன்மேல் இருக்கின்றதா என சுற்றிலும் பார்வையை பதித்தவாறு அவனுக்கு மட்டும் கேட்க்கும் குரலில்.

கைகை விடுவதற்கு அவனுக்கும் அவள் பேச்சு காதில் விழ வேண்டுமே! அவன் கவனம் முழுவதும் காயத்தை அறிந்திட வேண்டும் என்பதிலேயே இருந்தது.

இப்போதுமே அவளது கையிலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருக்க.

"எப்பிடி இந்த காயம் வந்தது?" என்றான் அவள் விழிகளையே அழுத்தமாக பார்த்தவாறு.

வார்த்தைகளை தான் மிருதுவாக பாவித்தான். மாறாக அவனது விழிகளில் அனல் கக்கியது.

அதில் பயமுற்றவள், அவனிடம் இருந்து கையை உருவிக் கொண்டால் தப்பித்து விடுவோம் என்று நினைத்தாள் போல, பதில் கூறாது கையை உருவுவதிலேயே குறியாக இருந்தாள் .

"உன்னைத்தான் கேட்கிறன் துஷி.. என்ன பண்ணீட்டு இருக்கிற..? சொல்லு... எப்பிடி இந்த காயம் வந்தது.." என்றான் இம்முறை குரலிலும் கோபத்தை வெளிப்படுத்தி.

அவள் கண்கள் கலங்கியே போயிற்று. அவன் மிரட்டியதில் இல்லை. அன் குணம் தான் அவளுக்கு தெரியுமே! அதனால் அவள் ஏன் கலங்கப் போகிறாள்.

அவனது துஷி என்ற அழைப்பு தான் அவளது கலக்கத்திற்கு காரணம்.

ஆம் ஆவளை பெற்றவர்களும் அடளை துஷி என்று தான் அழைப்பார்கள்.

நீண்ட நாட்கள் கடந்து அந்த பெயர் சொல்லி அழைத்ததும் அவர்கள் நினைவில் அவளையும் அறியாது கண்கள் கலங்கிப்போனாள்.


தான் உறுக்கியதால் தான் அழுகிறாள். என நினைத்தவன்.


"சாரி துஷி.... சொல்லு என்னாச்சு கையில?" இம்முறை நிதானமாகவே கேட்டான்.


"அது அப்ப ஏணி மேல ஏறி.... அந்த பசங்க தட்டி விட்டப்ப, பயத்தில கையில அம்பிட்டது எல்லாம் பிடிச்சன். அப்ப கண்ணாடி கழிச்சுட்டுது." என்றவளை முறைத்தவன்,

"எத பிடிக்கோணும் எண்டது தெரியாது?
சரி பதட்டத்தில புடிச்சிட்ட, அத அப்பாவே சொல்லி இருக்கலாம் தானே!
உடனயே மருந்து போட்டிருக்கலாம்.


இதுக்கு தான் சாப்பிடேக்க கத்தினியா?.."
என்று அவள் கையை விடாது பிடித்திருந்தவன், அங்கு நின்றவர்களில் ஒருவரை அழைத்து முதலுதவி பெட்டியை எடுத்து வர ஏவினான்.

"இது சின்ன காயம் தான் சார். நாளைக்கே ஆறிடும். விடுங்காே." என்றவளை அவன் முறைக்கவே கப் சிப் ஆனாள்.


மருந்தும் வந்துவிட, மருந்தை தடவி விட்டவன்,

"இனியாவது பார்த்து நட.." என்றதும், தலையாட்டினாள்.

அதன் பின் கூட்டம் கலைய, இருவருமே தம் வேலைகளை கவனிக்க சென்றனர்.

இங்கு நடப்பதை பார்த்த ரவிக்கு தான் எந்த படத்து சீன்டா இது? என்றிருந்தது.


நடப்பவை எதுவும் புரியாமல், ரதன் பின்னால் ஓடினான் எதையோ அறியும் ஆவலில்.
 
Top