• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

08. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை!

பர்ஹா நிஜாம்.

அத்தியாயம் - 8

தோள் கொடுக்க ஒரு அன்புள்ளம் கிடைத்தால், வானமே இடிந்து விழுந்தாலும், அச்சமில்லை என்பதைப் புரிந்து கொண்டாள் இவள்......

மொட்டை மாடியின் ஓர் மூலையில்
கூண்டிலிருந்த அந்தக் கிளியை, சுதந்திரமாக சிறகடித்துப் பறக்க விட்டு பார்த்துக் கொண்டிருந்தாள் அமுதா.

இன்று நடந்த அனைத்தும் ஏதோ ஒரு கனவாகவே தோன்றியது அவளுக்கு.


காலையில் சித்தி ஷோபனாவிடம் கதை அளந்து விட்டுச்சென்றது முதல், இதோ... இப்போது இந்த இரவில் தனிமையில் நிற்கும் வரை, அனைத்துமே அவள் கண்களுக்கு நிஜமாக தோன்றிடவில்லை.

வர்ஷன் அமுதாவிடம் கொடுத்த கத்தரிக்கோலை, ஏதோ ஒரு உந்துதலில் பார்வதியிடமே ஒப்படைத்து, தன் வெள்ளை மனதையும் அவர்களிடம் காண்பித்து விட்டாள்.

திறப்பு விழா முடிவடைந்து, சில மணித்தியாலங்களிலே
சிவராமனும், பார்வதியும் வீடு செல்ல, அகரனும் ஒபீசுக்குச் சென்றுவிட்டான்.

அங்கு எஞ்சியிருந்தது வர்ஷனும் அவனது தங்கை கவிநிலா மற்றும் அவனது அம்முவும் தான்.

இன்று முழுவதும் வர்ஷன் ஒபீஸ் செல்லவில்லை.. ஏனோ அம்முவுடன் இருக்கும் போது, அவனுக்கும் மனம் நிம்மதியாக இருந்தது.

வானத்தில் மின்னிக்கொண்டருந்த நட்சத்திரங்களின் நடுவே, நடுநாயகமாக இருந்த முழு நிலவைப் பார்த்ததும், ஏனோ வர்ஷனின் புன்னகை முகமே அமுதாவிற்கு நினைவுவந்தது.

"அமுதா...ஆ.. அமுதா...ஆ.. "

"ஆஹ் சித்தி!" திடீரென அருகில் கேட்ட ஷோபனாவின் சத்தத்திலே, பயத்துடன் தளர்வாக வெளிவந்தது அவளது குரல்.

ஏதோ சிந்தனை வயப்பட்டிருந்ததால், ஷோபனாவின் அழைப்பு இவளது செவிகளுக்கு எட்டவில்லை.

"இன்னும் எவளோ நேரம் தாண்டி போன்பேசிட்டு இருக்கப் போர?" இரைந்தவர் பேச்சில்,

"அப்போ எப்போமே நான் போன் பேசினா, நீங்க காவல் காப்பீங்களா சித்தி?" என்றாள் நக்கலாக.

"வாயை தொரந்தா.. என் வாய மூடுறதுக்கு வழி தேடு..." என்றவரும் உண்மையில் அவள் போன் பேசியதை காணவில்லை.

போன் பேசாவிட்டாலும், அவளது கரங்களில் இருந்த போனைக் கண்டதும், ஷோபனா நினைத்தது , அவள் கதைத்து இருப்பாள் என்று தான்.

எள்ளலாக பதிலழித்து விட்டு, மாடிப்படிகளிலே வேகமாக இறங்கிச் சென்றுவிட்டாள் அமுதா.. இல்லாவிட்டால் திட்டுக்களுக்கு பழி ஆடாவது அவள் தானே.

''அடே...! இப்போ என்ன அண்ணனா பாருடா! அப்போ ஒனக்கு இந்த மரியாத எல்லாம் வராது.." அகரனும் , வர்ஷனும் அண்ணண் தம்பி போராட்டத்தில், சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.


அது ஒன்றும் சண்டை இல்ல.. சும்மா ஒரு ரைட்டு போலாம் என்று வர்ஷன் இந்த பக்கமா வந்தானா...

அப்போது தான் இரவில் மொட்டை மாடியில், தனிமையில் நின்ற அமுதாவை பார்த்தும்.. நம்ம ஹீரோ கொஞ்சமாக தடுமாறிட்டான்...

அப்பிடியே கார் கண்ணாடியில் கை இரண்டயும், நாடியை குத்த வைத்து, அம்முவ பார்த்துட்டு இருந்தானா... அப்போது அவளருகில் வந்த அவளது சித்தியை கண்டதும், ஏதாவது நேர்ந்து விடுமோ என்று பயந்திருந்தவன்,

அப்படி ஒன்றும் ஆகவில்லை என்றதுமே தெளிந்தான்.

அவளும் தான் வர்ஷன் நியாபகத்தில் சிரித்துக்கொண்டு இருந்தாளே..! அப்போது பார்த்துத் தான் அகரனும் அங்கு வந்தான்.

'அடடா நம்ம பாஸ் வெளிய வெய்ட் பன்றாரு.. ஒரு வேளை பாட்டுக்கேட்டுண்டு இருந்ததுல கார் ஹோன் சத்தம் கேக்கலயோ! என்னை கானேல என்டதும் டென்ஷன் ஆகிருப்பாரோ' என்று நினைத்து,

அவனை உள்ள கூப்புட்டதனால் தான்... இந்த பாச போராட்டம் நடக்குது.

தன் அறைக்கு வந்து, கட்டிலை சரிசெய்து விட்டு, தூக்கி விட எண்ணிணாலும், நித்ராதேவியின் அழைப்பு கிட்டாமலே போய்விட்டது அவளுக்கு.

நிமிடங்கள் கடந்து ஒருவாறு, நித்ராதேவியின் அழைப்பிலே தூங்கிவிட்டாள் அமுதா.


நேரங்களும் கடந்திட, அதிகாலைத் தென்றலோடு, இரவு பெய்த மழையின் குளுமையும், சூழலைக் குளிராக்கிக் கொண்டிருந்தது.

வழமையை விட சுறுசுறுப்பாக எழுந்தாள் அம்மு. காலைக் கடன்களை முடித்து விட்டு, வழமை போன்று இன்றும் கோலம் போடச் சென்றாள் அவள் .

தூக்கத்திலிருந்து விழித்தெழுந்ததும், அவனுக்கு அம்முவின் நினைவே அதிகமாக வந்தது.

எழுந்த கையோடு, வேகமாக படியிறங்கிச் சென்று, பின் பக்க கொரிடோ முடிவில் இருந்த செட்டிலிருந்த காரில் ஏறி, காரை வேகமாக ஓட்டியவன், சென்று நிறுத்திய என்னமோ, அமுதவின் வீட்டின் முன்பு தான்.

அவள் அப்போது தான் தாவணியை இழுத்து இடுப்பில் கட்டிவிட்டு, கோலம் போட ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள்.

அதைக்கண்ட வர்ஷனுக்கோ, தன்னை நினைத்து கேவலமாக இருந்தது. இறுதி நிமிடம் என்ன எண்ணினானோ, காரைத் திருப்பிக் கொண்டு, மெதுவாக வீட்டுக்குச் சென்றான்.

வீட்டுக்குச் சென்று உள் நுழைந்ததும் பேப்பர் பார்த்துக் கொண்டிருந்த சிவராமன், வெளியே இருந்து வரும் அவனை அத்தனை காலையில் கண்டதும்,

'பார்வதி!" என்று நெஞ்சை நீவிய படி அழைக்க, அதைக் கண்டு பதறியவாறே,

"அப்பா!" என்ற பெருங்குரலோடு அவரை நோக்கி ஓடினான்.

இதற்கிடையில் கவிநிலாவும் ஓடி வர, பார்வதி மட்டும் மெதுவாக, கோபீ ட்ரேயுடன் வந்ததைக் கண்டதும் சிரித்து விட்டார் அவர்.

அவரது சிரிப்பிலே அன்னையை திரும்பிப் பார்த்த கவிநிலாவிற்கு ஏதோ புரிய, வர்ஷன் மட்டும் ஏதோ நினைவில், இன்னும் சிவராமனின் நெஞ்சை தடாவிக் கொண்டிருந்தான்.

மூவரின் சிரிப்பு சத்தத்தில், பார்வதியையும் கவிநிலாவையும் ஒரு மாதிரியாக பார்த்தவனுக்கு எதுவும் புரியவில்லை... பின்னே தந்தை நெஞ்சு வலியில் துடிக்கிறார். இந்த சமயத்தில் யாராவது சிரிப்பார்களா...?

சந்தேகமாகத் தோன்ற, திரும்பி சிவராமனைப் பார்த்தான்.

அப்போது தான் அவனுக்கு புரிந்தது. மூவரும் தன்னைக் கலாய்த்திருப்பதை.

"ஏன்ப்பா....? எவளோ டென்சன்ஆகிடேன் தெரியுமா?" என்றான் கோபம் போல்.

"அடே மது... ஒன்ன பாத்ததும் எனக் ஹார்ட் அட்டாக் வந்துட்டு டா...
எப்பவாச்சும் நீ இப்பிடி ஏர்லியா எழுந்திருப்பீயா? அது தான் எனக்கு நெஞ்சுவலிச்சது'' என்றார் இன்னும் அவனை வாரி விடுவது போல் ..

"போங்கப்பா..." என அவன் சங்கடமாய் நெளிய,

"ஆமா... எங்கண்ணா இவ்வளவு வேளைக்கு போய்ட்டு வந்த? " கவிநிலாவின் கேள்வியில் மழங்க மழங்க விழித்து வைத்தவன், பதிலே கூறாது பூனை நடை போட்டு, மாடி ஏறிப் போய்விட்டான்.



அமுதயாழினியின் நடன வகுப்பில் கவி நிலாவும் சற்று ஆர்வமாக பங்குகொண்டாள்.


"ம்மா.... இரண்டு பேர்க்கும் ஒரே பாக்ஸ்ல டிபன்போடுமா. தனித்தனியா கொண்டு போரதும் கஷ்டம்" இப்போது கவிநிலாவிற்கும் அம்முவுக்கும் இடையே, நல்லதொரு நட்பு உருவாகியிருந்தது.

ஒரே உணவை இருவரும் பரிமாறிக் கொள்ளும் அளவிற்கு.

ஆரம்பத்தில் தயக்கமாக இருந்த இருவரும், இப்போது நகமும் சதையுமாக மாறிவிட்டனர்.


"பாஸ் பாஸ்...." அகரனின் சத்தத்தில் முன் வந்து நின்றது கவிதான்.


'காலைலே உங்க மூஞ்சிலயா விழுந்துட்டேன் அண்ணா? இன்டைக்கி நாளே அவ்ளோ தான் .... கருப்பு பூனை முன்னாடி போனா அந்த நாளே நமக்கு நல்லா இருக்காதாம்" சோகமாக உதட்டை பிதுக்கி சொன்னது கவியே தான்,

அனைவரையும் ஒரு கடி ஜோக்கோடு சிரிக்க வைப்பதில், அலாதிப் பிரியம் அவளுக்கு.

ஒபீசியலான உடை அணிந்து, இரண்டு இரண்டாக மாடிப்படிகளாக, இறங்கி வந்து கொண்டிருந்தவனை சிரிஷ்டி கழித்து வைத்தாள் பாரதி.

ஆண் சிங்கமாக மாறிவரும் வர்ஷனின் இதயத்தில், இதயராணி அம்முவின் நினைவுகளும் அதிகளவில் இருப்பதை யாரும் அறியவில்லை.

இதோ இப்போது கூட வர்ஷன் அகரனை ஒபீசில் விட்டவுடன், நிலாவையும் அழைத்துக் கொண்டு அம்முவை அழைத்து வரச் செல்வான்.

இப்போது கவிக்கும், அம்முவுக்கும் டிரைவராக மாறிவிட்டான் போலும் வர்ஷன்.

கார் ஹோன் சத்தத்துக்கும் காது கொடுத்திட முடியாத அளவில், கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தாள் அமுதா.
சினுங்கிய தொலைபேசியின் சத்தத்திலே, திரையைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனாள் பாவை.

அழைப்பு வர்ஷனின் எண்ணிலிருந்து அல்லவா...! பயத்துடனே எச்சிலை விழுங்கிக் கொண்டு, அழைப்பை ஏற்று காதுக்குக் கொடுத்தவள்,

"இதோ அஞ்சு மினிட்ல வந்திருவேன்க ,வர்ஷன்! கார் ஹோரன்கு கூட வெளிப்பட்டுவராத பாவையை, தேடுவதற்காக வர்ஷன் கவியிடம் அம்முவிற்கு கோல் எடுக்குமாறு கூறும் அதே நேரம், கவிக்கு ஒரு கோல் வர, வர்ஷானே அம்முவிற்கு அழைத்தன்.
இதோ அவளது குரல் வேறுபாடே அவளது நிலமையை படம்பிடித்துக் காட்டியது வர்ஷனுக்கு.
வேகமாக குளிர்ந்த நீரில் முகத்தை கழுகிக்கொண்டவள், சாதாரணமாக தயாராகிக் கொண்டு, கண்ணாடியைப் பார்த்ததும் தான் அழுததைக் கண்டுபிபிடித்து விடுவானோ எனும் பயத்தில்,
மெது மெதுவாக படிகளில் இறங்கி வந்த அமுதாவைக் கண்டதும், ஒரு வித நக்கலுடன் சிரித்து வைத்த ஆராதனா,

யாருக்கோ தொலைபேசி அழைப்பை தொடுத்து, தன் அறைக்கு நடைகட்ட,

வெளியே பார்வையைப் பதித்தவாறு ஒரு வித பதட்டத்துடன் வந்தாள் அமுதயாழினி.

தொலைபேசியில் கதைத்தவாறு சற்று தூரம் சென்று கொண்டிருந்தாள் கவிநிலா.

வர்ஷனின் காரிலே கண்ணைப் பதித்தவாறு வந்த பாவை, எதிரே வேகமாக வந்து கொண்டிருந்த மணல்லொறியை கவனிக்கத் தவறிவிட்டாள்.

அமுதாவைத் தாண்டி நான்கு எட்டிலே கவிநிலா நிற்க, காருக்குள் இருந்தவாறு வேறு எங்கும் சிந்தனையை சிதறவிடாது, அவள் முகத்தையே ஆராய்ந்தவாறு இருந்தான் மதுவர்ஷன்.



______________________________

அவளை கண்டதும் அவனது பார்வை மாற்றத்திலேயே ஏதோ ஒன்று என்று அகரனுக்குப் புரிந்துபோனது.

தலையை இடவலமாக ஆட்டித் தன்னை சமப்படுத்திக் கொண்டாலும், இரவு யாழினியைப் பார்த்து நின்ற வர்ஷனின் பார்வையில் இருந்த மாற்றத்தை, இப்போது எண்ணிப்பார்த்தவனுக்கு கீற்றாய் புன்னகை ஒன்று அவனது உதடுகளில் ஒட்டிக்கொண்டது.

அத்தோடு இன்று காலையிலே, அவளது வீட்டு முன் வர்ஷனின் காரைக் கண்டதும், அவனது மனக் கண்ணில் மின் வெட்டி மறைந்தது ஒரு நினைவு.

ஆம் காலையில் எப்போதும் போல் எல்லோரும் எழுந்து கொள்வதற்கு முன், அன்னை ரூபத்தில் இருக்கும் தன் தோழியை பார்க்காது அவன் பொழுது எப்போது விடிந்தது? இன்றும் அவளை காண வந்த பொழுது தான், வர்ஷனின் காரானது அவள் வீட்டு வாசலில் நின்றதை கூட கவனிக்காது, இடுப்பில் சொருகிய பாவாடையுடம் கோலம் போட்டவளை கண்ட மறு நொடியே காரை கிளப்பிக்காெண்டு பாேனவனை கண்டான்.

எதற்கு வந்தான்? ஏன் உடனேயே கிளம்பி விட்டான் என்ற காரணம் அப்போது தெரியவில்லை என்றாலும்... அவன் போன பின்பு அம்முவின் தோற்றம் கண்டவனுக்கு, அவனது கன்னியத்தை நினைக்கும் போது பெருமையாக இருந்தது.

எல்லாவற்றையும் ஒப்பிட்டுப் பார்த்தவன் உதடுகள், அதன் காரணம் புரிந்ததும் இன்னும் அதிகமாகவே விரிந்தது.

எழுதிச் செல்லும் விதி
திசை மாறிப் பயணிக்கும் பயணிகள் நாம்...
அதில் கற்களும் காயப்படுத்தலாம்...
முற்களும் துவண்டு போக செய்யலாம்....

விதிக்கு அஞ்சி பயணத்தை பாதியில் விட்டுவிட முடியுமா?
இடையே ஆயிரம் தடைகள் வந்தாலும், போராடியே அடைந்திட வேண்டும் பயண எல்லையை.
 
Top