• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

09. உன்னாலே உயிரானேன்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
புத்தம் புது மலர்போல் மிதமான அலங்காரத்துடன் நேர்த்தியாக உடுத்திருந்த புடவையினை சரி செய்தவாறு மாடியிலிருந்து இறங்கி வந்தவளையே இமையசையாது பார்த்திருந்த வினோத்தை இடித்து நிகழ்வுக்கு அழைத்து வந்த சித்ரா,



"நீங்களே பொண்ணுமேல கண்ணு வைச்சிடுவீங்க போலயே...!" என்றவாறு டீப்பா மேலிருந்த பூச்சரத்தினை எடுத்து மகள் தலை நிறைய சூட்டி அழகு பார்த்தவருக்கு தன் கண்ணே பட்டுவிடும் போல் தோன்ற, விரல்களில் சொடக்கிட்டு திருஷ்டி கழித்தவர்,



"பார்த்து பக்குவமா போயிட்டு வாடா...! ஏதாவது ஒன்னுன்னா எங்க ரெண்டு பேரில யாரையாவது கூப்பிடு...!" என்றவள் குரல் பிசுறு தட்டுவதை உணர்ந்து சட்டென அவர் பேச்சில் இடைபுகுந்த வினோத்.



"ஆரம்பிச்சிட்டியா உன் புராணத்தை? அவ என்ன சின்ன குழந்தையா ஒவ்வொன்னா சொல்லி குடுக்க?, என்ன செய்யணும்ன்னு என் பொண்ணுக்கு நல்லாவே தெரியும். நீ போயிட்டு வாம்மா..!" என மனைவியை கண்டித்தவாறு மகளை வழியணுப்பி வைத்து விட்டு மனைவியிடம் திரும்பியவர்,



"என்னம்மா நைட்டு பேசினத மறந்து, நீயே எல்லாத்தையும் அவகிட்ட காட்டி குடுத்திடுவ போலயே..! நாங்க தான் அந்த சாமியார் சொன்னதை நினைச்சு பயந்து போய் இருக்கோம்ன்னா அவளையும் பயமுறுத்தணுமா?



இங்க பாரும்மா! அவ தைரியமா இருக்கணும். அவ தைரியமா இருக்கிற வரைக்கும் தான் அவளால எல்லாத்தையும் எதிர்கொள்ள முடியும்." என அவளுக்கு புரியும் வகையில் எடுத்து சொன்னவருக்கும் பயமில்லாமல் இல்லை.



தானே நம்பிக்கையை இழந்துவிட்டால், தன்னை நம்பி இருக்கும் இரு உயிர்களுக்கும் யார் தைரியம் கூறுவார்? என்று தான் தன் மனதினை மறைத்து மனைவிக்கே தைரியமளித்தார்.



ஸ்ரூடியோ அலுவலகம் நுழைந்தவள் அங்கு தொங்கவிடப்பட்ட அலங்காரங்களை பார்த்தவாறு வந்ததில், எதிரில் வந்து கொண்டிருந்த தமிழை கவனியாது அவனுடன் மோதுண்டு விழப்போனவளை தாங்கிப்பிடித்தவன் கைகளில் மாலையாகி கிடந்தவளை நிமிர்த்தி விட்டவன் கைவளைவிலேயே மெய் மறந்து போய் நின்றவள் விழிகளோ அவன் விழிகளுக்குள்ளே புதைந்து போனது.



இருவர் விழிகளும் கட்டுண்டிருக்க, இடம் பொருளில்லாது இன்னமும் அவனது கைவளைவிலே தன்னை மறந்து நெருக்கமாக நின்றிருந்தாள் மதுஸ்ரீ.



திடீரென மிக அருகில் கேட்ட நொருங்கும் சத்தத்தில் முதலில் நிகழ்வுக்கு வந்ததும் மதுஸ்ரீ தான்.



தம் நிலையுணர்ந்து தீ சுட்டவளாட்டம் சட்டென விலகி நின்றவளுக்கு கண்கள் ஏனோ அவளையும் அறியாது கலங்க தொடங்கியது.



செய்யக்கூடாத தவறை செய்தவள் போல கலங்கிய வழிகளை துடைத்துக்கொண்டு அங்கிருந்த அறையொன்றில் போய் ஒழிந்து கொண்டாள்.



அவளது தடுமாற்றமும், கண்ணீரையும் கண்ட தமிழுக்கு எதுவும் புரியவில்லை என்றாலும் அவள் கண்ணீரை கண்டது சோர்ந்தவனாய் திரும்பியவன் தோள்களில் இடுத்த மாயன்.




"என்ன ஒரு கண்கொள்ளா காட்சி....! சும்மா சொல்லக்கூடாது மாப்பிள்ளை....! மதுஸ்ரீயை மடக்கிட்ட போல." என்றான்.



"போடா நீ வேற... இந்த பொண்ணுங்கள சுத்தமா புரிஞ்சுக்க முடியலடா! அவளை தாங்கி பிடிச்சப்போ அவ பார்த்த பார்வையில நானும் அவளுக்கு என்மேல லவ் இருக்குன்னு தான் நினைச்சேன். பட் கடைசியா அவ என்னை விட்டு விலகினா பாரு, அந்த பார்வையில காதலில்லை. குற்றவுணர்வு தான் இருந்திச்சு..... அது போதாதுன்னு காரணமே இல்லாம அழுதிட்டு போறாடா.!" என்றான் சோர்வான குரலில்.



"என்னடா சொல்ற? அப்போ ரொம்ப நேரமா ஒருதரை ஒருதர் பாத்திட்டு ஒரே பொசிஷன்ல நின்னிங்க.....!" என்றான் மாயன் கேள்வியாய்.



"இல்லடா அவளுக்குள்ள ஏதோ ஒன்னு என் காதலை ஏத்துக்க விடாம தடுக்குது. எத்தனையோ தடவை என்னை நெருங்கி வராமாதிரி இருக்கும், அடுத்த நிமிஷமே என்னோட ஊகம் தப்பு என்கிறமாதிரி விலகிப்போயிடுறா!



நான் அதை நிறைய வாட்டி உணர்ந்திருக்கேன்டா!" என தளர்ந்தவனாய் சொன்னவள் தோள்களை தட்டி தேற்றியவன்.



"விடு மாப்பிள்ளை
! எனக்கென்னமோ அவ வேற யாரையாச்சும் காதலிக்கிறாளோன்னு தோணுதுடா. அதனால கூட இந்த மாதிரி விலகி போகலாம்ல..."



"இல்லடா..! அவ அந்த மாதிரி பொண்ணுன்னு தோணல, அதோட என் காதல் பொய்யானதில்ல... அதனால என் காதலும் பொய்த்து போகாது. பொய்க்கவும் நான் விடமாட்டன். அவ எனக்கு வேணும்." என உறுதியாக கூறியவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான்.



சில நிமிடங்களாக நடப்பவற்றை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த இரு விழிகள் ரத்தமென சிவந்து போக, தரையில் விழுந்து நொருங்கி போன டீ கப்பினை போகும் அவனையே வெறித்தவாறு பொறுக்கி எடுத்ததில் கையினை அது கிழித்துவிட்டதும் தான் அவன்மேலிருந்த விழிகளை எடுத்து கையினை ஆராய்ந்தான்.



விரல் கிழித்து ரத்தம் கசிவதை கண்டு அதை வாயில் வைத்து சப்பியவன்
உதடுகளோ
"அவளை அவ்வளவு ஈஸியா உனக்கு விட்டு தந்திடுவேனா? உனக்கு மட்டுமில்லை அவளை அவனுக்குமே விட்டுத்தர மாட்டேன்.



இந்த பிறப்பு எனக்கானது.. எனக்கு மட்டுமே சொந்தமானது.



மதுஸ்ரீயை அடைஞ்சு, பரமேஸ்வரனுக்கு சொந்தமான அந்த பொருளையும் என் கைப்பற்றி, வானவன் தீவை மீண்டும் உருவாக்கி, அந்த தீவுக்கு மன்னனா நான் மகுடம் சூடல..... நான் மலைமாறன் இல்லடா..!" என சூழுரைத்தவன் பின்னே கேட்ட குரலில் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாது சட்டென அமைதியாகி தன்னை மறைத்துக்கொண்டான்.



அந்த குரல் வேறு யாருடையதுமல்ல, ஹம்சியே தான்.



உயிர் நண்பனான தமிழ், மதுஸ்ரீயை புரிந்து கொள்ள முடியவில்லை என சோகமாக சொல்லிவிட்டு போய் மறைந்தவன் திசையையே பார்த்திருந்தவனை கண்டவள்.




"மாயன்...! நீ இங்க தான் இருக்கியா....? ஆமா எங்க யாரையுமே காணல?" என்றவளது விழிகளாே ஆர்வமாக யாரையோ தேடியது.



அவளது விழிகளின் தேடலை அறிந்தவன் உதடுகளே மர்மமாய் புன்னகைக்க,



"ஏன் மேடத்துக்கு என்னை எல்லாம் பார்த்த மனுஷங்களா தெரியலையோ?" என்றான் நக்கலாக,



"தெரியுது தான், ஆனா இந்த மனுஷங்க என்கிறது தான் கொஞ்சம் சந்தேகமா இருக்கு." என அவளும் அவனது பேச்சில் நக்கலாய் பேச,



"பார்ரா..... மனுஷங்களா தெரியலையாமா....? சரி சொல்லு எப்பிடி என்னை பார்த்தா தெரியுறேன்?" என்றான் தன் கிண்டல் தொணியை விடாது.



"ம்ம்.... மனுஷங்க மாதிரி தெரியல... உன்னை பார்த்தா பக்கா அரக்கன் மாதிரி இருக்க, பெயரை கூட பாரு மாயன்......" என்றவள் பேச்சில் விழுந்து விழுந்து சிரித்தவன்,




"என் பேரு மாயன் இல்லம்மா....! மாயவன்.... பெண்களை மயக்கிற அந்த மாய கண்ணன் நான்." என்றவன்,



"பரவாயில்லை ஹம்சி....! முன்னாடி இந்தளவுக்கு உரிமையா எல்லாம் இல்லாம, லிமிட்டா பேசுற ஹம்சியா இது?



நீயும் மதுஸ்ரீ கூட சேர்ந்து ரொம்ப நல்லா பேச ஆரம்பிச்சிட்ட, சும்மாவா சொன்னாங்க பூவோட சேர்ந்த நாரும் மணக்கும்ன்னு....." என்றவன் பேச்சில் இடைபுகுந்தவள்,




"யாரு நம்ம மதுஸ்ரீ லொடலெடவா...? அவ என்கிட்ட மட்டும் தான் இயல்பா இருப்பாளே தவிர, வேற யாருகிட்டையும் அத்தனை உரிமை எடுத்துக்க மாட்டா, இப்ப வரைக்குமே அவ உன்னை பார்த்ததும் சிரிப்பை தவிர வேற ஏதாவது ஒரு வார்த்தை பேசிருப்பாளா....?" என்றவள் நேரம் போவதை உணர்ந்து,



"பேசிட்டிருந்தது போதும்.... எங்க போயிட்டாங்க மத்தவங்க." என்றாள்.



"மத்தவங்கன்னா யாரும்மா? அதை சொல்லு சொல்லுறேன்." என்று மறுபடியும் அதே இடத்தில் அவன் வந்து நின்றான்.



"அது..அது....." என தடுமாறியபடி விழிகளை அலைபாய விட்டவளது தடுமாற்றம் புரிந்தவனோ,



"மதுஸ்ரீ தானே...?' என தானே எடுத்து கொடுக்க.



"ம்ம்..... ஆமா" என வேகவேகமாக தலையசைத்தவளின் செயலில் பெரிதாக நகைத்தவன்,



"இப்போ கொஞ்ச முன்னாடி தான் அவ அந்த அறைக்குள்ள போனா, போய் பாரு!" என்று அவளை அனுப்பி வைத்தான்.



அறையில் வந்த மதுஸ்ரீக்கு தன் செயலை நினைத்து அருவருப்பாகிப்போனது. கூடவே செய்யக்கூடாத தவறை செய்துவிட்டோம் என்ற கூற்றவுணர்வும். காரணம் அறியாது வடிந்த கண்ணீருக்கு காரணம் தேடிக்கொண்டிருந்தவள் நின்றவள் அறை கதவு திறபடும் சத்தம் கேட்டு அவசரமாக கண்ணீரை துடைத்து கொண்டு திரும்பியவளிடம் ஓடி வந்தவள்,




"இங்க என்னடி பண்ணிட்டிருக்க...? " என கேட்டவளை மேலிருந்து ஆராந்தாள் மதுஸ்ரீ.



ஆம் ஹம்சி எப்போதுமே அழகி தான். ஆனால் இன்றைய நிகழ்வுக்காக பிரத்தியோகமாக அலங்காரம்
செய்திருந்ததால் பெரும் அழகியாய் தெரிந்தாள்.



ஹம்சியும் எப்போது சல்வார் அல்லது டாப் பேன்ட் தான் அணிபவள்,



இன்று அவள் கலருக்கு ஏற்றதுபோல் பட்டுப்புடவை உடுத்திருந்தவள், முகத்தில் இன்னும் சில ஒப்பனையிட்டு, இடையினை தாண்டி வளர்ந்திருந்த கூந்தலை பின்னலிட்டு அதை மறைக்கும் அளவிற்கு வழிய வழிய பூச்சரம் சூடியிருந்தவள், காதினை விட பெரிய ஜிமிக்கி, கழுத்து ஒட்டிய ஊசிச்செயின், நெஞ்சை தொடும் ஆரம், கை நிறைய வளையல் என பேரழகியாக தன் முன் நின்றவளை அளவெடுத்தவள்,




"ஏய் ஹம்சி......! இது ச நீயாடி?' என்று ஆச்சரியம் காட்டியவள் பேச்சில் வெட்கப்பட்டு காலால் கோலம் வரைந்தவள் செயலில் தன் நிலை மறந்து அவளை சீண்டிப்பார்க்கும் எண்ணம் தோன்றிட.



"என்னடி..! புதுசா எல்லாம் வெட்கப்படுற.?" என்க.



"இல்ல..... நிஜமாவே நான் அழகா இருக்கேனா? இப்பிடியே என்னை பார்த்தா பிடிக்குமா?" என்றாள் இன்னமும் நெளிந்துகொண்டு,



"ஆமாடி! நிஜமாவே அழகா இருக்க, ஆனா இப்போ யாருக்கு பிடிக்குமான்னு கேக்குற...?" என கிண்டல் செய்ய,



"அது.... அது....." என மதுஸ்ரீயை நெருங்கி வந்தவள்,



"என்னை இந்த அலங்காரத்தோட பார்த்த தமிழுக்கு பிடிக்கும்ல....?" என்று சேலை தலைப்பை கசக்கியவாறு ஹம்சி கேட்டதும் சிறு நொடி விறைத்து நின்றவள், ஹம்சி சுதாரிக்கும் முன் தன்னை சரிசெய்து கொண்டு,



"என்னடி நடக்குதிங்க..? அவனுக்கு ஏன் உன்னை பிடிக்கணும்?" என்றாள் கேலிபோல் எதையோ அறிந்து கொள்ளும் நோக்கில்.



"அது.... எனக்கு தமிழை ரொம்ப பிடிச்சிருக்கடி! அவனை நான் லவ் பண்றேன்னு நினைக்கிறேன்." என தயங்கியவாறு கூற,



"இது எப்பத்தில இருந்து மேடம்...? ஆனா ஒரு வாட்டி கூட அதை உன் முகத்தில காட்டிக்கிட்டதில்லையேடி! " என ஆச்சரியமாக வினவ,



"ஆமாடி....!



எப்பத்தையில இருந்துன்னு எனக்கே தெரியல, ஆனா அவனை பார்த்த அந்த நெடியே அவன் எனக்கானவன்னு உள் மனசு சொல்லிச்சு, அவனுக்காக தான் நான் பிறந்திருக்கேன்னு தோணுது. சில வேளை அவன்கூடவே போயிடவான்னு தோணும், ஆனா மற்றவங்க பார்வை நம்ம மேல வித்தியாசமா விளக்கூடாதுன்னு என்னை நானே கண்றோல் பண்ணிட்டிருக்கேன். ஆனா இது மட்டும் உண்மைடி அவனில்லன்னா நான் செத்துடுவேன்." என இத்தனை நாள் தன் மனதில் மறைத்து வைத்திருந்த ரகசியத்தை அவளிடம் கூறினாள்.




"என்னடி சொல்லுற...? இந்தளவுக்கு தீவிரமா அவனை விரும்பிறியே! அவன்கிட்டை உன் மனச சொல்லிட்டியா?"



"இல்லடி....! அவன்கிட்ட இன்னும் சொல்லல, அதனால தான் அவன்கிட்ட சொல்லுற வரைக்கும் உன்கிட்டையும் சொல்ல வேணாம்ன்னு நினைச்சேன். ஆனா உன்கிட்டை இன்னமும் மறைக்க எனக்கு மனசு வரலடி....!



எனக்கென்னமோ உனக்கும் எனக்கும் பூர்வ ஜென்ம பந்தம்ன்னு நினைக்கிறேன் மது. உன்னை பார்த்த அன்னைக்கே ரொம்ப நாள் நாம பழகின ஃபீல். அதனால தான் இத்தனை இயல்பா உன்கிட்ட மட்டும் இருக்கேன் போல," என்றவள்,




"மது.... நீதான்டி என் லவ்க்கு உதவி செய்யணும்." என கண்களை சுருக்கி அவளிடம் கெஞ்ச,



"நானா......?" என விழித்தவள் அவள் கெஞ்சும் தொணி கண்டு,



"எனக்கென்னமோ காதலுக்கு தூது போறது சரியா வரும்ன்னு தோணல ஹம்சி. தூது போறத தவிர வேற என்னவா இருந்தாலும் சொல்லு செய்யிறேன்." என்றாள்.



"அது போதும்டி....! உன் உதவி தேவை படுறப்போ கேக்குறேன். இப்போ வா மண்டபம் போலாம். எம்.டி வர நேரமாச்சு. என அழைத்து சென்றாள்.


தொடரும்....

அடுத்த பகுதியில வர அந்த எம்.டி யாருன்னு பார்க்கலாம்.....
 
Top