• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

10. அம்புத நல்லாள்

Sahana Harish

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
49
அஸ்வின் சொன்னதையே நினைத்துக் கொண்டு வந்தவள் தான் இவ்வாறே யோசித்து கொண்டே சென்றால் கண்டிப்பாக எதன் மீதாவது மோதி விடுவோம் என்ற எண்ணம் தோன்ற தனது வண்டியை சாலையின் ஓரமாக நிறுத்தினாள்.. அது அடர்ந்த மரங்கள் இருக்கும் பகுதி ஆள் அரவமும் மிக குறைவாகவே இருக்கும்.. வண்டிகள் ஓடும் சத்தம் மட்டும் அந்த பகுதியை உயிர்ப்பாக வைத்து இருக்கும்.. ஆனால் வண்டியை நிறுத்திய அவளுக்கு ஏனோ அந்த ஓசை கேட்டு விடுகிறது.. மிகவும் பரிச்சயமான அந்த குரல்..

அவளின் உள்ளம் தொட்ட அந்த மாயவனின் குரல் அவளுக்கு தெள்ள தெளிவாக கேட்கிறது.. பிரமை என்று நினைத்துக் கொண்டு கிளம்ப நினைத்தவளின் செவியில் மீண்டும் விழுகிறது அவனின் அலறல் சத்தம்.. அதைக் கேட்ட அந்த நொடி அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. அசையாமல் நின்றவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்.. அவளின் கண்களுக்கு எதுவும் அகப்படவில்லை.. தனியே அங்கே செல்லவும் யோசனையாக இருந்தது.. இது மைத்ரேயனின் குரல் தானா என்ற ஐயமும் வந்தது அவளுக்கு.. மீண்டும் "அம்மா" என்ற அலறல் கேட்கவும் துணிந்து முன்னேறி செல்ல ஆரம்பித்தாள் அதற்கு முன்னர் தனக்கு தெரிந்த காவல்துறை அதிகாரிக்கு அழைத்தாள்.. அந்த அதிகாரியின் எண்ணிற்கு தொடர்பு கொள்ள முடியாமல் போகவே அவசர உதவி எண்ணிற்கு அழைத்து விவரத்தை சொன்னவள்,தனது அலைபேசியின் டார்ச்சை ஒளிற செய்து கொண்டு அவன் எங்கே இருப்பான் என்று தேடியவளின் கண்களுக்கு அவன் தெரிந்தான் அந்த மங்கிய ஒளியிலும் அவன் தெரிந்தான்..

ஐந்து பேர் சேர்ந்து அவனை அடித்து கொண்டிருந்தனர்.. அவன் வேலையில் அவன் அடிக்கடி இவ்வாறு அடிப்பட்டு கொண்டு இருப்பான் என்பது இவள் அறிந்ததே ஆனால் இன்று.. ஐந்து பேர் இருந்தனர் அங்கே அவர்களின் உடல் வலிமை கண்டவளுக்கு அவனை காப்பது சாதாரண விசயமாக இருக்காது என்பது மட்டும் தெள்ள தெளிவாக புரிந்தது.. இருந்தாலும் அவன் மேலும் விழும் ஒவ்வொரு அடியையும் அவள் பார்த்த வரையில் அவன் தடுக்க முற்பட்டானே அன்றி அவர்களை இவன் அடிக்கவே இல்லை..

"எருமைமாடு என்கிட்ட மட்டும் தான் பெரிய இவன் மாதிரி எரிஞ்சு எரிஞ்சு விழுவான் தடிமாடு மாதிரி இருக்கான் ஒருத்தனாயாவது அடிக்கிறானா பாரு" அவள் வாய் சத்தமாகவே முனுமுனுத்தது.

ஆனால் அவனால் முடிந்த மட்டும் அவர்களை அவன் அடித்தான் என்பது அந்த மங்கை அறிந்திருக்கவில்லை.. அவன் மனமோ பிரதியுமனை தேடியது இந்த நேரம் அவன் மட்டும் இங்கு இருந்திருந்தால் தன்னை காப்பாற்றி இருப்பானே! எத்தனையோ சந்தர்ப்பங்களில் அவன் தான் இவனை காத்து இருக்கிறான்.. காவல்துறை ஆட்களை பார்த்தால் மட்டுமே அவனுக்கு எந்த செயலும் ஓடாது மற்ற நேரங்களில் இவனை காக்கும் கவசமே அவன் தான் எனலாம்.. குருதி பெருகும் நேரத்திலும் அவனைத் தான் நினைத்துக் கொண்டு இருந்தான்..

தூரத்தில் இருந்து அவனை திட்டிக் கொண்டு இருந்தாலும் அவளின் காதல் கொண்ட மனதால் அந்த நிலையில் அவனைப் பார்க்க முடியவில்லை.. உள்ளுக்குள் கதறி துடித்தாள்.. காவல்துறை வண்டி வருமா என்று சாலையிலும் கவனத்தை பதித்திருந்தாள்.. இவள் சாலையை பார்த்த அந்த நொடி கத்திக்கொண்டே ஒருவன் கத்தியை எடுத்து கொண்டு மைத்ரேயனை நோக்கி ஓடுவது அந்த இருளிலும் நன்றாக தெரிந்தது..

அதற்கு மேலும் பொறுக்க முடியாதவாளாய் விறு விறு என்று அந்த மாமிச மலையை நோக்கி ஓடினாள்.. யாரோ ஓடி வரும் சத்தம் கேட்டு அவன் திரும்ப அவன் முகத்தில் அவளின் ஹீல்ஸ் செருப்பால் ஒரு உதை அவனும் அவனிடமிருந்த கத்தியும் பத்தடி தள்ளி விழுந்தது.. தன்னை காக்க யாரோ வந்திருப்பதாய் தோன்ற நிமிர்ந்து நோக்கியவன் எதிரில் பத்ரகாளியாய் நின்றிருந்த நிர்குணாவை கண்டான்.. அவளின் அந்த ரூபம் அவனுக்கு மிகவும் புதிது.. அமைதியே உருவாய், கண்களில் குறும்புடன், கன்னக்குழி சிரிப்புடன் எப்பொழுதும் இருப்பாள்.. அதிர்ந்து அவள் பேசி கூட இவன் பாரத்தது இல்லை.. 'அவளா இது?ஜாக்கி சான் தங்கச்சி மாதிரி பறந்து பறந்து அடிக்கிறா நான் வேற இவகிட்ட ரொம்ப ஓவரா பேசி இருக்கேனே' என்று யோசித்துக் கொண்டு இருந்தவனுக்கு நேரே மீண்டும் ஒரு கத்தி அவனின் கழுத்திற்கு குறி பார்க்கப்பட்டு இருந்தது.. இவனோ கண்களை மூடி 'கடவுளே என் கதை முடிஞ்சிது' என மனதிற்குள் பேசி கொண்டு இருந்தவன் தான் இன்னமும் உயிரோடு இருக்கிறோம் என புரிய கண் விழித்து பாரத்தவனின் கண்கள் மேலும் ஆச்சரியத்தில் அகல விரிந்தது ஏனெனில் கத்தி வைத்திருந்தவனின் கையை அவள் பலங்கொண்டு பிடித்திருந்ததாள்.. அந்த ரவுடியால் இவளின் பிடியை தளிர்த்தவே முடியவில்லை.. அவனின் கை எலும்பு நொறுங்கும் ஓசை தெளிவாக கேட்டது மைத்ரேயனுக்கு..

ஆவென வாயை பிளந்து பார்த்துக் கொண்டு இருந்தவனின் மீது ஒரு கல் வந்து விழவும் என்னவென்று பார்க்க "ரேயன் மண்ணு மாதிரி இருக்கீங்களே எழுந்து வந்து எனக்கு ஹெல்ப் பண்ணுங்க" என்று கட்டளையிட்டாள் நிர்குணா.

அதில் சித்தம் தெளிந்தவனாய் அவன் பங்கிற்கு இரண்டு ரவுடிகளை அடித்து துவைத்தான்.. அவர்களை அடிப்பது அவனுக்கு எளிதான காரியமாக இருக்கவில்லை.. ஆனால் அவளோ ஏதோ பொம்மையுடன் விளையாடுவது போல் அடித்து விளையாடி கொண்டிருந்தாள்.. அரை மணி நேரம் கழித்து போலீஸ் அவ்விடத்திற்கு வந்தடைந்தனர்.. வந்தவர்கள் முதலில் கம்ப்ளைன்ட பண்ணது யாரென கேட்டு விட்டு என்ன பிரச்சனை என்பது போல் மைத்ரேயனிடம் வினவ "சர் நான் பிரஸ் இவங்க சும்மா போய்ட்டு இருந்த என்கிட்ட வந்து வம்பு பண்ணாங்க நானும் எவ்வளவோ கேட்டு பார்த்துட்டேன் ஆனா என்னை கொலை பண்றதுலேயே குறியா இருந்தாங்க இது யார் செய்த வேலைன்னு தெரியல"

இன்ஸ்பெக்டரோ"ஓகே மிஸ்டர் நீங்க வந்து உங்க கம்ப்ளைன்ட ஸ்டேட்மெண்டா எழுதி கொடுங்க அதுக்கு யூ ஷுட் கம் வித் மீ"

இவன் பேசுவதற்கு முன் இவள் முந்திக்கொண்டு" சர் ஹி இஸ் இஞ்சூர்ட்.. ஹி நீட் எ டிரிட்மெண்ட்.. ( he is injured, he need a treatment) நான் ஒரு டாக்டர் டிரிட்மெண்ட் முடிஞ்சதும் அவர் வருவார் சர்" என்றதும் அவர் மைத்ரேயனை பார்த்தும் புரிந்தது அவனுக்கு மருத்தவ சிகிச்சை தேவையென.. அதுமட்டுமின்றி நிர்குணாவிடம் திரும்பி" நீங்க இவருக்கு என்ன உறவு? இவ்வளவு அக்கறையா இருக்கீங்க?"

" இவர் என்னோட பியான்சி சர் அவர் அடிவாங்கிட்டு இருக்கறத பார்த்துட்டு சும்மா இருக்க முடியுமா?"

அவரோ இவளிடம் சிரித்தவாறு கடந்து விட இவனோ இவள் முகத்தையே பார்த்திருந்தான்.. அதை உணர்ந்தளோ என்னவோ இவன் புறம் திரும்பி தன் ஒற்றை புருவத்தை உயர்த்தியவாறு என்ன என்பது போல் பார்த்தாள்.. அவளின் அந்த பார்வை வீச்சு தாளாமல்" ஒண்ணுமில்ல" என தன் வாய்க்குள் முனுமுனுத்து கொண்டான்..

அதன் பிறகு அவனை தன்னுடைய மருத்துவமனைக்கு அழைக்க இவனோ அவன் வண்டியில் வருவதாய் சொல்லவும் இவள் அவனை முறைத்ததில் வேறு எதுவும் பேசாமல் அவளுடைய வண்டியிலேயே அமர்ந்து கொண்டான்..

அவளின் மருத்துவமனை அவ்விடத்தில் இருந்து பத்து நிமிட பயணம் அந்த நிமிடங்கள் தன்னவனுடனே நின்றுவிட கூடாதா என்றிருந்தது அவளுக்கு.. அவனுக்கோ எதுவும் பேச முடியாத நிலை.. இருவரும் வெவ்வேறு மனநிலையில் இருக்க ஒரு வழியாக மருத்தவமனையை அடைந்தனர்.

இவளின் புகழ்பெற்ற மருத்துவமனையில் எலும்பியல் நிபுணராக பணிபுரிந்து கொண்டிருக்கின்றாள்.. இவளின் கைப்பட்டால் எப்பேர்ப்பட்ட எலும்பு பிரச்சனையையும் சரி ஆகிவிடும் என்ற நிலையில் தன்னை உயர்த்தி இருந்தாள் அவளின் அயராத உழைப்பினால்.. செவியிலரை அழைத்தவள் "சிஸ்டர் இவர் எனக்கு ரொம்ப முக்கியமான பேஷண்ட் இன்னைக்கு இருக்க மற்ற அப்பாயின்மென்ட் எப்ப?"

"மேடம் 8 மணிக்கு மேல தான் அப்பாயின்மென்ட் பிக்ஸ் பண்ணி இருக்காங்க நீங்க இவரோட கேஸ புரோசிட் பண்ணலாம்"

"ஓகே பைன்" என்று நகர போனவளை "மேடம் நான் அவரை கூட்டிட்டு வரேன் நீங்க போங்க"என்றவரை முறைத்தவள்" சிஸ்டர் நீங்க மற்ற வேலையை பாருங்க நான் இவர பார்த்துக்கிறேன்" என அமைதியாக சொன்னாலும் அவளின் குரலில் இருந்த அழுத்தத்தை செவியிலர் உணர்ந்தாரோ இல்லையோ மைத்ரேயன் நன்கு உணர்ந்தான்.. அதில் அவனுக்கு சிரிப்பு வந்தாலும் மேலும் என்ன நடக்க போகிறது என்ற ஆர்வமும் அதிகமாகியது.

செவியிலரோ" இந்த மேடமுக்கு என்ன ஆச்சு? எப்பவும் நான் தானே இவங்களுக்கு உதவி செய்வேன் இன்னைக்கு என்னவோ புதுசா பேசுறாங்க பார்வை கூட சரியில்ல" என அவர் பேசியது இவளின் காதில் விழவில்லை என்பது போல் இவனை இடுப்போடு கை கோர்த்து தன்னோடு அணைத்தவாறு அழைத்து சென்றாள் எவ்வித சலனமுமின்றி.. ஆனால் அவனின் நிலை தான் மிகவும் மோசமாக இருந்தது.. முதன் முறையாக ஒரு பெண் இத்தனை நெருக்கத்தில் அதிலும் தன்னை காதலிக்கும் ஒருத்தி.. அவனுக்கு அவள் ஈர்ப்பு இருந்தாலும் தன் வேலை நிமித்தமாக தன் வாழ்க்கை துணையாக வருபவள் தைரியமாக இருக்க வேண்டும் என எண்ணினான் அதன் காரணமாகவே அவளை தவிர்த்துக் கொண்டிருந்தான்.. தன்னால் அவளுக்கு எந்த வித அசம்பாவிதமும் நிகழ கூடாது என்ற எண்ணத்தில் தெளிவாக இருந்தான்.. ஆனால் இன்று அதெல்லாம் முற்றிலும் நொறுங்கியதை போன்ற உணர்வு.. அமைதியின் உருவாய் பார்த்தவள் இன்று அவன் கண் எதிரே தானே ருத்ர தாண்டவம் ஆட முடித்திருந்தாள்! தன்னுடைய அறையில் அவனை வசதியாக படுக்க வைத்து அவனுக்கான முதலுதவிகளை செய்யும் அவளையே கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான்.. அவளின் அழகு அவனுக்கு இன்று ஏனோ பன்மடங்காக தெரிந்தது.. தன்னுடன் அவளால் சமாளிக்க முடியும் எந்த பிரச்சனை வந்தாலும் துணையாக இவளால் இருக்க முடியும் என மனது அவனுக்கு சாட்டையால் அடிப்பதைப் போல் உணர்த்தியது..

தன்னவன் தன்னை இரசிக்கிறான் என்று தெரியாமலா இருக்கிறாள் அந்த மங்கை? இந்த பார்வைக்காக எத்தனை நாள் ஏங்கி இருக்கிறாள்? எத்தனை முறை இவனிடம் திட்டு வாங்கியிருக்கிறாள்! எப்பொழுதும் இவன் அருகாமையை மனமானது கேட்டு ஏங்கும் ஆனால் இன்று அவன் என் அருகாமையை விரும்புகிறான்..இது அற்புதமான நொடிகள் அல்லவா இதை அவளால் தவிர்க்க முடியவில்லை.

சில நிமிடங்கள் கழிந்தது.. அவன் ஆவென அலறினான்.

"ஏய் எதுக்கு இப்ப இப்படி கத்துறீங்க?"

"நீ.. நீ.. என்ன பண்ற?" அவன் வார்த்தைகளை கோர்க்க தடுமாறினான்.

"அதுவா இது என்னோட டூல் மோஸ்ட்லி இது சின்னதா இருக்கும்.. நீங்க எனக்கு ரொம்ப ஸ்பெஷல் இல்லையா அதனால தான் இது" என்று தன் இருக்கும் சுத்தியலை ஆட்டியவாறே.

"நிர்குணா கூல் இத வச்சி ட்ரீட்மென்ட் பண்ண மாட்டாங்க.. நான் இருக்கறது உனக்கு பிடிக்கலைன்னா நான் போய்டவா?" என்றது தான் தாமதம் அவன் தலையில் நங்கென்று கொட்டி இருந்தாள்.

" ஏய் என்ன பண்ற? ஐயம் நாட் எ சயில்ட்.. உன்னால முடிஞ்சா ட்ரீட்மெண்ட் கொடு இல்லன்னா நான் கிளம்பறேன்" என்றான் கோபமாக ஆனால் ஒரு கை தலையை தடவி கொண்டு இருந்தது.(பின்ன அடி நங்குன்னு இருந்ததுல)

அவனை முறைத்தவள்" அறிவில்லை உங்களுக்கு? நல்ல தின்னுட்டு இப்படி மாடு மாதிரி வளர்ந்து இருக்கீங்களே உங்கள அடிக்க வந்த ஒருத்தனையாவது அடிச்சீங்களா? அவன் என்னவோ கோவில் பிரசாதம் தர மாதிரி பவ்வியமா வாங்கிட்டு இருக்கீங்க? நான் எதேச்சையா அங்க வந்தது நல்லதா போச்சி இல்லன்னா என்ன ஆகி இருக்கும்?" எனும் போதே அவளின் குரல் உடைந்தது.

அதற்கு பதில் சொல்ல வந்த அவனை எதுவும் பேச வேண்டாம் என்பது போல் செய்கை செய்து விட்டு மேலும் அவளும் எதுவும் பேசாமல் ஒரு மருத்தவராய் அவனுக்கு எக்ஸ்ரே எடுத்து கையில் மட்டும் சிறு பிரச்சனை என்பது புரிய அதற்கான மருந்துகளும் அவன் செய்ய கூடாத செயல்களையும் அவனுக்கு எடுத்துரைத்தவள் வேறு வார்த்தை பேசாமல் செவிலியிரை அழைத்து மற்ற நோயாளிகளை ஒவ்வொருத்தராக அனுப்பி வைக்க சொன்னாள்.. இதற்கு அவனை வெளியேற சொல்லுகிறாள் என்பதாக தான் இருக்கும் என்பது அவனுக்கு புரியாமல் இல்லை.. நிர்குணாவை ஒருமுறை பார்த்து விட்டு வெளியேறினான் மைத்ரேயன்..

டாக்ஸி புக் செய்து ஸ்டேஷனில் புகார் அளித்து விட்டு அவன் வீட்டிற்கு வர நேரம் ஒன்பதை தொட்டிருந்தது.. இரவு உணவை தன் கை இருக்கும் நிலையில் செய்ய முடியாது என தோன்றவே அலைபேசியில் ஆன்லைன் உணவை ஆர்டர் செய்தவன் அப்பொழுது தான் கவனித்தான் பிரதியுமனிடமிருந்து 20 தவறிய அழைப்புகள் இருப்பதை.. இத்தனை முறை அழைப்பவன் அவன் அல்ல என்பது தோன்றவே அழைப்பெடுத்தான் நொடியும் தாமதிக்காது.. மறுமுனையில் அவன் சொன்ன செய்தி கேட்டு இவனின் கை கால் எல்லாம் வேரூன்றி போய் இருந்தது.

தொடரும்..
 
Top