• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

10. உன்னாலே உயிரானேன்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
அந்த பெரிய ஹாலானது பலவித அலங்காரங்களுடன் பல கம்பனிகளின் உழியர்களால் நிரம்பியிருக்க, அவர்கள் வழிகளோ தமது எம்டி யாரென அறிந்திட வாசலையே ஆர்வமாக எதிர்பார்த்திருந்தது.



சிலரோ தமக்குள் எதுவோ பேசிக்கொண்டிருக்க, அந்த சலசலப்பு மண்டபம் முழுவதும் எதிரொலித்துக்கொண்டிருந்தது.



இருந்தும் யார் என்ன பேசுகிறார்கள் என்பதில் தெளிவில்லை.



மதுஸ்ரீயும் அருகில் நின்ற அவள் சக ஊழியர்களும் மாத்திரம் எந்த வித உரையாடலுமின்றி கைகட்டி வாசலையே பார்த்தவாறு வருபவனை வரவேற்பதில் கவனமாக நின்றிருந்தனர்.



இருக்காதா பின்னே? அவர்களது மேனேஜர் குருபரனது கெடுபிடியான நிபர்ந்தனை ஆயிற்றே!



இந்த நிகழ்வினான் எனக்கோ இல்லை என் பொறுப்பில் நடத்தப்படும் என் நிறுவனத்திற்கோ உங்களால் எந்தவொரு கெட்ட பெயரும் வந்துவிடக் கூடாது என கண்டிப்பாகவல்லவா எச்சரித்துவிட்டு எம்டியை அழைத்துவருவதற்காக அவன் வீடு சென்றிருக்கிறார்.



ஆம் அவன் நாடு வரும்போது நல்லிரவு ஒரு மணியாயிற்று. வந்தவனை ஓய்வெடுக்க விடாது உடனே வரவேற்ற வேண்டுமென்று என்ன அவசரமோ? அவனும் மறுக்காது ஒப்புக்கொண்டுவிட்டான் என்பதே அவனது பிஸினஸ் ஆர்வத்தை புரிந்து கொள்ள முடிந்தது.



திடீரென தூரத்தில் ஏதோ சத்தம் கேட்பதைப்போல் தோன்ற திரும்பி பார்த்த ஹம்சி, மேடையில் இருந்த மேசைமேல் கிளாஸில் வைத்து மூடப்பட்டிருந்த நீரை எப்படியோ உற்புகுந்த கறுப்பு பூணை ஒன்று தட்டிவிட்டு ஓடுவது தெரிய,


"


அச்சோ...!" என்று முணங்கியவாறு மேடைநோக்கி திரும்பியவள் கையினை பிடித்து தடுத்த மதுஸ்ரீ.

"


எங்கடி இந்த நேரம் போற? எம்டி வர நேரமாச்சு நின்னு ரிசீவ் பண்ணிட்டே போ!" என்றாள்.

"


ஆமாடி...! எம்டி வர நேரத்தில மேடையில தண்ணி சிந்திடிச்சு. யாராச்சும் தெரியாம காலை வைச்சிட்டா வழுக்கி விடுந்திடுவாங்க. இதை பிடி! இப்போ கிளீன் பண்ணிட்டு ஓடி வந்திடுறேன்." என தன் கையிலிருந்த பூங்கொத்தினை அவள் கையில் திணித்துவிட்டு ஓட,

"


ஏய்....! அதை நான் பாத்துக்கிறேன். நீ இதை பிடி...!" என்று சொன்னவள் குரல் எங்கு அவள் காதில் விழுந்தது. அவள் தான் புயல் வேகத்தில் மேடையில் நின்றாளே..!



ஆம்.... ஹம்சி அப்படி இல்லை என்றால் தான் ஆச்சரியப்பட வேண்டும். அவளிடம் பொறுப்பாக ஓர் வேலையினை கொடுத்துவிட்டால் போதும். அதை திறன் பட செய்துமுடிப்பதில் அவளுக்கு நிகர் எவருமில்லை.



பூச்செண்டினை கைகளில் ஏந்தியவள் விழிகளே அத்தனை ரோஜா பூக்களின் மத்தியில் மஞ்சள் நிறத்தினில் இருந்த அந்த ஒற்றை ரோஜாவினேலே பதிந்தது.



அதையே பார்த்திருந்தவளுக்கு ஏனோ அவளையே அறியாத பதட்டம் தோன்ற, கால்கள் தரையில் நழுவிக்கொண்டு போவதைப்போல் இருந்தது.



அவளும் எத்தனையோ மேடைகள் ஏறி, எத்தனையோ பெரிய மனிதர்கள் கையினால் விருதுகளும் வாங்கியிருக்கிறாள் தான். ஆனால் ,இந்த பூச்செண்டினை கைகளில் ஏந்தும் போது மட்டும் ஏன் இந்த பதட்டம்?' என எண்ணியவளுக்கு இந்தப்பதட்டம் இப்போது ஆரம்பிக்கவில்லை என்று நன்கு தெரியும்.



ஆம்..... காலையில் விழிப்பு தட்டியதிலிருந்து இதே உணர்வை அவள் உணர்ந்து கொண்டுதான் இருக்கிறாள். அதன் காரணம் தான் என்னவென்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.



திடீரென பதட்டத்தொடு அவள் இதயமானது தொண்டைக்குழியில் வந்து துடிப்பதைப்போல் அதன் துடிப்பு அதிகரித்திருந்த நேரம், மண்டபத்தை நிறைத்திருந்த சலசலப்பானது சட்டென அடங்கிப்போக, காரணம் தேடி அனைவர் முகத்ததையும் பார்த்தவள், அவர்களது விழிகள் வாசலை நோக்கி விரிவதை கண்டு தானும் வாசல் புறம் பார்வையை நகற்றினாள்.



ஆறடிக்கும் சற்று அதிகமான உயரம், கட்டுமஸ்தான உடலமைப்பு, கூர்மையான புருவங்களின் கீழே ஆணையிடும் விழிகள். வேல் போன்ற நாசி, அதன்கீழ் முகத்தின் கடினத்தை உணர்த்தும் உதடுகள், கரங்கொண்டு கோதிவிட்ட முடியனைத்தும் அவனது வேக நடைக்கேற்ப காற்றோடு இசைந்தசைய அத்தனை பேர் மத்தியிலும் நடுநாயகமாக வந்து கொண்டிருந்தான் அவன்.



மதுஸ்ரீயின் விழிகளுமே விரிந்து அவனது தோற்றத்தை அளவெடுக்க, அவள் அருகில் நின்றிருந்தவன் விழிகளோ சௌந்தரீகனை கண்டதும் அனலை கக்கத்தொடங்கியது.
ஆம்..... அந்த புதியவன் பெயர் சௌந்தரீகன். அவனை கண்டவுடன் தான் மலைமாறனுக்கு அவன் யாரென்பதே தெரிந்தது.



பாவம் அவன் மட்டும் இந்த இடத்தில் அவனை எதிர்பார்த்தானா என்ன?


'


நீயும் வந்துட்டியா.....? அப்படின்னா எனக்கு நீயும் போட்டியா வரே.....! இருக்கட்டும்... உங்க ரெண்டு பேருக்கும் நான் யாருன்னு காமிக்கிற நேரம் நேரம் ரொம்ப தொலைவில இல்லை..... இந்த பிறப்பிலையும் உங்க ரெண்டு பேரையும் நான் அலறவிடல்ல...., நான் மலைமாறன் இல்லடா.....!' என உள்ளோ பொருமியவனை யார் கண்டு கொள்கிறார்கள்.

மொத்த கூட்டத்தின் கவனமும் தான் அவனிடம் இருந்ததே!


ஒவ்வொரு நிறுவனத்தின் பொறுப்பில் இருப்பவர்களும் வரிசையாக வந்து பூச்செண்டினை அவனிடம் தந்து அவனை கைகுழுக்கி வரவேற்க, இவர்களது நிறுவனத்தின் பொறுப்பில் இருக்கும் குருபரனோ அவனருகில் இருப்பதால் அந்தப்பொறுப்பினை ஹம்சியிடமே ஒப்படைத்து சென்றார்.



இந்த நேரம் பார்த்து ஹம்சி மேடையினை சுத்தம் செய்ய சென்றதால் பூச்செண்டினை வைத்திருந்த மதுஸ்ரீ மேடையினை பாவமாக நோக்கினாள்.
அவள் தான் வேலை என்று வந்துவிட்டால் வெள்ளை காரியாயிற்றே! இவளையா பார்க்க போகிறாள்?

"


மதுஸ்ரீ நீங்க மட்டும் தான் தரல்ல, போய் வெல்கம் பண்ணுங்க." என்றான் அருகில் நின்ற தமிழ்.


"


நானா...? நான் மாட்டேன். மேனேஜர் சார் ஹம்சியை தான் சொன்னாரு" என அவள் மறுக்க,

"


என்ன மதுஸ்ரீ நீங்க? ஹம்சி வரும் வரைக்கும் சார் இங்கயே நிக்கணுமா? எத்தனை மேடை ஏறி இருப்பிங்க? இதுக்கு போய் பயந்திட்டு..... சும்மா செண்டை குடுத்திட்டு வெல்கம் பண்ணிட்டு வரதில என்ன ஆகிடப்போகுது?" என்றதும் தான்,

"


அதானே....! நான் ஏன் பயப்பிடணும்..?" என நினைத்தவாறு தைரியமாக அவன் முன் சென்றவள்,

"


வெல்கம் சார்....!" என செண்டினை அவனிடம் நீட்டினாள்.



அவனோ அதை வாங்காது மேலிருந்து கீழாக அவளை அளவிட்டவனது ஒற்றை புருவமானது வில்லாய் வளைய, உதட்டை ஓரமாக இழுத்து பொய்யான புன்னகையினை சிந்தியவன், அவளிற்கு பதிலளிக்காது தன் அருகில் கோட் சூட் அணிந்து நின்றவனிடம் கண்களால் வாங்க சொல்லி ஜாடை காட்டிவிட்டு அவளை பொருட்படு்த்தாது விலகிக்கொண்டு முன்னே நடந்தான்.



மதுஸ்ரீக்கு தான் அத்தனை பேர் முன்பும் அவமானமாகிப்போனது. இப்படி ஒரு அவமான படுத்தலை அவனிடமிருந்து அவள் எதிர்பார்க்கவில்லை. அவளுக்கு முன்பு அனைவரும் கொடுத்த செண்டினை புன்னகையோடு வாங்கி அருகில் இருந்தவனிடம் கொடுத்துக்கொண்டு வந்தவன், அவள் கொடுப்பதை மட்டும் தான் வாங்காது நேரகா அவனை வாங்க சொன்னால் என்ன அர்த்தம்?



முகத்தில் அதை பிரதிபலிக்காது தன்னை நோக்கி கை ஏந்தி நின்றவனிடம் கொடுத்து விட்டு ஒதுங்கி நின்றவள் பார்வையோ போகும் அவன் முதுகினையே கோபமாய் வெறித்தது.



திடீரென பின்புறமாக வந்து கைகளை பற்றிய ஹம்சியை திரும்பி பார்த்தவளுக்கு அவன் மேலிருந்த கோபமெல்லாம் அவளிடம் திரும்ப,


"


என்ன....?" என்றாள் வெடுக்கென அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.



அவள் இருந்த பதட்டத்தில் மதுஸ்ரீயின் கோபத்தை உணர்ந்திடாதவளோ!




"


மது உன்கிட்ட கொஞ்சம் பேசணும், ஓரமா வா..!" என்றாள்.



அவளது குரலில் தெரிந்த பதட்டத்தில் என்னவோ என்று அருகில் இருந்த ஒப்பணை அறைக்குள் புகுந்தாள்.



உள்ளே அழைத்து வந்தவள், அங்கு மூலையில் சுருண்டு கிடந்த பெண்ணை தட்டி,


"


இப்போ எப்பிடி இருக்கு பூமிகா? உன்னால ஆட முடியுமா?" என்றாள்.



அவளோ "அக்கா என்னால சுத்தமா எந்திரிச்சு நிக்க கூட முடியலக்கா, அப்பிடியே எந்திரிச்சு நின்னாலும் ஆட முடியாதுக்கா...! தலை சுத்தி வாந்தி வரமாதிரி இருக்கு.." என முணங்கலாய் பதிலுரைத்தவளை பீதியாய் பார்த்தவள்,


"


டைம் ஆச்சே பூமிகா..! இப்போ அவசரமா யாரை பிடிக்க, இங்க இருக்கிறவங்க யாருக்குமே சுத்தமா ஆட தெரியாதே...!" என்றவள் பார்வையோ மதுஸ்ரீயிடம் திரும்பியது.

"


ஏய்.....! உனக்கு தான் எல்லா கலையும் அத்து படியாச்சே! ப்ளீஸ் சீக்கிரம் ரெடியாகிட்டு வா..!" என ஹம்சி கெஞ்ச,

"


என்ன ஹம்சி விளையாடுறயா? நான் எப்பிடி..? ஏன் இவளுக்கு என்னாச்சு திடீர்ன்னு...?"

"


அவளுக்கு நேத்து தொடக்கம் பீவராம்டி....! இருந்தும் ஆட சம்மதிச்சிட்டோம், எப்பிடியும் ஆடிடுவோம்ன்னு தான் வந்தா.., ஆனா இப்போ அவளால சுத்தமா முடியல,



வரவேற்பு நடனத்தோட தான் நிகழ்சியே ஆரம்பிக்கணும், ஆனா இவ இப்பிடி சுறுண்டு கிடந்தா எல்லாமே கெட்டுப்போயிடும், மேனேஜர் வேற டென்ஷனாகப்போறாரு,



பேசிட்டிருக்காம ரெடியாகிடி..!" என அருகில் இருந்த துணியினை அள்ளி அவளிடம் கொடுத்துவிட்டு நின்றால் ஏதாவது பேசி மறுத்துவிடுவாள் என பயந்து வெளியேறியவளை குருபரன் அழைக்க அவரிடம் ஓடிவிட்டாள் ஹம்சி.



தனக்கு நடனம் சுத்தமாக தெரியாது என சொல்ல அவள் பின்னால் கதவனை திறந்து கொண்டு ஓடிவந்தவள், ஹம்சியை மனேஜர் அழைத்ததும் செய்வதறியாது உள்ளே வந்து அங்கிருந்த இருக்கையில் தொப்பென அமர்ந்தவளை பார்த்த பூமிகா.


"


ஏன்க்கா....? என்னால முடியலன்னு தானே உங்களை ஆடசொல்லுறாங்க. எனக்காக ஆட மாட்டிங்களா.?" என அவள் வருத்தமாக வினவ,

"


ஆடுறதுக்கு முதல்ல ஆட தெரியணும் பூமிகா. எனக்கு இந்த டான்ஸ்ஸே சுத்தமா பிடிக்காது, அதனாலயே அதை நான் கத்துக்க ஆசைப்படல, இப்போ திடீர்ன்னு ஆடச்சொன்னா என்னத்த நான் ஆடுவேன் சொல்லு...?" என அவளிடமே நீதி கேட்டாள்.



இதை கேட்டதும் அதிர்ச்சியாகி, மெதுவாக எழுந்து சுவற்றோடு சாய்ந்து அமர்ந்தவள்,


"


இப்போ என்னக்கா பண்ணுறது...?" என்றாள் கலக்கமாய்.

"


அது தான் பூமிகா எனக்கும் தெரியல." என தலைமேல் கைவைத்தவளிடம்.

"


அக்கா என் செல்லில ஒரு வீடியோ இருக்கு. அது நான் ஆடினது தான், அதை ஒருவாட்டி பார்த்தா ஆடுவிங்களா?" என்றாள்.



நம்பிக்கையே இல்லாது யோசனையோடு அதை வாங்கி பார்த்துவிட்டு அவளிடமே தந்தவள்,


"


இதுவரை ஒரு முத்திரை கூட பிடிச்சு பழக்கமில்ல பூமிகா.....! ஏன் உன்னோட வீடியோவை பார்த்ததும் தான் தெரியுது இது தான் நமஸ்காரம்ன்னு, என்னைப்போய் இந்த மாதிரி மாட்டிவிட்டுட்டிங்களே...!



சரி வீடியோ பார்த்த வரைக்கும் நல்லா ஆட முயற்சி செய்றேன். பரதத்துக்கு என்னால பங்கம் வரக்கூடாதுன்னு என்னோட அர்த்தநாரீஸ்வரர்கிட்டயும் வேண்டிக்கிறேன்." என அந்த உடையினை அணிந்து அலங்காரங்களை அவசரமாக செய்யவும் அவளை மேடையில் ஹம்சி அழைக்கவும் சரியாக இருந்தது.



தன் பெயர் ஒலிபெருக்கியால் வருவதை கேட்டவள் விழித்தபடி எழுந்து கொள்ள,


"


என்னையும் கை தாங்கலா அழைச்சிட்டு போய் ஓரமா ஒரு சேர்ல உக்கார வைக்கிறீங்களாக்கா?" என்றாள் பூமிகா.

"


உன்னால தான் முடியலையே பூமிகா? நீ இங்கேயே இருந்துக்கோ" என்றவளை அவசரமாக மறுத்தவள்,

"


இல்லக்கா.... நான் ஓரமா இருந்தேன்னா ஏதோ ஒரு இடத்தில நீங்க தடுமாறுறப்போ நான் இங்க இருந்தே சொல்லி தருவேன்ல்ல..." என்றாள்.

'


ஏதோ ஒரு இடமா....? எத்தனை கலைஞர்கள் ஆண்டாண்டு காலம் நடனம் பழகி அரங்கேற்றத்திலே தடுமாறும் போது அபிநயமே பிடித்தறியாதவளுக்கு ஒரு இடத்திலா தடுமாற்றமாக இருக்கும்....?



ஒவ்வொரு அசைவிற்கும் அவளிடம் குற்றம் காணப்போகிறார்களே..!' என நினைத்தவளுக்கும் அவள் தன் பார்வைக்குள் இருந்தால் சற்று தைரியமாக இருக்கும் என்று அவளை அழைத்து சென்று ஓரமாக அமரவைத்துவிட்டு தயக்கத்துடனே மேடை ஏறினாள்.




அத்தனை பேர் முன்பும் செதுக்கிய சிலையென அரை மண்டியிட்டு நிற்கும் போது ஏற்பட்ட பதட்டம், நமஸ்காரம் செய்து மேடையினை தொட்டு வணங்கியதும் காணாமல் போயிருந்தது.



முதலில் பூமிகாவின் வீடியோவினை மனக்கண்முன் கொண்டு வந்து ஆட ஆரம்பித்தவள் அதன்பின் ஒலித்த பாடலுக்கு தகுந்தாற்போல் தானாகவே அபிநயங்கள் பிடிக்க ஆரம்பித்தாள்.



அவள் பிடித்த அபிநயங்கள் அனைத்திலுமே அத்தனை நேர்த்தி, எந்த இடத்திலுமே தொய்வென்பது இல்லாமல், உடல் வளைத்து ஆடிக்கொண்டிருப்பவள் நாட்டியம் என்பதையே அறிந்ததில்லை என சொன்னால் யாருமே நம்பட மாட்டார்கள்.



அந்தளவிற்கு பல வருடங்கள் நாட்டியம் பயின்று அதில் கை தேர்ந்தவள் போலவே ஆடிக்கொண்டிருந்தவளை அனைவரும் விழியசையாது வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருக்க, பூமிகாவிற்கோ மதுஸ்ரீ தன்னிடம் பொய் கூறிவிட்டாளோ என்றே தோன்றியது.



நடனம் முடிந்து மேடையிலிருந்து இறங்கி வந்தவளை அத்தனை கூட்டமும் மொய்த்துக்கொள்ள, அவர்களை சமாளித்து ஒப்பனை அறை புகுந்தவளுக்கு எப்போதும் தோன்றும் அதே குற்றவுணர்வு.

'


காரணமில்லாது ஏன் இப்படி அடிக்கடி தோன்றுகிறது? தமிழ் என்னை நெருங்கி வரும்போது கூட இதே உணர்வு தானே தோன்றிற்று. இப்போது நடனம் ஆடிவிட்டு மேடையிலிருந்து இறங்கியதன் பின்னரும் இதுவே தோன்ற காரணம் என்ன? அப்படி நான் என்ன குற்றம் புரிந்தேன்?" என அதிலேயே உலன்றவளுக்கு தான் செய்து வந்த சாதனை மனதில் பதியவே இல்லை.



தொய்ந்த நடையுடன் உள்ளே புகுந்த பூமிகா,
"செமயா ஆடினிங்கக்கா...! நான் கூட இந்தளவுக்கு ஆடியிருக்க மாட்டேன். அத்தனை பேரோட கண்ணும் உங்க மேலதான், கொஞ்சம் கூட அசையவே இல்லை..... ஆனா இவ்ளோ நல்லா ஆடுறீங்க என்கிட்டை மட்டும் ஏன்க்கா டான்ஸ் தெரியாதுன்னு பொய் சொன்னீங்க?" என்றாள்.

"


பொய்யா...? அதுவும் நானா? இல்லை பூமிகா எனக்கு உண்மையிலுமே தெரியாது. ஆனா மேடை ஏறினதும் நீங்க எல்லாரும் ஆச்சரியப்படுற அளவுக்கு எப்பிடி இந்த மாதிரி ஆடினேன்னு எனக்குமே சுத்தமா புரியலடா...!" என தன்னை நிரூபிப்பதற்காக பேசியவள் பேச்சினை எதிரில் நிற்பவள் நம்பவேண்டுமே....!



"நம்பிறது போல


சொல்லுங்ககக்கா...! எது எப்பிடியோ குருபரன் சாருகிட்டை திட்டு வாங்காம தப்பிச்சவரை சந்தோஷம்." என பெருமூச்சு விட்டவள்.


"நீங்க ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கங்க.. நான் கொஞ்சம் படுத்துக்கிறேன்." என பழைய படி மூலையில் சுறுண்டு விட்டாள்.



இவள் இந்தளவிற்கு திறமையாக ஆடியது எல்லோருக்குமே ஆச்சரியமாகவும், வியப்பாகவும் இருக்க, ஓருவனுக்கு மட்டும் அது வியப்பை தரவில்லை.


மாறாக அவளை நாட்டிய உடையில் பார்த்ததும் பழைய நினைவுகளில் அவளையே வைத்த கண் விலகாது அவளது அசைவுகளையே ரசித்து நின்றான்.
 
Top