• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

10. உறவாக வருவாயா.?

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
அது வேறு யாருமில்லை... லாவண்யாவே தான்... மதுமிதா கிச்சனில் இருந்து வந்த பின்னாடியே அவளும் வந்துவிட்டாள்.


சிவாவின் தன்னை பற்றிய வினாவிற்கு மதுமிதாவின் பதில் என்னவென்று ஒட்டு கேட்டவள், ஏமாந்து போனாள்.


அதன்பின் அவளுடனான சிவாவின் நட்பான பேச்சும். உரிமையுடனான சண்டையும் என எல்லாவற்றையும் பார்த்தவளுக்கு, ஏனோ உள்ளுக்குள் தகதகவென தீ கொழுந்து விட்டு எரிந்தது.


தரை அதிரும்படி தடதடவென வந்த எதிர் ஷோபாவில் அமர்ந்தவள்.. "இந்த சேனல மாத்து" என்றாள் சிவாவிடம்.

"ஹான்...... பொமேரியன் நாய் வந்திடிச்சு.. இனி டீவி பாத்தா மாதிரி தான்." என முனுமுனுத்தவனோ,


ரிமோட்டினை தூக்கி போட்டு.


"உனக்கு என்ன வேணுமோ... நீயே வைச்சுக்கோ.." என்றுவிட்டு, மதுமதாவிடம் திரும்பி...


"கேஷிய காணல்லையே...! எங்க போயிட்டான்" என்றான்.


அவளும் அவன் கேட்ட கேள்விக்கு பதில் கூற,
இருவரையும் குறுகுறு என பார்த்திருந்தவள், ரிமோட்டினை ஆவேஷமாய் தூக்கி எறிந்து உடைத்து விட்டு எழுந்து வெளியேறினாள்.


இவள் நடவடிக்கை எதுவும் புரியாது அதிர்ந்தாள் மது.
சிவாவோ சாதாரணமாக உதட்டை பிதுக்கி... தோள்களை குலுக்கிவிட்டு கையிலிருந்த லாப் டாப்பில் மூழ்கிப்போனான்.


மதுமிதாவிற்கு தான் ஒரு மாதிரியாகிப்போனது.
பின்னே காரணமே இல்லாது கொந்தளித்துவிட்டு போனால் அவளால் எதை நினைக்க முடியும்?


"அண்ணா ஏன் இந்த மாதிரி...?" என அவள் போன திசையினை காட்ட,


"அது ஒரு அரை மெண்டல்.. கண்டுக்காம ஃப்ரீயா விடு!" என்று வேலையில் கவனமானான்.



நாட்களும் ஓடிக்கொண்டிருந்தது... ஆனால் மதுமிதா யார் என்பது பற்றி வீட்டவர்களிடம் அவன் கூறவே இல்லை.


மதுமிதாவும் அவனோடு பேசாததனால் அதன் பின் பேச்சே எடுக்கவில்லை.


ஆம் மற்றவர்கள் முன்பு சிறந்த தம்பதியினாராக அடையாளப்படுத்தி கொள்பவர்கள்... தனிமை என்று வரும் போது, எதிரி நாட்டு மன்னர்கள் போலவே நடந்து கொள்வார்கள்.


அதுவும் அன்று மீனாட்சி மதுவிடம் உங்களுக்குள் ஏதாவது பிரச்சினையா என்று வெளிப்படையாக கேட்டதன் பின்னர்.. தமக்குள் பேசி இப்படி ஒரு முடிவு எடுத்துக்கொண்டனர்.


லாவண்யா எப்போதும் போல் வந்து போய்கொண்டு தான் இருப்பாள்... அவள் வரும் நேரத்தில் கேஷவன் பார்வை மதுமிதாவை தீண்டி மீள்வதை அவளும் காண்பதுண்டு.


ஆனால் அவள் பார்வையில் எச்சரிக்கை இருப்பதில்லை. மாறாக என்ன நடந்தால் எனக்கென்ன என்ற அலட்சியம் தான் தெரியும்... அதை காணும் போதெல்லாம் கேஷவன் மனம் ஓலமிட்டாலும், அவனும் வெளியே காண்பிக்க மாட்டான்.


ஆனால் லாவண்யா நெருங்கும் போதெல்லாம் நாசுக்காக விலகிச்செல்வான். அதை பார்ப்பவள் வெளிய காட்டிக்கொள்ளவில்லை தான்... ஆனால் உள்ளுக்கும் நிம்மதி பரவுவதை அவளாலும் தடுக்க முடியவில்லை.


ஸ்ரீயிடம் ஒரு சில விளையாட்டு பொருட்களை கொடுத்துவிட்டு அறையினுள் துணிகளை மடித்துக்கொண்டிருந்தவள் உதடுகளோ...


"சரியான செவிடனா இருப்பான் போல... எத்தனை வாட்டி இந்த போனும் கத்தியே சாகப்போகுதோ!
அவன் தான் செவுடுன்னா.. இந்த சிவாண்ணாவும் அவனுக்கு மேல... பேச ஆரம்பிச்சிட்டா, உலகம் மறக்கிற அளவுக்கா ஃப்ரண்ட்ஸ்க்குள்ள பேசுவாங்க?" என முனுமுனுத்தவாறு இருக்க.. அலறிய செல்போன் ஓய்ந்ததில் சற்று புலம்பலை நிறுத்தியவளை புலம்ப வைப்பதைப்போல் மீண்டும் அலற ஆரம்பித்தது.


"ஆ......." என பற்களை கடித்து, கையிலிருந்த உடையினை தூக்கி வீசி தன் எரிச்சலை காண்பித்தாள்.


"இவனை......" என ரூம் கதவினை திறந்து எட்டிப்பார்த்தாள்.


சிவாவும், கேஷியும் படு சுவாரசியமாக பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது.


"என்னங்க..." என குரலினை குழைவாக கொண்டு வந்து அழைத்தவள்,


"உங்க போன் ரொம்ப நேரமா அடிச்சிட்டிருக்கு.... என்னன்னு வந்து கேக்கிறீங்களா?" என அவனிடம் கூறியவள்.. சிவாவை முறைத்து விட்டே உள்ளே சென்றாள்.


'நான் என்ன பண்ணிட்டேன்னு, அவன் போன் அடிச்சதுக்கு என்னை முறைக்கணும்?' என நினைத்தவனோ!


"மாப்பிள்ளை... நீ தங்கச்சிகிட்ட வம்பேதும் பண்ணலையே!" என்றான்.


"இல்லையே.... ஏன்டா?"


"இல்ல வரவேற்பு பலமா இருந்திச்சுல... அதான்... ஆனா ஏதோ சரியில்ல மப்பிள்ளை.., கருடபுராணத்தில ஏதோ ஒன்னா இருக்க போகுது... பார்த்துடா." என எச்சரிக்க...


"போடா இவனே...!" என அவன் மண்டைமேல் தட்டிவிட்டு சென்றவன், நினைவோ அன்றைய நாளினை நினைத்து புன்னகையாய் விரிந்தது.


அவன் உள்ளே வரும்போதும் செல்போன் சினுங்கியவாறு இருக்க.. யாரென பார்க்க சென்றவன் திரையில் தெரிந்த இலக்கத்தை கண்டு ஆன் செய்தது தான் தாமதம்....


"டேய் எரும...! நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா..? எத்தனை வாட்டிடா போன் போடுறது...? ஊர்ல இருந்து வந்து ஒரு மாதத்துக்கு மேலாகுது...
வந்த நாள்ல இருந்து நானும் நாளுக்கு நற்பது வாட்டி போன் போட்டுட்டே இருங்கேன்... நீ என்னடான்னா பெரிய புடிங்கி மாதிரி போன எடுக்கவே மாட்டேங்குற!


ஊர்ல இருந்து கிளம்புறப்போ என்னடா சொல்லிட்டு வந்தேன்..? இல்ல என்ன சொல்லிட்டு வந்தேன்றேன்.


ஊருக்கு போறேன்... ஊர்ல இருக்கிற உன்னோட ப்ராஞ்ச்ல எனக்கொரு வேலை போட்டு கொடுன்னு சொன்னப்போ... உனக்கில்லாத வேலையா? முதலாளி வேலை கூட உன்னோடது தான், எடுத்துக்கோன்னு பெரிய கர்ணன் போல சொன்ன...
இங்க வந்து பாத்தா... வாட்ச்மேன் வேலைக்கு கூட நீ சிபாரிசு பண்ணல... அவ்வளவு ஏன்...? என் சம்மந்தமா ஒரு வார்த்தை கூட பேசல நீ...


ஆஃபீஸ் போய் விசாரிச்சா.. அங்க இருக்கிற மேனேஜர் கழுவி கழுவி ஊத்தறாரு.
போன் பண்ணா சார் ரொம்ப பிஸி! அவங்களையும் போன் பண்ணி பாருங்கன்னு சொன்னா... சார் ரிசீவ் பண்றாரில்லன்னு சொல்லுறாங்க. தினமும் நீ பேசினியான்னு உன் ஆஃபீஸ்க்கு நடந்து நடந்தே என் ஷூ தேஞ்சு போச்சு" என மறுபக்கம் பேச வாய்ப்பு தராது திட்டி தீர்த்தான்.


எடுத்ததும் மும்மாரியாக பொழிந்து தள்ளியவனையே உடைகளை மடித்தவாறு கவனித்து கொண்டிருந்தவள்.♦


'விளங்கிடும்.....! வேலை கேக்கிற லட்சனத்த பாரு... இந்த மாதிரி வேல கேட்டா... பேப்பர் பொறுக்கிற வேலை கூட தரமாட்டாங்க.


வேலை கேக்கிறோமே... பொறுமையா கேப்போம்ன்னு தோணுதா..? கம்பனிக்கே இவன் தான் ஓனர் மாதிரி அதிகாரமா கேக்கிறான்..
இவனுக்கு நிஜமாவே தன்மையா பேச தெரியாதா? எல்லார் கூடவும் எரிஞ்சு விழுந்து தான் பேசுமா இந்த முண்டம்?' என தனக்குள் திட்டியவள் மீண்டும் அவன் பேச்சிற்கு காது கொடுக்க ஆரம்பித்தாள்.


"எரும.. நான் இங்க காட்டு கத்து கத்திட்டே இருக்கேன்... கேக்குறியா? இல்லையா?" என மீண்டும் ஆரம்பித்தவனுக்கு எதிர் திசையில் பேசியது காதினில் விழவில்லை போல.


"ஹலோ... ஹலோ..... கேக்குதாடா?" என்றவன்,
ஸ்பீகரை ஆன் செய்து.


"டேய் கேக்குதாடா...?"

"கேக்குதுடா...! நீ கழுவி கழுவி ஊத்தினது எல்லாம் நல்லாவே கேட்குது.


சாரி கேஷி! இங்க ஒரு பிரச்சினை... அது பின்னால ஓடினதனால எதை பத்தியுமே யோசிக்க முடியல...
அதை விடு...! உனக்கெதுக்கு என் ஆஃபீஸ்ல வேல? உனக்காக தான் அப்பா ஒரு ஆஃபீஸ் ஆரம்பிச்சு வைச்சிருக்காருல்ல.. அதை பார்க்க வேண்டியது தானே!"


"தேவையில்லாம பேசாதா..? உன்னால வேலை தரமுடியுமா? முடியாதா? அதை சொல்லு." என அழுத்தமாக கேட்டான்.


"சொன்னா கேக்கப்போறவனா நீ..? ஆனா ஒன்னு கேஷி... உன் கோபம் எல்லாத்துக்குமே நல்லதில்ல... அளவான கோபம் தான் ஆரோக்கியமானது. அந்த கோபத்துக்கு தான் மரியாதையுமே..
சும்மா எல்லார் மேலயும் எரிஞ்சு விழாம... அப்பாக்கிட்டயே நேர போய் உண்மை என்னன்னு கேளு....


எனக்கென்னமோ அப்பா மேல தப்பே இருக்காதோன்னு தோணுது" என்றான்.


"எப்பிடிடா உன்னால இந்த மாதிரி சொல்ல முடிஞ்சுது..?
நான் என்ன யாரோ பேச்சை கேட்டா சந்தேக படுறேன்.
இவருதான் நடந்த சம்பவத்துக்கெல்லாம் காரணம்ன்னு... ஆதாரபூர்வமா பார்த்து தானேடா நம்பினோம்.. நீயும் தானடா எல்லாத்தையும் பார்த்த, அப்பிடி பாத்துமா இந்த மாதிரி பேசுற?


பாவம்டா ஸ்ரீ அம்மா.. அவ சாகிறப்போ என்ன சொன்னா தெரியுமா?


என்னால உங்க அப்பாமேல கோபப்படாதீங்க... என்னோட வாழ்க்கையும் சரி.., அம்மா வாழ்க்கையும் சரி... இவ்ளோ தான்னு அந்த கடவுள் எழுதி வைச்சிட்டான்.
அதுக்காக இவரு மேல பழிய போட்டு ஒதுக்கி வைக்காதிங்க... என்ன இருந்தாலும் அவரு உங்கள பெத்தவரு...
இனிமே நாங்க உங்க வாழ்க்கையில இல்ல... நடந்ததை எல்லாம் மறந்துட்டு பழையபடி அப்பா கூட சந்தோஷமா இருங்கன்னு சொல்லிட்டு செத்துப்போனாடா! அவ மனசு இவருக்கு வருமா?"என குரலை உயர்த்தி கேட்டான்.



எதிர்புறம் சற்று நேரம் அமைதி நீடிக்க... அந்த அமைதியினை தன்னை நிதானப்படுத்த எடுத்துக்கொண்டவன்,


"என்னை விடு மச்சான்... நீ சொல்லு ஏதோ பிரச்சனைன்னு சொன்னியே! அது என்ன?"


"ஹான்....." என பெருமூச்சொன்றை வெளியேற்றியவன்,


"அதை ஏன் கேக்கிற கேஷி...?
நீ ஊர்ல இருந்து கிளம்பின அன்னைக்கு ஆரம்பிச்ச பிரச்சினைடா...
எங்ககூட ஒரு பொண்ணு இருந்தான்னு சொன்னேன்ல... அவளால வந்த பிரச்சினை!


என் பொண்டாட்டிகிட்ட எனக்கு யாருமில்லை.. நான் ஒரு அனாதைன்னு சொல்லித்தான்.. தங்க இடம் கேட்டிருக்கா.. இவளும் சரியா விசாரிக்காம வீட்டிலயே இடம் கொடுத்திட்டா..


ஆனா அன்னைக்கு தான் தெரிஞ்சிது.. அவ அனாதையே இல்லடா.. அவளுக்கு பின்னாடி பெரிய...." என அதன் பின் சொன்னவன் வார்த்தை எங்கே அவன் காதில் விழுந்தது..?
அவன் பேச்சிற்கு மேலாக.....


"பாப்பும்மா.... பாப்பும்மா..... அதெல்லாம் பிடிக்க கூடாது.... இங்கவாங்க.. இங்க வாங்க.." என அலறிக்கொண்டு ஓடிவரும் மதியின் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான்.


அவன் காலின் கீழ் நின்றிருந்த சின்னவள், அவன் செல்போனில் சார்ஜர் பின்னினை வாயில் வைத்து சப்புவதை கண்டு, பதறிப்போனவனும் பிளக்கிலிருந்த சார்ஜரினை பிடிங்கி எறிய...


பதட்டமாய் ஓடிவந்தவள்.. அவளை தூக்கி இறுக அணைத்து கொண்டு, சிறுது நேரம் தன் பதட்டத்தை போக்கினாள்.


"அறிவென்கிறது வேண்டாம்? சின்ன பிள்ளை இருக்கிற வீட்டில, இந்த மாதிரி தான் அலட்சியமா இருக்கிறதா? ஒன்னுக்கிடக்கா ஒன்னு ஆகிருந்தா என்னாயிருக்கும்?


போன்ல இருந்து சார்ஜரை கழட்டினா, அதை புடிங்கி போடுங்க.. இல்லன்னா அவ கைக்கு எட்டாத மாதிரி மேசை மேலயே வையுங்க.. அதை விட்டுட்டு, மக்கு மங்குனி மாதிரி தொங்க போடாதிங்க.." என கோபமாக கத்தியவள்,


"நீ வாடி தங்கம்.! நாம வெளிய போகலாம்.. உங்கப்பன் ஒரு லூசு" என்றவள் அவள் முகத்தை தோளோடு அணைத்தவாறு வெளியேறியவளையே பார்த்திருந்தவன்..


'இவளுக்கு இந்தளவுக்கு கோபம்லாம் வருமா..? இல்லன்னா இது தான் சந்தர்ப்பம்ன்னு திட்டி தீர்க்கிறாளோ!'


தூரத்தே எங்கேயோ "கேஷி.... டேய் கேஷவா.." என்ற குரல் கேட்பது போல் இருக்க, திரும்பித்திரும்பி பார்த்தவன் கையிலிருந்த போனை கண்டதும் தான் தன் நண்பனோடு உரையாடிக்கொண்டிருந்தது நினைவே வந்தது.


"ஸாரிடா... இங்க ஒரு பெருச்சாளி குறுக்க பூந்திடிச்சு"


அதை கேட்டு பெரிதாக நகைத்தவனோ..


"யாருக்குடா அவ்ளோ தைரியம்....? அசால்ட்டா உன்னையே லூசுன்னு சொல்லிட்டு போறாங்க... நீயும் சாதாரணமா பெருச்சாளின்னு சொல்லிட்டு அமைதியா இருக்க" என அந்த குரல் கேட்டதும் ஆர்வமாய் வினவ.


"அவ அப்பிடித்தான் நீ கண்டுக்காத"


"அவ அப்பிடித்தானா? யாரு நம்ம இலக்கியாவா?"


"இல்லை அது என் பொண்டாட்டி!" என்றான் எந்தவித தடுமாற்றமும் இல்லாது.


"என்னது பொண்டாட்டியா? இது எப்போ..?" என வெளிப்படையாகவே அதிர்சியாக,


"ம்ம்.. பொண்டாட்டியே தான்" என்றான் கேஷவன்.


"அது தான் எப்போ? பாட்டிக்கு உடம்பு முடியலன்னு பொய் சொல்லி கூப்பிட்டு, யாரோ ஒரு பொண்ணு கழுத்தில தாலி கட்ட வைச்சுட்டாங்களோ? என்னை ஏன்டா கூப்பிடல்ல?"


"அடிங்க.....! போன் போட்டதும்.. அப்பிடியே சார் தூக்கிடுவாரு" என கேஷி எரிச்சலாக.


"ஆமால்ல... சரி அதை விடு! எப்போ கல்யாணமாச்சு..? பொண்ணு யாரு?" என்றான்.


"ஊர்ல இருந்து வந்த அன்னைக்கே"


"கேஷி......! என்னடா சொல்லுற? அப்போ நான் சொன்னது போல, இது கட்டாய கல்யாணம் தானா?
ஆனா எனக்கு உன்னை நல்லா தெரியும் கேஷி.


யாரோட வற்புறுத்தலுக்கும் நீ படிஞ்சு போறவன் கிடையாதே! அதே சமயம் உனக்கு இஷ்டம் இல்லாம இதுக்கு ஒத்துக்கிட்டிருக்க மாட்ட.... அதையும் மீறி இதுக்கு ஒத்துக்கிட்டிருக்கேன்னா, ஏதோ ஒன்னு இருக்கு... உண்மைய சொல்லு என்ன காரணத்தினால இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட" என நண்பனின் குணம் அறிந்து வினவினான்.


எதிர்புறம் இருப்பவன் அறியாத வண்ணம் உதட்டினுள் நகைத்தவன்..
"அது பெரிய கதைடா...! ஆனா அதை இப்போ சொல்ல முடியாது... நேரம் வரப்போ நானே சொல்லுறேன்.


என் கதையை விடு... உன் சம்சாரமும், பாப்பாவும் எப்பிடி இருக்காங்க?" என்றான் எதிர் கேள்வியாக.


"அவங்களுக்கு என்ன? நல்லாத்தான் இருக்காங்க" என சுமூகமான பேச்சு வார்த்தைக்கு தாவினார்கள்.


"அப்புறம் என்னடா..! ரொம்ப நாளைக்கப்புறம் ஆஃபீஸ் வந்திருக்கேன். இன்னைக்காவது வேலைய பாக்கலாம்ன்னு இருக்கேன். அதனால போன வைச்சிடவா" என எதிர்புறமிருந்தவன் கேட்க.


"தாராளமா வைச்சுக்கோ! ஆனா மறந்திடாம இங்க இருக்கிற உன் ப்ராஞ்ச்க்கு போன் போட்டு என் வேலை மேட்டர் பத்தி பேசிடு.., இல்லை ஊருக்கு வந்து சாவடிப்பேன்" என மிரட்டினான்.


"ரொம்ப நல்லாருக்குடா...! இந்த மாதிரியே எல்லாரும் மிரட்டி வேலை கேட்டா... என்னை மாதிரி அப்பாவி முதலாளிங்க நிலை பரிதாபத்துக்கிடமாக வேண்டியது தான்" என கழிவிரக்கம் கொண்டவனிடம்,


"நீ யாருன்னு எனக்கு தெரியும்... நான் யாருன்னு உனக்கு தெரியும். அதனால ரொம்ப நல்லவனாட்டம் நடிக்காம, போன் போட்டு சொல்லிடு! நாளைக்கு நான் ஆஃபீஸ் போயே ஆகணும்" என்றுவிட்டு செல்லினை அணைத்துக் கொண்டான்.






குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியே வந்தவளோ, சிவாவையும் கண்டுகொள்ளாது நேராக கிச்சனுக்குள் சென்றாள்.


அங்கு வடிவழகியும், மீனாட்சியும் சுவாரசியமாக பேசிக்கொண்டு சமையலில் ஈடுபட்டிருப்பதை கண்டவள்,


"என்ன மாமியாரும் மருமகளும் ஐநா சபை பத்தி பேசிட்டிருக்கிங்க போல" கேலிசெய்ய,


"வாடியம்மா...! எங்க உன்னை தான் காணலன்னு தேடிட்டிருந்தேன்... இந்தா.. இந்த மஞ்சளையும், பூண்டையும் அம்மியில விழுதுபட அரைச்சு தா!" என்றார் வடிவழகி.


"என்னது நானா..? அதுவும் அம்மியில? ஏன் மிக்ஸி எங்க போயிடிச்சு?"


"மிக்ஸி எங்கயும் போல..., அதில அரைச்சா குளம்பு நல்லா இருக்காது. அம்மியில அரைச்சாத்தான், உன் புருஷன் ஆசையா நாலு வாய் அதிகமா சாப்பிடுவான்."


"அதுக்காக... நானா அரைக்கணும்? என்னால முடியாது. நான் ஒன்னும் வேலைக்காரி இல்ல... இந்த வீட்டு மருமகள்" என எதிர்த்து பேச,


"ஆமாடி அம்மா....! நீ மட்டும் தான் மருமக... நாங்க எல்லாம் வேலைக்காரி பாரு... உனக்கு முன்னாடியே நாங்களும் இங்க மருமக தான்... ஏன் நாங்க அடுப்பில கருகலையா?" அவரும் அவளை அரைக்க வைக்காமல் விடமாட்டேன் என்பதாக பேசினார்.


"ஆமா ஏற்கனவே கருகின மாதிரி தானே கிடக்கு... புதுசா வேற கருகணுமா?" என மது முனுமுனுக்க,


"என்னடி அங்க முனுமுனுப்பு, அரைச்சு தரப்போறியா இல்லையா?" என்றார் குரலை உயர்த்தி.


"பாப்புவ வைச்சிட்டு எப்பிடி அரைக்க முடியும்?" என அவள் மழுப்ப.


"உன் புருஷன் ஆஃபீஸ்க்கு ஒன்னும் போகல.. அவன்கிட்ட பாப்பாவ குடுத்திட்டு, வந்து அரைச்சுக்குடு" என்றார்.


"என்ன விளையாடுறீங்களா.?" என மது கோபமாக.


"ஆமாடி எனக்கு விளையாடுற வயசு பாரு! உன்கூட விளையாடிட்டு இருக்க" என வடிவழகியும் கோபமானார்.


எங்கே இதற்குமேல் வாயாடினால் பிரச்சினை வேறு மாதிரியாக போகுமென உணர்ந்தவள்,


"அதானே பாத்தேன்... என்கிட்ட விளையாடுற வேலை எல்லாம் வைச்சுக்காதீங்க" என அவர் குரல் எழும்பியதில் பேச்சினை மாத்தியவள் வாசலை நோக்கி நகர.


"இப்போ எங்க போற?"


"ஹான்.... பாப்பாவையும் அம்மியில போட்டு அரைச்சு தந்தா.. சாப்பிடுவீங்களா? இல்லல்ல... அதான் அவளை அப்பாகிட்ட குடுத்திட்டு வர போறேன்" என முனுமுனுத்து சென்றாள்.


இருவர் வாதத்தினையும் பார்த்து தலையிலடித்து சிரித்துக்கொண்டிருந்த மீனாட்சிக்கு, இந்த ஒரு மாதகாலம் இது எல்லாம் பழகிப்போயிருந்தது.


ஆம் மது மற்றவர்களோடு எப்படியோ அப்படித்தான் வடிவழகியோடும் வாயாடுவாள்.
பெரியவருக்கும் அது பிடிக்கும் தான்... ஆனால் அவள் முன்பு தன் ரசனையை வெளிக்காட்டுவதில்லை.
அதற்கு காரணமும் உண்டு.


அந்த வீட்டில் வடிவழகியை பெரியவள் என்ற ரீதியில் யாருமே எதிர்த்து ஓர் வார்த்தை பேசுவதில்லை.. அது அவர் வயதிற்கும், உறவிற்கும் அவர்கள் கொடுக்கும் மரியாதை.


ஆனால் மது அவ்வாறு இல்லை... வந்த முதல் நாள் மற்றவர்கள் போல அடக்கமாகத்தான் இருந்தாள். மறு நாளே வடிவழகியின் அதிகார தோரணையும்.. இவர் பேச்சிற்கு மற்றவர்கள் பயந்து நடுங்குவதையும் கண்டவள்,


'இந்த கிழவிக்கு எதுக்கு இப்பிடி பயப்படுறாங்க?' என நினைத்தவளால் பயப்படுவது போல் நடிக்க கூட முடியவில்லை.


மறுநாளே வடிவழகி மதுவிடம் அதிகார தோரணையோடு சமையல் செய்யுமாறு கூற,
சற்றும் பயப்படாமல்,


"என்ன மிரட்டுற கிழவி...? எதா இருந்தாலும் அன்பா சொன்னா மது கேப்பா!
இந்த மாதிரி அதிகாரம் பண்ணா... சாப்பாட்டில உப்பள்ளி கொட்டி யாரும் சாப்பிடாம பண்ணிடுவேன்" என்று நேருக்கு நேர் கூறிய மதுவின் பேச்சில் வடிவழகி அதிர்ந்தாரோ இல்லையே...! மீனாட்சி அதிர்ந்தே போனாள்.


பின்னே யாரும் இதுவரை பெரியவளை எதிர்த்து பேசாத போது... நேற்று வந்தவள் மிரட்டினால், யார் தான் அதிர்சியாக மாட்டார்கள்.


மதுவிடம் எதுவோ கூற போன மீனாட்சி கையினை அழுத்தி பேசவிடாது தடுத்தவர்.


"சரி தாயே..! அதிகாரமா பேசினது தப்புத்தான்.. இனி இந்த மாதிரி பேசமாட்டேன்..., ஆனா இன்னைக்கு நீ தான் சமைக்கணும்ன்னு உன் மாமியாரு ஆசை படுறா..., சமைசிடும்மா" என்றார்.


"ஹான்... இந்த மாதிரி அன்பா சொன்னா, செய்திட்டு போகப்போறேன்" என்றவள் சமைக்கும் அழகில் நிஜத்தில் மெய் சிலுர்த்து தான் போயினர் இரு பெண்களும்.


உண்மையில் மது அவ்வாறு பேசியதில் அவருக்கு வருத்தம் என்பதில்லை. அவருக்கும் இது புது அனுபவமே! பின்னே இத்தனை ஆண்டுகள் அடக்கியே பழக்கப்பட்டவரை.. அடக்குவது போல ஒருத்தி வந்ததும் அவருக்கு தன் மாமியார் தானன நினைவில் வந்தார்.


அதுவுமில்லாது மது பேசியவிதம் அவள் மனசளவில் வஞ்சம் வைத்துக்கொண்டு பேசியது போல் அவர் அனுபவத்திற்கு தெரியவில்லை.


அவளை பார்த்த நொடியே, அவள் விளையாட்டு பிள்ளை என்பதை இனங்கண்டு கொண்டதனால் ,அவள் அதட்டல்களை பெரிது படுத்துவதில்லை. அதே சமயம் அவளுக்கு தான் தாழ்ந்தவளும் இல்லை என்பதுபோல் ஏட்டிக்கு போட்டி போடுபவரால், அவளில்லாது எந்த வேலையும் நகராது என்ற கட்டத்திற்கு சென்றது.


பின்னே எப்போதும் மல்லுக்கட்டிக்கொண்டு, வேலை பார்க்கும் போது நேரம் போவதோடு, அவரும் சிறுபிள்ளையாய் உணரும் தருணம் அவளுடன் இருக்கும் போது தானே! அதனாலயே மதுவை வேண்டுமென்று தானாகவே சென்று வம்பிழுப்பார் வடிவழகி.


இன்றும் அதே போல் வம்பிழுத்தவர்கள் இடையே புகாது சிரித்துக் கொண்டிருந்தவளிடம்...


"நீ எதுக்கு இப்போ சிரிக்கிற?" என கண்டிப்பது போல் கேட்டவர் உதட்டிலும் புன்னகையின் தடம் தெரிய... எதுவுமில்லை என்றது போல் தலையசைத்தவள் வேலையினில் கவனத்தை திருப்பினாள்.



ஒரு புறம் விளையாட்டாகவும்.., ஒரு புறம் இறுக்கமாகவுமே அவள் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது.


கேஷவன் தன் நண்பனோடு பேசிய மறு நாளே, அவனது அலுவலகத்தில் வேலையும் கிடைத்திருந்தது.
முன்னர் வேலை செய்த கம்பெனியில் மேனேஜராக இருந்தான்.


இங்கு அந்த பதவி அவனுக்கு கிடைக்கவில்லை... ஏற்கனவே அனுபவம் வாய்ந்த மேனேஜர் இருந்ததனால் அவருக்கு கீழ் பதவியே கிடைத்தது.


அதில் கேஷவனுக்கு வருத்தம் என்பதில்லை.. ஏதோ ஓர் வேலை செய்து, தன்னை நம்பி இருக்கும் இருவருக்கும் சோறு போடவேண்டும்.. தன் சோற்றில் ஒரு பருக்கை கூட தந்தை பெயர் சொல்லக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.


வேலைக்கு சென்று முதல் மாத ஊதியத்தை பெற்றுக்கொண்டவன், அதை அப்படியே மீனாட்சி கையில் கொடுத்து,
"இதை செலவுக்கு வைச்சுக்கங்கம்மா!" என்க.


"இது எதுக்குடா! உனக்கு வேற செலவு இருக்கும்... நீயே வைச்சுக்கிட்டு, உன் பொண்டாட்டிக்கும் பொண்ணுக்கும் ஏதாவது வாங்கி கொடு" என்றார்.


இல்லை என்பதாக தலை அசைத்தவன்,


"நான் அவங்களுக்கு வாங்கி தருவேன்ம்மா.. என்னை நம்பி வந்தவங்கள எனக்கு எப்பிடி பாத்துக்கணும்ன்னு தெரியும்.. இது எங்க மூணு பேரோட சாப்பாடு, அப்புறம் மத்த செலவுக்கான பணம்... அதனால வேண்டாம்ன்னு சொல்லாம வாங்கிக்கங்க" என்றான்.


"என்னடா இதெல்லாம்? எதுக்கு என் குடும்பம் உன் குடும்பம்ன்னு பிரிச்சு பேசுற? உன் சாப்பாட்டுக்கெல்லாம் கணக்கு வைச்சிட்டு, சாப்பாடு போட இது என்ன ஹோட்டலா? நீ எங்க பையன்டா! உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் நாங்க பண்ணாம வேற யாருடா பண்ணுவாங்க?" என மகன் பேச்சை தாங்க முடியாது மீனாட்சி கண்கலங்கியவராய் கேட்க.


" புரியுதும்மா... உன் மனசு கஷ்டப்படுத்துறது என் நோக்கமில்லை. ஆனா உங்க புருஷன் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு கொண்டுவந்து தர பணத்தில என் குடும்பத்து பசிய ஆத்தணும்ன்னு இல்ல... என் குடும்பத்தை நான் பாத்துக்கிறேன்" என்றான்.


"கேஷி...!" என மீதியை பேச வார்த்தை வராது மீனாட்சி திணறுவதை கண்ட வடிவழகி.


"கேஷவா... நீ பண்றது எதுவும் சரியா படலடா! அது என்னடா உங்க புருஷன்....? அவன் உனக்கு அப்பன்.. அவன் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு கொண்டு வரது உனக்காகவும், உன் தங்கச்சிக்காகவும் தான்... அப்பிடியிருக்கிறப்போ, பெரிய மனுஷன் மாதிரி பேசிட்டிருக்க,


முதல்ல மீனாட்சிகிட்ட குடுத்த பணத்தை வாங்கு" என அதட்டினார்.


"என்னை மன்னிச்சிடுங்க பாட்டி! நீங்க சொன்னத இதுவரைக்கும் நான் தட்டினதில்லை... ஆனா இது என் கவுரவ பிரச்சினை..
யாரை நம்பியும் நான் இல்லை...


உங்களால இந்த பணத்தை வாங்கிக்க முடியலன்னா சொல்லுங்க. இப்பவே என் குடும்பத்தை அழைச்சிட்டு வெளிய போயிடுறேன்" என்றவன் உறுதியினை கண்டு வடிவழகியும் அதிர்ந்து தான் போனார்.
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,934
சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️ஆத்தி கேசவ் விசயத்துல நான் நினைச்சது சரியா இருக்கும்போல அவனோட அப்பா தான் ஏதோ பொண்ணுக்கு துரோகம் செய்திருப்பார் போல அதுக்கு கேசவ் பரிகாரம் செய்யுறானோ 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔ஆத்தாடி இந்த மது வாய் எட்டூருக்கு நீளுதே, மாமியாருக்கு மாமியாராவே அரட்டுறா 😁😁😁😁
 

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️ஆத்தி கேசவ் விசயத்துல நான் நினைச்சது சரியா இருக்கும்போல அவனோட அப்பா தான் ஏதோ பொண்ணுக்கு துரோகம் செய்திருப்பார் போல அதுக்கு கேசவ் பரிகாரம் செய்யுறானோ 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔ஆத்தாடி இந்த மது வாய் எட்டூருக்கு நீளுதே, மாமியாருக்கு மாமியாராவே அரட்டுறா 😁😁😁😁
ஆமா சகி... அவ ரொம் குறுப்பில்ல... அதான் சேட்டை பொண்ணு.... எல்லாம் நான் தான் பயிற்சி தந்தேன்
 

Ramya(minion)

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
405
மது கேர்ள் கலக்கறடீ செல்லம்.வடிவழகி மதுகாம்போ ஸ்வீட்டு😅😅❣️
 
Top