• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

10. திகட்டாத தீ நீயே!

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
ன் தான் அந்த கடவுளுக்கு இந்த ஓர வஞ்சனையோ... கஷ்டத்தை தவிர எதையுமே அவளுக்கென்று நிரந்தரமாக தருவதில்லை.

பெற்றவன் முகமே அவள் அறிந்ததில்லை.. பெற்றவள் அவளது எட்டாவது வயதில் அவளை விட்டு சென்றுவிட்டாள்... கூடவே அவளது சந்தோஷங்களும்.. இப்போது இவன்.. இவனது பகுதியும் இன்றோடு காணாமல் போகப்போகிறது.

பாவம் எதையெல்லாம் தவிர்க்க நினைக்கிறாளோ.. அவை எல்லாம் வலுகட்டாயமாக அவளுக்கு திணிக்கப்பட்டுக் காெண்டிருக்கின்றது.

மௌனமாக அந்த அறையினை விட்டு வெளியே வந்தவள்.. "சமாதானம் செய்திட்டேன் அத்த.. இனி பயமில்லை.." என்று கூறி தன் புத்தகங்களை எடுத்து புக் செல்ப்பில் அடுக்க..

"ஏன்ம்மா அதை அங்க அடுக்கிற..? இன்னைக்கு தான் லீவ்.. நாளையில இருந்து திரும்ப படிக்கணும்." என்றவரை பார்த்து அர்த்தமாக சிரித்தவள்..

"ஐயாவுக்கு இப்பிடி இருந்தா பிடிக்காதும்மா.. பார்த்தா பொறுப்பில்லன்னு திட்டுவாரு... படிக்கிறப்போ எடுத்துக்கலாம்." என்ற நேரம்...

"நான் உள்ள வரலாமா..?" என்ற குரல் கேட்டு திரும்பியவர்கள்... அங்கு வேல்முருகனை கண்டதும்...

"இது என்ன கேள்வி சம்மந்தி..." என்றவாறு வாசல்வரை சென்று அழைக்க போனவர் பின்னயே ஓடிச்சென்ற தாமிராவையே வைத்த கண் வாங்காது நோக்கியவர் புவனாவின் பேச்சினை கண்டு கொள்ளவே இல்லை.

என்ன தான் மகள் என்றாலும்.. வடிவுக்கரசியின் நிழலில் அவளை வளர்த்ததனால்.. கண்டதும் அணைத்துக்கொள்ளும் உறவு அவர்களது இல்லை.. விழிகளாலே நலத்தை வினவிக்கொள்ளும் பாசம் சூழலில் இருந்ததால்... தாமிராவை ஏக்கம் நிறைந்த விழிகளாலே ஆராய்ந்தார்.

"வாங்க பெரியைய்யா...." என வாய் நிறைய வரவேற்றவள் முகத்தினில் அத்தனை ஆனந்தம்..
அவளை தோளோடு அணைத்து விடுவித்தவரின் புது அணைப்பில் சிலிர்த்தவளுக்கு, கண்ணீர் தான் வந்ததே தவிர மேலே பேச எழவில்லை.

அவசரமாக கண்களை துடைத்து கொண்டவள் நிலை உணர்ந்த புவனாவோ..

"என்ன சம்மந்தி இங்க நான் ஒருத்தி கேள்வி கேட்டுட்டிருக்கனே எனக்கு பதில் சொல்ல மாட்டிங்களா..?" என்க..

"சொல்லலாமே... ஆனா முதல்ல என் பொண்ணை கவனிச்சிட்டு உங்ககிட்ட வரலாம்ன்னு இருந்தேன். ஆமா என்ன கேட்டிங்க..?" என்றவர் கேள்வியில் பொய்யாய் ஆச்சரியம் காட்டி வாயில் கை வைத்தவர்..

"பத்து மணிக்கு தானே வரீங்கன்னு சொன்னிங்க... என்ன அதுக்குள்ள வந்திட்டிங்க..?" என்றதும் தான் மணிக்கட்டை திரும்பி பார்த்தார்..

"அட அதுக்குள்ள ஒன்பது அரை ஆகிடிச்சா....? நான் ஏழு மணிக்கே கிளம்பிட்டேன்.. வண்டி தான் ஸ்லோ போல.." என்று சிரித்தவருடன் இருவரும் இணைந்து கொண்டனர்.

"ரொம்ப ரொம்ப நன்றிம்மா.... என் பொண்ணு இவ்ளோ சந்தோஷமா இருந்து பார்த்ததில்லை.. கல்யாணத்தில நடந்த குழறுபடி எதையும் மனசில வைச்சுக்காம.. என் பொண்ண எந்த குறையுமில்லாம பார்த்துக்கிறீங்க.." என்க.

"உங்களுக்கு அவ பொண்ணு மட்டும் தான் சம்மந்தி... எங்களுக்கு அவ மகள் மட்டுமில்லை.. மருமக.. இந்த வீட்டோட இளவரசி.." என்றதும்.. வேல்முருகன் முகமோ மாறிப்போவதை உணர்ந்தவர்..

"அந்த பேச்சை விட்டுட்டு.. உள்ள வாங்க.. வாசல்லயே நின்னு பொண்ண கூட்டிட்டு ஓடிப்போறதா உத்தேசமா...?" என்றவாறு வழிவிட்டு நிற்க..
வேல்முருகனை அழைத்து சென்று சோபாபில் அமர்த்தியவள்..

"நீங்க பேசிட்டிருங்கத்தை.. நான் குடிக்க எடுத்திட்டு வரேன்.." என நகரப்போனவளை...

"நீ எங்க போற...?இப்பிடி உக்காரு... நான் எடுத்திட்டு வரேன்.." என்று அவளை இழுத்து வந்து அவரருகில் அமர்த்திவிட்டு, அவர்கள் பேசுவதற்கு தனிமை தந்து நகர்ந்து சென்றார்.

போகும் அவரையே பார்த்திருந்தவள், அவர் கிச்சனுள் மறைந்ததும், இருக்கையிலிருந்து எழுந்து கொண்டாள் தாமிரா..

இத்தனை ஆண்டுகள் அவர் முன் கைகட்டி நின்றவளுக்கு.. இன்று அவருக்கு சரிக்கு சமமாக அமர மனம் இடங்கொடவில்லை..

அவர் அமைத்து தந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டு அவருக்கு கெத்து காட்டிடமுடியுமா...? நாளையிலிருந்து பழையபடி அவள் வாழ்க்கை அவர்களுடன் தானே..

"வீட்டில எல்லாரும் நல்லா இருக்காங்களா ஐயா...? சின்னம்மா என்ன செய்றாங்க..? வீட்டுக்கு வந்திட்டாக்களா...?" என்றாள்.

"அவங்களுக்கு என்னம்மா.... எல்லாரும் நல்லா தான் இருக்காங்க.. என்ன அம்மா தான் எப்போ பாரு சுவாதியை திட்டி தீர்த்திட்டிருக்காங்க... கூடவே என்னையும்.. அவங்க குணம் தான் உனக்கு தெரியுமே..." என்றவர்..

"நீ ஏன் எந்திரிச்சிட்ட... வா வந்து உக்காரு." என்றார்.

"இல்லையா.. நான் இங்கேயே நிக்கிறேன்.." என்றவளை செல்லமாக முறைத்தவர்..
"இப்போ நான் தான் உன்முன்னாடி நிக்க வேண்டிய இடத்தில இருக்கேன்.. இளவரசியம்மா நிக்கிறப்போ, நான் உக்காந்தா நல்லாவா இருக்கும்...." என்று எழுந்து கொள்ள..

"என்னையா நீங்க.." என ஓடிப்போனவள் கையினை பற்றி அருகே இழுத்து அமர்த்தியவர்..

"இந்த மாதிரி யாரு கொடுமையும் இல்லாம சந்தோஷமா இருக்கணும்ன்னு எத்தனை சாமிய வேண்டிருப்பேன் தெரியுமா..? நீ என்னடான்னா இன்னமும் பழச நினைச்சிட்டு...
சரி சொல்லு... நீ நல்லா இருக்கல்ல...?" என்றார் அக்கறையாய்..

ம்ம்.... என தலையசைத்தவள்..
"ஆனா அன்னைக்கு நீங்க அத்தனை பேரு முன்னாடி.. அந்த மாதிரி பொய் சொல்லிருக்க கூடாது ஐயா... உங்களுக்கு கெட்ட பெயர் தந்துதான் நான் சந்தோஷமா இருக்கணுமா..?" என அவள் சோகமாக.

"இதில என்ன கெட்ட பெயர்..? நீ என் மகள்ன்னு சொல்லிக்கிறது தான் எனக்கு பெருமை.. அதோட நான் என்ன பொய்யா சொன்னேன்... நீ என் மகள் தானே...!" என்றவரை அவர் புரியாது நோக்க..

அதை பார்த்து பெரிதாக நகைத்தவர்.. 'சரி சொல்லு... உன்னையும் சுவாதியையும் எப்பவாச்சும் நான் வித்தியாசமா பார்த்திருக்கேனா...?" என்றார்.

இல்லை என்பதாக அவள் தலையசைக்க..

"பிறகு என்ன..? என் சூழ்நிலை நேரடியா உன்கிட்டை அன்பு காட்ட முடியலையே தவிர... சுவாதி எப்படியோ உன்னையும் நான் பெத்த பொண்ணா தான் பார்க்கிறேன். உன் வாழ்க்கைக்காக நான் சொன்ன பொய்யை உண்மையாக்கக்கூட நான் தயார் தான்" என்றவர் வாயில் கை வைத்து அடைத்தவள் வேண்டாம் என்பதாக தலையசைத்தாள்.

இன்னும் சில நிமிடங்களில் அந்த வாழ்க்கையே இல்லை என்றாகிவிடப்போகிறது.. அதற்கு எதற்கு இவ்வளவு பெரிய வார்த்தை..? தன்மேல் இருக்கும் அவர் அன்பை கண்டு மீண்டும் கண் கலங்கியவள்.

"உங்ககூட யாருமே வரலையா..?" என்றவளுக்கு பதில் என்னவென தெரிந்தும் பேச்சினை மாற்ற கேட்டாள்.

வலி நிறைந்த புன்னகையை சிந்தியவர்..
"உனக்குத்தான் தெரியுமேடா... கண்டிப்பா ஒரு நாள் எல்லாரும் உன்னை தேடி வருவாங்கடா... அப்போ உன்னோட சந்தோஷம் இதை விட ரெண்டுமடங்கு அதிகமாகும்...

ஆமா எங்க உன் புருஷன்... ரொம்ப நேரமாச்சு இன்னமும் காணல..?" அவரும் பேச்சை மாற்றினார்.

"சின்ன வேலையா இருக்காரு வந்திடுவாரு.." என்று அவள் வாயினை மூடவில்லை..

"வாங்க மாமா...." என வாய்நிறைய பல்லாக வரவேற்றவாறு வந்து எதிரே அமர்ந்தவன்..

"இப்போ கொஞ்சம் முன்னாடி தான் அம்மா சொன்னாங்க.. நீங்க வருவீங்கன்னு... வீட்டில எல்லாரும் சரியாகிட்டாங்களா...? நாங்க வந்தா எதுவும் பிரச்சனை பண்ண மாட்டாங்களே..."

"ச்சே.... ச்சே.. அதெல்லாம் ஒன்னுமில்ல... அப்பவே எல்லாம் சரியாகிடிச்சு.. நல்ல நாளுக்காகத்தான் காத்திருந்தோம்..." என்றார்.

அதன் பின் காஃபியோடு வந்த புவனாவின் பின்னே வந்த யோகலிங்கமும் அவரை வரவேற்று சிறுது நேரம் பேசியவர்கள். பின் இருவரையும் மறு வீடு அனுப்பி வைத்தனர்.

வரும் பாதை எங்கும் அவள் கவனமில்லை... அடுத்து நிகழப்போகும் நிகழ்வை எண்ணி திகிலாகவே இருந்தது.
இன்றிலிருந்து ஆத்விக் தன்னுடைய வாழ்க்கையில் இல்லை எனும்போது கவலை தான்... அதை விட பெரும் கவலை... வீட்டுக்குப் போனால் வடிவுக்கரசி தாண்டவம் ஆடப்போகிறாள் என்பது.

வடிவுக்கரசியின் கோபம் அவளுக்கு பழக்கப்பட்ட ஒன்று... சகித்தும் கொள்வாள்... ஆனால் ஆத்விக்...?

'அனாதைக்கு இந்த சடங்கெல்லாம் தேவையான்னு அப்பிடியே விட்டிருக்கலாம்.. இப்போ தேவையில்லாம பிரச்சினை ஆகப்போகுது.. இவன் மாமாகிட்டையே அந்த கத்து கத்துவான்... இவங்ககிட்ட சும்மா இருப்பானா...? கத்திட்டு இவன் போயிடுவான் அப்புறம் என் நிலமை...?'

விழியிரண்டும் பிதுங்க சாலையினை பார்த்தவாறு வந்தவள்... கிராமத்தில் தம் வீட்டின் சாலையில் கார் நுழையவும் இதயமோ தாறுமாறாக துடித்தது.

வீட்டின் கேட்டில் நின்ற காரை தொடர்ந்து வந்த வேல்முருகன்.. தன் பைக்கை அங்கேயே நிறுத்திவிட்டு... அவர்களை உள்ளே அழைத்தார்.

கால்கள் பின்ன தயங்கி நின்றவளை..
"என்ன தயக்கம்... இப்பவே தயங்கினா எப்பிடி...? காலம் முழுங்க இங்கேயே இருக்க போற.. தைரியமா வா.." என அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறி. அவள் கையினை பற்றி அழைத்து சென்றான்.

யாருமே அவளை வா என்று வரவேற்கவில்லை. கார் சத்தம் கேட்டதும் வாசலுக்கு வந்து நின்ற இரு பெண்களில் வடிவுக்கரசியின் விழிகள் பொறாமையினை வெளிப்படுத்த.. அதை எதையும் பெரிதாக அலட்டிக்கொள்ளாது செல்போனினை நோண்டியவாறு நின்றவளை திரும்பி பார்த்த வடிவுக்கரசி..

"நல்லா பாரு... உன்னோட வாழ்க்கையை வாழ்ந்திட்டு.. எப்பிடி பவுசு காட்டிட்டு வரான்னு.." என தோள்களால் இடித்து அவளது கவனத்தை தாமிரா புறம் திருப்பிய வடிவுக்கரசியை எரிச்சலாக நோக்கியவள்..

"இருந்துட்டு போகட்டும் விட்டு தொலை பாட்டி...! இன்னும் எத்தனை நாளுக்கு தான் வெந்தே சாகப்போற..? இதைவிட பெயரும் புகழோடயும் உன் பேத்தி வாழப்போறா.." என மீண்டும் செல்லை நோண்ட..

"உன்னைல்லாம்..." என தலையில் அடித்து கொண்டவர்.. தாமிராவை இழக்கமாக பார்த்து உதடு சுழித்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.

போகும் அவரையே பீதியோடு பார்த்தவாறு நகராது நின்றவளை "வா.." என ஆத்விக் அழைக்க.. அப்பாவியாய் வேல்முருகனை நோக்கினாள் தாமிரா..

இதுவரை அந்த வீட்டு படியில் கூட கால் வைக்க விட்டதில்லை வடிவுக்கரசி... இன்று மாத்திரம் விட்டுவிடுவாளா..? ஊரை கூட்டிட மாட்டாள்..?

"இவரை அழைச்சிட்டு போங்கையா... நான் என் குடிசையை பார்த்திட்டு வரேன்.." என்றவள் தயக்கம் புரிந்து போனவர்..

"நான் தான் இருக்கேன்ல..யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க, நீ வா...." என ஆத்விக் பற்றியிருந்த கையினை தான் பற்றி வலுகட்டாயமாக அழைத்து சென்று உள்ளே அமரவைத்தார். கூடவே ஆத்விக்கும் எதிர் இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டான்.

அவர் சொன்னதைப்போல் யாரும் எதுவும் கூறவில்லை தான்... ஆனால் உள்ளுக்குள் பதட்டமாக.. கையிரண்டையும் பிசைந்து கொண்டிருந்தாள்.

"ஏய்.... தாமிரா வந்திட்டியா....!!" என ஆர்வமாய் கேட்டவாறு வந்து அவள் அருகில் அமர்ந்த பார்த்தீபன்..

"நீ இன்னைக்கு வரேன்னு நேற்றே அப்பா சொல்லிட்டாரு... இவ்ளோ நேரம் உன்னை எதிர்பார்த்து வாசல்ல தான் நின்னேன்... சின்ன வேலையா உள்ள போயிட்டு வரதுக்குள்ள நீ வந்திட்ட.." என பல ஆண்டுகளாக அவளை காணாது தவிர்த்தவன் போல் பேசியவன்..

"சரி நீ சொல்லு... நல்லா இருக்கியா..?" என்றான் உரிமையாய்.

இந்த பதட்டமான நிலையில் அவளால் என்ன சொல்லிட முடியும்..? ம்ம்... என வெறுமனமே தலையினை அசைத்தாள்.

அவளது தயக்கத்தை தவறாக நினைத்தவனோ...
"ஏன் தாமிரா.... எதாவது பிரச்சனையா...? ஏன் ஒரு மாதிரியா இருக்க..?" கேள்வியுடனே அவள் கையினை பற்றி அக்கறையுடன் கேட்டவன்...

"ஏன் மாப்பிள்ளை.. ஏன் தாமிரா ஒரு மாதிரியா இருக்கா...? உங்களுக்குள்ள எதாவது பிரச்சனையா...?" என அவன்புறம் பார்வையினை நகர்றியவனை ஒற்றை புருவ உயர்வில் கேள்வியாக நோக்கியவனுக்கு, பார்த்தீபன் கேள்விக்கு ஏனோ பதில் சொல்ல தோன்றவில்லை...
மாறாக தாமிரா கையினை பற்றியிருந்தவன் கரங்களிலேயே அவன் பார்வை கேள்வியாய் பதிந்தது.

வரும்போது இயல்பாக இருந்தவனது முகம் இப்போது இறுகியிருப்பதை கண்டு... அவனது பார்வை பதிந்த இடத்தை ஆராய்ந்தார் வேல்முருகன்.

அவருக்கும் மகனது செயல் நெருடலாகிப்போக... மருமகனுக்கு முன் அவனை கண்டிக்க முடியாதவர்.

"பார்த்தீ.... பாட்டியை குடிக்க எதாவது எடுத்திட்டு வரசொல்லு... அப்படியே மதிய சமையலுக்கும் ரெடி பண்ண சொல்லு" என்றார்.

"ஏப்பா என்னை மட்டுமே வேலை வாங்குறீங்க.. பாரு தாமிரா.. நீ இல்லன்னு என்னை எப்படி வறுத்தெடுக்கிறாங்கன்னு.." என அவளிடம் செல்லம் கொஞ்சியவனை ஓங்கி ஒன்று வைத்தால் என்னவென தோன்றிய உணர்வுகளை அடக்க முஷ்டியை இறுக்கி அடக்கியவன்.

"குடிக்க தண்ணி கிடைக்குமா மாமா..." என்றான் அதே இறுகிய முகத்துடன்.

"போடா..... போய் எடுத்திட்டு வா...!" என்றார் பற்களை அழுத்த கடித்தபடி.

"வீட்டில ஒருத்திய வைச்சிட்டு, எடுபிடி வேலைக்கெல்லாம் என்னை அனுப்புங்க.." என சலித்தவாறு எழுந்து சென்றவனையே பார்த்திருந்தவன்.. அவன் திரும்புவதற்குள் அவன் இருந்த இடத்தில் அவளை ஒட்டியே அமர்ந்து கொண்டான்.

வேல்முருகனுக்கு அவனது செயல் பார்ப்பதற்கு சிறுபிள்ளை தனமாக தெரிந்தாலும்.. தனக்கானவளை அவன் யாரும் நெருங்கக்கூடாதென நினைப்பது அப்பட்டமாகவே தெரிந்தது.

ஏனோ இதுவரை இருந்த அழுத்தம் அற்றுப்போனவராய் அவன் அறியாது மென்னகை ஒன்றினை உதிர்த்தார்.

அதே நேரம் கையில் ஜூஸ் கிளாஸுடன் வந்த வடிவுக்கரசி..

"எடுத்துக்கோங்க தம்பி.." என அவனிடம் ஒன்றை நீட்டியவர்.. மற்றயதை தாமிராவிடம் கொடாது டீப்பா மேலேயே வைத்து விட்டு..

"உக்காந்து பேசுங்க... நான் சமையல கவனிக்கிறேன்." என்று அவர்கள் பேச்சில் கலந்து கொள்ள விருப்பமில்லை என்பதை நாசுக்காக கூறிவிட்டு சென்றார்.

ஆம் நேற்றைக்கு இதே நேரம் தாமிராவை மறுவீடு அழைக்கப்போகிறேன் என வேல்முருகன் சொன்னதும் தான்... பெரும் கலவரமே வெடித்தது.

ஆனால் வேல்முருகன் அவர் பேச்சை கேட்பதாக இல்லை.. "அவளும் என் பொண்ணு தான். இவங்களுக்கு தர உரிமையை அவளுக்கு தரணும்... அவளை அழைச்சிட்டு வரப்போ, ஏதாவது பேசினிங்க... என் பசங்கள கூட்டிட்டு எங்கேயாவது போயிடுவேன். அப்புறம் யாருமில்லாத அனாதையா நீ தான் இருப்ப..." அவர் குரலுக்கு மேலே தன் குரலை உயர்த்தினார்.

அதன் பின் பேசுவாரா வடிவுக்கரசி..? தன் பிடிவாதத்தினால் ஒரு உயிரை பலி கொடுத்ததை அவ்வளவு எளிதில் மறந்துவிடுவாரா...? அவனும் அவள் வயிற்றில் தானே பிறந்தான்.. அந்த பிடிவாதம் எங்கே போகும்...?
மகன் சொன்னதை செய்து விடுவான் என்ற பயத்திலேயே பிடிக்கவில்லை என்றாலும் அமைதியாகிவிட்டார்.
 
Sampavi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 21, 2022
Messages
132
பாவம் தான் அந்த பொண்ணு
 
fajeeha mumthaj

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 14, 2023
Messages
80

Super epavum pola nalla i
 
Top