• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

11. அம்புத நல்லாள்

Sahana Harish

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
49
நிர்குணாவின் இந்த தீடர் ரூபம் மைத்ரேயனை யோசிக்க வைத்திருந்தது.. இத்தனை நாளும் அவளுக்கு தன்னாலோ அல்லது தன் வேலையாலோ எந்த பிரச்சனையும் வந்து விடக் கூடாது என்ற காரணத்தினால் மட்டுமே அவளிடமிருந்து விலகி சென்றுக் கொண்டிருந்தான் வெறுப்பினால் அல்ல.. இது பிரதியுமனுக்கும் தெரியும்.. இதைப் பற்றி பலமுறை அவனிடம் பேசி விட்டான்.. ஆனால் இவனோ தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல் அவன் எண்ணத்தில் உறுதியாக இருந்தான்.. ஆனால் இன்று அந்த சில நிமிடங்களில் அவளின் அந்த தைரியத்தை கண்குளிர கண்டானே! இனி அவளின் காதலை ஒதுக்க வேண்டுமா? ஆனால் இத்தனை நாளும் அவளின் மனது நோகும்படி பேசி இருந்தேனே அதற்கு அவள் என்னை மன்னிப்பாளா? தைரியமாக இருக்கிறாள் என்ற ஒரே காரணத்திற்காக அவளின் காதலை நான் ஏற்றுக் கொள்வது போல் ஆகாதா? என்ற மனதை " அப்படியே நினைச்சா தான் என்ன தப்பு? உனக்கு அவள பிடிக்கும் தானே ஏன் அவளை அவாய்ட் பண்ணேன்னு புரிய வை எக்ஸ்பேலைன் பண்ணு அதை தவிர வேற என்ன வேலை இருக்கு உனக்கு? அடிச்சா கூட வாங்கிக்க வேண்டியது தான்.. நாளைக்கு முதல் வேலை உனக்கு இதுதான்" என்று தனக்குள் பேசி ஒரு முடிவெடுத்தவன் ஆசுவாசம் அடைய அதனை முழுமையாக அனுபவிக்க முடியாமல் செய்திருந்தது பிரதியுமனிடமிருந்து வந்திருந்த தவறிய அழைப்புகள்..

அவனின் அழைப்புகளை பார்த்தும் கிலி பிடித்து கொள்ள உடனடியாக அழைத்தான் அவனின் எண்ணிற்கு.. இவனின் முகம் தொடுதிரையில் தெரிய அவனின் அழைப்பை ஏற்றான் பிரதியுமன்.

மைத்ரேயன், "பிரதி என்ன ஆச்சு? ஏன் இத்தனை தடவை கால் பண்ணி இருக்க?"

பிரதியுமன், "மைத்து அம்மா.. அம்மாக்கு" என்று அவன் வார்த்தைகள் சிக்குண்டது..

"என்னடா மாமிக்கு என்ன? தெளிவா சொல்லு" என்று அவனும் படப்படுத்தான்.

"டேய் அம்மாக்கு மைல்ட் அட்டாக் வந்து இருக்காம்..நீ இங்க வரீயா? அப்பாவும் அனன்யாவையும் என்னால சமாளிக்க முடியல விஜி அத்தையும் மாமாவும் வேலை விசயமா வெளியே போய் இருக்காங்க நீ வந்தா எனக்கு சப்போர்டா இருக்கும்"

அதைக் கேட்டதும் உடனே அடுத்த பிளைட்டில் சென்னைக்கு டிக்கெட் புக் செய்து விட்டு இருந்தான்.. தான் அங்கே செல்ல போவதை நிர்குணாவிற்கு சொல்ல கைபேசியை எடுத்தவன் அனன்யாவிடமிருந்து அழைப்பு வர அவள் அழுவதை தாங்க முடியாமல் அவளை சமாதானம் செய்துக் கொண்டே விமான நிலையம் அடைந்தான்.. இதில் நிர்குணாவிற்கு அழைத்து பேச வேண்டும் என்பதை முற்றிலும் மறுந்து போனது இந்த சிறு மறதி செயல் பெரும் தவறாக மாறக் கூடும் என்பதை அவன் அறிய வாய்ப்பில்லை..

அடுத்த இரண்டு மணி நேரத்தில் தெய்வானை இருக்கும் மருத்துவமனையை அடைந்திருந்தான்.. அந்த மருத்தவமனை தெய்வானையின் நெருங்கிய தோழி விமலா நடத்தி வரும் பிரபல மருத்தவமனை.. சிறு காய்ச்சல் என்றால் கூட இவ்விரண்டு குடும்பமும் விமலாவின் மருத்தவமனையை தான் நாடுவர்..

நேராக அவர் அனுமதிக்கப்பட்டு இருந்த அறை வாசலை அடைந்தவன் அங்கே அழுது கொண்டு இருக்கும் கந்தசாமியையும் அனன்யாவையும் முடிந்த வரை சமாதானம் செய்தவன் பிரதியுமனை தேட அதை கண்டுக் கொண்ட அனன்யா "அண்ணா பிரதி அண்ணா விமலா ஆன்ட்டியை பார்க்க போய் இருக்காங்க" என்றாள் அழுதவாறு.

அவளிடம் சிறு தலையசைப்பை பதிலாக தந்தவன் தனது மாமியை கண்ணாடி வழியாக பார்த்துவிட்டு விமலாவின் அறைக்கு சென்றான்..

இவனை கண்டதும் பிரதியுமன் "மைத்து வாடா அம்மாவ பார்த்தியா? என்ன பண்ணி வச்சி இருக்காங்க பாரு.. இத்தனை மாசத்துக்கு அப்பறம் நான் இங்க வரும்போது அம்மாக்கு இப்படியா ஆகனும்?" என்று அவன் தோளில் முகம் புதைத்தான்..

அவன் காயங்களை கவனித்தவன் "ஏய் என்ன இது? யார் கிட்ட போய் அடி வாங்கிட்டு வந்த? இந்த வேலை வேண்டாம்னு சொன்ன கேக்குறீயா? ஹாஸ்பிடல் போனீயா? எவ்வளவு காயம் பாரு.. ஆன்ட்டி இந்த எருமையையும் இங்கயே வச்சிக்கோங்க மாசத்துல ஒரு தடவையாவது இப்படி அடி வாங்கிட்டு வந்து நிக்குறான் இல்லன்னா நான் அடி வாங்குறேன் என்னை வந்து காப்பாத்துனு என்னை கூப்பிடுவான்" என்று அவன் இவனை திட்டிக் கொண்டு இருந்தாலும் அவனின் காயங்களை ஆராயவும் தவறவில்லை.

மைத்ரேயனோ," ஏய் பிரதி லூசு எனக்கு எதுவும் இல்ல.. மாமிக்கு என்ன ஆச்சு? அவங்க இப்ப எப்படி இருக்காங்க?"

விமலா," உட்காரு மைத்ரேயன் சொல்றேன்"

" சொல்லுங்க ஆன்ட்டி மாமிக்கு ஏன் தீடீரென்று இப்படி ஆச்சு?"

"தீடீரென்று இல்ல மைத்து அவங்களுக்கு ஏற்கனவே சில பிரச்சனைகள் லைக் கொலஸ்ட்ரால் இருக்கு, பிபி இருக்கு, சுகரும் உண்டு இது உங்களுக்கு தெரியும் தானே?"

இருவரும் ஆம் என்பது போல் தலையாட்ட" இப்ப அது தான் பிரச்சனை அவ டயட் சுத்தமா பாலோ பண்றது இல்ல..நானும் பலதடவை சொல்லி பார்த்துட்டேன் கேட்கவே இல்ல.. சரின்னு அண்ணா கிட்டயும் அனன்யா கிட்டயும் சொல்லி பார்த்துக்க சொன்னேன்.. ஒரு மாசம் கண்ட்ரோலா இருந்தது.. ஆனா இப்ப என்ன பிரச்சனைன்னு தெரியலை இன்னிக்கி சடன்னா பிபி அதிகமாகி இருக்கு.. பிரதி இத பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா?"

" இல்ல ஆன்ட்டி எனக்கு எதுவும் தெரியாது நானே இன்னிக்குதான் ஊர்ல இருந்து வந்தேன்.. என்கிட்ட நல்லா தான் பேசிகிட்டு இருந்தாங்க திடீர்னு இப்படி ஆகும் எனக்கு எதுவுமே புரியல" என்றான் கலங்கியவாறு.

உடன் மைத்ரேயனிடம் திரும்பிய விமலா" மைத்து நீங்க ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் இல்லையா சோ நீ சொல்லு திடீர்னு என்ன ஆச்சு வீட்ல ஏதாவது பிரச்சனையா?"

"நோ நோ ஆன்ட்டி அதெல்லாம் எதுவும் இல்லை இட் மே பி சம் அதர் இஸ்யூ.. இப்போ மாமிக்கு எப்படி இருக்கு?"

"இப்போ அவ ஓகே தான் மேக்ஸிமம் டயட் ஃபாலோ பண்ண வைக்க வேண்டியது உங்க பொறுப்பு அதுவுமில்லாம கொஞ்ச நாளைக்கு அளவுக்கதிகமான சந்தோஷமும் அளவுக்கதிகமான துக்க செய்தியும் அவங்களாலே தாங்க முடியாது எந்த ஒரு விஷயத்தையும் சொல்ல முயற்சி பண்ணாதீங்க முடிஞ்சவரை அவங்க போக்கிலேயே விடுங்க ஆனா ஃபுட் ரொம்ப முக்கியம் இன்னும் ரெண்டு நாள் மட்டும் இங்கே இருந்தால் போதும் அதுக்கப்புறம் நான் தர மெடிசின்ஸ் கரெக்ட்டா ஃபாலோ பண்ணனும்"

சரி என்று இருவரும் வெளியே வந்த சமயம் பிரதியுமன் " ஒரு நிமிஷம் மைத்து" என மறுபடியும் விமலாவின் அறைக்கு சென்றான்.

" என்ன பிரதி திரும்பவும் வந்து இருக்க ஏதாவது கேட்கணுமா?"

" அம்மா எப்ப கண் விழிப்பாங்க?"

" வித்தின் 2 ஹவர்ஸ்"

" ஓகே ஆன்ட்டி நான் வரேன்" என்று வெளியே சென்று மைத்ரேயன் ஐ அழைத்துக்கொண்டு தனது தாய் இருக்கும் வார்ட்டிற்குள் நுழைந்தான்.

அங்கே.. அனன்யா யாரிடமோ பேசி கொண்டு இருப்பதை கவனித்த பிரதியுமன் அதை யார் என்று அறிய அவளிடம் சென்றான்" அனன்யா யார் கூட பேசிட்டு இருக்க?"

" அம்மு அண்ணி கிட்ட தான் அண்ணா.. நீங்க பேசுங்க" என்று அவன் சம்மதத்தை கூட பெறாமல் கைபேசியை அவன் கையில் திணித்தாள்.

இவனோ எவ்வாறு பேசுவது என்ற யோசனையில் இருக்க மறுமுனையில் இருந்த அம்புத்ராவோ 'அய்யோ இப்ப என்ன செய்றது? என் குரல் அவருக்கு நல்லா தெரியுமே! வேற நம்பர்ல இருந்து கால் பண்ணதுனால தப்பிச்சேன்.. இந்த குட்டி பிசாசு இருக்கே'

தெய்வானையின் உடல்நிலையை பற்றி விக்ரமன் தான் அவளுக்கு அழைத்து தெரிவித்து இருந்தார்.. வெளி இடங்களுக்கு செல்லும் போது அவள் ஒரு புது எண்ணை வாங்கி வைத்து கொள்வாள்.. தன்னுடன் வரும் நபருக்கும் விக்ரமனுக்கும் கொடுத்து வைக்கும் பழக்கம் வைத்திருந்தாள்.. விக்ரமனுக்கு தெய்வானையின் உடல்நிலை பற்றி தெரிய வர அவளுக்கு உடனே அழைத்து சொல்லி இருந்தார் அதனால் தான் அனன்யாவிற்கு அழைத்திருந்தாள் தனது பணியின் இடைவெளியில்..தீடீரென்று அவள் பிரதியிடம் கொடுப்பாள் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.

அவனும் அம்புத்ரா என்று தெரியாமல் அந்த அம்முவிடம் எப்படி பேசுவது என்று யோசித்து கொண்டிருந்தான்.. மைத்ரேயன் தான் பேசு என்பது போல் செய்கை செய்தான்.. " ஹலோ.. சொல்லுங்க எப்படி இருக்கீங்க?" என்றது பிரதி தான்.

'இவன் வேற காலையில தானே பார்த்த லூசு.. இவன் ஏன் இவ்வளவு அப்பாவியா இருக்கான் கடவுளே'

அவனிடம் பேச வேண்டும் என்று நினைத்திலிருந்து வார்த்தைகள் வராமல் தத்தியடித்தது "நல்லா இருக்கேன்" என்ற சொல்லே மெதுவாக மிக மெதுவாக வந்தது.

அவ்வளவு தான் "நான் அப்பறம் பேசுறேன்" என்று அழைப்பை துண்டித்து விட்டான்.

அதன் பின் தெய்வானை இருக்கும் அறையை பார்க்க சென்றான் பிரதி.. உற்று கவனித்தவனின் பார்வையில் தென்பட்டு விட்டது அந்த தவறு.. தாய் கண் விழிக்கும் நேரத்தை எதிர்பார்த்து அடக்கப்பட்ட கோபத்துடன் காத்திருக்கலானான் அவன்..

கேரளா, கமிஷனர் அலுவலகம் மீட்டிங் அறை.. அம்புத்ராவும் கதிரும் அவர்கள் சொன்ன அனைத்து சம்பவங்களையும் கூர்ந்து கவனித்தனர்.. முன்னுக்கு பின் முரணான செயல்களாக இருந்தது அது.. கேட்ட கோரிக்கையை மறுத்ததன் விளைவாக ஒருவரை அடித்தால் அது ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் காவல்துறை அதிகாரிகளை துன்புறுத்த காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கும் பொழுதே புருவங்கள் முடிச்சிட்டது அவர்களுக்கு.

இதையெல்லாம் செய்வது மான்ஸ்டரின் ஆட்கள் என்பது தெரிந்தாலும் அவர்கள் யார் என்பது தான் தெரியவில்லை என்று முடித்தார் கேரள கமிஷனர்.

அம்புத்ரா, "சர் இதுல நாங்க என்ன ஹெல்ப் பண்ணனும் நீங்க நினைக்கிறீங்க?"

கமிஷனர், " மிஸ். அம்புத்ரா நீங்க ஏற்கனவே அவங்களோட ஆட்கள பிடிச்சி கொன்னு இருக்கீங்க சோ இதை பற்றிய டீடைல் உங்களுக்கு தெரியும் இல்லையா அண்ட் முக்கியமான விசியம் இவங்க இந்தியால எல்லா இடத்துலையும் பரவி இருக்காங்கனு நான் சொல்லி தெரியும்னு இல்லை..இதுக்கான ஹெட் குவார்ட்ஸ் னு தனியா இல்ல ஆனா மெக்சிமம் கம்மியூனிகேஷன் இங்க தான்னு மட்டும் இன்பார்மர் சொன்னார்.. உங்களுக்கு இதுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் நாங்க செய்யுறோம் எத்தனை போலீஸ் வேணும்னாலும் நாங்க உங்க டீம்ல சேர்க்குறோம்.. இந்த மிஷன்ல முழுக்க முழுக்க இளைஞர்கள் மட்டும் தான் இருக்காங்க.. இதுக்கு மேல நீங்க சொல்றது தான்"

" சர் இந்த கேஸ் எடுத்துக்கறது பற்றி எனக்கு எந்த பிரச்னையும் இல்லை.. ஆனா எனக்கு சில பர்சனல் வொர்க் இருக்கு இன்னும் இரண்டு வாரம் அப்பறம் நாங்க உங்க கிட்ட இதுக்கான பிளான் சொல்றோம்.. இஸ் இட் ஓகே சர்?"

" யா ஓகே.."என்று அவர் சொன்னாலும் அங்கு இருந்த மற்றவர்களுக்கு இதில் விருப்பம் இல்லை என்பது அவர்களின் முகமே காட்டி கொடுத்தது.. அதனைச் சிறு புன்னகையோடு ஏற்றவள் கிளம்பினாள் கதிருடன்.

இங்கே.. மருத்தவமனையில் தெய்வானையின் அருகில் அனைவரும் அவர் கண் விழிக்கும் நேரத்தை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்தனர்.. ஆனால் பிரதியுமன் மட்டும் தன் தாய் செய்த நாடகத்தை கண்டுபிடித்ததிலிருந்து நிலைக்கொள்ளாமல் நின்றிருந்தான்.

நடந்தது இதுதான் அவளிடம் அலைபேசியில் பேசி விட்டு திரும்பியவனின் பார்வையில் தன் தாய் கால்களை அசைப்பதும், கைகளில் அமர்ந்த சிறு கொசுவினை தன் மற்றொரு கரம் கொண்டு தட்டி விடுவதையும் பார்த்தான்.. மயக்கம் தெளிய இரண்டு மணி நேரம் ஆகும் என்பது போல் விமலா தெரிவித்து இருக்க இவர் இப்படி அசைந்தால் அது நாடகம் அன்றி வேறு என்னவாக இருக்க கூடும்? இதற்கு விமலா ஆன்ட்டியும் துணை என்பதை தான் அவனால் மேலும் தாங்கி கொள்ள முடியவில்லை..

தெய்வானை கண் விழிக்கும் நேரமும் வந்தது.. விஜியும் கந்தசாமியும் கூட வந்திருந்தனர் அவர் அனைவரையும் பார்க்க அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியே தெரிந்தது.. ஆனால் பிரதியுமன் முகத்தில் மட்டும் எள்ளு போட்டால் பொரிந்து விடும்.. அப்படி ஒரு கோபம்.. என்னவாக இருக்கும் என்று யோசிக்க கூட நேரம் கூட கொடுக்காமல் "அம்மா எதுக்கு இப்படி ஒரு நாடகம்? யார ஏமாத்த இப்படி பண்ண? உனக்கு என்ன பிரச்சனை?" என கர்ஜித்தனவனை புரியாமல் பார்த்தனர் மற்றவர்கள்.

கந்தசாமி, " பிரதி என்ன பேசுற அவளே உடம்பு சரியில்லாம இருக்கா இப்ப போய் இவ்வளவு கடுமையா பேசுற? நீ சொல்றா மாதிரி அவ நடக்கிறதா வச்சிக்கோ ஆனா எதுக்காக? அதுக்கான அவசியம் என்ன?"

" அத அம்மா தான் சொல்லனும்" என்றான் தன் தாயை முறைத்தவாறு..அதே நேரம் விமலா உள்ளே வரவும் "ஆன்ட்டி ஒரு டாக்டரா இருந்துட்டு இப்படி இவங்க கூட சேர்ந்து பொய் சொல்லி இருக்கீங்களே இது நியாயமா?"என்று கோபமாக கேட்பவனிடம் என்ன சொல்வது என தெரியாமல் பேந்த பேந்த முழித்தார் விமலா.

" பிரதி ரிலாக்ஸ் இது ஹாஸ்பிடல் சோ பி காம்.. ஐ கேன் எக்ஸ்பிலைன் யூ"

அதை கேட்டதும் அருகில் இருந்த சுவற்றில் தன் கையை குத்தி தனது கோபத்தை அடக்கியவன்" டிஸ்சார்ஜ் பண்ணுங்க நான் வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போறேன்" என்றவன் அவர் பதிலை கூட எதிர்பாராமல் அங்கிருந்து சென்று விட்டான்.

அவன் சென்றதும் கந்தசாமியும், அனன்யாவும் தெய்வானையை முறைத்தவாறு அவன் பின்னோடு சென்றனர் சமாதானம் செய்ய.. சிறு வயதில் இருந்தே பிரதியுமன் அதிகமாக கோபம் கொள்ள மாட்டான்.. ஆனால் கோபம் வந்தால் அவ்வளவு எளிதில் குறையாது.

அப்பாடா என்று பெருமூச்சு ஒன்றை விட்டு தன்னை ஆசுவாசம் செய்து கொண்டு அருகில் முறைத்தவாறு நின்றிருந்த மைத்ரேயனை பார்த்தார்" ஏய் என்னடா நீயும் என்னை முறைச்சிக்கிட்டு நிக்கற?"

"பின்ன முறைக்காம உன்னை கொஞ்ச சொல்றீயா? எதுக்கு இந்த வேலை உனக்கு? யார் இந்த மாதிரி ஐடியால குடுத்தது? உன் பையன் தான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டான்ல அப்பறம் என்ன?"

எழுந்து அமர்ந்தவர் "டேய் என்ன மரியாதை குறையது நான் உன்னோட மாமி ஞாபகம் இருக்கா?"

" இருக்கு அதனால தான் பேசிட்டு இருக்கேன் இதுவே என் அம்மாவா இருந்தா தலையில நங்குன்னு ஒரு குட்டு வச்சி இருப்பேன்.. சரி சொல்லு ஏன் இப்படி பண்ண?"

" எப்பவும் போல மரியாதையா பேசு சொல்றேன்" என்று சிறு குழந்தை போல் திரும்பி அமர்ந்து கொண்டார்.

அதை கண்டு சிரித்தவன்" உங்கள.. என்று அடிக்க கை ஓங்கியவன் அதை செய்யாமல் அணைத்து கொண்டு சொல்லுங்க மை ஸ்வீட்டி ஏன் அவன ஏமாத்த நினைச்ச? "

" டேய் அவன் என்கிட்ட நான் பார்த்த பொண்ணுக்கு ஓகே சொல்லிட்டு மாமா கிட்ட வேற பொண்ண லவ் பண்றதா சொல்லி இருக்கான்டா.. இன்னும் இரண்டு வாரத்துல நிச்சயம் இந்த விசயம் அவங்களுக்கு தெரிஞ்சா எவ்வளவு அவமானம்?"

" என்னது? ஆனா மாமியாரும் மருமகளும் சரியான பொய் வண்டி என்னமா நடிக்கிறீங்க? அவ என்னடான்னா என்கிட்டயே மிரட்டறா நீ என்னடான்னா பிரதிய மிரட்டி பார்க்குற சரியான கேடிங்க.. நாங்க தான் உங்ககிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறோம்"

ஒர் நொடி தடுமாறியவர்" என்ன சொல்ற யார பற்றி பேசுற அம்முவ பற்றியா? அவ உன்கிட்ட பேசுனாலா?"

அவரையும் இதுவரை அமைதியாக இருந்த விமலாவையும் பார்த்தவன்" அம்மு தான் அம்மு என்கிற அம்புத்ரா ஐபிஎஸ் தான் என்னை மிரட்டுறா அவன்கிட்ட பொய் சொல்ல சொல்லி" என்றான் ஒற்றை புருவத்தை உயர்த்தியவாறு.

விமலா சாதுரியமாக" தெய்வா எனக்கு பேஷண்ட் வந்து இருக்காங்க நீங்க பேசுங்க நான் உனக்கு டிஸ்சார்ஜ் சம்மரி ரெடி பண்ணிட்டு அனுப்பி வைக்குறேன்"என்று நழுவி விட்டார்.

" மாமி ஆன்ட்டி மாதிரி உங்களாள எஸ்கேப் ஆக முடியாது.. நீங்க சொல்லுங்க பிரதி ஏன் அம்புத்ராவை பார்த்து இருக்கீங்க அவனை பற்றி உங்களுக்கு நல்லா தெரியும் தானே? அப்பறம் ஏன் இப்படி? இந்த உண்மை தெரிஞ்சா அவன் எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு தெரியாது.. ஏன் நம்பள வெறுத்து ஒதுக்க கூட சான்ஸ் இருக்குனு உங்களுக்கு தெரியாதா?

அவ என்னடான்னா நேற்று காலையில தான் பார்த்தா அப்பவே பொய் இதுல என்னை வேற கூட்டு சேர்த்துகிட்டா இவன் கிட்ட பொய் சொல்ல என்னால முடியல மாமி"

அவனை வாஞ்சையுடன் பார்த்தவர்" மைத்து அவ என்கிட்ட என்ன சொன்னா தெரியுமா? அத்தை உங்க பையன் இனிமேலும் பழசையே நினைச்சிட்டு அவர் பயப்படுறதும் இல்லாம அவருக்கு பிறக்க போகும் பிள்ளையையும் அப்படியே தான் இருக்கும் சாகுற வரைக்கும் பயந்து பயந்து இப்படியே தான் உங்க பையன் இருக்கனுமா? அவரை இந்த நிலைமைக்கு ஆளாக்குனவங்கள அடிச்சி துவைக்க வேண்டாமா? இத்தனை வருஷமா நீங்க அவரை ஏன் மாத்தனும்னு டிரை பண்ணவே இல்லை? அவரை புரோடக்ட் பண்றேன்னு நடந்த விசியத்தை மறக்க விடாம பண்ணி இருக்கீங்க! நீங்களே சொல்லுங்க இனியும் உங்க பையன் போலீஸ்க்கு பயந்து இருக்கனுமா? னு கேட்டா டா.. நியாயம் தானே ஒரு அம்மாவா நான் அவன் பயந்த போது பாதுக்காக்க தான நினைச்சேன் எதிர்த்து நிற்க சொல்லையே.. யோசிச்சி பார்த்தேன் இவள விட ஒரு நல்ல பொண்ணு என் பையனுக்கு கிடைக்க மாட்டானு தோணுது மைத்து..

அவனோ, "மாமி உன் மருமக ஒரே டயலாக் வச்சி எல்லாரையும் அவ பக்கம் இழுத்து வச்சி இருக்கா.. மாட்டினா மொத்தமா மாட்டனும்னு நல்ல எண்ணம் போல" என்று சிரித்தான்.

"அப்பறம் மைத்து இந்த விசியம் பிரதிக்கு தெரியாம பார்த்துக்கோ" என்று சொன்ன அடு்த்த நொடி " எனக்கு தெரிஞ்சி போச்சி அம்மா" என அங்கு வந்து நின்றான் பிரதியுமன்.

தொடரும்..
 
Top