• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

11. திகட்டாத தீ நீயே!

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
முன்பிருந்த ஜூஸினை அவளிடம் எடுத்து கொடுத்த வேல்முருகன்..
"இப்பல்லாம் நீ இல்லையா.. பாட்டி தலைமேல தான் மொத்த வேலையும்... அதான் ஓடுறாங்க.."
என்றவர் சமாதானம் புரியாதவளில்லையே அவள்.

ம்ம்.. என்றவாறு வேல்முருகன் தந்த ஜூஸினை வாங்கிக்கொள்ள.. வேறொரு தட்டில் சுவீட்டுடன் வந்த பார்த்தீபன், தன்னிடத்தை ஆத்விக் ஆக்கிரமித்து கொண்டதை கண்டதும் ஆத்திரம் உண்டானது.

அதை வெளிக்காட்டாது.. "எடுத்துக்கோ தாமிரா... நீ வரேன்னு தெரிஞ்சு நானே கடைக்குபோய் வாங்கிட்டு வந்தேன்." என வழிந்தவனை ஆத்விக்குக்கும், வேல்முருகனுக்கும் என்ன செய்தால் தகுமென இருந்தது. ஆனால் ஒருவரை ஒருவர் வெளிக்காட்டவில்லை.

மதிய உணவினை உண்டுவிட்டு சிறுது நேரம் பேசியவர்கள்
"கொஞ்சம் ஓய்வெடுங்க மாப்பிள்ளை.." என்ற வேல்முருகன் ஒரு அறையினை திறந்து விட...

"அவரு தூங்கட்டும் பெரியைய்யா.. நான் கண்ணா என்ன செய்றான்னு பார்த்துட்டு வரேன்." என்றாள்.

"அட ஆமா... சொல்ல மறந்துட்டேனே.. உன்னை காணாம கண்ணா ரொம்ப படுத்தி எடுத்திட்டான். எப்படித்தான் அவனை சமாளிச்சியோ..?" என்க.

"அவன் அப்படித்தான் ஐயா.. அவனை உறுக்கி எல்லாம் படிய வைக்க முடியாது.. கொஞ்சினா தான் சொல் பேச்சு கேப்பான்.. நான் போய் பார்த்திட்டு வரேன்.." என மாட்டுக்கொட்டகை இருந்த பக்கம் மானாய் துள்ளி ஓடியவளை பார்த்து பெரிதாய் புன்னகைத்தவர்.



"கல்யாணம் ஆகியும் குழந்தை தனம் குறைஞ்சிருக்கா பாரேன்.." என்றவர்..
"பாவம் இங்க இருக்கிறப்போ நிறைய கஷ்டம் அவளுக்கு.. அதை எல்லாம் அதுங்ககிட்ட தான் பகிர்ந்துகிட்டா.. அந்த பாசம் தான்.. நீங்க படுங்க நானும் கொஞ்சம் ஓய்வெடுக்க போறேன்." என்றவர் தனக்கான அறையில் புகுந்தார்.

"கண்ணா.." என குரல் கொடுத்தவாறு வந்தவள் குரல் வந்த பக்கம் சட்டென திரும்பி பார்த்த கன்றுக்குட்டி.. அந்த இடத்திலேயே நின்றவாறு காதினையும் வாலினையும் ஆட்டியவாறு நிற்க.

"என்னடா... அதுக்குள்ள அக்காவ மறந்திட்டியா..? இல்லன்னா கோபமா...? இங்க ஓடிவா...." என கூப்பிட்டவள் அழைப்புக்கு வராது அது நிற்க.

"ரொம்பத்தான் முறுக்கிக்கிற... நீ வரலன்னா என்ன நான் வரேன்.." என அதனிடம் போக நினைத்தவள் கையினை அவசரமாக பற்றிக்கொண்டது ஓர் கரம்.

திரும்பி பார்த்தவள்.. அங்கு நின்றவனை கண்டது..
"சின்னையா..! நீங்க எங்க இங்க.." என்றவள் அவனிடமிருந்து தன் கையினை லாவகமாக உருவிக்கொள்ளும் விதமாய் உள்ளே இழுத்தாள்.

அவள் நோக்கம் புரிந்தவனாய்.. பிடியினை இறுக்கியவனோ..
"நான் இருக்கட்டும் தாமிரா... நீ சொல்லு... நீ நல்லா இருக்க தானே...?"

"எனக்கு என்னையா..? நான் நல்லா தானே இருக்கேன்." என்றவள் தன் கையினை மீட்கும் முயற்சியை கைவிட்டிருந்தாள்.

அவளுக்கு தெரியும்.. தன் போராட்டம் அதிகமாக அதிகமாக அவன் பிடி இறுகும் என்று. 'கையினை கலட்டியா கொண்டு சென்றுவிடுவான்? தன் கேள்வி முடிய விட்டுவிட போகிறான்.' என நினைத்தவள் நிதானமாக பதில் கூற.

"அப்பிடி தெரியலையே தாமிரா.. உன்னை அவன் பார்க்கிற பார்வையே முறைக்கிற மாதிரி இருக்கு.. எனக்கு தெரியும்.. யாரு உனக்கு என்ன செய்தாலும், அவங்கள நீ காட்டி கொடுக்க மாட்ட..

உண்மையை சொல்லு தாமிரா.. உன்னை அவன் கொடுமை தானே பண்ணுறான்..? அவனுக்கு நம்ம மேல கோபம்..
சுவாதி அவனை ஏமாத்தினதை அவனால ஏத்துக்க முடியல.. அந்த பழியை தீர்த்துக்கிறதுக்காக தான் உன் கழுத்தில தாலி கட்டியிருக்கான்.. வந்ததில இருந்து உங்க ரெண்டுபேரையும் நல்லா நோட் பண்ணேன்.
உன்னை அருவெருப்பா பார்க்கிறான். அவனுக்கு உன்னை பிடிக்கல.


அவன் உனக்கு வேண்டாம் தாமிரா.. அவன் கட்டின தாலியை கழட்டி எறிஞ்சிட்டு, நம்ம வீட்டுக்கே திரும்ப வந்திடு.. நான் உன்னை நல்லா பார்த்துக்குறேன். பாட்டியை கூட உன்னை திட்ட விடமாட்டேன்.. அதையும் மீறி அவங்க உன்னை திட்டினாங்கன்னா.. இந்த வீடே நமக்கு வேணாம்ன்னு போயிடுவோம்.
உன்னோட அருமை இந்த ஒரு வாரத்தில நான் புரிஞ்சுக்கிட்டேன் தாமிரா.. நீ திரும்ப வந்திடு.." என பற்றியிருந்த கையினை கண்ணில் ஒற்றியவன் பேச்சு சுத்தமாக புரியவில்லை அவளுக்கு..


இமைகள் இடுங்க அவனையே பார்த்திருந்தவளால் அவன் ஏன் அப்படி பேசுகிறான்.. என ஆராய்வதற்குள் சட்டென ஒரு கை அவன் கைகளுக்குள் இருந்த தாமிராவின் கையினை அவனிடமிருந்து பிடுங்கியது.

தலையை பக்கவாட்டில் திரும்பி பார்த்தவனுக்கு சிரமம் தராது.. தாமிராவின் முன் வந்து நின்றான் ஆத்விக்.


"என் பொண்டாட்டிக்கிட்ட தனிமையில உனக்கென்ன பேச்சு..?" என்றான் வார்த்தைகளில் அழுத்தத்தை காட்டி..


தூங்கப்போகிறேன் என தாள் போட்டுக்காெண்டவனை அங்கு எதிர்பார்க்கவில்லை பார்த்திபன்.

"உங்களுக்கு இப்ப தான் மாப்பிள்ளை இவ பொண்டாட்டி.. எனக்கு இவளை பத்து வருஷமா தெரியும்.. அதான் எப்படி இருக்கேன்னு கேட்டுட்டிருந்தேன்." என்றான்.

"ம்... நீ கேட்டதை நானும் கேட்டுட்டு தான் இருந்தேன்.. கல்யாணமாகின பொண்ணுக்கிட்ட பேசுறவன் மாதிரியா பேசிட்டிருக்க.. இதுக்கு மேல இந்த மாதிரி ஏதாவது நடந்திச்சு....." என விரல் காட்டி எச்சரித்தவன்..

"போடா.. போய் வேற ஏதாவது ஆணி இருந்தா புடுங்கு.." என்றவனுக்கு ஏனோ அவனை சற்றும் பிடிக்கவில்லை.

ஆம் ஆத்விக் அவ்வளவு எளிதில் யாரையும் ஒருமையில் பேசிட மாட்டான்.. இரண்டு ரகமானவர்களை தவிர.. ஒன்று தனக்கு மிகவும் பிடித்தவர்களை.. மற்றையது சுத்தமாக பிடிக்காதவர்களை.


முதல் முறை அந்த வீட்டிற்கு வந்த பொழுதே தாமிரா மேலான அவனது பார்வை எந்த வகையானது என்று கணித்தவனாயிற்றே..

அவன்மேல் வெட்டும் பார்வை ஒன்றை வீசியவன்.. அதற்குமேல் அங்கு நின்றால் வேல்முருகன் காதுக்கு தகவல் சென்று விடுமென அங்கிருந்து நகர்ந்து விட்டான்.


அவன் சென்றதும் கோபமாக தாமிராவிடம் திரும்பியவன்..
"நீ என்ன லூசா..? அவன் தான் பேசிட்டே போறான்னா அவன்கிட்ட உன் கையை குடுத்திட்டு அமைதியா பே..ன்னு பார்த்திட்டிருக்க..

ஒரு அறை விட்டு அவன் வாயை மூட வைச்சிருக்கலாம்ல.." என்றான் கோபமாய்.

"வைச்சிட்டு... சொல்லுங்க ரோஷத்தை காமிச்சிட்டு எனக்கிருக்கிற ஒரே தஞ்சத்தையும் இழக்க சொல்லுறீங்களா..?
கோபப்படுறதுக்கு கூட தகுதி இருக்கணும் இந்த உலகத்தில.. தகுதி இல்லன்னா உணர்ச்சிகளை கூட சாகடிச்சிடணும்.. கோபப்பட சொல்லிட்டு நீங்க போயிடுவீங்க.. ஏற்கனவே அனுபவிக்கிற நரகம் போதலன்னு, புதுசா ஒரு நரகம் அனுபவிக்கணுமா..?

புரிஞ்சாலும் புரியாத மாதிரி போயிட்டா, யாருக்கும் பாதிப்பில்ல.. அதான் இந்த அமைதி." என்றவள் அதற்கு மேல் பேசாது கன்றுக்குட்டியிடம் சென்றுவிட்டாள்.

எப்போதுமே படுத்ததும் சலனமே இல்லாது உறங்கிவிடுவார் வேல்முருகன்.
அதே போல் இப்போதும் படுத்ததும் குறட்டை விட ஆரம்பித்தவரை.

"வேலு.... டேய் வேலு எந்திரி.." என எழுப்பினார் வடிவுக்கரசி.
தூக்கம் கலைந்தாலும் கண்களை திறவாது..

"என்னம்மா..."

"என்னன்னே தெரியல... உன் மாப்பிள்ளை கோபமா இருக்கான்.. உன்கிட்ட தான் ஏதாே பேசணுமாம்... என்னன்னு நீ தான் வந்து கேளு..." என்றதும் தான் சட்டென்று கட்டிலில் எழுந்து அமர்ந்தவர்..

"ஏன் என்னாச்சு..?"

"என்னை கேட்டா...? போய் அவனையே கேளு..' என்றுவிட்டு விறுவிறுவென வெளியே வந்து சுவற்றோடு ஒட்டி நின்று விட்டார்.

நிஜத்தில் அவருக்கும் எதுவும் தெரியாது.. வெளியிலிருந்து கோபமாய் உள்ளே வந்தவன்.. டீப்பாமேலிருந்த செம்புத் தண்ணீர் மொத்தத்தையும் வாயில் சரித்துவிட்டு.. டீவியின் முன்பு அமர்ந்திருந்த வடிவுக்கரசியிடம்..

"மாமாவை கூப்பிடுங்க... நான் கொஞ்சம் பேசணும்." என்றான் சத்தமாக.
அவனது வார்த்தைகளிலும் செயலிலுமே அவனது கோபம் தெறிக்க.

'என்னாச்சு திடீர்ன்னு இவனுக்கு..?' கேள்வி எழுந்தாலும்..
"ம்ம்" என்று வேல்முருகனை எழுப்ப சென்றார் வடிவுக்கரசி.

அவன் சத்தம் கேட்டு தூங்கிக்காெண்டிருந்த வேல்முருகனையும், பின் புறத்தில் நின்ற தாமிராவையும் தவிர மற்றவர்கள் அங்கு ஆஜராகிவிட்டிருந்தனர்.

பார்த்தீபனுக்கு சொல்லவே வேண்டாம்.. தாமிராவிடம் பேசியவற்றைத்தான் சொல்ல போகிறானோ என்று அவனுக்கு பயத்தில் வியர்த்து கொட்டவே ஆரம்பித்தது.

முகத்தை லேசாக அலசிவிட்டு வந்தவரை கண்டவன்.. இருக்கையிலிருந்து எழுந்து..

"மாமா நாங்க கிளம்புறோம்." என்றான்.

திடீரென கிளம்புறோம் என்றால் அவரும் தான் என்ன நினைக்க..

"ஏன் மாப்பிள்ளை.. என்னாச்சு..? யாராச்சும் எதுவும் சொன்னாங்களா..?" என்றவர் வடிவுக்கரசியை சந்தேகமாக நோக்கினார்.

"ஏன்டா.. நான் என்ன பண்ணிட்டேன்னு என்னை பார்க்குற..?" என்றார் அவர் பார்வையின் அர்த்தம் புரிந்தவராய்.

ஆம் அவர் நினைத்தது தான் உறங்கும் நேரம்.. வடிவுக்கரசி ஏதாவது பேசி பிரச்சனையை இழுத்து விட்டாரோ என்று தான்.

'அம்மா இல்லன்னா ஏன் மாப்பிள்ளை கோபமா இருக்காரு..'

"நாங்க ஏதாவது தப்பு பண்ணிட்டோமா..?" என்றார் கவலையாய்.


அவர் முகவாட்டத்தை கண்டவனுக்கு கஷ்டமாகிப்போனது.
'பெற்ற மகளே இல்லாது அவள் மேல் உள்ள பாசத்தில் மறுவீடு அழைத்தவரது மகன்.. தன் மனைவியுடன் தவறாக நடந்து கொண்டான் என்று கூறப்போனால் அவர் மனம் நோகக்கூடும்.. அதோடு தாமிராவையும் அவர் தவறாகவும் எண்ணக்கூடாது'. என நினைத்தவன்..

"இல்ல மாமா.. யாரும் எதுவும் சொல்லல.. ஆனா இப்பவே கிளம்பினா தான், பொழுது சாயிறதுக்குள்ள ஊர் போய் சேரமுடியும்.." என்றான் உச்சத்தில் ஒலித்த குரலை தணித்து.

"ஏன் இன்னைக்கே போறீங்க..? மறு வீடு தானே வந்திருக்கிங்க.. ரெண்டு நாள் தங்கிட்டு போறது" என்ற நேரம் அங்கு வந்த தாமிராவும் அவர்கள் ஏதோ சீரியஸாக பேசிக்காெண்டிருப்பதை கண்டு, அமைதியாகவே நின்று கொண்டாள்.

"ரெண்டு நாளா..?" என பார்த்தீபனை பார்த்தவன்.. அருவெருப்பதாய் முகத்தை திருப்பிக்கொண்டு.

"இல்லை இல்ல மாமா.. அது.... ஆ.. இந்த வருஷமே இவளை அம்மா பிளஸ் ட்டூ எக்ஸாம் எழுதணும்ன்னு சொல்லிட்டாங்க.. பாடம் சொல்லித்தர வாத்தியாரையும் ஏற்பாடு பண்ணியாச்சு.. இந்த நேரத்தில கிளாஸ்ஸ கட் பண்ணா எப்படி..? எக்ஸாம் ரொம்ப தூரத்தில எல்லாம் இல்லையே... இன்னைக்கு கூட கட்டடிச்சிட்டு தான் வந்திருக்கா.. இப்படியே திரிஞ்சா பாஸ் பண்ண முடியுமா?

அதான் இன்னைக்கே போனா நல்லது.. வேணும்னா இவ எக்ஸாம் முடிஞ்சதும் வாரக்கணக்கில தங்கிடுவோம்." என தடுமாற்றத்துடனே சமாளித்தவனை அவள் புரியாது நிமிர்ந்து பார்க்க.

"சொல்லு தாமிரா.. இன்னைக்கு கூட கிளாஸ கட் பண்ணிட்டு தானே வந்திருக்கோம்." என்றான் அவளுக்கும் எடுத்துக்கொடுப்பதாய்.

என்ன பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது என்று பாதியில் வந்தவளுக்கு தெரியவில்லை. அதே நேரம் அவன் ஆடும் நாடகமும் தெரியாது முழிக்கவே செய்தாள்.

ஆனால் வேல்முருகன் முழிக்கவில்லை.. அவள் படிக்கிறாள் என்றதும் முதலில் சந்தோஷப்படுவது அவர் தானே!
தன்னால் முடியாததை மருமகன் செய்யும் போது தடுத்து விடுவாரா.?

"நல்லது மாப்பிள்ளை.. படிக்கிறவளை குழப்ப வேண்டாம்.. நாங்க இங்க தானே இருக்கப்போறோம்.. அவ படிப்பு எப்ப முடியுதோ நிதானமா அழைச்சிட்டு வாங்க.." என்றார்.

"மாமாவே சொல்லிட்டாரு.. நீ வா..." என்றவனை இன்னமும் அவள் நம்பமுடியாது பார்த்துக்கொண்டிருக்க.

அவளது கையினை பற்றி இழுத்தவன் "வான்னு சொன்னேன்.." என்றான் பற்களை நெருமியவாறு.


அதை கண்டுகொள்ளாதவர்
"கவலைப்படாம போயிட்டு வாம்மா... நல்ல நோக்கத்தோட தானே மாப்பிள்ளை கூப்பிடுறார்... நான் எதுவும் நினைக்க மாட்டேன்." என்றார் தாமிரா தயங்கம் காட்டுவது... தான் தவறாக நினைத்துவிடுவேனோ என்றெண்ணுகிறாள் என்று.

அதன் பின் என்ன செய்துவிட முடியும்..? வெறுமனையே தலையசைத்தவளுக்கு ஏகப்பட்ட குழப்பங்கள்..

அவன் கைபிடியிலேயே இருந்ததனால்... அவன் அசைவிற்கே அவளால் அசைய முடிந்தது. கார் வரை அழைத்து வந்து முன்புற கதவை திறந்துவிட்டவன்..

"ஏறு...!" என்றுவிட்டு மற்றைய பக்கமாக சென்று டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டவன்..

"அப்போ நாங்க போயிட்டு வரோம்.." என்று பொதுவாக கூறிவிட்டு வண்டியை கிளப்பினான்.

வண்டி கிளம்பி அரைமணி நேரம் கடந்தாயிற்று.. எதுவுமே பேசாது சாலையினையே வெறித்திருந்தவள் அமைதியை கலைக்கும் விதமாய்.. யாருமற்ற சாலையிலேயே ஹாரனை ஒலிக்க விட்டவன் புறம் பார்வையினை நகற்றியவள் ஏன் என்பதாய் பார்த்தாள்.

"என்ன...?" என்றான் இன்னமும் அனல் தெறித்த வார்த்தைகளை துப்பி.

எதிர்த்து வாதாட மட்டுமில்லை.. அவனிடம் கேட்பதற்கு பல வினாக்களும் தேன்றியது தான்.. இருந்தும் இன்று முழுவதும் பார்க்கும் ஆத்விக் பழைய ஆத்விக் இல்லையே..
ஒன்றுமில்லை என தலையினை அசைத்துவிட்டு மீண்டும் சாலையனை வெறிக்க தொடங்கினாள்.

"எதுக்கு இப்போ அமைதியா வார..? கேட்குறதுக்கு நிறைய கேள்வி இருக்குமே..!
கண்டிப்பா இருக்கும்.... ஆனா என்கிட்ட தான் பதில் இல்லை..

எனக்கு பிடிக்கல... அவனும் அவன் மூஞ்சியும்.. அவனை பார்க்க நல்லவன் போலவா தெரியிறான்..? அன்னைக்கு கூட உன்னை அவன் பார்த்தான் பாரு... அப்பவே சந்தேகப்பட்டேன்.. தாலியை கழட்டி எறிஞ்சிட்டு வருவியாம்.. அவன் நல்லபடியா பார்த்துப்பானாமா...? அதுவும் வேற எங்கயாச்சும் போயி பார்த்துப்பாராமா..? மூஞ்சி... அவனை பார்த்தா நல்லா பார்த்துப்பான் மாதிரியா இருக்கு.. சுத்த பொறுக்கி.

இன்னொருத்தன் பொண்டாட்டிக்கிட்ட எப்பிடி பேசுறதுன்னு கூட தெரியாத நாயி...

அவனை எல்லாம் நம்பி சுவாதிய கூட விடமுடியாது.
உன்னை எப்பிடி விடமுடியும்..? அதான் கூடவே அழைச்சிட்டு வந்திட்டேன்.

உன் பெரியைய்யாவ பார்க்கணும்னா சொல்லு.. நானே அழைச்சிட்டு போயி.. அழைச்சிட்டு வரேன்... அவன் இருக்க வீட்டில தங்கிற வேலை வைச்சுக்காத." என்றான்.

(லூசு பயலே என்னடா பேசுற..? அவ எங்கடா தங்க போறேன்னு சொன்னா..? நீ தானேடா அவ உனக்கு வேண்டாம்னு அவளை அங்கேயே விட்டுட்டு வர முடிவு பண்ண.. ஏதோ அவதான் ஆசைப்பட்டா மாதிரி பேசிட்டிருக்க)

அவளும் அதைத்தான் நினைத்தாள் போல... திரும்பி அவனை பார்த்தாள்.

"என்ன.. நான் சொன்னது புரியுதுல்ல..?" என்றான்.

கேட்க நன்றாக வாயில் வந்தது. ஆனால் ஏனோ பேசத்தோன்றவில்லை.. பதில் பேசாது சாலைக்கு பார்வையினை பதித்தாள் தாமிரா.

அதன் பின் அவனுமே பேசவில்லை..
 
Top