• வைகையின் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

11. பார்கவி முரளி - ஊடல் நீங்கி காதல் கொள்வோமா?

Barkkavi

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 3, 2021
Messages
17
ஊடல் நீங்கி காதல் கொள்வோமா?ஊடல்! அதுவும் முதல் ஊடல்! இத்தகையதாக இருக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை தான்.உள்ளம் இரண்டும் ஒன்றென அன்றில் பறவைகளாக சுற்றித் திரிந்தவர்கள் இருவரும். அவர்களை சுற்றி இருப்பவர்களே, ‘ஜோடிப் பொருத்தம் செம’ என்றும், ‘மேட் ஃபார் ஈச் அதர்’ என்றும் பாராட்ட, இப்போது நினைத்தால் அதுவே திருஷ்டியாக மாறியிருக்க கூடுமோ என்ற எண்ணம் எழுவதை தடுக்க முடியவில்லை அவனால்.எப்போதும் சிரித்த முகமாக, எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் நேர்மறை எண்ணங்களுடன் அப்பிரச்சனைக்கான தீர்வை ஆராய்பவனுக்கு, இப்போது இதிலிருந்து எப்படி மீள்வது என்றே தெரியவில்லை.தீர்வை ஆராய்வதற்கான சந்தர்ப்பத்தை தான் அவள் தரவே இல்லையே!“இன்னொரு முறை காதல்னு என் முன்னாடி வந்தா, இங்கிருந்து கண்காணாத தூரத்துக்கு போயிடுவேன்.” என்று மிரட்டியல்லவா வைத்திருக்கிறாள்.ஏதோ இங்கிருப்பதால் அவளின் தரிசனமாவது கிடைக்கிறது. சொல்லாமல் கொள்ளாமல் சென்று விட்டால், எங்கே என்று தேடுவான்?அவன் மூளை இந்த நினைவுகளால் சூடாகிப் போக, அதை தணிக்கவும் அவளையே நாடினான்... நினைவுகளால்!இருவரும் காதலித்த தருணங்கள்... அவர்களின் வாழ்க்கையின் வண்ணமிகு பக்கங்கள் அல்லவா?தங்களது நண்பர்களுக்காக அந்த பிரபல குளம்பிக் கடையில் காத்திருக்க, இருவரின் நண்பர்களும் வராமல் சதி செய்ய, இறுதியில் இருவரும் அந்த முதல் சந்திப்பில் நண்பர்களாகிப் போயினர். காலவோட்டத்தில் காதலை பகிர்ந்த அந்நொடி, இந்த சந்திப்பே இருவரையும் இணைக்க கடவுள் போட்ட முடிச்சு என்றும் நினைத்தனர். அது பிழையோ?காதலை பகிர்ந்த நொடி!ஆம், நண்பர்களாக இருந்தவர்கள் காதலர்களாக தங்களை உணரத் துவங்கியதுமே, அதை ரகசியமாக பாதுகாக்க எண்ணி மனதிற்குள் பதுக்க, அமிழ்த்த அமிழ்த்த வெளிவரும் தண்ணீரைப் போல, மூச்சு முட்டி வெளியே சொல்லியும் விட்டனர், அதே குளம்பிக் கடையில்!அதில் ஆச்சரியம் என்னவென்றால், இருவரும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான பரிசுகளை கொடுத்து காதலை பகிர்ந்திருக்க, அந்த காட்சியும் அவன் கண்முன் விரிந்தது.மேசையின் இரு பக்கமும் அமர்ந்திருந்தவர்களை மௌனத்துடன் தயக்கமும் ஆட்கொண்டிருக்க, அதை கலைத்தவாறு, அவர்கள் கேட்ட குளம்பியை எடுத்து வந்திருந்தார் அந்த பணியாளர்.அவர் மாற்றி வைத்த கோல்ட் காஃபியையும், வென்னிலா லாட்டேவையும் தங்களுக்குள் பரிமாறியவரிகளின் காதலும் அங்கு பரிமாறப்பட்டது, கண்களினால் மட்டும்!மற்றவரைப் பார்ப்பதும், பானத்தை விழுங்குவதுமாக அவர்கள் இருக்க, இம்முறை இருவரையும் கலைத்தது அவரவர்களின் அலைபேசி ஒலி.இருவரின் நண்பர்களும், ‘காதலை சொல்லிவிட்டீர்களா?’ என்று அலைபேசியில் அனத்த துவங்க, அதை பொறுக்க முடியாமல், அவர்களின் அழைப்பை துண்டிக்காமலேயே வார்த்தைகளில் பரிமாறிக் கொண்டனர் காதலை!“சகி (சகா), ஐ லவ் யூ!” என்று இருவரும் ஒரே நேரத்தில் கூறி, தங்கள் கைகளிலிருந்த பரிசுகளை நீட்டியிருந்தனர்.அவன் அவளுக்கென வாங்கியிருந்தது, இரு கரங்கள் கோர்த்தபடி இருக்கும் மோதிரம். அவள் அவனுக்கென வாங்கியிருந்தது, இரு கரங்கள் கோர்த்தபடி இருக்கும் காப்பு.அந்நிகழ்வை எதிர்பார்க்காத இருவருமே, வியந்து, திகைத்து, சிரித்து, மகிழ்ந்து, வெட்கி என்று உணர்வுக்குவியலாக மாறிப்போக, அந்த குவியலிலிருந்து எப்படி மீண்டனர் என இருவருக்குமே நினைவு இல்லை.இன்று வரை நினைவில் நிறைந்திருப்பது ஒன்று மட்டுமே, அது அவர்களின் கோர்த்த கரங்களே!காதல் நினைவுகளில் தன்னை மூழ்கடித்துக் கொண்டவன், “என்னை இவ்ளோ காதலிச்சுட்டு, எப்படி டி அப்படி உன்னால பேச முடிஞ்சது?” என்று வாய் வலிக்க கத்தினான்.அவனைக் கூறுபோடும் ஊடல் நினைவும் மெல்ல அவன் மனதிற்குள் விரிந்தது.அதே குளம்பிக் கடை! எங்கே காதலை பரிமாறினரோ, அதே மேசை!வித்தியாசம் என்னவென்றால், அன்றிருந்த பரவசம் இருவரின் வசமும் கிஞ்சித்தும் வாசம் செய்யவில்லை.அவனே முதலில் வாய்ப்பூட்டை திறந்தான்.“போன்ல என்ன சொன்ன?” என்றவனின் அனைத்து உறுப்புகளும் கோபத்தை கக்குவது போலிருந்தது.அவளோ அவனை நிமிர்ந்தும் பாராமல், “லெட்ஸ் பிரேக்கப்!” என்று வார்த்தை மாறாமல் அதை பகிர்ந்தாள்.இலட்சம் பூக்களை தலைமீது கொட்டிய உணர்வை கொடுத்த அதே இடத்தில், எரிகங்குகளை உடல் முழுக்க வீசியிருந்தாள் பாவை.அப்போதும் கோபத்தை வார்த்தைகளில் வெளியிடாமல், “திடீர்னு என்ன காரணம்?” என்று கேள்வியை சிறிதாக முடித்துக் கொண்டான்.அவளோ, “எனக்கு பிடிக்கல.” என்று அவர்களின் உறவையே முடித்துக் கொள்ளும் முடிவில் பேச, அவன் கோபம் வாய் என்னும் எல்லையைக் கடந்து வார்த்தை வடிவை பெற்றது.“ஊருக்கு போறதுக்கு முன்னாடி இருந்த பிடித்தம் இப்போ இல்லாம போச்சுன்னு சொன்னா, அதை நம்ப நான் முட்டாள்னு நினைச்சியா?” என்று ஆரம்பித்தவன், காதல்(லி) தந்த வலியினால், ஆற்றாமையில் திட்டித் தீர்க்க, அதையே காரணமாக பற்றிக் கொண்டாள் அவள்.“ச்சே, இப்போவே என்னை இவ்ளோ திட்டி கேவலமா பேசுற, உன்கூட வாழ்க்கை முழுக்க இருக்கணும்னு நினைச்சாலே பயமா இருக்கு. இனிமே, என் பின்னாடி வந்து டார்ச்சர் பண்ணாத.” என்று அவள் அங்கிருந்து கிளம்பிவிட, அவனோ அவளின் இதழ் உதிர்த்த வார்த்தைகளால் காயப்பட்டு அதே இடத்தில் தேங்கி விட்டான்.காயப்பட்ட புலியை போல, அவனும் மீண்டும் மீண்டும் ரணத்தை கீறி வலியை அதிகப்படுத்திக் கொண்டான்.இதோ இந்த ஒரு வாரம், அவன் எப்படி கழித்தான் என்றால் அது அவனிற்கே தெரியாது.மாடர்ன் தேவதாஸ் என்று கூறும் அளவிற்கு அவள் நினைவில் தன்னை புதைத்து தன்னிலை இழந்து இதே போல தான் பிதற்றிக் கொண்டிருக்கிறான்.மதுவையும் புகையையும் மட்டுமே நாடவில்லை. அதற்கு காரணமும் அவள் தானே!“நோ ஸ்மோகிங், நோ டிரிங்கிங்! நான் இருந்தாலும் சரி, இல்லாம போனாலும் சரி!” என்று கறாராக சத்தியம் வாங்கியதால், அதைக் காப்பாற்ற வேண்டி மட்டும் அந்த பக்கம் செல்லவில்லை.அதை நினைத்தவன் சட்டென்று எழுந்தமர்ந்து, “இல்லாம போனாலுமா? இல்லாம.... போயிடுவளா..?” என்று எதையெதையோ பிதற்றியவனின் கைகளை தன்னிச்சையாக தன்னவளிற்கு அழைப்பு விடுத்தது.போதை ஏற்றாமலேயே போதையில் இருந்தான் அவளின் நினைவால்!மறுபுறம் அழைப்பு ஏற்கப்பட்டதும், “சகி... சகி, உனக்கு எதுவும் பிரச்சனையா? உடம்பு சரியில்லையா? அதான் பிரேக்கப் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டியா? எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு சகி. நாம சேர்ந்தே ஃபேஸ் பண்ணுவோம். இதைக் கூட நீதான டி சொன்ன? பிளீஸ் டி, என்னை தனியா தவிக்க விட்டுடாத.” என்று பேசியபடி இருக்க, மறுமுனையோ அமைதியாக இருந்தது.மௌனத்தை அவள் இல்லை என்று தவறாக மொழிப்பெயர்த்தவனோ, “ஹலோ சகி... சகி..” என்று கத்தியவாறே சோர்வில் தூங்கிப்போக, அவன் வார்த்தைகள் இப்போது அவளை வதைத்துக் கொண்டிருந்தது.“சாரி டா சகா, என்னால... என்னால... உன் வாழ்க்கை பாழாகக் கூடாது. நான் உன் வாழ்க்கைல இல்ல டா. என்னை ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்துடேன் பிளீஸ்.” என்று அவன் தூங்கி விட்டான் என்று நினைத்து, அவள் மென்குரலில் பேச, “எனக்குள்ள ஆழமா புதைஞ்சிருக்க உன்னை எப்படி டி மறக்க முடியும்?” என்று அவனின் குரல் கேட்க விதிர்த்து போனாள் அவள்.சில நொடிகள் அமைதியில் கழிய, அப்போது தான் புரிந்தது அவன் தூக்கத்தில் பேசியிருக்கிறான் என்று!உறக்கத்திலும் தன்னை நாடும் அவனை எண்ணி நியாயமாக கர்வப்பட வேண்டும். ஆனால், கஷ்டப்படுகிறாள் அவள்!காரணம்? அவள் மனதிலும் உடலிலும் உண்டான ரணம்!
 

Barkkavi

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 3, 2021
Messages
17
மறுநாள் வழக்கம் போல தன் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தவளை அதிர்ச்சிக்குள்ளாகியது அவனின் வருகை.அவளிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வந்திருப்பான் போல, அவன் முகம் அத்தனை தீவிரமாக இருந்தது.தூரத்தில் இருக்கும்போது அவனை விழிகளின் வழியே தனக்குள் நிரப்பிக் கொண்டவள், அருகில் அவனை எட்ட நிறுத்த வேண்டி, முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டாள்.“எதுக்கு இங்க வந்துருக்கீங்க?” என்று பன்மையில் தூர நிறுத்தியவளை, கூர்விழிகளால் அளவிட்டான் அவன்.அவன் பார்வை அவளின் ஆழ்மனதை துளையிட்டு, ஆழத்தில்.அமிழ்ந்து கிடக்கும் ரகசியங்களை அம்பலப்படுத்த திட்டமிட, அவன் ஒற்றை பார்வையில் கலவரமானாள் பெண்ணவள்.அவன் வார்த்தையாக எவ்வித மறுமொழியும் கூறாமல் இருக்க, “ப்ச், எனக்கு நேரமாச்சு. நான் கிளம்புறேன். திரும்ப சொல்றேன், மறுபடியும் மறுபடியும் என்னை டிஸ்டர்ப் பண்ணா, நான் இங்கிருந்து கிளம்பிடுவேன்.” என்று மீண்டும் அவள் மிரட்டலை ஆயுதமாக்க எத்தனிக்க, இம்முறை அதைக் கண்டு அஞ்சவில்லை அவன்.“நீ என் சகி இல்ல!” என்ற அவனின் ஒற்றை வாக்கியம் அவள் வைராக்கியத்தோடு போட்டிப்போடும் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.அவன் கூற்று புரியாமல் பேதை தத்தளிக்க, “என் சகி, எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லியிருப்பா. ஆனா, நீ... ப்ச், அவளை என்ன பண்ண? எங்க காதலோட சேர்த்து அவளையும் கொன்னு புதைச்சுட்டியா?” என்று அவன் அதிரடியாக வினவ, அவளோ பதில் பேச வார்த்தையின்றி தவித்தாள்.“உன்னால எப்படி டி நிம்மதியா இருக்க முடியுது? ஆனா, என்னால இருக்க முடியலையே! இந்த பிரேக்கப்புகான காரணம் என்னன்னு தெரியாம இந்த ஒரு வாரமா அல்லாடிட்டு இருக்கேன். அட்லீஸ்ட் அதையாவது சொல்லித் தொலையேன் டி. அந்த காரணத்தை வச்சு, நான் உனக்கு சரியானவன் இல்லன்னு என்னையே ஏமாத்தியாவது மிச்சம் இருக்க காலத்தை கழிச்சுடுவேன்.” என்று அவன் கூற, அவளோ, ‘நான் தான் டா உனக்கு சரியானவ இல்ல!’ என்று உள்ளுக்குள் உடைந்து மறுகினாள், வெளியே எஃகின் உறுதி தான்!ச்சே, இவ்ளோ சொல்லியும் உனக்கு என்னோட பேசணும்னு தோணலைல? உனக்கு தோணுறப்போ அதுக்கான வாய்ப்பு கிடைக்காமலும் போகலாம்.” என்று எச்சரித்து விட்டு அங்கிருந்து நகர, அவன் செல்லும்வரை பிரம்மப்பிரயத்தனம் மேற்கொண்டு இறுகியிருந்தவள், அவன் சென்ற பின்னே, உருகி விட்டாள்.எந்த இடத்தில் உறுதியாக இறுகி நின்றாளோ, அதே இடத்தில் மடங்கி அமர்ந்து கதறி தீர்த்தாள். அப்போது அவளின் கைகளில் அவள் பரிசளித்த அவன் காப்பு தட்டுப்பட, “உனக்கு கூட அவனோட இருக்க தகுதி இல்ல போல.” என்று கதறி அழ, “காதல்ல எங்க இருந்து டி தகுதி வந்துச்சு?” என்று அவன் குரல் அருகில் கேட்க, பதறி நிமிர்ந்தாள்.வாசலில் சாய்ந்து கொண்டு அவளை குற்றம்சாட்டும் பார்வை பார்த்திருக்க, எப்போதும் வசீகரிக்கும் அவன் உருவம், இப்போது திகிலை ஏற்படுத்தியது பூவைக்கு.“நேத்து நீ பேசினது எல்லாம் ஆட்டோமேட்டிக் கால் ரெக்கார்டிங் மூலமா கேட்டுட்டேன். இப்படி பேசினாலாவது உன் வாயில இருந்து ஏதாவது வெளிவரும்னு பார்த்தேன். ஹுஹும்... நீ மாறிட்டல சகி?” என்று கூற, எப்படி அவனை சமாளிப்பது என்று தெரியாமல் விழித்தாள் அவள்.“இப்போயாவது உண்மை காரணம் சொல்வியா?” என்றவன் அவளின் தயக்கத்தில், “சரி, உனக்கு ஒரு ஆஃபர் தரேன். நீ உண்மையான காரணத்தை சொன்னா, அது ஏற்குற மாதிரி இருந்தா, நானே உன்னை விட்டு விலகுறேன்.” என்றும் கூறினான்.அப்போதும் அவள் இல்லை என்று தலையசைக்க, “அப்போ நான் உன்னோட வாழ்றதை யாராலயும் தடுக்க முடியாது, உன்னால கூட!” என்று அவன் கூற, அவன் வார்த்தைகள் அவளை பைத்தியம் பிடிக்க வைப்பதாக மாற, “முடியாது... முடியாது... முடியாது! என்னால உன்கூட வாழ முடியாது. எனக்கு அந்த தகுதி இல்ல!” என்று கத்தினாள் அவள்.“எதை தகுதின்னு நீ குறிப்பிடுற சகி? கற்பா?” என்று அவன் நிதானமாக கேட்க, அவளோ திக்பிரம்மையுடன் அவனைப் பார்த்தாள்.“சொல்லு, எந்த தகுதி இல்லன்னு சொல்ற? உடலளவுலையா இல்ல மனசளவுலையா?” என்றவனின் கேள்விகளுக்கு அவளால் பதில் பகிர இயலவில்லை.“எதுவா இருந்தாலும் உடைச்சு பேசு சகி. சகின்னு உன்னை பெயர் சுருக்கத்துக்காக மட்டும் கூப்பிடல. ஆத்மார்த்தமா கூப்பிடுறேன். நீயும் என்னை அப்படி நினைச்சா, பிளீஸ் உன் மனசுல இருக்குறதை ஷேர் பண்ணு.” என்று அவன் கெஞ்சும் நிலைக்கே செல்ல, அதற்கு மேல் அவளால் அவனை வதைக்க முடியவில்லை போலும்.அவனருகே கீழே அமர்ந்தவள், இந்த ஒரு வாரமாக மனதிற்குள் பூட்டி வைத்து தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட ரகசியத்தை தன்னவனிடம் பகிர்ந்தாள்.“சகா, அன்னைக்கு ஊருக்கு போயிட்டு ரொம்ப ஹாப்பியா திரும்பி வந்தேன். வீட்டுல நம்மை பத்தி சொல்லிட்டேன். அப்பா உன்னை நேர்ல வந்து பார்க்க சொன்னாங்கங்கிற சந்தோஷமான விஷயத்தை உன்கிட்ட சொல்லணுங்கிறதுக்காகவே அப்பா காலைல போக சொல்லியும் கேட்காம நைட்டோட நைட்டா கிளம்பி வந்தேன். ஆனா... ஆனா...” என்றவள் விம்ம, அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான் அவளின் சகா.“ரிலாக்ஸ் சகி. உன் தயக்கத்தை உடைச்சு இந்த ஒருமுறை சொல்லிடு. அந்த கசடை உள்ளேயே வச்சுருந்தா ஆபத்து. வெளிய சொல்லிடு.” என்று அவளை ஊக்கினான்.அவன் சொல் கொடுத்த தைரியம் அவளை சொல்லத் தூண்டியது.“நைட் பஸ்ல அவ்ளோவோ கூட்டம் இல்லன்னாலும், என்னைத் தவிர ஒரு லேடியும் இருந்தாங்க. அதனால தான் அந்த பஸ்ல வந்தேன். ஆனா, கொஞ்ச நேரத்துல என்னாச்சுன்னு தெரியல, அந்த லேடியும் இறங்கிட்டாங்க. அப்போவும் எனக்கு பெருசா எதுவும் சந்தேகம் வரல. ஆனா, பஸ்ல இருந்த இரண்டு பேரோட பார்வையும் சரியில்ல. இதை பஸ் டிரைவர், கண்டக்டர் ரெண்டு பேருக்கிட்டயும் கம்ப்லைன்ட் பண்ணியும் அவங்க கண்டுக்கல. திடீர்னு ஒரு இடத்துல பஸ்ஸை நிறுத்தி, ‘பஸ் பஞ்சராகிடுச்சு’ன்னு இறக்கி விட்டுட்டாங்க. வேற ஏதாவது பஸ்ல ஏத்தி விடுவாங்கன்னு நம்பி, நானும் இறங்குனேன். ஆனா, நானும் அந்த ரெண்டு பேரும் இறங்குனதும் அந்த பஸ் வேகமாக கிளம்பி போயிடுச்சு. அந்த நட்டநடு ராத்திரில, ரெண்டு மிருகங்களுக்கு நடுவுல நான் தன்னந்தனியா நின்னதை யோசிச்சா, இப்பவும் படபடன்னு இருக்கு.” என்றவளின் தேகம் நடுங்க, அவளை இன்னமும் தனக்குள் இறுக்கிக் கொண்டான்.சிறிது நேரம் மௌனமே அங்கு ஆட்சி செய்ய, அவளுக்கான நேரத்தை அளித்து பொறுமையாக காத்திருந்தான் அவன்.“அந்த ரெண்டு பேருக்கிட்ட இருந்து தப்பிச்சு, எப்படியாவது உன்கிட்ட வந்து சேர்ந்துடனும்னு ரொம்ப போராடினேன் சகா. ஆனா... என்னை... அவங்க.... என் முயற்சி எல்லாம் வீணா போச்சு!” என்றவள், அப்போதாவது தன்னை விட்டு விடுவான் என்று காத்திருக்க, அவளின் எண்ணத்தை பொய்யாக்குவது போல அவனின் அணைப்பு இறுகியது.‘என்னை விட்டுடேன் டா!’ என்று மனதிற்குள் கதறியவள், வேகமாக வெறி கொண்டு அவனை தள்ளிவிட்டு, “காரணம் தான கேட்ட? ஐ வாஸ் ரேப்ட் ப்ரூட்டலி! அந்த காயம் இன்னும் மனசுல இருந்தும் போகல, உடம்புல இருந்தும் போகல. இப்போ சொல்லு, நான் உனக்கு தகுதியானவளா?” என்று வெறிகொண்டு அவள் கத்த, அவனோ நிதானமாக, வெகு நிதானமாக, “இதுக்கும் நம்ம லவ்வை பிரேக்கப் பண்ணத்துக்கும் என்ன சம்பந்தம்? இதுல எங்க இருந்து தகுதி வந்துச்சு?” என்று வினவினான்.அவன் கேள்வியில் திகைத்தவள் என்ன சொல்வதென்று தெரியாமல் விழிக்க, “இந்த சம்பவம் நடந்ததும் என்கிட்ட சொல்லியிருக்கணும். அதுக்கான சொல்யூஷனை நம்ம ரெண்டு பேரும் சேர்ந்தே யோசிச்சுருக்கலாம். நியாயமா நீ போலீஸ் கம்ப்லைன்ட் கொடுத்துருக்கணும். டாக்டர் கிட்ட போய் கவுன்சிலிங் எடுத்துருக்கணும். ஆனா, நீ பண்ணது என்ன? நம்ம காதலை பிரேக்கப் பண்ண. உனக்கு நம்ம லவ் அவ்ளோ ஈஸியா போயிடிச்சுல?” என்று அவள் மீதே குற்றம் சுமத்த, துவண்டு தான் போனாள் அவள்.தோய்ந்து விழ இருந்தவளை தன் கரங்களில் தாங்கிக் கொண்டவன், “இங்க பாரு சகி, நம்ம காதலுக்கான தகுதி நம்ம மனசு தான். உன் மனசு எவ்ளோ சுத்தமானதுன்னு அதுல இருக்க எனக்கு தெரியும். இப்போ சொல்றேன், உன்னைத் தவிர வேற யாருக்கும் என் வாழ்க்கைக்குள்ள நுழையுற தகுதி இல்ல. இதை நல்லா மூளைக்குள்ள ஏத்திக்கோ!” என்றான்.அவன் எவ்வளவு கூறியும், அவள் மனம் மாற மாட்டேன் என்று அடம் பிடித்தது.“இருந்தாலும், நான்... நான்...” என்று வார்த்தை வெளிவராமல் அவள் தவிக்க, “இப்போ என்ன, நானும் உன்னை மாதிரி விக்டிமா இருந்தா ஓகேவா?” என்று அவன் கத்தியிருக்க, நொடியும் தாமதிக்காமல் அவன் கன்னத்தில் தன் கரத்தை இறக்கியிருந்தாள்.அடித்த கரம் வலிக்கவும் தான், தன்னிலை அடைந்தவள், அடித்த இடத்தை தடவியவாறே, “ஏன்டா இப்படி?” என்று வினவினாள்.“பின்ன என்ன? இவ்ளோ சொல்றேன்... திரும்பவும் அதையே பிடிச்சு தொங்கிட்டு இருந்தா என்ன பண்றது? உனக்கு என் மேல நம்பிக்கை இருந்தா சொல்லு, நாளைக்கே உங்க வீட்டுல என் அப்பா அம்மாவை பேச சொல்றேன். இல்லன்னா, நான் முன்ன சொன்னது தான் நடக்கும். அப்போ எப்படியும் எனக்கு நீ வாழ்க்கை கொடுத்து தான ஆகணும்!” என்று அவன் கூற, “ச்சீ, அசிங்கமா பேசாத.” என்று அவனை அதட்டியவள் கொஞ்சம் மிஞ்ச, இவன் கொஞ்சி, கெஞ்சி ஒருவழியாக சம்மதிக்க வைத்திருந்தான்.பேச்சினிடையே நீள்சாய்விருக்கையில் அவளை தன் தோளில் சாய்ந்து அமர்ந்திருந்தவன், “சகி, நாம எதுக்கும் போலீஸ் கம்பலைன்ட் பண்ணலாம். உன்னை இந்த ஒரு வாரம் கஷ்டப்படுத்துனவங்களை சும்மா விடுறதா?” என்று அவன் கேட்க, அச்சத்தின் வெளிப்பாடாக அவளின் தேகம் நடுங்கியது.“வேணாம் சகா... வெளிய தெரிஞ்சா... அப்பா அம்மா... ரொம்ப கஷ்டப்படுவாங்க...” என்று அவள் தயங்க, அவனும் ஒரு பெருமூச்சுடன், “இப்படி பயந்தா, அந்த ராஸ்கல்ஸுக்கு எப்படி தண்டனை கிடைக்கும் சகி? உன்னை மாதிரியே எல்லாரும் இருந்துட்டா, அவனுங்களுக்கு இன்னும் வசதியா இருக்கும். தொடர்ந்து இதே மாதிரி தப்பை பண்ணிட்டு தான் இருப்பாங்க.” என்றான்.அவளோ இன்னும் தயக்கத்துடன், “வீட்டுல இது இன்னும் தெரியாது சகா.” என்று கூற, “அது தெரியுறப்போ தெரியட்டும் சகி. அப்போ நீ என்னவளா சட்டப்படி மாறியிருப்ப. நான் உனக்கு சப்போர்ட்டா இருப்பேன்.” என்றான்.“இது சொந்தக்காரவங்களுக்கு எல்லாம் தெரிஞ்சா..?” என்று அவள் இழுக்க, “நமக்கு கஷ்டம்னு வர நேரத்துல உதவுறவங்க தான் உண்மையான சொந்தம். நமக்கு உண்மையான சொந்தம் யாருன்னு தெரிஞ்சுக்க ஒரு சான்ஸ்னு நினைச்சுக்கோ.” என்றவன், அவள் மேலும் ஏதோ சொல்ல வர, அவளை தடுத்து, “இதுல நான் உன்னை ஃபோர்ஸ் பண்ண மாட்டேன் சகி. ரெண்டு நாள் யோசிச்சு கூட முடிவெடு. ஆனா, இதை நல்லா மனசுல பதிய வச்சுக்கோ... எப்பவும் உன்கூட நான் இருப்பேன்.” என்று நம்பிக்கை அளித்தான்.சட்டப்படி தண்டனை கிடைத்தாலும் இல்லை என்றாலும், அவளை கஷ்டப்படுத்திய கயவர்களுக்கான தண்டனையை மனதிற்குள் பதிவேற்றி விட்டான்.அவன் மனமோ, ‘என்னதான் நாகரிக வளர்ச்சி அடைஞ்சுட்டோம்னு மார்தட்டிக்கிட்டாலும், தனக்கு எதிரா நடக்குற குற்றங்களை வெளிய சொல்ல முடியாம தவிக்கிற அவலம் இன்னும் விட்ட பாடில்ல. அது சரி, பாதிக்கப்பட்டவங்களை தீண்டத் தகாதவங்களாவும், தப்பு செஞ்சவங்கன்னு தெரிஞ்சும் தைரியமா ரோட்டுல நடமாட விடுற சமூகத்துல தான நாம இன்னும் இருக்கோம்.’ என்று விரக்தியாக நினைத்துக் கொண்டது.“சரி நாம டாக்டர் கிட்டயாவது போவோம்.” என்று அவன் கூற, “நான் ஏற்கனவே செக்கப் போயிட்டு தான் இருக்கேன். ஒரு லேடி டாக்டர் தான் என்னை அங்க இருந்து கூட்டிட்டு வந்தாங்க. அவங்களே ட்ரீட்மெண்டும் பண்ணாங்க.” என்று கம்மிய குரலில் அவள் கூறினாள்.ஒரு பெருமூச்சுடன், “சரி வா, அவங்க கிட்டயே போலாம்.” என்று அழைத்துச் சென்றான்.செல்லும் வழியெல்லாம், “இனி என்கிட்ட எதையும் என்கிட்ட மறைக்க கூடாது. முக்கியமா, ‘எனக்கு நீ, உனக்கு நான்’ – இதை எப்பவும் மறக்கவே கூடாது. எந்த பிரச்சனைன்னாலும் என் ஞாபகம் தான் உனக்கு முதல்ல வரணும்.” என்று அவளிற்கே மனப்பாடம் ஆகும் வரை சொல்லியபடியே சென்றான்.“ஹையோ சாமி, இனி உன்னை விட்டு போகணும்னு நான் நினைக்கவே மாட்டேன்.” என்று பயணத்தின் முடிவில் அவளே சொல்லும்படி செய்து விட்டான் அவளின் சகா.


இனி என்ன, ஊடல் நீங்கிய காதலில் திளைத்திருப்பர் இருவரும்.
 

Mahi Abinandhan

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 11, 2021
Messages
12
Bubbly Akkav🥰🤧Epavum ipdi than hero heroine ah kastaa paduthuvingala🙄🥺Intha mathiri Victimsai meetkara Heroes irukarathala than intha ulagam konjamaavathu suthama irukunu ninaikaren... Sema story Akkaaa💜💯

All the very best Akkaa💚🥳
 

Barkkavi

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 3, 2021
Messages
17
Bubbly Akkav🥰🤧Epavum ipdi than hero heroine ah kastaa paduthuvingala🙄🥺Intha mathiri Victimsai meetkara Heroes irukarathala than intha ulagam konjamaavathu suthama irukunu ninaikaren... Sema story Akkaaa💜💯

All the very best Akkaa💚🥳
Dei nane eppoyavadhu dhan ipdi story ezhudhuren da 😍😍😍 True da 🥰🥰🥰 True love reserved them and vice-versa 😊😊😊 Tq so much da 😊😊😊
 

Vimala Ashokan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 9, 2021
Messages
228
கவி வாவ்.. செம்மையா இருந்துச்சு மா ஸ்டோரி.. நோ வேர்ட்ஸ் டூ சே
கங்க்ராட்ஸ்
 

Barkkavi

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 3, 2021
Messages
17
கவி வாவ்.. செம்மையா இருந்துச்சு மா ஸ்டோரி.. நோ வேர்ட்ஸ் டூ சே
கங்க்ராட்ஸ்
மிக்க நன்றி சிஸ் 😍😍😍
 
Top