• வைகையின் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

11. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
559
விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை..*

Mind_mirror
(Fathima)

அத்தியாயம் 12


வர்ஷன் சொன்ன விடயங்கள் அகரனுக்கு சரியானதாக பட்டாலும், அவனால் இன்னும் கொஞ்ச நேரம் இதை பற்றி நன்றாகவும், நிதானமாகவும் யோசிக்க வேண்டும் போல இருந்தது.

.

டான்ஸ் கிளாசோடு சேர்த்து, விடுதியும் ஆரம்பிப்பது எல்லாவற்றையும் அவளது பேருக்கு முழுதாக மாற்றுவது அவளே அத்தனையையும் நிர்வாகிப்பது என எல்லாவற்றையும் சொன்னதும் வர்ஷனை கேள்வியாக நிமிர்ந்து பார்த்தவன்,

"எல்லாம் சரி… ஆனா இதை எல்லாம் நீங்க எதுக்காக செய்யணும்? அவளால எப்படி உங்களுக்கு இதுக்கு எல்லாம் கடன் கழிக்க முடியும்?

இப்போ ஏதோ நீங்க ஒரு நல்ல எண்ணத்துல எல்லாமே செஞ்சிட்டீங்க… நாளைக்கு ஏதாவது பிரச்சனை வந்து, திடீர்னு எல்லாத்தையும் திருப்பி கேட்டா, அவளால எப்படி இவ்ளோத்தையும் ஈடு செய்ய முடியும்.?

உங்களுக்கே நல்லா தெரியும்... அவளுக்குன்னு இங்க எதுவுமே இல்லன்னு… எதிர் காலத்துல அப்படி எதுவும் ஆனா?
சத்தியமா அத அவளால சமாளிக்க முடியாது. தலைய தான் அடமானம் வைக்க வேண்டி வரும்…" என தன் நண்பியின் நிலையாய் விளக்கினான்.

நண்பியின் நிலையை விளக்கினான் என்பதை விட, வர்ஷன் ஏன் இதை எல்லாம் செய்கிறான் என அவனுக்கு ஒரு தெளிவான பதில் தேவைப்பட்டது.

நல்ல மனம் கொண்டவன் தான். உதவும் சுபாவம் உள்ளவன் தான்.. ஆனால் அதற்காக இவ்வளவு தூரம் இறங்கி, தன் பணத்தை இவ்வளவு இறைத்து செலவு செய்கிறான் என்றால், ஏதேனும் காரணம் இருக்க வேண்டும் அல்லவா?

அவன் ஏதேனும் எதிர் பார்த்து செய்வதாக இருந்தால், அதை எம்மால் நிறைவேற்ற முடியுமா? என்றும் பார்க்க வேண்டுமே என நினைத்தான்.

அகரனின் எண்ணவோட்டம் வருஷனுக்கு நன்றாகவே புரிந்தது. அவன் தான் இத்தனை காலம் அகரன் யாழினிக்காக, எந்தளவு தூரம் யோசிப்பான்.. அவனுக்கு அவள் எந்தளவு முக்கியமானவள் என எல்லாவற்றையும் கூடவே இருந்து பார்க்கிறானே.

சேரில் சாய்ந்து அமர்ந்து கொண்டு, அகரனை உற்று நோக்கினான் வர்ஷன்.

அதை கண்டு கொண்ட அகரன் மனதுக்குள்,
'சரி… ஆரம்பிச்சிட்டாரு… என்ன சைட் அடிக்க… இதை எப்போ தான் விடப்போறாரோ தெரில… இவரு பாக்குற பார்வையே வித்தியாசமா இருக்கே… போற போக்க பார்த்தா நானே இவரோட பார்வைல விழுந்துருவேன் போல… என்ன ஒரு பொண்ணு சைட் அடிச்சத விட இவரு சைட் அடிச்சது தான் அதிகம்… என்ன ஒரு அதிஷ்டசாலி நான்…' என தன் நிலைய பற்றி நினைத்து உள்ளுக்குள் சிரித்து கொண்டான்.

அவனையே பார்த்து கொண்டு இருந்த வர்ஷன், அவனது மெயின் வாய்சை கேட்ச் பண்ணி கொண்டது போல,

"ரொம்ப வருத்தப்படாத… என்ன விட உன்ன நல்லா ரசிக்கிற கொஞ்சுற ஒரு பொண்ணு கூடிய சீக்கிரமே உனக்கு கிடைப்பா… வெயிட் பண்ணு தம்பி பாப்பா… உனக்கு இப்போவே என்ன அவசரம்? அது தான் அண்ணா நானே இன்னும் ஒண்டியா இருக்கேன்ல… எனக்கு அப்புறம் நீ தான்…" என்றான்.

அதை கேட்டது உதட்டை சுழித்து பழிப்பு காட்டியவன்,

"ஹுக்கும்… வெயிட் தானே பண்றேன் பண்றேன்… முதல்ல நீங்க ஒருத்தர புடிங்க…" என்றான்.

அதை கேட்டது அசடு வழிந்தான் வர்ஷன்.

அவனது அத்தகைய செய்கை சந்தேகத்தை உண்டு செய்ய, ஒற்றை புருவம் உயர்த்தி கேள்வியாய் நோக்கியவன்,

"இப்போ இதுக்கு இப்படி இளிக்கிறீங்க? எனக்கு தெரியாம ஏதாவது நடந்து இருக்கா?" என கேட்டான்.

திருட்டி முழி முழித்த வர்ஷனோ, தொண்டையை செரும, அவனை துளைப்பது போல பார்த்து கொண்டிருந்தான் அகரன். அவனுக்கு ஏற்கனவே சில சந்தேகங்கள் இருந்தாலும், அதை வர்ஷனின் வாயாலே கேட்டு கொண்டால், இன்னும் நிம்மதியாக இருக்கும் என நினைத்தான்.

"சார்… எதையோ முழுங்குறீங்கன்னு மட்டும் நல்லா தெரிது… உண்மையாவே நீங்க என் மேல பாசம் வெச்சு இருந்தா மறைக்காம சொல்லுங்க…" என எமோஷனல் ப்ளேக் மெயில் செய்தான்.

அவனது பேச்சில் முறைத்து பார்த்து விட்டு,

"அட எரும… என்னையவே ப்ளேக் மெயில் பண்ணுறியா? ஹும்… உன் மேல பாசம் இருக்கோ இல்லையோ… என்னோட இந்த விஷயத்துல பெரிய ஆளே நீ தான்… உன் கிட்ட தான் நான் வந்து முதல்ல பேசணும்… ஏன்னா நீ தான் இதுக்கு கார்டியன்…" என்றான்.

"சரி அப்போ சொல்லுங்க?" என சொல்லி விட்டு அகரன் அவன் சொல்லும் வரை காத்து கொண்டு இருந்தான்.

"அதில்லடா... உனக்கு யாழினிய பிடிக்கும் தானே?"
புருவத்தை சுறுக்கி அவனை ஏறிட்டவாறே,
"அதில என்ன சந்தேகம்?"

"இல்ல… எனக்கும் புடிக்கும்" என்றான்.

"அது தான் எனக்கு ஏற்கனவே தெரியுமே…" என்றான் அகரன் அவனை முந்திக்கொண்டு.

அதை கேட்டு முழித்தவன், "ஹாங்… என்னது?" என்றான் விளங்காதவனைப்போல. அகரனுக்கு எப்படி இது தெரியும் என்பதுவே அவனது யோசனை.

அப்போது தான் அவரசரத்தில் தான் உளறி விட்டதை உணர்ந்தவன்,

"இல்ல… சும்மா அவளை உங்களுக்கும் புடிக்கும்னு எனக்கு தெரியும்…" என்டு சொன்னேன்.

ஓஹ் என்றவன்,
"ஓகே… நான் டைரேக்டா விஷயத்துக்கு வரேன்…" என்றவனது பேச்சில், அகரனின் இதயதுடிப்பு வேகமானது. அவனும் அவன் சொல்வதை மிக சிரத்தையாக கேட்க தயாரானான்.


"நான் யாழினிய லவ் பண்றேன் அகரா…" என அவன் விழிகளையே ஊடுருவியவாறு, மெல்லிய குரலில், அதே நேரம் உறுதியுடனும் சொன்னான்.

அதை கேட்டதும் அகரனின் முகத்தில் ஒரு சிறு புன்னகை தோன்றியது. ஆனால் அடுத்த நொடியே அந்த புன்னகை எங்கு சென்றதோ தெரியவில்லை.

முகத்தில் கடுமையை பூசி கொண்டவன்,

"சார்… ஆர் யு சூர்? உங்களுக்கு அவ மேல ஒரு சாப்ட் கார்னர் இருக்கு… அத நீங்க லவ்வுன்னு நினச்சிருப்பிங்க… சும்மா மனச குழப்பிக்காதீங்க…" என்றான். அவனும் வர்ஷன் உண்மையிலேயே தெளிவாக தான் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும் என நினைத்தான்.

அகரன் சொன்னதை கேட்ட வர்ஷன் ஒரு பெருமூச்சை விட்டு விட்டு,

"என்னோட உணர்வுகளை வேறுபடுத்தி பாத்துக்க முடியாத அளவு முட்டாள் இல்ல நான் அகரா… எனக்கு நல்லாவே தெரியும்… நான் அவளை லவ் பண்ணுறேன்… ரொம்ப ரொம்ப ரொம்ப லவ் பண்ணுறேன்…

அவ மேல எனக்கு பரிதாபமோ கருணையோ இருந்தா, எனக்கு அவளை பார்க்கும் போது எல்லாம் அச்சோ பாவம்னு தான் நினைக்க தோணும்… ஆனா எனக்கு அப்படி எதுவும் தோணல… இந்த வயித்துக்குள்ள பட்டர்பிளை எல்லாம் வரும்னு சொல்லுவாங்களே…

ஹாங்… அப்படி தான் பீல் ஆகும்… அவளை பாக்கும் போது எனக்கு ஏதோ பூஸ்ட் போட்டது போல இருக்கும்… ஹார்ட் பீட் ஸ்பீடாகும்… மனசு சந்தோசத்துல துள்ளி குதிக்கும்… அவளை பாத்துட்டே இருக்கனும் போல இருக்கும்… அவளுக்கு இந்த உலகத்துல உள்ள எல்லா சந்தோசத்தையும் நான் கொடுக்கணும்னு ஆசை படுறேன்… அவ கிட்ட சொல்ல முன்ன, உன் கிட்ட சொல்லணும்னு நினச்சேன்… ஏன்னா அவளுக்கு இப்போ கார்டியன் மாதிரி இருக்கிறது நீ தான்… உன் கிட்ட தானே உன் பிரென்ட நான் கல்யாணம் பண்ணிக்க சம்மதமான்னு கேட்க முடியும்?"

தலையை ஆட்டி கொண்டு கேட்டு கொண்டே இருந்தவனும். வர்ஷன் ஒரு கேள்வியோடு நிறுத்தவும்,
"ஹும்… எனக்கு இதுல எந்த ஒரு பிரச்சினையும் இல்ல… ஆனா அம்முவோட முடிவு தான் என்னோட முடிவும்… அவ ஏதாவது வேண்டாம் மாட்டேன் அப்படி ஏதும் சொன்னா நீங்க விலகி போயிடணும்…" என்றான். வர்ஷனுக்கு அவனை பிடித்து குத்தம் வேண்டும் போலவே இருந்தது.

'ஏண்டா… எனக்கே திக் திக்குன்னு இருக்கு… நாளு வார்த்தை நல்லதா சொல்லாம எதுக்குடா வாய வைக்கிற?' மனதுக்குள் தான் திட்டி கொண்டான்.

தன் டையை சரி செய்து கொண்டு தன்னை சரி செய்து கொண்டவனோ,

"ஹும்.. ஓகே… அப்போ நான் நாளைக்கே அவளுக்கு ப்ரொபோஸ் பண்ண போறேன்… டான்ஸ் கிளாஸ்ல சர்ப்ரைஸ் ஒன்னு பிளேன் பண்ணுறேன்… அவளை கூட்டிட்டு வாறது உன்னோட பொறுப்பு…" என கூற, அகரன் சரி என சொல்லி விட்டு சென்றான்.

அவனுக்கு வர்ஷன் உண்மையிலேயே யாழியினை காதலிப்பது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதுவும் முதலில் அதை அவனிடம் சொன்னது, அவனுக்கு கூடுதல் சந்தோசத்தை கொடுத்தது.

யாழினியை பற்றி சொல்லும் போது வர்ஷனின் கண்கள் மின்னியதை அகரன் நன்கு கவனித்தான். தன் தோழியை உயிராக நேசிக்கும் ஒருத்தன் கிடைத்திருப்பது, யாழினியை விட அவனுக்கு தான் சந்தோசமாக இருந்தது. ஆக இனிமேல் அவள் நரகத்தில் இருக்க மாட்டாள் என நினைக்கும் போது அவனையும் அறியாமல் கண் கலங்கியது.

ஒரு புன்னகையுடன் கண்ணீரை துடைத்து விட்டு, வேலையை தொடர்ந்தான்.

வர்ஷன் ஆபீஸ் விட்டு வீடு வரும் போது, அவனது முகத்தில் உள்ள பிரகாசத்தை பார்த்து பார்வதி,

"அட...! என் மகனோட முகத்துல என்ன இன்னைக்குன்னு பார்த்து இவ்ளோ பிரகாசமா இருக்கு?" என்க,

"அம்மா… வந்ததுமே ஆரம்பிக்காதிங்க… நீங்க இப்படி அடிக்கடி கிண்டல் பண்ணிட்டே இருந்தா... அப்புறம் நான் இனிமே சிரிக்கவே மாட்டேன் பாத்துக்கோங்க…" என்றான் குறை படுவது போல் முகத்தை சோகமாக காட்டி.

"அச்சோ… என் செல்லத்துக்கு கோபத்த பாரேன்… சரி சொல்லு என்ன விஷயம்?" என விடாது கேட்க, அவரது கன்னத்தை பிடித்தவனோ,

"அம்மா… சொல்றேன்…உங்க கிட்ட சொல்லாமா, வேற யாரு கிட்ட சொல்றதாம்? ஆனா அப்பா வந்துரட்டும்…" என்றான்.
பார்வதியும் சரி என சொல்லி விட்டு சென்றார்.

வர்ஷன் ரூமுக்குள் சென்று, பிரெஷ் ஆனவன், வழமை போல யாழினியிடம் கொஞ்சம் பேசி விட்டு சாப்பிட சென்றான்.

எல்லாரும் இன்று வர்ஷன் சொல்ல போவதை கேட்கவென்றே அவசரமாக சாப்பிட்டு முடித்து விட்டனர். சாப்பிட்டு முடித்ததும் பார்வதியே ஆரம்பித்தார்.

"இப்போ சொல்றியா…? அம்மா நான் இருக்கேன்… அப்பாவும் இருக்காரு… உன் தங்கச்சியும் இருக்க… சீக்கிரம் சொல்லு…" என்றார் அவனை ஊக்கப்படுத்துவது போல.

தொண்டையை செருமிக் கொண்டவனோ, தான் யாழினி பற்றி யோசித்து வைத்திருப்பதை பற்றி சொன்னார்.

எல்லாரும் அமைதியாக அவன் சொல்வதை மட்டும் கேட்டு கொண்டு இருந்தனர். அவர்களது முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியையும் காட்டவில்லை.

உணர்சியற்ற அவர்கள் முகத்தினையே ஆராய்ந்தவாறே, "அன்ட்… நான் கூடிய சீக்கிரமே யாழினிய கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்…" என சொல்லவும் மூவரும் அவனை அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

அகரன் வீட்டுக்கு வரும் போது வீடே கம கம என மணம் வீசி கொண்டு இருந்தது. வாசத்தை மூக்கினுள் இழுத்து கொண்டே கிட்சனுக்குள் சென்றான்.

அங்கே யாழினி சமையல் கட்டில் தன் கை வரிசையை காட்டி கொண்டு இருந்தாள். அதை கண்டதும் அவனுக்கு ஆஹாங் சாப்பாடு… இன்னைக்கு ஒரு பிடின்னு நினைத்துக்கொண்டே அவளை ஆராய்ந்தவன் கண்களில் விழுந்தது, செருப்பு கூட போடாமல் நின்று கொண்டு இருந்த அவளது பாதங்கள் தான். அதை கண்டதும்,

"அடியேய் அம்மு…" என பெரிதாகவே கத்தினான்.

அதில் திடுக்கிட்டு திரும்பியவள் கையில் இருந்த கரண்டி கீழே விழு, அங்கி நின்றவனை கண்டவள்.

"அடேய்… வநனததும் வராததுமா ஏன்டா கத்துற?" என்றாள் அவளும் தன்பங்கிற்கு.

அவளை முறைத்தவனோ,
"உன்கிட்ட இப்போ யாரு இப்படி சமைச்சு படையல் போட சொல்லி கெஞ்சினா? எதுனா தடவை சொல்லி இருக்கேன்… நான் வந்து சமைக்கிறேன்னு… எவ்ளோ நேரமாடி இப்டி வெறுங்காலோட நின்னுட்டு இருக்க? கால் வலிக்கும்ல… அப்புறம் மறுபடியும் போய் கட்டு போட்டுட்டு வர வேண்டியது தான்… நடக்கவே வேணாம்னு சொல்லி இருக்கேன்… உனக்கு திரும்ப டான்ஸே கிளாஸ் போகணுமா வேண்டாமா? முழுசா சரியாகும் வர கொஞ்சம் அமைதியா இரேண்டி…" என திட்டி கொண்டே அவளுக்கு ஒரு சேரை எடுத்து கொண்டு வந்து கொடுத்தான்.

என்ன தான் அவள் நடக்க தொடங்கி இருந்தாலும், காலுக்கு அதிக வேலை இப்போதைக்கு கொடுக்க வேண்டாம் என்று தான் டாக்டஸ் சொல்லி இருந்தார்கள். அதனாலேயே இன்னும் டான்ஸ் கிளாசுக்கு கூட செல்லாமல் இருக்கிறாள்.

யாழினி சமைத்து வைத்து இருந்த எல்லாவற்றையும் அகரன் எடுத்து கொண்டு சென்று டைனிங் டேபிலில் வைத்து விட்டு, யாழினியையும் கூட்டி கொண்டு சென்று அமர்ந்தான்.

சாப்பிட்டு கொண்டு இருக்கையில் இடையில் அகரன் யாழினியிடம், "அம்மு… உனக்கு டான்ஸ் கிளாசுக்கு போகணும் போல தோணலயா?" என நைசாக கேட்டான்.

அதற்கு யாழினி உதட்டை சுழித்து பாவமாக தலையசைத்தவள்,

"தோணும் தான்… ஆனா போனா நான் சும்மா இருக்க மாட்டேனே… சும்மாவே ஆடணும்னு தோணும்… ஆனா ஆட கூடாது… அப்போ எனக்கு கஷ்டம்ல…" என்றாள் சிறு பிள்ளை போல.

அதை பார்த்து சிரித்தவன்,

"சரி… நாளைக்கு நான் கூட்டிட்டு போறேன்… நீ கொஞ்சம் ஆடலாம் தப்பில்ல… ஆனா அது என்ன டான்ஸ்னு நான் நாளைக்கு சொல்றேன்… காலைல பத்து மணிக்கு போல நாம வருவேன்… நீ ரெடியாகி இரு… ஓகேவா?" என கேட்க, யாழினி அகரன் வைத்திருக்கும் டிவிஸ்ட் என்ன என யோசித்து கொண்டே ஓகே என தலையை ஆட்டினாள்.

ஆராதனா புரண்டு புரண்டு படுத்து கொண்டு இருந்தாள். ஆனால் அவளுக்கு கொஞ்சம் கூடாது தூக்கம் வந்த பாடில்லை.

இது இன்று மட்டும் நடக்கும் விடயம் அல்ல… யாழினி அகரன் வீட்டில் இருக்கிறாள் என தெரிந்ததில் இருந்து அவள் இப்படி தான் இருக்கிறாள்.

அவளால் அகரனை பற்றி யோசிக்காமல் இருக்க முடியவில்லை. இத்தனை வருடம் அவன் இவளை ஏறெடுத்தும் பார்க்காமல் இருந்தாலும், இவளால் அவனை மறக்க முடியவில்லை.

ஒரு தலையணையை எடுத்து அணைத்து கொண்டே "ஹும்… நான் யாழினிக்கு பண்ணுற கொடுமைகள பார்த்து தானே உனக்கு என்ன பிடிக்காம போச்சு… அப்போ உனக்கு என்ன பிடிக்கணும்னா நான் அந்த வேலைகாரி கூட நல்லா இருக்கனும்… ஆனா எனக்கு அது ரொம்ப கஷ்டமாச்சே… என்னால அவ மூஞ்ச நேரா பார்த்து கூட பேச முடியாது… அந்த அளவுக்கு நான் அவளை வெறுக்கிறேன்… அப்படி இருக்கும் போது, எப்படி…?

ஹும்.. இது தான் ஒரே வழின்னா அந்த வழில போய் தானே ஆகணும்… சரி போவோம்… போய் பார்ப்போம்… என்ன வேணும்னா அகரன் முன்னாடி மட்டுமாச்சும் இனிமேல் அவள் கூட நல்லா இருக்குற மாதிரி நடிப்போம்…" என யோசித்தவள் குரூரமாக சிரித்து விட்டு, கண்களை மூடினாள்.


தொடரும்..
 
Top