• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Bindu sarah

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
65
அரைமணி நேரம் பிடித்தது சென்றடைய. வழி முழுவதும் பதட்டம்... அர்ஜுனுக்கு

சாராவுக்கு தூக்கம் வராமல் இருந்ததால் இடம் மாற்றி, கட்டிலுக்கு மறுபுறம் சென்று தூங்க ஆரம்பித்தாள்... அவள்படுத்திருந்த இடம் தவிர, அனைத்து இடங்களிலும் தேடியவனுக்கு எப்படி கிடைப்பாள், சாரா.

அவள் கைபேசி ஒலித்துக்கொண்டே இருந்ததில் ரித்திகா வந்து அவளை எழுப்பிவிட,

சாரா, முந்தைய நாள் உணவு உட்கொள்ளாததால் நன்றாக எழுந்தவள், மயங்கி ரித்தி மீது சரிந்தாள்.

சாராவை பற்றி அவனிடம் தெரிவிக்க எவ்வளவு முயர்ச்சி செய்தும், அவன் போனை எடுத்தால் தானேசொல்வதற்கு,

அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றாள், ரித்திகா. இரண்டு மாணவர்களின் உதவியோடு.

ரித்தி கொஞ்சம் திண்டாடித்தான் போனாள். இன்று பார்த்து குட்டிக்கு லைட் ஃபீவர் வேறு, இருவரையும் வைத்துகொண்டு நாள் முழுவதும் திண்டாடி விட்டாள். இதற்கு இடையில், அவனுக்கு கால் செய்து சலித்து போய் விட்டது ரித்திகாவிற்கு.

அர்ஜுனை சிலபல அர்ச்சனைகள் செய்து, நாள் முழுவதும் மருத்துவமனைலேயே நேரத்தை கடத்தினாள் ரித்திகா.

சாராவிற்கு இரண்டு ட்ரிப்ஸ் ஏற்றிய பின்பு ஓரளவுக்கு அவளுக்கு தெம்பு வர, எழுந்து அமர்ந்தாள்.

டாக்டர் ரித்திகாவை திட்டிக்கொண்டு இருந்தார் "சாப்பிட்டாங்களா இல்லையான்னு கூட பார்க்காமல் என்ன வேலை, செயிரிங்க, வீட்ல இருக்கவங்க பொறுப்பில்லையா?" என்று நிறைய திட்டுகளை வாங்கிக்கொண்டு சாராவிடம் வந்தாள்.

"ஏன் சாப்பிடல" ரித்திகா சாராவிடம் கேட்க.

"சரியா சாப்பிடல நானும் அவரும்...."என்று சொன்னதும் ரித்திக்கு கோபம் ஏகத்துக்கு எகிறியது.

"இதுல மட்டும் ஜோடி சேருங்க" என்று ரித்திகா திட்டிக்கொண்டு இருந்தாள்.

'என்ன காதலோ! பைத்தியக்காரத்தனம்' என்று ரித்திகா நினைத்துக்கொண்டாள். இவர்களை விட பைத்தியக்காரத்தனம் செய்த ரித்திகா சொல்கையில் அவள் மனமே ரித்திகாவிற்கு ஒரு கொட்டு வைத்தது.

'அவன் நல்லா மூக்கு மூட்ட சாப்டுட்டு இருப்பான். இவளை என்ன செய்வது... இந்த நிலையிலும் அவனை நினைத்துகொண்டு இருக்கிறாள்?' இதற்கு ஒரு முடிவு கட்ட நினைத்தாள் ரித்திகா.

" உங்களுக்கு என்னதான், ஆச்சி பிரியரா அளவுக்கு" என்று ரித்திகா கேட்க, எதையும் மறைக்காமல் அனைத்தும் கூறினாள், சாரா.

குழந்தையை ஒரு புறம் தூக்கி கொண்டு, சாராவை தாங்கியவாறு வெளியே அழைத்து வந்தாள் ரித்திகா. இவர்களை பார்த்ததும் அர்ஜுன் வேகமாக அவர்களை நோக்கி வந்தான்.

அவனை பார்த்ததும் ரித்திகாவுக்கு கோபம் கொழுந்துவிட்டு எரிய, இப்படியே விட்டால் என்னிலமை தான் இவளுக்கு... என்று முடிவு எடுத்தாள். சிறிது காலம் இவர்களை பிரித்து வைக்க எண்ணினாள் ரித்திகா.

அவளுக்கு அர்ஜுன் பற்றி தெரியும். அவன் கோபம் முழுதாக எப்போ செல்கிறதோ அதுவரை... கிறுக்குத்தனமாக எதாவது செய்துகொண்டே இருப்பான். அதுவே அவன் புரிந்து கொண்டு பிறகு அவர்கள் வாழக்கை சிறு சிறு சண்டை வந்தாலும் இவர்கள் வாழ்கை தெளிந்த நீரோடை போல இருக்கும் என்று நினைத்தாள் ரித்திகா.

சாராவை கண்ட சந்தோசத்தில் அவளை தாங்கி பிடிக்க சென்றவனை, தடுத்தது என்னவோ ரித்திகா தான்.

அர்ஜுனை பார்த்ததும் முகம் மலர்ந்தாள் சாரா.

ரித்திகாவின் செயலை பார்த்த சாராவிற்கு ரித்திகாவின் மீது சட்டென்று கோபம் வந்தது.

"உனக்கும் உன் தம்பிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை அர்ஜுன்...."என்று அவனுக்கு மட்டும் கேட்குமாறு சொல்லிவிட்டு பேச்சை மாற்றிவிட்டாள்.

"நீ பாப்பாவை பிடி, இனி நான் இவளை பார்த்துக்கிறேன்" வெட்டு ஒன்றாக பேசியவளை பார்த்து... சோகமாக முகத்தை வைத்துக்கொண்டான், அர்ஜுன்.

"இனி இப்படி செய்ய மாட்டேன்..." என்று அவன் முடிப்பதற்குள்.

"நிறுத்து... சொன்னதை செய்" என்றாள் ரித்து கோபமாக.

ரித்திகாவின் இந்த முகம் இருவருக்கும் புதுசு.....

சிரித்த முகமாக சிறகு இல்லாமல் சுற்றி திரிந்த அந்த தேவதையா, இவள்? என்று ஆச்சரியமாக பார்த்தனர் இருவரும்,

மறுபேச்சின்றி குழந்தையை வாங்கினான். ஒன்றாக பயணத்தை தொடர்ந்தார்கள்.

சாராவை பார்த்தவாறே கார் ஓட்டினான்.

அர்ஜுன் சாரா இருவர் மனதிலும்... ஏக்கம் எட்டி பார்க்க.

ரித்திகா அவர்கள் விரல் விரல் நுனி கூட பட அனுமதிக்கவில்லை.

இருவருக்கும் ரித்துவிடம் கோபம் வரவில்லை. அதற்கு மாறாக இவள் எப்போ எங்களை பேச விடுவா, என்று எதிர்பார்த்து இருந்தார்கள் இருவரும்... அந்த ஒன்றாக கலந்த இரண்டு காதல் உள்ளங்கள்.

அர்ஜுன் அவன் வீட்டை நோக்கி செல்ல.

"எங்கடா போற..." ரித்திகா கேட்க.

"நம்ம வீட்டுக்கு..." என்று கூறிவிட்டு கேள்வியாக அவளை பார்க்க?

ரித்தி அவனை அவள் வீட்டிற்கு செல்ல சொன்னாள்.

இவனும் மறுபேச்சின்றி காரை வலைத்தான். அவள் வீட்டை நோக்கி.

அர்ஜுன் அவர்களை விட்டுவிட்டு சாராவை அழைத்து செல்வது... என்று நினைத்துகொண்டு இருக்க, ரித்திகாவின் பிளான் வேறாக இருந்தது.

அவனுக்கு தெரியவில்லை... ரித்தி அவளை அனுப்ப போவதில்லை என்ற விசயம்.

'இவ என்ன அமைதியா வாரா' அவன் அவளை பார்க்க.

அவளோ அவன் பார்க்கும் சமயத்தில் கண்ணடித்து வைத்தாள்.

இது எங்க திருந்தபோது மானசீகமாக தலையை அடித்து கொண்டான்... ''ராட்சசி" என்றான் உதட்டை மட்டும் அசைத்து.

"அவ்வளோவு சீக்கிரம் உன்னை நிம்மதியா விடமாட்டேன் டா" அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினாள்.

அவளை முறைப்பதை பார்த்த ரித்திகா, அவனை முறைக்கும் போது, இவளுக்குள் சந்தோஷமோ சந்தோசம்.

இவளின் பக்கமும் ஆளு இருக்கிறது இனி புது தெம்போடு இவனை வம்பிழுக்க அவள் தயாரானாள்.

சிலபல பார்வை பரிமாற்றங்களுக்கு பின்னால்...ஒருவழியாக அவள் வீட்டை அடைந்தார்கள்.

அவர்கள் இறங்கவும் தூங்கி கொண்டு இருந்த குழந்தை சிணுங்க.

அவளை தூக்கி தட்டியவாறு இருவரையும் தொடர்ந்து உள்ளே சென்றான் அர்ஜுன்.

அர்ஜுன் அமைதியாக சாராவை பார்க்க.. ரித்திகா வெறியோடு அர்ஜுனை பார்த்தாள்.

"இங்க பாரு அர்ஜுன் நீ எனக்கு சொன்னதை திரும்ப உனக்கு சொல்றேன்,
அவளை இனி நான் பாத்துக்கிறேன்" என்றாள் ரித்தி.

"அவள் என்மனைவி நான் பார்த்துக்குவேன்" என்றான் பதிலுக்கு.

"நீ பார்த்த லட்சணம் எனக்கு தெரியும், ஒரு நாள் முழுக்க அவள் எதும் சாப்பிடல. அது உனக்கு தெரியுமா?" என்று கோபமாக கேட்டாள்.

மறுப்பாக அவன் தலை அசைக்க.

"நானும் ரெண்டு நாளாக எதும் சாப்பிடல, அது அவளுக்கு தெரியுமா?" மறு கேள்வி அவளை நோக்கி கேட்க...

சாரா தலைகுனிந்து நின்றாள்... இன்று முழுவதும் அவன் தேடி அலைந்ததை மறந்தும் அவர்களிடம் சொல்லவில்லை.
சொன்னாலும் நம்பமாட்டார்கள் என்று அவனுக்குத் தெரியும்.

சாராவை வெற்றிபெற வைக்க அவன் விரும்பவில்லை. அவன்மேல் அவளுக்கு நம்பிக்கை இல்லை என்பதை அவனால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, இப்போது வரை... ஆனால் அவளை மொத்தமாக பிரிந்து இருக்க முடியாது...

'சிறிது காலம் தூரம் இருந்தால்... சற்று காயம் ஆரும்,
ரித்து நினைத்தது சரிதான்'. என்று அர்ஜுன் நினைத்தான்.

"நானும்தான் சாப்பிடல.." என்றான் சாராவை பார்த்து கோபமாக

பாதி தூக்கத்தில் இவர்கள் பேசிக்கொண்டு இருந்ததை மாற்றி மாற்றி பார்த்து கொண்டு இருந்த குட்டி, அவன் சாப்பிடல என்று சொன்னது உடனே.

அர்ஜுனை விட்டு இறங்கி. அவளின் பிஸ்கெட் பேக்கெட் எடுத்துவந்து. தண்ணீரில் அந்த பிஸ்கெட்டை நனைத்து அவனுக்கு ஊட்டிவிட ஆரம்பித்தாள்.

வலிமை மிகுந்த அர்ஜுனை அசைத்து தான் பார்த்தது. அந்த சிறு பிஞ்சின் பாசம்.

இதை பார்க்க அவனின் தம்பிக்கு குடுத்து வைக்கவில்லை. அவனுக்காக இவன் மனமும் இறங்கியது இவ்வளவு வருட கோபமும் எங்கோ சென்று ஒளிந்துகொண்டது.

இதை அனைத்தும் வேறு ஒருவன் அவனது மொபைல் போனில் பார்த்துக்கொண்டு இருந்தான்...

அவன் முகமோ கோபத்தில் சிவந்தது. இரண்டு வருடம் என் மகளிடம் இருந்து பிரித்து வைத்த அர்ஜுன் மீது கோபம் பன்மடங்கு அதிகரித்தது.

சட்டென்று ரித்திகாவின் நிலை அர்ஜுனுக்கு உரைக்க... இதுவரை பொறுத்தது போதும் முதலில் இவங்க வாழ்வை சரி செஞ்சிட்டு. தமது வாழ்வை சரிசெய்யலாம் என்று முடிவு எடுத்த அர்ஜுன்.

"இனி என் முன்னாடி அவளை எதாவது சொன்ன நான் பார்த்துட்டு சும்மா இருக்கமாட்டேன் புரியுதா....?" என்றாள் ரித்தி

புரிந்தது என்பது போல. மண்டையை மண்டையை ஆட்ட.....

சாரா விற்க்கு அர்ஜுனை பார்த்து சிரிப்பு அடக்க முடியல... குழந்தையை கொஞ்சியவாறு சிரித்தாள்.

அதில் கடுப்பானவன் அவளை முறைக்க "அங்கே என்ன பார்வை ?" என்று அவனை முறைக்க கூட விடவில்லை ரித்தி.

"இங்க பாரு என்னை..." அவன் முகத்தை ரித்தி அவளை நோக்கி திருப்ப.

அவள் புறம் முகத்தை பாவமாக திருப்பினான்.

இந்த லுக் விட்டா நான் உன்னை நம்பிவிடுவேனா என்றது அவளின் பார்வை.

அதை புரிந்துகொண்டு வேறு புறம் திரும்பி பார்வையால் வீட்டை நோட்டம் விட்டான்.

ரித்தி சாராவை ஒரு பார்வை பார்த்து. அவள் குட்டியிடம் விளையாடி கொண்டிருந்தாள்.

அங்கு மாட்டப்பட்ட புகைப்படத்தை எடுத்து கொண்டு அவள் அறைக்கு சென்றாள் .

"போட்டோ மாட்டுவாங்கலாம்.
ஆனா புருஷன ஏத்துக்க மாட்ட இவ" அவள் காது படவே கூறினான் அர்ஜுன்.

"அவன் யாரு ? " என்று
யாராவது அவளிடம் இந்த புகைப்படத்தில் இருப்பது யார் என்று கேட்டால்... அவன் தாராவின் தந்தை என்று கூறி பேச்சை மாற்றிவிடுவாள்.

"இவள் ஒழுங்கு நான் மோசமானவன். என்ன ஒரு வில்லத்தனம் இந்த பொண்ணுங்களுக்கு ".

"என்ன டிசைன்டா இந்த பொண்ணுங்கலாம்" என்று புலம்பினான் அர்ஜுன்.
ரித்திகா அவனை முறைக்க.

"இந்த பொண்ணுங்கள புரிஞ்சிக்க... phd படித்தால் கூட..... ஜஸ்ட் பாஸ் கூட பண்ணமுடியாது, இந்த பாவப்பட்ட ஆண்கள்" என்று மொத்த ஆண்களுக்காக கொடியை தூக்கினான் அர்ஜுன்.

"இங்கு என்ன வேலை உனக்கு இடத்தை காலி செய்". ரித்திகா..... அவனை துரத்துவதிலே குறியாக இருக்க.

என்னதான் ரித்திகா நினைப்பது சரியாக இருந்தாலும் அர்ஜுனுக்கு சாராவை விட்டு செல்ல மனம் வராமல் "நான் அவள வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்" என்றான் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு.

சாரா ரெடி ஆனால் அர்ஜுனுடன் கிளம்புவதற்கு ரித்தி அவளை விடுவதாக இல்லை.

அர்ஜுன் கெஞ்சியும் ரித்தி விடுவதாக இல்லை.

சாரா முகத்தில் வந்து போன சிரிப்பை அவன் பார்க்க.

'என்னையே இப்படி கெஞ்சவிட்டுடாலே' என்று நொந்து போனான்.

தூங்கிக்கொண்டு இருந்த பூனையை அவள் சீண்டிவிட்டாள்.

கோவமாக அவளை முறைத்தவாரு... சென்றான்.

மறுநாள் இருக்கு உனக்கு எப்படியும் என்னிடம் தான் வரவேண்டும், அப்போ பார்த்துக்கொள்கிறேன்.... பார்வையால் அவளை மிரட்டி சென்றான்.

வாசலில் சென்றதும் சிரித்து கொண்டு சென்றான்.

"ரித்தி மிஷன் ஸ்டார்ட்...... உங்களை சேர்த்துவிட்டு அவளை வைத்து செய்யப்போகிறேன்..." என்று குதூகலமாக வீட்டை நோக்கி சென்றான்.

அம்மாவை சமாளிப்பது சுலபம் என்று நினைத்தேன். ஆனால் நடந்தது வேற, அவன் தனியே வருவதை பார்த்த, மீரா வேகமாக கதவை அடித்து மூடி சென்றார்.

சிறிதுநேரம் கழித்து கதவு திறக்கும் சத்தம் கேட்க திரும்பி பார்த்தான்.

அவனின் அன்னையோ அவர்கள் காலை சொன்னது போல அவர்கள் கைல லக்கேஜ் உடன் நின்று இருந்தார்.

"அம்மா வேண்டாம்மா.... அவ பாதுகாப்பா தான் இருக்கா. ரித்தி வீட்ல" என்றான்.

"ஏற்கனவே உன் தம்பி! இப்போ நீ அந்த பொண்ணை...., பேச முடியாமல் மீரா திணறினர்...இப்போ நிம்மதியா!! இருவருக்கும் ஒரே குணம்... இனி ஒரு நிமிடம் கூட நான் நீ இருக்கும் இடம் நான் இருக்கமாட்டேன்.

சொல்லி முடிக்கும் முன்பே அவன் கன்னத்தை நன்கு பதம் பார்த்து சென்றார், அவனின் அன்னை வீட்டைவிட்டு கிளம்ப தயாரானார்.
 
Top