• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

12. அம்புத நல்லாள்

Sahana Harish

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
49
அம்புத்ரா பற்றிய உண்மை பிரதியுமன் அறிய விட கூடாது என்று இவர்கள் பேசிக் கொண்டு இருந்த நேரம் "எனக்கு தெரிஞ்சி போச்சி அம்மா" என்று அங்கு வந்து நின்றான் பிரதியுமன்.

அவனின் தீடீர் வருகையால் இருவரும் பேந்த பேந்த முழிக்க மைத்ரேயன் தான் நிலைமையை சமாளிக்க பேச ஆரம்பித்தான் "என்னடா என்ன தெரிஞ்சி போச்சி உனக்கு?"

"இவங்க பண்ண வேலை தான்" என்றான் கோபமாய்.

'இவன் எதை பற்றி சொல்றான் ஒரு வேலை நாங்க பேசிட்டு இருந்ததை ஒட்டு கேட்டு இருப்பானோ? ச்சே ச்சே இவன் அப்படியெல்லாம் செய்ய மாட்டானே! ஒருவேளை நாங்க பேசிட்டு இருந்த நேரம் எதேச்சையா கேட்டு இருப்பானோ?' என்று யோசித்து கொண்டு இருந்தவன் இதற்கு மேல் மறைப்பது நடவாது என எண்ணி கொண்டு "பிரதி மாமி வேணும்னே எதுவும் செய்யல.. " என அவன் முடிக்க கூட இல்லை

"தெரியும்.. எல்லாம் இந்த அம்மா பண்ண வேலை தான்.. அவங்க பார்த்த பொண்ண நான் கல்யாணம் பண்ணிக்கனும்னு சாதாரண கேஸ்டிராபுல( gas trouble) செஸ்ட் பெய்ன்னு சொல்ல சொல்லி விமலா ஆன்ட்டி கிட்ட கேட்டு இருக்காங்க.. அவங்க தான் இவங்க பிரண்ட் ஆச்சே அதான் உடனே பொய் சொல்லியாச்சு.. உன்னால எத்தனை பேருக்கு கஷ்டம் பார்த்தியா? என்று மைத்ரேயனிடம் கூற ஆரம்பித்தவன் தனது அம்மாவிடம் முடித்தான்.

அதைக் கேட்டதும் தெய்வானை மைத்ரேயனின் கைகளில் கிள்ளி "டேய் லூசு பயலே நீயே மாட்டி விட்டு இருப்ப அவன் எதையோ சொல்றான் நீ ஏன் வாண்டட்டா போய் வம்ப வளர்க்குற? அவன் டிராக்குலையே போய் மடக்கு"

"ஆமா உன் பையன் சூப்பர் பீகர் பாரு நாங்க பின்னாடியே போய் மடக்க.."

"என் பிள்ளைக்கு என்னடா அவன் அழகன்டா"

"ரொம்ப தான் பே" என்று இவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருக்க அங்கே அவன் திட்டுவதை பொருட்படுத்தியது அங்கிருக்கும் சுவர் தான் எனலாம்.

எதேச்சையாக திரும்பி பார்த்தவன் இவர்கள் இருவரும் செய்யும் கூத்துக்களை கவனித்து விட்டான் அதில் மேலும் ஆத்திரமடைந்து" உங்களையெல்லாம் திருத்தவே முடியாது இங்க பாருங்க அம்மா விமலா ஆன்ட்டி நீங்க எதுக்காக இப்படி செஞ்சீங்கனு என்கிட்ட தெளிவா சொல்லியாச்சு நீங்க நினைக்கறது நடக்காது நான் லவ் பண்ற பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்.. நீ பார்த்த பொண்ணு பற்றி என் கிட்ட டிஸ்கஸ் பண்ணத விட இதோ இந்த மைத்து கிட்ட தான் பேசி இருக்கீங்க.. பேசாம அந்த பொண்ண இவனுக்கு கட்டி வச்சுடுங்க"

"எது.. கெட்டது குடி..இங்க பாரு உன்னால கல்யாணம் பண்ணிக்க முடியலன்னா போயிட்டே இரு என்னைப் பற்றி பேசற வேலையெல்லாம் வேண்டாம்" என்றான் கோபமாக.

அதைக்கேட்ட தெய்வானையோ " ஐயையோ மைத்து எனக்கு நிஜமாகவே நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்குடா அப்படியே கை தாங்களா படுக்க வை முடியல டா" என்றதும் அவன்" ஐயோ மாமி என்ன ஆச்சு? உன் பேச்சை கேட்காம இவன் என்ன இப்படி படுக்க வச்சிட்டானே! நீ என்ன அவ்வளவு கல்நெஞ்சகாரனா பாவி அம்மாவ பாருடா உன்னோட முடிவை மாற்றிக்கிட்டா என்ன?" என்றான் மைத்ரேயன்.

பேசாமல் தனது அன்னை அருகே வந்தவன்" அடச்சீ எழுந்திரு அம்மா ஹார்ட் இந்த பக்கம் இருக்கு உன்னை எல்லாம் வெச்சிட்டு எழுந்து வா வீட்டுக்கு போலாம்" என்று தலையில் அடித்துக்கொண்டு முன்னே அவன் செல்ல" நமது ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே" என்று வடிவேலு பாணியில் தெய்வானை பேசவும் சிரித்தவாறு அவரை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்ல ஆயத்தமானார்கள்.

வீட்டிற்கு வந்த பிறகும் பிரதியுமன் தனது அன்னையிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை அலுவலகத்திலும் இரண்டு வாரங்கள் வொர்க் பிரம் ஹோம் சொல்லிவிட்டு இருந்தான்.. தெய்வானையை பொருத்தவரை அவன் பேசாமல் இருப்பதே நல்லது என்ற நிலையில் தனது வேலைகளை செவ்வனே செய்து கொண்டிருந்தார்.. இதில் மைத்ரேயன் நிலைதான் இரண்டு பக்கமும் அடி வாங்கும் மத்தளம் போல் ஆனது.. அம்முவிடம் தானே பேசிக் கொள்வதாய் அவளின் அலைபேசி எண்ணை தெய்வானையுடன் கேட்டு வாங்கி வருமாறு மைத்ரேயனிடம் கடந்த ஒரு வாரமாக நச்சரித்து கொண்டிருந்தான்‌.. ஊருக்கு வந்து பல மாதங்கள் ஆன காரணத்தால் விஜயும் குருசாமியும் அவனை விடுப்பு எடுக்குமாறு துளைத்து எடுத்து விட்டனர்.. அதனால் அவனும் பத்து நாட்களாக அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தான்.. ஒரு வார காலமாக அவனிடம் எப்படியோ வெவ்வேறு காரணங்களை சொல்லிவிட்டு தப்பித்தவன் இன்று வசமாக சிக்கிக் கொண்டான்.

" ஏய் எரும மாடு அந்தப் பொண்ணு நம்பர கேட்டு வாங்கி கொடுன்னு சொல்லி ஒரு வாரம் ஆச்சு ஒரு பத்து நம்பர வாங்கி கொடுக்க உனக்கு எவ்வளவு நாள் தான் டைம் தேவைப்படுது?"

'ஐயையோ வசமா மாட்டிகிட்டேனே.. நம்பர கொடுக்கலன்னா கொன்னுடுவேன்னு இவன் மிரட்டுறான்.. நம்பர வாங்கி கொடுத்தா என்கவுண்டர் பண்ணிடுவேன்னு அவ மிரட்டுறா இதுல இந்த மாமி வேற அவன் வாயாலேயே அம்மு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்ல வைக்கிறது உன் பொறுப்பு அப்படின்னு என் தலைய பிடிச்சு கிட்டாங்க'

' ஏன் மாமி இண்டும் ஒரே பொண்ணு தானே அப்படின்னு கேட்டா?..ஆமாண்டா அது அவனுக்கு தெரியாது இல்ல அப்புறம் இத்தனை வருஷமா பெத்து வளர்த்த எங்களுக்கு என்ன மரியாதை இருக்கும் நானும் காதல் கல்யாணம் பண்ணவங்க தான்.. இவன் என்ன பண்ணி இருக்கணும்? அம்மு அங்க பார்த்தபோதே என்கிட்ட சொல்லி இருக்க வேண்டாமா? சரி அப்ப தான் சொல்லல நான் இங்க ஒரு பொண்ணு பார்த்து இருக்கேன்னு சொல்லும்போது அவன் மனசுல இருக்குறத பத்தி என்கிட்ட பேசி இருக்கலாம் இல்லையா? நான் என்ன கொடுமைக்கார அம்மாவா மைத்து? நிச்சயம் வரைக்கும் இரண்டும் ஒரே பொண்ணுனு அவன் கிட்ட நான் சொல்லவே மாட்டேன் தலையை பிச்சிகிட்டு சுத்தட்டும்.. ஒருவேளை நான் பார்த்த பொண்ணும் அவன் காதலிக்கிற பொண்ணும் வேற வேறயா இருந்தா கூட நான் கல்யாணம் அவங்க வீட்ல பேசி கல்யாணம் பண்ணி வச்சி இருப்பேன் அவன் இப்ப சொல்லல அதான் இப்படி பழிவாங்குறேன்" என்று நம்பியார் பாணியில் சிரித்தவரை வெட்டவா குத்தவா என்பது போல் பார்க்க மட்டும் தான் முடிந்தது அவனால்.

இதையெல்லாம் யோசித்துக் கொண்டு இருந்தவனின் கையில் நறுக்கென கிள்ளி இருந்தான் பிரதி.

" டேய் நான் என்ன கேட்டேன் நீ என்ன செய்யுற? அம்மா கிட்ட நான் பேசாம இருக்கறதுனால தான் நான் போய் கேட்காம இருக்கேன்.. அப்பாவ கேட்டா என்கிட்ட இல்லன்னு சொல்றாரு இப்ப நீ அந்த பொண்ணு நம்பர் வாங்கி தரல உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது"என்றான் கண்கள் சிவக்க.

'என்ன இவன் இவ்வளவு டென்ஷன் ஆகுறான்? வேற வழி இல்ல நம்பரை இவனையே கேட்டு வாங்கிக்க சொல்லுவோம்' என்று நினைத்து அதனை அவனிடமும் தெரிவித்தான்.

" ஏய் லூசு நான் போய் கேட்க மாட்டேன் நீயே கேட்டு வாங்கி கொடு"

" எப்பா சாமி உங்க விளையாட்டுல மாட்டிகிட்டு என்னால முடியலடா நீ நம்பர வாங்கி பேசு இந்த கல்யாணத்த நிறுத்து இல்ல நடத்து என்னால இனிமேலும் உங்க கூட குப்பை கொட்ட முடியாது..எப்படியோ போய் தொலைங்க எனக்கு சேனல இருந்து கால் வந்திருச்சு நான் நான் நாளைக்கு காலையில கிளம்பறேன்" என்றவன்" இரண்டு நாள்ல நிச்சியமாம் இப்ப வந்து நிறுத்த சொல்லுவாராம் போடா டேய்" என்று புலம்பியபடி அவன் முகத்தை கூடப் பாராமல் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி விட்டான்.

ஒரு கட்டத்திற்கு மேல் அமைதியாக இருக்க முடியாமல் தனது தாயிடம் சென்றவன்" அம்மா எனக்கு அம்மு நம்பர் வேணும் நானே டிரேக்டா போய் பேசிக்கிறேன்"

" என்னனு பேச போற?"

" எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல வேற பொண்ண லவ் பண்றேன் அதனால நீ உன் வழிய பாருன்னு சொல்ல போறேன்" என்றான் அவனும் வீம்பாக.

அதைக் கேட்டு அங்கு வந்த அனன்யா "பிரதிண்ணா நல்லா யோசிச்சிக்கோ உனக்கு ஏற்பாடு பண்ண கல்யாணம் வேண்டாமா?"

" ஆமா வேண்டாம் அது தேவலோக ரதியா இருந்தா கூட"

" டேய் நாளை கழிச்சி நிச்சயத்தை வச்சிட்டு இந்த மாதிரி பேசிட்டு இருக்க அறிவிருக்கா உனக்கு?" இது விஜி.

"அத்தை அதுக்காக நீங்க சொல்றத எல்லாம் கேட்டு ஆட நான் பொம்மை இல்ல" என்றான் கோபமாக.

" சரிப்பா அப்பறம் உன்னோட இஷ்டம்.. உன்னோட முடிவுல நீ தெளிவா இருக்க இல்லையா? இனி உன்னோட வாழ்கையை நீ தான் பார்த்துக்கணும் மறுபடியும் வந்து எங்க கிட்ட எந்த உதவியும் கேட்க கூடாது.. என்ன டீலா?"என்றார் கந்தசாமி.

" சரி உங்க யார்கிட்டயும் உதவி கேட்டு வந்து நிக்க மாட்டேன்.. அந்த பொண்ண இன்னைக்கு மெரினா பீச்சுக்கு கரெக்டா ஐஞ்சு மணிக்கு வர சொல்லுங்க" என்றவாறு பெரிய மலையை பிரட்டி போட்டது போல் ஆயாசமாக தனதறைக்குச் சென்றான்.

" மாமா என்ன இவன் இப்படி பேசுறான் திரும்பி ஒழுங்கா வருவானா?" என்றது வேறு யார் மைத்ரேயன் தான்.

"அது அவன் தலையெழுத்து.. ஏற்கனவே அவ இங்க நடக்குற கூத்தெல்லாம் லைவ்வா உங்க மாமி தான் சொல்லிடுறாலே..விடு எப்படியும் இரண்டும் ஒரே பொண்ணு தான்னு இன்னைக்கு தெரிஞ்சிடும்"

" அது சரி தான் மாமா ஆனா அவ அசிஸ்டெண்ட் கமிஷனர்னு தெரிஞ்சா?" என்றான் பீடிகையோடு.

"டேய்" என்றனர் மற்ற நால்வரும் அவசரமாக.

" வாய நல்லா சேனிடைசர் போட்டு அலம்பு.. அவனுக்கு இப்போதைக்கு தெரியாம நாம பார்த்துக்கலாம் கல்யாணத்துக்கு அப்பறம் அவனாச்சு அம்முவாச்சு" என்றார் குருசாமி.

" என்னவோ செய்யுங்க என் தலைய உருட்டாம இருந்தா சரி.. என் பாஸ் வேற கால் பண்ணிட்டாரு நான் இயர்லி மார்னிங் பிளைட்ல கிளம்பறேன்.. போய்ட்டு நாளைனைக்கு நிச்சியத்துக்கு வந்துருவேன்" என்ற அவனும் தனது வீட்டுக்கு செல்ல மற்ற நால்வரும் அங்கு குடும்பத்துடன் வந்து கொண்டிருக்கும் அம்புத்ராவிற்கு அழைத்தனர்.

"சொல்லு அனன்யா உங்க அண்ணன் என்ன சொல்றாரு?" என்ற கேள்வியில் இருந்தது நிச்சியமாக கேலியே.

" கிண்டல் பண்ணாதீங்க அண்ணி எல்லாம் உங்களாள தான்.. ஒழுங்கா உண்மைய சொல்லி இருந்தா இந்த சமாளிபீகேஷன்லாம் தேவையா?"

"பின்ன என்ன என்னை கனவுல லவ் பண்ணுவாராம் அப்பறம் நான் கிடைக்கலன்னு தோணிச்சுன்னா அத்தை சொல்ற பொண்ண கல்யாணம் பண்ணுவாராம் ஒருவேளை இரண்டும் வேற வேற பொண்ணா இருந்தா அப்ப என்னை லவ் பண்ணதுக்கு என்ன அர்த்தம்? நான் மூலை முடுக்கு எல்லாம் கரப்பான் பூச்சியை தேடுறா மாதிரி இவரை தேடிட்டு இருந்தா மைத்து சொன்னான்னு உடனே அத்தை கிட்ட ஓகே சொன்னான் அன்னைக்கு காலையில என்னை பார்த்தும் கட்டி பிடிச்சான்.. விளையாட்டா போச்சா உங்க அண்ணனுக்கு..?"

"இப்படி மாட்டிக்கிட்டீங்களே அண்ணி!" என்றவள் சிரிப்பு சத்தம் மட்டும் அங்கே கேட்கவில்லை.

அப்பொழுது தான் அவளுக்கு புரிந்தது அனைவரும் ஸ்பீக்கரீல் தான் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தனர் என்பது.. தான் சொன்னதை நினைவு கூர்ந்தவளின் முகம் செவ்வானமாய் சிவந்தது.

அனன்யாவிடமிருந்து அலைபேசியை வாங்கிய தெய்வானை "அடிக்கள்ளி அன்னைக்கு என் பையன் கட்டி பிடிச்சானா முத்தம் கொடுத்தானான்னு கேட்டதுக்கு பதிலே சொல்லல இப்ப உன் நாத்தனார் கிட்ட மட்டும் சொல்ற?"

"அய்யோ அத்தை அது அது.. வந்து.. நீங்க எதுக்கு இப்ப கால் பண்ணீங்க.? அதைச் சொல்லுங்க முதல்ல"

"ஹும்.. மேடம் பேச்ச மாத்துராங்களாம் சரி சரி விடு.. என் பையன் அம்முவ மீட் பண்ணுமாம் அதுவும் மெரீனா பீச்சுல.. நீ உங்க வீட்டுக்கு வந்ததும் போய் பார்த்துட்டு வருவீயாம்.. வந்து அவன் என்ன சொன்னான்னு சொல்லு அம்மு.. ஐஞ்சு மணிக்கு அங்க போய்டு அவன் வருவான்.. நீ எப்படி சமாளிப்பியோ எனக்கு தெரியாது.. ஆனா அந்த பையன் இங்க வந்து எங்க கிட்ட கெஞ்சி தான் இந்த நிச்சியத்துக்கு ஒத்துக்க வைக்கனும்"

" எல்லாம் சரி அது என்ன கெஞ்சனும்?என் யுமன் யார் கிட்டயும் கெஞ்ச மாட்டாரு"

" அடியேய் அவன் என் பையன்டி என்ன பேச்சு பேசுனான் தெரியுமா? என்றவர் அவன் சொன்ன அத்தனையும் சொல்லி முடித்தார்.

அதைக் கேட்டவள் "ஓஓ சார் அவ்வளவு பேசறாரா? என் செல்ல அத்தைய இத்தனை நாளும் தவிக்க விட்டாருல இன்னைக்கு இருக்கு கச்சேரி.. யூ டொண்ட் வொர்ரி ஸ்வீட் ஹார்ட் நான் பார்த்துக்கிறேன்.." என்று அழைப்பை துண்டித்தாள்.

பிரதியுமனோ அம்முவிடம் எவ்வாறு பேசுவது.. எப்படி இந்த நிச்சயத்தை நிறுத்துவது என்று ஒத்திகை பார்த்து கொண்டு இருந்தான்..

தொடரும்..
 
Top