• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

12. உறவாக வருவாயா.?

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
மாலை மூன்று மணியிருக்கும்... ஸ்ரீ தூக்குவதற்கு அழ.. அவளை தூங்க வைத்து எழுந்தவள், அரவம் வராது அவளையே பார்த்தவாறு கதவை திறந்ததில் எதிரே வந்தவனோடு மோதி நின்றாள்.


ஆம் அவள் கதவினை திறந்த அதே நேரம், கேஷியும் உள்ளே வருவதற்காக எத்தணிக்க... கதவு திறந்து கொள்வதினை கண்டு அப்படியே நின்றுகொண்டான்.
இதை அறியாதவள் ஸ்ரீயை பார்த்தவாறு வந்ததில், எதிரே நின்றவனை காணாது அவன் மேல் மோதியதன் பின்னர் தான் யாரென நிமிர்ந்து பார்த்தாள்.


இருவரது உடல்களும் மிக அருகருகே! ஆனால் ஒட்டிக்கொள்ளவில்லை..


முகத்தினில் பட்டு தெறித்த அவனது சூடான மூச்சுக்காற்றும்.. ஏக்கமான பார்வையும் அவளுக்கு எதையோ உணர்த்த,

அதன் விடையறிய தன் விழிகளை அவன் விழிகளுக்குள் அலைபாய விட்டவள்.. அந்த நிமிடம் ஏனோ அவனை விலக்கிவைக்க நினைத்ததை மறந்து போனாள்.


ஆம் இப்போது சில நாட்களாக அவள் மனம் அவள் கட்டுப்பாட்டினையும் மீறி அவனுள் தொலைந்து போகத்துடிப்பதை அவளாலேயே தடுக்க முடியவில்லை.


அதற்கு முழுக்காரணம் அவனே தான்.
முதல் மாதம் ஒதுங்கியே நடந்து கொண்டவன்.. பின்னர் தன் ஒவ்வொரு செய்கைக்கும் பின்னால் மதுவை நிலை நிறுத்துவது போலனா செயல்களில் இறங்கினான்.


அவளுக்கு பல இடங்களில் முக்கியத்துவம் தந்து, அவள் விருப்பு வெறுப்புகளுக்கு இசைந்து போனான்.
பின் அவள் மேலான அவன் பார்வையில் மாற்ற..ம். அது காதலா?, அக்கறையா? இரக்கமா? என மதுவால் கூட இனங்கான முடிவில்லை. அப்படியே அவளை மிக மிக நெருங்கி வர ஆரம்பித்தான்.


மதுவாலும் அவன் நெருக்கத்தை தவிர்க்க முடியவில்லை.. அவன் நெருக்கம் எப்போதும் நாகரீகத்தோடும்.. அதே சமயம் மற்றவர்கள் முன்பும் நடப்பதனால் அவனை கண்டிக்க முடியவில்லை. ஏனோ அவனது அந்த உரிமையுடனான நெருக்கம், அந்த நேரத்தில் அவளுக்கு இன்னும் வேண்டும் என்பது போல் தோன்றும்.


பின் தனிமையில் இருக்கும்போது.. தன் தவறை நினைத்து தன்னைத்தானே திட்டிக்கொள்பவள், 'இதே தவறை மீண்டும் செய்யக்கூடாது, தன்னால் லாவண்யாவினது உண்மையான அன்பு பொய்க்க கூடாது..' என்று நினைத்துக்கொள்வாள்.


அதற்கு கேஷவன் இடங்கொடுக்க வேண்டுமே!


அவன் விழிகளில் விடைதேடி நின்றவனின் விழியசைவில், தன்னை தொலைத்தவன்.. அவளை இன்னும் நெருங்க.. இருந்த இடைவெளி தொலைந்து.. உடலும் உடலும் உரசிக்கொண்டது.
அந்த உரசலில் உயிர் பெற்றவள், அப்போதுதான் தமக்குள் இருந்த நெருக்கம் உணர்ந்து மீண்டும் அவன் விழிகளை காண,


உதட்டோர புன்னகையோடு புருவங்களை 'என்ன?' என்பதாக உயர்த்தியவன் செய்கை பார்ப்பதற்கு அது அழகாகத்தான் இருந்தது. ஆனால் அவள் நிலை ரசிக்கும் இடத்தில் இருக்கவேண்டுமே!
உள்ளே பதட்டம் கூடிப்போக “ம்ஹூம்...” என தலையசைத்தவள்,


முதுகானது சுவற்றோடு உரச.. அவனை பார்த்தவாறு நகர்ந்தவள், பாக்கவாட்டில் இருந்த அறைக்குள் மறைந்து கொண்டதும் தான் மூச்சே வந்தது.


பெரிதாக மூச்சினை எடுத்து விட்டவள் நினைவலைகளில், அவனுடனான நெருக்கத்தில் தன்னிலை மறந்த தன் அசட்டு தனத்தினை நினைத்து தலையிலடித்து கொண்டவள்,


"எப்பிடி நீ அவனோட பார்வையில மயங்கலாம்..? நீ தானே லாவண்யாவுக்காக அவனை விலகி நிற்க முடிவெடுத்த.. அப்புறம் நீயே இந்த மாதிரி மயங்கிப்போறது லாவண்யாவுக்கு நீ பண்ற துறோகமில்லையா?” என தன்னை தானே கேட்ட சமயம்..


“யாருகூட பேசிட்டிருக்கிங்கண்ணி?" என இடையே கேட்டகுரலில் திரும்பி பார்த்தவள், இலக்கியா குளியலறையிலிருந்து வருவதை கண்டதும் தான்.. தான் இருக்கும் அறையினை சரியாகப்பார்த்தாள்.


ஆம் அது இலக்கியாவினது அறையே தான்.
அவளது கேள்வியில் தன் தவறை உணர்ந்தவளுக்கு, எதை சொல்லி சமாளிப்பதென்று புரியவில்லை.


பின்னே எதை சொல்லுவாள்? கணவன் நெருக்கத்தில் தன்னை மறந்ததை எப்படி சொல்வாள்..?
ஈ....... என இளித்து சமாளித்தவள்,
அவள் கையிலெடுத்த பொருளை கண்டு ஆர்வமாய் விழிகள் விரித்தாள்.


"ஏய்....! இது அழகா இருக்கே!" என கூறியவாறு அவளை நெருங்கியவள், அதை வாங்கி ஆராய்ந்தாள்.


அது அழகான கால்கொழுசு..
பட்டைபோல் அகலமான வேலைப்பாடுகளுடன் இருந்த அந்த கொலுசில், எண்ணமுடியாத அளவிற்கு மணிகளும், கொக்கியில் இரண்டினையும் சேர்க்கும் போது இரு அன்னப்பட்சியின் அலகுகளும் முட்டிக்கொள்வதுபோல் அவ்வளவு அழகாக இருந்தது.


அந்த கொலுசினை அவள் ஆர்வமாக பார்ப்பதை கண்டவள்,
"நிஜமாவே இது நல்லா இருக்கா அண்ணி?"


"யாராவது இதை அழகில்லன்னு சொல்லுவாங்களா? கால்ல மட்டும் போட்டேன்னு வைச்சுக்கோ... தேவதை மாதிரியே இருப்ப.."


"உங்களுக்கு இது பிடிச்சிருக்கா?"


"ம்ம்.... இதை பிடிக்காம இருக்குமா?" என்றவளிடம்,


"அப்போ இதை நீங்களே வைச்சுக்கோங்க." என்றாள் அவள்.


"ஏய்..! எனக்கெதுக்கு? அது அழகா இருந்திச்சு, அதனால தான் சொன்னேன்.. அதுக்காக இதை ஆசைப்படல" என்றவளுக்கு எங்கே தான் சொன்னதை இலக்கியா தவறாக எடுத்துக்கொண்டாளோ என சங்கடமாகிப்போனது.


"அட..... ஆசைப்படலன்னா என்ன? நான் இதை உங்களுக்கு அன்பா தரேன் வைச்சுக்கோங்க" என அவள் கையில் திணித்தாள்.


"எனக்கு வேண்டாம்மா..! நீ ஆசப்பட்டு வாங்கினது" என தயங்க,


"பச்.... அன்பா தரத... வேணாம்ன்னு சொல்லக்கூடாது. அதை என்கிட்ட தந்திட்டு, கட்டில்ல உக்காருங்க.. நானே மாட்டிவிடுறேன்" என்று வலுகட்டாயமாக கட்டிலில் அமர்த்தி மாட்டிவிட்டாள்.


நிஜத்தில் அவள் கால்களுக்கென்றே செய்தது போல் அவ்வளவு அழகாக இருந்தது.
"சூப்பர் செலக்சன், உங்க காலுக்கு அழகா இருக்கும்னே தேடி வாங்கியிருப்பாங்க" என உலறியவளை மது பார்த்த பார்வையில் தன் தவறை உணர்ந்தவள்,


"அது... எனக்குன்னு வாங்கினேன்.. உங்க காலுக்கு தான் அழகாயிருக்கு" என்க.
அவள் புகழ்சியில் முகம் சிவந்து போனவள்,


"ரொம்ப தேங்க்ஸ் இலக்கியா.. ஆனா நீ ஆசைப்பட்டு வாங்கினத, எனக்கு தந்திட்டியே" என சோகமானாள்.


"ஏன் அண்ணி இதுபோல ஒன்னு தான் இருக்கா? ஃப்ரீயா விடுங்க.. நான் வேற வாங்கிக்கிறேன்" என அவளை தேற்றினாள்.





இரவு சாப்பாட்டின் பின்னர் ஸ்ரீயை தூங்க வைப்பதற்காக மது படாதபாடு பட்டுக்கொண்டிருந்தாள். அதற்கு ஸ்ரீ படுக்க வேண்டுமே!


"பாப்பும்மா.... பட்டுக்குட்டி... தூங்கிற டைம் ஆச்சுடா.. படுத்திடலாமா?" என்க.


“ம்ஹூம்...”. என மறுத்தவள் எழுந்து அறையை சுற்றி ஓட ஆரம்பித்தாள்.


'மறுபடியுமா..? என்னால முடியாது சாமி!'என சோகமானவள்,
'இப்போ இவளை எப்பிடி வர வைக்கிறது...? எதையாவது காமிச்சு வரவைப்போம்' என தேடியவளுக்கு காலையில் சிவா தந்த லாலிப்பாப் மேசைமேல் இருப்பது தெரிய சந்தோஷமானவள்..


அதை எடுத்து பிரித்து
"பாப்பு இங்க பாரேன்... இது வேணும்ன்னா அம்மாகிட்ட ஓடி வா..!" என அழைத்தாள்.


ஆர்வமாக அதை கண்டு ஓடிவந்தவள், பின் என்ன நினைத்தாளோ...! திரும்பி ஓடும் சமயம் லாவகமாக அவளை பிடித்தவள்,


"வரவர ரொம்ப சேட்டை பண்ற பாப்பு. தூங்குடின்னா என்னையையே ஏய்க்க பாக்குறியா?" என அவளை படுக்க வைத்து லாபிப்பாப்பை தர.. அதை வாங்கி அவள் மேல கோபமாக எறிந்தாள்.


"ஏன்டி தங்கம்....! அம்மா மேல என்ன கோபம்? செல்லக்குட்டில்ல.. கோபப்படாம தூங்கினிங்கன்னா, நாளைக்கு ஐஸ்க்ரீம் வாங்கித்தருவேன்" என்றாள்.


"நிதம?" என தலையசைத்து கேட்டவள் மொழியில் தெளிவில்லை என்றாலும் “ம்ம்.. நிஜமா" என புன்னகையுடனே சொன்னதும் கண்களை இறுக மூடி படுத்துக்கொண்டாள்.


அவள் நெற்றிமீது தன் இதழ்களால் ஒத்தடமிட்டு, தட்டிகொடுத்து தூங்க வைத்தாள்.
இவர்கள் சேட்டைகளை எல்லாம் போனை நோட்டியவாறு பார்த்துக்கொண்டிருந்தான் கேஷி.


தூங்கிப்போனவளுக்கு போர்த்திவிட்டு, எழுந்து கொண்டவள் மேலிருந்து, ஸ்ரீ எறிந்த லாலிப்பாப் பெட்டில் விழ,


"இதை சாப்பிடாம தூங்கிட்டாளே! கவர வேற உரிச்சிட்டேன்... சரி இனி வைச்சா வீனா போயிடும்" என தான் அதை உண்ண ஆரம்பித்தாள்.


போனில் ஒரு கண்ணையும்.. அவள் மேல் ஓர் கண்ணையும் வைத்திருந்தவன், அவள் லாலிப்பாப்பினை ரசித்து ருசிக்கும் உதட்டிலேயே அவன் பார்வை நிலைபெற, அதில் தடுமாற தொடங்கினான்.


அவள் சுவைக்கும் இனிப்பில் தேன் வடிந்ததோ என்னமோ! அவள் உதடுகள் தேனினை சுரக்க.. அதையே பார்த்திருந்தவனுக்கும், ருசிக்கும் ஆசை எழுந்தது.. அந்த இனிப்பினை அல்ல அவளது தேன் சுரந்த இதழ்களை. கால்கள் கட்டுப்பாட்டை இழக்க எழுந்து சென்றான்.


பக்கவாட்டில் அசைவு தெரிந்ததும், திரும்பி பார்த்தவள் அவனது குறுகுறு பார்வையில்..


'எதுக்கு இப்போ புடுங்கி திங்கிற மாதிரி பாக்குறான்?' என நினைத்தவள் அவனை கண்டுகொள்ளாதவளாட்டம் திரும்பி கொண்டாள்.


அவளது பெட்டில் எதிரே வந்து அமர்ந்தவனை புரியாது பார்த்தவளுக்கு.. அவனது பார்வையின் அர்தத்தை புரிந்துகொள்ள முடியவில்லை.


'நிஜமாவே இந்த லாலிப்பாப்பிற்காகத்தான் வந்திருக்கிறானோ!' என நினைத்தவள், வாயில் வைத்து ருசித்த இனிப்பை விளையாட்டாக எடுத்து வேணுமா? என சைகையில் வினவ.


அவள் கையோடு அதை இறுகப்பற்றிக்கொண்டவன், அவளை நெருங்கி அமர்ந்ததும் தான் அவனது மோகன பார்வையின் அர்த்தம் புரிந்துபோனது.


அது புரிந்த மறுநொடி சட்டென விலகிட நினைத்தவளை.. தன் கைவளைவில் கொண்டு வந்தவன், அவள் தேன் இதழ்களை கவ்விக்கொண்டான்.


எதிர்பாராத செயலில் முதலில் திமிறியவள்.. பின் அவனது இதமான முத்தத்தில் தானும் சேர்ந்து கரையத்தொடங்கினாள்.


எவ்வளவு நேரம் இதழ்கள் இரண்டும் இதமாக உறவாடியதோ.. மூச்சுக்கு முண்டியடித்தவள் திணறல் புரிந்து விடுவித்தவன்.., அவளது வேகவேகமாக மூச்சினை இழுத்து விடுவதை கண்டதும் தான், தன் தவறே உணர்ந்தான்.


அதற்குமேல் அவளை பார்க்கமுடியாமல் எழுந்து
வெளியே வந்தவன், தான் செய்த செயலுக்காக தன்னை தானே திட்டினான்.


"என் பொண்டாட்டிய நான் கொஞ்சாம.. யாரு கொஞ்சுவா? அதெல்லாம் தப்பில்ல.. அவளுக்கும் என்மேல ஒரு இது இருக்கு.., அதை ஏனோ ஒத்துக்கிறா இல்ல.. அப்பப்போ இந்தமாதிரி உரிமையா நடந்துக்கிட்டா தான், அவளும் புரிஞ்சுப்பா" என தன்னை தானே சமாதானம் செய்து உள்ளே வந்தான்.


தலைவரை இழுத்து போர்த்தியவளின் செயலின் அர்த்தம் புரியாதவனில்லை.. தன்னைபோல் சங்கடமான நிலை தானே அவளுக்கும் இருக்கும் என்று.


அவளது கொலுசிட்ட பாதங்கள் போர்வைக்குள் அடங்காமல் வெளியே தெரிய, அதை ரசித்தவனது இதழ்கள் தானாய் விரிந்தது.
அந்த கொலுசிற்கே அழகு உண்டானது அவள் பாதங்களில் சினுங்கியதனால் தானோ என எண்ணியவன்,
விளக்கை அணைத்துவிட்டு தன் இடத்தில் சென்று படுத்துக்கொண்டான்.


அதன் பின்னர் வந்த நாட்களில் ஸ்ரீக்கு வேளையோடு உணவூட்டி, தூங்க வைத்துவிட்டு தானும் வேளையோடே படுத்துக்கொள்வாள்.


அவள் விலகலின் காரணம் புரிந்தாலும் அவனும் விடுவதாக இல்லை.. எங்கெங்கு தன் முத்திரையை பதிக்கவேண்டுமோ சந்தர்ப்பம் பார்த்து பதித்து விடுவான்.
இவளும் முதலில் உருகுவாள்.. பின் லாவண்யாவை நினைத்து ஒதுங்க நினைப்பாள்.


காலேஜ் முடிந்து வந்த இலக்கியாவும் மதுவுடன் டீவியில் ஔிபரப்பாகிக்கொண்டிருந்த நிகழ்ச்சியினை பார்த்து கமெண்ட் அடித்தவாறு இருந்தனர்.


"மீனாட்சி....." என வாசலில் வரும்போதே அழைத்தவாறு வந்த குமாரசாமியின் குரல் கேட்டு கிச்சனிலிருந்து ஓடிவந்தவர்.


"என்னங்க? என்னாச்சு? ஏன் இன்னைக்கு இவ்ளோ சீக்கிரமாவே?" என பயந்து போனவராய் கேட்க.


அவர் பதட்டம் கண்டு, "எனக்கு ஒன்னுமில்லம்மா.." என கையிலிருந்த கவரினை அவரிடம் நீட்டி "இதை பிரிச்சு பாரேன்" என்றார்.


யோசனையுடனே அதை வாங்கி பிரித்தவர். அதில் சில நகை பெட்டிகள் இருப்பதை கண்டு ஆர்வம் கூடிப்போக, "இதை பிடிங்க ஒவ்வொன்னா பாப்போம்" என ஒன்றை கையிலெடுத்து பிரித்து பார்த்தார்.. அதில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய வைர நெக்லஸ் இருக்க.


"அழகா இருக்குங்க.." என அதை வருடிப்பார்த்தவர், "மருமகளே இங்க வாம்மா.. உன்னையும் தான்டி" என இலக்கியாவையும் அழைத்து அவற்றை காட்டினார்.


அதே சமயம் அங்கு வந்த லாவண்யாவும், அனைவரும் ஓர் இடத்தில் கூட்டமாக நிற்பதை கண்டு ஆர்வமாக ஓடிவந்தாள்.


"வாவ்....... செம அழகாக இருக்கு" என மூவரும் ஒரே சமயம் கூற, மற்றவற்றையும் பிரிக்க ஆரம்பித்தார். எல்லாவற்றிலிலும் ஒவ்வொரு தங்க நகையிருந்தது. அதன் டிசைனை சொல்லவே வேண்டாம். அத்தனை அழகு.


"யாரோட செலக்சன் அத்த? செம அழகா இருக்கு" என்றாள்.


"வேற யாருடா...! இந்த வீட்டில ஒவ்வொன்னா பாத்து செய்யிறது மாமா தான்" என்றதும் ஆச்சரியமாகிப்போக,


"மாமாவா? என்னால நம்பவே முடியல. அவரால பொண்ணுங்க டேஸ்ட்டு என்னன்னு புரிஞ்சுக்க முடியுமா?" என விழிகளில் ஆச்சரியம் காட்ட,


"முடியுமாவா? உன் மாமா என்ன செய்தாலும் இங்க இருக்கிறவங்க டேஸ்ட்டுக்கு ஏத்த மாதிரியும், சரியானதாவும் இருக்கும். அதனால கண்ண மூடிட்டு ஏத்துக்கலாம்.. அது புடவை, நகைக்கு மட்டும் பொருந்தாது... எல்லாத்துக்குமே! அவரை நம்பி எதை வேணாலும் ஏத்துக்கலாம். அந்த நம்பிக்கைக்கு ஒரு காலமும் துரோகம் நினைக்க மாட்டாரு" என கணவனை மெச்சிப்பேசியவரையும் மாமனாரையும் நிமிர்ந்து பார்த்தாள் மது.


மனைவியின் பேச்சில் சிலிர்த்தவர்.. காதலாய் மனைவியை பார்க்க, அந்த பார்வையில் முகம் சிவந்து தரையில் விழிகள் தாழ்த்திக்கெண்ட மனைவியின் வெட்கத்தினை ரசிக்கலானார் குமாரசாமி.


இருவர் புரிந்துணர்வையும், காதலையும் கண்டவள், 'நிச்சயமா மாமா தப்பானவரா இருக்க வாய்ப்பே இல்ல.. இவ்ளோ காதல் மனைவி மேல வைச்சிக்கிட்டு வேற ஒரு பொண்ணை மாமா நாடியிருக்கவும் மாட்டாரு.


அப்போ அன்னைக்கு பரமானந்தம் அங்கிள் இந்த வீட்டு ஆம்பளங்க வழக்கமே இது தானேன்னு வித்தியாசமா பேசினாரே! அதுக்கு இந்து சிடுமூஞ்சியும் கோபமா ஏதேதோ பேசினான்.. எதுக்காக அப்பிடி பேசினான்? எல்லாமே குழப்பமா இருக்கே!


அப்பிடின்னா இவன் கோபமா இருக்கிறத்துக்கு நான் நினைச்சது போல, ஸ்ரீ அம்மா தான் காரணமா இருக்கணும். அவங்களுக்கு தான் இவரு ஏதோ பண்ணிருக்கணும். அதனால தான் இவனும் மாமாமேல கோபமா இருக்கான்' என சிந்தனையில் இருந்தவளை இலக்கியா உலுக்கியதும் நிகழ்வுக்கு வந்தவளை,


"என்ன யோசனை அண்ணி?" என்றாள்.


“ஒன்றுமில்லை.” என தலையசைத்தவள்,


"ஆமா என்ன திடீர்ன்னு இவ்ளோ நகை? கல்யாண நாளுக்கு அத்தைக்கு கிஃப்ட் பண்ண போறீங்களா? ஆனா இதெல்லாம் ஓவரு... வயசானவங்க இந்த செட்டு போட்டா.. நாங்கல்லாம் எதை போடுறது." என கேலிபேசிய மருமகளை முறைத்தார் மீனாட்சி.


"ஏன்....? இன்னாருதான் இந்த நகை எல்லாம் போடணும்ன்னு சட்டம் ஏதாவது இருக்கா? இவங்க கிடக்கிறாங்க மீனாட்சி.
இதே போல அடுத்த வாரமே உனக்கும் ஒரு செட்டு நான் வாங்கி தரேன்" என்றார்.


"என்னது இது அத்தைக்கு இல்லையா?" என கேட்டாள்.


"இல்லவே இல்ல" என்றவர் எல்லா நகைகளையும் ஒன்று சேர்த்து மதுவின் கையில் கொடுத்தார்.



மதுமிதாவால் இதை நம்பமுடியவில்லை என்றாலும் அதை ஏற்க மறுப்பதாய் தலையசைத்தவள்,


"எனக்கெதுக்கு இதெல்லாம்...? எனக்கு வேண்டாம்" என்றாள்.


"மதும்மா வாங்கிக்கடா! மாமா ஆசையா வாங்கிட்டு வந்திருக்கான்ல" என அறையின் உள்ளே இருந்து வந்த பாட்டியின் குரல் கேட்டு, திரும்பியவர்கள் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டார்.


"இங்க பாரும்மா.. இத்தனை நாள் நீ எப்பிடி இருந்தியோ தெரியாது.. இனிமே நாலு விசேஷத்துக்கு போகணும்.. இந்த பொடிசான செயினையும், மஞ்சள் கயித்து தாலியையும் போட்டிட்டு போன உன் புருஷன தான்ம்மா தப்பா பேசுவாங்க.


உன் புருஷன் வீட்டில இருக்கிற நேரம் இதை தந்தா, நிச்சயமா வாங்கிக்க விடமாட்டான்னு.. நான் தான் சொன்னேன். அதனால தான் தன்னோட வேலை எல்லாம் விட்டிட்டு வந்து நிக்கிறான்.. நீயும் அவனை மாதிரி எங்க மனச நோகடிக்காம வாங்கிக்கடா!" என பெரியவர் கெஞ்சுவதை பார்த்த லாவண்யாவுக்கு காண்டாகிப்போனது.


'அப்பிடி என்ன வசியம் பண்ணாளோ....! மொத்தக்குடும்பமும் ரொம்பத்தான் தாங்குறாங்க' என கருகியவள்.


"இவகிட்ட எல்லாம் ஏன் பாட்டி கெஞ்சுறீங்க? வசதியான குடும்பத்து பையனை வளைச்சதே இதை எல்லாம் அனுபவிக்க தானே! இதை எல்லாம் அவளோட வாழ்நாள்ல பாத்திருப்பாளா? கொஞ்சம் சீன் போடுவா... அப்புறம் வாங்கிப்பா" என உதடு சுழித்து சொன்னவளை
இதழிலில் குறுநகை தவள திரும்பி பார்த்தாள்.


"என்ன பேச்சும்மா பேசுற லாவண்யா? பேசும் போது பேச்சில கவனம் வேணும்... நாம பேசுறது எதிராளியா இருந்தாலும், அவங்க மனசு காயப்படும்படி பேசக்கூடாது" என எச்சரித்த பாட்டியின் கைகளை பற்றியவள்,


"விடுங்க பாட்டி! நான் தப்பா எதுவும் எடுக்கல.
அதை இங்க குடுங்க மாமா!" என நகையினை வாங்கியவள்,


"இதை உங்க மருமகளுக்காக ஆசையா வாங்கிருக்கீங்க... கண்டிப்பா உங்க மருமக இதை போட்டு உங்களை சந்தோஷ படுத்துவா" என புன்னகையோடு கூறியவளை, மட்டமான ஓர் பார்வை பார்த்து திரும்பி கொண்டவள் உதடுகளோ,


"இதை நான் எதிர்பார்த்தேன்" என்றுவிட்டு டீவி முன் அமர்ந்து கொண்டாள்.


"அவ கிடக்கா... நீ இப்போ இதை போட்டு காமிக்கிறியா?" என்ற மீனாட்சியிடம்.


"எனக்கும் ஆசைதான்.. ஆனா அதுக்கு எனக்கு கொடுப்பனை இல்லையே!" என்றவளை அனைவரும் புரியாது பார்க.
அவர்களது பார்வையில் தான்விட்ட வார்த்தைகளை உணர்ந்தவள்.


"அது..... இன்னைக்கு நாள் நல்லா இல்லத்த... வேற ஒரு நாள் போட்டு காமிக்கிறேனே!" என பேச்சினை மாற்றினாள்.


"ஓ.... அதை சொன்னியா? சரி பத்திரமா கொண்டுபோய் வைம்மா!" என அவள் அதை மறுக்காது வாங்கிய சந்தோஷத்தில் அவளை அனுப்பி வைத்தனர்.
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,934
சூப்பர் சூப்பர் ரொமான்ஸ் ☺️☺️☺️☺️☺️
ரெண்டுபேரும் அவங்க அவங்க பத்தின உண்மையை எப்போ தான் சொல்லி சேர்வாங்கன்னு தெரியலையே 🤔🤔🤔🤔🤔🤔
ஆமா என்ன உண்மையா இருக்கும் 🤔🤔🤔🤔
 
Top