• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

12. தத்தித் தாவுது மனசு.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
இவனது திடீர் தாக்குதலில் நடப்பதை புரிந்து கொள்வதற்கே மைலிக்கு சிறு வினாடி பிடித்துக்கொண்டது.

தன்னிடமிருந்து தள்ளி விடுவதற்காக அவன் நெஞ்சில் கைகளை வைத்துத்தள்ளினாள்.


அவனது முரட்டுத்தனமான கை விலங்கிலிருந்து, உடலையும் சரி.. உதட்டினையும் சரி மீட்க்கவே முடியவில்லை.

அவனது முரட்டு பிடியில் இருந்து மீள்வதற்கு இடையினை வளைத்து நெலிந்து பார்த்தாள் மைலி.


இடைபகுதி வலித்ததே தவிர, இம்மியும் அசைய முடியவில்லை.
இவளது அசைவுகளை வைத்து தன்னை விலகத்தான் போராடுகிறாள் என தெரிந்து கொண்டவனோ,


அவள் செவ்விதழ்களை இன்னும் வேகமாக உறிஞ்ச... சிக்கித் சிதைந்து போனது அவள் உதடுகள்.



"க்ஹூ....ம்...." என அவன் வாய்குள்ளேவே முனங்கியவள், தன் மொத்த பலத்தையும் திரட்டி தன்னிடமிருந்து தள்ளிவிட்டாள்.


தள்ளிவிட்ட வேகத்தோடு ஆத்திரம் மேலிட,
"பளார்...." என அவன் கன்னத்தில் அறைந்தவள் மேல் மூச்சானது வாங்க.

"உன் பொறுக்கித் தனத்தை என்கிட்ட வைச்சுக்காத, கொன்னு புதைச்சிடுவேன். ஜாக்கிருதை...." என்று கடித்த பற்களிடையே அவனை எச்சிரித்தவளுக்கு, அவன் எச்சில் பட்ட உதடு ஊர்ந்தது போல.

அதை தோளோடு அழுத்தி தேய்த்தவள், தலையினை சிலுப்பி திரும்பி நடந்த வாக்கிலே..,


"பொறுக்கி நாயி..." என்று அவன் காதில் விழுவதைப்போலவே சொல்லிவிட்டு வேகமாக நடந்தாள்.


அவள் அறைந்ததில் சித்தம் கலங்கி நின்றவன்,
"பொறுக்கி நாயி..." என்ற அவளது வார்த்தையில் தான் தெளிந்தான்.


முன்னரும் இதே போல் தன்னை பொறுக்கி என்று அவள் கூறிய அந்த வினாடி நினைவில் வர, கூடவே ஆத்திரமும் உண்டானது.


"ஏய்...! நில்லு...." என்றவனது வார்த்தையை கேட்டும் கேட்காதவள் போல் அவள் செல்ல,


"அடியே...! உன்னத்தான் கூப்பிடுறேன்ல.... நில்லு..." என்றும் முறுக்கிக்கொண்டு செல்லும் அவளது திமிரில் இன்னும் ஆத்திரம் கூடியது.




ஓடிச்சென்று அவள் முன் போய் நின்றவனை,

என்ன.. என்பதைப்போல பார்த்தவள், மறுநொடியே அவனை அலட்சியம் செய்து, மறு கரை நடந்தவளை, சட்டென தன் கைகளில் எந்தி நடந்தான்.


இதை அவள் எதிர்பார்க்கவில்லை.

"டேய்..! விடுடா என்னை..." என்று திமிறியவளால், அவன் கைகளை மீறி குதிக்கவே முடியவில்லை.

"பொறுக்கி நாயே விடு..! இப்போ என்னை விடுறீயா? இல்லனா தூங்குறவங்கள எழுப்பவா?" என்றாள் சத்தமாக.

உன் மிரட்டலுக்கெல்லாம் பயப்படும் ஆள் நானில்லை. என்பதைப்போல முகத்தை இறுக்காமாக வைத்திருந்தவன் கவனம் முழுவதும் செல்லும் வழித்தடத்திலேயே இருந்தது.



மைலிக்கு அவனது முரட்டு நடவடிக்கை பயத்தினை ஏற்படுத்த.


"கீழே இறக்கி விடுடா..!" என கால்களை உதறி மீன் போல துடித்தவள் எண்ணம் முழுவதும், தப்பிப்பிப்பதிலேயே இருந்ததே தவிர,

தன்னை எங்கு தூக்கி செல்கிறான் என்பதில இல்லை.


ஒரு சில நிமிடம் நடந்தவன்.. திடீர் என தன் நடையினை நிறுத்தி, அவளை குனிந்து முறைத்தான்.

அவனது பார்வையில் தெறித்த அனலில் என்ன செய்யப் போகிறானே? என பயந்து அவனையே அவளும் பார்த்திருக்க.

அவள் சுதாரிக்கும் முன் தொமார் என தூக்கி வீசினான்.

ஆம் அவன் போட்டது அவள் ஏற்கனவே விழுந்த ஸ்விம்மின் பூலில் தான்.
இதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றதனால், ஒருமுறை மூழ்கி நீரின் அடியினைத்தொட்டு வெளிவந்தவள், அவனை வெறிகொண்ட பார்வை பார்க்க.

"என்னடி முறைக்கிற? இப்பிடி முறைச்சா.. பயந்திடுவேனா?

நான் யாருன்னு உனக்கு தெரியுமா? என் கண் அசைவுக்கு ஊரே பயந்து நடுங்கும்..
என்னைப்பத்தி என்னடி தெரியும் உனக்கு?
எப்போ பாத்தாலும் என்னை பொறுக்கி நாயி...பொறுக்கி நாயி என்கிற.. என்னைப் பார்த்தா உனக்கு அப்பிடியா தெரியுது..?

இதுவே ஒரு ஆம்பள என் முன்னாடி இதே வார்த்தையை சொல்லிருந்தான்னா.. அவன் இன்நேரம் உயிரோட இருந்திருக்க மாட்டான்... சொன்னது ஒரு பொட்டச்சி எங்கிறதனால தப்பிச்ச...


என்னை பொறுக்கி நாய்னு சொல்லிட்டில்ல..... இந்த பொறுக்கி நாயி என்ன பண்ணும்னு கூடிய சீக்கிரம் காட்டுறேன்."

"இந்த பொறுக்கி நாயோட கட்டில.. உன்னை போட்டு ஒவ்வொன்னா பொறுக்கி எடுத்து கதற விடல்ல..
நான் ஸ்ரீராமன் இல்லடி!
அப்புறம் இந்த பொறுக்கி என்கிற வார்த்தை... என்கிட்ட மட்டுமில்ல... எவகிட்டயும் சொல்ல நீ பயப்பிடனும்." ஆண் சிங்கமாக நின்று கர்ஜித்தவன், அதே வெறியோடு திரும்பி சென்று விட்டான்.



மைலிக்குத்தான் தான் தேவையில்லாது வார்த்தையை விட்டுவிட்டோமோ எனத்தோன்றியது.

இருந்தும் அவள் மனமோ,
'அவன் செய்த காரியம் பொறிக்கி தனம் இல்லாது வேறு என்ன?' என நியாயம் கேட்க.

'அது என்னமோ....! என்னை மீறி அவனால என்ன செய்திட முடியும்?' அவனின் சவாலை துணிந்து ஏற்க தயாரானாள் மைலி.



இங்கு தன் அறை வந்தவனோ அவள் மேல் இருந்த கோபத்தில், அந்த அறையிலேயே குறுக்கும் நெடுக்குமாய் நடந்தான்.

'இவளை சும்மா விடக்கூடாது. ஒருதடவை சொல்லியிருந்தா மன்னிச்சு விடலாம்.

பார்க்கும் போதெல்லாம் சொல்லும் இவளை, கசக்கி எறிந்தால் தான் என் ஆத்திரம் தீரும்' என நினைத்தவன்,

கோபத்தினை குறைப்பதற்கு சுவற்றின் மேல் ஓங்கிக் குத்தினான்.

கை வலித்ததே தவிர கோபம் அடங்கவில்லை.
சிகரட்டினை பற்ற வைத்து, புகையினை ஆழமாக உள்ளிழுத்து வெளியேற்றியவன் சிந்தனையோ, காலையில் நடந்த நிகழ்வுகளை நினைவுபடுத்தியது.



மைலியின் நினைவுகளில் தூக்கத்தைத் தொலைத்தவன், அதிகாலையில் தான் உறக்கம் அவனை தழுவிக்கொள்ள, நன்கு உறங்கியவன் காதுகளை கிழிப்பது போல் கேட்டது, அவனது தொலைபேசியின் மணியோசை.



இத்தனை மணிநேரம் தூங்காமல் நன்கு உறக்கும் போது கேட்ட அழைப்புமணியில், கண்களை திறவாமலே, கைகளால் தடவி போனினை எடுத்தவன், ஏதோ ஒரு குருட்டு தனத்தில், திரையினைத் தடவி காதினில் வைத்து,

"ஹலோ...." என்றான்.



மறு முனையில் என்ன சொல்லப்பட்டதோ..

"பதினொரு மணிக்கு அப்புறம் மாத்திவிடு!" என்று கடுமையான குரலில் பதிலுரைத்து விட்டு தொடர்பினை துண்டித்தான்.

ஆம் ஸ்ரீ அப்படித்தான்.... பேசவேண்டியவற்றை சுருக்கமாகவே பேசி முடித்து விடுவான்.


அதுவும் ஆஃபீஸ் உழியர்களிடம் ஒரு இரு வார்த்தைகளுக்கு அதிகமாகாது.

ஆனால் அந்த ஒரு வார்த்தையில் கண்டிப்போடு, கட்டாயத்தையும் திணித்துவிடுவான்.

இவனது பேச்சினை விட, பார்வைக்குத்தான் அனைவரும் நடுக்கிப் போவார்கள்.

பாக்கட்டினுள் கையினை திணித்து, ஒரு வினாடி நின்று ஒருவரை பார்த்தான் என்றால், நிச்சயம் அந்த நபருக்கு அன்று அபிஷேகத்துடன் கூடிய ஆரத்தி நிச்சயம்.

சிரிப்புமே குறிஞ்சி மலரைப்போன்று, அரிதாய் தான் மலரும்.

போனை சுவிச்ஆஃப் செய்து ஓரமாக போட்டவன், கண்களை மூடிக்கெண்டு உறங்கு நேரம், ஈஸ்வரியின் சத்தம் பெரிதாக கேட்டது.

"பச்ச்... இந்த பாட்டிக்கு வேற வேலையே இல்ல... காலங்காத்தால உயிரை எடுத்துட்டு...!" என சினந்தவாறு மீண்டும் படுத்துக்கொண்டவனை தூங்க விடாது தொடர்ந்து பேச்சு குரல் கேட்கவே.


தலகணியைக்கொண்டு காதினை மூடியனான்.

அதையும் தாண்டி கேட்ட குரலில் தூக்கம் முற்றிலுமாக கலைந்து போயிற்று.

"இரவில் அவ தான் தூங்க விடாம தொல்லை பண்றான்னா... காலையில கத்தியே பாட்டி தூக்கத்தை கெடுத்துட்டு.... " என சினந்தவன், திட்டுவதற்காக கதவினைத்திறந்து கொண்டு வெளியே வந்து, மாடிப்படியினில் இறங்குவதற்கு கால்களை வைக்கும் போதுதான்,


பெரியவர்களுடன் பேசிக்கொண்டிருந்த மிணிக்கத்தைக் கண்டான். ஏனோ அவளின் முகமும் சேர்ந்தே நினைவில் வந்தது.



இருக்காதா பின்னே! அன்று கோவிலில் விழாமல் தாங்கிப்பிடித்ததற்கு, பொறுக்கி என்று பெயர் சூட்டியவளை ஒரு முறையாவது புசிக்க வேண்டும் என்று குரூரமாக சிந்தித்தவன்,

'எவளோ ஒருத்தி தன்னை பொறுக்கி என்று விட்டால், பொறுக்கியாகி விடுவேனா? இவள் சொல்லை எல்லாம் பெரிது படுத்தினால், தன் மதிப்புத்தான் தாழ்ந்துவிடும்.

அதை விட கூறியவள் ஒன்றும் தனக்கு முக்கியமானவள் கிடையாது. அப்படி இருக்கும் போது எதற்கு அதை நினைத்து பழிவாங்குவான்' என நினைத்தவன், அவளது பொறுக்கி என்ற வார்த்தையை முடிந்தளவு ஆழ் மனம் வரை எடுத்துச்செல்வதை தவிர்த்தான்.


பாவம் அவனையும் மீறி அந்த வார்த்தை மாறாத காயத்தை ஏற்படுத்தி விட்டதை உணராமல்.



அதன் பின் ரங்கசாமி அவனை கைபேசியில் தொடர்பு கொண்டு, ஒரு இடத்தை குறிப்பிட்டு வரச்சொன்னது நினைவில் வர,

நடந்த சம்பவங்களை ஒதுக்கி, தாத்தாவினை தேடிச்செல்ல.... அவரோ ஒரு அட்றஸ் கூறி அங்கு போ என்றதும்,

"எதுக்கு?" என்று வினவியவனிடம்.


"அம்மாவை பார்த்துக்க நல்லா பொண்ணா தேடுறோம்ல... இங்கேயும் சொல்லி வைப்போம்னு குருக்கள கேட்டேன்....

இந்த ஊரில மாணிக்கவாசகம்னு ஒரு பெரிய மனுஷன் இருக்காரு, அவர்கிட்ட போய் விசாரியுங்க." என்றாருடா..



"உங்களுக்கு வேற வேலையே இல்லத்தாத்தா!" என்றவாறு வண்டியை எடுத்தவன், இடையில் வழியில் சென்ற ஒருவரை மறித்து, இடம் கேட்டு தெரிந்து கொண்டு செல்லும் போதுதான், தன்னை பொறுக்கி என்று கூறியவள், தன் தோழிக்கு கையசைத்து விடைகொடுத்து விட்டு செல்வது தெரிந்தது.

அவள் தோழி வீட்டின உள்ளே புகுந்த மறுநொடியே மழை வெளுத்து வாங்க,

இதெல்லாம் ஒரு மழையா? என அசால்டாக மயில் தோகை விரித்தாடுவதைப் போல், உள்ளாசமாக நனைந்தவளைக் கண்டவன், அவள் பின்னாளேயே அவனையும் அறியாமல் மெதுவாக காரினை செலுத்தினான்.



"ஸ்ரீ..... தேடி வந்த வீடு முன்னாடி போயிட்டுதுடா! இங்கே பாரு... இந்த வீட்டு நம்மர் 346 எண்டிருக்கு, நாம தேடிவந்த நம்பர் 339 ஸ்ரீ... காரை திருப்பு" என்று ரங்கசாமி பின் இருக்கையில் இருந்து கத்தியது எதுவுமே ஸ்ரீயின் காதில் விழவில்லை.

அவன் கவனம் முழுவதும் மழையில் தன்னை மறந்து நனையும் அவள் மேலேயே இருந்தது.

மனமோ எங்கேயோ மிதப்பதைப்போலவும், இதுவரை அவன் அறியா உலகத்திற்கு தன்னை அழைத்து செல்வதைப்போலவும், தன்னை தவிர தன் உலகத்தில் யாரும் இல்லை என்பதைப்போலவும் உணர்ந்தான்.

தாவித்தாவி குதித்தவள், ஒருகட்டத்திற்கு மேல் தன் பொண்மேனி நொந்துவிடுமோ என நினைத்தவளைப்போல, தாவுவதை நிறுத்தி, தம்புறம் திரும்பியதும், தன் ஆடலுக்கு முற்று புள்ளியிட்டு, வேகமாக வீதியினை பார்த்து நடக்கும் போது தான் ஸ்ரீயே உணர்ந்தான்.


'தம் காரினை கண்டுவிட்டுத்தான் அந்த மயில் தன் நடனத்தை நிறுத்திக்கொண்டதென,'

இருந்தும் அவள் அறியா வண்ணம் அவளை பின் தொடர்ந்தவன், அவள் கார் நுழைய முடியாத பாதையில் இறங்கி நடப்பதை பார்த்து, கவலை கொண்டான்.


அவன் மனமோ அவள் பின்னால் செல்! என கட்டளையிட, கால நிலையோ எங்கே காரை விட்டு இறங்கி பாரேன். உன்னை நனைத்து விடமாட்டேனா? என கூறுவதைப்போல், தன் துளிகளினை அடர்த்தியாக பூமியில் இறக்கியது.

வானத்தினை நிமிர்ந்து பார்த்தவன், அவளை சென்ற திசை காண அவளை காணவில்லை.

இதற்குமேல் இவளை பின்தொடரவும் முடியாது. இவள் எங்கு சென்றால் என தேடவும் முடியாது. என நினைத்தவனாய்.


பின்புறம் திரும்பியவன், "தாத்தா நீங்க சொன்ன வீடு இன்னுமா வரல?" என்றான்.



"உனக்கு என்னடா ஆச்சு? பின்னாடி இருந்து காட்டுக்கத்து தத்தினேனே உன் காதில விழலையா?" என்றார் கோபமாய்.


"எதுக்கு இப்போ சத்தம் போடுறீங்க? இன்னும் அவங்க வீடு வரல்லனு தனனமையா சொன்னா கேக்க போறேன். வயசான நேரத்தில கத்தி வருத்தத்தை வாங்கிக்காதிங்க." என்று மீண்டும முன்நோக்கி காரினை எடுக்க.

"அடேய்...! ஒழுங்கா காரை வந்த பாதைக்கு திருப்பி, நான் சொன்ன விலாசத்துக்கு போ! இல்லனா இந்த உலகத்திலேயே ரொம்ப மோசமானவன் நானத்தான் இருப்பேன்." என்று ரங்கசாமி எச்சரித்ததும் தான் புரிந்து கொண்டான். தாத்தா கோபத்திற்கு காரணம் என்னவென்று.





அதன் பின்பு சரியான விலாசத்தில் அவரை அழைத்து சென்றான்.

மாணிக்கத்ததை பார்த்த ரங்கசாமி அடையாளம் கண்டு கொண்டார்.


ஆம் அந்த ஊரில் இருந்ததனால் மாணிக்கத்தை சிறுவயதில் இருந்து நன்கு தெரியும் ரங்கசாமிக்கு. அவர்கள் குடும்பத்துடன் நல்ல பழக்கம் வேறு. பலநாட்கள் கழிந்து, பார்த்ததில் மாணிக்கத்திற்கும் மிகுந்த மகிழ்ச்சி.


சொந்தக்கதை பேசியவர்கள், எதற்கு தாம் வந்தோம் என்பதையும் கூறனர்.
மாணிக்கமும் ஆள் கிடைத்தால் சொல்கிறேன். என கூறி வழியனுப்பி வைத்தார்.

இன்று அவரைக்கண்டதும், மைலியும் சேர்ந்தே அவன் நினைவில் வந்தாள். ஒரே ஊர் என்றதனால் அவரை பார்த்ததும் அப்படித் தோன்றியிருக்கலாம்.

அதன்பின் அவர்கள் பேச்சினை காது கொடுத்தான்.

ஒரு பெண்ணின் நிலையினை கூறியதுமில்லாது, அவளையே தாயை பார்த்துக்கொள்ள அழைத்து வந்திருப்பதுவும் அவர்கள் பேச்சில் விளங்கியது.

அவளது பிரச்சினையை கேட்டவன் தானும் அவளுக்காக பாவப்படத்தான் செய்தான். ஒரு குடும்பத்தின் கஷ்டத்தால், வட்டி பணத்திறக்கு பதிலாக சின்னைப்பெண்ணை கேட்கும் அளவிற்கு நாடு கெட்டு விட்டது எனவும் நினைத்துக்கொண்டான்.

அவனைப்பொறுத்த வரையில் எந்த பெண்ணையும், அவள் விரும்பமில்லாமல் தொடுவது என்பது பிணத்தோடு உறவு கொள்வதற்கு சமமானது.

அவனும் பல பெண்களினால் தன் கட்டிலிலை அலங்கரித்தான் தான். ஆனால் விருப்பமில்லாத பெண்களில் கை வைத்ததில்லை.


இவனது இந்த குணத்தினால், இவனுக்கு என்றிருந்த, இவனது ஒரே நண்பனான வெங்கட்டும் சில நேரங்களில் ஒதுங்கி போய் விடுவான்.

பாவம் அவனும் தான் என்ன செய்வான்.?

முடிந்தளவு அறிவுரையும் வழங்கிவிட்டான். அதை ஸ்ரீ கேட்கவேண்டுமே!

"வாழ்கை என்பது ஒரு முறை... அதை ரசித்து வாழ பழகிக்கணும்" என்று தத்துவம் பேசுவதுமில்லாது,
அவனையும் தன்னுடன் இணையக் கூறுவான்.

இதற்கு பயந்தே வெங்கட் அவனுக்கு அறிவுரை சொல்வதை காட்டிலும், கல்லுக்கு சொல்லலாம் என்று அமைதியாகி விடுவான்.



அவர்கள் பேச்சை சிரத்தையாக கேட்டுக்கொண்டிருந்தவன் கண்களில் விழுந்தாள் ஈஸ்வரியின் பின்னே வந்தவள்.

ஆனால் ஏனோ அவனால் அதை நம்பமுடியவில்லை. எப்போதும் போல் இது கனவோ என்றிருந்தது.

அவர்கள் பேச்சை இன்னும் செவிமடுக்கும் போதுதான், இவர்கள் இத்தனை நேரம் பேசியது இவளைப்பற்றிய பிரச்சினை என்பது புரிந்தது.



ஆக தான் காண்பது கணவில்லை. என நினைத்தவன் மனம் இனம்புரியாத சந்தோஷத்தில் திளைத்தது.


அவன் சந்தோஷத்தினை அதிகப்படுத்துவது போல், பாட்டியினை தாத்தா பேச்சில் வாரிவிட, அந்த பேச்சினால் தன்னை மறந்து, கலகலவென சிரித்தவள் புன்னகையில் தன்னைத் தொலைத்தான்.

பின் வேகவேகமாக குளித்துவிட்டு, அவளைக் காணும் ஆவலில் வரும்போது தான், அவனோடு மோதிக்கொண்டாள்.


மோதியவள் உடலில் தெரிந்த பதட்டத்தில் என்னவென குழம்பியவாறு, தாயின் அறை சென்ற ஸ்ரீ, அவர் இருமவும்,

தண்ணீரை எடுத்து அன்னையிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தவன்.



அவருக்கு சரியாகி விட்டது என்பதை தெரிந்து கொண்டு,
தன்னவளை சந்திக்கும் நொடிக்காக காத்திருந்தான்.


தன்னை கண்டால் அவளது ரியாக்சன் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் கூடியது.


அன்றுபோல் இன்றும் கோபமாக ஏசுவாளா? இல்லை தன்னிடம் சம்பளம் வாங்குவதனால் தணிந்து போவளா? என்றுமில்லாத எதிர்பார்ப்போடு, அவள் வரவிற்காக காத்திருந்தான்.

வேகமாக வந்தவள் காலடி சத்தங்கள் கேட்டு விட்டே, தாயிடம் போபமாக பேச்சை கொடுக்க தொடங்கினான்.

அதனால் தான் அவள் அருகில் வரும் வரை, அவளிடம் முக்தை காட்டவில்லை.

தன்னை பார்த்தவள் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியே, அவள் தன்னை கண்டு கொண்டாள் என்பதை காட்டிக்கொடுத்தது.


மேலும் அவளை சீண்டும் எண்ணம் தோன்ற, அவளை பிடிக்காதவனைப்போல் வாதம் செய்தான்.


பின் ஆர்வக்கோளாறு என்று அவன் அவளை அழைத்ததும், அவள் முகம் சிவந்ததைக் கண்டு, தன்னையும் மீறி வந்த சிரிப்பினை கட்டுப்படுத்தியவன், பேசவேண்டிய மீதியையும் பேசிவிட்டு, நின்றால் தன்னை தானே காட்டிக்கொடுத்து விடுவேன் என தோன்ற, வேகமாக வெளியேறினான்.



ஆபீஸ் வந்தவனுக்கு இருப்பு கொள்ளவில்லை.
மைலியின் நினைவாகவே இருந்தது.

அவளது பெயரை திரும்ப திரும்ப சொல்லி பார்த்தவன்,

'இந்த பெயரும் அழகாத்தான் இருக்கு. ஆனாலும் அவ எனக்கு தாரை தான்.' என தனக்குள் சொல்லிக்கொண்டவன், உடனேயே அவளை பார்த்தாகவேண்டும் என தோன்ற, இருக்கையில் இருந்து எழுந்தவன் முன் வந்து நின்றான் மானேஜர்.



"சார் டைம் ஆச்சு.... மீட்டிங்க் போகலாமா?" என்றதும் தான், இன்றைய மீட்டிங்க்கே நினைவில் வந்தது.



அதை முடிந்ததும், வேறு சில வேலைகளை முழ்கியவன், வீடு திரும்பப் பத்துமணியை தாண்டியிருந்தது.



அவளை எதிர்பார்த்து வந்தவனுக்கு, யாருமற்ற வெறுமைதான் வரவேற்றது.

இன்று மாத்திரமல்ல.... எப்போதுமே அவன் வரும் நேரம் யாரும் விழித்து இருந்ததில்லை... அவர்கள் விழித்துருக்கும் நேரம் அவனும் வந்ததில்லை. கடந்த ஒருமாத காலத்திற்கு முன்னர் வரை.

இன்று என்னமோ அவனுக்கு இதுவரை இல்லாத வெறுமை!

தான் மாத்திரம் தனித்து விடப்பட்டவனைப்போல் ஓர் உணர்வு.

வழமையாக நன்றாகத் தண்ணியடித்து விட்டு, போதையில் வருபவன், இன்று சாதாரணமாகவே வந்திருந்தான்.



வந்தவன் விழிகளோ மைலியைத்தான் தேடியது. எல்லா அறைக் கதவுகளுமே அடைத்திருக்க, தாயின் அறையில் இருக்க கூடும். என அவர் அறைக் கதவினை திறந்து பாத்தான்.


ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் அவரைத்தவிர, எவரும் அங்கு இல்லை.


திறந்த கதவினை மெதுவாக சாத்தியவன், மைலியின் அறையை ஆராய்ந்தான்.



இன்று மாத்திரமல்ல... எப்போதுமே அந்தக் கதவு அடைத்துத்தான் இருக்கும். ஆனால் இன்று ஏனோ ஏமாற்றமான உணர்வு.

'சரி... இனி யாரும் வெளிவரப் போவதில்லை' என நினைத்தவன், தனது அறைக்குச் சென்று குளித்தவன், சாப்பாட்டு மேசையில் அமர்ந்து, சாப்பிட்டவாறு, அவள் அறைக்கதவு திறக்கப்படுகிறதா? என பார்த்தவாறே உண்டு முடித்தான்.


அவள் வருவதற்கான சாத்தியமில்லை என உறுதியாக, தன் அறையினுள் சென்று படுத்திருந்தவன், தூக்கம் வராமல் கட்டிலிலே உலன்று பார்த்துவிட்டு, எதுவோ நினைத்தவனாக, மாடிப்படிகளில் இருந்து இறங்கும் போதுதான், மைலியின் அறைக்கதவு திறந்திருப்பதை கண்டான்.

கதவு திறந்திருக்கவும் குழம்பியவன், வாசலில் நின்று உள்ளே எட்டிப்பார்க்க, அவளை அங்கு காணவில்லை.


'எங்கு போனாள்' என யோசித்தவன்,
'ஒருவேளை பாத்ரூம் போயிருப்பாளோ... அதுக்கு எதுக்கு இந்தக் கதவை திறக்கணும்?' என நினைத்தவனாய், ஹாலில் அவளை தேடினான்.

மெயின் கதவு திறந்திருப்பது தெரிய.
வேகமாக மைலி அறையினில் நுழைந்தவன், பாத்ரூம் கதவினை திறந்து பார்த்தான்.

அவன் நினைத்ததைப்போல், அவள் அங்கு இல்லை என்றதும்.
வெளியே வந்தவன், அந்த இடம் முழுவதும் தேடி, இறுதியாக நீச்சல் குளம் அருகில் வந்த போதுதான்,


கால்களை நீருனுள் விட்டு விளையாடிக்கொண்டிருந்தவளைக் கண்டான்.



'இந்த நேரத்தில இங்க என்ற செய்கிறா?' என வாய்விட்டே புலம்பியவன், அதை அவளிடமே கேட்கும் எண்ணம் கொண்டு, வேகமாக அடிகளை எடுத்து வைத்து வரும்போது, சிறிய கூலாங்கல்லொன்று அவன் கல்களில் தட்டுப்பட்டு, சீமேந்து தரையோடு அடிபட்டு வித்தியாசமான சத்தம் எழுப்பியது,


அந்த சத்தத்தில் தான் பயந்து எழுந்தாள். அதன் பின் நடந்த நிகழ்வுகளை நினைத்தவனுக்கு,



விடியலின் போது இருந்த இதம்.. நாள் முடிவடையும் சமயம் இல்லாததும்.. அதற்கு காரணமான அவளது பேச்சும், அவன் கோபத்தை அதிகப்படுத்திக் கொண்டிருந்தது..

கையிலிருந்த சிகரெட், அவன் கையினை சுட்டதும் தான், அந்த சிகரெட் முழுமையாக சாம்பலாகி இருப்பதை உணர்ந்தான்.

அதை கைகளாளேயே நசுக்கி அணைத்தவன், கோபம் கட்டுக்குள் வர வில்லை,

பீரோவினை திறந்து, உள்ளிருந்த மதுப்பாட்டிலை எடுத்து வாயில் கவுத்தவன், மூச்சுக்கு கூட இடம் விடாது மளமளவென குடித்தவன்,

"என்னை பார்த்து என்னடி சொல்லிட்டா?

நானா பொறுக்கி...? ஆமாடி...! நான் பொறுக்கி தான்... உன் வாழ்க்கையை சீராளிக்க போற பொறுக்கி....


போனா போகட்டும்.. முதல் தடவை தெரியாமல் சொல்லிட்டேனு நினைச்சா.. திரும்பத்திரும்ப பொறுக்கினு சொல்லிட்டல்ல... இனி இந்த பொறுக்கியோட இன்னொரு முகத்தை பாப்படி..!
உன் அத்தான் கூட என்னோட காரியத்தினால உன்னை வெறுத்து ஒதுக்கிறமாதிரி, உன் வாழ்க்கையை நான் சீரழிக்கல நான் ஸ்ரீ இல்ல..."
என திரும்பத்திரும்ப ஒன்றையே கூறியவன், கையிலிருந்த பாட்டிலிலை சுவட்ரோடு ஓங்கி அறைந்து உடைத்து விட்டு, கட்டிலில் விழுந்தவன் தான் அப்படியே உறங்கியும் போனான்.







தாவும்........





என் கதை எப்பிடி போகுதுனு சொல்லுங்க தோழமைகளே!



கதையை படிச்சிட்டு கமண்ட் பண்ணாமல் போறவங்களுக்கு மந்திரிச்சு வைச்சிடுவேன்.🥚🥚🥚🥚🥚🥚 😁😁😁😁😁😁
 
Top