• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

12. திகட்டாத தீ நீயே!

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
நாட்கள் மாதங்கள் என்ற கணக்கில் ஓடி மறைந்தன.. ஆனால் என்ன காரணமோ.. தாமிராவை யாருக்கும் விட்டுத்தர விரும்பாதவன்... தானும் அவளை கண்டுகொள்வதில்லை.. அவளுக்குமே அன்றைய நாளின் பின்னர் ஆத்விக்கோடு பேச பயமாக இருந்தது.. அதனாலேயே தேவையினை தவிர அவனுடன் பேச்சு வைக்கவில்லை.

ஆனால் யோகலிங்கத்திற்கும், புவனாவிற்கும் தாமிரா செல்லப் பெண்ணாகவே மாறிப்போனாள். அவள் இல்லை என்றால் அவர்களது அன்றைய நாள் சூனியமாகிப் போகும். அந்தளவிற்கு சிறுவயதில் செய்யாத சேட்டைகள் எல்லாவற்றையும் இப்போது மாமன் மாமியாரிடம் வித்தை போல் செய்வாள். அவர்களுக்குமே ஏனோ அவள் சேட்டைகள் எரிச்சலை ஏற்படுத்தாது ரசிக்கத்தான் தோன்றியது.

தன் அலுவலகப் பொறுப்பு எல்லாவற்றையும் மகனிடம் கொடுத்தவர்.. இடையிடை தானும் அலுவலகம் சென்று வருவார்.

அன்று தனக்கான வேலையினை முடித்து விட்டு வேளையோடே வந்தவர்.. புவனாவோடு கதை பேசி சிரிந்தவாறு இருந்த இருவருக்கும் நடுவே சென்று அமர்ந்தார் யோகலிங்கம்.


அவரை முறைத்தவள்... எழுந்து அவர் கையினை பிடித்து இழுத்து மற்றைய சோபாபில் அமர்த்திவிட்டு இடைவெளி விடாது புவனாவை ஒட்டி இருந்தவளை பார்த்து பெரிதாக நகைத்தார்.

இன்று மட்டுமல்ல... எப்போதும் தாமிராவுக்கு தம் இருவர் நடுவில் யார் வந்து இருந்தாலும் பிடிக்காது என்று தெரிந்து கொண்டாரோ.. அன்றிலிருந்து அதை செய்து, தாமிராவின் கோபத்திற்கு ஆளாகாது அவரது அன்றைய நாள் முடிவதில்லை.

"என்னடி இது...? என் பொண்டாட்டி பக்கத்தில நான் உக்கார கூடாதா..?" வழமையான கேள்வி தான். இருந்தும் பதில் சொன்னாள் தாமிரா.



"உக்காருங்க.. நான் இல்லாதப்போ உக்காருங்க.. நடுவில வந்து உக்காந்தா தள்ளி விழுத்திடுவேன்.." என்றாள்.

"ஏன் புவனா..? நீ சொல்லு.. எனக்கு உன் பக்கத்தில உக்கார உரிமை இல்லையா..?"

"இல்லை...." என முந்திக்கொண்டாள் தாமிரா..

"நீ ஏம்மா முந்திக்குற...? நான் என் பொண்டாட்டிய கேட்டேன்." என அவளை வம்பிழுக்க.

"சொல்லுங்கத்தை... யாரா இருந்தாலும் எனக்கப்புறம் தான்னு..." என்றவாறு புவனா தோள்களில் வாகாக சாய்ந்து கொள்ள... மகிழ்வோடு அவளை தோளோடு அணைத்து கொண்டார் புவனா.

"ஏன்டி... மத்த இடங்கள்ல போய் பாருங்க... மருமக மாமியாருன்னா எப்பிடி இருக்காங்கன்னு.. இங்க என்னென்னா கொஞ்சிக்கிட்டிருக்கிறீங்க.. இதெல்லாம் நல்லதுக்கில்லையே.. நீங்க ஒன்னாகிட்டா.. அப்புறம் ஆம்பளங்க எங்களுக்கு வீட்டில உங்கள சேர்த்து வைக்கிற வேலை இல்லாம போயிடுமே.." என அவர் கவலையாக..

அதை கண்டு பெரிதாக நகைத்தனர் இருவரும்.

"ஏன் மாமா.. நீங்க ஜாலியா தானே இருக்கிங்க..? அது ஏன் உங்க பையன் மட்டும் முறைச்சிட்டே இருக்காரு... சின்ன வயசில நீங்க சிரிக்க கத்து தரலையா..?" என்றாள்.

"அட ஆமால்ல... அப்போ நான் அதை மறந்துட்டேன்ம்மா..." என கவலை போல் கூறியவர்..
"சரி விடு..! இப்போ தான் நீ வந்துட்டல்ல.. நீ கத்து குடு கத்துப்பான்."

"கத்து குடுக்கலாம் தான்... ஆனா என் சிரிப்பு மறந்து போகுமே.." என பாவமாக முகத்தை வைத்து சொன்னவளை கண்ட யோகலிங்கம் கொல் என சிரித்த அதே நேரம் வாசலில் அரவம் வர திரும்பி பார்த்தார்கள்.

ஆத்விக் தான் முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு தன்னறை நோக்கி சென்று கொண்டிருந்தான்.

'இவன் எப்போ வந்தான்..? சும்மாவே முகத்தை தூக்கி வைச்சிட்டிருப்பான்.. நம்ம பேசினதை கேட்டிருந்தா இன்னமும் தூக்கி வைச்சிருக்க போறானே...!'

"அம்மாடி.....! அவன் பின்னாடியே போய் அவனை சமாதானம் செய்..." என்றார் புவனா.

"நானா...?" என்றவளால் மறுக்க முடியவில்லை.. தயங்கி தயங்கி தமது அறைக்குள் நுழைந்தவளை கண்டும் காணதவன் போல தன் ஷூவினை கழட்டினான்.

"அத்த... காஃபி எடுத்து வரவான்னு கேட்க சொன்னாங்க.." தயக்கமாகத்தான் திக்கி திணறி வந்தது வார்த்தை.

கையிலிருந்த ஷூவினை தூக்கி வீசியவன் அவளை நெருங்கி...

"என்ன ட்ராமா பண்றியா..? அந்தாள் கூட சேர்ந்து என்னை கிண்டல் பண்றப்போ எங்க போச்சி இந்த பௌவியம்...? இனிமே அந்தாள் கூட நீ பேசக் கூடாது... அப்பிடி பேசுறத பார்த்தேன்... பல்லை உடைச்சு விட்டிடுவேன்." என்றான் கோபமாய்.

அதுவரை அவன் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசத்தயங்குபவளுக்கு.. இறுதியான பேச்சு ஏனோ கோபத்தை வரவழைத்தது.

வரும் தானே.. அவனும் பேச மாட்டான்.. ஆனால் அவளுடன் நெருங்கிப்பழகும் உறவையும் உதாசினம் செய்ய சொல்வானா...? அவனுக்கு தான் பெற்றவரை மதிக்க தெரியவில்லை என்றால் அவளாலும் அவனை போல் ஒதுங்கியே வாழ்ந்திட முடியுமா...? அதுவும் பெற்ற மகளுக்கு மேலாக நினைப்பவரை...!


"ஏன்.. உங்களுக்கு தான் பெரியவங்கள மதிக்க தெரியாது. அதுவும் பெத்தவரையே எதிரியா பார்க்கிற அளவுக்கு... என்னையும் ஏன் வற்புறுத்துறீங்க..." என்றாள் இதுவரை அடக்கி வைத்திருந்த ஆதங்கத்தை வெளிக்காட்டி.

அவளும் இத்தனை நாட்களாக பார்த்துக்கொண்டு தானே இருக்கிறாள். ஏதோ பரம்பரை எதிரியை எதிர்கொள்வதை போலவே அவரை கண்டால் முகத்தை திருப்பிக்கொள்வதும்... ஜாடையில் குத்தி காட்டுவதும் என தவறே செய்யாத மாமனாரை தண்டித்தால்.. அடக்கி வைத்திருக்கும் ஆதங்கம் என்றோ ஒரு நாள் வெளியே வரத்தானே செய்யும்.


அவளது எடுத்தெறிந்த பேச்சு அவனுள் இன்னமும் கோபத்தை அதிகப்படுத்த.. எதிரில் நின்றவள் கையினை இறுக பற்றிக்காெண்டவன்.

"ஆடு பகை குட்டி உறவா...? அவருக்காக என்னையே எதிர்த்து பேசுற.. என்ன அந்தாள் தந்த தைரியமோ...?
நான் சொன்னா நீ கேட்கணும்... அவருகூட நீ பேசக்கூடாதுன்னா பேசக்கூடாது... புரியுதா..?" என பற்கள் நெரும வார்த்தைகளை அழுத்தி.. சாதகமாய் தாமிரா பதில் வரவில்லை என்றதும்.

தன் பிடியிலிருந்த அவள் கையினை இன்னமும் இறுக்கியவன்..
"புரியுதா இல்லையா ..?" என்றான் மீண்டும்.

அவள் கையிலிருந்த கண்ணாடி வளையல் மூன்று துண்டுகளாக உடைந்து அவள் கையினை துளைத்தே தரையில் வீழ்ந்தது.

"அம்மா..." என முணங்கியவள் காயத்திலிருந்து ஒரு துளி இரத்தம் தரையில் விழுவதை கண்டதும் தான் காயம் உண்டானதை உணர்ந்தவன், தன் பிடியினை விலக்கிவிட்டு.. அதை ஆராயக்கூட தோன்றாது அங்கிருந்து சென்றுவிட்டான்.


கண்கள் தாரையாய் நீரை சிந்த.. முழங்காலினை அப்படியே குத்தவைத்து தரையில் அமர்ந்தவளுக்கு அவன் ஏற்படுத்திய காயம் வலிதரவில்லை.. மாறாக உடைந்த வளையல் துண்டுகளை அவசரமாக ஒவ்வொன்றாக பொறுக்கி எடுத்தவள், தன் இரு கைகளிலும் அதை ஏந்தி கரையத்தொடங்கினாள்.

"ம்மா..... ம்மா...." என குழுங்கியவள்... "இதில தானேம்மா உன்னை பார்த்திட்டிருந்தேன்.. இப்போ இது கூட இல்லாம போச்சே.. இனி எப்படிம்மா உன்னை பார்ப்பேன்.. எப்படிம்மா உன்கூட பேசுவேன்...

அவ்வளவோ கஷ்டம் வரப்ப எல்லாம் உனக்கு எதுவும் ஆகாம பத்திரமா உன்னை பாதுகாத்த என்னால.. இன்னைக்கு பாதுகாக்க தெரியலையே.. இனி யாருகிட்டம்மா என்னோட வேதனைய சொல்லி புலம்புவேன்." என கதறிக்காெண்டே உடைந்த வளையல் துண்டுகளை நெஞ்சோடு அணைத்தவளுக்கு சொல்லில் அடங்காத வேதனை.

ஆம் அது அவள் அன்னை இறுதியாக அணிந்தருந்த வளையல். இறுதி நேரம் பிணமாக கிடந்தவள் கையிலிருந்து அவளுக்கென கிடைத்த ஒரே ஆறுதல் அது. இன்று அதுவும் அவளுடன் இல்லை.. என்றால் அவளால் அழுவதை தவிர வேறு என்ன செய்திட முடியும்...

தூரத்தே தாமிரா என்ற புவனாவின் குரல் கேட்டு.. சட்டென கையிலிருந்த வளையல் துண்டுகளை மெத்தையின் கீழ் மறைத்து வைத்தவள்.. எதுவும் நடவாதவள் போல கண்களை துடைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

என்னதான் தடம்களை அழித்தாலும் அதன் வடுக்களை அழிக்க முடியாதே.. கண்டுவிட்டார் புவனா..

"ஏம்மா கண்ணு வீங்கியிருக்கு...? மனசு நோக ஏதாவது சொல்லிட்டானா..? சரி விடு... அவன் இப்படி பேசுறது என்ன புதுசா...? எப்பவும் மாமாவ வேதனை படுத்துறவன்.. இன்னைக்கு உன்னை கஷ்டப்படுத்திட்டான்.." என நெஞ்சோடு அணைத்து கொண்டவருக்கு தெரிய வாய்ப்பில்லையே...

அவளை அவன் துன்புறுத்தியிருந்தால் கூட தாங்கியிருப்பாள்.. ஆனால் அவள் உயிரை அல்லவா நொருக்கியிருக்கிறான். இனி அதே வளையலை எங்கே வாங்குவாள்..?

ஷால் மறைவிலிருந்த கையினை புவனா அறியாது விலக்கி பார்த்தாள். அழமாக கிழித்திருந்த வளையல் தடத்திலிருந்த கசிந்த இரத்தத்தை கண்டதும்.. நின்றிருந்த கண்ணீ்ர் மீண்டும் கசியத்தொடங்கியது.

அதை உள்ளே இழுத்துக்கொண்டவள்.. "தலை வலிக்கிற மாதிரி இருக்கு.. நான் போய் தூங்குறேன்த்த."

"சாப்பிடாம தூங்குறது நல்லதில்ல.. சாப்பிட்டு போம்மா..."

இந்த வேதனையில் சாப்பாடு இறங்குமா..? "வேணாம் அத்த.. தலைவலியோட சாப்பிட்டா வாந்தி எடுத்திடுவேன். பசிச்சா நானே வந்து சாப்பிடுறேன்." என்றவள் புவனா அடுத்து பேசுவதற்குள் அறை சென்று விட்டாள்.



தூங்கப்போகிறேன் என அறை வந்தவளால், தூங்க முடியவில்லை..

நேரமோ ஒன்பது மணியினை தொட்டிருந்தது.
உடைந்த வளையல்களை ஒவ்வொன்றாக பொருத்தி பார்த்தவள்.. அங்கும் இங்குமாய் ஓடி.. சூப்பர் குளூவினை எடுத்து அதை ஒட்ட வைப்பதிலேயே அவளது முழு கவனமும் இருந்ததனால் ஆத்விக் வந்ததை அவள் கவனிக்கவில்லை.


'அம்மா எப்பிடியாவது ஒட்டிக்கணும்மா... ப்ளீஸ்மா.. போட்டுக்க முடியலன்னாலும் பரவாயில்லை.. உன் நினைவா என்கூட இருந்தாலே போதும்.' என புலம்பியவாறே ஒட்ட வைத்தவளுக்கு.. நீண்ட நேர போராட்டத்தின் பின்னரே அதுவும் ஒட்டிக்காெள்ள.. அப்போது தான் அவளால் புன்னகைக்கவே முடிந்தது.

அதே சந்தோஷத்தோடே அந்த வளையலை ஒரு காகிதத்தின் மேல் காய வைத்தவள்.. அதை பார்த்தே உறங்கிப்போனாள்.


நீண்டநேரமாக எதையோ தீவிரமாக நோண்டியவளையே கட்டிலில் படுத்திருந்தவாறு கவனித்தவன்..

அவள் தூங்கிப்போனதும்.. எழுந்து அவளருகில் சென்று காயம்பட்ட கையினை ஆராய்ந்தான்.

எழும்பிச்சை நிறத்து கையில் ஏற்பட்டிருந்த காயம் இன்னமும் காயவில்லை.. இரத்தம் இப்போதும் சாதுவாக கசிந்து கொண்டுதான் இருந்தது. அதை மெதுவாக வருடிக்காெடுத்தவன்..

"ரொம்ப வலிக்குதாம்மா....? சாரிம்மா....

என்னால உன்னை வெறுக்கவும் முடியல.. நெருங்கவும் முடியல.. எனக்கும் உன்னை பிடிக்கும்டி..

என்னவோ தெரியல.. நீ எனக்கானவ.... எனக்கு மட்டுமே சொந்தமானவ.. என்னை தவிர யார் கூடவும் நீ நெருங்கி பழகக்கூடாது.. என்கூட மட்டும் இருக்கணும்ன்னு மனசு சொல்லுது.. குறிப்பா எனக்கு பிடிக்காதவங்க நிழல் உன்மேல பட்டாலே கோபம் வருது..



ஆனா நீ அந்தாளால எனக்கு திணிக்கப்பட்டவன்னு நினைக்கிறப்போ.. அந்தாள் மேல இருக்கிற கோபத்தினால உன்னை ஏத்துக்க மனசு வரல..

அதனால தான் உன்மேல எரிஞ்சு விழுறேன்... கோபப்படுறேன்... என் பேச்சை கேட்க சொல்லி சண்டை போடுறேன்... நீயும் கேட்டு தொலையலாம்ல... எதுக்கு அந்தாளுக்காக வாதாடுற.. அவரு ஒரு சைக்கோ தாமிரா..

உன்மேலயும் அன்பு காட்டுற மாதிரி காமிச்சு ஏமாத்திடுவாரு.." என புலம்பியவாறு அவளது காயம்பட்ட இடத்தினில் உதட்டால் ஒத்தடமிட்டவன்..

'காயம் ரொம்ப ஆழமா இருக்கே.. காயத்துக்கு மருந்து போடாம அப்படி என்ன பண்ணிட்டிருந்தா...?' என வளையல் இருந்த இடத்தை திரும்பி பார்த்தவன்..

'ஓ.. உடைஞ்ச வளையல் ஒட்டிட்டிருந்தியா....? இவ்ளோ தங்க வளையல் இருக்கிறப்போ.. அப்படி என்ன ஸ்பெஷல் அதில?' என அதை எடுத்து ஆராய்ந்தவன் விழிகள் பெரிதாய் விரிந்து..

தான் காண்பது உண்மை தானா...? என மீண்டும் மீண்டும் ஆராய்ந்தவனுக்கு விழிகளில் திரண்டு நீரானது குமிழியாய் தரையில் விழுந்து சிதறியது.

வெறும் தரையாயினும் சலனமே அற்று தூங்கிக்கொண்டிருந்தவள் முகத்தினை ஆழப்பார்த்தவன்.. அவள் தூக்கம் கெடாதவாறு எழுந்து கட்டிலில் அமர்ந்தான்.

கையிலிருந்த வளையலை பார்ப்பதும்.. தாமிராவை பார்ப்பதும்.. அளந்த அறையினையே மீண்டும் மீண்டும் அளப்பதிலும் அந்த இரவானது கழிந்து போக.. விடிந்தும் விடியாததுமாக தயாராகி கீழே வந்தவனை கண்ட புவனா...


"எங்கடா இவ்ளோ காலேல கிளம்பிட்ட..?" என்றார்.

"முக்கியமா ஒருத்தங்கள சந்திக்கணும்மா.. இன்னைக்கு ஆஃபீஸ்ல ஒரு இம்போர்ட்டன் மீட்டிங்க் இருக்கு.. என்னால ஆஃபீஸ் போக முடியாது.. அதனால அப்பாவையே அனுப்பி வைச்சிடுங்க..'

"ஆஃபீஸ்ல மீட்டிங்க வைச்சிட்டு.. அவ்ளோ அவசரமா யாரை பார்க்க போற...?"

"வந்து சொல்லுறேன்ம்மா... இப்போ கிளம்புறேன்." என வாசலை நோக்கி ஓடியவனிடம்..

"சரிடா.. காஃபி போட்டு தரேன் அதையாவது குடிச்சிட்டு போ..."

"வேணாம்... நான் போற வழியிலேயே பார்த்துக்கிறேன்." என்று ஓடியே விட்டான்.

"என்னமோ போ.. சொல்லு பேச்சு கேட்கிறவன்னா சொல்லலாம்..." என முனுமுனுத்து புவனாவும் தன் வேலையினை கவனிக்க சென்று விட்டார்.


காலை பொழுது மறைந்து மாலையும் வந்தாயிற்று... சூரிய உதயத்தின் முன்பு கிளம்பியவன் அந்தி சாயும் வேளையில் தான் வீட்டினுள்ளே நுழைந்தான்.

வந்தவன் முகமோ வழமைக்கு மாறாக சோர்வினை வெளிப்படுத்தியது. அதை கண்ட புவனா.
"எங்கடா போயிட்டு வர...? முகம் ஏன் இவ்ளோ டல்லா இருக்கு..? சாப்டியா இல்லையா..?" அக்கறையோடு விசாரித்தவர்..

"சரி உள்ள போயி சோர்வு போக குளி...! அம்மா காஃபி போட்டு எடுத்துட்டு வரேன்." என அனுப்பி வைக்க.

ம்ம் என வெறுமனையே தலையசைத்து அறை புகுந்தான் ஆத்விக்.

கட்டிலில் கிடந்த தலைகாணிக்கு உறையினை மாற்றிக்காெண்டிருந்த தாமிரா.. அவனை கண்டும் காணாதவள் போல் தன்வேலையில் கவனமாக..

அந்த கட்டிலில் சென்று அமர்ந்து அவளை அழைத்தான்.
 

Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
415
தாமிராவோட அம்மாதான் இவனோட அக்காவா
 
Top