• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

12. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
*விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை....*

பாத்திமா அஸ்கா.

அத்தியாயம் 13

வர்ஷன் தன் எண்ணவோட்டதை நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல் கூறிவிட்டான்.

பார்வதிக்கு இப்போதே
ஓடிச்சென்று யாழினியை கட்டியணைத்து
உச்சி முகர்ந்திட்டு.....


என் செல்லமே... இத்தனை நாள் நீ பட்ட கஷ்டமெல்லாம் போதும்... இனி தாயாக நான் இருக்கிறேன் என்று கூறவேண்டும் போலென மனது கிடந்து அடித்தாலும்,

முகத்தில் வெறுமையை தொங்கவிட்ட படி இருந்தார். இல்லாத சாதத்தை விரல்களால் பிசையும் அளவுக்கு குழம்பித் தான் போனார்.


காரணம் அங்கே சிவராமனின் மௌனம் தான்.
இயல்பிலேயே பிடிவாத குணம் கொண்ட கணவரை எதிர்த்து, அவர் இதுவரை ஒரு வார்த்தைகள் கூட பேசியதில்லை.


இன்று வர்ஷன் யாழினியை திருமணம் செய்ய தனக்கு சம்மதம் இல்லை என்று கூறிவிட்டால், நிச்சயமாக தன்னால் தடுக்க முடியாது.


"நீ நெனைக்குறது நடக்காது வர்ஷா...
கல்யாணம் ஒன்னும் (f)புட் போல் மேச் இல்ல
அந்தப் பொண்ணு இந்த குடும்பத்துக்கு சரி பட்டு வர மாட்டா... என்னோட தகுதிக்கு அந்த மாதிரி பேக்ரவ்ண்ட் உள்ள பொண்ண என்னோட மருமகளா ஏத்துக்க முடியாது"


பாதி சாப்பாட்டிலே எழுந்தவரின் செயல், யாழினி பற்றிய கதையை நான் கை கழுவி விட்டேன் உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் மகனே...!!!!
விடுத்த அறைக்கூவல் ரூத்திரத்தில் கண்களை இறுக மூடி அமர்ந்திருந்த வர்ஷனை கிளப்பி விட்டதோ என்னவோ,


"நான் தா அவள என்னோட பொண்டாட்டியா ஏத்துக்குற போறன்பா....
அவ ஏ கூட தா வாழப் போற....
உங்களோட ஸ்டேடஸ்காக என்னோட காதல விட்டு தர முடியாது பா.." புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன???


"வர்ஷா அப்பாவ எதிர்த்து பேசாத
அது மரியாத இல்ல அவரு என்ன சொன்னாலும் உன்னோட
நல்லதுக்காகத் தான் இருக்கும்,
இத்தன நாள் கட்டிக்காத்த பேரு உனக்கு வரப்போர பொண்டாட்டியால கெட்டுப் போய்டும்ன்னு நெனைக்குறதுல என்ன தப்பு"


பவித்ராவின் வார்த்தைகளை கேட்டவன் கண்கள் கலங்கியே விட்டது.

"அம்மா நீங்களுமா மா?
யாழினி பூ மாதிரி மா
அவளப் போய் தரக்குறைவா பேச எப்படி மா மனசு வந்துச்சு....?
தகுதி பணத்துல இல்ல
குணத்துல இருக்கு....."


அவன் பார்வை ஈரக்கையை துணியால் துடைத்துக் கொண்டிருந்த சிவராமனை மொய்த்தது.


நிலா இன்று அவளாகவே இல்லை
இழுத்துப் பிடித்த மௌனத்தோடு உக்கார்ந்து இருந்தாள்.



வீட்டிலே என்ன நடக்கிறது ஏது நடக்கிறது அவள் மூளையில் ஏறவே மாட்டேன் என அடம் பிடித்து கொண்டிருந்தது.


அவள் நினைவுகள் அனைத்து அவனைச் சுற்றியே. மனதில் சக்கரம் கட்டி சுழன்றன அவன் நினைவுகள்.

"இங்கப்பாரு பார்வதி....
என்னோட பிஸ்னஸ் பார்ட்ணர் வாசுதேவோட பொண்ணு பாரின்ல போய் படிச்சிட்டு,
இப்போ அப்பாவோட பிஸ்னஸ்ஸ கவனிச்சுக்க வந்து இருக்கா...
நாங்க ரெண்டு பேரும் சம்மந்தியானோம்னா எங்களோட பிஸ்னஸ் கொடிக்கட்டி பறக்கும்... அது தா எனக்கு வேணும்....
அந்தப் பொண்ண ஓ மகனுக்கு கட்டிக் கொடுக்குறதா நா வாக்கு குடுத்துட்ட
அவ தான் என்னோட மருமக... யாரோ
வீட்டுல வேலப்பாக்குற வேலக்காரி இல்ல"


"இனாப் பா இதுக்கு மேல ஒரு வார்த்த பேசாதிங்க என்னோட யாழினிய பத்தி பேச இங்க யாருக்கும் அருகதை இல்ல.." இயலாமையுடன் அமர்ந்திருந்த பவித்ராவையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பினான்.


"பணம் பணம் இது தான் சந்தோசத்த கொடுக்குமா? மனசுக்கு பிடிச்சு இருக்கணும் அது தான் உண்மையான சந்தோசத்த கொடுக்கும். நீங்க வேணும்னா பணத்த கட்டிட்டு அழுங்க
எனக்கு அன்பு ,பாசம் தான் முக்கியம்
யாழினி என்னோட ராணி....
அவள வேலக்காரின்னு சொன்னிங்க நடக்குறதே வேற.."


"அதையும் பாத்துறலாம் வர்ஷா
வாசுதேவ்வோட பொண்ணு தான் இந்த வீட்டுக்கு வரணும் வந்தே ஆகணும் "


"ச்சேய் "என அருவெருத்துக் கொண்டு எழுந்து சென்றவனை தடுக்க வழியற்று போனார் பவித்ரா.

வர்ஷன் காரை உயிர்ப்பிக்க, அது அதிவேக கதியில் பறந்து கொண்டிருந்தது. பவித்ரா அத்தனை அழைத்தும் ஒரு தடவை கூட அவன் அழைப்பை ஏற்கவில்லை.

மூளை கலங்கி, அவன் இருக்கும் சூட்டில் மூக்கால் வெளியே வராத குறை தான்...

"என்ன நெனச்சிட்டு இருக்காரு
அவரு மனசுல....
அவரு பத்தடி பாஞ்சா... நா பதினாறடி பாய்வன்னு அவருக்கு தெரியாதா என்ன????
வாசுதேவ் அங்கிள் கிட்ட ஏலம்
போட்டு வெக்கமே இல்லாம
என்ன வித்துட்டு வந்துறுக்காறு....
அவரு தா பதவி வெறில ஆட்றாருன்னா
இந்த அம்மாக்கு எங்க அறிவு போச்சு......
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்னு அடிம மாதிரி இருக்காங்க.

பொண்ணுங்க ஒன்னும் அடிமைப் பிறவி கெடையாது
யென்னைத் தாண்டி அவரு எதுவும் பண்ண முடியாது....."

புதுமைப் பெண் வேண்டும் என்ற பாரதியின் தீவிர ரசிகன் தான் மது வர்ஷன். பெண்களும் ஆண்டுகளுக்கு சமன் தான் என்ற கொள்கையில், தாய் பவித்ரா மட்டும் விதி விலக்காகி போனது ஆற்றாமையை கிளப்பிக் கொண்டிருந்தது.


விண்மீன்கள் புடை சூழ பால் நிலா இரவு வானை ஆக்கிரமித்து கரு மேகக்கூட்டங்கள் அவ் கங்குள் குமரியின் அழகை மெச்சின....


ஊரே தூங்கும் நேரமது. இரவு இரண்டு மணி
கடிகார முள் "டிங் டிங் டாங்
டிங் டிங் டாங்"என ஒலித்து சோர்ந்து போக,


அங்கே ஒருத்தி மட்டும் உறக்கமற்ற விழிகளை பொருத்தி, அதில் வன்மத்தை கலக்கவிட்டிருந்தாள்.

கையில் இருந்த பளிங்கு குவளை கடிகாரத்தை சுக்கு நூறாக்க
"முட்டாள் முட்டாள் என்னோட அனுமதி இல்லாம இங்க எதுவும் அசையக் கூடாது....
நா யாருன்னு தெரியும்ல
தி க்ரேட் மாயா வாசுதேவ்
திமிரோட உச்சம் நா...
அழகோட உச்சம் நா
நா நெனச்சா அது நடந்தேயாகனும்"

ஆம் அவள் தான் மாயா...!
நினைத்தை அடையத் துடிக்கும் அரக்கி. வெளிநாட்டில் வளர்ந்தவள்.


அடர் சிவப்பு மெல்லிய ஆடை அவ் மாடர்ன் மங்கையின் தொடையையும்,
முதுகை மட்டுமே மறைத்திருக்க, பின்னே நூல் பட்டி அவள் வாழைத் தண்டு மேனியை தழுவியது.

எதிரே சுவரளவு பெரிய திரையில் கூலிங் ங்ளாசில் படு ஸ்டைலாக சிரித்துக்கொண்டிருந்தது மதுவர்ஷனின் புகைப்படம்.


"லவ் யூ வர்ஷு.... நீ முழுசா எனக்கு தான்..
எனக்கு மட்டுமே தான்....
நீ இந்த மாயா வாசுதேவோட வர்ஷு உன்ன அடஞ்சே தீருவ....
எங்கப்பா என்ன உனக்கு பிஸ்னஸ்ஸ டெவலப் பண்ண கட்டித் தரப்போராருன்னு நெனசுட்டு இருக்காருல்ல....
அதான் இல்ல.. மை டியர் வர்ஷூ...." என சிரித்தாள்.


அந்த விஷமப் புன்னகைக்குள்ளே ஒளிந்திருந்தது,
வர்ஷன் தான் வேண்டும் என்று மூன்று நாள் அன்னம் தண்ணீர் இல்லாமல் பட்டினி கிடந்ததும், இறுதியில் தன் தாயின் கழுத்து நூழிலையில் கத்தி வைத்து வாசுதேவின் உயிரை வாங்காமல் வாங்கி சிவராமனிடம் சம்மதம் பேச வைத்ததும்.

"ஐ லவ் யூ வர்ஷு.... பட் ஐ ஹேட் யூ" எரிமலைப் பார்வையை, அங்கே எரிந்து கொண்டிருந்த கவிநிலாவின் புகைப்படத்தில் தோய்த்தாள்.


"ஓ வீட்டுக்கு மருமகளா வரணும்ன்னு நா துடிக்குறதுக்கு வர்ஷூவும்
ஒரு ரீசன். ஆனா மெய்ன் ரீசன்
யாருன்னு தெரியுமா????
நிலா நீ தா...
சொல்லப்போனா வர்ஷுவ கல்யாணம் பண்ணிக்கிறதே உனக்காக தான்.

உன்னப் பாக்குறப்போ உடம்பெல்லாம் எரியுது டி!
என்னோட வாழ்க்கையவே அழிச்சுட்ட
என்னோட உயிரானவன செதச்சுட்ட
விட மாட்ட டி உன்ன
ஐ வில் கில் யூ நிலா....." என்றே உரும ஆரம்பித்தாள்.
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,972
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️அச்சோ கவிக்கும் மாயவுக்கும் என்ன பிரச்சனையோ 🤔🤔🤔🤔🤔🤔போக போக தெரியும் இவங்க பிரச்னையின் மூலக்காரணம் 🙄🙄🙄🙄🙄
 
Top