• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Bindu sarah

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
65
"மா நீ இல்லாம என்னால் இருக்க முடியாது?" என்றான் அர்ஜுன்.

"ஆனா, என்னால இருக்க முடியும்...." என்று மீரா ஒரு முடிவோடு அர்ஜுனை பார்க்க.

' சரி எதாவது பாட்டு பாடி சிரிக்க வைக்கலாம் ' என்று நினைத்தவன் குரலை சரி செய்துதொடங்கினான்..... ராகமாக....

சொல்லால் அடிச்ச
சுந்தரி,
மனம் சுட்டுவிட்ட
கோலம் என்னடி,
சொல்லால் அடிச்ச
சுந்தரி
மனம் சுட்டுவிட்ட
கோலம் என்னடி!
பட்டக் காயத்துக்கு
மருந்தென்னடி,
என் தாயைத் தந்த தாயும்
நீயடி!!
என்னதான் சொல்ல
ஒன்னும்கூட இல்ல
மன்னவன் நெஞ்சிலே
மூச்சடைச்சதென்ன!!!
சொல்லால் அடிச்ச
சுந்தரி,
மனம் சுட்டுவிட்ட
கோலம் என்னடி!!!!

அர்ஜுன் பாடுனது விட... அவன் அக்க்ஷன் அல்டிமேட்.... மீரா தான் பெரும்பாடுபட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டு இருந்தார்.

"என்னவே டி சொல்றயா...." மண்டைல நாலு கொட்டு வைத்துவிட்டு "டேய் பாட்டு பாடி நடிக்காத....
போக போறது நான் இல்லை நீ..."

அர்ஜுன் தலையில பெரிய குண்டை போட.... அதிர்ச்சியில் மீராவின் முகத்தை பார்க்க..

"ஷாக்க கொறடா..... சீக்கரம் இடத்தை காலிபன்னு".

மீரா அர்ஜுனை பார்த்து ஒரு புருவம் உயர்த்தி, ஹேப்பி இன்று முதல் ஹேப்பி, விசில் அடித்தவாரு மீரா அர்ஜுனை பார்த்து விசில் அடிக்க...

'அயோ இதல்லாம் பாக்கணும் னு எனக்கு இருக்கு...' அர்ஜுன் மனதில் புலம்ப.

"இந்தா உன்னோட குப்பைய எடுத்துட்டு, இடத்தை காலி பண்ணு.

"அம்மா...." என்று அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்றான்.

"போடா... முதலில் ஷாக்க கொஞ்சம் கம்மி பன்னு". மெலிதாக துறந்து இருந்த அவன் வாயை... "மூடு ஆல்ரெடி நாலு கொசு போயிடுச்சி ".

சொன்ன உடனே வாயை வேகமாக மூடினான். "என்னமா என்னவே போக சொல்லிட்ட...." என்றான்.

"என் புருசன் வீட்ட விட்டு நான் ஏன்டா போனும், அதுவும் இல்லாமல் தப்பு செஞ்சது நீதானா, வெளிய போடா..." என்றார் மீரா.

"தப்பு செஞ்ச நாய்க்கு இங்க இடமில்லை. கிளம்பு கிளம்பு.... இனி எந்த தொல்லையும் இல்லாமல் ஜாலியா இருப்பேன்.... இந்த டாகுக்கு சமையல் செய்து போட்டு என் இளமையே போச்சு... இனி பிரீயா ஜாலியா இருப்பேன் டா.. ஆடர் செஞ்சி சாப்பிட்டுட்டு ." என்றார் மீரா குதூகலமாக.

இவனுக்கு பாடல் திறமை எங்கு இருந்து வந்தது, அனைத்தும் மீராவிடம் இருந்து வந்ததுதான்.... அதை வைத்தே வெறுப்பேற்றினார் அவர் அர்ஜுனை.

அவன் அறிவு வேகமாக செயல்பட... 'எப்படியாவது இவங்கள ஏமாத்தி உள்ளே போய்ட்டா போதும்.... எஸ்கேப் அய்டலாம்'. என்று யோசித்தவனின் மனதை மீரா படித்துவிட்டார்.

"மீரா நீ சரியா, என் பொருட்கள எடுத்து வச்சி இருக்க மாட்ட, இரு நான் வந்து பார்க்கிறேன்" உள்ளே நுழைய பார்த்தான், மீரா அவனின் அம்மாவாச்சே... விடுவாரா அவனை.

" எல்லாம்எடுத்து வச்சாச்சு ... பெரிய லக்கேஜ்... உன் டிரஸ் சின்ன லக்கேஜ், உனக்கு தேவையானது எடுத்து வச்சிட்டேன், எடுத்துட்டு போடா ". என்றார் மீரா விவரமாக.

'எதாவது சொல்லி உள்ளே போலாம்னு பாத்தா.... என்ற மம்மி உஷாரா இருக்கே'.

"டேய் நீ எனக்கு பிள்ளை... உன்னை விட நான் வேகமாக புரிஞ்சுப்பேன் கண்ணா" அவன் கண்ணத்தை போற போக்கில் தட்டிச் சென்றார்,

நீ குரங்கு சேட்டை செய்தாலும் நான் உன்ன உள்ள போக விட மாட்டேன் ".

'சரி சென்டிமென்ட் அட்டாக் தான் சரி...' என்று நினைத்தவன் அடுத்த தாக்குதலை ஆரம்பித்தான்.

"அம்மா நான் அப்பா இல்லாத கொழந்த, அதனால தான என்ன இப்படி அனாதையா விட பாக்குற" என்றான் வராத கண்ணீரை துடைத்துக்கொண்டே.

"புருசன் இல்லாத அம்மாவ அதான் அடங்காம திரிரய." மறு கேள்வியில் வாயை மூடிக் கொண்டான்.

"நான் உனக்கு பொண்ணுக்கு மரியாதை குடுக்க சொல்லித் தரலையா டா?"

'இவங்கவேற அவ பண்ணது தெரியாம பரிதாபமா பாக்ராங்க அவளை'. என்று நினைத்தான் அர்ஜுன்.

'எப்படி பால் போட்டாலும் மம்மி கேட்ச் பிடித்து திரும்ப வீசுதே.. அடுத்து என்ன செய்லாம்' அவன் யோசிப்பதற்குள்.

"நீ ரூம் போட்டு யோசிச்சி வந்து நாடகத்தை நடத்து இப்போ கிளம்பலாம். எனக்கு டைம் இல்ல, pubg விளாடனும், என் கூட விளையாடுற பிளேயர் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க".

"என்னது pubg ஆ!! மா உனக்கு விளையாட கூட தெரியுமா?" என்று அர்ஜுன் ஷாக் ஆக, "நீ வேலைக்கு போனதும், அதுதான் என்வேலையே".

"Devil Angel னு ஒரு பொண்ணுகூட விளையாட்றல்ல, வேலைக்கு போறேன்னு சொல்லி... அந்த பொண்ணு நான் தான்" என்றார் மீரா.

அர்ஜுன் ஷாக் ஆயிட்டான்... பொண்ணுங்க கூட எவ்ளோ ஆர்வமா விளையாடறாங்கன்னு ஆச்சரியமாக பார்த்தது அந்த devil Angel id..... பார்த்து, அர்ஜுன் நிறைய வாட்டி ஷாக் ஆகி இருக்கான்.

'அம்மாவை சமாதானம் படுத்தறது ரொம்ப கஷ்டம் தான்', என்று நினைத்தவன்.

'இங்க வேலைக்கு ஆகாது' அவன் லக்கேஜ்யை எடுக்கப்போக... அந்த பையை ஒரு உதை விட்டுவிட்டு வீர நடையோடு உள்ளே சென்றார் மீரா.

"மா இது ரொம்ப அதிகம்.... ஒதைத்தது கூட பரவாயில்லை ஆனா அந்த நடை பாக்க சகிக்கல,

அப்படியே நீலாம்பரி என்று நினைப்பு...." என்று அன்னையை வாய்விட்டு வதக்கி கொண்டு இருந்தான்.

பேசுவது அவர்கள் காதில் விழுந்தால் தானே! அர்ஜுன் தனியாக கத்திக்கொண்டு இருந்தான்.

"கதவை சாத்தி பத்து நிமிஷம் ஆச்சி" என்று மீண்டும் கதவை திறந்து, மறுபடி வாசல் கதவை வேகமாக அடித்து சாற்ற.. pubg ஆட தொடங்கினார்.

"எங்கே செல்லும் இந்த பாதை".... என்று அர்ஜுன் பாட.....

"பழைய சோறு இல்லபா, நாளைக்கு வா..." என்று அவன் அன்னை குரல் ஒலிக்க.

'சும்மாவே இந்த மீரா என்னை போட்டு வாங்கும், இப்போ என்னை ரோட்டுல நிக்கவச்சிடுச்சே...' என்று சிறிது நேரம் அங்கு புலம்பிக்கொண்டு இருந்தான், அர்ஜுன்.

"இது உனக்கு தேவைதான்டா... எல்லாம் அந்த குட்டிப்பிசாசு வேலை, அவளை வச்சி செய்யாம நான் விட்றாத இல்ல" சிறிதுநேரம் அங்கு படிக்கட்டில் அமர்ந்தவன்.

"பேசாமல் ரித்தி வீட்டுக்கு போய்டலாம் சோறு ஆச்சி சாப்பிட தருவா...."

"அவ தரலனாலும் என்னோடா பொண்ணு என்ன கண்கலங்காம பத்துக்கறாலோ இல்லையோ வயிறு கலங்காமல் பத்துப்பா". குட்டியை நினைத்ததும் மனதில் ஒரு இதம் பரவியது அர்ஜுனுக்கு.

"இந்த மீரா போல அவ இல்ல, எப்பவும் என்ன யார் விட்டாலும் அவ விடமாட்டா". அங்கு போய் பார்த்தா தானே தெரியும், சோறு கிடைக்காத இல்ல அடி கிடைக்காத னு.

சாப்பாடு போட்டு நம்ம தல ஸ்டைல்ல அவ அடிப்பா... பாவம் அர்ஜுன் அந்த விசயம் உனக்கு தெரிய வாய்ப்பில்லை ராசா.

மெதுவாக காரை உருட்டிக்கொண்டு ரித்திகா வீட்டின் முன்னே நிறுத்தினான். அர்ஜுன் தயங்கி தயங்கி காலிங் பெல் அமுக்க.

"சோறு கிடைக்குமா? கிடைக்காதா?" என்று தான் அவன் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.

இங்கு தங்க அனுமதி கிடைக்குமா? கிடைக்காதா? என்றுகூட அவன் யோசிக்கல.

வந்து திறந்தது என்னவோ அவன் மனைவிதான்.

"ஆட ஆட என்ன அழகு, மேக் அப் போடாமயே ஹீரோயின் கணக்கை இருக்காளே," என்று நினைத்து அர்ஜுன் கண்ணு கூட சிமிட்டாம சாராவை சைட் அடித்துக்கொண்டு இருந்தான்.

"இவன் என்ன லூசு கணக்கா நிக்ககரான்", அர்ஜுனின் கன்னத்தை நன்கு கிள்ளி வைத்தாள்...

"ஆஆஆஆ.... என்னாடி பண்ண என்றான் கன்னத்தை" தேய்த்துக்கொண்டு.

"அஹ... மாமா மேல ஆசை அதான், கிள்ளி வச்சேன்" என்றாள் சிரித்துக்கொண்டு.

அவளை கண்டுகொள்ளாமல் "ரித்தி" என்றுஅர்ஜுன் கூவி கொண்டு இருந்தான்.

"என்னங்க மாமா, உன்ற பொண்டாட்டி உங்க முன்னே இருக்கும் போது அவளை எதுக்கு கூப்பிடறீங்க.." என்றாள் நக்கலாக.

"யாருக்கு யாரு டி மாமா? விலகு நான் உள்ள போனும்". அவன் கொஞ்சம் உறக்க கத்த...

"கத்தி பேசாதீங்க குட்டி தூங்குரா" என்றால் சாரா மெதுவாக.

"நீங்கதான்... அன்னைக்கு, மாமா கூப்பிடு இல்லனா முத்தம் கூடு னு கேட்டீங்க அதான், இப்போ முத்தம் கொடுக்க முடியாது அதான் மாமா கூப்பிட்டேன்." என்றாள் சம்பந்தம் இல்லாமல் சாரா அவனிடம் பேச்சை வளர்த்தாள்.

' எப்போ கேட்டத, எப்போ சொல்ற பாரு',

"தினமும் மிரட்டி வைக்க வேண்டிது, அப்புறம் மறந்துட்டு லூசு மாறி முழிக்கறது"? அவள் மையலோடு அவனை பார்க்க...

அவள் பார்வையை தவிற்கும் நோக்கோடு ...

"நகரு நான் உள்ள போனும்". அவள் முகம் பார்க்காமல் அவளிடம் பேச.

"என்ன என் மூஞ்சி பார்க்க பிடிக்கலயா?" என்று ஒரு அடி முன்னே வந்தாள்." இவ்ளோ பக்கத்துல பிடிக்குதா பாருங்க " என்று இன்னும் நெருங்கி வந்து நின்றாள்.

'இவள் வேறு மனுசன் மனசு புரியாம ஒரசிட்டு நிக்கறா'. மனதில் சலிப்பாக நினைத்தவன்.

"கொஞ்சம் தள்ளி நில்லு..." என்றான் கோபமாக கஷ்டப்பட்டு முகத்தை வைத்துக்கொண்டு சொன்னான்.

"முடியாது மாமா... கல்யாணம் ஆகாமலே, நீ என்னென்னமோ செஞ்ச மறந்துட்டயா...... நீ மறந்தா என்ன நான் உனக்கு இப்போ ஞாபக படுத்தறேன் கவல படாத" என்றாள் புருவம் உயர்த்தி கேட்க,

'அடி பாவி, முத்தம் கேட்டதுக்கு இவ்ளோ பேசறாளே'.

அர்ஜுன் கோபமாக முகத்தை வைத்துக்கொண்டு 'ராட்சசி... நான் கேட்டது எதும் குடுக்கல, இப்போ மொத்தமா குடுத்தா தாங்காதுமா, இந்த குட்டி நெஞ்சம்... மனதில் இவ்வாரு பேசியவன், வெளியே அவளை முறைத்தான்...

'இடியட் அப்போ தூரம் இருந்து இம்சை செய்தா... இப்போ ஓரசியே மனுசன சாகடி' என்று மனதில் கொஞ்சிக்கொண்டு இருந்தான்.

"கொஞ்சம் தள்ளி நில்லு..." என்றான் இந்த முறை கடுமையாக.

'கத்தாதிங்க பாப்பா தூங்கறா, எத்தனை முறை சொல்றது" என்று கடிந்தவள்.... ஏன் நான் உரசனா எறிஞ்சிடுவியா... போயா பேக்கு மாமா" என்றாள் உரிமையோடு.

"இதவே சொல்லிட்டு எவ்வளோ நேரம் வழிவிடாம நிற்கலாம்னு இருக்க" என்றான் புருவத்தை உயர்த்தி.

அவன் புருவத்தை ரசித்தவள்... "ஒரு ஹக் கொடுத்த அப்புறம், உள்ளே மெதுவா போலாம்" என்றாள் அவனை பார்வையால் விழுங்கிக்கொண்டு.

'இவ எப்போ இருந்து இப்படி ஆனால்' என்று யோசித்தவன் முற்பகல் செய்தது, இப்படி வந்து விளையும் னு அர்ஜுன் கனவா கண்டான்.

'நான் செஞ்சது எல்லாம் சேர்த்து வச்சி இப்போ செய்றாளே, மனுஷனோடநேரம் காலம் புரியாமல்... நான் அவளோ நல்லவன் இல்லைமா... 'அவன் மனம் சத்தமிட அது இவள் காதுல விழுந்த தானே, இன்னும் நெருங்கி, அவனை சீண்டிக்கொண்டு நின்றிருந்தாள்.

"யாரது? "சாராவின் பின்னிருந்து குரல் கேட்க இருவரும் விலகினார்கள்..

"சாரா எதுக்கு கத்திட்டு இருக்க. நான் சொல்லிட்டு தானே வந்தன் பாப்பா சத்தம் கேட்டா தூங்கமாட்டானு".

தூங்கும்வரை தாராவிற்கு சத்தம் கேட்கக் கூடாது... சத்தம் கேட்டால் அவ்ளோதான் தூங்காமல், அங்கு போலாம் என்று கையை சத்தம் வந்த திசையை காட்டி அடம் பிடிப்பாள், அவளின் செல்ல ராட்சசி.

"நான் இல்லை இவன் தான் சத்தம் போட்டான்..." என்று அர்ஜுனை கை காண்பித்து, எஸ்கேப் ஆகிட்டா.

'இவளுக்கு என்னை போட்டுக்கொடுப்பதே வேலையா போச்சி' அவளை முறைத்து கொண்டே..." அது வந்து ரித்தி " என்று அவன் ஆரம்பிக்கும் முன்பு.

"எதுக்கு இங்க வந்த" என்றாள் ரித்திகா கேட்க".

"அம்மா என்ன வீட்ல இருந்து போக சொல்லிட்டாங்க" என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு சொல்ல.

"சோ கியூட்...." அந்த ரணகளத்துலயும் சாராவால் அர்ஜுனின் குழந்தை முகத்தை, ரசிக்காமல் இருக்க முடியல. அவன் கன்னத்தை வலிகும்மாறு நன்றாக கிள்ளி வைத்தாள்....

"ஷ்.... ராட்சசி வலிக்குது, தொட்டு பேசாத... போ தூரமா" அர்ஜுன் சாராவை முறைக்க...

"அதென்ன போக சொல்லிட்டாங்க, வீட்ல இருந்து துரத்தி விட்டுட்டாங்கன்னு சொல்லு..." ஹாஹா... என்றால் ரித்திகா.

சாராவும் ரித்தியும் ஹை பை போட்டுக்கொண்டு சிரிக்க.
அர்ஜுனின் நிலைமை, அந்தோ பாவம் என்றாகிவிட்டது.

எந்த கேலி அம்பும் என்னை தாக்கல.... என் மீசைல மண்ணு ஒன்னும் ஒட்டல.... என்ற ரேஞ்சிக்கு முகத்தை சாதாரணமாகமுகத்தை வைத்துக்கொண்டு இருந்தான். 'இந்த கன்னிப்பையன் சாபம் உன்ன சும்மா விடாதுடி ' என்று மனதுக்குள் இருவருக்கும் சாபம் விட்டுக்கொண்டு இருந்தான்.

"அதுக்கு எதுக்கு நீ இங்க வந்த..." என்றாள் ரித்திகா. நேரடியாக கிளைமாக்ஸ்க்கு கொண்டு வந்துட்டா.

"இங்கு தங்கலம் னு..." அவன் தயங்கி தயங்கி சொல்ல. இவர்கள் இருவரும் இவனை வாருவதிலேயே குறியாக இருக்க...

"இந்த வீடு ரொம்ப சின்னது, உனக்கு இங்க இடம் இல்ல...." என்றாள் ரித்திகா... வீட்டை ஒரு சுற்று பார்த்துவிட்டு.... ஒரு 10 பேர் தங்கலாம் தாராளமாக.... வீடு கொஞ்சம் இல்ல ரொம்ப பெருசு..

எவளோ வலிய தாங்கும் இந்த குழந்தை... ரெண்டு லக்கேஜ் ஓட மறுபடியும் ரோட்ல நிற்க, உள்ள வான்னு கூட ஒருஜீவனும் கூப்பிடல... எட்டி உள்ள பாத்தான்.... அவனை ஆதரிக்கும் அந்த பெரியமனிசியை....

"அவ தூங்கி ரொம்ப நேரம் ஆச்சி " என்றாள் ரித்திகா. அவனது எண்ணஓட்டத்தை படித்தவளாக.

என் மகள் ஊட்டி விட்ட ஒரு பாக்கெட் பிஸ்கெட், மீராவிடம் பேசும்போதே ஜீரணம் ஆயிடுச்சி.' இப்போ சாப்பாட்டுக்கு என்ன பண்றது '.

அவனது பசி எல்லையைத்தாண்ட.... "பசிக்குது..." என்று வெட்கத்தை விட்டு கேட்டே விட்டான், பாவமாக முகத்தை வைத்து கொண்டு.

அதை கேட்டதும் பதறி அடித்து ஓடிச்சென்று, இருந்ததை எல்லாம் எடுத்து வந்து, அவனுக்கு சாப்பாடு ஊட்டிவிட ஆரம்பித்தாள் சாரா.

அவள் கைகளில் இருந்து தட்டை பறிக்க முயன்றான், அவள் தருவதில்லை என்று பிடிவாதமாக நின்றாள். 'சோறு முக்கியம்...யார் கையால சாப்பிட என்ன '

அர்ஜுன் பசியை பொறுக்க மாட்டான், 'சண்டையை சாப்பிட்ட முடிச்சி வச்சிக்கலாம்' என்று பொறுமை காத்தான்.

"சாப்பிடும்போது மூஞ்சை சிரிச்சா மாதிரி வைடா, அப்போதான் சாப்பாடு செறிக்கும்" என்று திட்டினாள் சாரா.

'வராத சிரிப்பை வா வா னா, எங்கிருந்து வரும். பாவம் கொழந்தய விட்டுடுங்க பா...' என்று அர்ஜுன் நினைக்க.

"அமைதியா ஊட்டு இல்லனா எனக்கு சாப்பாடும் வேணா ஒன்னும் வேணா", முகத்தை திருப்பிக் கொண்டான், அர்ஜுன்.

அதன்பின் அவள் அமைதியாக ஊட்டி விட்டாள்.

இவ்வளவு நேரம் அவர்களுக்கு தனிமை அழித்த ரித்திகா... அவன் சாப்பிட்டு முடிக்கும் சமயத்தில் வந்தாள்.

"சரி அர்ஜுன் கிளம்பு..." என்று அவன் அருகில் வந்து நின்றாள் ரித்தி.

"நேரம் ஆச்சி வயசு பொண்ணுங்க இருக்குற இடம்... இடத்த காலி பண்ணு " என்றாள்.

'அர்ஜுன், நம்ம துரத்துறதுலயே குறியா எல்லோரும் இருகாங்க, அதுக்கு சொன்ன காரணம் சகிக்க முடியல ஆண்டி போல இருந்து கொண்டு வயசு பொண்ணுங்களாம் இதுங்க'. தலையில் அடித்துக்கொண்டான்.

"அப்படியே பாட்டினு மாத்தி சொல்லு'' என்று முறைதவன் கிளம்ப தயாரானான்.

"சரிதான் உன்னை நம்பி கிழவியை கூட விடமுடியாது" என்று அவனை வார.... total damage அர்ஜுனுக்கு.

"இந்த உலகத்துல எனக்கு தங்க கூட இடம் இல்லையா என் கடவுளே?" என்று புலம்பிக்கொண்டு இரண்டு பைகளை தூக்கினான்.

"அதான் அவளோ பெரிய ரூம் கட்டி வச்சி இருக்கியே போ அங்க...." என்றாள் ரித்திகா.

"தங்குறது சரிதான் சாப்பிட என்ன செய்றது" என்று புலம்பினான்.

"ரித்தி ஹோட்டலுக்கு போ..." என்று சொல்லி முடிப்பதற்குள்...

"நானே என் கையால செஞ்சி எடுத்து வரேன் அர்ஜுன்...." என்றாள் சாரா முந்திக்கொண்டு சொல்ல.... அவளை ரித்தி முறைக்க.

அவனுக்கு சாரா... ரித்திக்கு எதிராக பேசுகையில் கேட்க.... என்னதான் நடந்தாலும், சாரா என் பக்கம்தான்..... என்பதுபோல ரித்திகாவை பார்த்தான்.

அந்த சந்தோசம் சிறிது நேரம் கூட நிலைக்கல.

"உனக்குதான் சமைக்க வேற தெரியாதே எப்படி சமைப்ப சாரா" என்றாள் ரித்திகா. அர்ஜுனை பார்த்து நக்கலாக சிரித்துக்கொண்டு.

"நான் கத்துட்டு சமைப்பேன்...." என்றாள் சாரா. ரித்தியின் சிரிப்புக்கு எல்லையே இல்லை.

இவளை அர்ஜுன் அடிக்க வர... ரித்தி பின்னால் சென்று மறைத்தாள்.

"நீ தினமும் மூணு வேலை அவனுக்கு சமைத்து கொட்டு...." சாரா சொன்னதைவிட பெரிய இடியை அவன் தலையில் இறக்கி வைத்தாள் ரித்திகா. அவளாவது ஒருவேளையோட நிறுத்தி இருப்பா... இவ மூணு வேலைக்கு டைம் டேபிள் போட்டுட்டா... என்று அதிர்ந்தவன்,

"ரித்தி வேண்டாம் நான் உன்னோட ஒரே நண்பன் கொன்னுடாத" என்றான்.

அவளோ சிரித்தவாறு அவனை வழியனுப்பி வைத்தாள்.

'சாரா நூடுல்ஸ் கூட ரொம்ப சுமாரா தான் செய்வா" என்று புலம்பி கொண்டே போனான்.

ஒருநாள் இப்படித்தான் "நான் தான் சமைத்தேன்" என்று அவன் முன் வந்து நின்றாள்.

அதனின் விபரீதம் புரியாத அர்ஜுன்..." போ எடுத்து வா என்று அதிகார குரலில்.. சொல்லவும் உடனே எடுத்துவந்தாள்.

சாராவிடம் இருந்ததை வாங்கினான்.... மஞ்சா கலர் ல எதோ இருக்க...

"என்ன சாரா, மாமா காக புதுசா டிஷ்லாம் செஞ்சி வந்து இருக்க, ஆசையாக ஒரு ஸ்பூன் எடுத்து வாய்ல வைக்க, களி போல இருந்தது...

"சாரா களிக்கு தொட்டுக்க சாம்பார் சட்னி எதும் இல்லையா?" அவளை பார்த்து கேட்க...

"அய்யோ சார், அது மேகி களி இல்லை..." இதுகூட தெரியல என்று கலாய்க்க.

"என்னது மேகி ஆ?" அவன் வாயை போலந்து கேட்க...

அர்ஜுன் உன்னோட ஒளிமயமான எதிர்காலம் என் கண்ணுக்கு தெரிகிறது. அவன் மனசாட்சி அவனை பார்த்து கேலிசெய்யது, பாட்டு பாடியது.

"மேகி எங்க இருக்கு சரோ... எனக்கு கொஞ்சம்கூட தெரில" என்றான் ஸ்பூனால் அவள் செஞ்சதை கிண்டிக்கொண்டு.

"சமைக்க கொஞ்சம் தெரியாது சார்... ஆன மேகி சூப்பரா செய்வேன்" என்றாள் பெருமையாக.

'அடிப்பாவி மேகி செய்ய எதுக்கு சாப்பாடு செய்ய தெரியனும்.... சுடுதண்ணி காயவைக்க தெரிந்தா போதுமே' அவனே குழம்பி போனான்... அவளின் சமையல் திறனை பார்த்து.

"சமைக்க தெரியாம, எதுக்கு எனக்கு சாப்பிட கொண்டுவந்த?" என்றான் எரிச்சலாக.

"சார் நான் எங்க சாப்பிட குடுத்தேன், நீங்க தான் மிரட்டி பிடிங்கி சாப்டிங்க" என்றாள்.

"அப்போ எதுக்கு தயங்கி தயங்கி, நானே சமைச்சேன்னு வந்து என்ட சொன்ன"

"ஹோட்டல் எங்க இருக்கு கேட்கத்தான் வந்தேன், நீங்கதான் அவசரப்பட்டுட்டீங்க...." அவனின் நிலமை பாவமாக போனது.. "அவசர பட்டுட்டயே அர்ஜுன்.." என்று அவனையே கடிந்து கொண்டான்.

"வா நானும் சாப்பிட தான் போறேன் போலாம்...." என்று இருவரும் கிளம்பினார்கள்.

இதை நினைத்து சிரிப்பதா அழுவதா என்றுதான் அவனுக்கு புரியவில்லை.

அவனுக்கு தூக்கம் சென்று துக்கம் தொற்றிக்கொண்டது...அவளது சமையலை நினைத்து, இனி தினமும் கொல்ல போகறா.... இதில் இருந்து எப்படி தப்பிக்க யோசித்தபடி தூங்கினான், அவனது அலுவலக அறையில்.
 
Top