• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

13. உன்னாலே உயிரானேன்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
காலையில் சித்ரா ஏற்றி வைத்த தீபமானது அனைந்து புகைந்து கொண்டிருக்க, கீழே குங்கும சிமிழ் விழுந்து குங்குமம் சிதறிகிடப்பதை கண்ட இருவருக்கும் பதட்டமாக ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தார்கள்.

"


ஏதோ விபரீதத்துக்கு அறிகுறிதாங்க இது. அதுவும் பொண்ணு வெளிய கிளம்பியிருக்கிற நேரத்தில இப்பிடி நடக்குதுன்னா ஏதோ அவளுக்கு ஆகப்போகுது." என நடுங்கிய குரலில் கூறிய மனைவியை தன்னோடு அணைத்த வினோத்.

"


மனச போட்டு குழப்பிக்காத சித்ரா. உனக்கே தெரியும், நீ சாமிக்கு தினமும் படைக்கிற சுவீட்ஸ்ஸ சாப்பிடுறதுக்குன்னே இங்க நிறைய எலி சுத்திட்டிருக்கு. அதோட வேலை தான் இது.



அங்க பாரு எலி ஓடுது." என மேலே ஓடிய எலியை காண்பித்தவரை பீதியாக சித்ரா நிமிர்ந்து பார்க்க,

"


எல்லாத்துக்கும் சகுனம் பார்க்காத சித்ரா, அப்புறம் நிம்மதி கெட்டு போயிடும். அதுவும் இப்பிடி சின்ன சின்ன விஷயத்துக்கு பார்த்தா வாழவே முடியாது." என அவள் முதுகினை வருடிக்கொடுத்தவர் சித்ராவை தேற்றி விட்டார், ஆனால் அவருக்கு ஆறுதல் கூறத்தான் யாருமில்லை.

"


சரி சரி.... சிந்தின குங்குமத்தை அள்ளி வைச்சிட்டு, திரும்பவும் விளக்க ஏத்து, இதுக்கு பிறகு ஏதாவது ஆனா சொல்லு, நீ என்ன சொல்லுறியோ அதை நான் கேக்குறேன். இப்போ ஆபீஸ்க்கு டைம் ஆச்சும்மா...! தனிய இருந்து கண்டதை போட்டு குழப்பிட்டிருக்காம, வள்ளிய அழைச்சிட்டு கோவில் போயிட்டுவா! கொஞ்சம் மனதுக்கு அமைதி கிடைக்கும்." என்றவர் தன் பையினை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டார்.



இங்கு ஸ்ரூடியோ நுழைந்தவளுக்கு நேற்றைய நிகழ்வுகளே சௌந்தரீகனை நினைத்து பயங்கொள்ள செய்தது.

'


இன்று என்ன செய்ய காத்திருக்கிறானோ ? எவ்வளவு தைரியசாலி நீ.... உன்னையே பயமுறுத்துறனே மதுஸ்ரீ' என தனக்குள்ளேயே பேசியவாறு வந்தவள் தன்னை கடந்து சென்ற பெண்ணை அழைத்து,

"


சௌந்தரீகன் சார் வந்திட்டாரா?" என வினவினாள்.

"


இல்லையே....! இன்னைக்கு சார் அவரோட மற்றைய பிஸினஸ்ஸ பார்க்க போறதனால வரமாட்டாருன்னு மேனேஜர் சொன்னாரு." என்றாள்.

"


ஓ... அப்பிடியா...?" என்றவள் அடி வயிற்றில் இருந்து பலமாக ஓர் மூச்சு காற்றினை வெளியேற்றும் நேரம் அங்கு வந்த ஹம்சி.

"


வாங்க மேடம்.....! என்ன பெருமூச்செல்லாம் பலமா இருக்கு. அதுவுமில்லாம காலையிலேயே உங்க தரிசனம் வேற கிடைச்சிருக்கு." என்றாள் நக்கலாக,

"


எல்லாம் உன் பாஸினால தான். நேத்து அந்த சௌண்டு பண்ண அலப்பறையினால வீட்டி அம்மா ருத்ர மூர்த்தியாகிட்டாங்க." என்க.



அவள் சொன்னதில் சிரித்தவளோ, "அது யாருடி சௌண்ட்...?" என்றாள்.

"


ஆ.... நேற்று புதுசா ஆஃபீஸ் என்ட்ரி ஆச்சே நெட்டை கொக்கு, கருவாப்பயல். சிரிக்காத மூஞ்சி....." என சொன்னவள் தோறணையில் இன்னமும் பலமாக சிரித்தவள்,

"


போதும்டி....! இது குருபரன் சாருக்கு கேட்டிச்சு.... உன் சௌண்ட்டு என்ன வேலையால நிப்பாட்டுறது? சாரே உன்னை போன்னு வழியணுப்பி வைச்சிடுவாரு." என எச்சரிக்க,

"


ஆமா..... அவனை எந்த நேரம் பார்த்தேனோ....! எதுவுமே சரியில்லாம போயிட்டிருக்கு, எதுக்கு புதுசா இன்னொன்னா இழுத்து வைப்பான்." என வேலையினை பார்க்க சென்றனர்.



அன்று சௌந்தரீகன் அங்கு வரவில்லை என்றதும் சந்தோஷமாகவே தன் வேலை இறங்கினாள்.



வீட்டு ஹாலிங்க் பெல் அழைக்க, ஓடிச்சென்று கதவை திறந்த சித்ரா, கணவன் நின்றதை கண்டு,

"


என்னங்க..... எப்பவும் ஆஃபீஸ்ல இருந்து ஒன்பது மணியாகும் வரவரு, இன்னைக்கு ஆறு மணிக்கே வந்து நிக்குறீங்க?" என கேட்டவாறு வழிவிட்டு நின்றவரை விலக்கிக்கொண்டு உள்ளே வந்தவர் விழிகளோ விட்டினை ஒரு முறை ஆராய்ந்து விட்டு, ஷோபாவில் அமர்ந்தவர் அருகில் தானும் அமர்ந்த சித்ராவிடம்,

"


நீ மட்டும் தான் வீட்டில இருக்கியா சித்ரா?" என்றார்.

"


இல்லையே..! வள்ளியும் என்கூடத்தான் இருக்கா...., பேச்சை மாத்தாம கேட்டதுக்கு பதில சொல்லுங்க. என்ன சீக்கிரம் வீட்டுக்கு?" என்றவள் கேள்விக்கு என்ன பதில் கூறுவதென்பது தெரியாமல் நெற்றியை நீவியவர் செயலில்,

"ஓ..


தலை வலிக்குதாங்க? அது தான் சீக்கிரம் வந்திட்டிங்களா..? இருங்க சுக்கு போட்டு காஃபி எடுத்துட்டு வரேன்." என்றவாறு கிச்சனுக்கு ஓடியவளையே பார்த்திருந்தவருக்கு மனைவியிடம் இப்போது சொன்னால் தவித்து போவள் என அறிந்தவர் மறைக்க முடிவெடுத்தார்.



ஆம்.... காலையில் நடந்த அபசகுனத்திற்கு பின்னர் மனைவியை தேற்றியவருக்கு தன் மனதை தேற்றும் பக்குவம் இல்லை.



எப்படி வரும்? அவள் பிறந்த மறுநிமிடமே இந்த வயதில் ஆபத்து வருமென்று அப்போதே எச்சரிக்க பட்டாகி விட்டதே! அதை உறுதி செய்வதுபோல் யாரென்றே அறியாத பரதேசி அன்று கோவிலில் நடந்தவற்றை நேரில் பார்த்தவன் போல் கூறுயதும் அல்லாமல், மதுஸ்ரீ உயிருக்கு ஆபத்து, எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுங்கள். என அதை நினைவூட்டி விட்டு வேறு சென்றிருக்கும் நேரத்தில் விளக்கு அணைந்து, குங்குமம் கொட்டிண்டால் எப்படி பயம் கொள்ளாமல் இருக்க முடியும்?



ஆஃபீஸ் சென்றவருக்கு எந்த வேலையுமே ஓடவில்லை. போனதில் இருந்து மதுஸ்ரீக்கு பலமுறை தொடர்பு கொண்டு அங்குள்ள நிலவரம் கேட்டறிந்தவருக்கு மகள் சொன்ன ஒரு ஆறுதல் அவள் எம்.டி அலுவலகம் வரவில்லை என்றது தான்.
இருந்தும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் விசாரித்து கொண்டே இருந்தார்.



ஒரு மணிநேரத்திற்கு முன்பு அழைத்தவன் அவள் செல்போன் ஆஃப்பாகி இருப்பதாக கூறப்பட, திரும்ப திரும்ப முயன்றவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.



அதற்குமேல் அலுவலகத்தில் இருப்பு கொள்ளாது கிளம்பியவர் வரும் போது தான்,
'இன்று சாட்டடே வேளையோடு மதுஸ்ரீ வீடு சென்றிருப்பாள்.' என தானாகவே நினைத்து நேராக வீட்டிற்கு வண்டியை விட்டார்.



இங்கு வந்து பார்த்தால் அவள் இல்லை,
'இப்போது கிளம்பினால் சித்ரா சந்தேகம் கொள்வாள்.' என நினைத்தவர், செல்போனை எடுத்து மீண்டும் மதுஸ்ரீ இலக்கத்திற்கு தொடர்பு கொண்டார்.



மாற்றமில்லாத பதில் என்றதும் போனினையே பார்த்து கொண்டிருந்தவர் முன் காஃபி கப்பினை நீட்டிய சித்ரா,

"


ஆஃபீஸ்ல ஏதாவது பிரச்சினையா? அதான் ஒரு மாதிரியாவே இருக்கிங்களா.?" என்க.

"


ஆமா சித்ரா..! கொஞ்சம் டென்ஷன் தான். உன் கஃபியை குடுச்சேன்னா சரியாகிடுவேன்." என பொய்யாக சிரித்தவாறு கப்பை வயில் சரித்தவர்,

"


மதும்மா கூட பேசினியா சித்ரா...! அந்த எம்.டி ஒன்னும் பிரச்சினை பண்ணலையாமே?" என எதுவும் தெரியாதவர் போல வினவினார், மனைவியிடமிருந்து ஏதாவது தகவல் கிடைக்கும் என்ற நம்பாசையில்.

"


ம்ம்... காலையில பேசினேனே..! நாங்க பயந்தது போல எதுவும் இல்லங்க, அந்த எம்.டி கூட இன்னைக்கு வரலையாம்.



அப்புறம் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட யாரோ நம்பர்ல இருந்து கூப்டா...!



என் போன் சார்ஜ் இல்லாம ஆஃப் ஆகிடிச்சு, என்கூட வேலை பார்க்கிற பொண்ணுக்கு திடீர்ன்னு ஆக்சிடன்ட் ஆகிடிச்சு, அவங்ளை பார்க்க ஹோஸ்பிடல் வரைக்கும் என் ஃப்ரண்ட்டு கூட போயிட்டு வரேன். லேட்டாகினா தேடாதிங்க. அப்பிடின்னு சொன்னா." என்றாள்.



மனைவியின் பேச்சினை கேட்டதும் தான் வினோதிற்கு உயிரோ வந்தது. கொஞ்ச நேரத்தில் எதையெல்லாம் நினைத்து பயந்து விட்டார்.

"


எந்த ஹோஸ்பிடல்ன்னு கேட்டியா சித்ரா..? லேட்டாகும்னா நானே போய் அழைச்சிட்டு வரேன்." என்க.

"


அவ பைக்கில தானே போயிருக்கா, நீங்க அழைச்சிட்டு வந்த பைக் பறந்தா வரும்?, அவ அவ ஃப்ரண்ட்டு கூடத்தானே போயிருக்கா, அவளே வந்திடுவா," என இம்முறை தைரியமாக பேசியவருக்கு வில்லன் என்னமோ சௌந்தரீகன் என்ற நினைப்பு தான்.



அவனே அலுவலகம் வராத பொழுது ஏன் மகளை நினைத்து பயப்பட வேண்டும் என்று தான் அலட்டிக்காெள்ளாது வேலையினை பார்க்க சென்றார்.



இறக்கை முளைத்து பறந்த நேரம் என்னமோ ஒன்பது மணியில் வந்து நின்றது.



இதுவரை மனைவியின் பேச்சில் அமைதியாக இருந்தவருக்கு இப்போது சற்று பீதியை தூண்ட, அதை வெளிக்காட்டாது எப்படியோ ஒரு மணி நேரத்தை தாக்கு பிடித்து விட்டார்.
அதன் பின் ஒவ்வொரு வினாடியும் குட்டி போட்ட பூணை போல அந்த ஹோலை அளந்தவர் முன்பு வந்து நின்ற சித்ராவின் முகத்திலும் கலவரம்.

"


ரொம்ப நேரம் ஆகுதுங்க, இன்னும் மதும்மாவை காணல,



என்னதான் அவசரமான வேலையா இருந்தாலும் டைம்க்கு வீட்டில நிப்பாளே தவிர, இந்த அவ மாதிரி எங்கேயும் லேட் நைட்ல நிக்க மாட்டா,"

"


ம்ம்.... எனக்கும் அதாம்மா பயமா இருக்கு, உன் சொல்போனுக்கு வந்த நம்பரை குடுக்கிறியா? நான் அவளை என்னன்னு விசாரிக்கிறேன்." என இதுவரை தன்னால் மனைவி பயப்பிடக்கூடாதென கேட்காது இருந்தவர், இப்போது மனைவியே பேச்சு கொடுத்ததும் நம்பரை கேட்டு வாங்கி விட்டார்.



ஆறாவது முறையாக தொடர்பு கொண்டு தோற்று போனவரோ,

"


யாருமே ரிசீவ்ட் பண்றாங்க இல்ல சித்ரா" என்றவர் பொறுமை அற்றவராய், கார் சாவியினை எடுத்தவர்,

"


கதவை இறுக பூட்டிக்க, நான் அவளோட வெளிய போயிட்டு வரேன்." என கூறிக்கொண்டே காரில் ஏறியவர், காரை புயல் வேகத்தில் ஓட்டி அவள் அலுவலகம் முன்பு நிறுத்தினார்.



மின்விளக்குகளோ அங்கு ஏகத்துக்கும் ஔிர விடப்பட்டிருக்க, அலுவலக கேட்டில் நின்ற காவலன் விசாரித்ததும், மதுஸ்ரீ பெயரை கூறி அவளை கேட்டார்.



காவலனே அவள் ஐந்து மணியுடனே வீடு சென்று விட்டாள், இப்போது உள்ளிருப்பது இரவு ஒலிபரப்பாளர்கள் என்றார் காவலர்.



அவர் பதில் அவருக்கு உள்ளே சற்று பதட்டாமகத்தான் இருந்தது. ஆனால் 'இவன் காவலன் தானே, இவனிடம் எல்லாவற்றையும் கூறிக்கொண்டிருப்பார்களா என்ன? ஒரு வேளை மது ஹோஸ்பிடல் போனது இவனுக்கும் தெரியாமல் இருக்கலாம்.' என நினைத்தவர்,

"


இங்க யாராே ஒரு பொண்ணுக்கு ஆக்சிடன்ட் ஆச்சாமே தம்பி? அவங்க எந்த ஹோஸ்பிடல்ல சேர்த்திருக்காங்கன்னு தெரியுமா? மதுகூட அங்க தான் போறேன்னு கால் பண்ணி சொன்னா, நானும் அவங்களை பார்த்திட்டு என் பொண்ணை அழைச்சிட்டு போயிடுறேன்." என்றது எதுவும் புரியாது தலையினை சொரிந்தவன்,

"


இருங்க எனக்கு இந்த தகவல் எல்லாம் தெரியாது. உள்ள இருக்கிற யாரையாவது கூட்டிட்டு வரேன், அவங்க கூட பேசுங்க." என சென்றவன் வரும் போது தமிழோடே வந்தான்.



காவலனோடு வருபவனை கண்டவருக்கு அவனை எங்கோ பார்த்தது போன்றதொரு உணர்வு தோன்ற, இப்போதிரக்கும் கவலரத்தில் அந்த உணர்வுகளை அடக்கி வைத்தவர்,



தன்னை யாரென அறிமுகம் செய்து, காவலரிடம் கேட்ட கேள்வியையே மிக பதட்டமாக விசாரித்தார்.

"


என்ன சார் சொல்லுறீங்க...? யாருக்குமே இங்க ஆக்சிடன்ட் ஆகலையே! அதோட மதுஸ்ரீயும் சீக்காரம் கிளம்பிட்டா! ஆமா அவ எந்த நம்பர்ல இருந்து கூப்பிட்டான்னு சொன்னிங்க? அந்த நம்பர கொடுங்க." என கேட்டு வாங்கியவனுக்கும் அது யார் நம்பர் என்று தெரியவில்லை. தன் பங்கிக்கும் முயற்சித்தவனுக்கு வந்த பதில் சுவிஸ் ஆஃப் என்பது தான்.



மதுஸ்ரீக்கு எதுவோ ஆகிவிட்டது என்று உள் மனம் பரபரக்க, வினோத்தின் நிலையோ மோசமாக இருந்தது.

'


உறவென்று சொல்லிக்கொள்ள தமக்கிருக்கும் ஒரே மகளை காத்துக்கொள்ள தெரியாத பாவி ஆனானே!' என தலைமேல் கைவைத்து தரையிலேயே அமர்ந்தவிட்டார்.



அவரை எழுப்பி உள்ளே அழைத்து வந்தவன், தண்ணீர் தந்து அமர வைத்து,

"


மதுஸ்ரீக்கு எதுவும் ஆகாது சார்! ஒரு வேளை அவ உண்மைக்குமே யாருக்காவது உதவி செய்ய போயிருக்கலாம். வந்துடுவாங்க சார். நீங்க தைரியமா வீட்டுக்கு போங்க, யார் கண்டது...? நீங்க வீட்டுக்கு போறப்போ அவங்க வீட்டில கூட இருக்கலாம்ல." என தேற்றியவனை, உள்ளிருந்து இன்னொருவன்,



" டேய் டைம் ஆச்சு வா!" என்று அழைத்தான்.



"கொஞ்சம் சமாளி வந்திடுறேன்." என அவனுக்கு பதிலளித்தவன், வினோத்திடம் திரும்பி,

"


இந்த நிலையில நீங்க கார் ஓட்ட வேண்டாம் சார்! உங்ககூட நம்பிக்கையான ஒரு ஸ்டாப் அனுப்புறேன். அவன் காரை ஓட்டிட்டு வருவான் நிம்மதியா போங்க, மதுஸ்ரீ நல்லபடியா வந்துடுவா." என நம்பிக்கையா ஒரு இரு வார்த்தை கூறியவன் அருகில் நின்றவனிடம்,
"சாரை பத்திரமா வீட்டில விட்டிட்டு, வரப்போ ஆட்டோ பிடிச்சு வந்திடுடா!" என அனுப்பி வைத்தான்.



வரும் வழி எங்கும் தென்பட்ட கோவில்களில் மேல் மகள் வந்திருக்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டே வந்தவருக்கு வீடு வந்ததும் ஏமாற்றமாகிப்போனது.



தன்னோடு வந்தவனை உள்ளே அழைக்க,
" இல்லை நேரமாகிறது இன்னொரு நாள் வருகிறேன்." என மறுத்தவனுக்கு ஆட்டோவிற்கு காசு கொடுத்து அனுப்பிவிட்டு உள்ளே வெறும் கையோடு வந்தவரிடம்,

"


மதும்மா வரலையாங்க?" என கேட்டார் சித்ரா.

"


சித்ரா உன் பொண்ணு எங்க போயிட்டான்னே தெரியலடி...!" என்றார் சிறுவனைப்போல் கண்கலங்கி.

"


என்னங்க சொல்லுறீங்க? அவ எங்க போயிடப்போறா...? நீங்க இப்போ எங்க போயிட்டு வரீங்க? அதை சொல்லுங்க?" என்க.

"


அவ வேலை பார்க்கிற ஸ்ரூடியோ ஆஃபீஸ்க்கு போனேன். அங்க அவ அஞ்சு மணிக்கே கிளம்பிட்டா என்கிறாங்க."

"


நீங்க ஏன்க அங்க போனிங்க...? அவ ஹோஸ்பிடல் போனதா தானே சொன்னா? நீங்க ஹோஸ்பிடல் போறத விட்டிட்டு எதுக்கு ஆஃபீஸ் போனிங்க?" என்க.

"


எந்த ஹோஸ்பிடல் போகட்டும் சித்ரா? நீயும் ஏதோ நம்பர்ல இருந்து கால் வந்ததா சொன்னியே தவிர, ஹோஸ்பிடல் பெயர் சொல்லல. உன் பொண்ணு வந்திடுவான்னு நீயும் கேட்டிருக்க மாட்ட, நான் எங்கன்னு போயி தேடுறது?



அதான் அவ ஆஃபீஸ் போனா ஹோஸ்பிடல தெரிஞ்சிட்டு போலாம்ன்னு அங்க போனேன்.



அங்க போனா யாருக்குமே ஆக்சிடன்ட் ஆகலன்னு சொல்லுறாங்கம்மா...! நான் கால் பண்ணும்போது ரிங்க் ஆன நம்பர், இப்போ சுவிச் ஆஃப்ன்னு வருது. எனக்கென்னமோ பயமா இருக்கு சித்ரா." என்றவர் பேச்சில் அரண்டே போனாள் சித்ரா.



சும்மாவே ஏங்கிவிடுவாள் அவள். இப்போது கணவனும் நம்பிக்கையினை இழந்து பேசும் போது அவள் மட்டும் தெளிவாக இருப்பாளா என்ன?

"


அய்யோ என்னங்க சொல்லுறீங்க...? அப்போ என் பொண்ணுக்கு ஏதாவது ஆகிருக்குமா? இத்தனை வருஷம் கண்ணுக்குள்ள வைச்சு பார்த்தோமேன்க.



இன்னைக்கு இப்பிடி அலட்சியமா விட்டுட்டோமே!" என கலங்கிய மனைவியை,

"


இல்லை சித்ரா..! அவளுக்கு எதுவும் ஆகியிருக்காது. ஆகவும் விடமாட்டேன். நீ கிளம்பு நாமா போலீஸ் டேஷன்ல ஒரு புகார் குடுத்திட்டு, முடிஞ்சவரை தேடலாம்." என மனைவியை அழைத்துக்கொண்டு திரும்பியவர் முன், உடல் முழுவது வியர்த்துப்போய் வந்து நின்றாள் மதுஸ்ரீ.
 
Top