• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

13. உறவாக வருவாயா.?

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
சில நாட்கள் கடந்திருந்த நிலையில் அன்று கண்விழிக்கும் போதே வீடு பரபரப்பாக இருந்தது போல் தோன்றியது.


"காலையிலயே என்ன இவ்ளோ சத்தம்?" என சிரமத்தோடே விழித்தாள்.


கேஷி அலுவலகம் செல்ல கண்ணாடி முன்னின்று தயாராகிக்கொண்டிருக்க... பாத்ரூம் சென்று காலை கடன்களை முடித்துவிட்டு வெளியே வந்தாள்.
பின்னே அலுவலகம் கிளம்பியவனுக்கும் வீட்டில் நடந்துகொண்டிருந்த கூத்தினை பார்த்து கண்கள் பெரிதாய் விரிந்தது.


அங்கு ஓடியாடி அலங்கார வேலைகளுக்கு உதவிக்கொண்டிருந்த இலக்கியாவை அழைத்தவன்..


"இங்க என்ன நடந்திட்டிருக்கு? ஏன் திடீர்ன்னு வீட்டுக்கு இவ்ளோ அலங்காரம்"


"முதல்ல கைய குடுண்ணா.." என அவன் கையினை பிடித்து குழுக்கியவள், "ஹாப்பி பர்த்டேண்ணா" என அவனை தழுவிக்கொண்டாள்.


ஆம் இன்றைய தினம் அவனது பிறந்த நாளே தான்.. ஆனால் ஏனோ இப்போதெல்லாம் அவனுக்கு நினைவில் இருப்பதில்லை.. அதற்கு அவன் கடந்து வந்த பாதையின் கசந்துபோன அனுபவங்கள் கூட காரணமாகிப்போனது. இலக்கியா அவனை வாழ்த்தும்போது கூட உணர்சிகள் அற்றுப்போய் நின்றான்.


'என்னது... இன்னைக்கு இவனோட பர்த்டேவா? அது சந்தோஷமான விஷயம் தானே! ஆனா இவன் ஏன் இப்பிடி உறைஞ்சு போய் நிக்கிறான்.' என சிந்திக்க, இருவரையும் நோட்டமிட்டவாறு எதிரில் வந்தனர்..
அந்த வீட்டின் பெண்மணிகள்.


அவர்களும் அவனை ஆரத்தழுவி பிறந்தநாள் வாழ்த்தினை கூற.. கடமையே என காலில் விழுந்து எழுந்தவன் ஆஃபீஸ் உடை கண்டு,


"எங்கைய்யா கிளம்பிட்ட? பதினெட்டு வயசுக்கு அப்புறம் இந்த வீட்டில நீ கொண்டாடப்போற பிறந்தநாள். அதுவும் உன் பொண்டாட்டி பிள்ளைங்களோட. அதனால இன்னைக்கு உன்னை எங்கேயுமே விடுறதா இல்ல" என்றார் வடிவழகி.


"நான் என்ன சின்ன குழந்தையா? முதல்ல இந்த கூத்துங்க எல்லாத்தையும் நிறுத்த சொல்லுங்க.. பாக்கிறப்போ எரிச்சலா வருது" என கோபமானவனை திரும்பி பார்த்தாள் மது.


'ஏன் இப்போ எரிஞ்சு விழுறான்? எவ்ளோ ஆசையா பேரனோட பர்த்டேவ கொண்டாடணும்ன்னு ஆசைபட்டிருப்பாங்க. விருப்பமில்லன்னா பொறுமையா எடுத்து சொல்லாம எதுக்கெடுத்தாலுமே குத்தம் சொல்லிட்டு,
சரியான சிடுமூஞ்சி' என உள்ளே அவனை திட்டி தீர்த்தவள்.. அவர்கள் மனசு நோகவிடாது.


"பாட்டி... தப்ப எடுத்துக்காதிங்க. அவருக்கு இதெல்லாமே பிடிக்காது. நானே கேக் வெட்டுவோமான்னு கேட்டாலும்.. என்மேலயும் இந்த மாதிரித்தான் எரிஞ்சு விழுவாரு"


"இல்லையாங்க.... நான் கேட்டாலும் என்கிட்டையும் இந்த மாதிரி தானே நடந்துப்பீங்க" என பொய்யாய் இளித்து அவனிடம் கேட்டவளையும் முறைத்தான்.


"என்னம்மா... நீயாவது அவனுக்கு எடுத்து சொல்லுவேன்னு பாத்தா, நீயும் அவனுக்கு உடந்தையா பேசிட்டிருக்க? அது சரி.. நீங்க தான் புருசன் பொண்டாட்டியாச்சே! அந்த மாதிரி தான் பேசுவீங்க.


சரிடா... இதெல்லாம் வேண்டாம், ஆனா ஆஃபீஸ்க்கும் விடமாட்டோம். நல்ல நாள் அதுவுமா, குடும்பத்தோட சாமி தரிசிச்சிட்டு, எங்கேயாச்சும் அழைச்சிட்டுபோய் சந்தோஷமா இருந்திட்டு வாங்க.


இந்த ஊருக்கு வந்து எத்தனை மாசமாச்சு... உன் சம்சாரத்துக்கு குலதெய்வம் கோவிலை தவிர, வேற இடம் தெரியுமா? பாவம் அவளும் எத்தனை நாளைக்கு வீட்டுக்குள்ளயே கிடப்பா?" என தன்னை பற்றிய வடிவழகியின் பேச்சில் தலை கவிழ்ந்தவளை பார்த்தவனுக்கும் 'இதை எப்படி மறந்தேன்' என்றே தோன்றியது.


'ஆனால் எப்படி? அவனை நம்பி மேனேஜர் ஒரு பொறுப்பை ஒப்படைத்திருக்கிறாரே!'
"ஆனா பாட்டி எனக்கு முக்கியமான வேலை இருக்கே" என்றவனை முறைத்தவர்,


"எந்த முக்கியமான வேலையா இருந்தாலும்.. போனை போட்டு சொல்லிடு!" என கூறிய தருணம் அவன் செல்லும் அலறியது.. எடுத்து காதில் வைத்தான்.


"மாப்பிள்ளை... ஹாப்பி பர்த்டே டா!" என எதிர்புறம் கத்த.


"தேங்க்ஸ்டா!"


"அப்புறம் சொல்லுடா!, வீட்டில என்ன விஷேசம்.. பொண்டாட்டிக்கூட கொண்டாடப்போற முதல் பர்த்டே. மறக்க முடியாத அளவுக்கு ஏதாவது பண்ணுடா!" என்றான் அவனுக்கு வேலை கொடுத்த நண்பன்.


"இல்ல மாப்பிள்ளை.. ஆஃபீஸ்ல முக்கியமான வேலைடா! அது தான்......."


"எந்த வேலையா இருந்தாலும், முதல்ல தூக்கி போட்டுட்டு என்ஜாய் பண்ணு... நான் சொல்லிக்கிறேன்" என போனை வைத்தான்.


அதன் பின் வந்த சிவாவும் ஆரத்தழுவி வாழ்த்து கூறியதும், பாட்டியின் வேண்டுகோளுக்கு இணங்கி.. மூவருமாக கோவில் புறப்பட்டனர்.


அவனுடனான பயணம் இனிமையாக இருந்தாலும்.. லாவண்யா இடத்தில் தான் இருப்பது நெருடலாகிப்போனது. அந்த நினைவே ஒவ்வொரு தருணத்திலும் அவளை ஒதுங்கச்செய்தது.


அன்று சாதாரண நாள் என்பதால் கோவிலில் அவ்வளவாக கூட்டமில்லை.. காரினை ஓரமாக பார்க் செய்துவிட்டு, உள்ளே சென்றவர்கள் மூலவராக இருந்து அருளாட்சி புரியும் அன்னையை தரிசித்து விட்டு...உள் வீதியினை வலம் வரும்போது ஒருவன் அவளை மோதிவிட.., தான் தான் தெரியாமல் மோதியதாக நினைத்தவள்,


"ஸாரி... நான் கவனிக்காம மோதிட்டேன்" என மன்னிப்பு வேண்ட.. ஒரு மாதிரியாக பார்த்துசிரித்துவிட்டு நகர்ந்தான் அவன்.


அவன் சிரிப்பு ஏதோ போலிருந்தாலும், அதற்கு உருவம்தர விரும்பாது நகர்ந்து சென்று, அடுத்த பிரகாரத்தை சுற்றியவளை இன்னொருவன் வேகமாக வந்து மோதிவிட்டு, "ஸாரி நான் கவனிக்கல" என்றான்.


மதுவிற்கு அதுவும் நெருடலாகியது. "பரவாயில்லை தெரியாம தானே பண்ணீங்க" என விலகிச்சென்றவளையே அவனும் திரும்பி பார்த்தவாறு சென்றான்.


இம்முறை கவனம் முழுவதும் யாரையும் மோதிவிடக்கூடாது என பார்த்து வந்தவளை.. திடீரென முலையிருந்து வந்த ஒருவன் மோதிவிட, இதை எதிர்பாராதவளோ தவறவிட இருந்த ஸ்ரீயை கெட்டியாக பிடித்துக்கொண்டாள்.


அதை அறிந்த இவனும் வழமைபோல் மன்னிப்பு வேண்ட,
இத்தனை நேரம் நடப்பவற்றை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த கேஷவனுக்கு கடுப்பாகிப்போனது.


பின்னே கோவில் வரும் யாருக்குமே கண்தெரியாதா என்ன? அதுவும் மதுவையே குறிவைத்து மோதுகிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?
அவன் சட்டையினை கொத்தாக பற்றியவன்,


"யாருடா நீங்க? நிம்மதியா ஒரு பொண்ண சாமி கும்பிட விடமாட்டிங்களா?" என சத்தமிட.. அந்த சத்தத்தில் அங்கு நின்ற ஒருசிலர் அவர்களை திரும்பி பார்த்தனர்.


அதை கவனித்துவிட்ட மது.
"தெரியாம தானே மோதினாரு விடுங்க" என அவனை சாமாதானம் செய்ய,


"என்ன தெரியாம? அது எப்பிடி தெரியாம எல்லாருமே உன்மேலயே வந்து மோதுவாங்க..? உன்னை மோதினவங்கள நல்லா கவனிச்சியா நீ? இவங்க எல்லாம் சாமி கும்பிட வந்தா மாதிரியா இருக்கு? இவனும் இவன் மண்டையும்" என பற்களை கடித்தான்.


"சரி கேஷி... ஆனா இது கோவில்.. எல்லாரும் நம்மளத்தான் பாக்கிறாங்க. முதல்ல அவன் சட்டை மேல இருந்து கைய எடுங்க" என அழுத்தமாக சொன்னவளது வார்த்தையில்,


முறைத்தவாறே கைகளை எடுத்தவன்.. விரலசைவில் எச்சரித்து விட்டே சென்றான்.


அதன் பிறகு சாமி தரிசனம் அமைதியான முறையில் நடந்தேற, சன்னிதானத்தை விட்டு வெளியே வந்தவர்கள் பார்வையில் வரிசையில் நின்று பிரசாதம் வாங்கும் பக்தர்களை பார்த்ததும் மதுவிற்கும் எச்சில் ஊறியது.


கோவில் போகும் சமயங்களில் எல்லாம் வரிசையில் நின்று பிரசாதம் வாங்குபவர்களை பாரக்கும் போது, அவளுக்கும் அந்த பிரசாதத்ததை ருசிக்க வேண்டும் என்ற ஆசை எழுவதுண்டு.. ஆனால் அவள் பிறந்து வளர்ந்த சூழல் அதற்கு அனுமதி தரவில்லை.
இன்று எப்படியாவது பிரசாதத்தை உண்டுவிட வேண்டும் என நினைத்தவள்,


"எனக்கு கோவில் பிரசாதம்ன்னா ரொம்ப பிடிக்கும்.. நம்மளும் வரிசையில நின்னு வாங்கிக்கலாமா?" என கேட்டவளது ஆசை வினோதமானதாக இருந்தாலும்,


"பாப்பாவை வைச்சிட்டு வரிசையில எல்லாம் நிக்கிறது கஷ்டம்.. நீ இப்பிடி ஓரமா நில்லு, நான் வாங்கிட்டு வரேன்" என அந்த வரிசையில் நின்று கொண்டான்.


நகரும் வரிசையினையே பார்த்து நின்றவளை பின்புறம் யாரோ மோத, யாரென திரும்பி பார்த்தாள்.


கோவிலின் உள்ளே மோதிவிட்டு மன்னிப்பு கேட்ட மூவரும் அவளை சுற்றி நிற்பதை கண்டதும் பயம்கொண்டவளாய்,


"யாரு நீங்க? எதுக்கு என்னை சுத்தி வளைக்கிறீங்க?"


"இதோ பார்டா... இவங்க மட்டும் வசதியான குடும்பத்து பையனை வளைச்சு போடுவாங்களாம், ஆனா நாம மட்டும் வளைக்க கூடாதாம்....." என இழிவாக ஒருவன் பேச,


"எதுக்கு இப்போ தேவை இல்லாம பேசுறீங்க...? முதல்ல வழிய விடுங்க." என நகர்ந்தவள் கையினை இழுத்து முன்னே நிறுத்தியவன்,


"நாங்களும் உங்க ரெண்டுபேரையும் வழியனுப்ப தான் வந்திருக்கோம்.. அதுக்குள்ள நீ ஏன் அவசரப்படுற?" என கேட்டவாறு இடுப்பில் சொருகியிருந்த கத்தியை உருவியவனை கண்டவளுக்கு பயம் அதிகமாகிப்போனது.


கத்தியை அவள் முகத்துக்கு நேரே காட்டியவாறு அவளை நெருங்க, பின்புறமாக நகர்ந்தவளை நகரவிடாது மற்றவர்கள் சூழ்ந்து கொண்டனர்.


தனியொருவள் என்றால் எப்படியாவது தப்பித்திருப்பாள். குழந்தையை கையில் வைத்துக்கொண்டு எப்படி அவளால் ஓடமுடியும்?


கேஷியாவது வந்து தன்னை காப்பாற்றி மாட்டானா என அவன்புறம் பார்வையை திருப்பினாள்.


எங்கே அவன் தெரிந்தான்? மதுமிதாவை காணமுடியாதவாறு நடுவே கும்பலொன்று அவனை மறைத்து நின்றவாறு கலவரத்தில் இறங்கியிருப்பதை கண்டவள் முகம் சோகமாக,


"என்ன உன் புருசன் வருவான்னு பாக்கிறியோ!
பார்த்தல்ல.. பக்கா செட்டப்போட தான் இறங்கியிருக்கோம். நீ கத்தினாக்கூட அவனுக்கு கேக்காது" என்றவனை அவன் எதிர்பாராத நேரம் தன் மொத்த பலத்தினையும் ஒன்று திரட்டி.. ஒற்றை கையினால் தள்ளிவிட்டு ஸ்ரீயை தாங்கியவாறு ஓடத்தொடங்கினாள்.


விழுந்தவனை தூக்கி விடுவதில் இருந்த கவனத்தை மதுமிதாவிடம் அவர்கள் காட்டாததனால்.. கிடைத்த இடைவெளியை பயன்படுத்தி, சற்று தூரம் ஓடியவளை அவர்கள் தூரத்த ஆரம்பித்தனர்.


பின்னால் திரும்பி பார்த்தவாறு ஓடியவள், எதிரே இருந்த கல்லினை கவனிக்கவில்லை.


கால் மோதி தரையில் விழுந்தவள் ஸ்ரீக்கு அடிபடாமல் இருக்க உடம்பினை பக்கவாட்டில் திருப்பியதில் கால் இடுங்குண்ட, வலியில் கால்களை அவளால் அசைக்க முடியவில்லை.


நெருங்கிவிட்டார்கள்... இனி தப்ப முடியாது.' என நினைத்தவள், ஸ்ரீயையாவது இவர்களிடத்திலிருந்து காப்பாற்ற வேண்டுமென நினைத்து, தன் வயிற்றுக்குள் அவளை அடக்கி கைகளால் அரணிட்டு அவள்மேல் கவிழ்ந்து கொண்டாள்.


ஸ்ரீயோ பயத்தில் வீரிட்டு கத்த.. அவள் கத்தலுக்கு மேலாக, "பாத்திட்டு நின்னது போதும்.. கொல்லுங்கடா அவளை!" என்ற சத்தத்தை தொடர்ந்து காலடித்தடங்கள் அவளை நெருங்குவதை உணர்ந்து கண்களை இறுக மூடிக்கொண்டாள்.


நீண்ட நேரமாகியும் தன்னை நோக்கி ஓடிவந்தவர்கள்.. தன்னை தாக்கவில்லை என்றதும் ஸ்ரீமீதிருந்து எழுந்தவள் முன்பு யாரையுமே காணவில்லை.


'என்னை கொல்ல வந்தவங்க எல்லாரும் எங்க போயிட்டாங்க? முதல்ல அவங்க யாரு?' என மீண்டும் விழிகளால் ஆராந்தவள் கண்களில் விழுந்தான்... அங்கு தூரத்தே யாருடனோ நின்று பேசிக்கொண்டிருந்தவன்.


அவனைக் கண்டதும் அதிர்ந்தவள் விழிகள் நன்றாக விரிந்து... இவன் அவன்தானா என ஆராய்ந்தது.


"இவன் எப்பிடி இங்க? அப்போ நான் இங்கே தான் இருக்கேன்னு தெரிஞ்சிடிச்சா? இப்போ இவன் கண்ணில படாமல் போயாகணுமே!" என மெதுவாக ஸ்ரீயை தூக்கிக்கொண்டு எழுந்தவளால், வலது காலை தரையில் ஊன்ற முடியாத அளவிற்கு சுள்ளென்ற வலியெடுத்தது.


“ம்மா...” என முணங்கியவள்,


"பாப்பும்மா... அம்மா எந்திரிச்சதும், பாப்புவ தூக்கிக்கிறேன். இப்போ அம்மா மடியில இருந்து எந்திரிம்மா!" என அவளை எழுப்பிவிட்டவள்.. கைகள் இரண்டையும் தரையில் ஊன்றி, பெருத்த சிரமத்தின் மத்தியில் எழுந்து.. ஸ்ரீயை தூக்கி இடுப்பில் போட்டவள், ஒற்றை காலினை வலியை பாராது இழுத்திழுத்து, அங்கு நின்றவன் கண்களில் விழாமல், தமது கார் கதவை திறந்து அமர்ந்து கொண்டவள் பார்வை அந்த ஆணிடமே இருந்தது.


அவளுக்கு எப்பிடியாவது அவன் கண்ணில் அகப்படாமல் சென்றுவிட வேண்டும். அதற்கு கேஷி வந்தாக வேண்டுமே! பிரசாதம் கொடுக்கும் இடத்தில் கூட அவனில்லை.


'நேரம் காலம் தெரியாம இவன் வேற, எங்க போய் தொலைஞ்சானோ?' என அந்த இடம் முழுவதும் விழிகளால் வலைவிரித்தவள் அந்த நபரையும் அடிக்கடி பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.


பாவம் எல்லாவற்றையும் கவனித்தவள்.. அவளது எதிர்புறம் இருந்த காரில் அமர்ந்திருந்த பரமானந்தனை கவனிக்க தவறிவிட்டாள்.


அவர் கண்ணில் எது அகப்படக்கூடாதோ அது அகப்பட்டுவிட்டதே!


நீண்ட நேரம் அவரது பார்வை வட்டத்துக்குள் இருந்தவள் முகமானது திடீரென வெளிறி.. பின் வியர்த்து கொட்டி பலபாவங்களை பிரசவித்த பின்னர், அடி பட்டிருந்த காலினை அவசரமாக இழுத்துக்கொண்டு ஓடவேண்டிய அவசியம் என்ன என்பதை ஆராந்தார்.


மதுமிதாவின் பார்வை தூரத்தே ஒருவரை பீதியில் தொட்டுத்தொட்டு மீழ்வதும், அவன் இங்கு திரும்பும் போதெல்லாம் தன்னை ஒழித்துக்கொள்வதுமாக இருந்தவளை கண்டார்.


உதடுகள் மெல்லியதாக விரிய.. "இவனை பாத்து இவ பயப்படுறான்னா.. இவனுக்கும் இவளுக்கும் ஏதோ சம்மந்தம் இருக்கு. அப்பிடின்னா அது என்னன்னு முதல்ல கண்டு பிடிக்கணும்" என காத்திருந்தார் பரமானந்தம்.



பிரசாதம் வாங்க சென்றவன் வெறும் கையோடு வியர்க விறுவிறுக்க அவளை நோக்கி ஓடிவந்தவன்..


"நீ இங்க இருக்கியா? விழுந்து கிடந்த இடத்தில உன்னை காணலன்னதும் பயந்துட்டேன்.. உனக்கு ஒன்னும் அடிபடலையே!" என அக்கறையோடு கேட்கும் அதே சமயம்.. அவள் பதட்டத்துக்குரியவனும் இவர்கள் புறம் திரும்புவதை கண்டவள்,


"வீட்டுக்கு போய் பேசிக்கலாம் சீக்கிரம் காரை எடுங்க" என்றாள் பதட்டமாக,


"அவங்க தான் ஓடிட்டாங்களே! இன்னும் எதுக்கு பதட்டப்படுற?" என்றான் அவள் நிலை புரியாது.


"ப்ளீஸ்.... என் நிலமைய கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க.. எதுவா இருந்தாலும்.. வீட்டுக்கு போய் பேசலாம். முதல்ல காரை எடுங்களேன். என்றாள் கெஞ்சலாய்,


"ஆனா மது.. நீ முதல் முறையா ஆசைப்பட்டு ஒரு விஷயம் கேட்டிருக்க.. அதை வாங்கி தரத்துக்குள்ள இந்த ரவுடி பயலுங்க உன்னை அட்டாக் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அதனால பாதியிலயே விட்டிட்டு வரவேண்டியதா போச்சு... இரு வாங்கிட்டு வரேன்" என திரும்பியவன் கையினை அவசரமாக பிடித்து நிறுத்தியவள்,


"அத அப்புறமா வாங்கிக்கலாம். இப்போ சீக்கிரம் காரை எடுங்க" என்றாள்.


பின்னே இன்னும் சிறு தூரம் தான் அவன் அவளை எட்டுவதற்கு.. அதற்குள் அவர்கள் அந்த இடத்தை விட்டு போகவில்லை என்றால் அவளை அவன் கண்டுவிடுவான்.


மதுவின் பதட்டம் புரிந்தவன்.. "சரிசரி...!" என்றவாறு காரில் ஏறிக்கொண்டு, காரினை எடுத்ததன் பின்னர் தான் மதுவிற்கு உயிரே வந்தது.


உள்ளே இருந்தவாறு திரும்பி பார்த்து, 'நல்ல வேளை காணல்ல' என பெருமூச்சொன்றை இழுத்து விட்டவளை கண்ணாடி வழியே பாத்திருந்தவன்,


"அவங்கள துரத்தி விட்டதுக்கப்புறமும் அனாவசியமா எதுக்கு பயப்பிடுற?" என்றவன் புறம் திரும்பியவள்,


"துரத்தினீங்களா?" என்றாள் புரியாது.


"ஆமா..! அப்போ உன்னை குத்த வந்தவங்க, இடையில நல்லவங்களா மாறி திரும்பி போயிட்டாங்கன்னு நினைச்சியா?"


"வரிசையில நின்னப்போ போன் வந்திச்சு, பக்கத்தில சத்தமா இருந்ததனால.. தள்ளி வந்து பேசலாம்ன்னு வந்தப்போ தான், அந்த மூணுபேரும் உன்னை துரத்துறது தெரிஞ்சிச்சு.. அதுக்குள்ள நீயும் கீழ விழுந்து பாப்பாக்கு அடிபடக்கூடாதுன்னு அவமேல கவுந்த நேரம் தான் நானும் வந்தேன்.


என்னை கண்டதும் ஓட ஆரம்பிச்சாங்க.. துரத்திட்டு போனேன், இருந்தும் தப்பிச்சிட்டாங்க" என்க.


"ஓ....." என அவன் சொன்னதை விழிவிரிய கேட்டு நின்றவளிடம்..


"ஆமா உனக்கு கால்ல எதாவது அடி பட்டிச்சா என்ன? எதுக்கு எந்திரிக்காம அப்பிடியே இருந்திட்ட?"


"அது.... கல்லு தடங்கினப்போ பாப்பாக்கு அடிபட்டிடகூடாதன்னு உடம்ப திருப்பினேன்.., கால் புரட்டிடுச்சு. சுத்தமா காலை ஊன முடியல" என்றாள்.


"அந்த காலோடேயா கார்வரை வந்த? சரி ஹாஸ்பிடல் போயிட்டே வீட்டுக்கு போவோம்"


"இல்ல வேண்டாம்.. ஹாஸ்பிடல் போற அளவுக்கு எதுவுமில்ல" என அவசரமாக மறுத்தவள் பதட்டம் கண்டவன்,


"எனக்கு ஏன் நீ இன்னும் பதட்டமா இருக்கேன்னு புரியல... அவங்க ஓடிப்போயிட்டாங்க.. நாமளும் சேப்பா வந்திட்டோம்.. கூல் ஆகிக்க மது!" என்றவனுக்கு தெரிய வாய்பில்லையே! அவளை துரத்தியவர்களை விட.. அங்கு நின்றவன் கண்ணில் அகப்பட்டால் தன் நிலை என்ன என்பது.


பாதையில் கவனமாக இருந்தவளுக்கு.. முன்னர் இல்லாத வலி இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாக.. அந்த வலியினை தாங்க முடியாதவள் முகமும் சுருங்கிப்போனது.


வீட்டின் முன் காரினை நிறுத்தியவன், போனில் யாருடனே பேசியவாறு நின்ற இலக்கியா கண்களில்பட,


"இலக்கியா சீக்கிரம் இங்க வா!" என அவசரமா அழைத்தவனின் பதட்டம் கண்டு ஓடிவந்தவள்,


"என்னண்ணா? என்னாச்சு? ஏன் இவ்வளவு பதட்டம்?" என கேட்டவள் கேள்விக்கு பதில் பொறுமையற்றவனாய், கார் கதவினை திறந்து ஸ்ரீயை தூக்கி அவளிடம் தந்தவன், இவளை நீ தூக்கிட்டு வா! என மறுபக்க கதவின்புறம் ஓடிவந்தவன்.. சீட்டில் இருந்தவள் காலுக்கு அடியில கைவிட்டு தூக்க போனவன் கையினை தட்டி விட்ட மது,

"அது ஒன்னும் தேவையில்ல.. என்னை கார்ல இருந்து இறக்கிவிட்டா போதும்♦. நானே நடந்து வருவேன்" என்றவள்
பேச்சுக்கு செவிசாய்க்காது அலேக்காக அள்ளிக்கொண்டு நடந்தான்.


"ஏன்ணா.. அண்ணிய ஏன் தூக்கிட்டு வரீங்க.? அவங்களுக்கு என்ன தான் ஆச்சு..? சொல்லுங்கண்ணா.." என பதறியவாறு பின்னால் ஓடிவர,


"இதுக்குத்தான் இறக்கிவிட சொன்னேன்.. இனி ஆளாளுக்கு காரணம் கேக்க போறாங்க. எனக்கு தான் ஒருமாதிரியா இருக்கும். என்னை விடுங்க.. எப்பிடியாவது நடந்து வரேன்" என்றவளை முறைத்தவன்,


"உனக்கு ஏன் ஒருமாதிரியா இருக்கணும்? நான் ஒன்னும் வேற ஒருத்தன் பொண்டாட்டிய தூக்கிட்டு வரல்ல.." என கோபமாக கூறியவன்,


"கால் இவ்ளோ வீங்கிப்போய் இருக்கிறப்போ.. நடந்து வரப்போறாளாம்" என முணுமுணுத்தவாறு உள்ளே வந்தான்.


கிளம்பும்போது சந்தோஷமாக சென்றவள், வரும்போது கைகளில் ஏந்தி வருவதை கண்ட வடிவழகி.


"என் பேத்திக்கு என்னடா ஆச்சு?" என சத்தமாக கேட்டவர் கேள்வியில் மொத்த குடும்பமும் ஒன்று கூடிவிட்டது. நேராக தம் படுக்கை அறை சென்று கட்டிலில் கிடத்தியவன்,


"கீழ விழுந்து சுழுக்கு புடிச்சிடிச்சு பாட்டி.. கால் ரொம்ப வீங்கிடிச்சு. அவளால சுத்தமா கால தூக்க முடியல. நான் டாக்டர கூப்பிடுறேன்" என போனை எடுத்தவனை தடுத்த வடிவழகி.


"சுழுக்குக்கு நாட்டு வைத்தியம் கேக்கும்.. இரு நான் மணியிட்ட சொல்லி மருத்துவச்சிய வரவைக்கிறன்" என்றவர் வெளியே ஓடிப்போக.


"ரொம்ப வலிக்குதாம்மா.." என அவள் காலை தொட்டுப்பார்த்த மீனாட்சியின் விரல் பட்டதற்கே முணங்கியவளை கண்டவன் இதயமும் கலங்கிப்போனது.


மருத்துவச்சி வரவை எதிர்பார்த்து மற்றவர்கள் ஹாலில் அமர்ந்திருக்க, கேஷவன் கண் மூடிக்கிடந்தவள் காலின்கீழே தவம் கிடந்தான்.


சிறுதுநேரத்தில் வந்துவிட்ட மருத்துவச்சி.. மருந்திடுகின்றேன் என்ற பெயரில், வலியை இன்னும் அதிகமாக்க, பெரிதாக கத்திவள் கேஷமதை வருடியவன் வயிற்றில் முகம்புதைத்து முனங்கியவள் கரங்களுக்குள் பிடிபட்ட அவன் இடை, தன் வலியை அவனுக்கும் உணர்த்துவதாய் அவள் கரங்களுக்குள் நசியுண்டது.


ஒரு வழியாக முழங்காலோடு பத்துப்போட்டு முடித்தவர்,
"மூணு நாளைக்கு ஒரு தடவை பத்து போடணும்.. அப்புறம் ஒரு வாரம் பத்து நாள் காலை அசைக்கவே வேண்டாம். அசைச்சா வீக்கம் இன்னும் அதிகமாகிடும்.. நான் வரேன்" என விடைபெற்றார்.



மருத்துவச்சி சொன்னதன் பின்னர் அவளை பெட்டிலிருந்து நகரவே விடவில்லை கேஷவன்.
அவளுக்கு வேண்டிய அத்தனை வேலைகளையும் தன் வேலையினை விட்டுவிட்டு கூடவே இருந்து கவனித்து கொண்டான்.


"நீ வேலைய பாருடா.. நாங்க மதுவை பார்த்துகிறோம்" என வீ்ட்டினர் கூறினால்,

"தன் மனைவியை கவனிப்பதை விட எந்த வேலையும் பெரிதில்லை" என கூறி உரிமையோடு அவளுடனே இருந்து கொண்டான்.


எப்போதும் பூணை குட்டியை காவித்திரிவதைப்போல் காவிக்கொண்டு திரிபவன், குளிப்பதற்கு கூட எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, அவளை தூக்கி சென்று அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்த்தி.. ஸ்டூலில் காலினை தூக்கி வைப்பவன்,


"ஏதாவது தேவைன்னா கூப்பிடு!" என கதவினை சாத்திவிட்டு வெளியே வந்தாலும் கதவோடு ஒட்டி நின்று கொள்வான்.
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,934
சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️கேஷவ்க்கு லீவு குடுத்த முதலாளி கிட்ட தான் வேலை பார்க்கணும் 😜😜😜😜😜😜நிறைய லீவு எடுக்கலாம்.

அடடடே மதுமிதாவை விடாம துரத்துறானுங்களே எதுக்கு இப்படி செய்றானுங்க,, பாவம் பிள்ளைக்கு காலுவேற பிசகிக்கிடுச்சு அதுலயும் ஒரு நல்லது கேசவ் என்னம்மா கவனிக்குறான் 😃😃😃😃😃😃😃😃
 
Top