• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

13. தத்தித் தாவுது மனது..

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
தூரத்தே கேட்ட கோவில் மணியோசையும், அதைத்தொடர்ந்து வந்த சேவலின் கூவலிலும்,
இரவு நடந்த சம்பவங்களினால், தவித்திருந்தவள், விடியும் தருவாயில் தூங்க ஆரம்பித்தாள்.

"சொக்கனாதா.." என்ற சேவலின் அழைப்பில் விடியலின் வரவினை உணர்ந்தவள்,
கண்களை கடினப்பட்டு பிரித்து நேரத்தினை ஆராய்ந்தாள்.


அதிகாலை ஐந்து முப்பதென கடிகாரம் காட்டி நிற்க. சிறிது தூங்குவோம் என அடம்பிடித்த மனதினை அடக்கிக்கொண்டு எழுந்து கொண்டாள்.

நேற்றைய போல் எட்டு மணிவரை தூங்கினால், வேலை பார்க்க வந்த இடத்தில், பொறுப்பில்லாமல் தூங்கியே பொழுதினை கழிப்பதாக யாராவது நினைத்து விடுவார்கள் என்ற பயம்.



கண்கள் எரிவதை கூட பொருட்படுத்தாது, எழுந்து மாற்றுடையினை எடுத்துக்கொண்டு குளியலறை சென்றாள்.

அங்கு நேற்றைய இரவினில் நடந்த சம்பவங்களை நினைவு படுத்துவது போல், பக்கட்டினுள் இருந்த ஈர உடையினை கண்டது அவனது வாயிலிருந்து வந்த அருவருக்கத்தக்க வார்த்தைகளை மீட்டுப்பாத்தாள்.


'இப்படியும் ஒருவன் இருப்பானா? சாதாரண ஒரு வார்த்தைக்கே, என் வாழ்க்கையே கேள்விக்குறியாக்குகிறேன் என்றானே!
இவனெல்லாம் மனிதனா இல்லை அரக்கனா?


இப்படிக்கூட யாராவது இருப்பார்களா?
இருக்கிறார்களே....! முதலில் கனகரட்ணம்... இப்போ இவன்.' என நினைத்தவள்.


அப்பா, அவளது அத்தான் என்று கள்ளமில்லா ஆண்களை பார்த்து வளர்ந்தவளுக்கு, ஆண்கள் என்றாலே கன்னியமானவர்கள் என்று தான் நினைத்திருந்தாள்.

ஆனால் தந்தையின் இறப்பிற்கு பின் சந்திக்கும் ஆண்கள் அனைவருமே வேறு மாதிரியாகவல்லவா அவள் கண்களுக்கு தெரிகிறார்கள்.

கனகரட்ணம் கூட இவனை விட சிறந்தவன் தான்.
என்னதான் வயது வித்தியாசம். ஏய்த்து பிழைப்பவன் என்றாலும், முறைப்படி தாலிகட்டி.. குடும்பம் நடத்தவேண்டும் என்று தான் நினைத்தான்.


'ஆனால் இவன்....? ச்சைய்... நினைக்கவே அருவெருக்கிறது. இவனெல்லம் ஆண் வர்க்கத்திற்கே அசிங்கம்.

அதுவும் உயர்ந்த குடும்ப வாரீசு வேறு.... இந்த குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களோடு இவனை இணைத்துப் பார்த்தால், இவனுக்கும் இந்த குடும்பத்திற்கும், சற்றும் ஏணி வைத்தால் கூட எட்டாதே!

இவர்கள் நல்ல குணங்களில் ஒன்று கூட இவனிடம் இருப்பது போலும் தோன்றவில்லை.

பின் எப்படி இவன் இவர்கள் குடும்ப வாரிசாக முடியும்? இவர்களுக்கு இவன் தரங்கெட்டவன் என்பது தெரியுமா?' என சிந்தித்தவளுக்கு, நிச்சயம் தெரிய வாய்ப்பில்லை என்ற பதிலே கிடைத்தது.


நேற்று காலையில் அவனது தாயிடம் அவன் பேசியதும், அதில் வழிந்த அன்பும் கூறியதே!
விஜயாவும் என்மேல் இவனுக்கு அளவு கடந்த பாசம் என்று கூறியதிலே தெரிந்ததே!

இவனைப்போல் தலை சிறந்த நடிகன் இந்த உலகத்தில் எவரும் இல்லை என்று.


'என்ன ஒரு நடிப்பு......? அவர்களுக்கு இவன் நல்லவனாம்...
இவனுக்கு முதலில் ஸ்ரீராமன் என்று பெயரை எவன் வைத்தான்..? அவனைத்தான் முதலில் தூக்கிலிட வேண்டும்.

இவனால் அந்த ஏகபத்தினி விரதனுக்கும் கலங்கம்.


ஸ்ரீராமன் என்று பெயருக்கு பதிலாக, ராவணன் என்ற பெயர்தான் இவனுக்கு பொருத்தமாக இருக்கும்.

அவன் கூட இவனைக்காட்டிலும் உயர்ந்தவன்...
என்னை தன் கட்டிலில் பொறுக்கி எடுப்பானாமே!
அதுவரை நான் என்ன அவனுக்கு விசிறி விட்டபடியா இருப்பேன்.?


நீ கெட்ட எண்ணத்தோடு என்னை நெருங்கும் போது... உன் நிழல் என்மேல் விழுந்தால் கூட, அடுத்த நிமிடம் மடிவேனே தவிர.. உன் ஆசைகளை ஒரு போதும் நிறைவேற மாட்டேன்.' என உறுதியாக தனக்குள் முடிவெடுத்தவளாய், வாலியினுள் கிடந்த தன் உடைகளை கழுவியவள், காலை கடன்களை முடித்து விட்டு, விஜயாவின் அறையினுள் நுழைந்தாள்.

அவள் உள்ளே வருவதை படுத்திருந்தவாறே புன்னகைத்து வரவேற்ற விஜயாவிடம்.
பதிலுக்கு தானும் புன்னகைத்தவள்,

"குட் மார்னிங்க்மா... என்ன எழுந்தாச்சா?" என்றவாறு அவர் அருகில் வந்து அமர்ந்தவள்,


"ஏன் சீக்கிரம் எழுந்திரிச்சிங்க..? கொஞ்சம் தூங்கலாம் தானே!" என வினவ,

"அதுக்கு தூக்கமும் வரனுமே மைலி! எப்பவும் ஓயாமல் தூங்கட்டே தானே இருக்கேன். கட்டில்.. தூக்கம்.. இந்த நாலு சுவர் இது தானே என் வாழ்க்கையா போச்சு.." என்று காலையிலேயே வாழ்க்கையை வெறுத்தவர் போல் கவலையாக பேசியவரை பார்க்க, அவளுக்கும் கவலையாகத்தான் இருந்தது.




அதே நேரம் இருவருக்குமான காஃபியுடன் உள்ளே வந்த தெய்வனை..

"நீயும் எடுத்துக்கோ மைலி!" என்க,

இரண்டு கப்களையும் தானே எடுத்துக்காெண்டவள்,

"நானே குடுத்துக்கிறேன்க்கா... நீங்க மத்த வேலையை கவனியுங்க." என்று புன்னைகைத்தவாறே கப்பினை வாங்கி ஓரமாக வைத்தவள்,

தெய்வானை வெளியேறும் வரை காத்திருந்து, அவள் வெளியேறியதும்
விஜயாவை எழுப்பி கட்டிலோடு சாய்ந்தமர வைத்து விட்டு, எலற்ரிக்கல் வீல் சேரை கொண்டுவந்து கட்டிலின் அருகே விட்டாள்.


விஜயாவோ எதற்கு இப்போது இது என்பது போல் அவளை நிமிர்ந்து பார்க்க.

"என்ன அப்பிடி ஒரு பார்வை? இது தான் தினமும் நடக்குதா? எழுந்ததும் ஊத்த வாயோடவே காஃபி குடிக்கிறது... இதெல்லாம் பெரிய குடும்பத்தில பிறந்த பொண்ணுங்க செய்யிற காரியமா?" என்று இடுப்பில் கைவைத்து குறும்போடு தான் கேட்டாள்.. அதில் தவறை சுட்டிக்காட்டும் தொணியும் கலந்திருந்தது.

"இனி இந்தமாதிரி நடந்துக்க நான் அனுமதிக்க மாட்டேன்." என்றவள்,


"எந்திரிங்க பாத்ரூம் போயிட்டு வந்து இதை பொறுமையா குடிச்சிக்கலாம்". என்றவாறே கை தாங்கலாக பிடித்து, வீல் சேரில் அமர்த்தியவள்,
பாத்ரூமில் நுழைந்து, அந்த அறையில் விஜயாவின் வசதிக்காக போட்டிருந்த இருக்கையில் அமர்த்தி, ரூத் பேஸ்ட்ரினை பிதுக்கி பிறஸினை அவரிடம் நீட்டினாள்.


"சீக்கிரம பல்லை விளக்குங்க." கையோட குளிச்சிட்டும் போயிடலாம். என்றவள் அத்தோடு நிற்காது, அதற்கு தகுந்த ஏற்பாட்டினையும் சொய்து விட்டு,



"எல்லாமே பக்கத்திலேயே இருக்கு.. குளிக்கிறது மட்டும் தான் உங்களோட வேலை... ஏதாவது தேவைனா கூப்பிடுங்க. நான் வெளியால தான் நிற்பேன். " என்றவாறு கதவினை மேலோட்டமாக சாத்திவிட்டு வெளியே வந்தாள்.

சரியாக பத்தாவது நிமிடம் விஜயா அழைக்க,


கதவினை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றாள்.

மேலோட்டமாக ஜாட்கெட்டினையும் பாவாடையினையும் அணிந்திருந்தவரை வீல் சேரிற்கு மாற்றி வெளியே அழைத்து வந்தவள்,


புடவையினை கட்டி , தலைவாரி பின்னலிட்டவள், பவுடரை அவர் கையில் கொடுத்து,

"நீங்களே இதை போடுங்க" என்றாள்.


"இதை மட்டும் ஏன் என்கிட்ட தரா? சின்ன பாப்பாவை வெளிக்கிடுத்துறது போல எல்லாமே நீ தானே பண்ண.. இதையும் நீயே பண்ணு." என்று தன்னை தானே அலங்கரிக்க அவள் விடவில்லை என்று பொய்யாக கோபம் கொள்ள.


"எப்பவும் நீங்க தானே இதெல்லாம் செய்வீங்க.. இன்னைக்கு கொஞ்சம் வித்தியாசமா நான் பண்ணேன்." என்றவாறு கண்ணாடி முன்பு அவரை நிறுத்தியவள்,

"பாருங்க.. நான் அலங்காரம் பண்ணது நல்லா இருக்கா?" என்று கேட்டவளையும், கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தினையும் பார்த்து.

"என்னளவுக்கு உனக்கு அலங்காரம் பண்ண தெரியலைனாலும், ஏதோ குறை சொல்ல முடியாத அளவுக்கு நல்லாத்தான் இருக்கு." என்று புடவையின் மார்வு பகுதியை இழுத்து விட்டவாறு விஜயா வேண்டுமென்றே மைலியை வெறுப்பேற்றுவதைப்போல் கூற.

விஜயா தன்னை சீண்டுவதற்காகத்தான் அப்படி சொல்கிறாள் என்பது அவரது உதட்டோர சிரிப்பில் புரிந்து கொண்டவள்.


"க்ஹூம்.... கிழவிக்கு இந்த அலங்காரமே போதும்." என்று ஓரப்பார்வை அவர் மேல் வீசி, உதட்டை சுழித்தவறே காஃபியினை எடுத்து கொடுத்தவள்,

"இதை குடியுங்க.... என்னை பாராட்டினதில ரொம்ப களைச்சு போயிருப்பிங்க." என்றாள்.


அவளது பேச்சினை ரசித்தவாறு காஃபி கப்பினை வாங்கியவர்,

அதை ஒரு மிடர் பருகி விட்டு..


"இதில சூடே இல்லையே மைலி!" என குழந்தை போல் உதட்டை பிதுக்கி தனக்கு வேண்டாம் என்பதாக சையை செய்தார்.


அவர் அப்படி செய்ததும் பகீர் என வாய்விட்டே சிரித்து விட்டாள் மைலி.


"ரொம்ப ஆறிடிச்சோ?" தெரிந்தும் கேட்டவள்.

"இப்போ என்ன..? சூட காஃபி வேணும்... அவ்வளவு தானே?.. ஆனா ஒரு கண்டிசன்." என்று புதிர் போட..

'இன்னும் என்ன கொடுமை படுத்த போகிறாளோ?' என புரியாது இமைகளை சுருக்கினார் விஜயா.

அவளோ சார்வ சாதாரணமாக,

"சூட காஃபி வேணும்னா என்கூட தோட்டத்துப்பக்கம் வரணும்... வந்தா சூடா காஃபி கிடைக்கும். எப்பிடி வசதி?" என்றவளுக்கு அந்த வீட்டின் எஜமானி தான் என்ற நினைப்பு போல.

அவளது துடுக்கு நிறைந்த பேச்சில் விஜயா கவரப்பட்டாலும்,
:தன்னையே ஒரு காஃபிக்காக, அலைய விடுகிறாளே' என நினைத்தவர்,


"ஓ.....!! மேடம் அவ்வளவுக்கு வந்திட்டிங்களோ? வர முடியாது போடி! நான் தெய்வானைக்கிட்டையே கேட்டுக்குறேன்." என்க.

"கேளுங்க... யாரு வேணாம்னா? முதலாளி அம்மா கேட்டா பாவம் அவங்களால மறு பேச்சு பேசவா முடியும்? ஆனா அது நடக்காது... நான் விடவும் மாட்டேன். ஈஸ்வரி பாட்டிக்கிட்ட போட்டு குடுப்பேனே.!

விடிஞ்சு ஒருமணி நேரத்துக்குள்ள இந்த அம்மாக்கு ரெண்டு காஃபி வேணுமாம்னு.. ஏற்கனவே நடக்க முடியாம இருக்கிறாங்.... ஓயாமல் காஃபி சாப்டா சுகரும் வந்துடும்.. அப்புறம் அதுக்கும் மருந்து மாத்திரைன்னு சாப்பிட்டு.. உடம்ப கெடுத்துக்க போறாங்கன்னு பாட்டிக்கிட்ட போட்டுக்குடுப்பேனே! என்ன பண்ணுவீங்க? " என்று ஸ்டைலாக விரலசைத்து.



"அடிப்பாவி...! நான் எங்கடி முன்னாடி காஃபி குடிச்சேன்.? நீ தான் ஊத்த வாயி... அது இதுன்னு அத பச்சத் தண்ணியாக்கிட்டியே! இந்த ஆறிப்போன கழுநீர் தண்ணில்லாம் யாராச்சும் குடிப்பாங்களா?" என்றார்.

"ஈஈஈஈஈஈ...." என்று பல்லை இளித்துக் காட்டியவள்,

"இந்த காஃபி நீங்க குடிக்கலனு எனக்கு மட்டுந்தானே தெரியும். பாட்டிக்கு தெரியாதே! இப்போ நான் என்ன செய்ய போறேன்னா.. இதை பாத்ரூம்ல ஊத்திட்டு.. கப்ப நல்லாக் கழுவிட்டு, எதுவுமே தெரியாதவ மாதிரி இருந்திடப்போறேன்.


நீங்க தெய்வானை அக்காவ கூப்பிட்டு காஃபி கேட்டதும்.. ஓடோடிப்போய் பாட்டிக்கிட்ட கப்ப காட்டி போட்டு குடுத்துடுவேன். எப்பிடி வசதி...?" என்று விஜயாவை மிரட்டியவள்,

"உங்களுக்கு ஒரே ஒரு சாய்ஸ் தான். நல்ல பிள்ளையாட்டம் எங்கூட தோட்டத்துப்பக்கம் வந்திங்கனா.. என் கையாலயே சூடா.. சும்மா மணக்க மணக்க காஃபி போட்டு தருவேன். இல்லனா காலை காஃபி கட்."
என்றவளை முறைத்த விஜயா.



"நேத்து வந்தவ நீயெல்லம் என்னை மிரட்டுற அளவுக்கு என் நிலமை வந்திட்டுது பாரு... எல்லாம் என் விதி!
வா வந்து தொலை!.." என்று தன் எலரிக்கல் சேரை இயக்கியவர் முன்னே செல்ல.. அவர் பின்னே சிரித்துக்கொண்டு மைலியும் சென்றாள்.


அவளது மிரட்டல் பேச்சுக்கெல்லாம் விஜயா பயந்து அவளது கண்டசனுக்கு சம்மதிக்கவில்லை.

அது உண்மையில்லை என்பது அவளது துடுக்கு நிறைந்த பேச்சிலும், போலியான மிரட்டலிலுமே கண்டு கொண்டாள்.

தன்னுடனான உரிமை நிறைந்த அவளது சீண்டல்களை மீண்டும் மீண்டும் ரசிக்கத்தோன்றுமே தவிர, அவளை கண்டிக்கத்தோன்றவில்லை.

ஏன் என்றால் இதுவரை யாருமே இவ்வாறு அவளுடன் நெருங்கி மனம் விட்டு பழகியதில்லை.

வயது வித்தியாசம் பாராது, தன்னையும் தன் வயதை ஒத்தவள் போல் நடத்தும் மைலியின் சிறுபிள்ளைத்தனத்தை அவள் இழக்கவும் விரும்பவில்லை.

அதனால் தான் போலியாக அவள் மேல் கோபம் கொண்டவள் போல் நடித்தவள், அவளது ஆசைக்கு விருப்பம் இல்லாதவளைப் போலவும், ஒரு காஃபிக்காகவே சம்மதிக்கிறேன் என்பதைப் போல் நடித்தாள்.

ரூமை விட்டு வெளியே வந்தவள்.

"அம்மா ஒரு நிமிஷம்." என்று கண்களை சுருக்கி கெஞ்சுவதைப்போல அனுமதி வாங்கியவள், தெய்வனையை தேடிச்சென்று,


"அக்கா பிளீஸ்..! உங்களை நான் ரொம்ப தொல்லை பண்ணுறேன்னு தப்பா எடுக்காதிங்க...
இந்த பூக்கூடை மட்டும் எங்க இருக்குனு சொல்லுறீங்களா?" என்றாள்.


"ஏன் மைலி பூக்கூடை?" என்ற தெய்வானையிடம்..


"தோட்டத்துப்பக்கம் போயிட்டு வரலாம்னு நினைச்சேன்.. காலைக் காத்த சுவாசிக்கிறது உடலுக்கு புத்துணர்வா இருக்கும்க்கா... அதுவும் மலர்களோட வாசனை இருக்கே...! என்றவனது நாசியானது ஏதோ இப்போதே அதை நுகர்வதைப்போல் காற்றினை உள்ளிழுத்து வெளியேற்றி..

அதை சுவாசிக்கிறதே தனி சுகம்க்கா..
அதான் தோட்டத்துப் பக்கம் தான் போறோமே! அப்பிடியே பூவையும் பறிச்சிட்டு வந்தோம்னா.. சாமிக்கும் வைச்சிடலாம்ல." என்றாள்.



"ஏன்டி! ஒரு கேள்வி கேட்டா உனக்கு ரெண்டு வார்த்தையில பதில் சொல்லவே தெரியாதா?

பாரு.! உன்னால அஞ்சு நிமிஷம் என்னோட வாழ்நாள்ல இருந்து பறிச்சிட்ட." என்று கையில் இருந்த கரண்டியாலேயே மைலி மண்டைமேல் ஒன்று போட்டவள்.


"சாமி ரூம் தெரியும்ல்ல மைலி.. அந்த ரூம் சுவத்து ஆணிமேல மாட்டியிருக்கு எடுத்துட்டு போ!"என்றாள்.


"எதுக்கா? அங்க இருக்கிற நாழு அறையில ஒரு அறைக் கதவில மட்டும் நிறைய மணி தொங்குமே அந்த ரூமா?"


"அதே தான்.. ஏன் நீ இதுவரை சாமி ரூம் எப்பிடி இருக்கும்னு பாத்ததே இல்லையா? கூடுதலா எல்லா வீடுகளிலுமே இப்பிடித்தானே மைலி சாமி ரூம் இருக்கும்"


"இருக்கலாம்.. ஆனா எங்க வீட்டில சாமிக்கெல்லாம் தனி ரூம் குடுக்கிறதில்லப்பா! எங்க கூடவே தங்குவாரு... என்ன கும்பிடுற நேரம் மட்டும் சாமி்க்கு விடுதலை... மத்த நேரத்தில அம்மா புடைவையினால சாமியை வீட்டை விட்டு எங்கேயும் ஓடிடக்கூடாதுன்னு அடைச்சு விட்டிடுவோம்." என்று சிரிக்காமல் சொன்னவள்.


"விஜயாம்மா எனக்காக காத்திட்டு இருக்க போறாங்க.. நாம அப்புறமா பேசிக்கலாம்." என்று நடந்தவள் திரும்பி வந்து,

"பத்து நிமிஷம்க்கா!" என்றவளை தெய்வானை புரியாது பார்க்க.

"உங்க வாழ்கையோட நாள்ல இருந்து நான் திருடினது." என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு போனவள் பேச்சு தாமதமாகத்தான் புரிந்தது.

"போடி அறுந்தவாலு!" என்று சிரித்தவாறு சொன்னவள் பேச்சை கேட்கத்தான் மைலி அங்கு இல்லை.
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,934
சூப்பர் சூப்பர் அருந்த வாலு கூட இருக்குறவங்களயும் சுறுசுறுப்பா வச்சுக்கிடுறா 😄😄😄😄😄😄
 
Top