• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

13. மா.மணிகண்டன் - அவளும் அவனும்

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
862
அவனும் அவளும்

சிவப்பு சட்டை, கருப்பு பேண்ட் அணிந்து, உடுமலைபேட்டை புதிய பேருந்து நிலையத்தில் காத்திருந்தான். சரியாக 11. 00 மணி அளவில் பேருந்தில் மக்கள் கூட்டம். பேருந்துகளின் இரைச்சல் சத்தம்.

கால் செய்தான் வர 12:30 ஆகுமே என்ற ஒரு சிறு தகவல் நேராக பேருந்து பின்புறம் சென்றான். இதழ் வாங்குவதற்காக ஒரு கடையில் போய் புக்ஸ் சென்டர் எங்கு இருக்கிறதுன்னு கேட்க, பத்து கடை தள்ளிப் போங்க .நேரா போங்க பெண்டுல பாருங்க இருக்கும். கடைக்கு சென்றான் புரவி இதழ் இருக்குதா என்று கேட்டான்.புரவி இதழ் அப்படின்னா? என்று கடையிலிருந்து ஒரு பெண் கேட்டாள்.

மாத இதழ் என்றான்.

இருங்க இதோ……… வரேன் .உள்ளே கடையில் 20 வயது மதிக்கத்தக்க ஒருவன் புத்தகங்களை அடுக்கி கொண்டிருந்தான் ,அந்தப் பெண் அவனிடம் ஏதோ சொன்னது திரும்பி அவன் வந்தான் என்ன வேணும்.

புரவி மாத இதழ் இருக்குதா…..

இங்க இல்லங்க .கலைமகள் புக் சென்டரில் இருக்கும்.

எங்க இருக்குது என்றான். பழைய பஸ் ஸ்டாண்டுங்க நேரா போங்க கொஞ்சம் தூரம் தான் .

நடந்தான்…..

கொஞ்ச தூரம் சென்றபின் கலைமகள் புக்ஸ் என்று பெரிதாக எழுதப்பட்டிருந்தது ,உள்ளே சென்றான் புரவி இதழ் இருக்குதா என்றான். புரவி இதழா!!! கடைக்காரர் அறுவது வயது மதிக்கத்தக்க அவர் கடையில் உள்ளே அமர்ந்து தினமலர் செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்தார்.

இங்க இல்லைங்க என்றார் .நேராக புதிய பேருந்து நிலையத்திற்கு நடந்தே வந்தான்.

மணி 12.10. கால் செய்தான், திரும்பவும் ஒரு பதில்.

மூணாறு பஸ் நிக்கும் இல்ல அங்க வந்துருங்க, வந்துருவேன். வெள்ளை நிறத்தில் நீல நிறத்தில் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் எழுதப்பட்டிருந்தது பேருந்து போகும் இடங்கள்.

பேருந்து வந்தது அவளது முகம்.

தூரத்தில் நின்றவரே அவளை கணித்து விட்டான் பேருந்து வந்து நின்றது, முன்னாள் போய் நின்றான்.

பளபளக்கும் கண்ணாடி பாரதி பெண்களுக்காக இந்தியா என்ற இதழை தொடங்கினார் ,அந்த இதழின் நிறமும் சிவப்பு,

இவள் அணிந்திருந்த மேல் சட்டையும் சிவப்பு, கால் சட்டை மட்டும் கருப்பு .

காதில் கருப்பு வண்ண தோடுகள் ,காதுக்கு ஏற்றவாறு கையில் கருப்பு நிற வளையல். காதோரத்தில் அந்த தோடு மட்டும் அசைந்து கொண்டிருந்து, தோளில் பெரிய பை, அதன் உள்ளே உடைகள்.

சூரியனைப் போல் பிரகாசமாக இருந்தது அவளது முகம் ,பளபளக்கும் கண்ணாடியில் உள்ளே என்னை பிரதிபலிக்கும் கருமை நிற விழிகள் அந்த விழிகளுக்கு மேல் கண் மையிட்டு தீட்டப்பட்டு இருந்தாள். இரு புருவங்களுக்கும் மை

தீட்டி இருந்தாள்,அது பட்டையாக அழகாக இருந்தது.

கண்ணுக்கு மை……. அழகு.

உண்மைதான் அவளுக்கு அவள்தான் அழகு.

எனக்கு செய்வது தெரியவில்லை.எழுத்தாளர்

ஜெயமோகனின் யானை டாக்டர் சிறுகதையை படித்து விட்டு பொள்ளாச்சி டப் ஸிலிப் போக வேண்டும் நீண்ட நாள் கனவு.

அவளும் அவனும் நேராக ஓட்டல் கடைக்கு சென்றார்கள் அவளும், அவனும் கை கழுவி விட்டு அமர சப்ளையர் வந்தார் ,என்ன வேணும் சிக்கன் பிரியாணி, குஸ்கா , தக்காளி சாதம், தயிர் சாதம் இப்படி அடுக்கிக் கொண்டே போனான். சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா என்றான் நீங்க சாப்பிடுங்க எனக்கு தக்காளி சாதம் மட்டும் போதும் என்றாள். பின் இருவருக்குமே தக்காளி சாதம் வந்தது. அவன் அவளது எதிரில் அமர்ந்து இருந்தான். அவள் கொண்டுவந்த பையை பத்திரமாக சேரில் வைத்தாள்.

வாழை இலையில் தண்ணீர் தெளிக்கப்பட்டது தக்காளி சாதம் சட்னி என்று வாழை இலையில் உணவு. சாப்பிட முடியல என்றாள், ஏன் என்றேன் அதிகமா இருக்குது.

சாப்பிட முடியலன்னா என்னுடைய இலையில் எடுத்து வை என்று சொல்ல அவனுக்கு ஆசைதான், இருந்தாலும் அவள் என்ன சொல்வாளோ !என்று தயக்கத்துடன் இருந்தான்.

பின்பு அவளும் எந்த பதிலும் சொல்லவில்லை.

அவன் சாப்பிட்டு முடித்துவிட்டு இருந்தான் போய் கை கழுவுங்க ன்னு சொல்ல.அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் காப்பி சாப்பிடுறீங்களா என்றாள்.

வீட்ல அம்மா, அப்பா, பாப்பா, எல்லாம் எப்படி இருக்காங்க என்றான்.

எல்லோரும் நல்லா இருக்காங்க…..

பழனியில் என்ன படித்த

11வது,12வது அங்கு தான் படித்தேன்

ஏன்? முருகன் ரொம்ப பிடிக்கும் அதனால பழனியில் படிக்கணும்னு ஒரு ஆசை அதனால அங்க படித்தேன் அப்புறம் ராஜபாளையம் அது எங்க சித்தி இருக்காங்க இப்ப போவீங்களா ராஜபாளையம் அப்ப போறது இல்ல ஒரு சண்டையா ஆயிருச்சு என்று அவள் சொல்ல அவன் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான் நெடுநேரம்.

அவளிடம் எந்த பதில் என்று சொல்வது என்று அவனுக்கு தெரியவே இல்லை.அவனது மனம் துடிதுடித்து கொண்டுஇருந்து.

ஆம்……. அது மனம் அல்லவா சாப்பிட்டு முடித்து பணம் கொடுக்க சென்றாள் வேண்டாம் நானே கொடுத்துக்கிறேன் என்றான் தனது மணி பிரஷ் இருந்து 500 ரூபாய் தாளினை எடுத்து கடைக்காரரிடம் நீட்டினான். ₹ 195 ரூபாய் ,போக மீதி ₹5 இவன் கையில் கடைக்காரர் கொடுத்தார்.

வெளியே வந்ததும் ஏ டி எ ம் போக வேண்டும் என்றாள் ஏன்? என்றேன், ஏதோ ஒரு காரணத்தை சொன்னாள். அவனுக்கு நினைவில்லை . அவன் அவளையை பார்த்து தன்னை மறந்து விட்டான். ஏடிஎம் -யில் பணத்தை எடுத்து விட்டு இருவரும் சாலை ஓரத்தில் நடந்து வந்தார்கள்.

இருவரும் உடனடியாக பேருந்து ஏறவில்லை.

உடுமலைப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கிற பொள்ளாச்சி வரும் பேருந்துகள் எல்லாம் கூட்டமாக இருந்தது.

பேருந்து வர ஓடிப்போய் அவன் பேருந்தின் உள்ளே சென்று இடத்தை போட்டான், அவளை ஜன்னல் ஓரத்தில் அமர வைத்து விட்டு அவள் பக்கத்தில் அவன் அமர்ந்து கொண்டான்.

பேருந்து பொள்ளாச்சியை நோக்கி சென்று கொண்டே இருக்கிறது.

ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள்.

அவன் பேச்சை தொடர்ந்தான் ஏன் வளவி எல்லாம் போட மாட்டியா?

ஏன் இந்த போட்டு இருக்கேன் பாரு…. அப்படி ன்னு…

தனது கையை காட்டினாள்

இது கையில் இருந்து வளையலை உருவி அவனிடம் கொடுத்தாள். அவன் அந்த வளையலை தொட்டு பார்த்தான் அது பிளாஸ்டிக் வளையல் .

அவள் அன்று ரொம்பவும் அழகாக இருந்தாள்

ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருக்கும் போது அவரது முடி காற்றில் ஆடிக்கொண்டே வந்தது தனது கையினால் அதனை எடுத்து விட்டு எடுத்து விட்டுக் கொண்டே இருந்தாள்.அவன் சொன்னான் அந்த ஜன்னலை சாத்து ….உடனே ஜன்னலை சாத்தினாள்.

எப்ப கல்யாணம் என்றான் அவள் சிரித்தாள்.

அந்த சிரிப்பில் ஓராயிரம் வலிகள்,எதையோ பறி கொடுத்த நிலை துயரம் எல்லாமே பளிச்சென்று தெரிந்தது.

வால்பாறையில எத்தனை வருஷம் இருந்த……

ஏழு மாசம் இருந்தேன்.

திருப்பி வரவில்லையா வரவில்லை,, நீங்க தேடி போகலையா, நான் எதுக்கு போகணும் போக வேண்டும். என்ன படிக்கிறாங்கன்னு கூட தெரியாது. நான் ஏன் போகணும் ?என்னோட நியாயங்களா செவத்து கிட்ட தான் சொல்லணும். அவன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

திடீரென்று போன் வந்தது காதில் வைத்து வலது கையை செல்போன் மீது வைத்து பேசிக்கொண்டே இருந்தாள்.

பத்து நிமிடங்கள் பேசி இருப்பாள் அதுவரையிலும் பேருந்தில் பாடல் ஒலித்துக் கொண்டே இருந்தது. அதனை அவன் கேட்டுக் கொண்டே வந்து கொண்டே இருந்தான். மீண்டும் அவன் கேட்டான் எப்ப கல்யாணம்!!!!

பேருந்தில் இருந்து இளையராஜாவின் குரலில் ஒரு பாடல்

“ஆசை மட்டும் இல்லாத ஆள் ஏது கூறு…. அந்த வழி போகாத ஆள் எதுகூறு…

புத்தனும் போனா பாதை தான் பொம்பள என்னும் மோகம்தான்”

என்ற பாடல் ஒலித்துக் கொண்டே இருந்தது.

உன்ன பத்தி சொல்லு ஏன் எழுத போறீங்களா….. இல்ல சொல்லு .

சற்று நேரம் அமைதியாக இருந்தாள்

பேருந்து பொள்ளாச்சி வந்தடைந்தது பேருந்தில் இருந்து கீழே இறங்கி சுரங்கப்பாதை வழியாக இருவரும் நடந்து மறுபுறம் சென்றனர்.

அங்கு கேரளா செல்லும் பேருந்துகள் வெள்ள நிறத்திலும் சிவப்பு நிறத்திலும் நின்று கொண்டிருந்தன.


வெள்ளை நிற பேருந்தில் அழகாக மலையாளத்திலும் தமிழிலும் அந்தப் பேருந்து செல்லும் ஊர் பொறிக்கப்பட்டு இருந்தது அவள் அந்தப் பேருந்து உள்ளே ஏறி முன்னாள் அமர்ந்தாள்.பேருந்து

செல்ல நேரமாயிற்று .

அவள் பேருந்தில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தாள்.அவன் ஜன்னலுக்கு நேராகவே நின்று கொண்டிருந்தான், பேருந்து செல்ல ரெடியாக இருந்தது. அவன் அவளைப் பார்த்து கேட்டான்

எப்ப சொல்லுவ!! எப்ப சொல்லுவ !!

நான் கல்லூரி போயிட்டு ,கால் பண்றேன், இல்ல மெசேஜ் பண்றேன்.

வெகு நேரமாக அங்கேயே நின்றுக் கொண்டு அந்த பேருந்து பார்த்துக் கொண்டே இருந்தான்.

பேருந்து சென்று கொண்டே இருந்தது….

அவனிடமிருந்து பேருந்து வெகுத் தூரம் சென்று விட்டது. அவன் திருப்பி திருப்பி கேட்டுக்கொண்டே இருக்கிறான்.

எப்ப சொல்லுவ எப்ப சொல்லுவன்னு……..

அங்கு அவனை சுற்றி யாரும் இல்லை

அவன் மட்டுமே தனியாக நின்று கொண்டு இருக்கிறான்.

அவளுடைய பதிலுக்காக….

ஒரு மாதத்திற்குப் பின் மெசேஜ் வந்தது நாளை நான் காலேஜ் போறேன் எத்தனை மணிக்கு என்று அவன் கேட்க எப்பவும் போல தான் என்றாள் அவள்.

சற்று தாமதமாகவே பேருந்து நிலையத்திற்கு சென்றான் இல்லையென்றால் அரை மணி நேரத்துக்கு முன்பாக போய் காத்திருப்பான் .பேருந்து வந்தது .அவள் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தாள். பேருந்தில் இருந்தவளே தூரத்தில் இருந்து கண்டு கொண்டு விட்டான் அவன்.

ஜவுளி கடையில் வெளியே ஒரு பெரிய பொம்மை வைத்திருப்பார்கள், அது போன்ற ஒரு ஆடையை அணிந்து வந்தாள்.

பச்சை நிற ஆடை.

வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க

எல்லாம் நல்லா இருக்காங்க

சாப்பிடலாமா

அதுக்கு முன்னாடி கடைக்கு போகணும் என்றாள்

எந்த கடைக்கு ஜவுளி கடைக்கு சரி வா என்று அழைத்து சென்றான் மெயின் ரோட்டின் ஜவுளி கடைகள் அவ்வளவு அதிகமாக இல்லை.

சற்று தள்ளி விசாரித்துக் கொண்டே சென்றான் ஒரு கடையில் இங்கு ஜவுளி கடை எங்க இருக்கு என்று கேட்டான்.

அவள் அமைதியாக அவன் பின்னால் நடந்து கொண்டே வந்தாள்

கொஞ்சம் வெயிலு

சாலையின் ஓரத்தில் இருந்த கடையிடம் நல்ல ஜவுளி கடை எங்க இருக்கு என்று கேட்டான் அவன் நேரா போங்க நேரா போய் பின்னாடி திரும்பினீங்கன்னா சிவ கணேஷ் ஜவுளிக்கடை இருக்குது டிரஸ் எல்லாம் சும்மா நல்லா இருக்கும் பாருங்க




நேராக ஜவுளி கடைக்கு செல்ல மெட்டீரியல்ஸ் எடுக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு படியாக மேலே ஏறி இருவரும் மாடிக்கு செல்ல மேலே ஒருவர் நின்று கொண்டிருந்தார் இருவரும் அங்கு சென்றார்கள் நீங்க கேளுங்க என்றால் அவள் மெட்டீரியல்ஸ் இருக்குதா இருக்குதுங்க என்ன டிசைன்ல உங்களுக்கு வேணும் அவர் ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டார் அவளும் ஒவ்வொன்றாக எடுத்து எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

தனது சோத்து கையை வாயில் வைத்து திரும்பிக் கொண்டிருந்தாள்.

என்ன அன்ற அதே தான் சொன்ன இல்ல சளி ,இருமல் ,தடுமம்.

அவளது பேக்கே அவன் தோளில் தொங்கவிட்டு இருந்தான் அதிலிருந்து வாட்டர் கேனையை எடுத்து தண்ணீர் குடித்தாள்.

மாத்திரை போட்டையா என்றான்…. இல்ல .

சாப்பிட்டு தான் போட வேண்டும்.

கர்சிப்பை எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டாள்.வேறு யாருடன் யாரிடமும் செல்போனில் பேசிக் கொண்டிருந்தாள். என்ன என்றேன் விடுதி ஹாஸ்டல்ல ஒரு பொண்ணு இருக்குது ரொம்ப கஷ்டப்படுற பொண்ணு அந்த பொண்ணுக்கு ஒரு துணி எடுத்து கொடுக்கலாம்ன்னு தான் ஏதோ நம்மளால முடிஞ்ச அளவு 300 ,250 குள்ள எடுக்கலாம் என்று தான் அங்கே பிரெண்ட் இருக்கா அவ கிட்ட கேட்டுட்டு இருக்கேன் என்றாள். ஒவ்வொரு சுடிதாராக பார்த்தாள்

விலை கூடுதலாக இருந்தது.

கடைசியில் ஒரு சுடிதாரை எடுத்துக் கொண்டாள்.

இப்படியும் மாடிப்படி இருந்து கீழே இறங்கி பிளவுஸ் எடுக்க வேண்டும் என்றால் திரும்பி கீழே இறங்கி நடந்து சென்றோம்.

இரண்டு கட்டப்பை அவளது பேக் எடுத்துக்கொண்டு கீழே இறங்கி பணம் செலுத்தும் இடத்திற்கு வந்தோம். அவர் தனது விலை உயர்ந்த செல்போனினால் கூகுள் பிளேயில் பணம் செலுத்தினாள்.

இருவரும் ஒரு ஓட்டலில் மட்டன் பிரியாணி ,சிக்கன் பிரியாணி சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருக்க அவள் வீட்டிலிருந்து சமைத்துக் கொண்டு வந்த சிக்கனை எடுத்து நீட்டினாள். அதற்கு முன்னால் முன்பாகவே அவன் எங்க சமைத்துக் கொண்டு வந்தியா இல்லையா என்றான் .பேக்ல இருக்குது என்றாள். அந்த பைக்கில் இருந்து எடுத்தான்.சின்ன டப்பா வடிவத்தில் இருந்தது, அதில் சுற்றி பிளாஸ்டிக் கவர் இருந்தது வெளியே எடுத்து வைத்தான்.

அவன் சிக்கன் பிரியாணியும் ,அவள் மட்டன் பிரியாணியும் சாப்பிட்டார்கள். அவள் கொண்டு வந்த சிக்கனை இருவரும் பாதி பாதியாக சாப்பிட்டு முடித்தார்கள். இருவரும் எழுந்து கையை கழுவ அவனிடம் மணி பிரஷ்யை கொடுத்தாள்.

மணி பிரஷ் என்ன புதுசா இல்ல பழசு தானே புதுசு மாதிரி இருக்குது என்றான்.

இருவரும் சாப்பிட்டு முடித்து பொள்ளாச்சி பேருந்து ஏறினார்கள் .ஒரு முக்கா மணி நேரத்தில் பேருந்து பொள்ளாச்சி வந்தடைந்தது .பொள்ளாச்சி வந்ததும் இருவரும் நடந்தே பேருந்து நிற்கும் இடத்திற்கு வர இடையில் கொய்யா பழத்தை பார்த்தாள். கொய்யாப்பழம் வேணும் என்றாள்.

அரை கிலோ கொய்யாப்பழத்தை நல்ல பழமாக பார்த்து போடுங்க என்று சொல்ல அவ்வளவு நானும் நல்ல பழங்களை எடுத்து கொடுத்தோம். நேராக ஓட்டலுக்கு சென்றோம் அங்கு இரவு சாப்பாடு கடையிலிருந்து தான் வாங்கிட்டு போகணும் இங்கேயே வாங்கிக்கலாம் என்று சொல்லி பொள்ளாச்சியில் ஒரு பேமஸான ஹோட்டலுக்கு அழைத்து சென்றாள். புரோட்டா சப்பாத்தி …என்ன ஏதோ வாங்கினாள் வாங்கி தனது பேக் பையில் திணித்தாள் சிலது போகவில்லை ஒவ்வொன்னா எடுத்து தனியா வைத்துவிட்டு ஒவ்வொன்றாக அடுக்கி வைத்தாள்.

பேருந்து நிலையத்திற்கு வந்ததும் தனித்தனியாக பேருந்துகள் நின்று கொண்டிருந்தன. ஒரு பேருந்தில் கூட்டமே இல்லை உள்ளே ஏறினால் சுத்துமுத்து பார்த்தாள்… என்ன யாருமே இல்லை என்றாள். கீழே இறங்கினால் மற்றொரு பஸ்ஸில் வந்தது அதில் ஏறினாள்.

சரி.

எனக்கு ஒரு டைரி மில்க் பிஸ்கட் வாங்கிட்டு வாங்க என்று சொன்னாள். பக்கத்தில் இருந்த கடையில் டைரி மில்க் பிஸ்கட்டை வாங்கி வந்து அவளிடம் கொடுத்து விட்டு வெளியே நின்று கொண்டிருந்தான் .பேருந்து நின்று கொண்டிருந்தது நீங்க போங்க என்றாள்.

அவன் மிக நேரமாக அங்கே நின்று கொண்டு இருந்தான் நீ..

போங்க.

சரி என்று சொல்லிவிட்டு பேருந்து ஏறினான்.

அவளை பார்த்தவாறு…

மீண்டும் ஒரு மாத கால இடைவெளிக்கு பின் கல்லூரியில் லீவு என்றாள்.

நானும் வரேன் வேண்டாம் என்கூட பிள்ளைகள் வருவாங்க அதனால வேண்டாம் ரிட்டன் வரும்போது சொல்றேன் வாங்க என்றாள்.

அரை மணி நேரத்திற்கு முன்னாடியே பேருந்து நிலையத்திற்கு வந்து வெகு நேரமாக உட்கார்ந்து இருந்தான் அவன் சரியாக 12:30க்கு போன் வந்தது.
 

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
862
மலைகளுக்கு இடையே வந்து கொண்டிருக்கிறேன் அதனால் டவர் சரியாக கிடைக்காது சரி…..பஸ்லே இருக்குற டயர் வெடித்து விட்டது இன்னும் பத்து நிமிஷம் ஆகுமா வந்துடறேன்.

சரியாக ஒரு மணிக்கு பேருந்து உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு வந்தடைந்தது. அவன் பேருந்துக்கு நேரே நின்று கொண்டிருந்தான். ஒவ்வொருத்தவரா பேருந்துலிருந்து இறங்கிக் கொண்டு இருந்தனர். பேருந்து படியில் ஒரு சிறுமி வாந்தி எடுத்து விட்டது .அந்த வாந்தி படியில் மேல் வெள்ளை வெள்ளையாக கிடந்தது பேருந்து உள்ளே இருந்து இறங்கி கொண்டு இருப்பவர்கள் பார்த்து நிதானமாக படியில் இறங்கி கொண்டு இருந்தார்கள் அவள் கடைசியாக இறங்கி வந்தாள்.வரும்போது கையில் தொட்டுவிட்டால் போல கீழே இறங்கி மேல பட்டுடுச்சு.

தனது பையில் இருந்த வாட்டர் கேனை எடுத்து ஓரமாக நின்று கையை கழுவி கொண்டு இருக்க இங்க இருக்கு பாரு அவன் சொல்ல திருப்பி வாட்டர் கேன் எடுத்து கையை நன்றாக கழுவினாள்.

பேருந்து நிலையத்தில் அதிகமான கூட்டம் நெரிசல் இது வெறும் ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள் சாப்பிடலாமா என்றான் அவன் சாப்பிடலாம் சாலை ஓரத்தில் வேகமாக நடந்து கங்கா சைவ அசைவ உணவகம் ஹோட்டலுக்கு சென்றார்கள் இருவரும் டேபிள் பக்கத்தில் இருக்கும் சேரில் அமர சப்ளையர் என்ன வேணும் என்றா ள்.என்ன இருக்கு என்றான் அவன்.

தக்காளி சாதம் ,தயிர் சாதம், புரோட்டா ,சப்பாத்தி, மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, ,பூரி, இட்லி, தோசை, என்ன வேணும் சாப்பாடு இருக்குதா?

இருக்குது.

பெரிய வாழை இலை எடுத்து வந்து போட்டான் இருவரும் அமர சாப்பாடு வந்தது அளவு சாப்பாடு இல்ல எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கி சாப்பிட்டுக்கலாம் என்றான் சப்ளையர் சாதத்தை எடுத்து இலையில் போட்டான் சாம்பார் ஊற்றினால் கூட்டு , ஊறுகாய்,அப்பளம் வைத்தான்.

அவளுக்கு அப்பளத்தை சப்ளையர் வைக்கும் போது அப்பளம் வேண்டாம் என்று சொல்லிவிட்டான் அப்பளம் பிடிக்காதா அவளுக்கு

மெதுவாக சாப்பிட்டு கொண்டிருந்தார்கள் இருவரும். அக்கா என்ன பண்றாங்க நல்லா இருக்காங்களா? நல்லா இருக்கா ஆமா என்ன பண்றாங்க துணிக்கடையில வேலை பார்க்கிறா என்ன சொல்ற ஸ்கூல் தான் ஒர்க் பண்ணிட்டு இருந்தா அவங்க வீட்டுக்காரர் சரி இல்ல இப்ப துணிக்கடையில வேலை பாத்துட்டு இருக்கேன் எவ்வளவு சம்பளம் கடை எல்லாம் அவளுடைய கண்ட்ரோல்ல தான் இருக்குது.

அதுதான் கவர்மெண்ட் எக்ஸாமுக்கு படிக்க சொல்லி இருக்குது எழுத சொல்லி பார்க்கலாம் என்ன பண்றான்னு தெரியல

வேற என்ன சாப்பிடுறீங்க சிக்கன் வேண்டாம் அவன் சப்ளையரை உடனே கூப்பிட்டாள்.

சிக்கன் இருக்குதா இருக்குதுங்க சிக்கன் கிரேவி வேணுமா சிக்கன் வேணுமா சிக்கனை சொல்லு என்றான் அவன் சிக்கன் கொண்டு வாங்க

சிக்கனை கொண்டு வந்து டேபிள் மீது வைத்தான் அதில் பாதி அவளுக்கு எடுத்து வைத்தான் அவன் ஏநீங்க சாப்பிடுங்க நீங்க தான் ஹாஸ்டல்ல இருக்கீங்க சாப்பிட மாட்டீங்க சாப்பிடுங்க என்றாள்.

நீ கொஞ்சம் சாப்பிடு என்று பாதி சிக்கனை எடுத்து அவள் இலையில் வைத்தான்.

சிக்கன் நல்லா இருக்குல்ல என்றாள் நல்லா இருக்குது இப்படித்தான் ஹாஸ்டல் பக்கத்துல ஒரு கடையில வெளியே சிக்கன் சாப்பிட வந்தோம் சிக்கன் நல்லா இருந்தது விலை கூடுதல். விலைக்கு தகுந்த மாதிரியே ரேட் தான் கடைசில ஃபீட் பேக் கேட்டாங்க நாங்க எதுவும் சொல்லல என் கூட என் பிரெண்ட்ஸ் வந்து சாப்பிட்டாங்க அவங்களுக்கு கால் பண்ணி கேட்டு இருக்காங்க அப்புறம் என்கிட்ட சொல்ல சொன்னாங்க நான் சொன்னேன் ஹோட்டலுக்கு வந்து சாப்பிட்டால் ஒரே டேபிள்ல மட்டும் கவனிக்க கூடாது .எல்லா டேபிள்லயும் இருக்குற ஆளுங்கள கவனிக்கணும் அப்படின்னு.

சாப்பிட்டு முடித்து எழுந்து இருவரும் சாலை ஓரத்தில் நடந்து கொண்டிருந்தார்கள் ஊருக்கு வரியா எப்ப இப்ப எல்லாம் ஊருக்கெல்லாம் வர முடியாது எங்க ஊருக்கு வா பார்க்கலாம் என்றாள்.

இருவரும் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு வந்து அடைந்து பேருந்துக்காக காத்திருந்தார்கள் எல்லா பேருந்தும் கூட்டமாக வந்து கொண்டிருந்தது பேருந்து வருது என்றாள் கூட்டமாக இருக்குது அடுத்த பேருந்துல போகலாம் என்றான் வர எல்லா பேருந்தும் கூட்டமா தான் வருது பேருந்து தூரத்தில் இருந்து வரும் பொழுதே ஓடிப்போய் சீட்டு போடலாம் என்று சொல்லி ப பேருந்து உள்ளேன் ஒவ்வொரு சிட்டிலும் ஆள் அமர்ந்திருந்தார்கள் சுற்றி முற்றி பார்த்தான் எல்லா சீட்டிலும் மனித தலைகள்.

கடைசியில் சீட் கிடைக்கவில்லை நின்று கொண்டே இருவரும் பயணித்தார்கள் அவன் பேருந்து நடுவில் நின்று கொண்டிருந்தான் அவள் பேருந்தின் முன்னே நின்று கொண்டிருந்தாள் ,கண்டக்டர் டிக்கெட், டிக்கெட் என்று கேட்டுக் கொண்டு அதன் வர தூரத்திலிருந்து அவனைப் பார்த்து டிக்கெட் எடுத்தாச்சு என்றாள்.

பேருந்து சென்று கொண்டே தான் இருந்தது இன்னும் பொள்ளாச்சி வர அரபு மணி நேரம் இருக்கிறது அவனுக்கு ஒரே வருத்தம் எனக்கு ஒரு முறை இவ்வளவு நேரில் பார்க்கிறோம். அவள் பக்கத்தில் உட்கார்ந்து கூட பேச முடியவில்லை. நிற்க முடியவில்லை என்ற ஒரு வருத்த ம் அவனை துரத்தி கொண்டே இருந்தது.

பேருந்தில் வேற சரியான கூட்டம் முன்னாடி அவளை பார்த்தான் அவள் செல்போனில் பேசிக் கொண்டே இருந்தாள்.

பேருந்து பாதி தூரம் வந்த பின் நகர்ந்து நகர்ந்து அவளிடம் வந்தான் .என்ன அங்க இருந்து இங்க வந்துட்டீங்க என்றாள் ஒன்னும் இல்ல என்றான். அவன் மனதிற்கு சொல்லிக் கொண்டான் உன் பக்கத்தில் நின்று கொண்டு வர வேண்டும் . பேருந்து பொள்ளாச்சி வந்து அடைந்தது இருவரும் இறங்கி கடைக்கு சென்றார்கள். இருவரும் ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டார்கள் சாப்பிட்டு இருவரும் பேருந்து நிலையத்திற்கு திரும்பி வர…

மணி இரண்டு முப்பது

வெள்ளை நிறத்தில் ஒரு பெரிய பேருந்து நின்று கொண்டிருந்தது அதில் ஏறி உள்ளே அமர்ந்தாள்.

பேருந்து எடுக்க இன்னும் சற்று நேரம் ஆகும் இவனும் படியின் மீது ஏறி உள்ளேயே அவரிடம் இரண்டு நிமிடம் உட்கார்ந்தான் பின்னாடி வேற கல்லூரி படிக்கும் நான்கு அமர்ந்து இருந்தார்கள் அவள் அவர்களிடம் ஏதோ பேசினான் சரி, பார்த்து போ. சொல்லிவிட்டு பேருந்து பேருந்து விட்டு கீழே இறங்கினான் . பேருந்தின் எதிரே வெளியே நின்று அவளுக்கு எதிரே அவளை பாத்துக்கொண்டே இருந்தான் வெகு நேரமாக ,சரி போங்க .

ஏன்!

ஏன் உடனே தன்னது சட்டை பையில் இருந்த செல்போனை எடுத்து அவளுக்கு கால் செய்தான் ஏன் !

காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் .

ஒரே காலேஜா இல்ல வேற ,சரி போங்க..

சரின்னு சொல்லிவிட்டு அந்த பேருந்து நிலையத்தை விட்டு கிளம்பினான் அங்கேயே ஒரு பேருந்து நின்று கொண்டிருந்தது பேருந்தில் ஏறி அவளுக்கு கால் செய்தான் பேருந்து ஏறிவிட்டேன் சரி ஹாஸ்டலுக்கு போயிட்டு கால் பண்ணு சரி பண்றேன் இல்லனா மெசேஜ் பண்றேன் சரியா நான் ஈவினிங் போயிட்டு பேசுறேன் என்றான் அவன் வெகு நேரமாக செல்போனை பார்த்துக் கொண்டிருந்தான் அவளுடைய காலுக்காக மெசேஜ் காக…..

இரண்டு மாதங்களுக்குப் பின் அவளை அதே இடத்தில் பார்த்தான் தெரிந்துவிட்டு இறங்கியதும் இருவரும் சாலையில் நடந்து ஜவுளி கடைக்கு சென்றார்கள் எதுக்கு இப்ப கடைக்கெல்லாம் வேண்டாம் என்றாள் அவள்.

டிரஸ் எடுக்க தான் இப்ப எல்லாம் டிரஸ் எல்லாம் வேண்டாம் இங்கே எடுத்துக்கிருவோமா இல்ல பொள்ளாச்சி போயி எடுத்து தரலாமா என்றான் இங்கே எடுத்துட்டு பொள்ளாச்சி போய் சாப்பிட்டு போலாம் என்றான் நேராக சிக்னலை தாண்டி இருவரும் நடந்து ஜவுளி கடையிலுள்ள நுழைய பெரிய கடை வெளியில் அந்த கடையில் வேலை செய்யும் 20 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வாங்க என்றாள்


டிரஸ் எடுக்கணும் என்றான்.

என்ன டிரஸ்…

சின்னப் பிள்ளைகளுக்கு போடுற மாதிரி டிரஸ்

சின்னப்பிள்ளைன்னா ?குழந்தையா?

ஒன்பது வயசுங்க

ஆண் குழந்தையா?

பெண் குழந்தையா ?

அதை சொல்லுங்க..

பெண் குழந்தை தாங்க.

பாப்பாவுக்கு எல்லாம் இப்ப வேண்டாம் என்றாள் அவள்.

சரி …

அப்போ உனக்கு எடுத்துக்க உங்களுக்கு போட்டுக்க என்றால் அவன் மேல போங்க என்றால் கடையில் வேலை செய்யும் பெண்

அப்போ உனக்கு எடுத்துக்க பொங்கலுக்கு போட்டுக்க என்றான்.

மேல போங்க என்றாள் கடையில் வேலை செய்யும் பெண். இருவரும் படியில் ஏறி மேலே செல்ல என்ன வேண்டும் கடையில் உள்ளே இருக்கும் பெண் கேட்டால் சுடிதார் ரெடிமேட்டா ஆமா ரெடிமேட் தான் என்றாள்….அவள்.

இப்ப லேட்டஸ்ட் வந்திருக்கிறது எடுத்து போடுங்க..

கடையில் வேலை செய்யும் பெண் ஒவ்வொரு சுடிதாராக எடுத்து வெளியே போட்டால் ஒவ்வொன்னும் ஒவ்வொரு மாதிரி இருந்தது சிலது சின்ன பிள்ளைகளுக்கு போடுற மாதிரி இருந்தது சுடிதார் பார்த்து அவன் இதெல்லாம் வேண்டாங்க நல்லாவே இல்ல வேற எதுவும் எடுத்து போடுங்க என்றான். மறுபடியும் வேற மாடலில் சுடிதாரை எடுத்து போட்டுக் கொண்டே இருந்தாள். கடைசியில் அவள் விருப்பமான பூ போட்ட சுடிதாரையே எடுத்துக் கொண்டாள்.


கடையில் துணிக்கு வேண்டிய தொகையை அவன் ஜி.ப்ளே மூலம் செலுத்தி விட்டான் கடைக்காரன் சுடிதாரை கவர் பண்ணி ஒரு பெரிய பையில் போட்டு கொடுத்தான் அதை அவள் கொண்டு வந்திருக்கும் பையில் உள்ளே இருவரும் வைத்தனர் நேராக நடந்து சாலைக்கு இருவரும் வந்தன பேருந்துகள் வேகமாக சென்று கொண்டிருந்தன .சாலை ஓரத் இருக்கும் வியாபாரிகள் அழகான ஆப்பிள்கள் ஆரஞ்சுகள் முந்திரிகள் என அனைத்தும் அடிக்கடி வைத்திருந்தார்கள்.

சாப்பிட வேண்டும் என்றாள். ஏன் பசிக்குதா என்றான் சாப்பிடனும்.

இருவரும் சாலையோரத்தில் இருக்கும் அஜ்மீர் சைவ, அசைவ உணவகம் பெரிய பலகை போட்டிருந்த கடைக்கு சென்றார்கள். இருவரும் சிக்கன் பிரியாணி வாங்கி சாப்பிட்டார்கள் .அவளும் ஏதோ சொன்னாள்.இவனும் ஏதோ சொன்னான் .இருவரும் மாறி மாறி பேசிக் கொண்டே இருந்தார்கள்.

இன்று இருவர் வந்து பொள்ளாச்சி பேருந்து ஏறினார்கள் பேருந்தில் ஒரே கூட்டம் இரு நான் சீட்டு இருக்குதுன்னு பார்க்கிறேன் என்று சொல்லி பேருந்து ஏறி பார்த்தான். இரண்டு பேர் இரண்டு சீட்டில் அமர்ந்திருந்தார்கள். உள்ளே சென்றதும் கொஞ்சம் மாறி உட்காருங்கள் என்றான்.

அவளும் பேசினாள். அவனும் பேசினான் நிறைய பேசினார்கள்.

ஊரிலிருந்து கொண்டு வந்த சாக்லேட்டை எடுத்து அவனிடம் கொடுத்தாள். இந்த சாக்லேட் சாப்பிட்டு இருக்கீங்களா என்றாள்

ஓ… இதுவா இது நான் ஏற்கனவே சாப்பிட்டு இருக்கிறேன்.


கொடைக்கானல் ஊட்டியிலே நிறைய விப்பாங்க என்றான்.

வெளியில் இருந்து அந்த டப்பாவை எடுத்து அதில் ஒரு பீஸ் எடுத்து அவனிடம் நீட்டினாள். அவன் வாங்கி வாயில் போட்டு மென்று தின்றான் பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்தது .அத்தை நல்லா இருக்காங்களா?

நல்லா இருக்காங்க ,அதே வேலைக்குதான் போறாங்களா ?

ஆமா ….இப்ப வேலை இல்ல.

வீட்ல தான் இருக்காங்க.

அவன் சொன்னான் ஊருக்கு வர லாம்னு தான் நினைத்தேன் உன்னை யோசனை பண்ணுனேன் அதனால தான் வர முடியல

பேசாம வீட்ல சொல்ற பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லா இருங்க என்று அவள் சொன்னாள்.

இருவருக்கும் இடையே பேச்சு நின்றது. பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்தது.

அவன் சற்று மௌனமானான் அவன் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடியது.

அவள் பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தாள். ஜன்னல் வழியே எதை ஒன்றை பார்த்தவாறு யோசனையில் அவள் கண்கலங்கினாள்.

அவனுக்கு தெரியாமல் அவள் கண்ணை துடைத்தாள்.

இருவருமே எதுவுமே பேசவில்லை.

அவன் அவளிடம் சொன்னான் எது நடந்தாலும், என்ன நடந்தாலும் ,எந்த பிரச்சனை வந்தாலும் நீதான் .பேருந்து இப்பொழுது வேகமாக சென்று கொண்டிருந்தது.
 

Thani

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 2, 2023
Messages
59
அழகான கதை 😀
வெற்றிபெற வாழ்த்துக்கள் 💐
 
Top