• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

14. அம்புத நல்லாள்

Sahana Harish

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
49
அம்புத்ராவும் பிரதியுமனும் ஒர் அறையில் இருக்க அவர்களின் மோன நிலையை கலைக்குமாறு கதவு தட்டப்படும் ஓசை கேட்டது யார் என்று பார்க்க கதவை திறந்ததும் ஆங்காரமாய் நின்றிருந்தான் மைத்ரேயன்..

" என் வாழ்க்கையை கெடுத்துட்டு நீங்க நிம்மதியா இவன் கூட ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கியா?" என்றான் அம்புத்ராவை பார்த்து.

அதைக் கண்டு பதறியவனாய் பிரதியுமன் "என்ன மைத்து என்ன ஆச்சு எதுக்கு அம்புவ இப்படி பேசுற?"

"வாடா வா இரண்டு நாளா என்கிட்ட பேசினியா? இப்ப இவள பற்றி பேசும் போது வந்து நிக்குற? "என்று கறுவினான்.

அவன் ஏன் இவ்வாறு பேசுகிறான் என்று தெரியாமல் "ஏய் என்ன இப்படி பேசுற? என்ன பிரச்சனை?" என்றான் அவனும் கோபமாய்.

இதை கவனித்த அம்புத்ரா" மைத்து ப்ளீஸ் ரீலாக்ஸ் என்ன பிரச்சனை.. தெளிவா பேசுங்க.. நான் என்ன செஞ்சேன்?"என்றாள் பொறுமையாக

அவள் பொறுமையாக பேசவும் ஆசுவாசம் அடைந்தவன் " என் வாழ்க்கையே இப்ப பிரச்சனைல இருக்கு"

அதைக் கேட்டு மேலும் குழம்பியவளாய் " என்ன பிரச்சனைன்னு தெளிவா சொன்னா தானே எங்களுக்கும் புரியும்"

" நான் ஒரு பொண்ண லவ் பண்றேன் அவளை பொண்ணு பார்க்க வராங்களாம்.. அதுக்கு காரணம் நீ தான்" என்றான் குற்றம் சாட்டும் தோரணையில்.

" என்ன"என்றாள் அதிர்ச்சியாய்

" ஆமாம் நீ தான் நிர்குணாக்கு மாப்பிள்ளை பார்த்துச் சொல்லி இருக்க அதுவும் உன் கூட வேலை செய்யுற இன்ஸ்பெக்டர் கதிருக்கு"

" ஆமா.. நிர்குணா என்னோட ஸ்கூல் மேட் சோ அவங்க அம்மா அப்பா எங்க பேமிலிக்கு ரொம்ப குளோஸ் அப்பா கிட்ட கேட்டாங்க நான் கதிருக்கு வரன் தேடவும் குணாவ சொன்னேன் இதுல தப்பு என்ன இருக்கு?"

இவர்கள் பேசுவதை கவனித்த பிரதி" ஹேய் ஒரு நிமிடம் இவ கூட வேலை பார்க்குற இன்ஸ்பெக்டரா?என்ன சொல்ற நீ?" என்று கூரிய விழியால் அவனைப் பார்க்க ஆரம்பித்தான்.

அதிர்ச்சியான இருவரும்" நான் அப்படியா சொன்னேன்? இனிஷியேட்டர்னு தானே சொன்னேன்?"என்றான் தன்னை சமாளித்துக் கொண்டு.

அவனை நம்புவதா வேண்டாமா என்று யோசித்தவனை மேலும் சிந்திக்க விடாமல் செய்தது அம்புத்ரா தான்.

" யுமன் இது இப்ப முக்கியமா? அவர் நிர்குணாவ லவ் பண்றேன்னு சொன்னாரே அது என்னனு கேளுங்க.. அவ கூட யாரோ ஒரு சிடுமூஞ்ச லவ் பண்றதா சொன்னா ஆனா அது மைத்ரேயன்னு தெரியாம போச்சு" என்றாள் அவனைப் பார்த்தபடி.

அவனும் அதை ஆமோதித்த பிரதியோ( ஐயோ இவன் ஏன் இவ்வளவு நல்லவனா இருக்கான்)

"ஹேய் மைத்து நீ நிர்குணாவ லவ் பண்றீயா? நீ தான் அவ தைரியமா இல்ல அப்படி இப்படின்னு சொல்லிட்டு இருந்த? யாரோ அசிஸ்டெண்ட் கமிஷனர் மாதிரி இல்லன்னு வேற சொன்ன?"

அவன் சொன்னதும் அம்புத்ராவும் மைத்ரேயனும் ஒரு நொடி அமைதியானவர்கள் மறுநொடி "ஆமா சொன்னேன்.. நான் நினைச்சா மாதிரி இல்லடா நிர்குணா ரவுடிகளை அடி பின்னிட்டா"என்று அன்று நடந்ததை முழுவதும் சொன்னான்.

" பார்ரா நிர்குணா ரொம்ப பயந்த சுபாவம்னு நினைச்சேன் அடிக்க எல்லாம் செய்யுறளா?"

"ஆமா பிரதி அன்னைக்கு எனக்கு ரொம்ப ஆச்சரியம் மறுநாள் அவகிட்ட என்னோட காதலை சொல்லி புரிய வைக்கலாம்னு நினைச்சேன் அதுக்குள்ள இந்த மாமி பண்ண வேலையால அவகிட்ட இதுவரைக்கும் பேசவே இல்லை" என்றான் தன்னை நொந்து கொண்டவனாய்.

" சரி சரி விடு.. முடிஞ்சத பற்றி பேசி எந்த பிரயோஜனமும் இல்ல" என்றது அம்புத்ரா தான்.. ஏனெனில் அந்நிகழ்வினை நினைவுப்படுத்தியதும் அவனின் முகம் போன போக்கை இவள் கவனித்து இருந்தாளே.

" நீ சொல்றதும் சரி தான் நாளைக்கு காலையில நான் அங்க இருக்கணும்.. சோ நான் நைட் பிளைட் இருக்கான்னு பார்க்குறேன் இல்ல அம்மு அப்பா காரை எடுத்துட்டு ஆன் ரோடு போறேன் பட் நான் அவகிட்ட பேசியே ஆகணும்" என்றான் தீவிரமாய்.

"டேய் நீ காரை எடுத்துட்டு போனா அவங்க எப்படி அங்க வருவாங்க?"

" நோ ப்ராப்ளம் மைத்து நீங்க கிளம்புங்க நாங்க பிளைட்ல வரோம்"

அவனும் அதை ஆமோதிக்க "சரி நான் அப்பா அம்மாகிட்ட சொல்லிட்டு கிளம்புறேன்"

"என்னன்னு சொல்ல போற மைத்து?" என்றான் பிரதி.

"வேலை இருக்குன்னு சொல்லிட்டு தான்டா போவேன்.. வேற என்ன சொல்ல சொல்ற?"

"சரி நீ கிளம்பு நான் சமாளிச்சுக்கிறேன்"

அதன்படி அவனும் 7 மணி அளவில் விக்ரமனின் காரை எடுத்துக்கொண்டுச் சீறிப் பாய்ந்தான் பெங்களூரை நோக்கி..

அவன் சென்ற பிறகு பிரதியுமனிடம் வந்த கந்தசாமி" எங்க மேல இருக்க கோபம் குறைந்ததா?"

"அப்பா உங்க எல்லார் மேலயும் எனக்கு வருத்தம் தான் இருந்தது கோவம் இல்ல.. எதுக்காக இந்த நாடகம் ஆடணும் இவ தான் சின்ன பொண்ணு உங்களுக்கு என்ன? இதுல அம்மா வேற ஒரு படி மேலே போயாச்சு" என்றான் முறைத்தவாறே.

"சரி சரி அது தான் இப்ப எல்லாம் சமாதானம் ஆயாச்சு இல்லையா திரும்பவும் அதை பத்தி பேசி நீ எதுக்கு அவனை கோவப்படுத்துறீங்க? என்றது தெய்வானையே.

அவன் திரும்பி முறைத்ததில் கப்சிப்பென்று காரில் ஏறி விட்டார்..

தனது வீட்டிற்கு கிளம்பும் முன் அம்முவை பார்த்து சொல்லிவிட்டு வா என்று அவன் தந்தை சொல்லவும் இதுதான் சாக்கு என்று ஓடிவிட்டான் அவளது அறைக்கு.

இவனுக்கு ஜன்னல் வழியே நின்று கை அசைக்கலாம் என்று நினைத்தவள் கதவு திறக்கும் ஓசை கேட்டு திரும்பிய நொடி பின்னாலிருந்து அணைத்து இருந்தான் அவளது கள்வன்.

அதனை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது அவள் உடலின் அதிர்வே அவனுக்கு சொல்லியது..

"என்ன அம்பு எனக்கு வெளில வந்து பாய் சொல்ல மாட்டியா?" என்று அவள் காதோரம் அவன்‌ குரல் கிசுகிசுப்பாக கேட்கவும் பெண்ணவளுக்கு என்றுமில்லாமல் நாணம் தலைதூக்கியது..

அவன் கையில் இருந்து வெளிவர போராடிய போராட்டமெல்லாம் வீணென்று சில நொடிகளிலேயே புரிந்துகொண்டாள்.. அவளால் அவனிடமிருந்து வெளிவர முடியாமல் இல்லை வெளி விருப்பமில்லை என்பதுதான் உண்மை.

"நான் கேட்டதுக்கு இன்னும் நீ பதில் சொல்லவே இல்ல"என்றான் மேலும் இறுக்கியபடி.

"யுமன் ப்ளீஸ் விடுங்க யாராவது வந்துரப் போறாங்க"

"யாராவது வருவாங்கன்றது உனக்கு இப்பதான் ஞாபகம் வருதா அப்போ எனக்கு கிஸ் பண்ணியே அப்ப வரலையா?"

அதைக்கேட்டதும் சினுங்கியவள் " வேண்டாம்னா திருப்பி குடுத்துட்டு போங்க சும்மா பேசிக்கிட்டு" என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.

"அடிப்பாவி இதுக்குதான் இவ்வளவு நேரம் அமைதியா இருந்தியா? அப்பவே சொல்லியிருந்தா இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருக்க மாட்டேனே இப்ப அவசர அவசரமா உனக்கு திருப்பி கொடுக்க வேண்டியிருக்கும்" என்றவன் அவள் பேச வாய் எடுக்கும் முன் அவள் இதழ்களோடு இதழ் பொருத்தினான்.. ஸ்ட்ராபெரியின் சுவையோடு இருந்த அதரங்கள் அவனை வெளிவர விடாமல் செய்தனர்..

தன்னிலை அடைய இருவருக்கும் விருப்பமில்லை ஆனாலும் கீழிருந்து கேட்ட குரல்களால் பிரிய மனமின்றி பிரிந்தனர் ஒரு சிறிய சிரிப்போடு..

" லிப்ஸ்ல ஸ்ட்ராபெர்ரி வாசம் வருமா பழம் ஏதாவது சாப்டியா?"என்று அவன் கேட்டதும் அடக்கமாட்டாமல் சிரித்தாள் பெண்ணவள்..

"ஐயோ யுமன் இது லிப்கேர்.. இவ்வளவு அப்பாவியா இருக்கீங்களே"என்று கன்னத்தில் கைவைத்து சொல்லிக்கொண்டு இருந்தவளை ஒரே வார்த்தையில் மிரட்சி ஆக்கினான் பிரதியுமன்..

"இனி இந்த லிப்கேர் யூஸ் பண்ணாத அந்த லிப்புக்கு இனி நான் கேர்.. வறண்டு போன தானே லிப் கேர் தேவைப்படும்?"என்றான் புருவத்தை உயர்த்தியவாறு.

அவன் கேட்டதின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டவள் " நீங்க கிளம்புங்க டைமாச்சு நாம அங்க மீட் பண்ணலாம்" என்று அறையில் இருந்து தள்ளாத குறையாக வெளியே அனுப்பினாள்..

பின்னர் தன் முகச்சிவப்பை மறைத்து கொண்டு அவர்களை வழியனுப்பி வைத்தாள்..

மறுநாள் விக்ரமன் குடும்பம் விமானத்தில் கிளம்ப பிரதியுமன் தனது பைக்கில் கிளம்பினான்.. முன்னால் கிளம்பிய மைத்ரேயனுக்கு தூக்கம் பிடிபடவில்லை இரவு முழுவதும்.. இரவு கிளம்பியவன் 12 மணியளவில் பெங்களூரை அடைந்திருந்தான்.. அதன் பிறகும் அவன் நிர்குணாவை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான்..

ஐந்து வருடத்திற்கு முன்,
அவன் வேலைக்கு சேர்ந்த புதிதில் அவள் படிக்கும் மருத்தவ கல்லூரி டீனை பேட்டி எடுக்க சொல்லி விக்ரமன் அவனுக்கு உத்தரவிட்டு இருந்தார்.. முதல் வேலை என்பதால் மிகவும் கவனமாக தயாரானான்.. கல்லூரி வாசலில் பயபக்தியுடன் அடியெடுத்து வைத்த அடுத்த நொடி அவன் உடை முழுவதும் கலர் பொடி தூவப்பட்டது..தன் முதல் நாள் பணியில் இவ்வாறு நிகழ்ந்ததை பார்த்து கோபம் கொண்டவன் நிமிர்ந்து நோக்கியவனின் எதிரில் முகம் முழுவதும் தெரியாதவாறு ஒரு பெண் பயத்தோடு நின்றிருப்பதைக் கண்டான்..

"ஏய் உனக்கு கண்ணு தெரியல? இப்படி தான் போற வரவங்க மேல எல்லாம் கலர் போட்டு விளையடுவீயா? படிக்க தானே வந்த? சராமரியாக திட்டினான் அவன்.

அவன் திட்டியதைக் கேட்டதும் தன் குண்டு விழிகளை காட்டி முறைத்தவள் அதில் எட்டி பார்த்த கண்ணீரை துடைத்து கொண்டு" சாரி" மட்டும் சொல்லி விட்டு தன் அருகில் இருந்த நண்பனின் கையில் பணத்தை திணித்தவள் அவனிடம் செய்ய வேண்டிய செயலையும் சொல்லி விட்டு சென்று விட்டாள்.

செல்லும் அவளை வெறுப்போடு பார்த்தவன் "சர்" என்ற அழைப்பில் மறுபுறம் திரும்பியவன் என்னவென்பது போல் புருவத்தை உயர்த்தினான்.

"குணா உங்களுக்கு வேற சட்டை வாங்கி குடுக்க சொன்னா சர்.. நீங்க இங்க எதுக்கு வந்தீங்கனு எங்களுக்கு தெரியாது ஆனா ஏதாவது வேலையா இங்க வந்திருப்பீங்கனு மட்டும் புரியுது"

அவன் சொன்னதை பொறுமையாக கேட்டவன் "பிரதர் எனக்கு உங்க பிரண்ட் வாங்கி குடுக்குற சட்டை எல்லாம் வேண்டாம் நீங்க போங்க"என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.

" சர் அவ வேணும்னு எதையும் செய்யல.. என் மேல அடிக்க வந்தா நான் தப்பிக்க நகரவும் உங்க மேல பட்டுருச்சு.. இன்னைக்கு எங்க காலேஜ்ல ஹோலி சர் அதனால தான்"என்றான் அவன்.

மைத்ரேயன் அவனை பார்த்து புன்முறுவல் பூத்தவாறு " பிரதர் நோ ப்ராப்ளம் எனக்கு இன்னும் டைம் இருக்கு சோ நான் போய் வேற டிரஸ் வாங்கி போட்டுகிறேன்.. நீங்க போய் என்ஜாய் பண்ணுங்க"

அவனும் சரி என நகர" பிரதர் உங்க பிரண்ட் கிட்ட நான் சாரி சொன்னேன்னு சொல்லிடுங்க அந்த நேரம் கோபம் சோ ஹார்ஷா பேசிட்டேன்"

அவன் சிரித்தபடி" சர் உங்க பெயர் என்ன? எதுக்காக இங்க வந்து இருக்கீங்கனு தெரிஞ்சிக்கலாமா? நான் இந்த காலேஜ் சேர்மன்.. என் பெயர் அகிலேஷ் என்னால முடிஞ்ச ஹெல்ப் கண்டிப்பா செய்யுறேன்"

"ஓஓ சூப்பர் நான் உங்களோட டீனை நான் இன்டர்வியூ பண்ண வந்து இருக்கேன் இன்னும் ஓரு மணி நேரம் கழிச்சி தான் எனக்கான அப்பாயின்மென்ட்"

" பைன் சர் நானும் அவரோட ஒரு கேஸ்க்கு ஹெல்ப் பண்ண போறேன் அவர் ப்ரீ ஆனதும் நான் உங்களுக்கு கால் பண்றேன் மொபைல் நம்பர் மட்டும் தாங்க"

இருவரும் தனது அலைபேசி எண்ணை பரிமாறிக் கொண்டனர்.

அவன் வந்து சென்று ஒருவாரம் ஓடியிருக்க எதேச்சையாக நிர்குணா அவனை ஒரு ஹோட்டலில் பார்த்தாள் உடன் மற்றொரு வாலிபன் இருப்பதையும் இருவருக்கும் முக சாயல் ஒத்திருப்பதை போல் அவளுக்கு தெரிந்தது.. அவனிடம் பேசி விட வேண்டும் என்ற முனைப்பில் இருந்த அவள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நேராகச் சென்று நின்றாள் அவன் அமர்ந்திருக்கும் இடத்திற்கு அருகில்.

அருகில் ஏதோ அசைவு தென்படுவும் நிமிர்ந்து பார்த்தான் பிரதியுமன்.. ஒரு பெண் அமைதியாக நிற்கவும் என்னவென்று புரியாமல் எதிரில் இருப்பவனை சுரண்டினான்.. அதேநேரம் மைத்ரேயன் நிமிர்ந்து நோக்கவும் அவள் புன்முறுவல் பூத்தாள்.

அப்பெண் யாரென்று அவனுக்கு தெரியவில்லை எதற்காக தன்னை பார்த்து புன்முறுவல் போகிறாள் என்பதும் அவனுக்கு விளங்கவில்லை.

அவன் பேச வாய் எடுக்கும் முன்" ஹலோ சார் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா? அப்புறம் சார் அன்னிக்கு நடந்த விஷயத்துக்கு என்ன மன்னிச்சிடுங்க நான் வேணும்னு எதையும் செய்யல"

அவள் எதைப் பற்றி பேசுகிறார் என்று புரியாதவன்" யார் நீங்க இதற்கு முன்னாடி நான் உங்களை பார்த்து இருக்கேனா என்னை உங்களுக்கு தெரியுமா?"(கலர்பொடி முகத்தில் அன்று இருந்ததால் இன்று அவள் யார் என்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை)

"ஆமாம் சார் அன்னைக்கு எங்க காலேஜ் வந்தீங்க இல்லையா அப்போ உங்க மேல கலர் பொடியை போட்டுடேனே அது நான்தான்."

இவர்கள் பேசுவது பிரதியுமனுக்கு சுத்தமாக புரியவில்லை" ஹேய் மைத்து யார் இவங்க எதை பத்தி பேசுறாங்க உனக்கு இவங்கள தெரியுமா?"

"இல்லடா அன்னைக்கு ஃபர்ஸ்ட் டைம் ஒருத்தரை இன்டர்வியூ பண்ண போன அன்னைக்கு கலர் பொடிய ஒரு பொண்ணு மேலே தூவி டென்ஷன் பண்ணானு சொன்னேன் இல்லையா அந்த பொண்ணுதான்.. அன்னைக்கு ஃபேஸ் புல்லா கலர் இருந்ததுனால இப்போ அடையாளம் தெரியல"

இவனிடம் பேசிவிட்டு அவளிடம் "அன்னைக்கு நடந்த விஷயத்தை நான் எப்பவோ மறந்துட்டேன் இப்போ நீங்க வந்து சொல்லிதான் எனக்கு ஞாபகம் வந்தது சோ டேக் இட் ஈஸி கம் ஜாயின் வித் ஹஸ்"

நிற்குணா எந்த ஆட்சேபனையும் சொல்லவில்லை நேராக அவன் கண்ணை பார்த்தவாறு எதிரில் அமர்ந்து விட்டாள்.

சில நொடிகள் மிகவும் அமைதியாகவே கழிந்தது முதலில் பேச ஆரம்பித்தது நிர்குணா தான்.." உங்ககிட்ட ஒரு விஷயம் பர்சனலா பேசணும் இப்ப பேசலாமா?"

"தாராளமா.. இவன் என்னோட கசின்.. எங்களுக்குள்ள ஒளிவுமறைவு எதுவும் இல்லை சோ நீங்க பேசலாம்"

சில நொடிகள் தயங்கியவள்" எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு உங்கள கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன் உங்க முடிவு என்ன நான் தெரிஞ்சுக்கலாமா?" எனப் படபடவென அனைத்தையும் சொல்லி முடித்தாள்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த பிரதியுமன் சிலைபோல் இருக்க மைத்ரேயன் கண்களில் கோபம் அப்பட்டமாக தெரிந்தது.

சுற்றம் பார்க்காமல்"ஏய்" எனக் கத்தியவன் பிரதி அவன் கையை பற்றி அழுத்தவும்" சாரி" என்றான் அவள் முகம் பார்க்காமல்.

"ஏய் என்னைப் பற்றி உனக்கு என்ன தெரியும் என்னோட பெயராவது தெரியுமா எதுவுமே தெரியாமல் இந்த மாதிரி வந்து பேசிக்கிட்டு இருக்க? எத்தனை நாள் என்னை பார்த்த? அன்னைக்கு ஒருநாள் பார்த்தவுடனே காதல் பொங்கிடுமா இதுக்குதான் உன்னை காலேஜ் அனுப்பி வச்சாங்க அப்போ போய் படிக்கிற வேலையை பாரு" என்றான் காட்டமாக.

அவளிடம் அமைதியோ அமைதி அதில் மேலும் கோபம் கொண்டவன்" சொல்லிட்டே இருக்கேன் இல்ல இங்க இருந்து முதல்ல கிளம்பு படிக்கிற வயசுல இதெல்லாம் உனக்கு தேவையா கெட் லாஸ்ட்"

"மைத்து ஷட் ஆப் ஒரு பொண்ணுகிட்ட பப்ளிக் ப்ளேஸ்ல இப்படி தான் பேசுவியா?அவ அவ மனசுல இருக்குறத சொன்னா உனக்கு பிடிச்சிருக்கு இல்ல சொல்லிட்டு போ அவ அவ வேலைய பார்த்துட்டு போவா தேவையில்லாத பேசாத"என்றது பிரதியுமன் தான்.

"சி நான் பொறுமையாவே உன் கிட்ட சொல்றேன் நீ சின்ன பொண்ணு உனக்கு இந்த வயசுல நிறைய பேர் மேல கிரஷ் வரும் அதெல்லாம் உண்மை கிடையாது உனக்கு மெச்சூரிட்டி லெவல் வரும்போது ஒருத்தர் கிடைப்பார் உன்னை நல்லா புரிஞ்சிக்கிற உன் மனசு புரிஞ்சு நடந்துக்கிற ஒரு நல்ல பையன் உனக்கு கிடைப்பான் என்னால உன்னை லவ் பண்ண முடியாது இப்ப இங்க இருந்து கிளம்புறீயா?" என வார்த்தைகள் வெளிவந்தது அடக்கப்பட்ட கோபத்துடன்.

"மைத்ரேயன்" என்றது வேறுயாருமில்லை நிர்குணா தான்.

இத்தனை பெயர் சொல்லி அழைக்கவும் ஒரு நொடி அதிர்ந்தவன்" என்னோட பெயர் உனக்கு தெரியுமா?"

"உங்க பெயர் மைத்ரேயன் இவர் பிரதியுமன் நீங்க ரெண்டு பேரும் இங்க கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் வந்தீங்க.. ரிலேட்டிவ்.. தனியா ஒரு அபார்ட்மென்ட் எடுத்து தங்கி இருக்கீங்க.. இவர் சாப்ட்வேர் என்ஜினீயர் நீங்க பிரஸ்.. உங்க ரெண்டு பேருக்கும் ஒரே வயசு தான்.. இது வரைக்கும் எந்த பொண்ணையும் லவ் பண்ணல சோ நீங்க ரெண்டு பேரும் சிங்கிள்.. அப்புறம் மைத்ரேயன் உங்களோட ஜாதகப்படி உங்களுக்கு உங்க வாய் தான் எதிரி யார்கிட்டயாவது ஏதாவது பேசி அடி வாங்கிட்டு வருவீங்க" என்றவள் இது போதுமா என்பதுபோல் அவனை நோக்கி புருவத்தை உயர்த்தினாள்.

இவள் சொன்னதைக் கேட்ட பிரதி " ஹே வாவ் உனக்கு எப்படி எங்களை பற்றி தெரியும் அண்ட் மோர் அவர் உன்னோட பேரை நான் இதுவரைக்கும் கேட்கல"

"என்னோட பெயர் நிர்குணா நான் தெர்ட் இயர் மெடிக்கல் படிக்கிறேன்‌.. என்னோட அண்ணா உங்க கூட தான் வேலை செய்யறாங்க.. பெயர் அஸ்வின்.. பட் அவன் சொல்லி எனக்கு இதெல்லாம் தெரிய வேண்டியதில்லை இல்லை.. பிரைவேட் டிடெக்டிவ் வச்சு தெரிஞ்சுகிட்டேன்.. என்றவள் மைத்ரேயன் பக்கம் திரும்பி உங்கள அன்னைக்கு காலேஜ்ல பார்த்தபோதே எனக்கு ரொம்ப புடிச்சது ஏன்னு கேட்டா சுத்தமா தெரியாது உங்க கிட்ட பேசணும் பழகுணும்னு ஆசையா இருந்தது சோ என்னோட கசின் அகிலேஷ் கிட்ட இருந்து உங்களோட மொபைல் நம்பர் வாங்கினேன் வாங்கி ஒரு வாரம் ஆகுது ஆனாலும் பேச ஒரு தயக்கம்.. இன்னிக்கு நேரில் பார்க்கவும் என்னையுமறியாமல் வந்ததுதான் இந்த வார்த்தை ஆனால் அது பொய்யில்லை" என்றவள் தனது இருக்கையை விட்டு எழுந்தவள்" என்னை நீங்க இப்ப லவ் பண்ணலனாலும் ஒரு நாள் என்னை உங்களுக்கு பிடிக்கும் அதுவரை நான் காத்திருப்பேன் ஆனா அதுக்காக பேசாம எல்லாம் இருக்க மாட்டேன்.. ஓகே ரேயன் பாய்.. பாய் அண்ணா" பேச வந்ததை பேசி விட்டவள் போல் அவனை பார்த்து புன்னகைத்தவாறே ஒரு பறக்கும் முத்தத்தை கொடுத்தவள் சென்று விட்டாள்.. அன்று தொடங்கியது இன்று வரை அவள் மாறவே இல்லை என்று தான் நினைத்து இருந்தான்..

சில நாட்களில் முன்னர் வரை அவள் அவனுக்காக பார்த்து பார்த்து அனைத்தையும் செய்தது அவன் மனதில் சந்தோஷத்திற்கு மாறாக அச்சத்தை விளைவித்தது.. சில மாதங்களாக அவன் வேலையால் பல இடங்களில் மாட்டி கொண்டு இருந்தான் அவனால் முடிந்த வரை சமாளிப்பான் ஆனால் பிரச்சனையின் ஆரம்பத்திலேயே பிரதியுமனுக்கு அழைத்திருப்பான் அவனும் ஹீரோ போல் வந்து காத்து விடுவான்..இந்நிலையில் அவன் அவளது காதலை ஏற்பது மைத்ரேயனுக்கு சரியாக தோன்றவில்லை அதன் காரணமாகவே அவளுக்கு மிகவும் சாது அவள் வேண்டாம் என்றான்.. ஆனால் அந்த சம்பவம் நடந்து அவளின் தைரியத்தை கண்ட பிறகு தன்னை விட இவளால் நன்றாக எதிரிகளை சமாளிக்க முடியும் என தோன்றிய பிறகு ஏதேதோ நிகழ நிர்குணாவிடம் தன் காதலை வெளிப்படுத்த முடியாத சூழல் உண்டானது.. அப்படி இருந்தால் கூட அதற்குள் இவள் எப்படி இந்த கதிரைப் பார்க்க சம்மதம் சொன்னாள்? இதற்கெல்லாம் தீர்வு அவளிடம் பேசுவது தான்.

இரவு முழுவதும் யோசித்து ஒரு முடிவை எடுத்தவன் விடியும் முன் கிளம்பலாம் என வாசலில் தனது வண்டியை எடுக்க போகும் சமயம் பிரதியுமன் வந்து நின்றான்.

"ஏய் இவ்வளவு சீக்கரம் எங்க கிளம்பிட்ட?"

"வாடா ஏன் இவ்வளவு நேரம்?"

"வர வழியில தூக்கம் வந்திருச்சு சோ நம்ம அத்தை வீட்ல நைட் கொஞ்ச நேரம் தூங்கிட்டு 3 மணி போல கிளம்பிட்டேன்"

"ஓ ஒகே சரி நீ போய் ரெஸ்ட் எடு நான் நிர்குணா வீடு வரை போயிட்டு அவ மனசுல என்ன இருக்குனு கேட்டுட்டு வரேன்" எனத் தனது வண்டியை கிளம்பினான்.

" ஏய் ஏய் இரு மைத்து இது அன் டைம்டா இன்னும் முழுசா விடிய
கூட இல்ல.. விடியட்டும் நீயும் நானும் போகலாம் வா உள்ள வந்து கொஞ்ச நேரம் தூங்கு உன்னை பார்த்தாலே தெரியுது நீ நைட் முழுக்க தூங்கவே இல்லன்னு"

மைத்ரேயன் கோபமாக "முடியாதுடா அவ மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கா? இத்தனை நாளா நான் லவ் பண்ணா தான் ஆச்சுன்னு என் பின்னாடியே சுத்தி சுத்தி வந்தா தீடீர்ன்னு எவனோ ஒருத்தன கல்யாணம் பண்ணிக்க ஓகே சொல்வாளா?"

" டேய் பொண்ணு பார்க்க தான் வராங்க கல்யாணம் ஆக போறது இல்ல"

"எதுவோ ஒன்னு.. நான் அவ கிட்ட பேசியே ஆகணும்.. டாட்"

" அப்படியே ஒன்னு வச்சேன் காதுல டாட் குத்திகணும்.. பேச வந்த போது மூஞ்ச அரை கிலோ மீட்டர் தூக்கி வச்சிக்கிட்டு சுத்திட்டு இப்ப நிர்குணா நிர்குணானு பாட்டு பாடினா வா ராசானு கொஞ்சனுமோ மவனே நீ அங்க போனலே அவ எட்டி மிதிப்பா பார்த்துக்க" என்றான் கோபத்துடன்.

" அடிச்சாலும் மிதிச்சாலும் குணா குணா தான்"என்றான் காதல் கொண்டேன் பாணியில்.

" அடிச்சி எருமை மாடு வந்து தொலை ஒரு ஒன்பது மணிக்கு போலாம் நானும் வரேன்" என எதை எதையோ பேசி அவனை உள்ளே அழைத்து சென்றான்.

" ஒன்பது மணிக்கு செல்லலாம்" என கூறி உறங்க சென்றவன் பத்து மணியாகியும் எழுந்தபாடில்லை.

" மைத்து தடிமாடு எழுந்து தொலைடா அம்பு கால் பண்ணா நிர்குணா வீட்டுக்கு கதிர் வீட்ல இருந்து எல்லாரும் வந்து பேசிட்டு இருக்காங்கலாம் நீ இப்படியே கும்பகர்ணன் மாதிரி தூங்கிட்டு இருந்தன்னா அப்பறம் அபிராமி அபிராமினு பாட்டு பாட வேண்டியது தான்" என ஓங்கி மிதித்தான் பிரதியுமன்.

அவன் மிதித்ததில் தூக்கம் கலைத்தவன் மணியை பார்த்து விட்டு அரக்க பரக்க ஒரு உடையை அணிந்து கொண்டு இருபது நிமிடங்களில் நிர்குணா வீட்டை அடைந்திருந்தனர்..

அங்கே..

தொடரும்..
 
Top