• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

14. தத்தித் தாவுது மனசு.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
மலர் வனத்துக்குள் நுழைந்தவள் விழிகள் ஆர்சரியமாய் விரிய, அவற்றை பார்த்ததும் பட்டாம்பூச்சிபோல ஒவ்வொரு மலராக வருடிக்கொடுத்தது.

"எல்லாமே வித்தியாசம் வித்தியாசமா இருக்கே!" என்றவள் விரல்கள் மொட்டவிழ்ந்திருந்த ரோஜாவை கொய்தது.

அருகே இருந்த எவக்கிறீன் செடியில் இருந்து சிறு நெட்டினை கொய்து,ரோஜாவை அதன் நடுவே வைத்தவள், விஜயாவின் கொண்டையில் புது மலரையே மலர விட்டு அழகு காட்டியவள்,



"யாரும்மா இந்த செடில்லாம் வைச்சாங்க? எல்லாமே வித்தியாசமான பூக்களா இருக்கு..

எந்த பூவை ரசிக்கிறதுனே தெரியல்ல... என்னை விட்டா நாள் பூராவும் சாப்பாடு தண்ணி இல்லாம இங்கேயே இருந்திடுவேன். போசாமல் இதுக்குள்ளயே சின்னதா குடிசை கட்டி இருந்திடலாமா..?"

அவள் கேள்வி காதில் விழுந்தாலும் பதில் சொல்லத்தான் தோன்றவில்லை.

சின்னச்சின்ன சந்தோஷங்களை மனதின் ஆழம் வரை கொண்டு சென்று ரசிக்க ஒரு சிலரால் தான் முடியும்.

அதுவும் இவள் எத்தனை பிரச்சினைகளை கடந்து வந்தவள், அதையெல்லாம் நினைத்து மனதை போட்டு குழப்பிக்கொள்ளாமல், அதை அப்படியே ஒதுக்கிவிட்டு, இந்த நிமிடத்தை மட்டும் ரசித்து வாழ்வது வரமல்லவா...?

ஏன் என்னால் மட்டும் இவளை போல் இந்த நிமிடத்தை ரசித்து வாழத்தெரியவில்லை. இருபது வருடங்களுக்கு முன்னைய கசந்த நிகழ்வுகளில் இருந்து வெளிவர முடியவில்லை.

தன் குறுகிய மனப்பான்மையால் எத்தனை சந்தோஷங்கதை இழந்து, தன்னோடு சேர்ந்தவர் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கி விட்டேன்?


தன்னை தானே முடக்கிக்கொண்டதன் பின்னர், வீட்டில் நடந்தேறும் பல விஷயங்கள் தன்னிடம் இருந்து ஒழிக்கப்படுவது அவளுக்கும் நன்றாகவே தெரியும்.

இருந்தும் அவர்கள் ஒழிக்கும் விஷயம் தனக்கு தெரியாததைப்போல் நடந்து கொள்வாள்.


அது தனக்கு தெரிந்தது போல் காட்டிக்கொண்டாள் த மாமன், மாமியர் கவலை கொள்வார்களே என்று மறைந்தும் விட்டாள்.


ஆனால் இவளைப்போல் தானும் நடந்தவையை அனைத்தையும் விதி என நினைத்து வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிட்டு, தனக்காக இல்லை என்றாலும், தன்னை நம்பியிருந்த பிள்ளைக்காகவாவது வாழ்ந்திருக்கலாம். இன்று நடக்கும் பல கசப்பான சம்பவங்களை தடுத்திருக்கலாமோ! என்று காலம் கடந்த பின்புதான் சிந்தித்தாள் விஜயா.



அதுவும் இந்த சின்னப்பெண் மைலியால்.
இந்த சிறிய வயதில் தந்தையின் கடனை அடைப்பதற்காக பெரும் பொறுப்பினை கையில் எடுத்து, தன் குடும்பம் எங்கின்ற பெரும் சுமை அவள் மீது திணிக்கப்பட்டும், அதைப்பற்றிய கவலை சிறிதும் இல்லாமல், நாளையா கணக்கினை நாளை கவனிங்கலாம் என வாழ்க்கையை அதன் போக்கிலே விட்டு ரசிக்க வாழ்கிறாள்.



இந்த சிறு வயசில் எதார்த்தத்தை புரிந்து நடப்பவளை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தாலும், அவளைப்போல் தன்னால் ஏன் இருக்க முடியவில்லை என்ற பொறாமை வரத்தான் செய்தது.

விஜயாவின் சிந்தனைகளை அறியாமல், மலர் வனத்தையே சுற்றிச்சுற்றி வந்தவள்.

நிலாக்காதலன் வந்த மகிழ்ச்சியினையும், அவனுடன் ஊடல் கொண்ட தருணமதை உலகுக்கு பறைசாற்றும் விதமாய், மல்லிகை மலர்கள் தன் நறுமணத்தை அந்த நந்தவனம் முழவதும் பரப்பி, மைலியின் கவனத்தை தன் மேல் திருப்பும் முயற்சியில் வெற்றியும் கண்டது.



அதன் வாசனையில் மூக்கினை உறுஞ்சி மல்லிகை பந்தல் இருக்கும் திசையை அறிந்தாள்.


"அம்மா அங்க போலம் வாங்க." என்றவளிடம்


"இப்பிடியே இங்கமாறி, அங்கமாறி தொங்கிட்டே திரியவா அந்த கூடையை எடுத்துட்டு வந்தா?

அங்க நிதானமாயே போகலாம்.. இப்போ இங்கே இருக்கிற பூவை பறிச்சுக்கோ! அப்புறம் திரும்ப இங்க வரவேண்டிய தேவை இருக்காது. என்றார்.


"வேணாமேம்மா... இந்த பூக்கலெல்லம் செடியில இருக்கிறப்போ தான் அழகே.. அதை பறிச்சு, அதனோட ஒரு நாள் வழ்க்கையையும் ஏன் ரசிக்க விடாம செய்யணும்...

பேசாமல் சாமி போட்டோவை இங்கேயே கொண்டுவந்து வைச்சு கும்பிட்டா என்ன? " என கேட்டவளை முறைத்த விஜயா,



"என் விசர் பொண்ணே... செடியில பூக்கள் பூக்குறப்போவே சாமி.காலடிக்கு போகணும்னு வேண்டிக்கிட்டுத்தான் பூக்குமாம்... அதோட பிறவிப்பலனே அதுதான்னு நினைக்குமாம்.

நீ சொல்லுற பாேல செடியிலேயே விட்டா.. செடியிலயே காஞ்சு சருகாகிறதனால அதோட இந்த ஜென்மத்து பலனை அடையாமலே போயிடும்.. அதுக்கு அதில விருப்பமும்மில்லை தெரியுமா?


எல்லா பூவையும் வேணாம்.. கொஞ்சமா பறிச்சிட்டு வா...!" என்றார்.

"முடியாது.. நீங்க என்ன சொன்னாலும் இன்னைக்கு நான் பறிக்கிறதா இல்லை." என்றாள் விடாப்பிடியாக.


"சரிடி! அப்போ சாமிக்கு எதை வைக்கிறது..?


"ஆமால்ல... சாமிக்கும் பூ வேணும்ல்ல" என நாடியில் ஒற்றை விரலால் தட்டி யோசித்தவள்.


"ஓகே பறிச்சிடுவோம்... ஆனா இங்க இருக்கிற பூவில்ல.. அதோ அங்க இருக்கிற நடத்தை கெட்ட பூவை பறிச்சு.. சாமிக்கு சாத்திடுவோம். ஏன்னா அது தான் சாயந்தரம் வாடிடும்." என்க.



அவளது பேச்சில் குழம்பியவராே..,
"அது என்னடி புதுசா நடத்தை கெட்ட பூவுன்னு? அப்பிடி ஒரு பூ பெயரை நான் கேள்வி பட்டதே இல்லையே! " என்றார் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்.


"மல்லிப் பூவைத்தான் அப்படிச் சொன்னேன்."

"அதுக்கு யாரு அந்த பெயர் வைச்சாங்க?"


"நான் தான்.... அதோட நடத்தை சரியில்ல.. அதனால வைச்சேன்." என்றாள்.

"என்னடி பேசற? அது தப்பா என்ன செஞ்சிச்சு..?"


"ஆமா.. மல்லிப்பூ எப்பாே பூக்கும்? இரவில தானே... அதோட காதலன் யாரு..?" என்றாள்.

பதில் தெரிந்தும் சொல்லாது..
"நீயே அதையும் சொல்லு" என்றார்.

"சந்திரன்.. அவன் எப்போ வருவான்.. யாருக்கும் தெரியாம, இரவில வருபவனைக் கண்டதும் சந்தோஷத்தில மலருதுனா.., சந்திரன் மல்லிபூவோட கள்ளக்காதலன் தானே!

மத்த பூவெல்லாம் பகல்ல பூக்குறப்போ.. சந்திரன் வரும் வரை காத்திருந்து, எதுக்கு திருட்டுத்தனமா மலரணும்?
அப்போ மல்லிப்பூவோட நடத்தை சரியில்லனு தானே அர்த்தம்." என ஏற்ற இறங்கங்கறோடு சொன்னவள் பேச்சினில் பெரிதாகவே சிரித்து விட்டார் விஜயா.


"அடி பாவி!
ஏன்டி இப்பிடியெல்லாம் யோசிக்கிறா? மல்லிப்பூ இனத்தையே ஒரே நாள்ல அசிங்க படுத்திட்டியேடி!

ஆமா இதெல்லாம் எங்க இருந்து நீ யோசிக்கிற? ஆனா ஒன்னு.. நீ உண்மையில நல்ல பொண்ணுன்னு நினைச்சிட்டிருந்தேன்... இப்போ தானே தெரியுது நீ யாருன்னு" என்க.



"அதெல்லாம் உங்க தப்பில்ல.... அந்தளவுக்கு இருந்திருக்கு என்னோட பர்ப்பாமன்ஸ்" என்று இல்லாத காலரை தூக்கி விட்டவளது கபடமில்லாத குணத்தை ரசித்தவர்,


"போதும்டி வாயாடி! வா உன் நடத்தை கெட்ட பூக்கிட்டையே போகலாம்...
எனக்கு மல்லிப்பூவை எந்தளவுக்கு பிடிக்கும் தெரியுமா? இனி மல்லிப்பூவை பார்க்குறப்பல்லாம் இந்த நினைப்புத்தான் வரும்" என்றவாறு மல்லிகை பந்தலை நோக்கி நகர்ந்தனர்.



பந்தல் வரை விஜயாவின் சேரின் பின்னாலேயே வந்தவள், பந்தலின் அருகில் வந்ததும், அவரை அப்படியே விட்டுவிட்டு, மேலே தொங்கிய பூவினைப்பறித்து வாசனையை நுகர்ந்தாள்.



"செம வாசனைம்மா! இதை மாலையா கோர்த்து தலையில வைச்சுக்கிட்டா.. ஊரே என் பின்னாடி தான்." என்று மீண்டும் அந்த பூவினை உறிஞ்சியவள், கையில் இருந்த கூடையில் அந்த பூவினை போட,



"அடியே அறிவு கெட்டவளே! நீ நுகர்ந்த பூவையா சாமிக்கு போடப்போற..? அதை முதல்ல வெளிய எடு!" என்று மைலியை கடித்துக்கொண்டார்.


"ஏன்...? நான் பூ கசங்கல தானே.. சும்மா வாசனை தானே புடிச்சேன்."



"எல்லா வியாக்கியானமும் நல்லாத்தான் பேசு.. ஒரு மண்ணும் தெரியிறதில்ல....


சாமிக்கு சாத்துற மலர்கள் சுத்தமானதாகவும், வாசனை நிறைஞ்ச மலராயும் இருக்கணும்... வாசனையில்லா மலர்களை சாமிக்கு வைக்கிறதில்லை... அதே போல வாசனையை நீ நுகர்ந்திட்டா... அது வாசனையானதாவும் இருக்காது.. சுத்தமானதாவும் இருக்காது.
அதை தூக்கி தூரப்போடு!" என்றார்.


" சரி சாமிக்குத்தானே வேண்டாம். நான் வைச்சுக்கிறேன்." என்று அந்த பூவினை தன் பின்னலிடுக்குகளில் திணித்து விட்டு,

மல்லிகை பந்தலில் உள்ள மலர்களை எல்லாம் பறித்து கூடையில் போட்டவள்,

"போலாம்மா.... ரொம்ப நேரம் இருந்திட்டோம்.. வேணும்னா பொழுது சாயுற நேரம் வருவோம்." என்றவள் முன்னே நடக்க, பின்னாடியே விஜயாவும் சென்றார்.

இவற்றையெல்லாம் பல்கணியில் நின்று ஸ்ரீ கவனித்ததை, இருவரும் அறியவில்லை.



ஆம்! மைலியின் மல்லிப்பூவிற்கு தந்த விளக்கத்தில் விஜயா பலமாக சிரிக்க,
வேளையோடு எழுந்து குளித்துவிட்டு வந்தவன், விஜயாவின் சிரிப்பொலியில் யாரென தோட்டத்தை ஆராய்ந்தான்.


உண்மை தான்.. இதுவரை இந்த வீட்டில் அப்படி ஒரு சிரிப்பொலி கேட்டதில்லை.

என்றுமே இல்லாது விஜயா தன்னை மறந்து சிரிப்பதை கண்டதும் அவனால் அதை நம்பமுடியவில்லை.


விபரம் தெரிந்து அவனது ஏழு வயதின் பின்னர், தாய் இவ்வாறு எல்லாம் மனம்விட்டு சிரித்ததில்லை.

சிறுகுழந்தை போல் கவலை மறந்து சிரித்தவரை கண்டவன் இதழ்களும் சிறிதாய் விரிந்தது.


இவர் இப்படி சிரிப்பதற்கு என்ன காரணம் என தாயின் பார்வை சென்ற திசை ஆராய்ந்தான். அவர் எதிரில் செடிமறைவில் பல அபிநயங்கள் காட்டி பேசிக்கொண்டிருந்தவளை கண்டான்.

அவளைக் கண்டதும், முன்னைய இரவு நினைவு வர,



விரிந்த இதழ்கள் இறுகிக்கொண்டது.

'தன்னை கேவலமான வார்த்தைகள் கொண்டு நோகடித்து விட்டு, இவள் சந்தோஷமாக இருப்பதா....?

எனக்கு வலித்ததைப்போல் இவளுக்கும் வலிக்க வேண்டும். அந்தளவிற்கு இவளை தண்டிக்க வேண்டும்.' என வஞ்சத்தை வளர்த்தவன், அதை நடைமுறைப்.படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தான்.



பறித்து வந்த மலர்களை மாலையாக்கியவள்,

"வாங்கம்மா சாமி சாமிகும்பிட்டு வரலாம்." என்றவாறு விஜயாவை தன்னுடன் அழைத்துச்சென்று, மாலைகளை சாமிக்கு சாத்தி, தீபத்தை காட்டியவள்,


"அம்மா ஒரு தேவாரம் பாடுங்களன்.. மாலையெல்லாம் கட்டி சாமிக்கு போட்டிருக்கோம். தேவாரம் பாடலன்னா அது ஒரு குறையா போயிடும்.... பாட்டும் பாடினிங்கனா நிறைவாயே சாமியை கும்பிட்டு போயிடலாம்." என்றாள்.

"எல்லாமே நீதானே செய்யிற... தேவாரமும் நீயே பாடிவிடு." என்று விஜயா சொன்னதும். முதலில் தயங்கியவள், பின் என்ன நினைத்தாளோ!
சரி என்பதாய் தலையசைத்து விட்டு.

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் காலந்துனக்கு நான் தருவேன்.
கோலம்செய் துங்கக் கரிமுகத்து.
தூமணியே நீயெனக்கு.... சங்கத்தமிழ் மூன்றும் தா!"
என விநாயகரை முதலில் துதித்து, விநாயகர் அகவையை தன் இனிமை நிறைந்த குரலில் பண்னோடு மெய்மறந்து பாடினாள்.


அவள் குரல் கேட்டு வீட்டில் இருக்கும் அனைவரும் தமது வேலைகளை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு, சாமி ரூமின் முன்னால் ஆயராகினர்.

அகவையை பாடி முடித்தவள்,. கற்பூர தீபத்தினை திரும்ப காட்டிவிட்டு, விஜயா வணங்க கொடுப்போம் என திரும்பும் போது தான் வரிசையாக நின்றவளை கண்டாள்.




"பாடியே தொந்தரவு செய்திட்டேனா?" என சங்கடமாக தீபத்தை நீட்டியவாறு வினவ.

"என்னம்மா இப்பிடி கேட்டுட்டா... இதெல்லாம் தொந்தரவா? என்னை விட்டா நாள் பூரவும் உன்னை பாடவிட்டு கேட்டுட்டே இருப்பேன்... அவ்வளவு இனிமையா இருந்திச்சு" என ஈஸ்வரி பெருமையாக கூற...


"என்ன ஈஸ்வரி? எதுக்கு ஒருமையில சொல்லுற? நானும் இவ கச்சேரிய கேக்க இப்பவே தயார் தான்." என்று ஆராத்தியை தொட்டு கண்ணில் ஒற்றினார் ராங்கசாமி.


"பாட்டி.... தெய்வாணை அக்கா நீங்களும் எடுத்துக்கங்க" என்று தட்டினை நீட்டினாள்.

அதை தொட்டு வணங்கிவிட்டு, அவளையே பார்த்து நின்றவர்களிடம்,

"எதுக்கு இப்போ கூட்டம் கூடி நிக்கிறீங்க.? நான் என்ன வித்தையா காட்டறேன்?

இப்பிடி எல்லாரும் என்னையே குறுகுறுன்னு பார்த்தா.. எனக்கு வெக்கமா வருது... போய் உங்க வேலையை பாருங்க," என தனது உண்மை நிலையினை கேலிபோல் கூறினாலும், குறும்பை விடவில்லை அவள்.

வேண்டுமென்றே கால் விரலால் தரையில் கோலம் போட்டவளது போலியை கண்டுகொண்ட ஈஸ்வரி.


"அடி கழுதை! அதுன்னா என்னனு தெரியுமாடி?" என்றார்.


"ஈ... தெரியுதுல்ல... அப்புறம் எதுக்கு அந்த கறுமத்தை என்கிட்ட எதிர்பாக்கிறீங்க... நீங்க எப்பிடி என்னை பாராட்டினாலும் வெக்கப்பட்டெல்லாம் நான் நெளியமாட்டேன். வேணும்னா நடிக்கிறேன்."


"இவ இப்பிடித்தான்ம்மா! கொஞ்சம் கண்டிச்சு வைங்க... இல்லனா இவளை அடக்குறது ரொம்ப கஷ்டமாகிடும்." என்ற தெய்வானையினாலும் சிரிப்பினை அடக்க முடியவில்லை.

"எதுக்கு தெய்வானை? இப்போ தான் இது வீடு போலயே இருக்கு.. அவளை எதுக்கு கண்டிக்கணும்.? உனக்கு பிடிக்கலன்னா நீ போ!" என்ற.
ஈஸ்வரியின் பேச்சை கேட்ட மைலி.


"எப்புடி...? என் பாட்டி எனக்குத்தான் சப்போர்ட் பண்ணுவாங்க" என அவர் தோளில் சாய்ந்து,

"வவ்வவ்வவ்வ..... என விரலை வளைத்து பழிப்புக்காட்ட,
அதில் காண்டாகியவள்,


"அடிங்க்க..." என்றவாறு மைலியை துரத்தத்தொடங்கினாள் தெய்வானை.

இவர்களது விளையாட்டின் போது திடீர் என ஏதோ உறுத்துவது போலிருக்க.. ஓட்டத்தை விட்டுவிட்டு நின்றவள்

"சாரிக்கா.. நீங்க பேசிட்டிருங்க... சின்ன ஒரு வேலை இருக்கு.. அப்புறமா வறேன்." என்றவள், மற்றவர்களின் பதிலை எதிர்பாரமல், அறைக்குள் சென்று மறைந்தாள்.

சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தவள் முகம், திடீர் என கறுத்து.. வேலை என்று சொல்லிச்செல்லும் மைலியின் நடவடிக்கையில் இருந்த மாற்றத்தை கண்டுவிட்டு மற்றவர்கள் குழம்பினர்.



அதே நேரம் மாடிப்படிகளில் இருந்து, இறங்கி வரும் பேரனைக் கண்ட ரங்கசாமிக்கு ஏதோ ஒன்று புரிவதுபோல தான் இருந்தது.



சட்டென பேரனிடமிருந்து தன் பார்வையை பிரித்து தெய்வானையிடம் பதித்தார்.


அதே நேரம் தெய்வானையும் அவரைத்தான் குழப்பத்துடன் பார்ப்பதை அறிந்து, மற்றவர்கள் அறியாது தன் புருவத்தை உயர்ந்தி,
சைகையால் எதையோ வினவ.

அவர் புருவ அசையில் தோன்றிய கேள்வியை உணர்ந்தவளோ..

"இல்லை" என்பதாய் தலையசைத்தாள்.


'அப்புறம் என்ன?' என்பதாக குழம்பி போனார்.


"என்ன காலையிலேயே வீடு இவ்ளோ கலகலப்பா இருக்கு..? ரொம்ப பசிக்குது பாட்டி! என்ன சாப்பாடு?" என்றான்.

"வழக்கம் போல தான்டா! மூணு விதத்தில சாப்பாடு இருக்கு... என்ன வேணுமோ வந்து சாப்பிட்டுக்கோ" என அழைத்துச்சென்றார்.


"என்ன வைக்கட்டும் ஸ்ரீ?"

"ஏன் பாட்டி..! நீங்கல்லாம் என்கூட சேந்து சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சுல்ல?" என எதையோ எதிர்பார்த்தவாறு கேட்டவன்,


"இன்னைக்கு எல்லாருமே ஒன்னா சேர்ந்து சாப்பிடலாமா பாட்டி?" என்றான்.

தனக்கு சொந்தமான ஒன்றை, வலுகட்டாயமாக இன்னொருவர் பறிக்கும் போது இருக்கும் மனநிலை அவனிடம்.

இதுவரை இப்படி என்றுமே கேட்டதில்லை அவன். பசித்தால் ஈஸ்வரியிடம் பரிமாறச் சொல்லி, அமைதியாக சாப்பிட்டு விட்டு எழுந்து சென்று விடுவான்.
மற்றவர்கள் சாப்பிட்டார்களா? தூங்கினார்களா? என்று இதுவரை ஆராய்ந்ததில்லை.

இரவு நேரத்தில் அநேகமாக வெளி சாப்பாடு தான், மதியவேளைகளில் வீட்டிற்கு வருவதே இல்லை.
காலையில் மாத்திரம் தான் வீட்டுச் சாப்பாடு, அதுவும் அவசரம் என்றால் அது கூட இல்லை.


இன்று திடீர் என்று இவ்வாறே கேட்டதுமில்லாமல், பாவமாக பார்த்தவனையே கண்ட ஈஸ்வரிக்கு ஒரு புறம் சந்தோஷமாக இருந்தாலும், எதற்காக இந்த ஏக்கம் என்று புரியவில்லை.



" இது என்ன கேள்வி ஸ்ரீ? எல்லாரும் ஒன்னா சேந்து சாப்பிடலாம்.. வாங்கனு கேட்டா வந்திடப்போறோம். பாரு விஜயா கூட இங்கே தானே இருக்கா... அவளும் இன்னைக்கு நம்ம கூட தான் சாப்பிடப்போறா.." என்றவாறு ஸ்ரீயின் தலையை வருடியவர்,



"என்னங்க.... என்ன அங்க நின்னு என்ன வேடிக்கை? பேரன் தான் ஆசையா கூப்பிடுறான்ல... வந்து உக்காருங்க." என கணவனை அழைத்தவர்.


"விஜயா நீயும் வாம்மா.." என்று முன்பிருந்த இருக்கையினை அகற்றி, அவரை அழைத்தவர்,

"நான் மைலியையும் கூட்டிட்டு வறேன்." என்றவரை அதிர்வுடன் நிமிர்ந்து ஏறிட்டவன்,
பின்னர் என்ன நினைத்தானோ?
அமைதியாக இருந்துவிட்டான்..




இங்கு மைலியின் நினைவலைகளோ வேறொங்கோ சென்றநு.


ஆம்! அவள் அங்கிருந்து வந்ததற்கு காரணம் ஸ்ரீயே தான்.


தெய்வானை மைலியை அடிக்கத் துரத்தும் போது, எங்கு ஓடுவதென தெரியாமல் அங்கும் இங்கும் பார்வையை மாற்றும் போது தான் அவள் பார்வை வட்டததுக்குள் ஸ்ரீயின் பிம்பம் விழுந்தது.

பேன்ட் சர்ட் அணிந்து, கைகளை நெஞ்சுக்கு குறுக்கே கட்டி.. மாடிக்கு படிகளுக்கு இருபுறமும் பொருத்தியிருந்த மரத்திலான தடுப்பின் அடிப்பாகத்தில், ஒற்றை காலை வைத்திருந்தவன் பார்வையோ.. அங்கும் இங்குமாய் ஓடிக்கொண்டிருந்த மைலி மேலேயே நிலைத்தது.


அந்த பார்வையில் தெரிந்தது கோபமோ.. பொறாமையோ.. அருவருப்போ எதுவென்றே அவளால் இனங்கான முடியவில்லை.

ஆனால் அவன் கண்களில் தெரிக்கும் நெருப்பே சொன்னது.. தன்னை அவன் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நிச்சயம் பழிதீர்ப்பான் என்று.


ஏனோ அவன் முன் நின்று அவனது கோபத்தினை இன்னும் அதிகப்படுத்த அவளுக்கும் சற்றும் விருப்பமில்லை.

அதனால் தான் எதையும் வெளிக்காட்டாது அந்த இடத்திலிருந்து வந்துவிட்டாள்..



ஒன்று மட்டும் மைலிக்கு புரியவில்லை... எப்போது அந்த இடத்திற்க்கு வந்தான்..? ஒருவேளை நான் பாடும்போதே வந்திருப்பானோ?

எதற்காக அந்த அருவெருக்கும் பார்வை என்பது இப்போதும கேள்வியாகவே இருந்தது.

நேற்றைய நிகழ்வுகளை விருப்பமே இன்றி, சில குழப்பங்கள் தீர்பதற்காக கண்முன் கொண்டுவந்தவள்,

"நேற்றைக்கு தாபத்தில் நடந்து கொண்டவனை நான் ஏசியதற்கு கோபம் தானே படவேண்டும்.


ஆனால் இவன் பார்வையில் அருவெருப்பு அல்லவா தெறிக்கிறது? பார்வையில் மட்டுமல்ல.. அவன் உதட்டு வளைவு கூட அதைத்தானே பிரதிபலித்தது.

ஒருவேளை நான் எஜமானியிடம் வேலைக்காரி என்று வரை முறையில்லாது பழகுவதால் அப்படி ஆகியதோ?"

"ஆனால் இந்த வேலைக் காரியைத்தான் பொறுக்கி எடுப்போன் என்று சொல்லும்போது எங்கே போனது இவனது அருவெருப்பு..?" என்று தனக்குள் கேள்வி எழுப்பியவள்,

ஏனோ அவன் பார்வை தனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை கண்டுகொள்ளாமல், அதற்காண காரணங்களை தேடத்தொடங்கினாள்.

இதே வேறு ஒருவனாக இருந்தால், நிச்சயம் அவனை திரும்பி பார்த்து முறைத்திருப்பாள்.

இல்லை உன் பார்வைக்கு எரிந்து போக நான் ஒன்றும் கொக்கல்ல... என்றவாறு அதை உதாசினப்படுத்தி விட்டு, வேண்டுமென்றே இன்னும் இரண்டு சேட்டைகள் அதிகம் செய்து அவனது வயிற்றெரிச்சலையும் அதிகப் படுத்தியிருப்பாள்.

இப்படி ஒரு பார்வைக்கே தன் தோள்வியை ஒத்துக்கொண்டு ஓட மாட்டாள் மைலி.


ஏனோ மனம் பாரமாக இருந்தது. அதற்கான காரணமும் புரியவில்லை.


ஆனால் அதற்கு காரணம் அவன் தன்னை அருவருக்கும் பார்வை பார்த்தது என்பதை சரியாகக் கணித்தவள், தான் அதற்கு தேடிய காரணத்தை மட்டும் தவறாகக் கணித்துக்கொண்டாள்.


இப்படி அதே சிந்தைனையில் மைலி உலன்று கொண்டிருக்க,


மைலியை அழைத்துவர அவள் அறையினை திறந்து கொண்டு வந்த ஈஸ்வரி,

அவள் கட்டிலில் அமர்ந்து எதையோ தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருப்பதை கண்டவர், அவள் முன் சென்று நின்றதும் தான், கட்டிலை விட்டு சட்டென எழுந்துகொண்டு,



"பாட்டி...! நீங்.. நீங்க எங்க இங்க?" என தடுமாறித் தெளிந்தவள்,


"ஏன் பாட்டி இங்கல்லாம் வந்திங்க? கூப்பிட்டிருந்தா நானே வந்திருப்பேனே!." என்றாள்.


"என்ன செய்யிறது? தேடி வர வைச்சிட்டியே" என்று போலிக்கு சலித்துக்கொண்டவர்.


"அது சரி ஏதோ வேலையிருக்குனு அவசரமா ஓடிவந்த..., இங்க என்னடானா எங்கேயோ வெறிச்சு பாத்திட்டிருக்க.... இது தான் உன் அவசர வேலையா?" என்றார் கேலியாக.

"அது... அது பாட்டி! பாத்.. பாத்ரூம்..." என தடுமாறவும், அவள் தடுமாற்றத்தை கண்டு சிரித்தவர்.

"சரி சரி... புரிஞ்சுக்கிட்டேன் விடு!
சரி வா போகலாம்." என்றார்.


"எங்க பாட்டி?" என தயங்கியவாறு மைலி கேட்க.


"உன்னை என்ன பொண்ணு காட்டவா அழைச்சிட்டு போகபோறேன்னேன்.? இப்பிடி தயங்கிற? சாப்பிட வாம்மா! ஏதோ பல வருஷத்துக்கப்புறம் என் பேரன் எல்லார் கூடவும் இருந்து சாப்பிட ஆசை படுறான்.. வா போகலாம்!" என்று அவள் கையை பற்ற,.

பேரன் என்றதும், அவன் முன்னால் மீண்டும் போய் நிற்பதா? வேண்டாம் என நினைத்தவளாய்,

"இல்ல பாட்டி நான் வரல.. நீங்க சாப்பிடுங்க... உங்க பேரன் குடும்பத்தோட தானே சாப்பிட ஆசைப்பட்டாரு... நான் வேலைக்காரியம்மா நான் வரல" என்றாள் அவர் கையினை தளர்த்தியவாறு.

அவளது பேச்சினை கேட்ட ஈஸ்வரி.


"அடிச்சேன்னா பாத்துக்கோ! உன்னை யாரு இங்க வேலைக்காரியா பாத்தது?


நீயும் என் பேத்திதான்.. இந்த மாதிரி இனி பேசினேன்னா பல்லை கழட்டிடுவேன்." என கோபமாக பேசியவர்.


"நீயும் எங்களை உண்மையா பாட்டி தாத்தாவா நினைக்கிறதா இருந்தா வா! இல்லனா உன் இஷ்டம்" என கோபமாக கூறிவிட்டு போனவர் பேச்சை மூளைக்கு கொண்டு செல்வதற்கு மைலிக்கு சில வினாடிகள் பிடித்தது.



பின் அவர் கூறியதன் அர்த்தம் புரிந்திட,

"ஐயோ பாட்டி!" என அழைக்க, அவள் அழைப்பை காதிலேயே விழுத்தாது சென்றுவிட்டார்.


"இந்த வீட்டில எல்லாருமே ரொம்ப பிடிவாதக்காரங்களா இருக்காங்களே! எத சொன்னாலும் பெசுக்கு பெசுக்குனு கோபம் வந்திடுது.

மைலி உனக்கு வேற வழியே இல்லை.. போய் தான் ஆகணும்... ஆனா இந்த ஸ்ரீ இருப்பானே! என்ன செய்யலாம்?" என யோசித்தவள்.

'அமைதியா போய் அமதியாவே இருந்து சாப்பிட்டு வந்திடு.... அவன் முன்னாடி மத்தவங்க கிட்ட ரொம்ப உரிமை எடுத்து பேசாத... அப்புறம் வேலைக்காரி என்கிற லிமிட்டில இருன்னு வேற சொல்லிடுவான்.' என தனக்குள் முடிவெடுத்தவளாய்.
பாட்டியின் பின்னாடியே சென்றாள்.

ஈஸ்வரி நன்கறிவாள் மைலி இதைத்தான் செய்வாள் என்று.

எதுவும் அறியாதவள் போல வந்து தன் இருக்கையில் அமர்ந்தவள், தன் தட்டில் தனக்கு வேண்டியதை போட்டு சாப்பிட ஆரம்பிக்கும் போது தான், மைலியும் வந்து விஜயா அருகில் அமர்ந்து கொண்டாள்.




"கூப்பிடுறப்போ வந்தா தான் பரிமாறல் எல்லாம். யாருக்கு என்ன வேணுமோ அவங்களையே எடுத்து சாப்பிடச்சொல்லு தெய்வானை." என்று ஜாடையில் பேசிட,

:ஏன்... நீங்க பரிமாறினா கையில ஒட்டியிருக்க சாப்பாடு என் தட்டில விழுந்து, உன்க வயித்தில அடிச்சிடுவேன்னு பயப்பிடுறீங்களா?" என வாயாடத்தான் தோன்றியது. ஆனால் முன்னால் இருந்து நடப்பவையை வேடிக்கை பார்த்தவாறு சாப்பிடும் ஸ்ரீயினை நிமிர்ந்து பார்த்தவள்,


வந்த வார்த்தைகள் தொண்டையோடு அடைபட்டு நின்று கொள்ள, அமைதியாகவே இரண்டு இட்லியினை போட்டு, சாம்பாறையும் ஊற்றியவள் இருக்கையில் இருந்த சாப்பிட ஆரம்பித்தாள்.


"இங்கே தாரளமா சாப்பாடு இருக்கு, யாரும் மிச்சம் பிடிக்க வேணாம்..." என மீண்டும் ஜாடை பேசிய ஈஸ்வரி மேல் இம்முறை மைலிக்கு கோபம் வந்தது.


'ரொம்ப ஓவராத்தான் போய்டிருக்கு... ஏதோ முன்னாடி மூஞ்சூறு இருக்குனு அமைதியாவும், பொறுமையாவும் போறேன்... என்னை சோதிச்சிங்க.... அப்புறம் இந்த கருங்குரங்கு இருக்குனு கூட பாக்காம கடிச்சு திண்ணுடுவேன்.' என இம்முறையும் மனசுக்குள் தான் பாட்டியை அர்ச்சித்தவள்,

"இல்லை எனக்கிது போதும்..." என்ற வார்த்தையை தவிர வேறு எதுவும் வரவில்லை.


விஜயாவோ தன் தட்டிலிருந்த பொரியலை அவளுக்கு வைத்தவள்,

"சாப்பிடு மைலி.... எனக்கு இது நெஞ்சு கரிக்கும்... நீ வளர்ற பொண்ணு... இது உனக்குத்தான் தேவை" என்று தன் தட்டில் இருந்த பொரியல் எல்லாம் எடுத்து மைலி தட்டில் போட,



"எனக்கு எதுக்கு இவ்வளவு?" என சலித்துக்கொண்டாள் மைலி.


சரி அவர் திணித்த பொரியலை சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, ஈஸ்வரி இன்னும் இரு இட்லியை அவள் தட்டில் போட்டவர்,

"இந்த வயசு தான் கல்லை திண்டாடும் செரிக்கிற வயசு... ரெண்டு இட்லி எப்பிடி போதும்? சாப்பிடு..." என்று அவளை எல்லோரும் தாங்கிப்பிடிக்க,

இதை எல்லாம் இவங்க எனக்கு செய்யிறதை பாத்தான்னா, ஏதாவது இவன் சொல்லுவானோ? என ஸ்ரீயினை நிமிர்ந்து பார்த்தான்.

அவனும் தன் சாப்பாட்டினை உண்டவாறு அவளைத்தான் பார்த்திருந்தான்.

இம்முறை அவன் பார்வையில் எந்த வித வேறுபாடும் தெரியவில்லை. ஆனால் நொடிக்கொருமுறை அவளை பாரத்தவாறே உண்டவன், தட்டிலே தன் கையினை கழுவி விட்டு,


"நான் போயிட்டு வறேன் பாட்டி!" என்றவன்,

"ம்மா போயிட்டு வரேன்மா! தாத்தா..."என தலையசைத்து விட்டு. தெய்வானையிடம்,

"அக்கா பத்திரமா எல்லாரையும் பாத்துக்கங்கக்கா" என அனைவரிடமும் விடைபெற்றவன், மைலியிடம் எதுவும் கூறமல் போனது
என்றுமில்லா ஏமாற்றத்தை தந்தது.

தாவும். ...
 
Top