• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

15. அம்புத நல்லாள்

Sahana Harish

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
49
நிர்குணாவிடம் பேசியே ஆகவேண்டும் என்ற முடிவோடு அவள் வீட்டை அடைந்தனர் பிரதியும் மைத்ரேயனும்.

அங்கே இருந்த சூழ்நிலை அவர்களை அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல் செய்தது.

"என்னங்க எங்களை வரச் சொல்லிட்டு விளையாடுறீங்களா?"என்றார் வயதில் மூத்தவர் ஒருவர்.

"ஐயையோ அப்படி எல்லாம் இல்ல இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி கூட இங்கதான் இருந்தா பக்கத்துலதான் எங்கேயாவது போய் இருப்பா நீங்க உட்காருங்க பேசிக்கலாம்" என்றது நிர்குணாவின் தந்தை விஜயன்.

"இவ்வளவு நேரம் இங்கே இருந்த பொண்ணு இப்ப திடீர்னு காணாம போயிருக்கன்னா அதுக்கு என்ன அர்த்தம் இந்த கல்யாணத்துல அவளுக்கு சம்மதமில்லை என்று தானே அர்த்தம்?"

அஸ்வின் கதிரிடம்" சாரி சார் நாங்க இத எதிர்பார்க்கல ஆனா உங்க கிட்ட ஒரு விஷயத்தைச் சொல்ல மறந்து விட்டோம்"என்றான் பீடிகையுடன்.

"என்னத்த மறைச்சீங்க சீக்கரம் சொல்லு தம்பி" என்றது கதிரின் தாயார்.

தயங்கியவாறே"அதாவது ஆன்ட்டி என்னோட தங்கச்சி ஒரு பையன விரும்பினா ஆனால் அந்தப் பையன் இவள விரும்பல.. ஒருவேளை அவனைத் தேடி போயிருக்களோ என்னவோ".

"என்ன தம்பி இந்த மாதிரி பேசிட்டு இருக்கீங்களா இது தான் நீங்க கத்துக்கிட்ட மரியாதையா? உங்க தங்கச்சி இன்னொரு பையனை விரும்பி அதை பொண்ணு பார்க்க வந்தவங்க கிட்டயே சொல்றீங்களே உங்களுக்கே அசிங்கமா இல்லையா" என்று கடிந்துக் கொண்டார் கதிரின் தந்தை.

விஜயனோ" ஐயையோ சம்மந்தி அப்படி எல்லாம் பேசாதீங்க என் பொண்ணு ரொம்ப நல்லவ இங்க பக்கத்துல தான் போயிருப்பா இவன் எதையோ உளறிகிட்டு இருக்கான்"

"இத்தனை நாளா என்னை திட்டாத நீங்க இன்னிக்கி எவனோ ஒருத்தனால திட்டுறீங்க இதுக்கெல்லாம் காரணம் அவன் தான்" என திரும்பிய நேரம் மைத்ரேயன் செய்வதறியாது நின்றிருந்தான்.

அவனைப் பார்த்த அந்த நொடி வேக எட்டுகளில் அவனிடம் சென்றவன்" டேய் என் தங்கச்சி எங்கடா அவளை எங்க ஒளிச்சு வச்சு இருக்க நீதான அவ வேண்டாம்னு ஒதுங்கிப்போன இல்ல இப்ப எதுக்கு இந்த நல்ல காரியம் நடக்கும் போது இங்க வந்து நிற்குற அவளை என்ன பண்ண?" அவன் சட்டையை பற்றியபடி.

அவன் எதுவும் பேசாமல் இருக்கவும் பிரதியுமன் தான் அஸ்வினின் கையை தட்டிவிட்டு" அஸ்வின் என்ன செஞ்சுக்கிட்டு இருக்கனு உனக்கு புரியுதா இவன் உன்னோட தங்கச்சியை பார்க்க தான் இங்க வந்தான் அவ இங்கே இருந்து போனதுக்கு இவன் எந்த விதத்திலும் காரணம் கிடையாது"

"இவனைத் தவிர வேற யாரும் இருக்க முடியாது ஏன்னா அவளோட மொபைல் ரீச் ஆகல ஹாஸ்பிடல் போகல பின்ன வேற எங்க போயிருப்பா அவளை கடத்தி வைத்து விட்டு இங்கு வந்து நல்லவன் வேஷம் போடுகிறானா இவன்?"

அதேநேரம் அம்புத்ரா அங்கு வரவும் அதை கவனித்த அஸ்வின்" அம்மு குணா உன்கிட்ட ஏதாவது சொன்னாளா?" என பதட்டமாக.

"இல்லையே அஸ்வின் நானே இப்ப அவளை பார்க்க தான் இங்க வந்தேன் காலையிலிருந்து அவளோட மொபைல் ரீச் ஆகல..சரி இங்க வர போறமேனு நான் அதை பத்தி பெருசா எடுத்துக்கல என்ன நடந்தது தெளிவா சொல்லுங்க"

அவனும் அங்கு நடந்த அனைத்தையும் அவளிடம் சொல்லி முடித்தான்.

"டோன்ட் வொர்ரி அஸ்வின் நான் என்னன்னு பார்க்குறேன்"

அவள் சொன்னதும் அம்முவின் கையை பற்றி அவளை தனியே அழைத்துச் சென்றான் மைத்ரேயன்.. இதை கவனித்த பிரதியும் அவர்களுடனே சென்றான்.

"அம்மு ப்ளீஸ் ஏதாவது செய் நீதான் அவளை எப்படியாவது கண்டு பிடிக்கணும்..இத்தனை நாள் அவளைப்பற்றி புரிஞ்சுக்காம நான் பண்ணது எல்லாம் தப்பு தான் அவளை எப்படியாவது ஒரு தடவை நான் பார்த்து மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும்"

"ஏய் நீ என்னடா இவ கிட்ட ஹெல்ப் கேட்டுட்டு இருக்க நீயும் அவளும் ஒரே ஆபீஸ்ல தானே வேலை பார்த்துக்கிட்டு இருக்கீங்க.. உனக்கு தெரியாத ஆபீஸரா நீயே யாரிடமாவது கேட்க வேண்டியதுதானே இல்லை இவங்க அப்பா கிட்ட சொன்னாலாவது பரவாயில்லை இவ சின்ன பொண்ணுடா?"

அவன் என்ன சொல்வது என புரியாமல் முழிக்க,

அம்மு சுதாரித்தவளாய் "அது ஒன்னும் இல்ல பிரதி இப்ப இருக்க சூழ்நிலைல அவரால எதுவும் யோசிக்க முடியல அதான் என்னை பார்க்க சொல்றாரு.. நீங்க மைத்ரேயன பார்த்துக்கோங்க உங்களுக்கு தெரிஞ்ச சோர்ஸ் மூலமாகவும் தேடி பாருங்க நானும் அப்பா கிட்ட சொல்லி ஹெல்ப் கேட்கிறேன்" என்றவள் தனது காரை எடுத்து புறப்பட்டாள் அதி வேகத்தில்.

காரை எடுத்தவள் நேராக சென்றது கண்ட்ரோல் ரூமுக்கு தான்.. இவளின் வருகையை எதிர்பார்க்காத அவர்கள் பதறியபடி இருக்கையை விட்டு எழுந்தனர்.

" மேடம் நீங்க இங்க என்ன விஷயம்?" என்றார் ஒரு அதிகாரி வார்த்தையை முழுங்கியவாறு.

"எனக்கு ஒரு நம்பரை டிரேஸ் பண்ணனும் இப்ப எங்க இருக்குன்னு தெரியனும்"

"செஞ்சிடலாம் மேடம் நீங்க நம்பர் குடுங்க"

அவளும் நிர்குணாவின் என்னை அவரிடம் கொடுக்கவும் நொடியில் ஆரம்பமானது அவர்களை தேடும் பணி.

அவளின் பின் கடைசியாக அணைத்து இருந்த பகுதி பிரதியுமன் இருக்கும் அந்த பகுதி.. ஒருவேளை இவர்களை தேடி அவள் சென்ற இருப்பாரோ என்ற எண்ணம் மேலோங்க உடனடியாக அழைப்பு எடுத்திருந்தாள் அவனுக்கு.

" யுமன் நிர்குணாவோட நம்பர் உங்க ஏரியா கிட்ட தான் சுவிட்ச் ஆப் ஆகி இருக்குனு சொல்றாங்க எனக்கு என்னவோ அவ அங்கே இருப்பானு தோணுது"

அவர்களும் இவள் சொன்ன அடுத்த நொடி கிளம்பி வந்தனர் அப்பார்ட்மெண்டை நோக்கி.

இதில் கதிரின் நிலைதான் மிகவும் மோசம்..' நானா இந்த பொண்ண கேட்டேன் இவங்களா போய் பாருன்னு சொன்னாங்க இப்ப இவங்களே இன்னொருத்தன் கூட சேர்த்து வைக்க துடிக்கிறாங்க..இதை போய் நான் கேட்க முடியுமா? கேட்டா தான் என்ன என்னோட வாழ்க்கைல இது எனக்கு அசிங்கம் தானே!' என யோசித்தவன் அவரின் பெற்றோர்களை அவர்கள் வீட்டுக்குச் செல்லுமாறு பணித்து விட்டு மைத்ரேயன் பின்னால் தனது வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான் கதிர்.

அரக்கப்பரக்க 20 நிமிடங்களில் அவர்கள் வீட்டை அடைந்த நேரம் வாசலில் தனது மொபைலில் கேம் ஆடிக்கொண்டிருந்தாள் நிர்குணா.

அதைக் கண்டதும் ஆத்திரம் மேலோங்க நேராக அவளிடம் சென்ற மைத்ரேயன் " ஏன் இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க அறிவு இருக்கா உனக்கு?"வார்த்தைகள் அனலாய் விழுந்தன

தன்னவனின் குரல் கேட்டதும் அனிச்சையாய் மலர்ந்த முகம் அவன் கேட்ட கேள்வியில் நொடியில் சுருங்கியது.

" என்ன ரேயன் இப்படி கேக்கறீங்க உங்களுக்கு தெரியாதா?"

"அடிச்சேன்னா பாரு அங்க எல்லாரையும் உட்கார வைத்துவிட்டு இங்க என்னடி பண்ணிக்கிட்டு இருக்க?"

"வீட்டுக்கு வந்தவங்கள வாசல்ல நிக்க வச்சு பேசறது தான் உங்கள் எண்ணமா?" என்றதும் பிரதியுமன் தான் இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றான்..

அவர்கள் உள்ளே செல்லும் நேரத்தில் அம்புத்ராவும் வந்து சேர்ந்து கொள்ள அங்கே சில நொடிகள் அமைதியாகவே கழிந்தது.. அந்த நிசப்தத்தை கலைக்கும் விதமாக பிரதியுமன் " நிர்குணா ஏன் இப்படி பண்ண உனக்கு பிடிக்கலைனா பிடிக்கலைன்னு நேரடியா சொல்ல வேண்டியதுதானே ஏன் அப்பா அம்மாவை அசிங்கப்படுத்தி பார்க்கிற?"

"எனக்கு பிடிக்கலன்னு சொல்ல முடியல ஏன்னா எங்க வீட்ல ஒரு ஒருத்தரும் ஒவ்வொரு மனநிலை இருந்தாங்க நானும் எத்தனை நாள் தான் கல்யாணம் வேண்டாம்னு தட்டிக் கழிச்சிட்டு வரர்து.. அதனால அப்போதைக்கு சரின்னு சொல்லிட்டேன்" எனும் போது மைத்ரேயன் முறைத்ததை பார்க்க வேண்டுமே..

இதை கவனித்த பிரதியுமன் " அங்கு என்ன முறைப்பு வேண்டி கிடக்கு நீ அவள லவ் பண்றேன்னு சொல்ல மாட்ட பண்ணலனும் சொல்ல மாட்ட அவ கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னா மட்டும் உனக்கு கோபம் வருதா இது என்னடா நியாயம்? கண்ண நோண்டி கையில கொடுத்திடுவேன் பார்த்துக்க"

அவன் சொன்னதில் கோபம் கொண்டவன் எதையும் பேசாது சோபாவில் சென்று அமர்ந்தான்.
என்னவோ பேசி தொலைங்க என்பது போல்.

நிர்குணா தனது பேச்சை தொடர்ந்தாள்" சம்மதம் சொல்லி விட்டேனே தவிர என்னால அதை முழு மனசோட ஏத்துக்க முடியல இப்படியும் போகமுடியாமல் அப்படியும் போகமுடியாமல் மதில் மேல் பூனை மாதிரி காலையில வரையும் இருந்தேன்.. அப்ப அப்ப மனச மாத்திக்கிற குணம் எனக்கு இல்ல அண்ணா" என அழுத்தமாக இந்த கடைசி வரிகள் அவனுக்கு தான் என்பது மைத்ரேயன் அறியாமல் இல்லை.

" குணா உங்க வீட்ல உனக்கு எவ்வளவு பீரிடம் கொடுத்து இருக்காங்க நீ மைத்துவ தான் லவ் பண்றேன்னு உன்னோட பேரண்ட்ஸ் கிட்ட சொல்லி இருக்கலாமே அட்லீஸ்ட் என்கிட்டயாவது சொல்லி இருக்கலாம் இல்லையா.. இத்தனை நாள் நீ யார லவ் பண்றனு கேட்ட போது எதுவுமே சொல்லாம இப்ப இந்த மாதிரி பண்ணிட்டு வந்து இருக்க வீட்ல இருக்கவங்க நிலையை யோசிச்சியா?" என்றது அம்புத்ரா.

"என்ன அம்மு இப்படி பேசுற உன்கிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன் இந்த லூசு என்கிட்ட ஒரு முடிவ சொன்னா தானே நான் என் அப்பா அம்மா கிட்ட பேச முடியும்..எனக்கே முடிவு தெரியாத போது உன்கிட்ட சொல்லி என்ன செய்ய அண்ட் நான் லவ் பண்றேன் கல்யாணம் பண்ணி வையுங்க சொல்றேன்னு வச்சிக்கோ இவர் கிட்ட வந்து கேட்டா இவர் சரின்னு சொல்லுவாரா இல்ல வேண்டாம்னு சொல்லுவாரானு தெரியாம என்னால எங்க அப்பாவ அசிங்கப்படுத்த முடியாது"

" ஆமா இப்ப மட்டும் அவங்க ஜாலியா டான்ஸ் ஆடிட்டா இருக்காங்க போவீயா அங்க எல்லாரையும் வர சொல்லிட்டு இங்க வந்து கதை பேசிட்டு இருக்கா" என்றது மைத்ரேயன்.

" உன்னை லவ் பண்ணா இப்படி தான் ஓடி வரணும்.. என்னால அந்த அம்மாஞ்சி கதிரலாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது"

அவ்வளவு நேரம் அமைதியாக வாசலில் நின்று கேட்டு கொண்டு இருந்த கதிர் நிர்குணா சொன்ன வார்த்தைகளில் பொறுமை காற்றோடு கரைய " ஏய் யார பார்த்து அம்மாஞ்சினு சொல்ற?"என்றான் கோபமாய்.

கதிரை அங்கே எதிர்பார்க்கவில்லை என்பது அவர்கள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
" நான் ஒரு இன்ஸ்பெக்டர் என்னையே நீ இப்படி பேசுற? நான் உன்னை பார்த்து கல்யாணம் பண்ணிக்கிறேன்னு எப்ப சொன்னேன்? ஓடி வந்தியே அதை நேத்து நைட் வந்து தொலைய வேண்டியது தானே நீயெல்லாம் ஒரு டாக்டர் இப்படி தான் உன்னை நம்பி யாராவது வந்தாங்கன்னா இப்படி தான் காரணம் சொல்லாம பாதியிலேயே வந்துடுவீயா?" என்றவனது முகத்தில் கோபம் கொப்பளித்தது.

அவள் செய்தது தவறு என்பது நால்வரும் உணர்ந்து தான் இருந்தனர்.. அதனால் தான் கதிர் பேசுவதற்கு பதில் சொல்ல முடியாமல் அமைதி காத்தனர்.

அம்புத்ரா" சாரி கதிர் இது எல்லாம் என்னால தான் இவ என்கிட்ட ஒருத்தர லவ் பண்றேன் அவர் ஓகே சொன்னதும் இன்ட்ரோ பண்றேன்னு சொன்னா பட் அது மைத்ரேயன்னு எனக்கு தெரியாது.. இவளும் ரீசண்டா இவர பற்றி எதுவும் பேசல சோ நான் தான் தப்பு பண்ணிட்டேன்" என மன்னிப்பு வேண்டும் தோரணையில்.

"மேடம் தப்பா நினைச்சிக்காதீங்க இந்த விசயத்துல என்னால என் கோவத்தை கண்ட்ரோல் பண்ண முடியல.. அட்லீஸ்ட் இனிமேல் எனக்கு நல்லது செய்யுறேன்னு இந்த மாதிரி எதுவும் செய்யாதீங்க" என்றவன் மற்றவர்களை முறைத்து விட்டு சென்ற நேரம் எதிரே வந்த ஒரு பெண் மேல மோத "ஏய் பார்த்து வர மாட்ட? கண்ணு என்ன பின்னாடியா இருக்கு.. இரீடேடிங்"என அவள் முகத்தை கூட சரிவர பாராமல் நொடியும் நிற்காது தனது வண்டியோடு சீறி பாய்ந்தான் தனது இல்லம் நோக்கி.

அந்த பெண்ணோ " அரை மெண்டலா இவன் என் மேல வந்து இடிச்சிட்டு என்னையே திட்டிட்டு போறான் என்கிட்ட மாட்டாமயா போவான் இருக்கு அவனுக்கு" என கறுவி கொண்டு சென்றாள் அவள் இல்லத்திற்கு.

கதிர் பேசி சென்ற பிறகு மறுபடியும் நிசப்தத்தை சூடி கொண்டிருந்தது பிரதியுமனின் இல்லம்.

பெருமூச்சு ஒன்றை பிடித்து பேச ஆரம்பித்தது அம்மு தான்" இப்படி பேசாம இருந்தா என்ன செய்வதாக உத்தேசம்?"

" நான் வீட்டுக்கு கிளம்புறேன்" இதை சொன்னது வேற யாராவது இருக்கும் நிர்குணா தான்.

அவள் அவ்வாறு சொன்னதும்" ஏய் என்ன நினைச்சுகிட்டு இருக்க உன் மனசுல? நீயா வருவ லவ்வ சொல்லுவ இப்போ வீட்டை விட்டு வெளியே வந்து திரும்பிய வீட்டுக்கே போறேன்னு சொன்னா உன்னை என்னனு நான் எடுத்துக்கறது?" இதை கேட்டது மைத்ரேயன்.

" இங்க பாருங்க நீங்க என்னை லவ் பண்றதும் பண்ணாம இருக்கறதும் உங்களோட இஷ்டம்..ஆனா என்னோட மனசுல நீங்க மட்டும் தான் இருக்கீங்க என்னால வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது..அதுக்காக உங்க கிட்ட கெஞ்சிகிட்டு இருக்கணும்னு இனி எந்த அவசியமும் எனக்கு இல்லை" என சொன்னவளின் கண்களில் தான் அப்படி ஒரு கனல்.

அதை கண்ட பிரதியுமன் எப்படியாவது சமாதானம் ஆகட்டும் என எண்ணியவனாய் அம்புத்ராவை அழைத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான்..

" யுமன் என்ன செய்றீங்க அவங்க ரெண்டு பேரையும் தனியா விட்டுட்டு வரது எனக்கு நல்லதா படல"

" அம்பு இப்ப இருக்க சிசுவேஷன்ல அவங்கள தனியா விட்டுட்டு வர்றதுதான் எனக்கு சரியா படுது எத்தனை நாள்தான் இந்த மாதிரி பேசிக்கிட்டு இருக்க முடியும் உனக்கும் எனக்கும் இருக்க காதல் சொல்லி புரிய வேண்டியது இல்ல ஆனா அவங்க ரெண்டு பேர் மனசுல இருக்குறது பேசினா மட்டும் தான் சரியாகும்.. எப்படியாவது அடிச்சு புடிச்சு சேரட்டும் விடு.. ரெண்டு பேர்ல யார் மண்டை உடைந்தாலும் பரவால்ல நாம போலாம் வா"

" ஆனா அவங்க ரெண்டு பேரும் பாவம்"

" அடியே உனக்கு மனசாட்சி ஒன்னு இருக்கா இல்லையா?" அவன் கேட்டதும் திருதிருவென முழித்தாள்.

" என்ன சொல்றீங்க நீங்க எனக்கு எதுவும் புரியல"

" உனக்கும் எனக்கும் நிச்சயம் கூட முடிஞ்சிருச்சு ஆனால் இதுவரைக்கும் உருப்படியா ஒரு லவ் சீன் கூட இல்லை நீயும் நானும் இப்படியே எத்தனை நாள் சுத்திக்கிட்டு இருக்க முடியும் நானும் பாவம் தானே?" என்ற தோனியில் முத்துப் பற்கள் தெரிய கலகலவென சிரிக்க ஆரம்பித்தாள்.

அதன்பின் அவர்கள் இருந்த சூழ்நிலை மறந்து போனது இருவர் மட்டும் இருக்கும் உலகத்தில் இருப்பதை உணர்ந்தனர் உடலோடு உரசுவதால் மட்டுமே பெண்மை தூண்டுமா என்ன? சிறு விரலின் ஸ்பரிசம் கூட அவளின் பெண்மையை கிளர்ச்சியடையச் செய்யும்.. அவனோடு அவள் விரல்கள் கோர்த்து கொண்டிருந்த நேரம் இத்தனை நாளும் எங்கே ஒளிந்து இருந்தாய் எனக் நாணத்தை வசை பாடிக் கொண்டிருந்தாள் மனதிற்குள் தான்.

அவனின் நிலையும் இதில் ஒத்துப்போவதாக இருந்தது எந்த பெண் மீதும் இல்லாத அந்த ஒரு மயக்கம் இவளிடம் மட்டும் ஏன் வந்தது என்று எவ்வளவு யோசித்தும் அவனால் அறிய முடியவில்லை இவளே வாழ்க்கை என்று பார்த்த அந்த நொடி எப்படி என்னால் தீர்மானிக்க முடிந்தது என்று இன்றளவும் விளங்கவில்லை..

வெளியே வந்தவர்கள் எவ்வாறு மறுபடியும் இல்லத்திற்கே சென்றது தான் புரியாத ஒன்று.

இருவரும் வெளியே சென்ற பிறகு மைத்ரேயன் சிறிது நேரம் அவளை முறைத்து பார்த்தபடி நின்றிருந்தான் திடீரென்று அவள் பாதம் பணிந்து " தயவுசெஞ்சு என்ன கல்யாணம் பண்ணிக்கோ நீ இல்லாம என்னால வாழ முடியாது இத்தனை நாள் உன்னை ஒதுக்கி வைத்துதற்கு காரணம் உனக்கு எதுவும் ஆகக்கூடாது என்ற எண்ணம் தான் இனி நீதான் என்னை காப்பாத்தனும்.. ப்ளீஸ் என்னை ஏற்றுக்கொள் ஐ லவ் யூ ஐ லவ் யூ சோ மச்.. என்னை கண்கலங்காம பார்த்துக்கிறது இனி உன்னோட பொறுப்பு" என்றது அவள் ஒரு நொடி அதிர்ந்தாலும் மறுநொடி கலகலவென சிரிக்க ஆரம்பித்தாள்..

அவள் பதில் சொல்லும் வரை அவள் காலடியை விட்டு எழுந்திருக்க மாட்டேன் என்று அவன் அடம் பிடிக்கவும் இவளுக்கு அவனுடன் சிறிது விளையாடிப் பார்க்க எண்ணம் வந்தது" இங்க பாருங்க இந்த மாதிரி சிம்பதில வர லவ் எனக்கு வேண்டாம் மனசார நீங்க என்கிட்ட வரணும்.. சோ நல்லா யோசிங்க இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் பரவாயில்லை"

"ஐயையோ இதுக்கு மேல என்னால தாங்க முடியாது இதுக்கு மேல சிங்கிளா இருந்தா என் மனசாட்சியை என்ன காரித்துப்பும்.. எங்க அம்மாக்கு இவ்வளவு பெரிய பையன் வீட்ல இருக்கான் என்ற எண்ணம் சுத்தமாக இல்லை எனக்கும் கல்யாணம் பண்ணி வச்சா தானே நானும் குடும்பம் குட்டின்னு சந்தோஷமாக இருக்க முடியும்.. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா நிச்சயம் வரை பண்ணிருக்காங்க அவங்க ஆனால் நம்ம கதை அப்படி இல்லை அதனால என்னை ஏற்றுக்கொள் ப்ளீஸ்"

" நான் கொஞ்சம் யோசிச்சு சொல்றேன் எனக்கு வழி விடுங்க நான் வீட்டுக்கு போகணும்" என்று கிளம்ப எத்தனித்தவளின் எதிரே வெளியே சென்று இருவரும் வந்து நின்றனர்..

இருக்கும் சூழ்நிலை மறந்து வேறொரு உலகத்தில் இருப்பதாய் உணர்ந்து கொண்டு இருக்கிறார்களோ இவர்கள் என பார்க்கும் எவரும் கண்டு கொள்வர்.. திரும்பி மைத்ரேயனை பார்த்தவள் " நீங்க என்ன விரும்புவதை சொல்லி புரிய வைக்கணும்னு எந்த அவசியமும் இல்ல உங்க கண்ண பார்த்தா உடனே எனக்கு புரிஞ்சுது.. அப்பா அம்மாவ கூட்டிக்கிட்டு சீக்கிரம் என்ன உங்க கூட கூட்டிட்டு வந்துடுங்க" என வெட்கத்தில் சொல்லி செல்லும் அவளை தடுத்தவன் இடம் பொருள் பாராமல் இதழோடு இதழ் பொருத்தி இருந்தான்.. இழுத்த இழுப்பில் நிர்குணா பிரதி மேல் மோதி செல்ல அப்பொழுதுதான் இருக்குமிடத்தை கவனித்தான் அம்முவை சொடுக்கிட்டு அழைத்தவன் அங்கே இருவர் நின்ற கோலம் அதிர்ச்சியை தந்தது" டேய் நாங்க இரண்டு பேரும் இங்க இருக்கோம்டா" என்றதும் அவனை தள்ளி விட்டு தலை குனிந்தவாறு ஓடி விட்டாள் நிர்குணா.

"பாவி பயலே ஒரு மனசாட்சி வேணாம் நடு ஹால்ல அதுவும் இரண்டு உருவம் இருக்கறத கூட மறந்துட்டு அப்படி என்ன ரொமேன்ஸ் உனக்கு?"

இதற்கு அவன் எதாவது பேசுவான் என எதிர்பார்த்த அம்புத்ரா மைத்ரேயன் செய்த செய்கையில் "அடச்சே லூசுங்களா" என கத்தியே விட்டாள்.

தொடரும்..
 
Top