• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

15. உறவாக வருவாய.?

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
669
"டேய் என்னடா பாத்திட்டிருக்க? அவளுக்கு எவ்ளோ தைரியமிருந்தா உன்னையே எதிர்த்து பேசிட்டு போவா, போய் பிடிங்கடா அவளை” என ஒருவன் ஆவேசமாக எழ,


வேண்டம் என்பதாக கையமர்வில் தடுத்து,
திமிராக சென்றவளையே வித்தியாசமாக பார்த்து உதட்டினை ஓர் பக்கமாக இழுத்து புன்னகைத்தவன்..


"இன்னைக்கு தானே ஆரம்ப நாளே! வந்த அன்னைக்கே பாப்பாவ பயமுறுத்துறது தப்பு..
நாளையில இருந்து ஆரம்பிப்போம்" என சண்கிளாஸினை கைகளில் சுற்றியவன் மூளையோ நாளைய திட்டத்ததை தீட்டத்தொடங்கியது.


அன்றைய நாள் இலக்கியாவிற்கு எந்தவித பிரச்சினையும் இல்லாது நகர்ந்துவிட.. மறுநாள் அதையே எதிர்பார்த்து கல்லூரி வளாகத்திற்குள் கால் பதித்தவள் கைகளை பற்றிய ஷீலா,


"லேட்டா போனாலும் பரவாயில்ல.. வா இந்த பாதையினால போவோம்" என்றவள் பயம் புரிந்தவள்,


"ஏன்டி நேத்தைக்கு மாதிரி இன்னைக்கும் வம்பு பண்ணுவாங்கன்னு பயப்பிடுறியா? அது தான் நேத்தே பதிலடி குடுத்துட்டோமோ, இனி நம்மகிட்ட வம்பு வைக்க மாட்டாங்க வா!" என்றாள்.


"அம்மா தாயே! நீ தைரியமான ஆளுதான். எனக்கு உன்னளவுக்கு தைரியமில்ல.. நேத்தைக்கு நீ பெரிய நக்கீரன் மாதிரி பேசினதுக்கே, என் உடம்பு ஷேக்காகிடிச்சு. மறுபடியும் அதே மாதிரி ஆச்சுன்னா.. பப்பிளிக்கில உச்சா போயிடுவேன்மா.
என் மானம் உன் கையில தான் இருக்கு, அதனால ப்ளீஸ்..!" என இழுத்துக்கொண்டு மாற்று வழியில் சென்றாள்.


கால்லூரி ஆரம்ப நாட்கள் என்றதனால் இடையிடையே தான் பாடங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
ஷீலாவும் இலக்கியாவும் தங்களுக்கான உலகில் சஞ்சரித்து கதை பேசிக்கொண்டிருக்க, திடீரென வகுப்பறை ஏனோ அமைதியாகி இருவரது பேச்ச மாத்திரமே எதிரொளித்து அடங்கியது.


நன்றாக பேசிக்கொண்டிருந்தவர்கள் தீடீரென்று அமைதியானதும், வகுப்பிற்கு ஆசிரியர் தான் வந்துவிட்டாரோ என நினைத்தவாறு திரும்பியவர்கள் அங்கு நின்ற கும்பலை கண்டதும் பயந்தே போயினர்.


அது வேறு யாருமல்ல.. அந்த ராஜுவும் அவனது கூட்டத்தாரும் தான்.


"இவங்க எதுக்குடி இங்க வந்தாங்க?" என ஷீலா பயந்து போய் கேட்க,

பெஞ்ச் மறைவில் அவள் கையினை அழுத்தி பிடித்து அமைதியா இரு! என்பதாக சைகை செய்த இலக்கியா.. எதையும் முகத்தில் பிரதிபலிக்காது எதார்த்தமாக அமர்ந்திருந்தாள்.


"ஏய் என்னடி நடக்குதிங்க? ஏன் இவங்கள பாத்ததும் எல்லாருமே இவ்ளோ சைலண்ட் ஆகிட்டாங்க?" என அருகினில் அமர்ந்திருந்த ஒருத்தி சற்று தெளிவாகவே வினவ,


"ஊஸ்.... சத்தமா பேசாத.. காதில விழுந்தா அப்புறம் என்னாகுமோ!
இவங்க சீனியர் பசங்க! இந்த காலேஜ்லயே இவன் தான் எல்லாமே.. இவன் வைச்சது தான் சட்டம், அதை யாராவது மீறினா மறுநாள் பசங்கன்னா அவனோட மூஞ்சிமேல இவனோட முத்திரையிருக்குமாம், பொண்ணுகளா இருந்தா வேற மாதிரி டீல் பண்ணுவாங்களாம்,


அதையும் மீறி பெரியவங்க யாராவது தட்டிக்கேட்டா யாரா இருந்தாலும் அவங்களையும் கேள்வி கேட்காத மாதிரி பண்ணிடுவானாம். அது லெக்சரா இருந்தாலுமே!, அதனால யாரும் இவனை கண்டுக்கிறதில்ல" என்றாள்,


அவள் கூறியவற்றை விழிவிரித்து கேட்ட மற்றைய பெண், "உனக்கு இது எப்பிடி தெரியும்?" என்றாள்.


"மாமா பொண்ணு இவனோட கிளாஸ் தானே! அவதான் சொன்னா," என்று விட்டு அமைதியாகிவர்கள் பேச்சு அவர்கள் காதுகளிலும் தெளிவாகவே விழுந்தது.


"இவங்க பேசுறத கேட்டியா? எனக்கு பயமா இருக்குடி! நாம வேற எதுவும் தெரியாம நேத்து வம்பு வளர்த்துக்கிட்டோம். இப்போ என்னாகப்போதுதோ!" என குசுகுசுத்தவளை,


"கொஞ்சம் அமைதியா இரு ஷீலா" என அவளை அடக்கிவிட்டு அவன்புறம் திரும்பினாள்.
அதே நேரம் அவன் பார்வையும் அவளிடம் தான் இருந்தது. உதட்டை ஓரம் இழித்து குறுநகை புரிந்தவன்,


"ஹாய் கைய்ஸ்.... நான் இந்த காலேஜோட சீனியர். பேரு ராஜு....! இதுக்குமேல என்னை பத்தி அறிமுகம் தேவையில்லன்னு நினைக்கிறேன். ஏன்னா நீங்க என்னை கண்டதும் அமைதியாகினதிலேயே தெரியுது.

இருந்தும் ஒரு சிலருக்கு என்னை பத்தி சரியா தெரியல" என்று இழக்கமாய் இலக்கியாவை பார்த்தவன்,


"எனக்கு சுயகௌரவம் ரொம்பவே அதிகம். என்னை யாராச்சும் அவமான படுத்திட்டா, அதுக்கு தகுந்தா மாதிரி பதிலடி குடுத்தே தீருவேன். அது அவங்க வாழ்க்கையில மறக்க முடியாத அளவுக்கு இருக்கணும் என்கிறதிலயும் உறுதியா இருப்பேன்.


நீங்க எல்லாரும் நியூ ஸ்டுடன்ஸ் தானே! எந்த காலேஜ்லயும் பர்ஸ்ட் இயர் ஸ்டுடன்ட்னா, சீனியர் ஸ்டுடன்ஸ் ரேக்கிங்க் பண்ணுவாங்க தானே...


நானும் இங்க ஒரு பொண்ணுகிட்ட சீனியர் என்கிற முறையில ஒன்னு செய்ய சொன்னேன். ஆனா அவ நீ சொல்லுறத செய்ய முடியாது, உன்னால முடிஞ்சதை பாருன்னு அவமான படுத்திட்டா,


சின்ன பொண்ணு தான். போனா போகட்டும்ன்னு விட்டிடலாம், ஆனா அதை அப்பிடியே விட்டுட்டா.. இத்தனை நாள் இந்த காலேஜ்ல எனக்குன்னு இருக்குற மரியாதை என்னாகிறது? நாளைக்கு இவளை போல எல்லாருமே எதிர்த்து பேசிடுவாங்களோன்னு என் தன்மானம் இடம் தரல்ல.


அதனால நாலுபேரு முன்னாடி செய்ய மாட்டேன்னு சொன்னவ இப்போ உங்க எல்லார் முன்னாடியும் செய்யணும். இல்லன்னா நான் செய்வேன்" என்றதும் அந்த கிளாஸே அது யாரென தெரியாது சலசலப்பானது.


ஷீலாவுக்கோ முழி பிதுங்கி வெளியே வந்துவிடும் போலானது. இலக்கியாவிற்கும் உள்ளே நடுக்கமிருந்தாலும் அமைதியாய் அமர்ந்திருந்தாள்.


'ஹூம்.... இன்னமும் திமிரு குறையலல்ல' என தனக்குள்ளே சொல்லிக்கொண்டவன் நேராக அவள் பெஞ்சிற்கு எதிரில் நின்றதும் மற்றைய மாணவர்களது பார்வை இலக்கியா மீது படிந்து அடுத்து நடக்கவிருக்கும் விபரீதத்தை நினைத்து கதிகலங்கிப்போனது.


"எந்திரி" என்றான் திமிராக. அவன் சொல்லிற்கு இணங்கி எழுந்து நின்றவள் கூடவே ஷீலாவும் பயந்தவாறு எழுந்து கொள்ள,

"உன்னை இல்ல. நீ உக்காரு" என்றவன், "இப்போ கூட ஒன்னும் கெட்டு போகல, நீயா லவ் யூ சொல்லி, கிஸ் பண்ணா உன்பக்க சேதாரம் குறைவா இருக்கும், இல்ல நானே பண்ணேன்னு வையி.. ரொம்ப வருத்தப்படுவே!" என்றவன் பேச்சுக்கு இளகாது,


"ஸாரி அண்ணா.. இதை தவிர வேற எதாவது சொல்லுங்க செய்றேன். இது என்னால முடியாது" என அவளும் திமிராகவே கூற,


"அப்பிடியா...! இதை தவிர எது வேணாலும் செய்வியா? அப்போ உன் ட்ரெஸ கழட்டு" என்றான் கூச்சமே இல்லாது.


அவன் அவ்வாறு கூறியதும் அவன் கூட்டத்தார் பக்கென்று சிரித்துவிட, இலக்கியாவோ அவனை எரிப்பது போல் பார்த்தவள்,


"ஒருபொண்ண இந்த மாதிரி நிக்க வைச்சு பாக்கணும்ன்னு ஆசையிருந்தா.. உன் அம்மாவ அம்மணமாக்கி பாக்கவேண்டியது தானே! அதுக்கு ஏன் என்ன சொல்ற," என அவளும் நிமிர்வாக கேட்டாள்.


"என்னடி.. வாய் ஓவரா போகுது" என ஆவேசமானவன் அவள் பிடரி முடியை கொத்தாகப்பிடித்து அத்தனை பேர் முன்பும் உதட்டை முற்றுகையிட வந்தவன் செயல் புரிந்து போனவளாய் இசைந்து கொடுக்காது திமிறியே தன்னை அவன் கையிலிருந்து விடுவித்துக்கொண்டு, ஆத்திரத்தில் பளார் என அவன் கன்னத்தில் அறைந்து.

"மரியாதையா வெளிய போ" என விரல் நீட்டி எச்சரித்தாள்.

இதை அவன் எதிர்பார்க்கவில்லை. இதுவரை யாருமே அவனை இந்தளவிற்கு அவமானப்படுத்தியதில்லை.
ராஜூ என்ற பெயரை கேட்டாலே கொலை நடுங்கி பயந்து போவர்கள், இல்லையே ஒதுங்கிப்போவார்கள்.


ஆனால் இவள் பயப்படாமல் எதிர்த்து நின்றதுமில்லாமல், கன்னத்தில் அறைந்ததும் அவளது கைவிரல்களின் தடத்தினை தடவியவாறு எல்லோரையும் முகத்தினையும் திரும்பி ஏறிட்டவனுக்கு அவர்கள் அத்தனை பேரின் பார்வையும் தன்மேல் இருந்ததும் அவமானமாகிப்போனது.


உடனே தன்னை அவளிடம் திருப்பிக்கொண்டவன்,

"அறைஞ்சு இத்தனை பேரு முன்னாடி அவமான படுத்திட்டல்ல.. இதுக்கு நீ ரொம்பவே வருத்தப்படுவ.. அப்போ ஏன் இவன்கிட்ட வைச்சிக்கிட்டோம்ன்னு வாழ்க்கை பூராவும் கலங்க வைக்கல.. நான் ராஜூ இல்லடி!" என்றவன் அதற்குமேல் அங்கு நிற்காமல் நகர்ந்து விட்டான்.


அதன் பின்பு அவள் அவனை அந்த காலேஜில் பார்க்கவே இல்லை. தொல்லை விட்டதென்று இருந்தவளுக்கு, சிலநாட்கள் கடந்து.. அவன் தந்தை இறந்து விட்டதாகவும், அவரது பொறுப்புக்கள் எல்லாவற்றையும் படிப்பை விட்டுவிட்டு அவனே பார்த்துக்கொள்வதாகவும் அரசல் புரசலாக தகவல் கசிந்தது.


கிட்டத்தட்ட அந்த சம்பவம் நடந்து ஒன்றரை வருடங்கள் கடந்த நிலையில் சென்ற வாரம் அவளது கல்லூரியில் இருந்து மூன்று நாட்கள் ட்டூர் என்று ஏற்பாடாகி இருக்க இலக்கியாவும் சென்றாள்.


வழக்கம் போல் குரூப் குரூப்பாக பீச்சில் ஆட்டம் போட்டவர்கள் விளையாட்டு சுவாரஸ்யத்தில் இலக்கியாவை கடலில் தள்ளிவிட்டார்கள்.


தொப்பலாக நனைந்தவளுக்கு ஈர உடை உடலோடு ஒட்ட அங்கு நின்றவர்கள் முன்பு சாதாரணமாக நிற்க முடியாது சங்கடமயிற்று.


எப்படி நிற்கமுடியும்? அவளோடு கல்வி பயிலும் ஆண் மாணவர்களும் அல்லவா அங்கு விளையாடிக் கொண்டிருந்தனர்.



"ஏய் ஷீலா என்கூட வரியா? நாம ரூம்க்கு போய் ட்ரெஸ் சேஞ் பண்ணிட்டு வருவோம்" என்க.


"ஏன்டி அடிக்கிற காத்துக்கு அதுவா காஞ்சிடும், எல்லாரும் போறப்பவே போய்க்கலாம் வா!" என்றாள்.


"எரும! என்னோடது ஓய்ட் ட்ரெஸ்டி! கண்ணாடி போல எல்லாமே தெரியும்" என்றதும் தான் அவளை ஆராந்தாள். அவள் சொன்னது போல இருக்க.


"இரு மேடத்திட்ட சொல்லிட்டு வரேன். அப்புறம் தேடப்போறாங்க" என கூறிச்சென்றவள் சொன்னது போல் அவரிடம் அனுமதி வாங்கிவிட்டு அந்த ஹோட்டலோடு இருந்த லாஜ்ஜிற்கு விரைந்தனர்.


ஆம் அது அவர்கள் பிக்னிக் வந்த இடத்தில் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட லாஜ்ஜே தான். ஒரு அறைக்கு ஐந்து நபர்கள் என்று ரூமை பகிர்ந்திருந்தனர்.


ரூமிற்கு வந்தவள் பாத்ரூம் சென்று கடல் நீர் போக நன்கு குளித்து, உடை மாற்றி வந்தவள்,


"ஷீலா ஈர ட்ரெஸ்ஸோட இருந்ததனாலயோ என்னமோ ரொம்ப குளிர்ற மாதிரி இருக்கு. போறதுக்கு முன்னாடி காஃபி குடிச்சிட்டு போகலாம்டி" என கீழே வந்து அங்கிருந்த டேபிலில் காஃபி சொல்லிவிட்டு அமர்ந்திருந்தவள்,


"செம ஜாலியா இருக்குல்ல. நாளையோட பிக்னிக் முடிஞ்சு வீட்டுக்கு போகப்போறோம். ரொம்ப கவலையா இருக்குடி!" என்றாள் நடக்கப்போகும் விபரீதம் புரியாது.




காஃபி வந்ததும் பேசிக்கொண்டே பருகியவள், தலைக்குள் எதுவோ செய்வதுபோல் இருந்தது.

ஒரு கட்டத்துக்குமேல் தாங்க முடியாது நெற்றிப்பொட்டில் அழுத்தி அதை சரிசெய்ய பார்த்தாள். அது சரிவராது போகவே,


"ஷீலா எனக்கு எதுவோ செய்யுதுடி! என்னை ரூம்ல விட்டிட்டு, நீ போய் மேம்கிட்ட தலைவலில நான் தூங்குறேன்னு சொல்லிடுறியா?" என்றாள்.


"என்னடி சொல்லுற? என்ன செய்யுது?" என பதட்டமானாள்.


"லூசு பயப்பிட ஒன்னுமில்ல, கடல் தண்ணி தான் எனக்கு ஒத்துக்கல. தலைக்குள்ள கிறுகிறுன்னு வருது, படுத்தா சரியாகிடுமான்னு தோணுது.


மத்தவங்களுக்கும் இதை சொல்லி அவங்க சந்தோஷத்த கெடுத்திடாத.. தலைவலில தான் தூங்குறேன்னு சொல்லு.

அதுக்கு முன்னாடி என்னை ரூம்ல விட்டிடு" என கூறி அவள் தயவில் பெட்டில் விழுந்தவள் "ரூம் கதவை சாத்திட்டு போ!" என்றதும் சுய நினைவை இழந்தாள்.


ஷீலாவுக்கு பயமாக இருந்தாலும், அவள் சொல்லுக்கு கட்டுண்டு கதவை இறுக பூட்டி சாவியை தானே எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.


அதன்பின் பிக்னிக் முடிந்து ஐந்து நாட்கள் சென்றிருக்க,
புதிய எண்ணிலிருந்த வந்த வாட்ஸ்ஆப் மெசேஜினை ஒபன் செய்து பார்த்தவள் அதிர்ந்தே போனாள்.


ஆம் அந்த இலக்கம் தாங்கிவந்தது ஒரு சில புகைப்படங்களைத் தான்.


அதில் அந்த விடுதியின் பூட்டிய அறையில். அந்த ராஜூவோடு அவள் மிக நெருக்கமாக கண்களை மூடிய நிலையில் அமர்ந்திருந்த காட்சிகள் மிக தத்துரூபமான புகைப்பட கலைஞனது கைவண்ணத்தால் உணர்ச்சியகளின் உச்சத்தில் மோண நிலையில் அவனை நெருங்கியிருப்பதை போன்றிருந்தது.


அணைத்துக்கொள்வது, கன்னத்தில் முத்தம் வைப்பது, நெஞ்சில் சாய்வது, கன்னத்தோடு கன்னம் உரசுவதும், உதட்டோடு உதடு உறவாடுவது என ஒவ்வொரு புகைப்படமும் ஒவ்வொரு விதமாக இருந்ததை பார்த்து விழிகள் விரிய அதிர்ந்து சமைந்தவள், சிறிது நிமிடத்தில் அதே இலக்கத்திலிருந்து அழைப்பு வர மிரண்டே போனாள்.


கைகள் நடுங்க அழைப்பை ஏற்க,
"நல்லா இருக்கியா டார்லிங்க்" என்ற குரலை தொடர்ந்து பெரிதாக சிரித்து அடங்கியவன்,


"நல்லா இருக்கியான்னு கேட்டிருக்க கூடாதோ?.
நான் அனுப்பின மேசேஜ பாத்திட்டு.. நீ நல்லா இருக்க வாய்ப்பே இல்ல.
ஆனா நமக்கும் பண்பாடு ஒன்னு இருக்குல்ல.. அதை கடைப்பிடிச்சு தானே ஆகணும்.


சரி அந்த பேச்சை விட்டிட்டு.. நீ சொல்லு! போட்டோஸ் எல்லாம் தெளிவா இருக்கு தானே! ஆனா சும்மா சொல்லக்கூடாது, நச்சுன்னு போஸ் குடுத்திருக்க. அந்த போஸ் குடுக்கிறப்போ, அந்த லிப்ல கிஸ் பண்ணப்போ எப்பிடி இருந்திச்சு தெரியமா?" என்றவன் பேச்சில் பதட்டம் மாறி கோபம் தலைக்கேற,


"பொறுக்கி நாயே! நீ எல்லாம் மனுஷன் தானே? இல்ல இச்சை பிடிச்ச தெரு நாயா? சுயநினைவில்லாம இருந்த பொண்ணை கண்டமேனிக்கு தப்புத்தப்பா படம் எடுத்திருக்கியே... நல்ல குடும்பத்திலயா பிறந்த? இல்ல பெத்ததும் உங்கம்மா தலை முழுகிட்டாங்களா?.. முதல்ல அந்த போட்டோவ அழிடா தெருப்பொறுக்கி" என போனென்றும் இல்லாது மூச்சுவாங்காது திட்டியவள் பேச்சினை கேட்டுக்கொண்டிருந்தவனோ,


"தப்பு தான்மா! நான் பண்ணது மிகப்பெரிய தப்பு தான். மயக்கமா கிடந்த உன்னை தொட்டா.. எதிலயும் ஒரு சுவாரஷியம் இல்லாம போயிடும்ன்னு, போட்டோ மட்டும் எடுத்ததும் விட்டேன் பாரு.. அது ரொம்ப பெரிய தப்புத்தான்.

உன் திமிருக்கு கெடுத்திட்டு போட்டோ பிடிச்சு போட்டிருக்கணும்டி" என அருவருக்கும் விதமாய் பேசியவன் பேச்சில்,
உதடு சுழித்தவளுக்கு அப்படி ஓர் நிலை வந்திருந்தால் தான் உயிரோடே இருந்திருக்க மாட்டேன். என்றே தோன்றியது.


'ஆனால் ஷீலா ஹோட்டல் ரூமை பூட்டி சாவியை எடுத்து சென்றதாக சொன்னாளே..!

அப்போ பூட்டிருந்த ரூம்க்குள்ள இவன் எப்பிடி?' என நினைத்தவள், அவனிடமே வாய்விட்டு கேட்டாள்.


"பரவாயில்லையே! இப்போவாவது கேக்க தோனிச்சே! இதுக்கு தானே காத்திட்டிருந்தேன்.


என் அப்பா சாவுலகூட நான் கவலைபடலடி! அத்தனை பேரு முன்னாடி அறைஞ்ச உன்னை எதுவும் செய்ய முடியாம போச்சேன்னு வருத்தம் தான் இன்னைக்கு வரை என்னை உறுத்திட்டே இருந்திச்சு.. அந்த உறுத்தல் உனக்குதக்க தண்டனை தந்தே ஆகணும்ன்னு வெறியா மாறிடிச்சு.


அந்த நேரம் தான் பிக்னிக்குன்னு என்னோட ஹோட்டல்லயே தங்க வந்து மாட்டிக்கிட்டிங்க.


ரிசப்ஷன்ல நடக்கிறது ஆபீஸ் ரூம்ல இருந்து சீசீடீவி கேமெரா வழியா எப்பவும் பாத்திட்டே இருப்பேன். அப்பிடி பாக்கிறப்போ தான், நீயும் மாட்டிக்கிட்ட.
அதான் நீ தனிய மாட்ட மாட்டியான்னு எதிர்பாத்திருந்த சமயம் கடல்ல விழுந்து வந்த..

வந்ததுமில்லாம காஃபி குடிச்ச பாரு! அதில தான் மயக்க மருந்த கலந்தேன்" என பெருமையாக சொல்ல.
அதை கேட்டு அதிர்ந்தவள்,

"பொறுக்கி நாயே! ஹோட்டல் நடத்துறீங்கன்னு நம்பி வந்தா.. இந்த மாதிரி கள்ளச்சாவி போட்டு பொண்ணுங்கள அசிங்கமா படமெடுக்குறியே உனக்கு வெக்கமா இல்ல" என கோபமாக இரைந்தவளிடம்,


"இல்லை" என ஒரே வார்த்தையில் அடக்கியவன்,


"இங்க பாரு. ரொம்ப பேசினேன்னா அப்புறம் விளைவு பயங்கரமா இருக்கும். இப்போ உன்கூட பேசுற மூடில்ல போனை வை!" என கூறி வைத்துவிட்டான்.


இலக்கியாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதே சமயம் அதை அப்படியே விடவும் முடியாவில்லை. அவளுக்கு நிச்சயம் தெரியும், இவன் போட்டோவோடு மட்டும் விடுவான் என்று,

'போட்டோவை வைத்து அவனுக்கு என்ன லாபம்?
அதை வைத்து மிரட்டி ஏதோ செய்யப்போகிறான். அதனால் தன் வாழ்க்கை பாழகப்போவது உறுதி' என சரியாக கணித்தவள்,
வந்த இலக்கத்திற்கு மீண்டும் மீண்டும் அழைத்து பார்த்தாள்.


பதில் என்னமோ சுவிச்ஆப் என்பதே! இரண்டு நாட்கள் அதையே நினைத்து குழம்பியிருந்தவளால் இயல்பாக இருக்க முடியவில்லை.


பாடவேளையில் கூட கவனமில்லாது இருந்தவளை வகுப்பை விட்டு வெளியே அனுப்பினார் ப்ரொஃபஸர்.

அதே நேரம் அவள் செல்போனும் அலற, எடுத்து பார்த்தவள் திரையில் தெரிந்த இலக்கத்தை கண்டதும் வேகமாக ஆன் செய்து காதில் வைத்தவள்,


"உனக்கு என்னடா வேணும்? எதுக்கு என்ன தொல்லை பண்ற? என்கிட்ட இருந்து எதை எதிர் பார்த்து அந்த மாதிரி போட்டோஸ் எல்லாம் எடுத்த?" என படபடவென பொரிந்தாள்.


அவளை பேசவிட்டு அமைதியாக இருந்தவன்..


"ஏன் பேபி இவ்ளோ டென்ஷன்? எடுத்ததும் ஹலோன்னு கூட சொல்ல விடாம கோபப்படுற? இருந்தாலும் தெளிவாத்தான் இருக்க, வளவளன்னு பேச்சை வளர்க்காம ஸ்ரெயிட்டா மேட்டருக்கு வந்துட்ட,


நீயே மேட்டருக்கு வந்ததுக்கப்புறம் நான் ஏன் சுத்திவளைப்பான்? எனக்கு நீ வேணும்" என்றான் ஒரே சொல்லாக,


"என்ன உலர்ற" என்றாள் கத்தலாய்.

"ஊஸ்...... எதுக்கு இப்போ கத்துற? கத்தி பேசினா எனக்கு பிடிக்காது. நீ எனக்கு வேணும்.

இது தான் என் டிமாண்ட். அதுக்காக காலம் பூரா பக்கத்தில வைச்சு உன்னை அழகு பாப்பேன்னு நினைச்சா அது உன் தப்பு.

உன் திமிர ஒரே ஒரு நாள் அடக்கி உன்னை ஆழணும். அதுக்கு நீ முழுசா ஒத்துழைச்சு என்கூட இருக்கணும்" என்றான்.


"என்னை என்ன உன்னை மாதிரி கேடுகெட்டவன்னு நினைச்சியா, உன்னோட டிமான்ட்டுக்கு ஒத்துக்க? அதுக்கு நீ வேற பொண்ண பாரு!" என ஆத்திரத்தின் உச்சியில் பற்கள் நெரிபட வார்த்தைகளை துப்பினாள்.


"ஓகே ஒத்துக்கலன்னா போய்கோ! எனக்கு ஒன்னுமில்லம்மா! இந்த முடிவினால நீ தான் வருத்தப்படபோற" என்றான் அவனும் திமிராக.


"என்ன சொல்ற?"


"ஆமா உனக்கே தெரியும் எந்தளவுக்கு நான் மோசமானவன்னு.
அப்பிடியிருக்கிறப்போ இந்த மாதிரி பிடிமானத்தை கையில வைச்சிட்டு, நீ முடியாதுன்னு சொன்னதும் சாதாரணமா விட்டிடுவேன்னு எப்பிடி நீ நினைக்கிற?


இங்க பாரு.. உன்னை ரேப் பண்றது ஒன்னும் எனக்கு பெரிய வேல கிடையாது.

அப்பிடி நினைச்சிருந்தேன்னா மயக்க மருந்து போட்டப்பவே வேலைய முடிச்சிருப்பேன்.
என்னோக்கம் அது கிடையாது.

யாரை அசிங்கமா பேசி அத்தனை பேர் முன்பும் கன்னத்தில அரைஞ்சியோ, அவனை நீயா தேடிவந்து சந்தோஷப் படுத்தணும்.

அப்போ உனக்கு நான் யாருன்னு காமிக்கணும்" என்றவன் பேச்சில் வாந்தியே வந்திவிடும் போல் இருந்தது இலக்கியாவிற்கு.


"அது உன் கனவில கூட நடக்காதுடா! நான் செத்தாலும் சாவனே தவிர, உன் இச்சைக்கு ஆளாக மாட்டேன்" என்றாள்.


"ஓ அப்பிடியா? அப்போ சாவு, நீ செத்துட்டா மட்டும் எல்லா பிரச்சினையும் தீர்ந்திடும்ன்னு நினைச்சேன்னா அது உன் தப்பு. ஏன்னா நாளை மறுநாள் வரை தான் உனக்கு டைம். அதுக்குள்ள என்னை நீயா தேடி வர.. இல்ல இந்த போட்டோஸ் எல்லாத்தையும் எல்லா மீடியாவிலயும் விட்டு உன் குடும்ப மானத்தையும் சேர்த்து வாங்கிடுவேன்.


உனக்கே தெரியும்.. உன் குடும்பம் பழம்பெரும் குடும்பம்... ஊருக்குள்ள கௌரவமா கொடிகட்டி பறந்திட்டிருக்கீங்க, நீ கல்யாணமாகாம ஒரு பையன் கூட தப்பா இருக்கிற போட்டோவ பாத்ததும் கூட்டமா தற்கொலை பண்ணிக்கிட்டு செத்துடுவாங்க. இது தான் உனக்கு வேணும்னா தாராளமா பண்ணிக்கோ!" என அவளை பற்றி நன்கு அறிந்துகொண்டு பேசியவன் பேச்சில அதிர்ந்தவளுக்கு, இம்முறை கண்ணீர் தாரைதாரையாக கொட்டத்தொடங்கியது.
 
Top