• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

15. திகட்டாத தீ நீயே!

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
இருந்த கவலையில் யார் மீதும் குற்றம் சுமத்த யாரும் விரும்பவில்லை... சடங்குகள் முடிந்து கதிர் சொன்ன இடம் சென்று விசாரித்த வேல்முருகனுக்கு கிடைத்த பதில் என்னமோ.. தன்னை அங்கு விட்டுச்சென்ற கதிரை ஒருமாதம் கடந்தும் காணவில்லை என்று அவன் ஊருக்கு தான் தேடி வந்தாள் என்று.

"அப்பிடியா...?" என ஏமாற்றம் அடைந்தவர்.. அவங்கள எங்கேயாச்சும் பார்த்தால் சொல்லுமாறு தன் விலாசத்தை கொடுத்துவிட்டு வந்தார்.

தன் ஊர் முழுவதும் தேடி ஓய்ந்தே போனார்.
கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் ஓடியிருந்த நிலையில் தான் அவர் வீட்டு தெலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது.

அதாவது சந்தியா ஒரு கிராமத்தில் அவள் மகளுடன் குடில் ஒன்றில் வசித்து வருகிறாள் என்று. அந்த இடத்தை விளாவாரியாக கூறிவிட்டு தொலைபேசி துண்டிக்கப்பட்ட நேரம் மாலை ஆறு மணி...


உடனேயே கிளம்பிவிட்டார் வேல்முருகன். இது ஒன்றும் அவருக்கு புதிதல்ல... கதிரின் கடைசி வார்த்தையினை காப்பாற்ற இரவுபகல் பாராது தேடித்தான் திரிந்தார். ஆனால் வீட்டவர்களுக்கு என்ன காரணத்திற்காக அடிக்கடி வெளியே போகிறேன் என்று சொல்லவதில்லை.. அதை மீறியும் கேட்டால், முக்கிய வேலை என்பதோடு முடித்துக்கொள்வார்.

வடிவுக்கரசியின் பரந்த மனம் அறிந்த மகனாயிற்றே...

வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, வேல்முருகன் அங்கு சேர்ந்த நேரம் இரவு பதினொன்றை தாண்டியிருந்தது.
எட்டு ஆண்டுகள் தனிமையில் வசிப்பவள் சந்தியா..

"எந்த நிலை வந்தாலும் உன்னை நான் பிரிய மாட்டேன்... இன்னொருவர் தயவில் நீண்டநாள் வாழமுடியாது.. அதே சமயம் இந்த நிலையில் உன்னையும் என்னுடன் அழைத்து போக முடியாது.. ரெண்டே நாள் பொறுத்துக்கொள்...!

அம்மாவின் சம்மதத்தோடு உன் கழுத்தில் தாலியை கட்டி அழைத்து போகிறேன்." என வாக்கு தந்து சென்றவனை ஒரு மாத காலம் ஆகியும் காணவில்லை.

அதன் பின்பும் காத்திருப்பது பொய்யென நினைத்து அவனை தேடி அவன் ஊருக்கு கிளம்பியவளுக்கு அவனது விலாசம் சரியாக தெரியாததனால்.. கிட்டத்தட்ட ஒரே பெயரில் இருக்கும் வேறொரு ஊருக்கு போனவளும் அந்த ஊரில் அவனை தேடாத இடமில்லை..

அங்கு அப்படி ஒருவன் இல்லை என்றதும்.. கதிர் தன்னை ஏமாற்றி விட்டான் என நினைத்தாள்.

வீட்டிற்கும் திரும்பி போக முடியவில்லை. பெற்றவர்களுக்கு செய்த தூரோகத்தினால் தான் தனக்கு சரியான தண்டனை கிடைத்தது என நினைத்தவளும், மனதார அந்த வாழ்க்கையினை ஏற்றுக்கொண்டாள்.

சாப்பிட கூட காசில்லாது பசியில் தள்ளாடி நடந்தவள்.. வீதியோரம் இருந்த மரநிழலில் உக்கார்ந்தாள்.

திடீரென பின்புறத்தில் சலசலத்து கேட்ட.. என்னவென திரும்பி பார்த்தாள்.
வட்டமாக ஒரு கும்பல் சூழ்ந்திருந்திருக்க.. அவர்கள் கைகளில் சாதத்தினை பிசைந்து வைத்து கொண்டிருந்தாள் பெண்ணொருத்தி.

"சாப்டுட்டு வேணும்னா கேளுங்க..." என்றவர் கைகளில் இருந்த சாதத்தையே ஏக்கமாக சந்தியா பார்த்திருக்க.. எதார்த்தமாக திரும்பிய பெண் சந்தியாவை கண்டுவிட்டு.

வா.. என்பதாக கையசைவில் அழைத்தாள்..
அப்பாவியாய் எழுந்து சென்றவளுக்கு கையிலிருந்த உருண்டையை நீட்டினாள்.

மறுக்கவில்லை சந்தியா.. சாப்பிட்டு சரியாக இரண்டு நாட்களாயிற்றே.. இந்த நேரத்தில் சாப்பிடாது இருந்தால் வயிற்றில் இருக்கும் குழந்தை என்னாவது?

அவள் இருந்த பசிக்கு அது இரண்டு நொடிக்குள் காலியானது.

"பார்த்தும்மா மெதுவா சாப்பிடு..." என்று இன்னமும் இரண்டு உருண்டையினை உருட்டி தந்தவர்..

"ஏம்மா... ரொம்ப பசியா..?" என்றார்.

ம்.. என தலையசைத்தவள் மீதியை உண்ணும் வரை பேசவில்லை. அத்தனையையும் உண்டு முடித்ததும் தான்..

"ரொம்ப நன்றிம்மா..." என்றாள்.

"யாரும்மா நீ... ? பார்க்க பெரிய இடத்து பொண்ணு போல இருக்க..? சாப்பிடுறத பார்த்தா.. ரொம்ப பசியில இருந்தவ போல சாப்பிடுற" என்க.

"இல்லம்மா... எனக்குன்னு யாருமில்லை.. என்னை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்ட என் புருஷன்.. அம்மா வீட்டுக்கு அழைச்சிட்டு போறேன்... இங்கேயே இருன்னு தெரிஞ்சவங்க வீட்டில விட்டுட்டு போனாரு... ஒருமாதம் ஆகிடிச்சு, திரும்பி வரவே இல்லை... அவரை தேடித்தான் இவ்ளோ தூரம் வந்தேன். ஆனா அவரு எங்க தேடியும் கிடைக்கல.. எனக்கு தங்குறதுக்கு கூட ஒரு இடமும் கிடைக்கல.." என்றாள் கவலையாக.

"போச்சா... அவன் உன்னை ஏமாத்திட்டான் போல.. ஆமா நீ எங்க தங்குற..." என்றார்.

"இந்த ரெண்டு நாளும் ப்ளாட்பாரத்ல நிறைய பேரு தங்குவாங்க.. அவங்ககூட சேர்ந்து நானும் தங்கினேன்." என்றாள்.

"அப்பிடியா...? நாங்களும் உன்னை மாதிரி தாம்மா.! எங்களுக்கும் வீடுன்னு ஒன்னில்ல... கிடைச்சத பகிர்ந்து சாப்பிட்டு உயிர் வாழ்ந்திட்டிருக்காேம்.. பகல்ல கூலி வேலைக்கு போவோம்... இரவில இது தான் நம்ம வீடு.. நீயும் உன் புருஷன் கிடைக்கிற வரை எங்ககூடவே தங்கிடு... அது தான் பொட்டை புள்ளைக்கு பாதுகாப்பு..." என்றவர் தம்முடன் அவளையும் இணைத்து கொண்டனர்.


தாமிரா பிறக்கும் வரை அவர்கள் தரும் உணவினை உண்டவள்... தாமிரா பிறந்து நான்கே மாதத்தில் தானும் கூலித்தொழிலுக்கு குழந்தையை தூக்கிக்காண்டு சென்றாள்.

எதிர்மறையான வாழ்க்கை தான்... இருந்தும் எல்லாம் தன் விதியென எண்ணிக்கொள்பவளுக்கு ஆத்விக் நினைவு வரும்போதெல்லாம் கண்ணீர் வரும். பத்திரமாக தன்னோடு எடுத்து வந்த வளையலினை பார்த்து தேற்றிக்கொள்வாள்.


இப்படியே எட்டு வருடங்களை தொட்டிருக்க.. அன்று ப்ளாட்பாரத்தில் நன்கு உறங்கிக்காெண்டிருந்த தாமிராவை அணைத்து உறங்கியவள் காலில் ஏதோ கடித்ததை போல் இருந்தது.

வேலையின் அசதியில் அதை மறுகாலால் தேய்த்து விட்டு படுத்து கொண்டாள். சிறிது நேரத்தில் அந்த இடம் எரிய.. கைகளால் தடவிவிட்டு படுத்துக்கொண்டவள் அறியவில்லை. இன்னும் சில மணிநேரங்களே தன் ஆயுள் நீடித்திருக்கும் என்று.

"ம்மா தண்ணி..." என முணங்கினாள் சந்தியா கையணைப்பில் இருந்த தாமிரா.. அசையவே இல்லை அவள்.. "ம்மா.." என சிணுங்கியவாறு எழுந்து அமர்ந்தவள்..


"ம்மா... தண்ணி தாம்மா..." என தாயை உழுக்க.. தூரத்தே யாரோ விசில் அடிக்கும் சத்தம் கேட்டது.

திரும்பி பார்த்தவளை மதில் மறைவிலிருந்து இரண்டு ஆண்கள் கையசைவில் வா என அழைத்தார்கள்.

விபரம் தெரியாத சின்ன குழந்தை ஆயிற்றே.. எழுந்து மற்றவர்களை கடந்து அவர்களிடம் வந்தாள்.

"மாமா சாக்லேட் தரேன்.. மாமாகூட அங்கே வரியா..?" என மதில் மறைவில் அழைத்தான் பச்சை குழந்தை என்றும் பாராது போதையில் இருந்த அந்த காமப்பிசாசு.

"வேண்டாம் மாமா.. அம்மா யாருகிட்டையும் எதுவும் வாங்க கூடாதுன்னு சொல்லிருக்கு.. நான் போறேன்.." என திரும்பியவள் வாயினை பொத்தி தூக்கிக்கொண்டு ஓடும் போது தான் வேல்முருகன் அங்கு வந்தார்.


அவர்களை நாலு தட்டு தட்டி.. ஓட வைத்தவர். குழந்தை யாரென தெரியாமலே..
"யாரு பாப்பா நீ..? உன் வீடு எங்க இருக்கு?" என்றார் அவளை வீட்டில் விடுவதற்கு.

"வீடெல்லாம் இல்ல... அங்க தான் நாங்க தங்குவோம்.." என அழைத்து சென்றவள்.

"ம்மா... ம்மா... எந்திரி!" என எழுப்பியவள் சத்தத்தில் மற்றையவர்கள் எழுந்து விட்டனர்.. ஆனால் சந்தியா எழுந்து கொள்ளவே இல்லை.

அவள் எழுந்து கொள்ள வில்லை என்றதும்.. பக்கத்தில் படுத்திருந்த பெண்ணோ..

"சந்தியா எந்திரி.." என அவளை திருப்பினாள். தெருவெளிச்சத்தில் வாயில் நுரை தள்ள கிடந்தவளை கண்டு அதிர்ந்தே போனார் வேல்முருகன்.

இணங்கண்டு விட்டார் வேல்முருகன் அவளை.


"சந்தியா சந்தியா..." என எழுப்பி பார்த்தவர்.. அவளிடம் அசைவில்லை என்றதும்.. தூக்கிக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனை அழைத்து சென்று சோதித்ததில்.. பாம்பு தீண்டி மரணமாகிவிட்டாள் என்றே பதில் வந்தது.


மறு நாளே இறுதிச்சடங்கினை தானே முன்னின்று முடித்தவர், தாமிராவை அந்த கூட்டத்தினரிடமிருந்து வாங்குவதற்கு படாத பாடு பட்டுவிட்டார்.


மீண்டும் அதே ஆறுமணியிலேயே பயணம் என்றாக. வீட்டுக்கு சென்று சேர.. பதினொரு மணியினை தொட்டிருந்தது.

கையில் குழந்தையுடன் வந்திறங்கியவரை கண்ட வடிவுக்கரசியின் வாய் தான் சும்மா இருக்குமா..?

"எந்த சிருக்கிக்கு பிறந்தவடா இவ...?" என ஆரம்பித்தவர் தான்.. அமைதியாக இருந்த சியாமளாவையுமே தூண்டிவிட ஆரம்பித்து விட்டார்.


"ஏன்டி அமைதியா இருக்க...? ஒருத்தன் வேல வேலன்னு சொல்லாம கொள்ளாம வெளிய போறான்னா.. என்ன ஏதுன்னு கேட்க மாட்டியா..? இப்பாே பாரு.. எவளோ ஒருத்திக்கு......

ஏன்டா உனக்கு அறிவில்லை... அந்தளவுக்கு உடம்பு சுகம் கேட்குதா...?" என வாயில் வந்ததை எல்லாம் கேட்டவருக்கு எதுவும் சொல்லவில்லை அவர்.

சொன்னால் குழந்தை என்றும் பாராது.. என் புள்ளைய முழுங்கினவ இவ தானேன்னு அபாண்டமா அந்த பிஞ்சின் மீது பழி போடுவார்... அதுவுமில்லாமல்.. தன்னை விட எவளோ ஒருத்தி தான் முக்கியம் என்று, உயிரை விட்டவன் குழந்தையை தான் ஏன் வளர்க்க வேண்டும் என்று கோபத்தில் கூறி விட்டால்.. தம்பிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாது போய்விடுமென நினைத்தே அமைதி காத்தார்.

ஆனால் வடிவுக்கரசி அமைதியாக இருக்க வேண்டுமே...


"நான் கேட்டுட்டே இருக்கேன் நீ அமைதியா இருக்க... சொல்லுடா.."

"நான் என்னம்மா சொல்லுறது..? அதான் நீயே புதுசு புதுசா சொல்லுறியே... நீ என்ன வேணாலும் சொல்லிட்டு போ.. என் பொண்டாட்டிக்கு என்னை தெரியும்..." என்றவன் கவனம் முழுவதும் சியாமளாவிடமே இருந்தது.

அவளுமே அவரையே வைத்த கண் விலகாது பார்த்துக்கொண்டே நிற்க.

"சியாமளா.." என அவள் கையினை பற்றப்போனவள் கையினை தட்டிவிட்ட வடிவுக்கரசி..

"என்னடா பொண்டாட்டிக்கிட்ட உருக்கம்...? உனக்கும் அவளுக்கும் எந்த உறவும் இல்லன்னு நாடகம் போட போறியா...?" என்றார் இருளை கிழிக்கும் சத்தமாய்.

"உனக்கு இது தேவையில்லாத விஷயம்மா... என்னவா இருந்தாலும் நானும் என் பொண்டாட்டியும் முடிவு பண்ணிக்கிறோம்.. நீ உன் வேலைய பாரு.."

"எதுடா தேவையில்லாத விஷயம்..? என் வீட்டுக்குள்ள எவளோ பெத்த பரதேசிய கூட்டிட்டு வருவ.. அதை கேட்டா எனக்கு தேவையில்லாத விஷயமா..?


உன் பொண்டாட்டிக்கிட்ட பேசுறதுன்னா முதல்ல இந்த பிசாசுக்கும் உனக்கும் எந்த உறவுமில்லன்னு சுவாதி தலையில அடிச்சு சத்தியம் பண்ணிட்டு.. அவளை எங்கேயிருந்து கூட்டிட்டு வந்தியோ... அங்கேயே விட்டுட்டு வந்து பேசிக்கோ.." என்றார்.

எப்படி சத்தியம் செய்வான் அவள் தனக்கு உறவில்லை என்று? தம்பி மகள் அவனுக்கும் மகள் தானே...!


"சியாமளா... அம்மா சொல்லுறது போல எதுவும் இல்லம்மா.. ஒரு வேலையா போனேன். இவளை யாரோ ரெண்டுபேரு சின்ன குழந்தைன்னு கூட பார்க்காம.. தப்பான நோக்கத்தோட தூக்கிட்டு போனாங்கடா.. அவங்கிட்டையிருந்து காப்பாத்தி விசாரிச்சா.. இவளுக்கு சொந்தம்ன்னு சொல்லிக்க யாருமில்லன்னு சொன்னா.. இவளையும் நம்ம பிள்ளைங்களோட சேர்த்து வளர்ப்போம்மா..?" என்றார்.

"வளர்ப்படா... வளர்ப்ப..... யாரு வீட்டில யாரை வளர்க்கிறது..? இது என்ன சத்திரமா..? என்ன ஜாதியோ என்ன குலமோ...? என் வீட்டு வாசல் மிதிச்சிச்சுன்னா சாவடிச்சிடுவேன்." என்றார்.


"என்னை நம்பி வந்த சின்ன பொண்ண வீட்டில தங்காம எங்க தங்க சொல்ற.."

"ஆ.... மாட்டுக்கொட்டாயில தங்கை வையி.. அது தான் இதுக்கு சரியான இடம்." என்றவர்..

"அங்க என்ன வேடிக்கை..? அழைச்சிட்டு வந்தவனே பார்த்துக்கட்டும்.. நீ வா.." என்றவர் வாசல் கதவடைத்து விட்டு உள்ளே சென்றார்.

அதன் பின்பும் அமைதியாக இருந்தாரா..?

"எவளோ சிருக்கிக்கு புள்ளைய பெத்துபோட்டு, எனக்கே கதையளக்குறான்.. எல்லாம் உன்னை சொல்லணும்டி..
நீ சரியா இருந்தா.. அவன் ஏன் இன்னொருத்திய தேடி போறான்..?

புருஷன முந்தானையில முடிஞ்சு வைச்சிருக்க தெரியாத நீல்லாம் ஏன் தான் உயிரோட இருக்க... நீ மட்டும் அவனை படுக்கையில சந்தோஷ படுத்தியிருந்தா... இன்னைக்கு இந்த பிசாசை அழைச்சிட்டு வந்திருப்பானா......?

இன்னைக்கு இவ... நாளைக்கு இவளோட அம்மாவை அழைச்சிட்டு வரபோறான். அவ உன்னையும் என்னையும் விரட்டியடிச்சிட்டு ராஜியம் பண்ண போறா... நான் தெருவுக்கு தெரு தட்டு ஏந்த போறேன்."

திட்டியதோடு நில்லாது தன் வயிற்றிலேயே அடித்தவர்...

"ஏன் தான் என் புள்ளைங்க புத்தி மட்டும் பொம்புள சோக்குக்கு தேடிப்போகுதோ..
அவளுங்களுக்கு இருக்கிற அறிவு என் வீட்டில குத்துக்கல்லா இருக்கிற இந்த பைத்தியக்காரிக்கு இல்லையே...! இவளால நாளைக்கு என் பேர பசங்க சாப்பாட்டுக்கு பிச்சை எடுக்க போறாங்க..

இதெல்லாம் பார்க்கவா என்னை வைச்சிருக்க ஆண்டவா.. என்னை சீக்கிரம் கூப்பிட்டிடு..

இவளை போலல்லாம் கட்டிக்கிட்டவன் இன்னொருத்தி கூட கூத்தடிக்கிறத வேடிக்கை பார்த்திட்டு என்னால இருக்க முடியாது சாமி.. நீ கொண்டு போகலன்னா நானாவது நாண்டுகிட்டு செத்துடுவேன்." என அவளை உசுப்பேத்தும் விதமாய் புலம்பவே ஆரம்பித்து விட்டார்.


விடிய விடிய இதே புலம்பல் தான். விடிந்ததும் ஓய்ந்ததா... தாமிராவை காணும் போதெல்லாம் ஆரம்பித்து விடுவார்.


ஏற்கனவே உண்மை தெரியாது குழம்பிப்போயிருந்தவளுக்கு, வடிவுக்கரசியின் பேச்சானது, மன அழுத்தத்தை ஏற்படுத்தி இருந்தது.

அவளது இயலாமையினையே குத்திக்காட்டுவதை போலிருக்க... இரவுவரை பொறுமை காத்தவள்.. எல்லோரும் தூங்கியதும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள். என கூறி முடித்தார் வேல்முருகன்.


அதுவரை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த வடிவழகி... "அப்போ தாமிரா நம்ம கதிர் பொண்ணா...?" என வேல்முருகன் சட்டையினை கொத்தாக பற்றியவர்..

"ஏன்டா இதை முன்னாடியே சொல்லல...? சொல்லிருந்தா அவளை என் கையில தாங்கியிருப்பேனே...! நான் பண்ண பாவத்துக்கு அவளை நல்ல படியா வளர்த்திருப்பேனே...! என் பேத்தியை நானே கொடுமை படுத்துற அளவுக்கு பண்ணிட்டியேடா..


என்னோட பிடிவாதத்தினால நானே மூணு உயிர் போக காரணமாகிட்டேன். அது போதலன்னு தாமிராவையும்..." என தலையில் அடித்தழுதவரை பார்த்திருந்த வேல்முருகனால் நம்பமுடியவில்லை.

எங்கு உண்மை தெரியப்போனால் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க போகிறார் வடிவழகி என்றுதான் இத்தனை நாள் உண்மையினை கூறவில்லை. ஆனால் வடிவழகியோ கண்ணீரை திறந்து விட.. அவரை பார்த்திருந்தவர் முன் வடிவுக்கரசியை விலக்கிவிட்டு முன் வந்தவன்...


"தாமிரா உங்க தம்பி மகதான்.. இறந்தது தம்பி சம்சாரம்ன்னு உங்களுக்கு எப்பிடி மாமா தெரியும்..? நீங்க தான் அவங்கள பார்த்ததே இல்லையே.. அப்பிடி இருக்கிறப்போ பார்த்ததும் எப்பிடி உங்களால இனங்கான முடிஞ்சிது?" என்றான் சந்தேகமாய்..

இறந்து போனது தன் அக்காவாக இருந்துவிட கூடாது... என்று கிடைத்த அந்த சில வினாடிகளுக்குள் வேண்டிக்கொள்ளாத தெய்வமில்லை.

"அவன் பர்ஸில் அந்த பொண்ணோட போட்டோ இருந்திச்சு மாப்பிள்ளை.."

"அந்த படம் இப்பவும் இருக்கா மாமா..? நான் பார்க்கலாமா..?" என்றவன் முகமோ பயத்தில் வியர்க்க ஆரம்பிக்க..

அவனது வெளிறிய முகத்தை பார்த்தவருக்கு எதுவுமே புரியவில்லை.
"இருங்க மாப்பிள்ளை எடுத்துட்டு வரேன்." என எடுத்து வந்து கொடுக்க. நடுங்கிய கைகளுடன் வாங்கி பார்த்தவன் வானமே இடிந்து போக தொய்ந்து போய் தரையில் அமர்ந்தவன் விழிகளோ கண்ணீரில் குளித்தது.
 
Top