• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

16. அம்புத நல்லாள்

Sahana Harish

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
49
நிர்குணா சென்ற பிறகு "அடேய் நாங்க இருக்கறத கூட மதிக்காம என்ன வேலை செஞ்சிட்ட? இவ்வளவு பெரிய உருவம் இருக்கறது கூடவா உன் கண்ணுக்கு தெரியல?"

மைத்ரேயனோ எதுவும் பேசாது கால்களால் தரையில் கோலம் போட்டு கொண்டிருந்தான்..

"ஏய் லூசு பயலே என்னடா கருமம் இதெல்லாம்? புதுசு புதுசா எதுவோ பண்ற? இந்த வெட்கம் நிர்குணாக்கு வரணும்" அவன் சொல்லி கூட முடிக்கவில்லை ஓடிச் சென்று பிரதியை கட்டி கொண்டு கன்னத்தில் இச் இச் என முத்தம் வைத்து கொண்டு இருந்தான்.. இதை எதிர்பார்க்காத அம்புத்ராவோ "அடச்சே லூசுங்களா என்ன வேலை இது?"

அதில் விலகி நின்றவர்கள்" பிரதி ஒரு வழியா கமிட் ஆயிட்டேன்டா இனி நானும் கமிட்டேட்னு காலர தூக்கி சொல்லுவேன்" என்றான் சிரித்தவாறு.

"மைத்ரேயன் உங்கள கேட்டது நான்.. எதுக்காக இப்படி செய்யறீங்க யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க?" அம்புத்ராவின் வார்த்தைகள் கோபமாக வந்து விழுந்தது.

"சாரி அம்மு அக்ஷுவலி நான் என்னோட சந்தோஷத்தை இப்படி தான் காட்டுவேன்.. மோஸ்ட்லி அம்மா தான் மாட்டுவாங்க இப்ப இங்க வந்ததுல இருந்து இவன் தான் மாட்டிக்கிட்டு முழிக்கிறான்"

"அதுக்கு இப்படியா?"

" எஸ் எனக்கு அண்ணன் இல்லை அம்மு அது உனக்கே தெரியும் இவன் என்னைவிட மாசக்கணக்குல தான் பெரியவன் பட் மெர்சூர்ட்டா(matured) இருப்பான் சோ எனக்கு நல்லது கெட்டது எல்லாம் இவன் தான் சொல்லுவான் பட் உன்னை பார்த்துட்டு வந்த அப்பறம் சர் டோட்டல் டேமேஜ் நான் அட்வைஸ் பண்ணா கூட கேட்டான்னா பாரேன்

பிரதி கூட எனக்கிட்ட இந்த பழக்கத்தை மாத்திக்க சொல்லி இருக்கான் பட் என்னால அது மட்டும் முடியல.. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி தன்னோட சந்தோஷத்தை எக்ஸ்போஸ் பண்ணுவாங்க நான் இப்படி செய்யறேன்.. இது இவங்களுக்கு தப்பா படல உனக்கு அப்படி தோணிச்சுன்னா டோண்ட் வொர்ரி இனி என் அம்மாவும் நிர்குணா தான் மாட்டிகிட்டு முழிப்பாங்க இவனை விட்டுறேன் பட் ஐ நீட் சம் டைம்"

அவன் சொன்னதும் பதறிய பிரதியை தடுத்த அம்புத்ரா" மைத்து இந்த விசியத்தில் நான் தலையிட மாட்டேன் நீங்க தானே சொன்னீங்க இவர அண்ணனா பார்க்கிறேன்னு சோ உங்க இரண்டு பேருக்கும் நடுவுல நான் எப்பவும் வர மாட்டேன்.. இது அவர் உங்களுக்கு கொடுத்து இருக்க உரிமை அதை நான் தட்டி பறிக்க மாட்டேன்"

அவள் சொன்னதும் இருவருக்கும் அளவில்லா மகிழ்ச்சி" தாங்க்ஸ் அம்மு"என்றனர் இருவரும் ஒருசேர.

நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டு இருக்க மைத்ரேயன் காதல் விசயத்தை பிரதியுமன் தான் தன் குடும்பத்தாரிடம் சொன்னான் முதலில் மறுத்தவர்கள் பின்னர் அவனின் உறுதியால் ஒத்துக் கொண்டனர்.

ஒர் நல்ல நாளில் மைத்ரேயன் - நிர்குணா ஜோடிக்கு நிச்சயம் இனிதே நடைபெற்றது.

இதற்கிடையே அம்புத்ராவின் மான்ஸ்டரின் குழுவை பிடிக்க போடப்படும் திட்டமும் முழுவீச்சில் செயல்பட இவள் பிரதியுமனை முடிந்த வரை சமாளித்து விட்டு கேரளா சென்று வருவாள்.. கதிர் முன் போல் பேசவில்லை என்றாலும் பணி நிமித்தமாக அவளிடம் பேசிக் கொண்டு தான் இருந்தான்.

அதுவே அவளுக்கு தற்போது போதுமானதாக இருக்க அவனிடம் மேற்கொண்டு எதுவும் பேசாமல் ஒர் உயர் அதிகாரியாய் மட்டும் இருந்தாள்..

அன்றும் அப்படி தான் அம்புத்ரா அவனுக்கு மருத்துவமனையில் சில கோப்புகளை வாங்கி வர பணித்திருந்தாள்..

கொளுத்தும் வெயிலில் சிக்னலில் நிற்பது பெரும் கொடுமை அதிலும் இருந்த மொத்த சிக்னலிலும் மாட்டி நொந்து நூடுல்ஸ் ஆகி வந்து கொண்டிருந்தான்.. "ச்சே நான் அன்னைக்கு பேசுன பேச்சுக்கு என்னை வேணும்னே இந்த மாதிரி இடத்துக்கு எல்லாம் போக சொல்றாங்க.. நான் தப்பா என்ன பேசுனேன் வீட்டுக்கு கூப்பிட்டு அசிங்கப்படுத்தினா எதுவும் பேசாம ஈஈஈஈன்னு இளிச்சிக்கிட்டு டாட்டா காமிச்சிட்டு வரணுமா என்னால முடியாது" என தனக்குத் தானே பேசியபடி மருத்தவமனையை அடைந்திருந்தான் கதிர்.

புலம்பியபடியே வந்தவன் தீடீரென்று எதன் மீதோ மோத அதில் நிலை தடுமாறி கீழே விழுந்தான்.. ஏற்கனவே கோபத்தில் இருந்தவன் கீழே விழவும் கோபத்தில் கத்த நினைத்தவன் பேச்சற்று நின்றான் எதிரில் இருந்த நபர் பேசிய பேச்சில் "ஏங்க உங்களுக்கு கண்ணு தெரியுமா தெரியாதா எப்ப பார்த்தாலும் என் மேல மோதுறதையே வேலையா வச்சி இருக்கீங்க இதுல என்னை கோபமா வேற முறைக்கிறீங்க.. உங்க மேல தப்பு இருக்கும் போது அடுத்தவங்கள நீங்க திட்டுவீங்களா? நல்லா இருக்கு சர் உங்க நியாயம்" என்றது விஷாலி.

"வெயிட் வெயிட் என்ன பேசுறீங்க நீங்க? யார் நீங்க? நான் எப்ப உங்கள திட்டுனேன்?"

"என்னது எப்ப திட்டுனீங்களா? நீங்க என்ன அம்னீஷியா பேஷண்டா? என்று அன்று நடந்ததை சொன்னாள்.. அதைக் கேட்டதும் அன்றைய நினைவுகள் நிழலாட "சாரி நான் கவனிக்கல" என்பதோடு மேலும் நிற்காமல் தன் பணியை பார்க்க சென்றுவிட்டான்.

அவனை விடும் எண்ணம் அவளுக்கில்லை "சார் சர் இருங்க நான் பேசிட்டு இருக்கும் போதே எங்க தப்பிச்சு ஓடுறீங்க?" அவன் முன்னே சென்று நின்றாள்.

அதில் எரிச்சலுற்றவன் "ஏய் என்ன பிரச்சனை உனக்கு அதன் சாரி சொல்லிட்டேன்ல போ வேற வேலை இருந்தா பாரு"

"உங்கள சுத்தறது மட்டும் தான் என் வேலை" என தனக்குள் முனுமுனுத்துக் கொண்டாள்.

" வாட் கம் அகைன்? சீ உனக்கு வேலை இல்லாம இருக்கலாம் ஆனா எனக்கு இருக்கு சோ கெட் அவுட்"

"ஹலோ இன்ஸ்பெக்டர் சர் உங்களுக்கு வேலை இருக்குன்னு எனக்கு தெரியும் வேலையோடு என்னையும் சேர்த்து பார்க்க சொல்றேன்.. அவ்வளவு தான்" என கண்ணத்தடித்தவளை ஆச்சரியமாக பார்த்து இருந்தான் கதிர்.

" ஆச்சரியமா இருக்கா? உங்க வேலைய முடிச்சிட்டு வாங்க நான் வெளியே வெயிட் பண்றேன்.. பேசலாம்" என நகர்ப்பவளை வைத்த கண் வாங்காமல் பார்த்து இருந்தான்.

அதைக் கண்டு கொண்டளோ எண்ணவோ" சீக்கரம் வாங்க சர் என்னையே பார்த்துட்டு இருந்தா உங்க வேலை தான் லேட் ஆகும்"

அவள் சொன்னதும் தான் எதற்காக அங்கு வந்தோம் என நினைவு வர உடனடியாக மருத்துவரை பார்த்து விட்டு கோப்புகளை வாங்கி கொண்டு இவளை காண சென்றான்.

"சொல்லு என்ன விசியம்?"

சிர்ததவாறே"அவ்வளவு அவசரமோ?"

" டைம் ஆச்சு.. உன் பெயர் என்ன? என்ன என்னவோ சொல்ற?"

" என் பெயர் விஷாலி, பிரதி குடியிருக்க பிளாட்க்கு எதிர்ல தான் நாங்க இருக்கோம்.. அன்னைக்கு என்ன பிரச்சனைன்னு தெரியல பட் நீங்க கோபமாக போனீங்க உங்கள பார்க்கும் போது என்னவோ மாதிரி இருந்தது இனம் புரியாத கவலை உங்க முகத்தைப் பார்க்கும் போது இதுவரை எனக்கு அப்படியான உணர்வு வந்ததே இல்ல.. அதுக்கு அப்பறம் உங்கள பற்றி தெரிஞ்சிக்க ஆரம்பிச்சேன்.. உங்கள பத்தி ஒவ்வொரு விஷயமும் தெரிய வரும்போது எனக்குள்ள ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்குற ஒரு உணர்வு இதுக்கு பேரு என்னென்ன என்னால சொல்ல முடியல ஆனா உங்க கூட கடைசிவரை இருக்கணும்னு தோன ஆரம்பித்தது பிரதி கூட சொன்னாரு எனக்கானவன் ஒருநாள் வருவான்னு அது நீங்க தான்னு எனக்கு தோணுது"

"ஓ மேடம் எதை வச்சி நீங்க டிசைட் பண்ணி இருக்கீங்கனு என்ன தெரிஞ்சுக்கலாமா? என்றதில் கேலியே மேலோங்கியிருந்தது.

"நீங்க கிண்டல் பண்றீங்க ன்னு நல்லா தெரியுது ஆனா உங்களை எனக்கு பிடிச்சுருக்கு இத என் அப்பா கிட்ட கூட நான் சொல்லிட்டேன் வாழ்ந்தா உங்க கூட தான் வாழ்வேன்"

" லூசா நீ ஏதாவது உளறிக்கிட்டு இருக்காத..என்கிட்ட இதுவரை நீ பேசினதே இல்ல என்னை பத்தி உனக்கு அப்படி என்ன தெரிஞ்சிருக்கும் பார்த்து வர்றதெல்லாம் லவ் இல்லை"

"உங்க பெயர் கதிர் வீட்டுக்கு ஒரே பையன் ஒரு அக்கா கல்யாணம் ஆகி போச்சு டெல்லியில இருக்காங்க அக்காவுக்கு ஒரு பையன் ப்ரீ கேஜி படிக்கிறான்.. போலீஸ் வேலைன்னா உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் அதனால வீட்ல சொல்றது கேட்காம அடம் பிடிச்சு இந்த வேலைக்கு சேர்ந்தீங்க.. அம்மு அக்கா கூட நிறைய மிஷன்ல இருந்து இருக்கீங்க.. அவங்க உங்கள கூட பிறக்காத தம்பியாதான் பாக்குறாங்க.. இப்ப ரீசண்டா ஒரு பொண்ண பார்க்க போயி அவங்க வேற ஒருத்தர் லவ் பண்றது தெரிஞ்சி மூஞ்சி இப்படி உர்னு வச்சு சுத்திட்டு இருக்கீங்க"

"இதெல்லாம்.. இது உனக்கு எப்படி தெரியும்?"

" பொண்ணுங்களுக்கு ஒருத்தர பிடிச்சு போச்சுன்னா அவங்க எந்த மூலை முடுக்கிலிருந்தாலும் தேடி கண்டுபிடித்து வருவாங்க பசங்க மட்டும் தான் இந்த மாதிரி செய்வாங்களா என்ன?"

" சரி இப்ப என்ன சொல்ல வர?"

" ஐ லவ் யூ கதிர்.. உங்க கைய பிடிச்சு கிட்டு வாழ்க்கை முழுசா வாழ ஆசைப்படுகிறேன்" என்றாள் நாணத்தோடு.

" விஷாலி ரைட்?.. எனக்கு இந்த லவ் எல்லாம் செட்டாகாது வேலை விஷயத்தில் தான் அப்பா அம்மா பேச்ச என்னால கேட்க முடியல என்னோட கல்யாண விஷயம் அவங்க சம்மதத்தோட தான் நடக்கணும் அவங்க யார சொன்னாலும் நான் கல்யாணம் செஞ்சிப்பேன்"

"ஓ தட்ஸ் கிரேட்.. உங்க அப்பா அம்மா என்னைதான் செலக்ட் பண்ணி இருக்காங்கன்னு சொன்னா என்னை ஏத்துப்பீங்களா?"

"என்ன சொல்ற நீ? எங்க அப்பாவாவது காதல் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்றதாவது?" என்பதில் எரிச்சலோ?

"என் மேல நம்பிக்கை இல்ல.. ஹும் ஒரு நிமிஷம் இருங்க" என்று தன் அலைபேசியில் யாருக்கோ டயல் செய்தாள்.

எதிர்முனையில் என்ன சொன்னார்களோ தெரியாது அடுத்த நிமிடமே அலைபேசியை இவனிடம் கொடுத்திருந்தாள் "உங்க அப்பா பேசுகிறார்" என.

அவர் பேசப்பேச இவனின் முகபாவங்கள் மாறிக்கொண்டே இருந்தன.. ஆச்சரியமா சந்தோஷமா அவனை கலந்தாலோசிக்காமல் எடுத்த முடிவிற்காக கோபமா என இவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு அழைப்பை துண்டித்தவன் " எனக்கு உன்னை பிடிச்சிருக்கு ஆனால் முகத்தை வைத்து மட்டும் வாழப்போவதில்லை உன்னோட அழகு தவிர மனசுன்னு ஒன்னு இருக்கு இல்லையா? நான் கொஞ்சம் உன்கிட்ட பேசணும் அதற்கான நேரம் இப்போ இல்ல ஈவினிங் சிக்ஸ் ஓ கிளாக் காபி ஷாப் வந்துரு பேசலாம்..பாய்"

சில அடிகள் நடந்து இருப்பான் " என்னோட நம்பர் உன்கிட்ட இருக்கா?"

அவள் ஆம் என தலையசைத்ததும் "உன்னோட நம்பர் என்கிட்ட இல்ல எனக்கு வாட்ஸ் அப் பண்ணிடு.. ஈவினிங் பாக்கலாம்"

விஷாலியை கதிர் புரிந்து கொள்வானா? மான்ஸ்டர் குரூப்பை பிடிக்கும் முதலடியை அடுத்த அத்தியாயத்தில் அம்புத்ரா எடுத்து வைக்கப் போகிறாள்.. இதில் பல பின்னணிகள் தெரிய வரப்போகிறது காத்திருங்கள் நட்புகளே..

தொடரும்.
 
Top