• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

16. உன்னாலே உயிரானேன்.

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
"நம்பு சித்ரா..... இன்னைக்கு உக்காந்து சாப்பிட நேரமில்லம்மா....! நான் கேன்டீன்ல பார்த்துக்கிறேன். நீ மதுஸ்ரீக்கு மட்டும் சாப்பாட்ட போடு!" என மனைவியின் அன்பு தொல்லை தாங்காது கெஞ்சலில் இறங்கியவரை கோபமாக பார்த்தவள்,



"யாரை ஏமாத்துறீங்க...? இன்னைக்கு மட்டும் நீங்க சாப்பிட்டு போகல இனிமே நான் சாப்பாடே செய்ய மாட்டேன்." என சண்டையிட்டுக் கொண்டிருந்த இருவரையும் பார்த்துக்கொண்டே அங்கு வந்தவ மதுஸ்ரீ.



"என்ன ஒரு அதிசயம்? ரொமான்டிக் கப்பல் ரெண்டு பேரும் என்னைக்குமே இல்லாம இன்னைக்கு சண்டை போட்டுட்டு இருக்கிங்க. அப்பிடி என்ன பிரச்சினை உங்களுக்குள்ள?" என அவர்கள் சண்டையினை பார்த்து சிரித்துக் கொண்டே மதுஸ்ரீ வினவ,



"நீயே சொல்லு மதும்மா.....! நேத்து வரைக்கும் இன்னைக்கு ஆஃபீஸ்க்கு சீக்கிரம் போகணும்ன்னு சொல்லாத மனுஷன், இப்போ மட்டும் ஏன் சாப்பிடாம ஓடுறாருன்னு கேளு...!" என கணவனை முந்திக்கொண்டு வந்தாள் சித்ரா.



"நேற்று மறந்து போயிட்டேன்ம்மா...! இப்போ தான் நினைவு வந்திச்சு, அது தப்பா.....?"



"யாரை ஏமாத்துறீங்க.....? உங்க கள்ளத்தனம் எனக்கு தெரியாது?"



"பசிக்குது சாப்பாட்டை போடுன்னு வந்தவரு, உங்கப்பா உப்புமாவை பார்த்ததும் ஆஃபீஸ்ல முக்கியமான வேவையிருக்குன்னு பொய் சொல்லிட்டு ஓடப்பாக்குறாரு...



நானும் எதைன்னு தான் செய்யிறது? நேத்து தூங்க லேட்டாகினதனால எந்திரிக்க லேட்டாகிடிச்சு, இருந்தும் பட்டினியா அனுப்ப கூடாது, உப்புமான்னா சீக்கிரம் வேலை முடிஞ்சிடும்ன்னு செய்தா ரொம்பத்தான் உங்கப்பா பண்றாரு, இன்னைக்கு மட்டும் யாராவது சாப்பிடாம போனிங்க...... இனிமே பசிக்கிறப்போ தவிடும் புண்ணாக்கையும் தான் திங்க வேண்டிவரும்." நான் செய்து வைக்க மாட்டேன் என எச்சரித்தார்.



சித்ரா சொன்னதும் தான் தந்தையின் திருட்டுத்தனம் புரிந்தவளாய் அவரை திரும்பி பார்த்தாள்.



சித்ராவின் கண்டிப்பில் அழுபவர்போல் பாவமாக முகத்தை வைத்திருந்தவரை பார்த்ததும் சிரிப்பும் வந்துவிட, அதை தந்தையின் நிலையறிந்து அடக்கி கொண்டவள்,



"சரி விடுங்கப்பா.... நம்ம எப்பிடித்தான் தப்பிக்க நினைச்சாலும், அம்மா விடப்போறதில்லை. அப்பிடி தப்பிச்சாலும் நாளைக்கு தவிட்டையும் புண்ணாக்கையும் திங்க நம்மளால முடியாது. அதனால இதையே சாப்பிடுவோம்.



இன்னைக்கு நம்ம சாப்பாட்டு லிஸ்ட்ல உப்புமான்னு எழுதிமிருந்தா யாரால மாத்த முடியும்?" என கையணைவில் தந்தையை அழைத்து சென்று டைனிங் டேபிலில் அமர்த்தி, தானும் அமர்ந்து கொண்டவள் முன் தட்டை வைத்து உப்புமாவினை பரிமாறினாள் சித்ரா.



உப்புமாவினை பார்த்து உதடு பிதிக்கிய வினோத்,



"இதுக்கு புண்ணாக்கு நல்லா இருக்கும் போலயே!" என்றவரை சித்ரா கறண்டியோடு நின்று முறைத்ததும் குனிந்த தலை நிமிராது உண்டவரை கண்டதும் அடக்கப்பட்ட சிரிப்பில் புரையேறியது மதுஸ்ரீக்கு.



பாவம் அவளாலும் எவ்வளவு நேரம் என்று சிரிப்பை அடக்கிட முடியும்.



தலையில் தட்டி, நீரினை எடுத்து அவளுக்கு கொடுத்து முதுகினை வருடி விட்டவர்,



"பார்த்தும்மா மெதுவா சாப்பிடு!" என்றார்.



"இதையெல்லாம் சாப்பிடுறதே பெரிய விஷயம், பார்த்து சாப்டா இறங்கினது போல தான். கண்ண மூடிட்டு அள்ளி வாயில வைம்மா" என்றார் வினோத்.



"போதும்ப்பா அம்மாவை ஓட்டினது...." என்றவள்,



"ப்பா......! போறப்போ என்னையும் ஆஃபீஸ்ல ட்ராப் பண்ணிட்டு போங்கப்பா.." என்றாள்.



"ஆமாங்க.... நானும் அதை தான் சொல்லலாம்ன்னு இருந்தேன். இனிமே இவ தனிய ஒன்னும் வண்டில போக வேண்டாம். உங்களுக்கு டைம் இருந்தா நீங்க அழைச்சிட்டு போங்க, இல்லன்னா டிரைவரை அழைச்சிட்டு போய் அழைச்சிட்டு வர சொல்லலாம்." என்றார் அவரும்.



"ம்ம்..... எனக்கும் அதுதான் சரியா வரும்ன்னு தோணுது." என்றவர்,




"உனக்கும் இதில சம்மதம் தானேடா!" என்றார் அவளிடம்.



மதுஸ்ரீயின் மனநிலையும் அவர்களது போலதான் இருந்தது.



நேற்றைய நிகழ்வுகளின் பின்னர் அவளும் சற்று பயந்து தான் இருந்தாள்.



இருக்காத பின்னே..? சித்ரா இலக்கத்திற்கு போன் போட்டு, நடவாத நிகழ்வொன்றை அவள் குரலிலேயே கூறி, வீட்டிற்கு வர லேட்டாகும் என எல்லாவற்றையும் பக்காவாக பிளான் போட்டு ஒருவன் இப்படி எதையோ தன்னிடம் எதிர் பார்த்து செய்யும் போது வீட்டிற்கு ளெியே அவளால தனிமையில் நடமாடிட முடியுமா?



'அவன் சொன்ன பொய்யினையே அவளும் பின்பற்றி சொன்னதனால் தான் தன்னை நினைத்து பெற்றவர்கள் கொஞ்சமாவது சமாதானம் ஆனார்கள், இல்லை என்றால் அவளோடு சேர்ந்து அவர்களுமல்லவா பயந்திருப்பார்கள்.' என எண்ணியவள்.



"எனக்கு எதுவா இருந்தாலும் ஓகேப்பா!" என்றாள்.



"சரிடா...! காலையிலயும், நைட்டிலயும் அப்பா உன்னை வரப்போ பிக்கப் பண்ணிக்கிறேன். காலஜ்ல இருந்து ஆஃபீஸ் போறப்போ டிரைவர அனுப்புறேன்." என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்கள்,



சாப்பாட்டினை முடித்துக் கொண்டு சித்ராவிடம் சொல்லி விட்டு விடை பெற்றனர்.



ஆஃபீஸ் வந்தவளை அங்குள்ளவர்கள் சூழ்ந்து கொள்ள, அவள் முன் வந்த ஹம்சியோ,



"என்னடி நடந்திச்சு? உன்னை தேடி அந்த ராத்திரியிலயும் அப்பா வந்தாராமே? ஏன் நீங்க போன?" என்றாள் மதுஸ்ரீ வந்ததும் வராததுமாய்.



தமிழின் மேல் ஓர் கண்ணை வைத்துக்கொண்டே, ஹம்சியின் பதில் சொல்ல தொடங்கினாள் மதுஸ்ரீ.



"அது...... என் காலேஜ் ஃப்ரண்டுக்கு ஆக்சிடன் ஆகிடிச்சு, அந்த அதிர்ச்சியில அம்மாவுக்கு கால் பண்ணி ஆஃபீஸ் ஃப்ரண்டுன்னு மாறி சொல்லிட்டேன். அதான் என்னை தேடி அப்பா இங்க வந்திட்டாரு." என சித்ராவுக்கு வந்த அழைப்பின் படியே பொய் கூற.



"ஏன்டி தகவல் சொல்லுறவ தெளிவா சொல்ல வேண்டாமா? பாரு அவங்க எவ்வளவுக்கு பயந்து போயிருந்தா விபரம் தெரியாம இங்க வந்து தேடியிருப்பாங்க, ரொம்ப லேட் ஆகுதுன்னு தெரியும் போதாவது கால் பண்ணி சொல்ல வேண்டியது தானே." என்று கடித்துக்கொண்டவள்,



"அப்புறம் எப்போ வீட்டுக்கு போன?"



"அப்பா இங்கிருந்து வீட்டுக்கு வந்ததும் நானும் வந்துட்டேன்.



ரொம்ப தேங்க்ஸ் தமிழ்... நீங்க தான் அப்பா டென்ஷனானப்போ சமாதானம் பண்ணி, துணைக்கும் ஆள் அனுப்பி விட்டதா சொன்னாரு,



ஆமா.... நேத்து எட்டு மணியில இருந்து பன்னிரண்டு மணிவரை உங்களோடதும், வெங்கட்டோததும் தானே புரோக்கிராம்! அப்புறம் எப்பிடி அப்பாவ....?" என முடிக்காமல் சந்தேகமாக அவள் வினவ,



"புரோக்கிறாம் பண்ணிட்டிருக்கிறப்போ தான் உங்கப்ப வந்திருக்கிறதா வாச்மேன் வந்து சொன்னாரு, உங்கப்பா தான் வந்திருக்காருன்னு சொன்னதும் போயிட்டிருக்கிற புரோக்கிறாம விட்டிட்டு ஓடிட்டான்." என வெங்கட் குறைபட,



"ஓ...." என அவள் மெலிதாக நகைத்தாலும் உள்ளே பல கேள்விகள் எழாமலில்லை.



"போதும்ப்பா....! வேலைய விட்டிட்டு இத்தனை பேரும் சூழ்ந்திருந்து என்னை கேள்வி கேக்கிறத அந்த சௌண்டு மட்டும் பார்த்திச்சு..., எல்லாரையும் லைன்ல நிக்க வைச்சு கேள்வி கேட்க்கும்...." என உள்ளே ஓடியவளை பார்த்தவர்களும் அவள் பேச்சில் சிரித்துக்கொண்டே பின்னாலேயே சென்று தம் வேலையில் பார்க்க சென்றனர்.





கிட்டத்தட்ட எந்தவித பிரச்சினையும் இல்லாது ஒரு வாரங்கள் ஓடியிருந்தது.



எப்போதுமே தந்தை நிழலில் திரிபவளை யார் என்ன செய்துவிட முடியும்?



என்ன.....?? அவ்வப்போது தனது மற்றைய பிஸினஸை பார்த்துவிட்டு வரும் சௌந்தரீகன் மட்டுமே அவளை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தான்.



அவள் மேல் மட்டும் அந்த நல்லவனுக்கு என்ன காண்டோ? மற்றவர்கள் அவன் கண் எதிரேயே குற்றம் செய்தாலும் ஏனென கேட்காதவன், அவள் செய்யாத குற்றத்தினைகூட பட்டியலிட தொடங்கியிருந்தான்.



ஆரம்பத்தில் அவனது திட்டுக்களில் இந்த வேலையினை விட்டு விடுவோமா என நினைத்தவள், தனது ஆசை வேலை என்றதனால் விடுவதற்கு மனம் ஒப்பவில்லை. நாளாக நாளாக அவன் திட்டுகளுக்கு தன்னை பழக்கிக் கொண்டவள்,



இவன் வாய்க்கு அவலாக கூடாது என்பதற்காகவே ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து, மற்றவர்களும் தவறு செய்யாமல் பார்த்துக்கொள்வாள்.



அன்று சனிக்கிழமை...! விளம்பரம் ஒன்றிற்கு ரெகாடிங்க் செய்து கொண்டிருந்தவளை சௌந்தரீகன் அழைக்கிறான் என அங்கொரு ஸ்டாப் அவள் எதிரே வந்து நிற்க,



"இன்னைக்கு என்ன ஏழரையோ? இவனுக்கு மட்டும் எங்க இருந்து தான் என் தப்பு தெரியுதாே?" என முணுமுணுத்துக்கொண்டு அவன் அறை கதவினை தட்டினாள்.



"எஸ்......." என அனுமதி வழங்கியவன் முன் வந்து நின்றவள் நாவோ தந்தியடிக்க,



"கூப்பிட்டு அனுப்பிச்சிங்களா சார்...?" என்றாள் பணிவாக.



"ஏன் மகாராணிய கூப்பிட்டு அனுப்பிச்சா என்ன?" என்றவன் கேள்வி திணுசாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமாடா என்பது போல் இருந்தது மதுஸ்ரீக்கு.



'ஏன்டா கூப்பிட்டு அனுப்பிச்சியான்னு கேட்டது தப்பாடா? எதுக்கு கூப்பிட்டு அனுப்பிச்சேன்னா கேட்டேன்? அப்பிடி கேட்டாலும் அதுக்கும் ஒரு சீன் கிரியேட் பண்ணிட மாட்ட?' என மனதில் ஒரு அர்ச்சதையை தூவியவள்,



"இல்லை சார் கூப்பிட்டு அனுப்பிச்சிங்களே..! ஏதாவது ரீசன்ட் இருக்கும்ன்னு......" என அவள் தடுமாற,



"உன்னை சும்மா கூப்பிட்டு அழகு பார்க்க நீ என் முறை பொண்ணு பாரு!" என்றான் அவள் ஏதோ கேட்க கூடாததை கேட்டாள் போல்.



'என்ன கேட்டாலும் சௌண்டு வேற மாதிரித்தான் யோசிக்கும், இதுக்கு அமைதியாக நின்னிடுவோம். என்ன சொல்லணுமோ சொல்லி தொலையட்டும்.' என நினைத்தவள்,



"சாரி சார்....!" என அவள் தலை குனிந்து நின்று கொள்ள,



"க்ஹூம்...." என செருமியவன்,



"நீ இப்போ செய்திட்டிருக்கிற புரோக்கிறாம்ல கொஞ்சம் மாற்றங்கள் கொண்டு வரதா இருக்கேன். அப்பிடி மாற்றங்கள் கொண்டு வந்தா தான் ரசிக்கிறது போல இருக்கும்..."



"ஏன் சார் மாற்றம்..? இப்போ வரை அது நல்லா தானே போயிட்டிருக்கு...!" என அவன் முடிப்பதற்கு முன்னர் முந்திக்கொண்டு பேசியவளை முறைத்தவன்,



"நல்லா போயிட்டிருக்குன்னு நீ சொல்ல கூடாது. கேக்கிறவங்களும், நானும் சொல்லணும்.



உன் மனசில அப்பிடி என்ன நீ நினைச்சிட்டிருக்க? நீ தான் இங்க ஓனர்ன்னா? கொஞ்ச நாளா பார்த்திட்டு தான் வரேன். எல்லாரையும் மிரட்டி வைச்சிட்டிருக்கியாமே...! கேட்டா எல்லாரும் பண்ற தப்புக்கு உன்னை தான் நான் திட்டுறேன்னு சொல்லிட்டு திரியிறியாம்...



மத்தவங்க பண்ற தப்புக்கு உன்னை திட்ட நான் என்ன லூசா? இந்த மாதிரி அதிகபிரசிங்கி தனமா எதாச்சும் பண்ணேன்னு வையி, அப்புறம் வேலைய விட்டே தூக்கிடுவேன் பார்த்துக்கோ!" என சத்தமிட்டவன்,



"பேச வரத முழுசா பேசவிடுறதில்லை, எல்லாம் தெரிஞ்சவ மாதிரி இடையில புகுந்திட்டு...." என அவளுக்கு கேட்கும் படியாகவே முணுமுணுத்தவன்,



"இங்க பாரு...! இத்தனை நாள் நீ பண்ற புரோக்கிறாம் நீ மட்டும் செய்யிறதனால போரிங்க்கா இருக்குன்னு வெளிய பேசிக்கிறாங்க. அதோட புரோக்கிராமே சேஞ்ச் பண்ணணும்..



எப்பவும் ஒரே மாதிரி குடுத்தா வரவேற்பு குறைச்சிடும். அதனால வர மண்டேல இருந்து உன்கூட இன்னொருத்தரும் புரோக்கிராம் பண்ண போறாங்க. அதை சொல்லத்தான் உன்னை கூப்டேன். இப்பா நீ வெளிய போகலாம்." என்றவன் தான் சொல்ல வந்தது முடிந்ததென்பது போல் கையிலிருந்த செல்லில் கவனமானான்.



'சரியான ட்ரோபோ....!' என முணுமுணுத்தவாறே வெளியே வந்தவள் முகம் சோர்வை வெளிப்படுத்த, அதை கண்டுகொண்ட ஹம்சி,



"என்னடி எம்டி ரூம்ல இருந்து வர, இன்னைக்கு என்ன அபிஷேகம்?" என்றாள் கிண்டல் தொணியில்.



இது எப்பவும் நடப்பதனால் ஆறுதல் சொல்லும் காலம் எல்லாம் கடந்து விட்டது.



உதட்டை பிதுக்கி முகத்தை தொங்கப்போட்டவளோ,



"ரொம்ப பண்றான்டி இந்த சௌண்டு....




ஏன்டி நீயே சொல்லு... கூப்பிட்டு அனுப்பிச்சிங்களா சாரன்னு கேட்டது குத்தமாடி...?" என அங்கு நடந்தவற்றை ஒரு வார்த்தை தவறவிடாமல் சொன்னவளை பார்க்கும் போது ஒருபுறம் சிரிப்பாக இருந்தாலும், இன்னொரு புறம் ஏன் இவன் இப்படி இவளிடம் நடந்து கொள்கிறான் என்றே தோன்றியது ஹம்சிக்கும்.



ஆனால் இதை போய் அவனிடம் கேட்க முடியுமா?



"சரி விடு..! அவரோட ரேடியோ ட்டேஷன்.. என்னமோ பண்ணிட்டு போகட்டும்... உனக்கு தர வேலைய நீ சரியா செய்!" என்றவள்,

"


உன்கூட யாரு ஒர்க் பண்ண போறாங்கன்னாவது சொன்னாரா?" என்க.

"


எதுக்கு.....? யாரு வந்தா உனக்கென்னா? உன் முதுகிலயா ஏறி நிக்க போறாங்கன்னு கேட்கவா? அந்த சுடுதண்ணிக்கிட்டை மனுஷன் பேசுவானா? சரியான சௌண்டு பார்டிடி அது.... எவன் வந்தா நமக்கென்னன்னு போயிட்டே இருப்போம்." என்றாள் சலித்தவாறு.



அவள் பதிலில் பெரிதாக சிரித்தவள், "பரவாயில்லையே..! சார் வந்து



ஒரு மாதம் கூட ஆகல, பட் நீ அவரை நல்லாவே புரிஞ்சு வைச்சிருக்க." என்றாள்.



மறுநாளையும் எப்படியோ விரட்டியவள், கல்லூரி படிப்பை முடித்து கொண்டு நேராக அலுவலகம் கிளம்பினாள்.



விடிந்ததில் இருந்து தன்னுடன் யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார்களோ என்று ஆர்வம் ஒருபுறம், பயம் ஒருபுறமென அவளை சூழ்ந்து கொண்டது.



இருக்கத்தானே செய்யும்...



அவளுக்கு தெரிந்து இதுவரை அங்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய யாரையுமே அவளுடன்



நியமிக்கப்படவில்லை.

அதுவுமில்லாமல் அவர்கள் அவர்களுக்கென்று கொடுக்கப்பட்ட நிகழ்சிகளுக்கு தேவையான தகவல்களை சேகரிப்பதற்கே அவர்கள் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கும் போது, புதிதாக இன்னெரு நிகழ்ச்சிக்கு சம்மதிப்பார்களா?

'


ஆனா யாரு தான் தன்னுடன் தொகுப்பாளராக பணியாற்ற போகிறார்கள்?' என்ற சப்பென்ஸினையும் அவளாள் தாங்க முடியவில்லை.



நிகழ்ச்சி ஆரம்பநேரமும் நெருங்கியாயிற்று யார் தான் அந்த எக்ஸ் என்பது இன்னமும் தெரியவில்லை.

'


ஒரு வேளை என்னை பயமுறுத்துவதற்காக இவன் பொய் தான் சொன்னானோ.....!' என நினைத்தவள்,

'


சரி என் வேலைய நான் பார்ப்போம்.' என கெட்போனை எடுத்து காதினில் பொருத்திக்கொண்ட நேரம், அந்த அறை கதவு திறபட திரும்பி பார்த்தவள், உள்ளே வந்தவனை கண்டதும் அதிர்ந்தே போனாள்.
 
Last edited:
Top