• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

16. தத்தித் தாவுது மனசு

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
பார்றா.... கீழே இருக்கிற விட மேல இன்னும் அழகா இருக்கே....! மேல் அழகினை ரசித்தவாறு நடந்தவள் கண்களில் விழுந்தது திறந்தே இருந்த அறை.



அந்த அறையினை கண்டவள் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது.


அனைத்து வசதியும் கொண்ட நவீன அறை.
அறையினை சரி பாதியாகப் பிரித்து, முன்பகுதியை வரவேற்பு அறையாக்கி, பின்பகுதியை வெள்ளை நிறத்தில் கண்ணாடிச் திரைச்சீலையிட்டு மூடப்பட்டிருந்தது.

பின்புறம் இருந்த கட்டில் தெளிவாகத்தெரியக்கூடிய திரைச்சீலை.


ஜன்னல்கள் திறக்கப்பட்டிருந்ததனாலே என்னமோ.. மிதமாக வந்த தென்றல் காற்றில் அந்த திரைச்சீலையானது விலகியது.

தன் செய்கையினால் அது எதை அவளுக்கு காண்பிக்க நினைத்ததாே..


சிறுதுநேரம் கட்டிலை மறைப்பதும், விலக்குவதுமாக கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டிய திலைச்சீலை, அதற்குமேல் கட்டிலில் கிடந்தவளை தெளிவாகக் காட்டிட எண்ணியது போல. பலத்த காற்றில் அது மேலே எழுந்து கீழிறங்கியது.

கண்டுவிட்டாள் மைலி..




அங்கு கிடந்தவள் முகம் முழுவது ஒப்பனையால் மெழுகிக்கிடந்தாள் பெண்ணொருத்தி.




'யாரிவங்க..? இதுக்கு முன்னாடி இவங்கள நான் இங்க கண்டதே இல்லையே!


ஒருவேளை இந்த அறையை விட்டு கீழே வரதில்லையோ!
ஆமா எதுக்கு அறைக்குள்ளயே அடைஞ்சு கிடக்கணும்.?
இந்த வீட்டில இப்படி ஒரு பொண்ணு இருக்கான்னு ஏன் யாரும் சொல்லவுமில்லை..?
ஒரு வேளை இவ விஜயாம்மா பொண்ணா இருப்பாளோ.?' என நினைத்தவள், அவள் முகத்தை ஆராய்ந்தாள்.


ஏனோ அவள் விஜயாவின் மகளாக இருக்க வாய்ப்பே இல்லை என்றே தோன்றியது.



மைதா மாவினை குழைத்து முகம் முழுவதும் அப்பியிருந்தவள், உதடுகளை கொவ்வைப்பழ நிறத்துக்கு செயற்கையாக மாற்றியிருந்தாள். தூங்கும் கண்களுக்கு கண் மை வேறு.



கவுந்து படுத்திருந்தவள் போர்வைக்குள் உடலை ஒலித்துக்கொண்டாலும், கால்களை அகல விரித்து படுத்திருந்ததனால், ஒற்றை காலானது போர்வைக்கு வெளியே தொடைவரை தெரிந்தது.



'நிச்சயமா இவளுக்கும் இந்த வீட்டுக்கும் சம்மந்தம் இருக்க வாய்ப்பே இல்லை' என நினைத்தவளுக்கு அவள் படுத்திருக்கும் நிலை முகம் சுழிக்கவே வைத்தது.

'இவ யாரா வேனாலும் இருந்திட்டு போகட்டுமே... தூங்குறப்போ இப்பிடி ஆகும்ன்னு தெரிஞ்சா.. கதவை மூடிட்டு தூங்குறத்துக்கு என்ன.? யாராச்சும் இந்த நிலையில் பார்த்துட்டா...' என நினைத்தவளுக்கு அப்போது தான் ஸ்ரீயின் நினைவே வந்தது.

உண்மையில் அப்படி ஒருவன் அந்த வீட்டில் இருக்கிறான் என்பதையே மறந்து போனாள் அவள்.
விடியலில் ஒரு தடவை விதியே என்று பார்ப்பவனை நினைவில் வைப்பது தான் அதிசயம்.

'இந்த நேரத்தில இவனும் வீட்டில தானே இருப்பான்...? அவனோட அறை கூட மேலே தானே இருக்கு? இந்த நிலமையில இவளை கண்டா... எல்லாரையுமே இவளைப்போல நினைச்சிடுவானே...!
சும்மாவே பொண்ணுங்கள மதிக்கிறவன்...


வீட்டில ஆண்கள் இருக்குறது தெரிஞ்சா.. அதுக்கேத்தா மாதிரி இருக்க தெரியாதா..?" என அவளை எழுப்பி எச்சரிப்பதற்காக உள்ளே நுழைந்தவள், கட்டிலை நெருங்கவில்லை.. காலில் எதுவோ மிதிபடவே குனிந்து பார்த்தாள்.



அது அவளது உள்ளாடை என கண்டு கொண்டாள். சட்டென அதன் மேலிருந்து காலை எடுத்தவள்,

"ச்சீ... என்ன பெண்ணிவள்...? இப்படியா கழட்டி வீசுறது? இது எல்லாம் என்ன ரகமோ?" என அவளை நெருங்காது அருவெறுத்து அங்கேயே நின்று விட்டாள்.

"ஹல்லோ பேபி......!" பின்னால் கேட்ட குரலில் அதிர்ந்து திரும்பினாள்.

ஸ்ரீ தான்.. இடுப்பில் டவலுடன், தலையினை வேறொரு துண்டினால் துவட்டியவாறு எதிரே நின்றவன் கோலமே, அவன் குளித்து விட்டு வருகிறான் என்பதை உணர்த்தியது.


அவனது கோலம் அவள் கருத்தில் படவில்லை.. மாறாக இவளது அறையில் இவனுக்கு என்ன வேலை?

அதுவும் அவள் அறை பாத்ரூமிலேயே குளித்து விட்டு வருகிறான்.

இது எதுவும் தெரியாமல் அசிங்கமான நிலையில் தூங்குகிறாள் இவள்.

'உண்மையில் இவளுக்கு இவன் வந்தது தெரியுமா? தெரியாதா? அப்படி நடப்பு புரியாமல் என்ன தூக்கம் வேண்டியிருக்கிறது?' என இப்போதும் அவள்மேல் தான் மைலிக்கு கோபம் வந்தது.

அவனையும், அந்த பெண்ணையும் மாறி மாறிப் யோசனையோடு பார்த்தாள்.

"ஏய் பேபி...! எதுக்கு இந்த அழகான கண்ணை போட்டு உருட்டுற? கடைசியில நீயும் என்னை தேடி வந்துட்டியா?" என்று அவளை ஒரு மாதிரியாக பார்த்து கேட்டவன் பார்வையில் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தவள்.


"உன்னை யாரும் இங்க தேடி வரல... அப்புறம் பேபின்னு கூப்பிடுற வேலையெல்லாம் என்கிட்ட வைச்சுக்காத.." என சூடாகவே கொடுத்தவள், ஏனோ அங்கிருந்து செல்லவில்லை.

அவள் எண்ணம் என்னவென்றால், தான் அங்கு நின்றால், உலகம் மறந்து தூங்கும் பெண்ணுடைய அறையில் நிற்பது தவறென்று இப்போதாவது உணர்ந்து வெளியேறுவான் என்று தான் நினைத்தாள்.

அவனை பார்ப்பதை விடுத்து, கட்டில் புறம் திரும்பி, மார்புக்கு குறுக்காக கைகளை கட்டி நின்று கொண்டாள்.

அவளது அந்த செய்கையின் அர்த்தம் புரியாதவனோ..

"என்ன இங்கேயே டேரா போட்டுட்டியா? காலையிலேயே மூடு வந்திடிச்சு போல... என்னோட அறையை விட்டு வெளிய போகமாட்டேன்னு அடம்பிடிக்கிற." என்றவனது நக்கல் பேச்சில் விதிர்த்து திரும்பினாள்.




"என்னது உன்னோட அறையா?"

வேண்டுமென்ற உதட்டினை வளைத்து கேலியாய் நகைத்தவன்,


"அழகா நடிக்கிற... ஆனா அப்பட்டமா தெரியுது.. சும்மா சீன் போடமா. நேர மேட்டருக்கு வா...." என்றான் இழக்கமாக.


அந்த அறையை ஸ்ரீ தன்னது என்றதும், குழப்பமாகவே அறையினை ஆராய்ந்தவள் சந்தேகத்தை தீர்ப்பது போல் சுவற்றில் அவன் படங்களே தொங்கியது.

'இது இவன் ரூம்ன்னா.. அப்போ இந்த பொண்ணு...?'என்ற குழப்பத்தில் திரும்பி அவளை பார்த்தவள் முகத்தில் தெரிந்த கேள்வியை அவனும் கண்டு கொண்டான் போல..

"ஓ.....! இவளா..?" என்றவாறு கட்டிலை நெருங்கியவன்.


"பேபி.......! தூங்கினது போதும் எந்திரி" என்று கொஞ்சியவாறே அவளை எழுப்பினான்.


"நைட்டு என்னை நீ ரொம்ப படுத்தி எடுத்திட்டடா.. அதனால சரியா தூங்க முடியல.. கொஞ்ச நேரம் படுத்துக்கிறேனே..."என்று கண்களை திறக்காமலே கெஞ்சிவள்,

"ஒரு நிமிஷம் கொஞ்சம் குனிஞ்சுக்கிறியா பையா...?" என்றாள் கொஞ்சலாய்.

அவள் கேட்டதும் மறுக்காது குனிந்தவன் மூச்சுக்காற்றை உணர்ந்தவள்,

சட்டென திரும்பி அவன் கழுத்தை இரு கைகளாலும் இறுக கட்டிக்கொண்டு, கன்னத்தில் இச்சு இச்சு என்று முத்தம் வைத்தவள், மீண்டும் முன்னது போலவே படுத்துக்கொண்டாள்.

இவற்றை பார்த்திருந்தவளுக்கு காரணமே இன்றி கண்கள் குளம் கட்டியது.

இதற்கு மேல் அந்த அசிங்கத்தை பார்க்க விரும்பாதவளாக, வெளியேற திரும்பியவள் கைகளை அவசரமாக பற்றி நிறுத்தியவன்.



"எங்க போற பேபி?" என்றான்.


அவனை திரும்பியும் பாராது.

"கையை விடு!" என்று அழுத்தமாக சொன்னவள் குரலில் உண்டான தளுதளுப்பை ஏனோ அவளாலேயே தடுக்க முடியவில்லை.


"க்ஹூம்" என தொண்டையை செருமி, குரலை சரி செய்தவள், விழித்திரையை மறைத்த கண்ணீரை வலுகட்டாயமாக உள்ளிழுத்துக்கொண்டு,
அவனை திரும்பி பார்த்து முறைத்தாள்.

கையை எடு என்று கூறியும், இன்னமும் கையை விடாது பற்றியிருந்தவன் தவறினை சுட்டிக்காட்டும் பொருட்டு, பார்வையை கையிற்கு மாற்றி முறைத்தவள் பார்வையின் பொருள் புரிந்தவன்,

"என்ன அவசரம் பேபி? என்னைத் தேடி இவ்வளாே தூரம் வந்திட்டு, கொஞ்ச நேரம் கூட நிக்காம ஓடலாமா..? என்னோட சின்ன இதயம் நொருங்கி போகாது..." என பற்றியிருந்த கையினை இழுத்தான்.

அவன் இழுவைக்கு நகர்ந்தவள் கவனம் ஏனோ அவன் முகத்தருகில் தான் நிற்கின்றேன் என்பதை உணரவில்லை.. மாறாக அவனது பேபி என்ற அழைப்பிலேயே உலன்றது.

இதே போல் தான் கட்டிலில் கிடப்பவளையும் பேபி என்று அழைத்தான். அதே பெயர் கொண்டு தன்னையும் அழைப்பது அருவெருக்க..

'அவளும் பேபி... நானும் பேபியா? அப்போ அவளைப்பாேல தான் நானும்ன்னு நினைச்சிட்டானா..?' என நினைத்தவளின் பிரதிபலிப்பாக முகம் கோணலாகிப்போனது.


அதை சகித்து கொள்ள முடியாதவளாய், கண்களை அழுத்தமாக மூடி
முடிந்தளவு உணர்வுகளை அடக்கிக்கொண்டு விழ்த்தவள்,

"முதல்லை கையை விடு! உன்கூட பேச எனக்கு இஷ்டமில்லை. நான் போறேன்" என்றாள் வேறெங்கோ பார்த்வாறு பொறுமையை இழுத்து பிடித்து.




"போகலாம் பேபி... எதுக்கு அவசரம்?" என்றவன் பிடியானது இறுகவே, அவனை நிமிர்ந்து நோக்கியவள் விழிகளின் இம்முறை அனல் தெறித்தது.



அவள் முறைப்பை கண்டு கொள்ளாதவனாட்டம்,



"சரி.. என்னை அப்புறமா முறைச்சுக்கலாம்.. ஆமா... நீ எப்போ இதே போல என் கட்டிலை அலங்கரிக்க போற...," என்று கட்டிலில் கிடந்தவளை சுட்டிக்காட்டிக் கேட்டவனது கேள்வியில்,
இதுவரை இழுத்து வைத்திருந்த பொறுமை முற்றிலுமாக வடிந்தே போனது.


அவன் கைக்குள் இருந்த தன் கையினை ஆவேசமாய் இழுத்தவள், ரௌத்திரம் கொண்டவளாய், அவன் கன்னத்தில் ஓங்கி ஒன்று விட்டாள்.



"என்னடா சொன்ன.....? என்னை பாத்தா உனக்கு இந்த கழுசடை மாதிரியா இருக்கு.....?
உனக்காகவே நாக்க தொங்கப் போட்டுட்டு இவளை மாதிரி நிறைய பேரு திரிவாங்க.. அவங்ககிட்ட போய் கேளு! இந்த மாதிரியான கேள்வியை..

இது தான் நீ என்மேல கையை வைக்கிற கடைசி தடவையா இருக்கணும். இதுக்கு மேல கைய வைச்சேன்னு வையி... சாவடிச்சிடுவேன்." காளியாய் மாறி மூச்சு திணற பேசியவள்,

"மூன்றறிவிருக்கிற பறவை கூட தன் ஜோடியோடு மட்டும் தான் சேரும்... ஆனா நீ.....?

கண்ட கண்ட நாயை தொட்ட கையால என்னை....! ச்சீ..." என அவன் கைபட்ட இடத்தினை அருவெருத்து உதறியவள்,

"உன் தொடுகை கம்பளிப்பூச்சியை விட ஊறல் எடுக்குது.. உன் முன்னாடி நின்னாலே உன்மேல படிஞ்ச கறை என்மேலயும் ஒட்டிக்கும்." என்று வாசலை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தவள்.

ஏதோ நினைவு வந்தவளாய் திரும்பி,

"அன்னைக்கு பொறுக்கின்னதனால தானே, என்னை பொறுக்கி எடுப்பேன்னு சொன்ன?

தப்பா சொல்லிட்டேன்.. நீ பொறுக்கி எல்லாம் கிடையாது. கேடு கெட்ட பொறுக்கி...

பொண்ணுங்களை போதைப் பொருளா பாக்கிற நீ எல்லாம் வாழுறத்துக்கு தகுதியே இல்லாத அரக்கன்...." என்று மீண்டும் அவனை வசை மொழிந்தாள்.


அது வரை அவளை பேச விட்டு அமைதியாக நின்றவன், திரும்ப திரும்ப பொறுக்கி என்று அவள் வாயிலிருந்து வந்த வாசகத்தில் சினம் பொங்க,

விரல் நீட்டி பேசியவள் விரலை பற்றி திருகினான்.

"விடுடா கையை!" என அவன் திருகுவதில் வலி எடுக்க கையினை இழுத்தாள்.

அதை விடாமல் இறுக பிடித்திருந்து, அவள் வலியல் நெலிந்தும், அதை பொருட்படுத்தாது,

"நானும் போன போகட்டும்னு அமைதியா நின்னா... ரொம்பத்தான் பேசிட்டே போற...



அன்னைக்கே என்னை அறைஞ்ச இந்த கையை உடைச்சு போட்டிருந்தா.. இன்னைக்கு என்னை தேடிவந்து அறைஞ்சிருப்பியா?" பிடித்திருந்த கையினை அவள் திமிறத்திமிற பின்புறமாக வளைத்தவன், மறு கையினையும் வளைத்து பின்புறம் கொண்டுவந்து, தனது ஒற்றை கைகளுக்குள் அடக்கினான்.

"என்ன சொன்ன...? நான் தொட்ட இடம் கம்பளிப்பூச்சி ஊறுறது போல இருக்கா?" என தன் மறு கையினை அவள் கழுத்தோடு வளைத்து தன்னோடு ஒட்டி நிறுத்தி, அவள் கழுத்து வளைவில் உதடுகளால் ஊந்து சென்று, கன்னங்களை வேண்டும் என்றே பற்களால் கடித்து எச்சிலாக்கினான்.

மைலிகயால் அவன் பிடியிலிருந்து சிறுதும் அசைய முடியவில்லை. முடிந்தவரை தலையை மறுபுறம் சரித்து,



"விடுடா நாயே!" என்றதும் தான், அவன் இறுக்கம் இன்னும் அதிகமாகியது.


கழுத்தை வளைத்து பிடித்திருந்த கையினை முட்டியோடு வளைந்து அவளது தாடையை வலிப்பது போல் இறுக்கினான்.

வலி தாங்கது முகத்த திருப்பியவள் திருப்பிய புறமே அவனது முகமும் இருக்க, அவளது செவ்விதழை கண்டவன், சட்டென அவள் இதழை கவ்வியிழுத்து, அதை தன் வாய்க்குள் புதைத்து சப்ப ஆரம்பித்தான்.


அவன் பிடியில் இருந்து திமிறக்கூட முடியாதவள், அவனது வேகம் அதிகமாக அதிகமா உதடோ பிரிந்து விடுவது போல் வலி எடுத்தது.


முட்டியிருந்த கண்கள் உவர் நீரை உமிழ்ந்தது.
அது கன்னம் வழி வழிந்து, அவள் உதட்டினை கவ்வியிருந்தவன் வாய்களுக்குள் புகுந்ததும் தான், உப்பை உணர்ந்து, கண்களை திறந்தவன் கலங்கிய அவள் கோலத்தை கண்டான்.



என்ன நினைத்தானோ...! சட்டென விட்டு விட்டு, குளியலறையில் புகுந்து கொண்டான்.

அவன் விலகியதும், ஏன்..? எதற்கு..? என்று ஆராய முடியவில்லை அவளுக்கு... மாறாக அவனிடமிருந்து தப்பித்தால் போதுமென தேம்பியவாறு மாடியிலிருந்து ஓடி வந்தவளை, ஹாலில் பத்திரிக்கை படித்தவாறு இருந்த ரங்கசாமி கண்டுவிட்டார்.


காலை உணவினை மேசைமேல் அடுக்கிக்கொண்டிருந்த தெய்வானையிடம்,

"தெய்வானை...என்னன்னே தெரியல... மைலி மாடியில இருந்து அழுதிட்டு அறைக்குள்ள போனாம்மா.. என்னன்ன ஒரு வாட்டி போய் பார்க்கிறியா..? " என்றார் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.



அவரது தயக்கம் கண்டவளுக்கே ஒரு மாதிரியாக போய்விட்டது.

இருக்காதா பின்னே..? இதுவரை யாருக்காகவும் வளைந்து பழக்கமில்லா மனுஷனையே, இப்படி கூனிக்குறுகி நிற்க வைத்து விட்டானே.

"இதோ இப்பவே போறேன்.. நீங்க கண்டதையும் நினைச்சு கவலைப்படாதிங்க.. தம்பியும் மைலிக்கிட்ட தரக்குறைவா நடந்துக்க மாட்டாரு" என்றவள். மைலியை தேடிச்சென்றாள்.


தாவும்.....
 

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665
திரும்ப ஸ்ரீராமன் விரதத்தை ஆரம்பிச்சுட்டானா 😡😡😡😡😡
எல்லாரும் பொங்குறாங்களே... இவனை எப்போ திருத்துவேன்
 
Top